இந்திய‌ இராணுவ‌ம் மக்களுக்கு செய்த அளப்பறிய‌ சேவைக‌ள்

     

         இந்தியா குடியரசு நாளில் (அதாவது இந்தியா மக்களாட்சியாகிய நாளில்) இந்திய இராணுவம் 1947ஆகத்து 15லிருந்து இந்திய மக்களுக்கும், அண்டை நாடுகளிலுள்ள மக்களுக்கும் ஆற்றிய சேவைகளை உங்களுக்கு அறியத்தருகின்றோம்.

  • உதவுகிறேன் என்ற பெயரில் காசுமீர் நாட்டிற்குச் சென்று இன்னும் அந்த நாட்டை விட்டு நகராமல் அந்த நாட்டு மக்களில் பல்லாயிரக்கணக்கானவர்களை கொன்று, பெண்களை கற்பழித்து, சிறுவர்களை அனாதையாக்கி வருகின்றது. காசுமீரில் 1987ல் இருந்து 2010 சூலை வரையிலான தகவல்கள் இவை. 2010 சூலையிலிருந்து 100க்கும் அதிகமான சிறுவர்களும், இளைஞர்களும் இறந்தார்கள் என்பதை இந்திய ஊடகங்களே கூறியுள்ளன.

            கொல்ல‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளின் எண்ணிக்கை 93,214

            விசார‌ணையில் இருக்கும் போது கொல்ல‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளின் எண்ணிக்கை 6,969                   

            கைது செய்ய‌ப்ப‌ட்ட‌ பொதும‌க்க‌ளின் எண்ணிக்கை 1,17,117

            வித‌வைக‌ளாக்க‌ப்ப‌ட்ட‌ பெண்க‌ளின் எண்ணிக்கை 22,726

            அநாதையாக்க‌ப்ப‌ட்ட‌ சிறுவ‌ர்க‌ளின் எண்ணிக்கை 1,07,347

            பாலிய‌ல் வ‌ல்லுறவுக்கு ஆக்க‌ப்ப‌ட்ட‌ பெண்க‌ளின் எண்ணிக்கை 9,912

                                                            பதவி உயர்வுக்காகவும், பரிசுகளுக்காகவும், காசுமீரிகள் இராணுவத்தால்         கொல்லப்படுகின்றார்கள் என்ற உண்மை அண்மையில் வெளியானது. (1,2)

  • முதலில் பண்ணையார்களுக்கு எதிராக தொடங்கிய விவசாயிகளின் புரட்சி, அடக்குமுறை ஹைதராபாத் நிசாமிற்கு எதிராகவும் தொடர்ந்தது. இந்த போராட்டம் 1947லிருந்து 1951வரை நடந்தது. 1951ல் பண்ணையார்களை எதிர்த்து போராடிய பல்லாயிரக்கணக்கான விவசாயிகளையும், பொதுமக்களைத் தாக்கி, ஆயிரக்கணக்கான மக்களை கொன்றது இந்திய இராணுவம்.(3)
  • இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களான மணிப்பூர், நாகாலாந்து, அசாம், மிசோரம், அருணாச்சல பிரதேசம், மேகலயா, திரிபுரா போன்ற மாநிலங்களில் இராணுவ அதிகார சிறப்பு சட்டம் 1958 (AFSPA 1958) மூலம் எந்த ஒரு சாட்சியமும் இல்லாமல் யாரை வேண்டுமென்றாலும் கொன்று, கைது செய்து வருகின்றது. பெண்களை கற்பழித்து வருகின்றது. இந்த மாநிலங்களில் இராணுவத்தின் நடவடிக்கைகளை அறிய உங்களுக்கு இரு நிகழ்வுகள் போதுமானது. 1)எங்கள் குழந்தைகளை விட்டுவிடுங்கள், எங்கள் சதைகளை எடுத்துக்கொள்ளுங்கள், எங்களை கற்பழியுங்கள் என்று இராணுவ முகாம் முன்பு நிர்வாணமாக போராடினர் மணிப்பூர் தாய்கள். 2) மனோரமா என்ற பெண்ணை இராணுவம் கற்பழித்து கொன்றதை தொடர்ந்து கடந்த 12 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றார் ஐரோம் சர்மிளா.(4)
  • ஆழிப்பேர‌லை தாக்கிய‌ பின்ன‌ர் த‌மிழ‌க‌த்திற்கு வ‌ந்த‌ இராணுவ‌ம் இற‌ந்த‌ உட‌ல்க‌ளை நாங்க‌ள் அக‌ற்ற‌வோ, தொட‌வோ மாட்டோம் என்று சொன்ன‌து. அதை அன்றைய முத‌ல‌மைச்ச‌ர்.செய‌ல‌லிதா ச‌ட்ட‌ம‌ன்ற‌த்தில் க‌ண்டித்து பேசினார். அண்மையில் சென்னையில் தில்சன் என்ற சிறுவன் விளையாட்டு தனமாக இராணுவ குடியிருப்பினுள் நுழைந்த பொழுது சுட்டு கொன்றார் ஒரு இராணுவ வீரர்(4)
  • மத்திய இந்தியாவில் பன்னாட்டு ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிடும் பழங்குடிகளின் மீது போர் தொடுத்து வருகின்றது. முன்னாள் எல்லைப் பாதுகாப்பு படையின் தலைமை இயக்குனரான இராம் மோகனனின் கூற்றை அப்படியே தருகிறேன்.

” இராணுவத்தின் மேல் உள்ள கொலை செய்த‌ல் , க‌ற்ப‌ழித்த‌ல் போன்ற‌ பெரிய‌ குற்ற‌ங்க‌ளை ச‌ற்று த‌ள்ளி வைத்து விட்டு, ஆடு ம‌ற்றும் கோழிக‌ளை ப‌டையின‌ர் திருடுத‌ல் போன்ற‌ ஆதிவாசிக‌ளின் சிறிய‌ புகார்களைப் பாருங்க‌ள். இது மிக‌வும் மோச‌மான‌ ஒன்று.”

  • காங்கோவில் ஐநா அமைதி பாதுகாப்பு படையில் இருந்த இந்திய இராணுவத்தினர் அங்கிருந்த பல பெண்களை கற்பழித்துள்ளார்கள். பல நாடுகள் இராணுவமும், பன்னாட்டு ஊடகங்களும் இருக்கும் பொழுதே இப்படி செய்தவர்கள், ஊடகங்களும், இந்தியாவின் மற்ற பகுதிகளில் உள்ள பொதுமக்களும் மறந்து போன இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களிலும், காசுமீரில் என்ன செய்வார்கள் என்று நான் விளக்க தேவைஇல்லை.(5)
மனிதர்களை இந்திய இராணுவம் இப்படிதான் விலங்கினும் கீழாக நடத்துகின்றது

மனிதர்களை இந்திய இராணுவம் இப்படிதான் விலங்கினும் கீழாக நடத்துகின்றது

  • வங்காள தேசத்தில் விடுதலைக்காக போராடிய உண்மையான குழுக்களை அழித்தொழித்து.
  • அமைதி படை என்ற பெயரில் ஈழத்தில் நுழைந்த இந்திய இராணுவம் மருத்துவமனைகள் என்று கூட பாராமல் குண்டு வீசியது, பொதுமக்களின் மேல் டாங்கிகளை ஏற்றியது என பல வன்முறைகளை செய்தது, இவையெல்லாம் சாத்தானின் படைகள் என்று நூலில் தொகுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி நான்காம் கட்ட ஈழப்போரில் இலங்கை இராணுவத்துடன் இணைந்து செயல்பட்டது மட்டுமின்றி, எல்லா தொழில்நுட்ப உதவிகளும் செய்தது.
  • அதுமட்டுமின்றி இந்தியாவின் ஒற்றுமைக்கு ஊறுவிளைவித்த பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது கையை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்தது, இதுவரை 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட போதும், ஆயிரக்கணக்கானோர் தாக்கப்பட்ட போதும் உலகின் மூன்றாவது பெரிய கடற்படை வேடிக்கை பார்த்ததே தவிர மீனவ குடிமக்களை காப்பாற்றவில்லை. சில நாட்களுக்கு முன்பு எல்லை பாதுகாப்பு படையினர் மாடு திருடியதாக கூறி ஒருவரை நிர்வாணப்படுத்தி துன்புறுத்தும் காட்சி வெளியாகியுள்ளது. மனதைரியம் உள்ளவர்கள் மட்டும் இக்காணொளியை பார்க்கவும்.

          http://www.youtube.com/watch?v=e5kBqutAcio

  • இந்தியா விடுதலை பெற்று விட்டதாக கூறிக்கொண்டாலும் ஆங்கிலேயர்கள் இந்தியர்களை அடக்கியாள வகுத்த அதே காலனிய ஆதிக்கச் சட்டங்களைக் கொண்டே இயங்கிவருகின்றன.

நற்றமிழன்.ப

தரவுகள்:

1)   http://natramizhan.wordpress.com/2010/12/03/

2)   http://kashmir.wordpress.com/

3)   http://en.wikipedia.org/wiki/Telangana_Rebellion

4)   http://www.indianexpress.com/news/army-must-handover-person-responsible-for-di/813657/

5)   http://www.outlookindia.com/article.aspx?277848

மாட்டுப் பொங்கல்

 

என்னை குளிப்பாட்டுகின்றான்
எனது கொம்புகளுக்கு
வர்ணம் தீட்டினான்
சூரியக் கதிரின் ஒளியிலே
எனது கொம்புகள் பளபளப்பதாக‌
பீற்றிக்கொள்கின்றான்
இயற்கை இவனுக்கு
பிடிக்காத ஒன்று
ஐயையோ வர்ணத்தின் மேல்
திருநீறும்(!) வைத்து விட்டான்
இன்று தான் இவன்
என்னை மாடாக பார்ப்பான்
மற்ற நாட்களில் ஒர்
எந்திரம் நான் அவனுக்கு
இறுதியாக கை கூப்பியபடியே
வருகின்றான்…. ஓட்டுக்
கேட்பானோ என்று
உள்ளூற பயம் எனக்கு…..
ஓ…. வணங்குகிறானாம்
என்னைக் கடவுளாக‌
எண்ணுகிறானாம்
எனது பிள்ளையையும், என்னையும்
தனியே கட்டிவைத்து
அழகு(!) பார்த்தவன் ………

உழவர் தினம்

 

 

 

 தரிசாய்ப் போன
நிலம்
இறந்து போன
நதியின் ஊடாக‌
விவசாயியின் நான்கு
பேர் பயணம்
“ஓ”வென்று ஓலமிட்டபடி
பின்னே ஓடி வருகின்றது
உழவர் தினம்…..

( உழவர் தினம் கொண்டாடுவோம் உழவர்களுடன்…..)

கூடங்குளம் அணு உலையும், மின் தடையில்லா தமிழகம் என்ற மாயையும்…………மொழியாக்கம் – நற்றமிழன்

                 ஒருபுறம் கூட‌ங்குளம் பகுதி மக்கள் அணு உலைக்கு எதிராக‌ தொட‌ர்ந்து போராடிவ‌ரும் வேளையில் ம‌றுபுற‌ம் அணு உலை அதிகாரிகளோ எல்லோரிட‌த்திலும் பாதுகாப்பு சான்றித‌ழ்க‌ளைப் பெற்று வ‌ருகின்ற‌ன‌ர். அதும‌ட்டுமின்றி கூட‌ங்குள‌ம் அணு உலையிலிருந்து கிடைக்கும் 50 விழுக்காடு மின்சார‌த்தின் மூல‌மாக‌ த‌மிழ்நாட்டின் மின்ப‌ற்றாக்குறை வெகுவாக‌ குறைந்துவிடும் என்றும் அதிகாரிக‌ள் கூறிவ‌ருகின்ற‌ன‌ர். இந்த‌ சூழ்நிலையில் அணு உலையை ஆத‌ரிப்பதா அல்ல‌து எதிர்ப்ப‌தா என்ற‌ குழ‌ப்பமான‌ மனோநிலையில் த‌மிழ்நாட்டு ம‌க்க‌ள் இருக்கின்றார்க‌ள்.

 
             கூடங்குளம் அணு உலையிலிருந்து தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் மின்சாரத்தின் பங்கை ஒரு அறிவார்ந்த  ஆய்வுக்கு உட்படுத்தினால் நமது ஐயங்கள் எல்லாம் தெளிவுறும். இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் மின்சார துறை எதிர்கொண்டு வரும் தடைகளை கணக்கில் கொண்டு அணு உலையிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்கும் மின்சாரம் பின்வரும் அட்டவணையில் தெளிவாக விளக்கப்படுகின்றது. தமிழகத்திற்கு வெறும் 405 மெகாவாட் மின்சாரம் தான் கூடங்குளத்திலிருந்து கிடைக்கும் என்பது இந்த அட்டவணையிலிருந்து கிடைத்த‌ முடிவுகள் மூலம் நமக்கு தெரியவருகின்றது. இதில் இறுதியில் பயனாளருக்கு கிடைக்கும் மின்சாரத்தின் அளவு 305 மெகாவாட் ஆகும்

  மொத்த அளவு(மெகா வாட்டில்) குறிப்புகள்
கூடங்குளம் அணு உலையின் மொத்த மின்னுற்பத்தி = 2*1000       2000 கூடங்குளத்தின் மொத்த உற்பத்தியான 2*1000 என்பது தற்போது இரசியாவில் நடைபெற்று வரும் ஒப்பந்தம் முடிவுக்கு வரும் பொழுது 4*1000 என மாறும்
அணு உலைகளால் சராசரியாக 60% மின் உற்பத்தியே செய்ய முடியும்      1200 எந்த ஒரு மின்னுற்பத்தி நிலையமும் 100% மின் உற்பத்தியை கொடுக்க முடியாது. இங்கு ஆண்டு மின் உற்பத்தி 60% எனக்கொள்ளப்பட்டுள்ளது.  ஆனால் கல்பாக்கம் அணு உலையே கடந்த 4 ஆண்டுகளாக தான் 40-50% மின்னுற்பத்தியை கொடுக்க தொடங்கியுள்ளது.
ஆண்டு மொத்த மின்னுற்பத்தி – அணு உலையை இயக்குவதற்கான ஆண்டு மின்தேவை(அணு உலையில் உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சாரத்தில் 10% மின்சாரம் அணு உலையை இயக்குவதற்கு தேவைப்படும்  என கணக்கிடப்பட்டுள்ளது)     1,080 இந்திய அணு உலைகள் செயல்படுவதற்கு ஆண்டிற்கு 12.5% மின்சாரம் தேவைப்பட்டாலும், இங்கு 10% கணக்கில் எடுத்துகொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் பங்கு 50% (1080ல் 50%)     540 ஊடகங்களில் வந்துள்ள செய்திகளின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு 50% பங்கு மின்சாரம் கிடைக்குமென கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் கடைபிடிக்கப்பட்டு வரும் முறையில் அணு உலை வைத்திருக்கும் மாநிலங்களுக்கு 30% பங்கே கொடுக்கப்படும்
மின்சாரத்தை கொண்டு செல்லுதல், வினியோகத்தலில்(T&D Loss) ஏற்படும் 25% இழப்பிற்கு பின் தமிழகத்திற்கு கிடைக்கும் மொத்த மின்சாரம்      405 மின்சாரத்தை கொண்டு செல்லுதல், வினியோகத்தலில் ஏற்படும் 25% என கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் தேசிய அளவு இழப்பு 27% ஆகும்.
இறுதி பயன்பாட்டின் போது ஏற்படும் 20% மின் இழப்பையும் கணக்கில் கொண்டால் பயனாளருக்கு கிடைக்கும் மொத்த மின்சாரத்தின்  அளவு     305 பிரயாசு என்ற நிறுவனத்தின் ஆய்வின் படி வீட்டு உபயோகத்தின் போது 20% மின் இழப்பு ஏற்படுகின்றது. இதில் தொழிற்சாலைகளிலும், விவசாய பயன்பாட்டின் போதும் ஏற்படும் மின் இழப்பு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை
இதில் பேச்சுவார்த்தை நலம்பட முடிந்து மேலும் இரண்டு அணு உலைகளையும் சேர்த்தால் 4 அணு உலைகளாக கொண்டால் தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் மொத்த மின்சாரம்     610  

கூடங்குளம் அணு உலையிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்கும் வெறும் 305 மெகாவாட் மின்சாரத்திற்காக  அணு உலையிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சுக்கு மக்கள் ஆளாக வேண்டுமா என்று தமிழ்நாட்டு மக்கள் கண்டிப்பாக யோசிக்க வேண்டும். ஏனென்றால் தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் ஏற்கனவே ஒரு அணு உலை செயல்பட்டுவருகின்றது. தமிழ்நாட்டின் மின் தேவையை ஈடுசெய்ய மக்களுக்கு எந்த ஒரு கேடும்விளைவிக்காத மாற்று மின் ஆதாரங்கள் இருக்கின்றதா என்பதே நம்முன் இப்பொழுது இருக்கும் கேள்வி

புதுப்பிக்கதக்க மின்மூலங்கள்

புதுப்பிக்கதக்க மின்மூலங்கள்

        

தமிழ்நாட்டில் இருக்கும் மின் ஆதாரங்களை அறிவார்ந்த ஆய்வுக்கு உட்படுத்துவதன் மூலம் நம்மிடம் பல மாற்று மின் ஆதாரங்கள் இருக்கின்றன என்பது தெரியவருகின்றது. இது போன்ற சரியான மாற்று முறைகளின் மூலம் நமக்கு பெரிய அளவில் மின்சாரம் கிடைக்கக்கூடும் என பின்வரும் அட்டவணையிலிருந்து தெரிகின்றது. மேலும் தற்பொழுதுள்ள மின்னுற்பத்தி ஆதாரங்களில் இருந்து நமக்கு பயன் கிடைப்பதற்காக, புதிய மின்னுற்பத்தி நிலையங்கள் அமைப்பதில் செலவழிக்கப்படும் தொகையில் 20 விழுக்காடு செலவழித்தாலே போதும், அதுமட்டுமின்றி தற்பொழுதுள்ள மரபுசாரி மின்னுற்பத்தி நிலையங்களினால் ஏற்படும் பாதிப்புகள் இதில் எதுவும் இல்லை. புதிய மின் உற்பத்தி நிலையங்களை அமைத்து மின்னுற்பத்தி தொடங்குவதற்கு நமக்கு நீண்ட காலம் பிடிக்கும் என்பதுபோலன்றி இங்கு நாம் பயன் பெறுவதற்கு மிகச்சிறிய காலமே போதுமானது, இதன் மூலம் சமூகத்திற்கு கிடைக்கும் பலன்கள் மிகப்பெரியதும், நிலையானதுமாகும். 

தற்பொழுதுள்ள மின்னுற்பத்தியை வைத்தே நாம் பின்வரும் சேமிப்புகளை மேற்கொள்ளலாம். மெகாவாட் குறிப்புகள்
மாநிலத்திலுள்ள குண்டுபல்புகளை (Tungsten Blub 60watts) மாற்றுவதன் மூலமாக கிடைக்கும் சேமிப்பு >>500 இந்தியாவில் உள்ள குண்டுபல்புகளை (Tungsten Blub 60watts) மாற்றுவதன் மூலம் 10,000 மெகாவாட்டிற்கும் அதிகமான மின்சேமிப்பு கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது
மின்சாரத்தை கொண்டு செல்லுதல், வினியோகத்தலில்(T&D Loss) ஏற்படும் 25% இழப்பை 10% ஆக குறைப்பதன் மூலம் கிடைக்கும் சேமிப்பு 1,575 தமிழ்நாட்டின் மொத்த மின்னுற்பத்தியான 10,500 மெகாவாட்டில் 15% சேமிப்பதன் மூலம் கோடைகாலத்தின் அதியுயர் மின் தேவையை நிறைவ்ய் செய்ய முடியுமென மைய மின்சார வாரிய அறிக்கை கூறுகின்றது
தமிழ்நாட்டின் பல்வேறு பிரிவுகளில் பயன்பாட்டில் ஏற்படும் இழப்பை குறைப்பதன் மூலம் கிடைக்கும் சேமிப்பு 2,625 இதன் மூலம் தமிழ்நாட்டின் மொத்த மின் தேவையில் 25% நிறைவாகின்றது. அதுமட்டுமின்றி சரியாக மதிப்பிட்டால் இதன் மூலம் நமக்கு கிடைக்கும் சேமிப்பு மிகவும் அதிகமாகும்.

புதுப்பிக்கப்பட்ட மின் மூலங்கள் மூலம் கிடைக்கும் பயன்கள்

காற்றாலை      700 மெகாவாட் தமிழ்நாட்டின் மொத்த 5,500 மெகாவாட் காற்றாலை மின் திறனில் இதுவரை 4,790 மெகாவாட் அளவிற்கு மின்னுற்பத்தி செய்யப்படுகின்றது.(பார்க்க- தமிழ்நாடு மின்சார வாரிய அறிக்கை)
உயிர்ம எரிபொருள்      900 மெகாவாட் உயிர்ம எரிபொருளில் இருந்தும், சக்கரை ஆலை கழிவுகளிலிருந்தும் 900 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும். .(பார்க்க- தமிழ்நாடு மின்சார வாரிய அறிக்கை)
வீடுகளின் கூறைகளில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் எடுக்கும் தகடுகளை பதித்தல்(2கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் தகடுகளை 25 இலட்சம் வீடுகளில் பதியுதல்    >> 5,000 மெகாவாட் தமிழ்நாட்டில்  உறுதியாகவும், பொருளாதார வகையில் நல்ல நிலையில் உள்ள வீடுகளில் 25% கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வீடுகளில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் எடுக்கும் தகட்டை பதியலாம்.
வீடுகளின் கூறைகளில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் எடுக்கும் தகடுகளை பதித்தல், சூரிய ஒளியின் மூலம் நீரை சூடேற்றும் கருவிகளை மற்ற கட்டிடங்களில் வைத்தல்  மிக அதிக அளவு சேமிப்பு பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், அரசு கட்டிடங்கள், வணிக வளாகங்கள்……..

                    

மரபு சார் மின்னுற்பத்தி நிறுவனங்களைப் போலல்லாமல் புதுப்பிக்கதக்க மின்மூலங்கள் அதிக செலவு கொண்டதும், நம்பக்கூடியதுமல்ல என்ற வாதங்களும் உள்ளன.  நீண்ட கால பயன்பாட்டில் புதுப்பிக்கதக்க மின் மூலங்களுக்காக அரசு செலவிடும் தொகை என்பது மிகவும் குறைவே. நம்மிடம் உள்ள மாற்று வழிகளை எல்லாம் சரியாக ஒருங்கிணைப்பதன் மூலம் கூடங்குளம் அணு உலையின் தேவையே இல்லாமல் செய்வது மட்டுமல்லாமல், கல்பாக்கம் அணு உலையையும் வருங்காலத்தில் மூடிவிடலாம். சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் எடுப்பதற்காக ஆகும் செலவான கடந்த சில ஆண்டுகளாக வெகுவாக குறைந்து வருகின்றது. இது ”தேசிய சூரிய ஒளி மின்சார ஆணையத்தின்” இரண்டாவது ஒப்பந்தப்புள்ளி கோரலிலும் எதிரொலித்துள்ளது என்பது இங்கே நினைவு கூறத்தக்கது. இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குள் சூரிய ஒளி மூலம் மின்சாரம் எடுப்பதற்காக ஆகும் செலவும் நிலக்கரி மூலம் மின்சாரம் எடுப்பதற்கு ஆகும் செலவும் ஒன்றாகிவிடும்.

அணு உலைக்காக செலவு செய்யப்படும் நேரடி, மறைமுக செலவுகளையும், மாற்று வழிகளின் மூலமாகவும், புதுப்பிக்கதக்க மின் மூலங்களுக்காகவும் செலவு செய்யப்படும் தொகையையும் இவ்விரண்டின்  மூலம் மக்களுக்கு கிடைக்கும் பயன்களையும் ஆய்வு செய்தால் நாம் அணு உலைக்கு ஆகும் அதிக செலவையும், அதன் மூலம் சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்பையும் தெளிவாக காணலாம். இந்த நாட்டிலேயே ஒரு முன்மாதிரியான மின் கொள்கையை தமிழ்நாடு வருவாக்குவதற்கான வாய்ப்புகள் நன்றாக உள்ளன.

தற்பொழுது செயல்பட்டு வரும் மின்னுற்பத்தி நிலையங்களினால் ஏற்படும்  நீண்டகால பாதிப்புகளை குறைப்பதற்கும் , அணு உலை பேரழிவுகளை முற்றிலுமாக தவிர்ப்பதற்கும் வேறு வழியில்லாததால் நாட்டின் மின் தேவை, மின்னுற்பத்தியை சீராக ஆராய வேண்டிய கட்டாயத்தில் இந்த நாடு உள்ளது.

……………………………………………………….

வீட்டில் கிடக்கும் ஒரு பழைய நாற்காலியை பழங்கால பொக்கிசம் என்று ஏமாற்றி விற்பதற்காக சில மன நோயாளிகளை பணக்காரர்கள் போல தயார் செய்து அவர்கள் அனைவரும் அந்த நாற்காலியை ஏலம் எடுப்பதற்காக வந்திருப்பதாகவும், அந்த நாற்காலி பல ஆயிரம் ரூபாய்களுக்கு விற்பனையாகும் என்று ஏலக் கடைக்காரரின் தலையில் கட்டிவிடுவார் நடிகர்.பாண்டியராஜன். அது போலவே மிக அதிக செலவும், அதிக அளவு பிரச்சனையும், மிகக்குறைந்த மின்னுற்பத்தியும் கொண்ட இந்த அணு உலை என்ற பழங்கால நாற்காலியை மக்களின் தலையில் கட்டுவதற்காக இந்த அணு உலைகள் வந்தால் தமிழ்நாடு பெரு வளர்ச்சி அடையும், இருபத்தி நான்கு மணி நேரமும் மின்சாரம் கிடைக்கும், இனி மின் தடையே இல்லை என்பது போன்ற பசப்பு வாதங்களை மத்திய அரசு நம்முன் வைத்து அணு உலை ஒரு பொக்கிசம் என ஏமாற்றிவருகின்றது. நாம் ஏமாறப்போகின்றோமா ????

நன்றி – சங்கர் சர்மா – மின் கொள்கை ஆய்வாளர்

நன்றி – Dia Nuke Org.

மூலப்பதிவு – http://www.dianuke.org/power-benefits-for-tamil-nadu-from-kknp/

மொழியாக்கம் – நற்றமிழன்.ப

கூடங்குளமும் வேண்டாம் என்றால் மின் தட்டுப்பாட்டை எப்படித் தான் தீர்ப்பது?

கூடங்குளமும் வேண்டாம் என்றால் மின் தட்டுப்பாட்டை எப்படித் தான் தீர்ப்பது?

 

இத்தனை நாட்கள் கழித்து இப்போது கூடங்குளத்தில் போராட வேண்டிய தேவை என்ன?

இதற்கு நேரடியாக விடை சொல்வதை விடக் கூடங்குளத்தில் பட்டினிப்போராட்டத்தில் பங்கேற்ற கவிஞர் மாலதி மைத்ரியின் விடையைச் சொல்கிறேன். ‘உங்கள் மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து, திருமணம் பண்ண முடிவு செய்துவிட்டீர்கள். திருமண நாள் குறித்தாகிவிட்டது; மண்டபத்திற்குப் பணம் கொடுத்தாகிவிட்டது; சொந்தக்காரர்கள் எல்லாருக்கும் அழைப்பிதழும் அனுப்பிவிட்டீர்கள். நாளை காலை திருமணம். இன்று இரவு தான் உங்களுக்கு அதிர்ச்சியான ஒரு செய்தி தெரிய வருகிறது – நீங்கள் பார்த்திருக்கும் மாப்பிள்ளைக்கு எயிட்சு நோய் இருக்கிறது என்று! இப்போது சொல்லுங்கள்! பல்லாயிரக்கணக்கான உரூபா செலவு பண்ணிட்டோம், திருமணம் நடக்கட்டும்னு விடுவீங்களா? இல்லை நிறுத்தி விடுவீர்களா?

உங்கள் எடுத்துக்காட்டு நல்லாத்தான் இருக்கு. அதற்காகப் பதிமூன்றாயிரம் கோடி உருபா போட்ட பிறகு இன்று வந்து போராடுவது என்பதை எப்படி ஏற்றுக்கொள்வது?

இந்தப் போராட்டம் ஒன்றும் இன்று தொடங்கியதில்லை. இப்போராட்டத்திற்கு இருபத்தைந்து ஆண்டு வரலாறு இருக்கிறது.

சொல்வதற்கு ஓர் அளவு வேண்டாமா? ஏதோ ஆறு மாதம், ஒரு வருடமாகப் போராடி வருகிறோம் என்றால் சரி! அதற்காக ஒரேயடியாக இருபத்தைந்து ஆண்டுகள் என்றால் யாராவது நம்புவார்களா?

நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் இருபத்தைந்து ஆண்டு வரலாறு இப்போராட்டத்திற்கு இருக்கிறது.

நீங்கள் சொல்லும் ‘இருபத்தைந்தாண்டு’க்கு ஏதாவது ஒரு சான்றாவது சொல்ல முடியுமா?

ஒன்றென்ன? நூறு சான்றுகள் காட்ட முடியும்.

vaiko_atomic_640

அ) 1986இல் தினமணி செய்தித்தாளில் அணு உலைகளின் பாதிப்புகள் பற்றி மிக விரிவான கட்டுரை வெளிவந்தது. அப்போதே அணு உலை எதிர்ப்பு என்பது தொடங்கிவிட்டது.

ஆ) அணு உலைக் கழிவுகள் பற்றித் தினமணியில் ஐராவதம் மகாதேவன் கட்டுரை எழுதியதன் அடிப்படையில் அன்றைய முதல்வர் ம.கோ. இராமச்சந்திரன் அணுமின் திட்டத்திற்கு ஒப்புக்கொள்ள முடியாது என்று அறிவித்தார்.

ஆ) 1987இல் மீனவக் கிராமங்களின் தலைவர்கள் கூட்டம் திருச்செந்தூரில் நடந்தது.

இ) 1987 செப்டம்பர் 22ஆம் நாள் இடிந்தகரையில் கூடங்குளம் அணு உலைத்திட்டத்தை எதிர்த்து மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடந்தது.

ஈ) 1988இல் திருநெல்வேலியில் மிகப்பெரிய ஊர்வலம் நடத்தப்பட்டது.

உ) 1988 நவம்பர் 21ஆம் நாள் பாராளுமன்றத்தில் அணு உலையை எதிர்த்து வைகோ உரை நிகழ்த்தினார்.

ஊ)1989இல் நாகர்கோவிலில் ஊர்வலம், 1989 மார்ச்சு இருபதாம் நாள் தூத்துக்குடியில் ஊர்வலம் என எல்லாவற்றிலும் மக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

எ) தூத்துக்குடியில் நடந்த ஊர்வலத்தில் ஜார்ஜ் பெர்ணான்டசு, பாலபிராசாபதி அடிகள் போன்ற தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.

ஏ) எழுத்தாளர் நாகார்ச்சுனன் 1989இல் சூனியர் விகடனில் ‘கொல்ல வரும் கூடங்குளம்’ என்னும் தலைப்பில் கட்டுரைகள் எழுதினார்.

ஐ) அந்தச் சமயத்தில் இந்தியாவிற்கு வந்த சோவியத் அதிபர் மிகைல் கோர்பச்சேவிற்கு மும்பையிலும் தில்லியிலும் கருப்புக்கொடி காட்ட முயற்சி செய்யப்பட்டது.

ஒ) 1989 மே முதல் நாள், ‘Save Water Save Life’ என்னும் உறுதிமொழியுடன் தேசிய மீனவர் கூட்டமைப்பு தாமசு கோச்சேரியின் தலைமையில் கன்னியாகுமரியில் பத்தாயிரம் பேருக்கும் அதிகம் பேர் பங்கேற்ற பெரிய பேரணி நடத்தப்பட்டது. இப்பேரணியில் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது; பலர் காயமடைந்தனர்.

ஓ) 1989 சூன் 3 முதல் 13ஆம் நாள் வரை மருத்துவர் குமாரதாசு தலைமையில் திருநெல்வேலியிலும் அதைச் சுற்றி உள்ள சிற்றூர்களிலும் அணு உலைக்கு எதிராக வீதி நாடகங்கள் நடத்தப்பட்டன.

ஒள) 1989 சூன் பதின்மூன்றாம் நாள் கூடங்குளத்தில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

க) கூடங்குளம் அணு உலைக்குப் பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் எடுக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி 101 தொடர் பொதுக்கூட்டங்கள் நாகர்கோவிலிலும் அதைச் சுற்றியுள்ள ஊர்களிலும் நடத்தப்பட்டன.

உ) 1989இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பாலான கட்சிகள் தங்களுடைய தேர்தல் அறிக்கைகளில் கூடங்குளம் அணுமின் திட்டத்தைக் கைவிடும் கோரிக்கையைக் கொண்டிருந்தன.

ங) பேச்சிப்பாறை அணியில் இருந்து தண்ணீர்க்குழாய் அமைக்க நடப்பட்டிருந்த எல்லைக் கற்களைப் பிடுங்கி எறியும் போராட்டம் 1990 இல் நடத்தப்பட்டது.

ச) முன்னாள் தலைமையமைச்சர் இராசீவ்காந்தி, முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கடராமன், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆகியோர் தலைமையில் நடக்கவிருந்த மூன்று வெவ்வேறு அடிக்கல் நாட்டு விழாக்கள் மக்களின் கடும் எதிர்ப்பின் காரணமாகக் கைவிடப்பட்டன.

* தமிழக ஆளுநர் முன்னிலையில் மதுரையில் நடந்த மிகப்பெரிய பொது நிகழ்ச்சி ஒன்றில் இசையமைப்பாளர் இளையராசா வெளிப்படையாக அணு உலையை எதிர்த்துப் பேசினார்.

­* இயக்குநர் பாலச்சந்தர், நடிகர் நாசர் போன்ற திரைக்கலைஞர்கள் பலர் கூடங்குளம் திட்டத்தை எதிர்த்துக் கையொப்பம் இட்டுள்ளனர்.

  • தமிழில் கூடங்குளத்தைப் பற்றிப் பல புத்தகங்கள் வெளிவந்துள்ளன.
  • மருத்துவர் இரமேசு, பிரேமா நந்தகுமார், ஞாநி, ஊடகவியலாளர் A.S.பன்னீர்செல்வன், நீலகண்டன், குமாரசாமி, மருத்துவர் தெய்வநாயகம், எழுத்தாளர் செ.திவான், சுப.உதயகுமார் எனப் பலர் கூடங்குளம் அணுமின்திட்டத்தை எதிர்த்துப் போராடி வருகிறார்கள்.
  • ‘பிராண்ட்லைன்’ இதழில் மார்க்சிய சூழலியலாளர் பிரபுல் பித்வாய் இருபத்தைந்து ஆண்டுகளாகக் கூடங்குளம் அணுமின் திட்டத்தை எதிர்த்தும் அணு உலைகளின் ஆபத்துகளை விளக்கியும் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.

கூடங்குளம் அணுமின் எதிர்ப்புப் போராட்டத்தைப் பற்றி உங்களுக்கு இவ்வளவு போதுமா? இன்னும் எதிர்பார்க்கிறீர்களா?

உங்களுக்கு என்ன சிக்கல்? கூடங்குளத்தில் அணு உலை அமைக்கக்கூடாது என்கிறீர்கள் அவ்வளவு தானே!

ஆமாம்! உறுதியாக அதைத்தான் சொல்கிறோம்.

ஏன் அவ்வளவு உறுதியாக வேண்டாம் என்கிறீர்கள்?

கூடங்குளம் அணு உலை அமைந்துள்ள இடம் எரிமலைக் குழம்புகளால் ஆனது. 1990களில் கேரளப் பல்கலைக்கழகத்தில் நில இயல் துறையைச் சேர்ந்த டாக்டர் பிஜி, சென்னை ஐ.ஐ.டி.யைச் சேர்ந்த இராம் சருமா ஆகியோர் இந்த எரிமலைக் குழம்புகள் பற்றித் தங்கள் ஆய்வுகளில் கூறியிருக்கிறார்கள். 2004 நவம்பர் மாதம் வந்த ‘கரண்டு சைன்சு’ இதழில் இவ்வாய்வுக்கட்டுரைகள் வெளிவந்துள்ளன. கூடங்குளத்தில் இருக்கும் ‘உருகிய பாறைப் பிதுங்கல்கள்’ நேரடியாக அணு உலையின் நிலைத்த தன்மையைக் குலைத்து விடும் வாய்ப்பு மிக அதிகம்.

சரி! அப்படியானால் வேறு இடங்களில் அணுமின் நிலையங்கள் அமைப்பதில் உங்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை அப்படித்தானே?

இல்லை. அணுமின் நிலையங்களை எங்கு அமைப்பதையும் எதிர்க்கிறோம்.

எங்கு அமைப்பதையும் எதிர்க்கிறீர்களா? அணுமின் திட்டம் என்பது ஒரு தொழில்நுட்பம். அதை எதிர்ப்பது என்பது நம்மைப் பழைய காலத்திற்குத் தள்ளிவிடாதா?

நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி! ஒரு தொழில்நுட்பத்தையே எதிர்ப்பது என்பது நம்மைப் பழைய காலத்திற்குத் தள்ளிவிடும் தான்! அதே வேளை அத்தொழில்நுட்பத்தால் ஏற்படும் பின்விளைவுகள் மனித குலத்தையே அழித்து விடும் என்றால் அப்படி ஒரு தொழில்நுட்பம் நமக்குத் தேவையா எனச் சிந்திக்க வேண்டும் அல்லவா? எனவே, அத்தொழில்நுட்பத்தால் ஏற்படும் பின்விளைவுகளை எதிர்கொண்டு மக்களைக் காப்பாற்றுவது எப்படி என்பதைக் கண்டறிந்த பிறகு அதைப் பயன்படுத்தலாம் என்று தான் சொல்கிறோம்.

அதனால் தான், மக்கள் நடமாட்டம் குறைவான கூடங்குளம் பகுதியில் அணு உலைகளை அரசு நிறுவியிருக்கிறது. அதையும் வேண்டாம் என்றால் என்ன சொல்வது?

மக்கள் நடமாட்டம் குறைவான பகுதியில் இல்லை; மக்கள் நடமாட்டமே இல்லாத பகுதியில் தான் அணு உலைகள் நிறுவப்பட வேண்டும். இதை நாம் சொல்லவில்லை; தமிழக அரசின் அரசின் அரசாணை எண் 828 (29.4.1991 – பொதுப்பணித்துறை) சொல்கிறது.

இவை தவிர்த்து உலகம் முழுக்கப் பின்பற்றப்பட்டு வரும் கீழ்க்காணும் விதிகளும் கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டத்தில் முறையாகப் பின்பற்றப்படவில்லை.

அ) AERB எனும் அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தின் விதிமுறைகள் படி ஐந்து கி.மீ. சுற்றளவுக்குள் இருபதாயிரம் பேருக்கு மேல் வசிக்கக்கூடாது. ஆனால் அணுமின் நிலையத்திலிருந்து பத்து கி.மீ தொலைவிற்குள்ளேயே கூடங்குளம் கிராமத்தில் இருபதாயிரம் மக்களும், இடிந்தகரை கிராமத்தில் பன்னிரண்டாயிரம் பேரும் காசா நகரில் நானூற்று ஐம்பது குடும்பங்களும் வசிக்கிறார்கள்.

ஆ) பத்து கி.மீ சுற்றளவுக்குள் மாநிலத்தின் சராசரி மக்கள் அடர்த்தியின் மூன்றில் இரண்டு பங்குக்குக் குறைவாகவே மக்கள் இருக்க வேண்டும். ஆனால் மாநில சராசரியை விட மிக அதிகமான மக்கள் இந்தப் பகுதியில் நெருக்கமாக வாழ்கிறார்கள்.

இ) முப்பது கி.மீ சுற்றளவுக்குள் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழும் நகரங்கள் இருக்கக்கூடாது. ஆனால் இரண்டு இலட்சம் பேர் வாழும் நாகர்கோவில் நகரம் இருபத்தெட்டு கி.மீ தொலைவிற்குள் இருக்கிறது.

ஈ) இருபது கி.மீ சுற்றளவுக்குள் சுற்றுலாத் தலங்களோ வரலாற்றுப் புகழ் பெற்ற இடங்களோ இருக்கக்கூடாது என்று AERB சொன்னாலும் உலகப்புகழ் பெற்ற கன்னியாகுமரி பதினைந்து கி.மீ சுற்றளவுக்குள் இருக்கிறது.

இப்படிக் கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து முப்பது கி.மீ சுற்றளவுக்குள் பத்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வரும் நிலையில் அம்மக்களை வெளியேற்றுவதோ, பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துவதோ, அவர்களுக்குத் தேவையான இருப்பிட வசதிகளை செய்வதோ, மருத்துவ வசதிகள் செய்து தருவதோ, பள்ளிகள் அமைத்து தருவதோ, மாற்று வேலைகள் ஏற்படுத்திக் கொடுப்பதோ நடைமுறையில் சிறிதும் இயலாத காரியமாகும்.

இவை தவிர,

  • உலைகளுக்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை மக்களிடம் பகிர்ந்து கொள்ளப்படவில்லை. கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படவில்லை.
  • உலைகள் அமைக்கப்பட்டிருக்கும் தலங்கள் பற்றிய இரசிய அறிவியலாளர்களின் வருத்தங்கள் மூடி மறைக்கப்பட்டதோடு, தல ஆய்வறிக்கை (’Site Evaluation Study’) மக்களுக்குத் தரப்படவில்லை. பாதுகாப்பு ஆய்வறிக்கையும் (’Safety Analysis Report’) பொதுமக்களுக்கு, மக்கள் பிரதிநிதிகளுக்கு, செய்தியாளர்களுக்கு என யாருக்கும் அளிக்கப்படவில்லை.

நீங்கள் சொல்வது போல் இருந்தால் உலகில் தொழில்நுட்பத்தில் வளர்ந்த நாடுகள் பல, அணுமின் நிலையங்களை வைத்திருக்கக் கூடாது அல்லவா? ஆனால் அமெரிக்கா, இரசியா, பிரான்சு, சப்பான், செர்மனி எனப் பல நாடுகள் அணு மின் நிலையங்களை வைத்திருக்கின்றன என்று படிக்கிறோமே!

எங்கே இதையெல்லாம் படித்தீர்கள்?

என்ன இப்படிக் கேட்கிறீர்கள்? இரசியாவின் செர்னோபில் அணு விபத்து (நேர்ச்சி) பற்றிப் பாடப் புத்தகங்களிலேயே படித்திருக்கிறோம். கொஞ்ச நாட்களுக்கு முன் சப்பான் நாட்டில் புகுசிமாவில் அணு மின் நிலையம் நில நடுக்கம் வந்த போது பாதிக்கப்பட்டது எனச் செய்தித்தாள்களில் வந்தது.

அங்கெல்லாம் நடந்தது போல் இங்கு நடந்து விடக்கூடாது என்பதால் தான் அணு உலைகளே வேண்டாம் என்கிறோம்.

நீங்கள் சொல்வதைப் பார்த்தால் உலகில் செர்நோபில் விபத்திற்குப் பிறகு எல்லா நாடுகளும் அணு உலைகளை மூடியிருக்க வேண்டுமல்லவா?

கண்டிப்பாக. செர்நோபில் நேர்ச்சிக்குப் பிறகு இரசிய அரசு அணு உலைகள் அமைப்பதை நிறுத்திவிட்டது. அன்றைய சோவியத்து குடியரசுத் தலைவர் மிகைல் கார்ப்பசேவ், “செர்நோபிலில் நடந்ததை ஒரு குறிப்பிட்ட நாட்டில் நடந்த பேரழிவாகக் கொள்ள முடியாது. மாறாக, இது மொத்த உலகத்தையே பாதித்துள்ள விடயம்” என்று சொன்னார்.

திரும்பத் திரும்ப இரசியாவையே சொல்லாதீர்கள். அமெரிக்கா முதலிய பிற நாடுகள் அணு உலைகள் அமைப்பதில் என்ன செய்கின்றன? அதைச் சொல்லுங்கள்.

  • அமெரிக்காவில் 1979ஆம் ஆண்டிலிருந்தே எந்தப் புதிய அணு உலைகளும் கட்டப்படவில்லை.
  • புகுசிமா அணு உலை நேர்ச்சி நடந்த சப்பானில் மொத்தம் இருந்த 54 அணு உலைகளில் 37 உலைகளை மூடப்பட்டுள்ளன.
  • சுவிட்சர்லாந்து புது உலைகளைக் கட்டுவதையும் புதுப்பிப்பதையும் நிறுத்தி வைத்துள்ளது.
  • இத்தாலியிலும் அணுஉலைகள் மூடப்பட அந்நாட்டின் அரசு முடிவெடுத்துள்ளது.
  • செர்மனி 17 உலைகளைக் கலைப்பதை ஒத்திவைக்கலாம் என்று நினைத்திருந்தது. இப்போது அம்முடிவை உடனே எடுக்கலாம் என முடிவெடுத்திருக்கிறது.
  • சீனத்தில் புதிய அணு உலைகளுக்கான ஒப்புதல் நீக்கப்பட்டுள்ளது.
  • பிரான்சில் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் மக்களுள் அறுபத்திரண்டு விழுக்காட்டுப் பேர் அணு உலைகளை மூட வேண்டும் என்று வாக்களித்திருந்தனர். பதினைந்து விழுக்காட்டு மக்கள் உடனடியாக மூட வேண்டும் என்று தெரிவித்திருத்திருந்தனர்.

எதில் தான் நேர்ச்சிகள் (விபத்துகள்) இல்லை? ஒரு பேருந்தில் போனால் கூடத்தான் அடிபடுகிறது; உயிரிழப்பு ஏற்படுகிறது. இப்படி நேர்ச்சிகளைப் பற்றிப் பேசிக்கொண்டே இருந்தால் எப்படி முன்னேறுவது?

ஒரு பேருந்து நேர்ச்சி என்றால் அதிக அளவு நூறு பேர் இறந்து போவார்கள். அத்துடன் பாதிப்பு முடிந்து விடும். ஆனால் அணு நேர்ச்சி என்பது அப்படி இல்லை. செர்நோபில் உலை வெடித்தவுடன் ஒன்பதாயிரம் பேர் தாம் இறந்து போனார்கள். ஆனால் அதன் தொடர்ச்சியாகக் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் ஏறத்தாழப் பத்து இலட்சம் பேர் இறந்து போயிருக்கிறார்கள். அதாவது நேரடியாக இறப்போர் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில்! தலைமுறை தலைமுறையாக இறப்போர் இலட்சக்கணக்கில்! இப்போது சொல்லுங்கள் – அணு உலை என்பது உயிருக்கு உலை தானே?

அப்படியே விபத்து என்றாலும் ஆழிப்பேரலை (சுனாமி)யோ நிலநடுக்கமோ வரும்போது தானே!

அப்படியெல்லாம் சொல்லிவிட முடியாது. அமெரிக்காவின் மூன்று மைல் அணு நேர்ச்சியும் செர்நோபிள் அணு நேர்ச்சியும் நேரக் காரணம் இயக்கத்தில் நடந்த கோளாறும் மனிதத்தவறுகளும் தாம்! அங்கு ஆழிப்பேரலையும் வரவில்லை; நிலநடுக்கமும் வரவில்லை.

ஏற்கெனவே ஒரு நாளைக்குக் குறைந்தது இரண்டு மணி நேரம் மின்வெட்டு இருக்கிறது. இப்போது இந்தத் திட்டத்தின் மூலம் மலிவான விலையில் மின்சாரம் கிடைக்கும் என்கிறார்கள். அதையும் போராடி நிறுத்தி விட்டீர்கள் என்றால் மின்சாரத்திற்கு என்ன செய்வது?

இந்தத் திட்டத்தால் மலிவு விலையில் மின்சாரம் கிடைக்கும் என்பதெல்லாம் வெற்றுக் கட்டுக் கதைகள் தாம்!

மலிவு விலையில் அணு மின்சாரம் என்று அரசு சொல்கிறது. நீங்கள் அது கட்டுக்கதை என்று சொல்கிறீர்கள். எப்படி என்று ஏதாவது புள்ளிவிவரம் கொடுக்க முடியுமா?

வரும் 20 ஆண்டுகளில் அணு மின்னாற்றலின் அளவை 6 விழுக்காடாகக் கூட்ட வேண்டுமானால் அதற்கு தேவைப்படும் முதலீடு மட்டும் ஐம்பதாயிரம் கோடி உரூபா ஆகும். இப்போது சூரியஆற்றல், காற்றாலை போன்ற முறைகளுக்கு அரசு ஒதுக்கும் தொகை வெறும் அறுநூறு கோடி உரூபா தான். அதிலேயே அவை ஐந்து விழுக்காட்டு அளவு மின்சாரத்தைத் தந்து விடுகின்றன. இப்போது அணு ஆற்றலுக்கு அரசு ஒதுக்கும் தொகை 3897 கோடி உரூபா. ஆனால் அவை தருவது 2.5 விழுக்காட்டு அளவு மின்சாரம் தான். ஒரு மெகா வாட்(டு) மின்சாரத்தை அணு ஆற்றலின் மூலம் உருவாக்க ஏறத்தாழ இருபத்திரண்டு கோடி உரூபா செலவாகும். ஆனால் சூரிய ஒளி மூலம் அதே அளவு மின்சாரத்தைப் பதினைந்து கோடியில் உருவாக்கிவிடலாம்.

நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை என்றால் கல்பாக்கம் அணுமின்நிலையத்தைச் சுற்றி உள்ள மக்களுக்கு உடல் நலத்தில் பாதிப்பு வந்திருக்க வேண்டுமே?

நல்ல கேள்வி!

ð கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர்களுடைய குடும்பத்தினருக்கு ‘மல்டிபிள் மைலோமோ’ என்னும் எலும்பு மச்சைப் புற்றுநோய் இறப்புவீதம் அதிகம் இருக்கிறது.

ð அப்பகுதியில் உள்ள மீனவப் பெண்கள் ‘ஆட்டோ இம்யூன் தைராய்டு’ என்னும் தைராய்டு சுரப்பியைப் பாதிக்கும் நோய் பற்றிய புள்ளி விவரங்கள் வெளிவந்திருக்கின்றன.

ð அணு உலையைச் சுற்றி ஐந்து கி.மீ. சுற்றளவுப் பகுதிகளில் (சதுரங்கப் பட்டினம் போன்ற பகுதிகளில்) தைராய்டு புற்று நோய் இறப்பு வீதம் பற்றிய புள்ளி விவரங்கள் ஆகியன அதிர்ச்சியான உண்மைகளை வெளிக்கொண்டு வந்தன. தைராய்டு புற்றுநோய்க்கு அணு உலையில் இருந்து வெளியேற்றப்படும் அயோடின் 131 என்னும் வாயுக்கழிவே காரணம் ஆகும்.

ð இப்புள்ளிவிவரங்கள் அனைத்தும் மருத்துவர் வீ. புகழேந்தி 2003, 2008, 2010 ஆகிய ஆண்டுகளில் மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவுகள் ஆகும். இவற்றில் எந்த அறிக்கையையும் கல்பாக்கம் அணு உலை நிருவாகம் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டுடன் ஒப்பந்தம் போட்டு வரும் திட்டத்தில் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அதைக் கெடுக்கப் பார்க்கிறீர்களே!

நாலு பேருக்கு வேலை கிடைக்க, நானூறு பேர் தங்கள் வேலையை இழப்பார்கள். அப்படிப்பட்ட திட்டம் நமக்குத் தேவையா?

எப்படி நானூறு பேர் வேலை இழப்பார்கள் எனச் சொல்கிறீர்கள்?

தாராப்பூர் (மும்பை) அணு உலை தொடங்கிய போது அந்தக் கிராமத்தில் மொத்தம் எழுநூறு மீன்பிடி படகுகள் இருந்தன. இன்று அங்கு வெறும் இருபது படகுகள் தாம் இருக்கின்றன. மீன்பிடித் தொழில் அழிந்து போனதால் அங்கிருந்த மீனவர்கள் அனைவரும் தினக்கூலிகளாக வேறு தொழில் பார்த்துப் போய்விட்டார்கள். கல்பாக்கம் அணு உலை கடலில் கலக்கவிடும் ‘குளோரினால்’ மீன்வளம் வெகுவாகக் குறைந்து வருகிறது. ‘சிங்க இறால்’ போன்ற மீன் வகைகள் வேகமாக அழிந்து வருகின்றன. இதே நிலை தான் நாளை கூடங்குளத்திலும் நடக்கும். மிகப்பெரிய மீன் பிடி மையமாகத் திகழும் தமிழகத்தின் தென்பகுதியில் பல்லாயிரக்கணக்கான கோடிகளில் மீன்கள், கடல் உயிரினங்கள் ஆகியவற்றால் வணிகம் நடந்து வருகிறது. இது அப்படியே நசிந்து போகும். பேச்சிப்பாறை அணையில் இருந்து கூடங்குளம் அணு உலைக்கு நீர் எடுக்கும் நிலையில் அந்த அணையை நம்பி வேளாண் தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஆயிரக்கணக்கான வேளாண் குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்து விடும். இப்போது சொல்லுங்கள் –சிலர் வாழ, பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் வாழ்க்கையையே இழந்து நாடோடி வாழ்க்கை நடத்த வேண்டி வரும். இது தேவையா?

chernobyl_child_370அப்படி என்ன உடல் நலக்குறைவு கதிர்வீச்சால் ஏற்பட்டு விடும் என்கிறீர்கள்?

கதிரியக்கத்தின் பாதிப்பு நம் உடலின் மற்ற பகுதிகளை விட, குழந்தைப் பேறு சார்ந்த உறுப்புகள் மீது தான் அதிகமாக இருக்கும். கதிரியக்கம் விந்து, சினை முட்டைகளை எளிதாகத் தாக்கி அவற்றின் தன்மையை மாற்றிவிடும். அதனால் கருச்சிதைவுகள், குறைமாதப் பிறப்பு, பிறவிக் குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகள் எனப் பல பாதிப்புகள் ஏற்படும். தைராய்டு புற்றுநோய், தோல் புற்று நோய், குருதி சார்ந்த புற்றுநோய் எனப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்டோருக்கு மிக அதிகம்.

அணுமின்நிலையம் வேண்டாம் என்று தமிழ்நாட்டில் மட்டும் தானே போராடிவருகிறீர்கள்? இந்தியாவின் மற்ற மாநிலங்கள் எல்லாம் அமைதியாகத் தானே இருக்கின்றன?

ð அணு உலைகள் பாதுகாப்பானவை என்று சொல்லிவந்த அமைச்சர்களை மராட்டியத்தில் உள்ள மக்கள் புகுசிமாவிற்கு அனுப்ப முடிவு செய்தனர்.

ð அதற்கான போக்குவரத்துக் கட்டணத்தைத் தலைக்கு ஒரு உரூபா வாங்கிச் சேர்த்து, காசோலைகள் அமைச்சர்களுக்கு அனுப்பப்பட்டன.

ð குசராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் கட்சிப்பாகுபாடு இல்லாமல் அமெரிக்கா நிறுவும் அணு உலையை எதிர்த்து வருகிறார்கள். அங்கு நடந்த துப்பாக்கிச்சூட்டில் இதுவரை மூவர் உயிரை விட்டிருக்கிறார்கள்.

ð அரியானா மாநிலத்தின் பத்தேபாத்தில் மக்கள் தொடர் போராட்டம், பட்டினிப் போராட்டம் எனப் போராடிவருகிறார்கள்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களே கூடங்குளம் அணுமின்திட்டம் வேண்டும் என்கிறாரே!

‘அணுமின் திட்டம் வேண்டும்’ என்று சொல்வதற்கு அவர் என்னென்ன காரணங்கள் சொல்கிறார்?

23) அன்றாடம் செய்தித்தாள்களைப் படித்தாலே அவருடைய கருத்துகள் உங்களுக்குப் புரிந்திருக்கும். சரி! இருந்தாலும் சொல்கிறேன்.

  • அணு மின்சாரம் மலிவானது.
  • கூடங்குளம் அணு உலை நூறு விழுக்காடு பாதுகாப்பானது.
  • அணுக்கழிவுகளை எட்டாண்டுகள் வரை பாதுகாப்பாக வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
  • சப்பானின் புகுசிமா அணு நேர்ச்சியில் ஒருவர் கூடச் சாகவில்லை.
  • நீங்கள் பெரிதாகப் பேசும் செர்நோபிள் அணு நேர்ச்சியில் ஐம்பத்தேழு பேர் தாம் இறந்தார்கள்.
  • யுரேனியம் கிடைக்காமல் தான் செர்மனி அணு உலைகளை மூடுகிறதே தவிர, புகுசிமா நேர்ச்சியால் ஏற்பட்ட அச்சத்தால் ஒன்றும் இல்லை.

என்று உங்கள் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் நெற்றியடி அடித்துச் சொல்லியிருக்கிறார். அப்படிச் சொல்லியும் உங்களுக்குப் புரியவில்லையா?

முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் கருத்துகளை நன்றாக ஊன்றிப் படித்திருக்கிறீர்கள். நீங்கள் சொல்லும் அக்கருத்துகளையே ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

1.கலாம்: அணு மின்சாரம் மலிவானது.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கூறும் இக்கணக்கானது, ‘ஒரு கிராம் யுரேனியத்தின் விலையால் அதிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தின் அளவை வகுத்துச் சொல்வதாகும்’. ஆனால் அணு மின்சாரத்தைக் கணக்குப் போடும்போது கருத்தில் கொள்ளப்பட வேண்டியவை:

ð அணு உலைகளுக்குச் செய்யப்படும் சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு ஆகும் செலவு. (இதுவே பிற முறைகளுக்கு ஆகும் செலவை விடப் பல நூறு மடங்கு அதிகம்)

ð அணு உலையை ஏறத்தாழ முப்பதாண்டுகளுக்குப் பின் பிரித்துக் கலைத்துவிடவேண்டும். இப்போது கூடங்குளத்திற்குப் பதின்மூன்றாயிரம் கோடி உரூபா செலவாகியிருப்பதாக அரசு சொல்கிறது. இவ்வுலையைப் பிரிக்க இன்றைய கணக்கில் இருபதாயிரம் கோடி உரூபா ஆகும் என்று அரசு கூறி வருகிறது. (அப்படியானால் இன்னும் முப்பதாண்டுகளில் அத்தொகை ஐம்பதாயிரத்தில் இருந்து அறுபதாயிரம் கோடி உரூபா தேவைப்படும்.). ஆகக் கூடங்குளத்திற்கு ஆகப்போகும் தொகை (கட்டுவதற்கும் பிரிப்பதற்கும் மட்டும்) ஏறத்தாழ எண்பதாயிரம் கோடி உரூபா.

ð அணு மின்சாரம் மலிவாகக் கிடைக்கும் ஒன்று என்றால் “Wall street நிறுவனங்கள் அணு உலைகள் அமைக்க உதவ மாட்டோம்” (“Wall street does not vote for Nuclear Industries”) என ஏன் சொல்கிறார்கள்?

ð நாட்டின் அணுஆற்றல் துறையை அரசு ‘அலுவல் கமுக்கச் சட்டத்தின்’ (‘Official Secret Act’) கீழ் பாதுகாத்து வருகிறது. எனவே அங்கு எவ்வளவு செலவழிக்கப்பட்டுள்ளது என்பது மக்களுக்குச் சொல்லப்பட மாட்டாது. கதை இப்படியிருக்க, அணு மின்சாரம் மலிவானது என்று எந்தக்கணக்கில் கூறுகிறார்கள்?

2. கலாம்: கூடங்குளம் அணு உலை நூறு விழுக்காடு பாதுகாப்பானது.

ð இக்கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்வதாக வைத்துக்கொள்ளுங்கள். இந்திய அரசு, இரசிய அரசுடன் சிறப்பு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இவ்வொப்பந்தத்தின் படி, கூடங்குளம் அணு உலையில் நேர்ச்சி ஏதும் ஏற்பட்டால் இந்த அணு உலையை நிறுவியிருக்கின்ற “ஆடம்சுதுரோயெக்சுபோர்ட்டு” (“Atomstroyeksport”) நிறுவனத்தின் மீது யாராலும் வழக்குத் தொடர முடியாது. இந்த ஒப்பந்தத்தின் பெயர் தான் ‘அணு உலை நேர்ச்சி இழப்பீட்டு ஒப்பந்தமாகும்’. அணு உலை நூறு விழுக்காடு பாதுகாப்பானது என்றால் இந்த ஒப்பந்தம் எதற்கு?

ð அணு உலைகள் பாதுகாப்பானவை என்றால், பெரும்பாலான தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் ஏன் அணு உலைகளைக் காப்பீடு செய்ய முன்வருவதில்லை?

ð மற்ற எரிபொருள் ஆற்றல் தொழில்களைக் காட்டிலும் அணு ஆற்றல் தொழிலுக்கு ‘Wall Street’ வங்கிகள் ஏன் கூடுதல் வட்டி வாங்குகின்றன?

3.கலாம்: அணுக்கழிவுகளை எட்டாண்டுகள் வரை பாதுகாப்பாக வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ð கழிவுகளைப் பாதுகாக்க முடியும் என்பதை ஏற்றுக்கொள்வோம். அப்படியானால் இரசியா ஏன் (முன்பு ஒப்புக்கொண்டதற்கு மாறாகக்) கழிவுகளை எடுத்துச் செல்ல முடியாது எனக் கைவிரிக்கிறது?

ð அணுக் கழிவுகள் என்று சொல்வது ஏதோ நம்முடைய வீட்டில் இருந்து கொட்டும் சமையல் கழிவுகளைப் போல என எண்ணி விடாதீர்கள். அணுக்கதிர் தனிமமான புளூட்டோனியத்தின் ஒரு கிராமில் பத்து இலட்சத்தில் ஒரு பகுதியே புற்றுநோயை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது. இந்தக் கழிவு இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்குக் கதிரியக்கத்தை வெளிப்படுத்தும்.

ð இரண்டு இலட்சம் ஆண்டுகள் (சரி! வெளியில் பேசப்படுகிற இருபத்தைந்தாயிரம் ஆண்டுகள் என்று கூட வைத்துக்கொள்ளுங்கள்). இருபத்தைந்தாயிரம் ஆண்டுகள் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு பொருளை எட்டாண்டுகள் மட்டும் பாதுகாத்துவிட்டு அதன் என்ன செய்யப் போகிறோம்?

ð அணுக்கழிவை நிலநடுக்கமும் நீர் ஒட்டும் வாய்ப்பும் அறவே இல்லாத யூக்கா மலையில் ஆழப் புதைக்கும் திட்டத்திற்குப் பல்லாயிரம் கோடிச் செலவழித்த பிறகு, அதுவும் பெரிய தீங்கு விளைவிப்பது தான் என அமெரிக்கா அந்தத் திட்டத்தைக் கைவிட்டது ஏன்?

4.கலாம்: சப்பானின் புகுசிமா அணு நேர்ச்சியில் ஒருவர் கூடச் சாகவில்லை.

ð ஒருவர் கூடச் சாகாத புகுசிமா நேர்ச்சிக்கு ஏன் ‘நேர்ச்சி அளவு: ஏழு’ என உச்ச அளவு சொல்லப்பட்டது?

ð ‘செர்நோபிளைப் போல இருபது மடங்கு கதிர்வீச்சு வெளிப்பட்டுள்ளது’ என அமெரிக்காவில் அணுத் தொழிலில் துணைத்தலைவராக இருந்த அர்னாடு கண்டர்சன் என எப்படிச் சொன்னார்? (http://www.aljazeera.com/indepth/features/2011/06/201161664828302638.html)

ð ஒருவர் கூடச் சாகவில்லை என்றால் ஏன் சப்பான் அரசு தன்னுடைய நாட்டில் அணு உலைகளை நிறுவுவதை உடனடியாக நிறுத்தி வைத்துள்ளது ஏன்?

ð ஒருவர் கூடச் சாகாத ‘சிறிய’ நேர்ச்சிக்குச் சப்பான் அரசு ஏன் அங்கு வாழ்ந்து வந்த எழுபதாயிரம் பேரை உடனடியாக வெளியேற்றியது?

ð புகுசிமாவில் பயிரான நெல்லை ஏற்றுமதி செய்யக்கூடாது எனச் சப்பான் அரசு ஏன் தடை விதித்தது? (http://www.dnaindia.com/world/report_japan-bans-shipment-of-rice-harvested-in-fukushima-after-high-cesium-level-detected_1619606)

5.கலாம்: நீங்கள் பெரிதாகப் பேசும் செர்நோபிள் அணு நேர்ச்சியில் ஐம்பத்தேழு பேர் தாம் இறந்தார்கள்.

ð இரண்டாம் உலகப் போரின் போது சப்பானின் இரோசிமா, நாகசாகி ஆகிய நகரங்கள் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதில் எத்தனைப் பேர் இறந்தார்கள்? அதன் பிறகு எத்தனைக் குழந்தைகள் ஊனமாக, மனவளர்ச்சி குன்றியதாக எனப் பல்வேறு குறைகளுடன் தொடர்ந்து பிறந்திருக்கின்றன என்பது நீங்கள் அன்றாடம் செய்தித்தாள் வாசிப்பவராக இருந்தாலே உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதைப் போல நூறு மடங்கு கதிர்வீச்சைச் செர்நோபில் அணு விபத்து வெளிப்படுத்தியது என்றால் எவ்வளவு பெரிய அவலம் நடந்திருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ளுங்கள்.

ð ஐம்பத்தேழு பேர் இறந்து போவது என்பது ஒரு பேருந்து நேர்ச்சியைப் போலத்தான்! அப்படியானால் அதை ஏன் ஆசியாவின் பெரிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகத்தில் ‘சுற்றுச்சூழலியல்’ துறை பாடத்திட்டத்தில் வைத்துப் பொறியியல் மாணவர்களுக்குச் சொல்லித் தருகிறார்கள்? கலாம் அவர்களே அப்பல்கலைக்கழகத்தில் சில காலம் பேராசிரியராகப் பணியாற்றினாரே!

ð செர்நோபிள் நேர்ச்சியால் ஒன்பது இலட்சத்து எண்பத்தைந்தாயிரம் பேர் இறந்து போனார்கள் என்று இரசிய அரசு அறிக்கையே சொல்கிறது. (இதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள ‘Chernobyl: Consequences of the Catastrophe for People and the Environment’ என்னும் அறிக்கையைப் படித்துப் பாருங்கள்).

ð செர்நோபிள் நேர்ச்சியால் செர்நோபிளைத் தாண்டி ஐரோப்பாவில் 1 இலட்சம் சதுர கி. மீ. நிலம் வேளாண்மை செய்ய முடியாத அளவு மாசுபட்டுள்ளது.

6.கலாம்: யுரேனியம் கிடைக்காமல் தான் செர்மனி அணு உலைகளை மூடுகிறதே தவிர, புகுசிமா நேர்ச்சியால் ஏற்பட்ட அச்சத்தால் ஒன்றும் இல்லை.

ð செருமன் நாட்டின் அதிபர் (சான்சலர்) ஆங்கெலா மார்க்கெல் நம்முடைய தலைமையமைச்சர் மன்மோகன்சிங்கைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே ‘சப்பான் நேர்ச்சிக்குப் பிறகு ஏற்பட்ட எதிர்ப்பால் தான் அணு உலைகளை மூடுகிறோம்’ என்று சொல்லியிருக்கிறார். இது கலாம் அவர்களுக்குத் தெரியாதா?

ð யுரேனியம் கிடைக்காமல் தான் செருமனி அணு உலைகளை மூடுகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்படியானால் நம்முடைய நாட்டில் யுரேனியம் கிடைக்கிறதா? இல்லையே! இந்த யுரேனியத்தை இறக்குமதி செய்வதற்குத் தானே மன்மோகன் அரசு அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தத்தைச் செய்துள்ளது!

ð யுரேனியத்தை நம்முடைய நாட்டிற்கு இறக்குமதி செய்ய முன்வந்துள்ள ஆசுதிரேலியாவில் ஓர் அணு உலை கூடக் கிடையாது! ஏன்?

அப்படியானால் அப்துல் கலாமும் காசு வாங்கிக் கொண்டு நம்மை ஏமாற்றுகிறார் என்று சொல்கிறீர்களா?

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நாடு போற்றுகிற ஒரு தலைவர். இளைஞர்கள் பலர் அவரை முன்னோடியாகக் கொண்டு இயங்கிவருகிறார்கள். இன்னும் சொல்லப் போனால் நம்முடைய பகுதியைச் சேர்ந்தவர்; தமிழ்வழியில் படித்தவர்; ஏழை மீனவக் குடும்பத்தில் இருந்து இவ்வளவு பெரிய பதவிக்கு வந்தவர்; எளிமையானவர் என்று பெயர் பெற்றவர். இவ்வளவு புகழ் பெற்ற ஒருவர் காசு வாங்கிக்கொண்டு ஏமாற்றுகிறார் என்றெல்லாம் கண்மூடித்தனமாக நாங்கள் சொல்லவில்லை; சான்றுகள் எவையும் இன்றி அப்படிச் சொல்வது பொருத்தமும் இல்லை. அப்துல் கலாம் ஆனாலும் சரி! அன்னை தெரசாவானாலும் சரி! அறிஞர் அண்ணாவானாலும் சரி! ‘சரி என்றால் சரி என்று சொல்வோம்! தவறென்றால் தவறு என்று சொல்வோம்!’ ‘நெற்றிக்கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே!’ என்றல்லவா தமிழ் நமக்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறது! முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு கலாம் அவர்கள், செல்லும் இடமெல்லாம் திருக்குறள் சொல்லும் இயல்புடையவர். அந்தத் திருக்குறள்

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் கேட்ப(து) அறிவு” என்று தானே நமக்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறது! ஆக, ஒரு கருத்தைக் கலாம் சொன்னாலும் சரி, யார் சொன்னாலும் சரி, ‘மெய்ப்பொருள் காண்பது’ நம்முடைய கடமையாகிறது அல்லவா?

நீங்கள் சொல்வது எல்லாம் சரி என்று ஒரு வாதத்திற்கு வைத்துக் கொள்வோம். உங்கள் போராட்டத்தை அறிஞர்களுள் ஒருவராவது ஆதரிக்கிறாரா?

புகழ்பெற்ற அணுவியலாளர்களுள் ஒருவராகத் திகழும் முனைவர் பரமேசுவரன் (பாபா அணு ஆராய்ச்சி நிறுவனம்), சப்பான் (புகுசிமா) அணுமின் திட்டத்தில் பணியாற்றிய முனைவர் யமுனா, பேராசிரியர் வி. சிவசுப்பிரமணியன், அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் முனைவர் டி.டி. அசித்குமார் என அடுக்கிக்கொண்டே போகலாம். (http://www.dnaindia.com/india/report_top-indian-scientists-to-launch-nation-wide-protest-for-ban-on-nuclear-plants_1600845-all)

நீங்கள் சொல்வதை எல்லாம் பார்க்கும் போது கூடங்குளம் அணு உலையை எதிர்க்க வேண்டும் என்று தான் தோன்றுகிறது. ஆனால் அங்கு போராடுபவர்களுக்கு (கூடங்குளம் திட்டத்தில் இரசியாவின் பங்கு இருப்பதால்) அமெரிக்கா பணம் கொடுப்பதாகச் சொல்கிறார்கள். அதை எப்படி ஏற்றுக்கொள்வது?

கூடங்குளத்தில் மக்கள் சாதி, மதம், கட்சி என எல்லாவற்றையும் தாண்டி ஒற்றுமையாக அரசை எதிர்த்துப் போராடி வருகிறார்கள். அதை ஒடுக்க விரும்பும் அரசே இது போன்ற பொய்ச்செய்திகளைப் பரப்புவது வருத்தப்பட வேண்டியது மட்டுமில்லை; வெட்கப்பட வேண்டியதும் ஆகும்.

அரசு பொய் சொல்கிறது என்று எப்படிச் சொல்கிறீர்கள்?

ð இப்போராட்டத்தை நடத்துபவர்கள் அமெரிக்கத் துணையுடன் அமைக்கப்பட்டுள்ள தாராப்பூர் அணு உலை, பிரான்சு துணையுடன் அமையும் செய்தாப்பூர் அணு உலை ஆகியவற்றையும் சேர்த்தே எதிர்த்து வருகிறார்கள். தன்னுடைய துணையுடன் அமைந்துள்ள உலைகளை எதிர்ப்பவர்களுக்குக் காசு கொடுத்து அமெரிக்கா வளர்த்துவிடுமா? இது சொந்தக் காசில் ‘சூனியம்’ வைத்துக்கொள்வது போல் அல்லவா ஆகிவிடும்?

ð ஏற்கெனவே இப்போராட்ட வரலாற்றை உங்களுக்குச் சொல்லிவிட்டேன். இருபத்தைந்து ஆண்டுகளாக நடந்து வரும் போராட்டம் இன்று உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அவ்வளவு தான்! அமெரிக்கா தான் இப்போராட்டத்தைத் தூண்டுகிறது என்று சொன்னால் பாபா அணு ஆராய்ச்சி நிறுவன அறிவியலாளர் முனைவர் பரமேசுவரன், இசையமைப்பாளர் இளையராசா, நடிகர் நாசர், முன்னாள் அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டசு (அமெரிக்காவின் கோககோலா நிறுவனத்திற்கு இந்தியாவில் தடை விதித்தவர் இவர்!) ஆகியோருக்கு இருபத்தைந்து ஆண்டுகளாக அமெரிக்கா பணம் கொடுத்து வருகிறது என்று பொருளாகிறது. ‘கேட்பவன் கிறுக்கனாக இருந்தால் கேப்பைச் சட்டியில் நெய் வடிகிறது என்று சொல்வதையும் நம்புவான்’ என்று ஊர்ப்புறத்தில் பழமொழி ஒன்று உண்டு. அரசு நம்மைக் கோமாளியாக்குவதுடன் தானும் வழிதவறிச் செல்கிறது.

சரி! கூடங்குளம் அணு உலை கூடவே கூடாது என்னும் உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன். அப்படியானால் மின்வெட்டைத் தீர்க்க என்ன தான் வழி?

மின்வெட்டை ஒரு நாளும் அணு மின்சாரம் தீர்த்துவிடாது. 1962ஆம் ஆண்டே, ‘இன்னும் இருபத்தைந்து ஆண்டுகளில் நாங்கள் 20000 மெ.வா. மின்சாரத்தை அணு உலைகள் வழியாக உற்பத்தி செய்து விடுவோம்’ என்று சொன்னார்கள். ஆனால் 1987ஆம் ஆண்டு ஆயிரம் மெ.வா கூடக் கிடைக்கவில்லை. அதன்பின் இரண்டாயிரமாவது ஆண்டில் நாங்கள் மொத்தத் தேவையில் பத்து விழுக்காட்டு அளவுக்கு மின்சாரம் உருவாக்கி விடுவோம் என்றார்கள். ஆனால் மூன்று விழுக்காட்டைக் கூட எட்டவில்லை. எனவே கூடங்குளம் அணு உலை நமக்கு மின் தட்டுப்பாட்டைத் தீர்க்கும் என்பது ஏட்டுச்சுரைக்காய் தான்! அது கறிக்கு உதவாது.

சரி! மாற்று என்ன? அதற்கு ஏதாவது திட்டம் வைத்திருக்கிறீர்களா?

ð தமிழகத்தில் குண்டு விளக்குகளுக்கு(‘பல்பு’) மாற்றாக சி.எப்.எல் (‘’CFL’) விளக்குகளைப் பொருத்தினால் ஒரே நொடியில் 1800 மெ.வா. மின்சாரம் மிச்சமாகும்.

ð தமிழ்நாட்டில் கயத்தாற்றில் இருந்து கன்னியாகுமரி வரை நிறுவப்பட்டுள்ள காற்றாலைகள் மூலம் நாம் நாள் ஒன்றுக்கு 3200 மெ.வா மின்சாரம் பெறுகிறோம். இந்தியாவில் இது போல் காற்றடிக்கும் கடற்கரை குசராத்து முதல் வடகிழக்கு வரை ஏழாயிரத்து ஐந்நூறு கி.மீ. நீளத்திற்கு உள்ளது. அங்கும் காற்றாலைகள் நிறுவினால் பல்லாயிரக்கணக்கான மெ.வா. மின்சாரம் பெற முடியும்.

ð இன்றுள்ள காற்றாலைகள் 11-14 கி.மீ வேகத்தில் காற்றடித்தால் சுழல்கின்றன. இவற்றை ஆய்ந்து 4-5 கி.மீ வேகத்தில் காற்றடித்தாலே இயங்கும் வகையில் காற்றாலைகள் அமைக்கலாம் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன.

ð ஒரு ச.கி.மீ. பரப்பளவில் சூரியத் தகடுகளைப் பொருத்தினால் நாள் ஒன்றுக்கு 35 மெ.வா. மின்சாரம் பெற முடியும்.

ð நம் நாட்டில் உள்ள தார் பாலைவனத்தில் 5000 ச.கி.மீ பரப்பளவில் (5000 * 35 = 175000 மெ.வா.) சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெற முடியும்.

ð தூத்துக்குடி மாவட்டத்தில் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரில் இருந்து எரிவாயு உருவாக்கப்பட்டு மின்சாரம் பெறப்படுகிறது. இருபது இலட்ச உரூபா முதலீட்டில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் மாதம் ஓர் இலட்ச உரூபா அளவுக்குப் பணம் மிச்சமாகிறது.

ð இதே போல் ஒவ்வொரு மாவட்டத் தலைநகர், நகராட்சிகள், பேரூராட்சிகள் என எங்கெல்லாம் கழிவுநீர் அரசால் சேர்க்கப்படுகிறதோ அங்கெல்லாம் ‘கழிவு நீர் மேலாண்மை’ மூலம் மின்சாரம் பெற முடியும். ஏறத்தாழ ஐந்து மெ.வா. மின்சாரத்தை ஒவ்வொரு நகராட்சியில் இருந்தும் நம்மால் பெற முடியும். இப்படிச் செய்வதன் மூலம் நகர்ப்பகுதிகளில் மின்வெட்டை உடனடியாகக் குறைக்கலாம்.

- முத்துக்குட்டி

(muthukutti@zoho.com)

தொகுப்புக்குத் துணை நின்ற படைப்புகள்:

  1. அணு உலைகள் குறித்து, கீற்றில் வெளியான படைப்புகள் அனைத்தும்
  2. ‘கூடங்குளம் பொய்யைப் பிளந்து வாழ்வைக் காக்கும் போர்’, அ.முத்துக்கிருட்டினன், உயிர்மை, 2011 திசம்பர் இதழ்
  3. ‘கூடங்குளம்: கலாம் சொல்வதெல்லாம் உண்மை தானா?’, அ.மார்க்சு, குமுதம் தீராநதி, 2011 திசம்பர் இதழ்
  4. ­www.dianuke.org இணையத்தளத்தின் சில கட்டுரைகள்
  5. ‘அப்துல் கலாமுக்குச் சில கேள்விகள்’, மாலெ தீப்பொறி, 2011 திசம்பர் தொகுதி 10, இதழ் 5

‘மாற்றுவழியில் மின்சாரம்’, நெல்லை கவிநேசன், கோகுலம் கதிர், 2011 திசம்பர் இதழ்

நன்றி: கீற்று இணையதளம்

நன்றி:பூவுல‌கின் ந‌ண்ப‌ர்க‌ள்

http://poovulagu.blogspot.com/

பூவுல‌கின் ந‌ண்ப‌ர்க‌ள் இணைய‌த்தில் வெளிவ‌ந்த‌ இக்க‌ட்டுரையை இங்கே மீள‌ப்ப‌திகின்றேன். மேலும் சில‌ த‌க‌வ‌ல்க‌ள்….

 இந்தியாவில் உற்ப‌த்தி செய்ய‌ப்ப‌டும் ஒவ்வொரு 100 மெகா வாட் மின்சார‌த்தில் குறைபாடுடைய‌ மின்க‌ட‌த்த‌ல், வினியோகம்(inefficient transmission and distribution (T&D) மூல‌மாக‌ 40 மெகா வாட் மின்சார‌ம் வீணாகின்ற‌து.
 தொழிற்சாலைக‌ளும், தொழில் உற்ப‌த்தி அதிக‌ம் நிக‌ழும் சுவீட‌ன் போன்ற‌ நாடுக‌ளில் இந்த‌ மின்க‌ட‌த்த‌ல், வினியோக இழ‌ப்பு வெறும் 7% ஆகும். இதையே வேறு வ‌ழிக‌ளில் கூறுவ‌தானால் க‌ட‌ந்த‌ ஆண்டு இந்தியாவில் உற்ப‌த்தி செய்ய‌ப்ப‌ட்ட‌ 1,80,000 மெகா வாட் மின்சார‌த்தில் மின்க‌ட‌த்த‌ல், வினியோக இழ‌ப்பு மூல‌ம் 72,000 மெகா வாட் வீணாகியுள்ள‌து. இது ம‌காராஷ்டிரா, குச‌ராத், த‌மிழ்நாடு, ஆந்திரா, க‌ர்நாடகா ஆகிய‌ மாநில‌ங்க‌ளில் உற்ப‌த்தி செய்ய‌ப்ப‌டும் மொத்த‌ மின்சார‌த்திற்கு ச‌ம‌ம்.

இந்த‌ குறைபாட்டை ச‌ரி செய்து 90% என்ற‌ அள‌வை நாம்(இந்தியா) நெருங்கினால் அதன் மூலம் 60,000 மெகாவாட் ந‌ம‌க்கு கிடைக்கும், கூட‌ங்குள‌ம் போல‌ 60 அணு உலைக‌ளிலிருந்து கிடைக்கும் மின்சார‌த்திற்கு இது ச‌ம‌ம், அதுவும் எந்த‌ வித‌ ஆப‌த்துமின்றி ந‌ம‌க்கு இம்மின்சார‌ம் கிடைக்கின்ற‌து என்ப‌தையும் நினைவில் கொள்ள‌வேண்டும்.(ஒரு அணு உலையிலிருந்து பெற‌க்கூடிய‌ மின்சார‌ம் 1,000 மெகாவாட் என‌க்கொள்க‌)

நன்றி: The Weekend Leader.

http://www.theweekendleader.com/Causes/833/Nuking-myths.html

நான் ஏன் இந்திய சுதந்திர தினத்தை புறக்கணிக்கின்றேன் ………

  • காசுமீர் தேசத்தை சீர்குலைத்து, இந்திய இராணுவத்தின் மூலம் அம்மக்களை கொலை செய்து, கற்பழித்து, காணாமல் போகச் செய்த‌தற்காக(தொடர்ந்து செய்து வருவதற்காக‌…
  • உலகிலேயே மிக நீண்ட போர் நிறுத்த ஒப்பந்தமான இந்திய யூனியனுக்கும் நாகாலாந்து விடுதலைப்போராளிகளுக்கும் இடையான ஒப்பந்தத்தை மீறி, அவர்களை பேச்சுவார்த்தை என்று கூறி வரவழைத்து கொலை செய்ததற்காக‌
  • இந்தியாவின் வட-கிழக்கு மாகாணங்களில் இந்திய இராணுவம் செய்யும் கொலைகள், பாலியல் வன்முறைகளுக்காக….உலகிலேயே மிக நீண்ட அகிம்சா போராட்டமான ஐரோம் சர்மிளாவின் பதினொரு ஆண்டு கால உண்ணாவிரதப் போராட்டத்தை கண்டும் காணாமல் நாடகமாடிவருவதற்காக‌
  • இந்தியாவின் மையப் பகுதியில் வாழ்ந்து வரும் பழங்குடிகளை பணக்கார முதலாளிகளை மேலும் வளர்ப்பதற்காக திட்டமிட்டு கொலை செய்தும், அவர்கள் மண்ணை விட்டு அப்புறப்படுத்தியதற்காக‌
இந்திய இராணுவத்தினால் கண்டுபிடிக்கப்பட்டு 3 விரல்களையும் இழந்து நக்சல் தீவிரவாதி
இந்திய இராணுவத்தினால் கண்டுபிடிக்கப்பட்டு 3 விரல்கள் வெட்டப்பட்ட‌ நக்சல் தீவிரவாதி
  •  சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் நவீன கொத்தடிமை முறைகளை உருவாக்கி, தொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறித்ததற்காக‌
  • நீதி என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்பொழுதுமே கிடைக்காது என்று உறுதி செய்யும் உச்ச நீதி மன்றம் அமைப்பிற்காக…உதாரணங்கள்: போபாலில் அமெரிக்க நிறுவனம் செய்த திட்டமிட்ட கொலைக்கு இன்னும் நீதி வழங்காமல் இருப்பது, கயர்லாஞ்சி படுகொலையை ஏதோ கோபத்தில் ஒருவன் செய்ததாக தீர்ப்பு வழங்கியது. பாபர் மசூதி வழக்கு தீர்ப்பு போன்றவைகளுக்காக…
  • ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்பதை சட்ட மூலமாக வைத்துக்கொண்டு தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களையும், நிரபராதிகளையும் தண்டித்து வருவது (உதாரணம்…இதுவரை தூக்குதண்டனை வழங்கப்பட்டவர்களில்  பெரும்பாலோர் ஏதுமற்ற ஒடுக்கப்பட்ட மக்களே)
  • உச்ச நீதிமன்றம் அத்தி பூத்தாற் போல வழங்கிய தீர்ப்பான “வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு உணவுப் பொருளை இலவசமாக வழங்கு” என்று கூற உணவுப் பொருள் அழுகிப் போனாலும் பரவாயில்லை நாங்கள்(அரசு) ஏழைகளுக்கு உணவை இலவசமாக கொடுக்க மாட்டோம் என்று கூறி தன் சொந்த குடிகளை பட்டினிக் கொலை செய்ததற்காக‌
  • தெலங்கானா என்ற தனி மாநிலத்திற்காக தங்கள் இன்னுயிரை பல நூறு மக்கள் ஈந்த பின்னரும் அவர்களது கோரிக்கையை மதியாமல் இருப்பதற்காக‌
  • ஒரு மாநிலத்திற்கு அண்டை மாநிலம் பிரச்சனை செய்யும் பொழுது அதற்கு தீர்வு காணாமல் அந்த எரியும் பிரச்சனைக்கு எண்ணெய் ஊற்றி குளிர்காய்ந்ததற்காக (முல்லைப் பெரியாறு, காவிரி, பாலாறு).
  • தன் சொந்த குடிகளில்(மீனவன்) 500க்கும் அதிகமான மக்களை இன்னொரு நாட்டின் இராணுவம் சுட்டுக் கொன்றும், பல நூறு மக்களை ஊனப்படுத்தியும் வருவதை கண்டும் காணாமல் வாய் பொத்தி மௌனமாக இருப்பதற்காக…
  • வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் சமூகத்தின் ஒரு சாரார் மட்டும் வளரக்கூடிய வீக்கத்திட்டங்களை போட்டு தன் சொந்த குடிகளின் வாழ்வாதாரத்தை அழித்ததற்காக….(விவசாயிகளின் பட்டினிச் சாவில் இந்தியா முதலிடம்….)
  • சாதிய ரீதியிலான வன்முறைகளை இனவாத(Racisim) வன்முறை பட்டியலில் சேர்க்கக்கூடாது என்று உலக அரங்கில் போராடி சாதிய வன்முறையாளர்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக‌
  • சிறுபான்மை மக்களை பெரும்பான்மையினர் படுகொலை செய்த பொழுது அதை தடுக்காமல், அந்த சிறுபான்மை இன மக்களையே கைது செய்து சிறையில் அடைத்து துன்புறுத்திவருவதற்காக……(மும்பை தாக்குதல், கோத்ரா தாக்குதல்…..)
  • இவை மட்டுமின்றி அண்டை நாடுகளில் எழும் சனநாயக போராட்டங்களையும், மக்கள் விடுதலைப்போர்களிலும் தலையிட்டு அங்கு ஒரு இனப்படுகொலையை நடத்த உதவியதற்காக (பர்மா விடுதலைப் போராட்டம், ஈழ விடுதலைப் போராட்டம், நேபாள மக்கள் விடுதலைப் போராட்டம்)
  •  பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை போன்றவற்றையும், குடிநாயக வெளிகளுக்குட்பட்டு போராடும் உரிமை போன்ற உரிமைகளை வெறும் காகிதத்தில் மட்டும் உள்ளதற்காக (பினாயக் சென் போன்ற மனித உரிமையாளர்களை கைது செய்தது, ஆந்திராவில் பத்துக்கும் மேற்பட்ட மனித உரிமையாளர்களை கொலை செய்தது போன்ற…)

 

இந்தியர்கள் அனைவரும் என் உடன்பிறந்த சகோதர, சகோதரிகளாக நான் உண்மையாக கருதுவேயானால் அவர்களை இந்த நாடு தொடர்ந்து கொலை செய்து, கற்பழித்து, காணாமல் போகச் செய்து, வளர்ச்சித்திட்டங்கள் என்ற பெயரில் புறக்கணிக்குமானால், நான் இந்த சுதந்திர தினத்தை புறக்கணிப்பதை தவிர வேறு வழியில்லை, இது தான் ஒரு குடியின் முக்கியமான கடமையாக நான் கருதுகின்றேன்…

இவ்வாறு எனது கருத்தை வெளியிட்டதற்காக நான் கைது செய்யப்படலாம்..இது தான் சுதந்திரம்…..அரசுகளுக்கான சுதந்திரம்…மக்களுக்கானது அல்ல. மக்களுக்கான சுதந்திரம் மக்கள் புரட்சியின் மூலமே கிடைக்கும்…

ஆம்… அவள் இறந்து விட்டாள்

அவ‌ர்க‌ள் கூறிய‌து உண்மை தான், அவ‌ள் இற‌ந்து விட்டாள். அவ‌ள் பெய‌ர் வ‌ள்ளி, அவளது க‌ண‌வ‌ன் க‌ருப்ப‌ன். இருவருமே கடுமையான உழைப்பாளிகள். ஊரில் ப‌ஞ்ச‌ம் ஏற்ப‌ட்டத‌ன் கார‌ண‌மாக‌ வேலை தேடிய‌ க‌ருப்ப‌ன், க‌ங்காணி. ச‌ங்க‌ர‌பாண்டிய‌னின் பேச்சைக் கேட்டு கும‌ரி ம‌லை எசுடேட்டிற்கு ப‌ணி புரிய‌ த‌ன் ம‌னைவி வ‌ள்ளியுட‌ன் மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் தான் வ‌ந்தான். இரண்டு ஆண்டுகளாக அவர்கள் இருவரது உழைப்பும் அவர்கள் வாங்கிய நாற்பது ரூபாய் கடனை அடைக்கவும், அவர்கள் அங்கு வாழ்வதற்கு மட்டும் தான் போதுமானதாக இருந்தது. மூன்றாவது ஆண்டு அவர்கள் இந்த நரகத்திலிருந்து(தேயிலை தோட்டம்) எப்படியாவது ஊருக்கு சென்று விட வேண்டுமென்று தங்களுக்கு வரும் நோய்களையும், கடும் மழையையும் பொருட்படுத்தாது உழைத்துக் கொண்டே இருக்கின்றார்கள். அப்படியான ஒரு நாளில் தான் வள்ளிக்கு காய்ச்சல் வருகின்றது. காய்ச்சலுக்கான மருந்தை எடுத்துக் கொண்டே தொடர்ந்து உழைக்க காய்ச்சல் கட்டி அவளின் வயிற்றில் வளர தொடங்கி..பின்னாளில் அவளின் உயிரைப் பறித்துச் செல்வதில் முடிகின்றது … “எரியும் பனிக்காடு”(Red Tea) நாவல். ஆனால் இது தான் முழு நாவலா என்றால் இல்லை…..


     எரியும் ப‌னிக்காடு நாவல் நமக்கு சொல்பவை தேயிலை தோட்ட‌ தொழிலாளர்கள் ஒடுக்கப்படும் விதம், எழுத்த‌ர்க‌ளின் நிலை, சாதியமும் அதன் கோர வடிவமும், மதமும், சாமியார்களும் ஒடுக்கப்படும் மக்களின் இரத்தத்தை உறிஞ்சும் விதம்…இப்ப‌டி சொல்லிக்கொண்டே போக‌லாம். இவை எல்லாவ‌ற்றையும் தான் “எரியும் ப‌னிக்காடு” நாவ‌ல் எடுத்தாளும் க‌தையும், அத‌ன் அ‌ர‌சிய‌லும் வாசகனுக்கு கூறுகின்றது. அதும‌ட்டுமின்றி ஒவ்வொரு அத்தியாய‌த்திற்கும் ஆசிரியர் எடுத்தாண்டுள்ள‌ மேற்கோள்கள் ஒவ்வொன்றும் முத்துக்கள்…என்ன‌ள‌வில் ஒவ்வொரு அத்தியாய‌த்திற்கும் இவ்வ‌ள‌வு பொருத்த‌மான‌ மேற்கோள்களை நான் வேறெந்த‌ நாவ‌லிலும் பார்த்த‌தில்லை. இவ்வளவு மேற்கோள்களும் பல்வேறு நூல்களில் இருந்து எடுத்தாண்டவை என்பது நூலாசிரியரின்  புத்த‌க‌ வாசிப்பை ந‌ம‌க்கு கூறுகின்ற‌து. உங்க‌ளுக்காக‌ சில‌ மேற்கோள்க‌ள்…

வ‌ர்க்க‌ ரீதியாக‌ தொழிலாள‌ர்க‌ள் சுர‌ண்டுப்படும் நிலையை விள‌க்கும் ஒரு அத்தியாய‌த்திற்கு அவ‌ர் கையாண்டுள்ள‌ மேற்கோள் இது…
“உயிரியல்ரீதியாகப் பார்த்தால் வில‌ங்குக‌ளிலேயே வேட்டையாடுவ‌தில் மிக‌வும் திற‌மைவாய்ந்த‌வ‌ன் ம‌னித‌ன் தான். திட்ட‌மிட்டு த‌ன‌து சொந்த‌ இனத்தையே வேட்டையாடும் ஒரே வில‌ங்கும் ம‌னித‌ன் தான்”. -  Memories and Studies – Willam James
தேயிலைத் தோட‌த்திற்குள்ளே அவ‌ர்க‌ள் நுழையும் போது வ‌ரும் மேற்கோள்..
“இங்கே கால்பதிக்கும் முன் துறந்துவிடுங்கள் எல்லா நம்பிக்கைகளையும்”. இன்பர்னோ-டேன்டே.
முத‌லாளிக‌ள் ம‌ட்டுமே தொழிலாளிக‌ளை ஒடுக்குவ‌தில்லை. நிர்வாக‌த்தின் ஒவ்வொரு அங்க‌முமே தொழிலாளிக‌ளை ஒடுக்குகின்ற‌து என்ப‌தே உண்மை(சில‌ விதிவில‌க்குக‌ள் இருக்க‌லாம்)  அதைப் ப‌ற்றி…..
“ஏழைகளின் விம்மல் கவனிக்கப்படுவதே இல்லை. சர்வாதிகாரத்தின் ஒவ்வொரு மட்டத்திலுமுள்ள ஜந்துக்களாலும் அவர்கள் வதைக்கப்படுகிறார்கள்”…


வெள்ளைக்கார‌ர்க‌ளின் க‌ருணை உள்ள‌த்தைக் கூறும் ஒரு சில‌ வ‌ரிக‌ள்…
“சக்கிலி நாய், பீ தின்னி நாய், கூட்டிக்கொடுத்த நாய்” என்று தூய்மையான தமிழில் தன் முன்னால் செருப்பு அணிந்திருந்தான் என்ற ஒரே காரணத்திற்காக அங்கு பணிபுரிந்த எழுத்தர் ஒருவனை திட்டினான் தொரை.

 
முத‌லாளி வ‌ர்க்க‌த்தின் உண்மை முக‌த்தை தோலுரிக்கும் வ‌ரிக‌ள்….
“மனிதாபிமானத்தின் காரணமாக நாம் இங்கே வரவில்லை. இங்கிலாந்தில் இருக்கும் பங்குதாரர்களுக்கு லாபமீட்டித்தருவதற்காகவே இங்கே வந்திருக்கின்றோம். அதுவும் கொழுத்த இலாபம். அதற்கான விலையை இந்த நாடு கொடுக்கிறதோ அல்லது வேறு யாராவது கொடுக்கிறார்களா என்பதைப்பற்றி எனக்கு கவலையில்லை. நமக்கு இலாபம் வேண்டும். அதை ஈட்டியே ஆகவேண்டும்”.

 
     தேயிலைத் தோட்ட‌த் தொழிலாள‌ர்களின் செவியில் தின‌மும் நூறு முறையாவ‌து வ‌ந்து விழும் வார்த்தை “தேவிடியா ப‌ய‌லே…தேவிடியா முண்டை” என்ப‌திலிருந்தே அவர்கள் அங்கு எந்த நிலையில் வாழ்ந்து வந்தார்கள் என்பதை நமக்கு புரிய வைக்கும். அதுமட்டுமின்றி நாவலில் வரும் குமரிமலை தேயிலைத் தோட்டம் தான் தென்னிந்தியாவிலேயே ஒரளவு நல்ல நிலையில் உள்ள தேயிலைத் தோட்டம் என்று கூறப்படுகின்றது, அப்படியெனில் மற்ற தேயிலைத் தோட்டங்களில் வாழ்ந்த மக்களின் நிலை நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட மிகவும் துயரகரமான ஒன்றாகவே இருந்திருக்கும் .இந்த நிலையில் அங்கு தன் குருதியை உறிஞ்சும் அதிகார வர்க்க அட்டைகளுக்கு நடுவில் வாழ்ந்து வரும் அம்மக்களை ஒரு சாமியார் தான் வாழவேண்டும் என்று நலனை மட்டுமே கருத்தில் கொண்டு ம‌த‌த்தின், க‌ட‌வுளின் மூல‌மாக‌ அவ‌ர்க‌ளின் குருதியை மேலும் உறிஞ்சுகிறான். அடித்த‌ட்டு ம‌க்க‌ள் ம‌ட்டுமே க‌ட‌வுளை உண்மையாக‌ ந‌ம்புகிறார்கள் என்ப‌தும், அவ‌ர்க‌ளின் குருதியை ம‌ட்டுமே அடிப்ப‌டை மூல‌த‌ன‌மாகக் கொண்டு இந்த மத நிறுவன‌ங்க‌ள் இய‌ங்குகின்ற‌ன‌ என்ப‌தையும் இதன் மூலம் தெளிவு ப‌டுத்துகின்றார் நூலாசிரிய‌ர். இன்று நாம் குடிக்கும் ஒவ்வொரு சொட்டு தேநீரிலும் பல தொழிலாளர்களின் செந்நீர்(Blood) கலந்தே இருக்கின்றது.

அம்மக்கள் இந்த தேநீருக்காக கொடுத்த விலை சொல்லிலடங்காதது. ஒடுக்கப்பட்ட தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்வை பார்க்கவும், உங்களுக்கு மிகவும் பிடித்த தேநீருக்காக, காப்பிக்காக தங்களின் இன்னுயிரை துறந்த அந்த ஏழை மக்களின் நிலையை ஒரு முறையாவது காண வாசியுங்கள்…எரியும் பனிக்காடு நாவலை…ஆங்கிலம் மட்டுமே தெரிந்த நண்பர்கள் Red Tea என்ற மூல நாவலை வாசிக்கவும்.
……
நூலாசிரிய‌ரைப் ப‌ற்றி: எரியும் ப‌னிக்காடு என்ற‌ நாவ‌ல் Red Tea என்ற‌ நாவ‌லின் த‌மிழாக்க‌ம். த‌மிழாக்க‌ம் செய்த‌வ‌ர் தோழ‌ர்.இரா. முருக‌வேள்.  மூல‌ப்ப‌திவை எழுதிய‌வ‌ர். பி.எச்.டேனிய‌ல். இவ‌ர் 1940 ஆண்டு த‌லைமை எழுத்த‌ராக‌ வால்பாறை கார‌ம‌லை தேயிலைத் தோட்ட‌த்தில் கால்ப‌தித்து, தொழிலாள‌ர்க‌ள், எழுத்த‌ர்க‌ளின் மிக‌ மோச‌மான‌ நிலையை கண்டு, அவ‌ர்க‌ளின் உரிமைக்காக‌ போராடினார். இவ‌ரின் த‌லைமையின் கீழ் முத‌ல் “தென்னிந்திய‌ தோட்ட‌ அலுவ‌ல‌ர்க‌ள் ச‌ங்க‌ம்” உருவாகி, தென்ன‌க‌ம் முழுவ‌தும் கிளை ப‌ர‌விய‌து. இச்சங்கங்க‌ள் மூலம் அலுவ‌ல‌ர்க‌ள், தொழிலாள‌ர்க‌ளின் உரிமைக‌ளில் ப‌ல‌ மீட்டெடுக்க‌ப்ப‌ட்ட‌ன‌. அன்று அங்குவாழ்ந்த‌ ம‌க்க‌ளின்(தொழிலாளர்களின், அலுவலர்கள்) துயர நிலையையும், துரைக‌ளின் ஒய்யார‌ வாழ்வையும் வெளிக்கொண‌ர‌வே அவ‌ர் இந்நூலை எழுதினார். சாதிய‌, வ‌ர்க்க‌ ரீதியில் ஒடுக்க‌ப்ப‌டும் ம‌க்க‌ளின் வாழ்க்கையை அவ‌ர் அப்ப‌டியே கூறியுள்ளார் என்றால் அது மிகையில்லை.

பின் குறிப்பு :ந‌ண்ப‌ர்க‌ளுக்கும்/ தோழிக‌ளுக்கும்…..இந்த‌ க‌ட்டுரையில் இன்றைய‌ சூழ்நிலையில் அநாக‌ரிக‌மான‌ ப‌ல‌ வார்த்தைக‌ள் உள்ள‌ன‌. அன்றைய கால‌க‌ட்ட‌த்தின் உண்மைய‌ நிலை அவ்வாறு தான் இருந்த‌து என்ப‌தே உண்மை. அத‌னால் அவ்வார்த்தைக‌ளை த‌விர்ப்ப‌து ச‌ரியான‌ ஒன்ற‌ல்ல‌…இந்த‌ க‌ட்டுரை தான் எனது முதல் நூல் நோக்கு க‌ட்டுரை என்ப‌தால், இக்க‌ட்டுரைப் ப‌ற்றிய‌ உங்க‌ள் விம‌ர்ச‌ன‌த்தை நான் ஆவ‌லுட‌ன் எதிர்நோக்குகிறேன்.
நற்றமிழன்.ப

“ஓ ஈழம்” (த‌மிழ் ஈழ விடுதலைப் போராட்ட‌த்தின் வ‌ர‌லாறு) – திரு. குமார் பருடைக்கட்டி

 
 
   “ஓ ஈழ‌ம்” என்ற‌ பெயரில் க‌ன்ன‌ட‌ மொழியில் வெளிவ‌ந்த‌ நூலைப் பற்றி திரு.நாகரிகரே இரமேசு(மனித உரிமை ஆர்வலர்) அவர்கள் “போர்க்குற்றம் – இனப்படுகொலைக்கு எதிரான மன்றத்தின்” சார்பாக எழுதிய க‌ட்டுரையின் த‌மிழாக்க‌ம்.
 
 
 
   மே 19,2009 அன்று த‌மிழீழ‌ விடுத‌லைப் புலிக‌ளின் த‌லைவ‌ரும்,  க‌வ‌ர்ந்திழுக்க‌க்கூடிய‌ ஆளுமை கொண்ட‌வ‌ருமான‌ மேத‌கு.பிர‌பாக‌ர‌ன் அவ‌ர்க‌ளை இல‌ங்கை இராணுவ‌ம் கொன்றுவிட்ட‌தாக‌ இல‌ங்கை உல‌குக்கு அறிவித்த‌து. தேசிய‌ம், உறுதியான‌ கொள்கை பிடிப்பு, இர‌த்த‌க்க‌ளறியான‌ போர்க்க‌ள‌ங்க‌ள், தியாகங்கள், சூழ்ச்சிக‌ள், த‌விர்த்திருக்க‌ப்ப‌ட‌ வேண்டிய‌ ப‌ல ப‌டுகொலைக‌ள் (பொதும‌க்க‌ளின‌தும், போராளிக‌ளின‌தும்) கொண்ட‌ இல‌ங்கையின் வ‌ர‌லாற்றில் ஒரு முக்கிய‌ அத்தியாய‌ம் முடிவுக்கு வ‌ந்த‌து. தமிழ்ப்போராளிகளுக்கு எதிரான இறுதிக் கட்டப்போரில் வெற்றிபெற்றதாக இல‌ங்கை அதிப‌ர் இராச‌ப‌க்சே அறிவித்தார். இந்த‌ அறிவிப்பு த‌மிழ் ம‌க்க‌ளின் ஈழ‌த்தேச‌க் க‌ன‌வுக‌ளை ஒரு முடிவுக்கு கொண்டு வ‌ந்த‌து….போர் நடைபெற்ற பொழுதே  இலங்கை இராணுவத்தின் அற‌ம்த‌வ‌றிய‌, ஒழுக்க‌க்கேடான‌ கொலைக‌ள் ப‌ற்றிய‌ த‌க‌வ‌ல்க‌ள் உல‌க‌ ச‌மூதாய‌த்தைச் சென்ற‌டைந்தது, ஆனால் இராணுவம் மக்களின் மீது மேற்கொண்ட க‌ருணைய‌ற்ற‌ ப‌டுகொலைக‌ள் ப‌ற்றி போர் முடிந்த‌ பின்ன‌ர் வெளிவ‌ந்த எல்லாத்த‌க‌வ‌ல்களும் உலகெங்கும் வாழும் ச‌மூக அக்கறைக் கொண்ட மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மனித உரிமை சட்டங்களை மீறி பொதும‌க்க‌ளைக் கொலை செய்யும் ப‌ட‌ங்க‌ளும், நாசிக்க‌ளின் வதைமுகாம்க‌ளை நினைவுப்ப‌டுத்தும் இல‌ங்கை அர‌சின் ‘ந‌ல‌ன்புரி முகாம்கள்’ என்ற‌ வ‌தை முகாம் புகைப்ப‌ட‌ங்க‌ளும், காணொளிக‌ளும் இல‌ங்கை அர‌சின் பொய்பிர‌ச்சார‌ங்க‌ளுக்கு எதிரான‌ வ‌லுவான‌ ஆதார‌ங்க‌ளாகின‌. பெரும்பாலான‌ ம‌க்க‌ளுக்கு இந்தியாவிலிருந்து பெற‌ப்ப‌ட்ட‌ செவிவ‌ழிச்செய்திக‌ள் மூல‌மாக‌ த‌மிழீழ‌ விடுதலைப் புலிக‌ளைப் ப‌ற்றி தெரியும், ஆனால்  த‌ர‌வுக‌ளும், புனைவுக‌ளும் மிகுந்த‌ த‌மிழ்த் தேசிய‌ப் போராட்ட‌ வ‌ர‌லாற்றைப்ப‌ற்றியும், அத‌ன் அர‌சிய‌ல் இய‌க்க‌ங்க‌ளைப் ப‌ற்றியும், அந்த‌ இய‌க்க‌த்தின் வர‌லாற்று சிற‌ப்புமிக்க‌ த‌லைவனைப் ப‌ற்றியும் இவ‌ர்க‌ளில் யாரும் அறிந்திருக்க‌மாட்டார்க‌ள். இது ஈழப்போராட்டத்தைப் பற்றி வெளிவந்த புத்த‌க‌ங்க‌ள், கையெழுத்துப்பிர‌திக‌ள், ஊட‌க‌ங்க‌ளில் வ‌ந்த‌ செய்திக‌ள், இணைய‌த்தில் வ‌ந்த‌ செய்திக‌ளை எல்லாம் தொகுத்து யாராவ‌து ஒரு நூலாக‌ வெளியிட மாட்டார்க‌ளா? என்ற‌ தேவையை உருவாக்கிய‌து, திரு.குமார் பருடைக்கட்டி எழுதி, கன்ன‌ட‌ப் ப‌திப்ப‌க‌ங்க‌ளில் ம‌திப்புமிக்க‌ ப‌திப்ப‌க‌மான‌ ‘ல‌ங்கேசு பிர‌க‌ச‌னா’ ப‌திப்ப‌க‌ம் வெளியிட்ட‌ “ஓ ஈழ‌ம்” என்ற‌ புத்த‌க‌த்தின் மூல‌ம் க‌ன்ன‌ட‌ர்க‌ளுக்கு மேற்கூறிய‌ தேவையான‌து நிறைவு செய்ய‌ப்ப‌ட்ட‌து.
"ஓ ஈழ‌ம்" புத்த‌க‌ம்

"ஓ ஈழ‌ம்" புத்த‌க‌ம்

 
      இலங்கையில் இறுதிப் போர் முடிந்த உடன் வெளிவந்த 360 ப‌க்க‌ங்கள் கொண்ட இப்புத்த‌கம் ஈழ‌ப்போராட்ட‌ம் ப‌ற்றிய‌ கேள்விக‌ளை அந்த‌ போராட்டக் களத்தின் உள்ளும், வெளியும் இருந்த கள நிலைப்பற்றிய தகவல்களையும், க‌டுஞ்சிக்க‌ல்க‌ளையும் தெளிவாக‌ ஆராய்ந்து வாச‌க‌ர்க‌ளுக்கு அறிமுக‌ப்ப‌டுத்துகின்றது. இந்த‌ப் புத்த‌க‌த்தின் மிக‌ முக்கிய‌மான‌ அம்ச‌ம் என்ன‌வென்றால் இப்புத்த‌கம் வாசகர்களுக்கு ஈழ‌ப்போராட்ட‌த்தின் தொடக்கம் முதல் இன்று வரையிலான எல்லா கால‌க்க‌ட்ட‌த்தையும் தெளிவாக‌க் காட்டுகின்ற‌து. அதுமட்டுமின்றி இப்புத்த‌க‌ம் த‌ற்கால‌ நிக‌ழ்வுக‌ளையும் ஆராய்ந்து அந்த‌ போராட்ட‌த்தைப்ப‌ற்றிய‌ முழுமையான‌ சித்திர‌த்தை வ‌ரைவ‌தால் இது இந்தியாவில் வாழும் இந்தியர்களாகிய எங்க‌ளுக்கு அண்டை நாடான இலங்கையில்(இந்தியாவுடன் கலாச்சார, வரலாற்று தொடர்புகள் கொண்டது இலங்கை) என்ன‌ ந‌ட‌ந்த‌து என்ப‌தைப் புரிந்து கொள்வதில் மிக‌ முக்கிய‌மான‌ ப‌ங்காற்றுகின்ற‌‌து.
 
  இந்த‌ புத்த‌க‌ம் ப‌னிரெண்டு அத்தியாய‌ங்க‌ளைக் கொண்ட‌து. முத‌ல் அத்தியாய‌ம் இல‌ங்கையின் பூர்வ‌குடிக‌ளைப் ப‌ற்றி அறிய‌த்த‌ருகின்ற‌து. முதல் அத்தியாயம் இலங்கையில் பூர்வகுடிகளான‌ திராவிட‌ர்க‌ள் வாழ்ந்த‌ கால‌த்திற்கு ந‌ம்மை அழைத்துச்செல்கின்ற‌து. திராவிட‌ர்க‌ளே அம்ம‌ண்ணின் உண்மையான‌ பூர்வ‌குடிக‌ளாவ‌ர். இன்றிலிருந்து சுமார் 2500 ஆண்டுக‌ளுக்கு முன்ன‌ர் அங்கு சென்ற‌ விச‌ய‌ன் என்ற‌ ம‌ன்ன‌னைப் ப‌ற்றியும் அவ‌ன் அங்கு அமைத்த சிங்கள அர‌சைப் ப‌ற்றியும் விள‌க்குகின்ற‌து நூல். திரு.குமார் அவ‌ர்க‌ள் இல‌ங்கையின் வ‌ள‌ர்ச்சியை, சிங்க‌ள‌, த‌மிழ், இசுலாமிய‌ குழும‌ங்க‌ளுக்கிடையேயான‌ போட்டியும், ஐயுற‌வும் கொண்டு ஒருங்கிணைந்து வாழ்ந்த‌ வ‌ர‌லாற்றின் வாயிலாக‌ கூறுகின்றார்.
 இர‌ண்டாவ‌து அத்தியாய‌ம் ஆங்கிலேய‌ ஆக்கிர‌மிப்பாள‌ர்கள் கொண்டு வந்த‌ “பிரித்தாளும் சூழ்ச்சியைப்” ப‌ற்றியும், அந்த‌ ஏகாதிப‌த்திய‌த்திட‌ம் இருந்து விடுத‌லை பெறுவ‌த‌ற்காக‌ சிங்க‌ள‌, த‌மிழ் ம‌க்க‌ள் மேற்கொண்ட‌ முய‌ற்சிக‌ளைப் ப‌ற்றியும் விள‌க்குகின்ற‌து. ஆங்கிலேய‌ர்க‌ளால் சிலோன் என்ற‌ழைக்க‌ப்ப‌ட்ட‌ இன்றைய‌ இல‌ங்கை 1948ல் சுத‌ந்திர‌ம்  அடைகின்றது. சுதந்திரம் பெற்ற அன்றைய நாளிலிருந்து ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியின் விளைவாக‌ சிங்க‌ள‌, த‌மிழ் இன‌ங்க‌ளுக்கிடையே உருவான‌ ப‌கைமை உண‌ர்வு மேலும் வ‌ள‌ர்வ‌தற்கான‌ விதைக‌ள் இங்கே தான் விதைக்க‌ப்ப‌ட்ட‌ன‌. முத‌ல் பிர‌த‌மரான‌ சேன‌நாய‌க‌ த‌மிழ் ம‌க்க‌ளின் மீதான‌ முத‌ல் தாக்குத‌லைத் தொடுத்தார். ஆம் இந்திய‌த் த‌மிழ‌ர்க‌ளான‌ ம‌லைய‌க‌த்த‌மிழ‌ர்க‌ளின் குடியுரிமையையும், வாக்குரிமையையும் ப‌றித்தார். (இம்ம‌க்க‌ளே இல‌ங்கையின் தேசிய‌ வ‌ருமான‌த்தின் முக்கிய‌ ப‌ங்கான‌ தேயிலைத் தோட்ட‌த்தை த‌ங்க‌ள் உயிரைக் கொடுத்து உருவாக்கிய‌வ‌ர்க‌ள் என்பதை நாம் நினைவு கூற‌வேண்டும்).
 
   மூன்றாவ‌து அத்தியாய‌ம் 1956ல் அர‌சு கொண்டு வ‌ந்த‌ “சிங்க‌ள‌ம் ம‌ட்டுமே” அர‌சின் அதிகார‌பூர்வ‌மான‌ மொழி என்ற‌ ச‌ட்ட‌த்தின் மூல‌ம் த‌மிழ‌ர்க‌ள் எவ்வாறு அர‌சிலிருந்தும், அர‌சிய‌ல‌லிருந்தும் ப‌டிப்ப‌டியாக‌ வெளியேற்ற‌ப்ப‌ட்டார்க‌ள் என்ப‌தை விள‌க்குகின்ற‌து. த‌மிழ‌ர்களின் போராட்டத்தின் ஓர் அங்கமாக, இலங்கையில்  கொலைக‌ளும், அத‌ன் விளைவாக‌ ஏற்ப‌டும் எதிர் கொலைக‌ளும் 1976-77 லிருந்து தொட‌ங்குகின்ற‌ன‌. இவை எல்லாம் அங்கு இருந்த‌ த‌மிழ் போராளிக்குழுக்க‌ளுக்கு இடையே ஏற்ப‌ட்ட‌ன‌. இந்த‌க் குழுக்க‌ள் தங்களுக்குள்ளே இரத்தக்களறி மிகுந்த சண்டைகளைப் போட்டுக்கொண்டே த‌மிழ் ஈழ‌ம் என்ற‌ இல‌க்கை நோக்கி போராடின‌.
 
 அத்தியாய‌ம் நான்கிலிருந்து ஒன்ப‌து வ‌ரை த‌மிழீழ‌ விடுத‌லைப்புலிக‌ள் அமைப்பு எப்ப‌டி ஒரு முண்ண‌னி அமைப்பாக‌வும், த‌மிழ‌ர்களின் அரசியல் நோக்கிற்கான‌‌ ஒரே  அமைப்பாக‌ மாறிய‌து என்ப‌தை விள‌க்குகின்ற‌து. மேலும் த‌மிழீழ‌ விடுத‌லைப் புலிக‌ள் த‌ங்க‌ளின் இல‌ட்சிய‌மான‌ த‌மிழீழ‌த்தை அடைய‌ க‌ட்ட‌மைக்க‌ப்ப‌ட்ட வன்முறை வழிமுறையை எவ்வாறு ப‌ய‌ன்ப‌டுத்தினார்க‌ள் என்ப‌தையும் கூறுகின்ற‌து. இந்த‌ நேர‌த்தில் இந்தியா த‌ன‌து புவிசார் அர‌சிய‌ல் ந‌ல‌ன்க‌ளுக்காக‌ இந்த‌ பிர‌ச்ச‌னையில் த‌மிழ‌ர்க‌ளுக்கும், இல‌ங்கை அர‌சிற்கும் இடையில் வ‌ந்து சிக்குகின்ற‌து. இல‌ங்கையின் உள்நாட்டுப் பிர‌ச்ச‌னை, உல‌க‌ அர‌ங்கிற்கு உள்ளே வ‌ருகின்ற‌து. இந்திய‌ அமைதிப் ப‌டை இல‌ங்கைக்குள் சென்றது இந்தியாவின் நிலையை மேலும் மோச‌மாக்குகின்ற‌து. எந்த‌ ம‌க்க‌ளைப் பாதுகாக்க‌ அல்லது பெய‌ர‌ள‌வில் அப்படி சொல்லிக் கொண்டு  இந்திய‌ப் பாதுகாப்பு ப‌டை அனுப்ப‌ப்ப‌ட்ட‌தோ, அந்த‌ ம‌க்களுடனே போரி‌ட்டது இந்திய படை.
  அத்தியாய‌ம் ப‌த்து இந்த‌ பிர‌ச்ச‌னையைத் தீர்ப்ப‌த‌ற்காக‌ முன்னெடுக்க‌ப்ப‌ட்ட புதிய‌ முய‌ற்சிக‌ளை விள‌க்குகின்ற‌து. சண்டை புரிந்து வந்த இலங்கை அர‌சுக்கும், தமிழீழ விடுத‌லைப் புலிக‌ளுக்கும் இடையில் ச‌ம‌ர‌ச‌ப் பேச்சாள‌ராக‌ நார்வே அர‌சு உள்ளே வ‌ந்‌து இர‌ண்டு த‌ர‌ப்புக்கும் இடையிலான‌ பேச்சுவார்த்தையைத் தொட‌ங்கி வைத்த‌து. ஆனால் இந்த‌ ச‌ம‌ர‌ச‌ பேச்சுவார்த்தை நீண்ட‌ நாட்க‌ளுக்கு நீடிக்க‌வில்லை. இது இர‌ண்டு த‌ர‌ப்புக‌ளுக்கும் இடையேயான‌ இறுதிப் போரைத் தொட‌ங்கிய‌து. இது அத்தியாய‌ம் ப‌தினொன்றில் தெளிவாக‌ விள‌க்க‌ப்ப‌டுகின்ற‌து. இறுதியாக‌ இந்த‌ப் போர் மே 18,2009 அன்று த‌மிழீழ‌ விடுத‌லைப் புலிக‌ளின் த‌லைவ‌ர் திரு.பிர‌பாக‌ர‌ன் கொல்ல‌ப்ப‌ட்ட‌துட‌ன் முடிவுக்கு வ‌ந்த‌து. இறுதி அத்தியாய‌மான‌ ப‌னிரெண்டாவ‌து அத்தியாய‌ம் இலங்கை அரசு எவ்வாறு திட்டமிட்டு த‌மிழ‌ர்களை அந்நியப்படுத்தியது என்பதையும், தமிழர்களுக்கு எதிராக‌ ந‌ட‌ந்த‌ சித்ர‌வ‌தைக‌ளையும் விள‌க்குகின்ற‌து. மேலும் எந்த‌ வித‌மான‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளை மேற்கொண்டு த‌ற்பொழுது உள்ள‌ பிர‌ச்ச‌னையை ச‌ரி செய்வ‌து என்றும் கூறுகின்ற‌து.
 
    திரு.குமார் அவ‌ர்க‌ள் த‌மிழ் ஈழ‌ அர‌சிய‌ல் போராட்ட‌ வ‌ர‌லாற்றை ம‌ட்டும‌ல்லாது போர் முடிந்த வரையிலான முழு இல‌ங்கையின் வ‌ர‌லாற்றையும் த‌ன்னுடைய‌ எழுத்தில் கொண்டுவ‌ருவ‌தில் வெற்றிய‌டைந்திருக்கின்றார். அதும‌ட்டுமின்றி தெளிவாகவும், நேர்மையான ஆய்வுகளோடும் அவர் தமிழ் போராளிக‌ளை வெறும‌னே பாராட்டிவிட்டு ம‌ட்டும் செல்லாமல், அவ‌ர்கள் அடைந்த தோல்விக்கான காரணங்களையும், போராளிகள் செய்த‌‌ த‌வ‌றுக‌ளையும் விம‌ர்ச‌ன‌ம் செய்கின்றார். இவை எல்லாம் இந்த‌ புத்த‌க‌த்திற்கான‌ நோக்க‌த்தையும், அவ‌ர‌து கடுமையான உழைப்பையும் நமக்கு காட்டுகின்ற‌து.
 
      “ஓ ஈழ‌ம்” என்ற இப்புத்த‌க‌ம் ஈழ‌ப்போராட்ட‌த்தின் ச‌ம‌கால வ‌ர‌லாற்றை விள‌க்கும் அதே நேர‌த்தில், ச‌மூக‌ அக்க‌றைக் கொண்ட‌ அனைத்து குழுக்க‌ளும் நல்லிணக்கத்தோடு ஒருங்கிணைந்து  பிர‌ச்ச‌னைக‌ளைத் தீர்ப்ப‌த‌ற்கான‌ உறுதியோடு செய‌ல்ப‌ட‌வேண்டும் என‌ ந‌ம‌க்கு க‌ற்பிக்கின்ற‌து. அர‌ச‌ அதிகார‌த்தில் இருப்ப‌வ‌ர்க‌ள் ம‌க்க‌ளின் ந‌ல‌னைக் க‌ருத்தில் கொண்டு தான் செய‌ல்ப‌ட‌வேண்டும், அவ்வாறு செய‌ல்ப‌ட‌ த‌வ‌றும் போது த‌ன் சொந்த‌ ம‌க்க‌ளுக்கு அவர்கள் இழைக்கும் துன்பங்கள், அவர்களுக்கு(அரசுகளுக்கு) வ‌ர‌லாற்றில் மாறாத‌ க‌ள‌ங்க‌த்தை ஏற்ப‌டுத்திவிடும்.
 
திரு. நாக‌ரிக‌ரே இர‌மேசு

திரு. நாக‌ரிக‌ரே இர‌மேசு

     போருக்கு பிந்தைய‌ கால கட்டம் த‌மிழ் ம‌க்கள் எவ்வாறு இராணுவ‌ம‌யமாக்க‌ப்ப‌ட்ட‌ சூழ‌லில் அங்கு எந்த‌ ஒரு உரிமையும‌ற்று அல்ல‌ல்ப‌டுகின்றார்க‌ள் என்பதை நமக்கு தெளிவாக்குகின்ற‌து. எந்த‌ ஒரு பொறுப்புள்ள நாகரிகமான அர‌சும் இதை போன்று செய‌ல்ப‌டாது. அங்குள்ள‌ அர‌ச‌மைப்பு என்ப‌து அப்பாவி பொதும‌க்க‌ளை ஒடுக்கி அக‌ற்றுவ‌த‌ற்கான எல்லா நெளிவு சுளிவுக‌ளையும் கொண்டே உள்ள‌து. அவ‌ர்க‌ள் கூறும் “ந‌ல‌ன் புரிமுகாம்க‌ள்” என்ப‌வையோ ந‌ம‌க்கு நாசி செர்மனியின் “வ‌தை முகாம்க‌ளையே” நினைவூட்டுகின்ற‌து. மேலும் த‌ற்பொழுது ந‌ம‌க்கு கிடைக்கும் காணொளிக‌ளும், புகைப்ப‌ட‌ங்க‌ளும் அங்கு எவ்வ‌ள‌வு மோச‌மான‌ சூழ்நிலையில் ம‌க்க‌ள் வாழ்ந்து வ‌ருகின்றார்க‌ள் என்ப‌தை ந‌ம‌க்கு காட்டுகின்ற‌து. உல‌க‌ ச‌மூதாய‌ம் இல‌ங்கை அர‌சுக்கு நெருக்குத‌ல் கொடுத்து அந்த‌ அரசு ப‌ன்னாட்டு மனித உரிமை ச‌ட்ட‌திட்ட‌ங்க‌ளைப் பின்ப‌ற்றும்ப‌டியும், அங்கு ம‌க்க‌ள் ஒரு கௌர‌வ‌மான‌ வாழ்வு வாழ்வ‌தற்கான‌ சூழலை அரசு உருவாக்க‌‌ வேண்டும். இல‌ங்கை அர‌சு த‌ன் ம‌க்க‌ளின் ஒரு ப‌குதியின‌ருட‌னே போரிட‌வும், ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ளைக் கொலை செய்ய‌வும் உத‌விய‌ இந்திய‌ அர‌சு இத‌ற்கான‌ ப‌ரிகார‌மாக‌ மேற்கூறிய‌வ‌ற்றை முன்னின்று செய்ய‌ வேண்டும். இந்தியாவில் உள்ள ச‌மூக‌ அமைப்புக‌ள் எல்லாம் இந்திய அரசு இந்த வழியில் பயணம் செய்வதற்கான‌‌ நெருக்குத‌லை அர‌சுக்கு கொடுக்க‌ வேண்டும். பாதிக்க‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு உட‌ன‌டியாக‌ ம‌றுவாழ்வுக்கு தேவையான‌ அனைத்து உத‌விக‌ளையும் செய்ய‌ வேண்டும், அதுடனாகவே இல‌ங்கை அர‌சு தன் குடிமக்களின் மீதே செய்த‌ குற்ற‌ங்க‌ள் அனைத்தும் விசாரிக்க‌ப்ப‌ட‌வேண்டும்.
 
மொழியாக்க‌ம்:ந‌ற்ற‌மிழ‌ன்.ப‌
 
நன்றி: மீன‌க‌ம் இணைய‌த‌ள‌ம்.
 
 
 

Can I Have a Dream ?

 
  குழ‌ந்தைக‌ளின் உல‌க‌ம் மிக‌வும் அழ‌கான‌து, வ‌ண்ண‌ம‌ய‌மான‌து, பெரியவ‌ர்க‌ளின் உல‌க‌த்திலிருந்து முற்றிலும் மாறுப‌ட்ட‌ ஒன்று.  வீட்டில் பெற்றோர்கள் வளர்க்கும் விதத்தினால் குழ‌ந்தைக‌ள் ப‌ல‌ நேர‌ங்க‌ளில் ம‌ன‌ உளைச்ச‌லுக்கு ஆளாகி ஒருவித‌மான‌ உள‌விய‌ல் தாக்குத‌லுக்கு உட்ப‌டுகின்றார்க‌ள். வீட்டில் ந‌ட‌க்கும் இந்த‌ சின்ன‌ உள‌விய‌ல் பிரச்சனையையே தாங்க‌ முடியாத‌ அந்த‌ பிஞ்சு நெஞ்ச‌ங்க‌ளை போர் எப்ப‌டி சிதைத்து மிக‌ நீண்ட‌ கால‌ உள‌விய‌ல் பாதிப்புக்கு உள்ளாகுகின்ற‌து என்ப‌தை சொல்வ‌து தான் Can I Have a Dream ? என்ற‌ குறும்ப‌ட‌ம். உள‌விய‌ல் ரீதியாக‌ ம‌ட்டும் அல்ல‌ போர் குழ‌ந்தைக‌ளை உட‌ல் ரீதியாக‌வும் பாதிக்கின்ற‌து. அவ‌ர்க‌ளின் அழ‌கான‌, வ‌ண்ண‌ம‌ய‌மான‌ உல‌க‌ம் போரினால் உருக்குலைகின்ற‌து. போரினால் குழந்தைகள் வ‌லிந்து பெரிய‌வ‌ர்க‌ளின் உல‌க‌த்தில் திணிக்க‌ப்ப‌டுகின்றார்க‌ள் என்ப‌து ம‌றுக்க‌ முடியாத‌ உண்மை. இது அந்த‌ குறும்ப‌டத்தை ப‌ற்றிய‌ க‌ட்டுரை, குறும்ப‌ட‌த்தை அனைவ‌ரும்(இதைப் படிக்கும் வாசகர்கள்) பார்த்திருப்பார்க‌ளா என்ப‌து ஐய‌மே….உங்க‌ளுக்காக‌ அந்த‌ குறும்ப‌ட‌த்தின் க‌தைச் சுருக்கம்….

 
 Can I Have a Dream ? எட்டு நிமிடங்களே ஓடக்கூடியது இக்குறும்படம்… படம் எவ்வாறு இருக்கும் என்பதை படத்தின் பெயர் வரும் காட்சியிலேயே தெளிவாக காட்டுகின்றார் இயக்குநர்…முதலில் I Have a Dream என்ற சொற்றொடர் வரும் சில நொடிகள் கழித்து I Have a Dream என்பதற்கு முன்னாக Can என்ற வார்த்தையும், இறுதியில் கேள்விக்குறியும் வரையப்படும். Can என்ற சொல்லை எழுத தொடங்கும் பொழுது ஒரு மெல்லிய சோக இசை பிண்ணனியில் கொடுக்கப்படுவது மனதை இரணப்படுத்துகின்றது. நிக‌ழ்கால‌த்திலிருந்து இற‌ந்த‌கால‌த்திற்கு செல்லும் க‌தை.

   தமிழ் வழிக்கல்வி புத்தகத்தில் வீட்டுப்பாடம் செய்யும் ஒரு சிறுமி…தனது வீட்டு சாளரத்தின் வழியாக அருகிலுள்ள மைதானத்தில் விளையாடும் பிள்ளைகளைப் பார்க்கின்றாள்…..அவள் செய்யும் வீட்டுப்பாடமானது நிகழ்காலச் சொற்களை இறந்த காலச் சொற்களாக மாற்றுவது (இருக்கின்றது…இருந்தது)….பின்னர், அந்த பாடப் புத்தகத்தின் கீழே ஒரு பிள்ளையின் கோட்டோவியத்தை வரைகின்றாள்…அதே போல எல்லா பக்கங்களிலும் சற்று இடைவெளி விட்டு அதே கோட்டோவியத்தை வரைகின்றாள்…புத்தகத்தின் பக்கங்களைச் சுழற்ற அந்த கோட்டோவியத்தில் உள்ள பிள்ளை ஓடுவது போல் உள்ளது. வானத்திலிருந்து ஏதோ வெடிப்பது போன்ற சத்தம் கேட்ட அந்த குழந்தை அச்சப்பட்டு மேலே பார்க்க இரண்டு காகங்கள் பறக்கின்றன..அச்சம் நீங்கி குழந்தை சற்று நிம்மதி அடைகின்றது.   நிகழ்காலத்திலிருந்த கதை அந்த பாடப்புத்தகத்தில் உள்ளது போல இறந்த காலத்திற்குச் செல்கின்றது…..இந்த பெண் ஒரு சிறு பெண் பிள்ளையை வரைகின்றாள். பின்னர் இரண்டு வீடுகள் நடுவில் சூரியன்…பின்னர் அந்த சூரியனை அழைத்துவிட்டு மேற்கில் வரைகின்றாள்..சூரியனை ஒரு மனிதனின் முகமாக சித்தரித்து அந்த முகம் சிரிப்பது போல வரைகின்றாள். பின்னர் அவளை விட சில வயது அதிகமான ஒரு பெரிய பையனும், வயது குறைந்த ஒரு சிறிய பையனும் வரைய, அவர்கள் அனைவரும் சேர்ந்து நொண்டி விளையாடுவதற்காக கட்டங்களை வரைகின்றார்கள். முதலில் அந்த பெரிய பையன் விளையாடுகின்றான், பின்னர் இந்த பெண் விளையாடுகின்றாள்…அவள் விளையாடும் பொழுது வானத்தில் எங்கிருந்தோ பறந்து வரும் ஒர் போர் விமானம் ஓர் குண்டை அந்த குழந்தைகள் விளையாடும் பகுதியில் போட்டுச் செல்கின்றது. அந்த குண்டு வீச்சில் இந்த பெண் கால்களை இழக்கின்றாள். இந்த காட்சி வரை இந்த பெண்ணின் முகத்தை மட்டுமே காட்டி வந்த இயக்குநர்..இப்பொழுது தான் அவள் உட்கார்ந்து இருப்பது இரு சக்கர வண்டி என்பதை காட்டுகின்றார். முன்னர் அவள் புத்தகத்தில் வரைந்த ஓடுவது போல இருந்த கோட்டோவியங்கள் எல்லாம் இப்பொழுது வீழ்ந்து கிடக்கின்றன…. அவ‌ள் த‌ன் தாயைப் பார்க்கின்றாள். தாய் அந்த குழந்தை இழந்த கால்ப்பகுதியில் கண்ணீர் மல்க உட்கார்ந்து இருக்கின்றாள்.

 கடந்த பத்து ஆண்டுகளாக நடைபெற்று வரும் போர்களில் மட்டும் 60 இல‌ட்சத்திற்கும் அதிகமான‌ குழ‌ந்தைகள்  காயமடைந்து உள்ளார்க‌ள். இது நார்வேயில் உள்ள‌ குழ‌ந்தைக‌ளின் எண்ணிக்கையை விட‌ 6 ம‌ட‌ங்கு அதிகமாகும்.

MORE THAN 6 MILLION (6,000,000) CHILDRENS HAVE BEEN WOUNDED IN THE WAR DURING THE LAST 10 YEARS…. 6 TIMES AS MANY CHILDRENS AS IN NORWAY…..என்ற‌ வ‌ரியுட‌ன் ப‌ட‌ம் முடிவ‌டைகின்ற‌து…
…………………

     …போரினால் குழ‌ந்தைகளுக்கு ஏற்படும் உள‌வியல் பாதிப்பு அவர்கள் வளர்ந்த பின்னரும் கூட அவர்களை பாதித்துக் கொண்டே இருக்கும் என்பதை, வான‌த்தில் ஏதோ ச‌த்த‌ம் கேட்டு அச்ச‌ப்ப‌டும் அக்குழந்தை சில நொடிகள் அப்படியே அந்த வானத்தை பார்த்தப்படியே இருக்கின்றது, சில நொடிகள் கழித்து அந்த வானத்தின் வழியே இரு காகங்கள் பறந்துவருவதை பார்த்த பின்னரும் கூட அந்த குழந்தையின் அதிர்ச்சி நிலை இன்னும் நீங்கவில்லை என்பதை காட்சியின் மூலம் இயக்குநர் தெளிவாக கூறுகின்றார்.  நிக‌ழ்கால‌த்திலிருந்து I Have a Dream என்று தொட‌ங்கும் ப‌ட‌ம் Can I Have a Dream ? என்று கேட்ப‌திலிருந்தே ப‌ட‌த்தின் கால‌க‌ட்ட‌த்தையும், ப‌ட‌ம் செல்லும் திசையையும் இய‌க்குந‌ர் தெளிவாக்குகின்றார்.  மேலும் அந்த குழந்தையும் மற்ற குழந்தைகள் போல தானும் ஓடி விளையாட வேண்டும் என்று எண்ணும் ஆழ்மனவியல் எண்ண ஓட்டத்தையே அந்த சிறுமி சாளரத்தின் வழியே குழந்தைகள் விளையாடுவதை அடிக்கடி பார்ப்பதன் மூலமாகவும், கோட்டோவியங்கள் மூலமாக தான் ஓடுவதைப் போல கற்பனை செய்து பார்க்கும் காட்சியின் மூலமும் இயக்குநர் கூறுகின்றார். இறுதியில் கால் இழந்த அந்த சிறுமி நம்மை நோக்கி பார்க்கும் வலிகள் நிறைந்த அந்த பார்வை நம்முள்ளே ஊடுருவிச் சென்று பல்லாயிரம் கேள்விகளைக் கேட்கின்றது (அறிவார்ந்த நாகரீகமான சமூகமாக நம்மை நாமே கருதிக் கொள்ளும் நம்மிடம் எந்த ஒரு பதிலும் இல்லை). கடந்த பத்து ஆண்டுகளாக நடைபெற்று வரும் போர்களில் மட்டும் 60 இல‌ட்ச‌த்திற்கும் அதிக‌மான‌ குழ‌ந்தைக‌ள் போரினால் பாதிக்க‌ப்ப‌ட்டுள்ளார்க‌ள் என்ப‌து எல்லாம் வெறும் புள்ளி விவ‌ரங்க‌ள் அல்ல‌.. ஒவ்வொரு குழ‌ந்தையின் காய‌மும்(ஊன‌மும்) அந்த‌ குடும்ப‌த்தின் வ‌லி என்பதையும், அந்த குழந்தைகளின் உள்மன வலிகளையும் இந்த‌ ப‌ட‌ம் முக‌த்தில் அறைந்து ந‌ம‌க்குச் சொல்கின்ற‌து.  இது போல போரினால் பாதிக்கப்பட்ட எல்லாக் குழந்தைகளுக்கும் சரியான உளவியல் சிகிச்சைகள் கொடுக்கப்பட வேண்டும், இது அக்குழந்தைகளுக்கு பின்னாட்களில் மிகவும் உதவியாக இருக்கும்.  இவ்வ‌ள‌வு குழ‌ந்தைக‌ள் பாதிக்க‌ப்ப‌ட்ட‌து எல்லாம் ஏதோ தெரியாம‌ல் ந‌ட‌ந்த‌ நிக‌ழ்வுக‌ள் அல்ல‌…எல்லாம் போர்களைப் புரியும் ஒவ்வொரு அரசாலும் திட்ட‌மிட்டு ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌வையே, இது போன்ற அரசுகளை எதிர்த்து போராடாமல் இருப்பதும் ஒரு வகையில் வன்முறையே…..

……….
இவ்வ‌ள‌வு நுணுக்க‌மாக‌ ஒரு குறும்ப‌ட‌த்தை இய‌க்கிய‌ தோழ‌ர்.த‌மிழ‌ம் சுபாசு அவ‌ர்க‌ளுக்கு என் சிரம் தாழ்ந்த வ‌ண‌க்க‌ங்க‌ள். திரைப்படத்தின் எந்த ஒரு அளவுகோலை கொண்டு நீங்கள் இந்த படத்தைப் பார்த்தாலும் இந்த படம் உங்கள் விமர்சனக்கத்திகளை எல்லாம் தாண்டி முதலிடத்தை வந்தடையும் என்பதில் எனக்கு எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இல்லை.  இவ‌ரின் மற்றொரு படைப்பான‌ வ‌ன்னி எலி ப‌ட‌மும் பன்னாட்டு விருதுகளை வென்ற ஒரு முக்கிய‌மான‌ குறும்ப‌டமாகும். 
ந‌ற்ற‌மிழ‌ன்.ப‌

த‌ர‌வுக‌ள்:

1)http://www.tamilthai.com/?p=3193

“ஐ.நா நிபுணர் குழு அறிக்கை – புவிசார் அரசியல் நெருப்பாற்றில் ஈழ விடுதலைப் போராட்டம்”" க‌ருத்த‌ர‌ங்க‌ம் மே 7 2011

   மே 07 2011 அன்று சென்னை லயோலா கல்லூரியில் Save Tamils அமைப்பு நடத்திய‌ “ஐ.நா நிபுணர் குழு அறிக்கை – புவிசார் அரசியல் நெருப்பாற்றில் ஈழ விடுதலைப் போராட்டம்” கருத்தரங்கில் கலந்து கொண்ட திரு.பால் நீயூமென் (விரிவுரையாளர். அரசியல் துறை பெங்களூரு பல்கலைக்கழகம்) ஆற்றிய உரையின் வ‌ரிவ‌டிவ‌ம்.
     மே 2009 அன்று முடிந்த போரில் மொத்தம் 1,300 பேர் இறந்தார்கள் என்றும், அவர்கள் எல்லோரும் புலிகள் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் என்றும் இலங்கை அரசால் கூறப்பட்டது. மேலும் இந்தப் போரில் பொதுமக்களில் எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத “”Zero Tolerance Method”-ஐ உபயோகப்படுத்தியதாகவும் கூறியது.  ஆனால் ஐ.நாவின் அப்போதைய‌ அறிக்கை 7,000 பொதும‌க்க‌ள் இற‌ந்த‌தாக‌ கூறிய‌து. பிரிட்ட‌ன், பிரெஞ்ச் ஊட‌க‌ங்க‌ள் 20,000 பொதும‌க்க‌ள் இற‌ந்த‌தாக‌ கூறின‌. போர்க்கால‌க‌ட்ட‌த்தில் ஐ.நாவின் பிர‌திநிதியாக‌ இல‌ங்கையில் இருந்த‌ கார்ட‌ன் வைசு 40,000 பொது ம‌க்க‌ள் இந்த‌ப் போரில் கொல்ல‌ப்ப‌ட்ட‌தாக‌ கூறினார். 70,000 பொதும‌க்க‌ள் இற‌ந்ததாக‌ அல்ஜ‌சீரா தொலைக்காட்சி கூறிய‌து.
  இந்த‌ப் போர் எந்த‌வித‌ சாட்சிய‌மும் இன்றி ந‌டைபெற்ற‌ ஒரு போராகும். பன்னாட்டு‌ அழுத்த‌த்தின் கார‌ண‌மாக‌ 23 மே 2009 அன்று இல‌ங்கை சென்ற‌ ஐ.நா பொதுச்செய‌ல‌ர் பான் கீ மூன், இல‌ங்கை அதிப‌ருட‌ன் இணைந்து ஒரு அறிக்கை வெளியிட்டார், இதில் போரில் ஈடுப‌ட்ட‌ இரு பிரிவுக‌ளும் செய்த போர்க்குற்றத்தை விசாரிக்க ஒரு குழு நிறுவப்படும் என்று கூறியிருந்தார். இல‌ங்கை அதிப‌ர்.இராச‌ப‌க்சேவின் ஒப்ப‌த‌லுட‌னே இந்த‌ போர் விசார‌ணை குழு அமைப்பது ப‌ற்றிய‌ அறிக்கை பான்.கீ.மூனால் வெளியிட‌ப்ப‌ட்ட‌து. இப்பொழுது இந்த‌க் குழு ஒரு நேர்மைய‌ற்ற‌ குழு என்று இராச‌ப‌க்சே கூறுவ‌து வேடிக்கையான‌ ஒன்றாகும்.

 15 ச‌ன‌வரி 2010 அன்று ட‌ப்ளின் ம‌க்க‌ள் தீர்ப்பாய‌ம் இல‌ங்கையில் ந‌ட‌ந்த‌ இறுதி க‌ட்ட‌ப்போரில் ம‌னித‌ உரிமை மீற‌ல்க‌ளும், போர்க்குற்ற‌ங்க‌ளும் நிக‌ழ்ந்துள்ள‌ன‌. மேலும் இல‌ங்கையில் இன‌ப்ப‌டுகொலை ந‌டைபெற்ற‌த‌ற்கான‌ சாத்திய‌க்கூறுக‌ள் உள்ள‌ன‌.  இதை உறுதி படுத்த மேலதிக விசாரணைகள் தேவை என்றும்  மக்கள் தீர்ப்பாயத்தின் அறிக்கை கூறியது.
 2010 மார்ச் மாத‌ம் லூயிசு ஆர்ப்ப‌ர் த‌லைமையிலான‌ ப‌ன்னாட்டு நெருக்க‌டி நிலைக்குழும‌ம்(Internation Crisis  Group) த‌ன‌து அறிக்கையை வெளியிட்ட‌து. அதில் போர்க்குற்ற‌ம் தொட‌ர்பான‌ ஒரு விசார‌ணை தேவை என்ற‌ கோரிக்கை முன்வைக்க‌ப்ப‌ட்ட‌து. இதைத் தொட‌ர்ந்து ம‌னித‌ உரிமை க‌ண்காணிப்ப‌க‌ம், ப‌ன்னாட்டு ம‌னித‌ உரிமை அமைப்புக‌ள், ப‌ன்னாட்டு ம‌ன்னிப்பு சபை (Amnesty International)  எல்லாம் த‌ங்க‌ளிட‌ம் உள்ள‌ போர்க்குற்ற‌ம் தொட‌ர்பான‌ சாட்சிய‌ங்க‌ளை ஒவ்வொன்றாக‌ வெளியிட‌ மீண்டும் ஐ.நாவின் மேல் அழுத்த‌ம் அதிக‌மான‌து. இத‌னால் சூன் 3, 2010 அன்று மூன்று பேர் கொண்ட‌ ஒரு குழுவை இல‌ங்கையில் ந‌ட‌ந்த‌ போர்க்குற்ற‌ங்க‌ள் தொட‌ர்பாக‌ விசாரிக்க‌ ஐ.நா பொதுச்செய‌ல‌ர் பான்.கி.மூன் நிய‌மித்தார். இதை அடுத்து இல‌ங்கையில் அமைச்ச‌ர் ப‌த‌வியில் இருக்கும் விம‌ல் வீர‌வ‌ன்சா கொழும்பில் உள்ள‌ ஐ.நா தூத‌ர‌க‌த்தைச் சுற்றிவ‌ளைத்து விட்டு உண்ணாவிர‌த‌ம் இருக்க‌த்தொட‌ங்கினார். இத‌னால் மீண்டும் ஒரு தேக்க நிலை உருவான‌து.

செப்ட‌ம்ப‌ர் மாத‌த்தில் மீண்டும் த‌ன் மீதான‌ அழுத்த‌ம் அதிக‌ரிக்க‌வே அந்த‌ மூன்று ந‌ப‌ர் குழுவிற்கான‌ ப‌ணிப்பானையை வெளியிட்டு குழு த‌ன் வேலையை தொட‌ங்க‌ வேண்டும் என‌ உத்த‌ர‌விட்டார் பான் கீ மூன் .

இந்த‌க்குழுவில் இந்தோனிசியாவைச் சேர்ந்த‌ மார்சுகி தாருசுமேன் என்ப‌வ‌ரும், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த‌  யேசுமின் சூக்கா என்ப‌வ‌ரும், அமெரிக்க‌ ஐக்கிய‌ நாட்டின் மிக்சிக‌ன் ச‌ட்ட‌க்க‌ல்லூரியில் விரிவுரையாள‌ராக‌ இருக்கும் சிடீப‌ன் என்ப‌வ‌ரும் இருந்தார்க‌ள். இதில் மார்சுகி தாருசுமேன் ஏற்க‌ன‌வே இந்தோனேசிய‌ அதிப‌ர் சுக‌ர்த்தோ ஆட்சிக்கால‌த்தில் நிக‌ழ்ந்த‌ ப‌டுகொலைக‌ளை விசாரிக்கும் குழுவில் ப‌ணியாற்றிய‌வ‌ர். மேலும் இந்தோனேசிய தேசிய‌ ம‌னித‌ உரிமை ஆணைய‌த்தில் ஏழு ஆண்டுக‌ள் ப‌ணியாற்றிய‌வ‌ருமாவார். யேசுமின் சூக்கா என்ப‌வ‌ர் ம‌னித‌ உரிமை ஆணைய‌ அற‌க்க‌ட்ட‌ளையில் த‌லைமை அதிகாரி, மேலும் இவ‌ர் தென்னாப்பிரிக்க‌ உண்மை அறியும் குழுவிலும், ந‌ல்லிண‌க்க‌ ஆணைய‌த்திலும் ப‌ணியாற்றிய‌வ‌ர். சிடீப‌ன் என்ப‌வ‌ர் ச‌ட்ட‌ நிபுண‌ர் ஆவார். இந்த‌க் குழு முறைப்ப‌டி ஆசிய‌ க‌ண்ட‌த்திலிருந்து ஒருவரையும், ஆப்பிரிக்க‌ க‌ண‌ட‌த்திலிருந்து ஒருவ‌ரையும், அமெரிக்க‌ க‌ண‌ட‌த்திலிருந்து ஒருவ‌ரையும் கொண்ட‌து. மேலும் இந்த‌க் குழுவில் உள்ள‌வ‌ர்க‌ள் முன்ன‌ர் கூறியுள்ள‌து போல‌வே இத‌ற்கு முன்ன‌ர் இது போன்ற‌ விசார‌ணைக்குழுக்க‌ளில் ப‌ங்காற்றிய‌வ‌ர்க‌ள்.

 
இந்த‌க் குழுவிற்கான‌ ப‌ணியாணை:
 
செப்ட‌ம்ப‌ர் 2008லிருந்து மே 2009 வ‌ரை ந‌டைபெற்ற‌ போரில் ந‌டைபெற்ற‌ ம‌னித‌ உரிமை மீற‌ல், போர்க்குற்ற‌ம்  போன்ற‌வ‌ற்றை விசாரித்து ஐ.நா பொதுச்செய‌லருக்கு அறிவுரை கூறுவ‌து. இத‌ன் அடிப்ப‌டையில் 16 செப்ட‌ம்ப‌ர் 2010 அன்று த‌ன‌து ப‌ணியைத் தொட‌ங்கிய‌ இந்த‌க் குழு 31 மார்ச் 2011 அன்று 196 ப‌க்க‌ங்க‌ள் கொண்ட‌ விசாரணை அறிக்கையை த‌யாரித்த‌து.

இந்த‌ விசார‌ணையில் ப‌ய‌ன்ப‌டுத்திய‌ முறையில் (Methodology)

1)சாட்சிய‌ங்க‌ளின் நேர‌டியான‌ கையெழுத்துப் பிர‌திக‌ள்.
2)சாட்சிக‌ளின் செவ்விகள் (Interview’s)
3)ப‌ல்வேறு ம‌னித‌ உரிமைக் குழுக்க‌ள் அளித்த‌ அறிக்கைக‌ள்
4)போர்க்குற்றம் தொடர்பான‌ காணொளி காட்சிக‌ள் (Videos)
5) செய்ம‌திப் புகைப்ப‌ட‌ங்க‌ள் (Satelite photos)
6) நாளித‌ழ்க‌ளில் வெளியாகி இருந்த‌ ஆதார‌ப்பூர்வ‌மான‌ த‌க‌வ‌ல்க‌ள்.
இத‌ன‌டிப்ப‌டையிலேயே இந்த‌ மூவ‌ர் குழு விசார‌ணை ந‌ட‌த்திய‌து.

இந்தக் குழு போரில் இர‌ண்டு முக்கிய‌ திருப்புமுனை நிக‌ழ்வுக‌ள் ஏற்ப‌ட்ட‌தாக‌ குறிப்பிடுகின்ற‌து.
1) இந்தியாவின் த‌லையீடும், இந்திய‌ க‌ட‌ல்ப‌குதியில் இந்தியா த‌ன‌து போர்க்க‌ப்ப‌ல்க‌ளை நிறுத்தி புலிக‌ளைக்க‌ண்காணித்து வ‌ந்த‌தும், செய்ம‌தி மூல‌ம் கிடைக்கும் த‌க‌வ‌ல்க‌ளை இல‌ங்கைக்கு கொடுத்து உத‌விய‌து மிக‌ முக்கிய‌மான‌ ஒன்றாகும்.

2) ப‌ய‌ங்க‌ரவாத‌த்திற்கு எதிரான‌ போர் என்ற‌ பெய‌ரில் இல‌ங்கை இந்த‌ போரைச் செய்த‌தால் உல‌க‌ நாடுக‌ளின் த‌லையீடுக‌ள் இல்லாம‌ல் இருந்த‌து.

இலங்கை அர‌சின் இறுதிக‌ட்ட‌ப்போருக்கான‌ த‌யாரிப்பு :

1) தீவிர‌வாத‌த்தை தடுக்கும் ச‌ட்ட‌ம் (Prevention of terror act)
2) அவச‌ர‌காலச் ச‌ட்ட‌ம்  (emergency terror act).இவ்விரு ச‌ட்ட‌ங்க‌ளின் மூல‌மாக‌வும் எவ‌ர் ஒருவ‌ரையில் கைது செய்து 36 மாத‌ங்க‌ள் எந்த‌ ஒரு குற்ற‌ப்ப‌த்திரிக்கை தாக்க‌ல் செய்யாம‌லும் சிறையில் அடைக்க‌ முடியும்.
3) அர‌ச‌ அதிப‌ரின் அதிகாரத்தின் மூலமாக‌ அவ‌ர‌து குடும்ப‌த்தைச் சேர்ந்த‌ 300 குடும்ப‌ உறுப்பின‌ர்க‌ள் முக்கிய‌மான‌ அர‌ச‌ ப‌த‌விக‌ளில் அம‌ர்த்த‌ப்ப‌ட்டார்க‌ள் (உதார‌ண‌ம். கோத்த‌ப‌யா இராச‌ப‌க்சே பாதுகாப்பு ப‌டை செய‌ல‌ராக‌வும், ப‌சில் இராச‌ப‌க்சே அதிப‌ரின் ஆலோச‌க‌ராவும் நிய‌மிக்க‌ப்ப‌ட்ட‌து).
4) போர் நிறுத்த‌ கால‌ க‌ட்ட‌த்தில் 66 ம‌னித‌ உரிமை உறுப்பின‌ர்க‌ள் அர‌ச‌ ப‌டையால் ப‌டுகொலை செய்ய‌ப்ப‌ட்டார்க‌ள்.
5) செப் 8, 2008 அன்று நாங்க‌ள் யாருக்கும் பாதுகாப்பு வ‌ழ‌ங்க‌ முடியாத‌ கார‌ண‌த்தினால் போர் ந‌டைபெறும் ப‌குதியில் இருந்த‌ அனைத்து ம‌னித‌ உரிமை அமைப்புக‌ளும் வ‌ன்னிப்ப‌குதியை விட்டு வெளியேறுமாறு அர‌சு அறிக்கை வெளியிட்ட‌து.

……….

ஐ.நா நிபுண‌ர் குழுவின் அறிக்கை இல‌ங்கை அர‌சு ம‌னித‌ குல‌த்திற்கு எதிரான‌ குற்ற‌ங்க‌ளைச் செய்துள்ள‌து என‌ குற்ற‌ம் சாட்டியுள்ள‌து. அவை

1)அப்பாவி பொதும‌க்க‌ளைக் கொன்றது
2)வெள்ளைக் கொடி ஏந்தி ச‌ர‌ண‌டைய‌ வ‌ந்த‌வ‌ர்க‌ளை கொன்ற‌து.
3)கைது செய்த‌ போர்க்குற்ற‌வாளிக‌ளைக் கொன்ற‌து.
4)உண‌வு, ம‌ருத்துவ‌ வ‌ச‌திக‌ளை ஒரு ஆயுத‌மாக‌ ப‌ய‌ன்ப‌டுத்தி ம‌க்க‌ளைக் கொன்ற‌து போன்ற‌வை குறிப்பிட‌ ப‌ட்டுள்ள‌ன‌.

……………………

மேலும்  இல‌ங்கை அர‌சு ப‌ன்னாட்டு போர் விதிக‌ளை மீறியுள்ள‌தாக‌வும் ஐ.நா நிபுண‌ர் குழு குற்ற‌ம் சாட்டியுள்ள‌து. அவை

1)இல‌ங்கை அர‌சு ப‌ன்னாட்டு ம‌னித‌ உரிமை விதிக‌ளையும் மீறியுள்ள‌து. ச‌ன‌வ‌ர் 29 வ‌ரை ஐ.நா அதிகாரிக‌ள் இருவ‌ர் போர்ப்ப‌குதியில் இருந்தார்க‌ள். அவ‌ர்க‌ள் இறுதியாக‌ போர்ப்ப‌குதியை விட்டு வெளியேறும் பொழுது நில‌மெங்கும் ம‌க்க‌ளின் பிண‌ங்க‌ள் இருந்த‌தால் வான் நோக்கி பார்த்த‌வாரே ந‌ட‌ந்து வ‌ந்த‌தாக‌வும், ஆனால் ம‌ர‌ங்க‌ளில் எல்லாம் வெடித்துச் சித‌றிய‌ குழந்தைக‌ளின் உட‌ல் பாக‌ங்க‌ள் இருந்த‌தாக‌வும் அவ‌ர்க‌ள் கூறினார்க‌ள்.
2) போரில்லாப் ப‌குதி என்று கூறிய‌ இட‌த்தில் வ‌ந்து குவிந்த‌ ம‌க்க‌ளைக் கொன்ற‌து
3) பொதும‌க்க‌ள் மீது க‌ன‌ர‌க‌ ஆயுத‌ங்க‌ள் பாவித்த‌து.
4) ம‌ருத்த‌வ‌ம‌னையின் க‌ழிவ‌றை வாயில் முத‌ற்கொண்டு நோயாளிக‌ளால் நிர‌ம்பிய‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளின் மீது குண்டுவீசிய‌து. இறுதிக் கால‌ங்க‌ளில் ம‌ய‌க்க‌ம‌ருந்து கொடுக்க‌ப்ப‌டாம‌ல் 40,000 அறுவை சிகிச்சைக‌ள் அங்கு ந‌டைபெற்ற‌தாக‌வும், கையுறைக‌ள் இல்லாத‌தால் ம‌ருத்துவ‌ர்க‌ள் வெறும் கைக‌ளினாலேயே மேற்கொண்ட‌ அறுவை சிகிச்சைக‌ளை செய்த‌தாக‌வும், மேலும் “blade” இல்லாத‌தால் ஒருமுறை ப‌ய‌ன்ப‌டுத்திய‌ “blade”ஐயே ம‌றுமுறை அவ‌ர்க‌ள் உப‌யோக‌ப்ப‌டுத்திய‌தின‌ர். இந்த‌ ம‌ருத்துவ‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்கு ம‌ய‌க்க‌ ம‌ருந்துக‌ளும், சில‌ முக்கிய‌மான‌ ம‌ருந்துக‌ளும் தேவை என‌ அர‌சிட‌ம் கோரிக்கை வைக்க‌ அர‌சோ இவ‌ர்க‌ளுக்கு த‌லைவ‌லிக்கு கொடுக்க‌ப்ப‌டும் சில‌ மாத்திரைக‌ளை ம‌ட்டுமே கொடுத்த‌து. மேலும் அடிப்ப‌டை ம‌னித‌ நேய‌ அடிப்ப‌டையில் ப‌ணிபுரிந்த‌ மூன்று ம‌ருத்துவ‌ர்க‌ளையும்  இல‌ங்கை அர‌சு கைது செய்த‌து என‌ எல்லாம் ப‌ன்னாட்டு ம‌னித‌ உரிமைக‌ளை மீறிய‌ செயல்க‌ளாகும் என‌ கூறுகின்ற‌து…..

…………..

இந்த‌ எண்ணிக்கைக‌ள் எல்லாம் எதைக் குறிக்கின்ற‌து. இவை எல்லாம் ஏதோ ஒரு ம‌ட்டைப்ப‌ந்து ஆட்ட‌க்கார‌ர் எடுத்த‌ ஒட்ட‌ங்க‌ளின் எண்ணிக்கை அல்ல‌. ஒவ்வொன்றும் ஒரு ம‌னித‌ உயிரின் எண்ணிக்கை.

மே 13, 2009 அன்று ஐ.நா போர்ப்ப‌குதியில் 1,00,000 ம‌க்க‌ள் ம‌ட்டுமே இருப்ப‌தாக‌ கூறிய‌து.
இந்திய‌ பாராளும‌ன்ற‌த்தில் பிர‌ணாப் முக‌ர்சி வெறும் 70,000 ம‌க்க‌ள் ம‌ட்டுமே போர்ப்ப‌குதியில் இருப்ப‌தாக‌ கூறினார்,
இன்னும் ஒரு ப‌டி மேலே போய் இல‌ங்கை அர‌சோ வெறும் 10,000 பேர் ம‌ட்டுமே இருப்ப‌தாக‌ கூறிய‌து. ஆனால் ப‌ன்னாட்டு செஞ்சிலுவைச் ச‌ங்க‌மோ காய‌ம‌டைந்து இருந்த‌ 14,000 பொதும‌க்க‌ளை த‌ன‌து க‌ப்ப‌ல் மூல‌ம் இல‌ங்கையின் ம‌ற்றொரு ப‌குதிக்கு சிகிச்சைக்காக‌ கூட்டிச்சென்ற‌தாக‌ கூறிய‌து. இவ‌ர்க‌ளில் 5,000 பொதும‌க்க‌ள் காலையோ, கையையோ இழ‌ந்த‌வ‌ர்க‌ளாவ‌ர். மேலும் இவ‌ர்க‌ளை எல்லாம் “போரில்லாப்ப‌குதி” என்று அர‌சு அறிவித்த‌ ப‌குதியில் இருந்தே கொண்டு சென்றோம் என‌ செஞ்சிலுவைச் ச‌ங்க‌ம் கூறிய‌து. உல‌க‌ உண‌வு திட்ட‌ அலுவ‌ல‌க‌ம் போர்ப்ப‌குதியில் 4,20,000 பொதும‌க்க‌ள் இருக்கின்றார்க‌ள் என்றும், அவ‌ர்க‌ளுக்கு தேவையான‌ உண‌வை எடுத்துச் செல்ல‌வும் அர‌சிட‌ம் அனும‌தி கோரிய‌து. ஆனால் அர‌சு 1,00,000 ம‌க்க‌ளுக்கு தேவையான‌ உணவை எடுத்துச் செல்வ‌த‌ற்கு ம‌ட்டுமே அனும‌தி அளித்த‌து. அதாவ‌து ஒருவ‌ருக்கு தேவையான‌ உண‌வு நான்கு பேருக்கு கொடுக்க‌ப்ப‌ட்ட‌து. இத‌னால் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் ப‌சியால் இற‌ந்தார்க‌ள்.

………………….
இல‌ங்கை அர‌சு இறையாண்மைக் கொண்ட‌ ஒரு அர‌சாக‌ இருந்தாலும் தீவிர‌வாதிக‌ளை அவ‌ர்க‌ள் எவ்வாறு அழித்தார்க‌ள் என்ப‌து அவ‌ர்க‌ள‌து நோக்க‌த்தை கூறுகின்ற‌து என‌ நிபுண‌ர் குழு கூறுகின்ற‌து. ப‌ன்னாட்டு ம‌னித‌ உரிமை விதிக‌ளில் கையெழுத்திட்டுள்ள‌ அர‌சு அதை மீறுவ‌து ச‌ட்ட‌ப்ப‌டி த‌வ‌று. இது போன்ற‌ விதிக‌ளில் கையெழுத்திட‌வில்லை எனும்போதிலும் விடுத‌லைப்புலிக‌ள் ம‌னித‌ உரிமை விதிக‌ளை ம‌தித்து ந‌ட‌ந்திருக்க‌வேண்டும் என்றும் அந்த அறிக்கைக் கோருகின்ற‌து. பொதும‌க்க‌ளுக்கும் போராளிக‌ளுக்கும் இடையிலான‌ வேறுபாட்டை அர‌சு உருவாக்க‌ த‌வ‌றிவிட்ட‌து என‌ அவ்வ‌றிக்கை கூறுகின்ற‌து.
ஐ.நா நிபுண‌ர் குழு அமைக்கப்ப‌ட்ட‌ பின்பு க‌ண்துடைப்புக்காக‌ அமைக்க‌ப்ப‌ட்ட‌ இல‌ங்கையின் போர்க்குற்ற‌ விசார‌ணை, ந‌ல்லிண‌க்க‌ ஆணைய‌த்தைப் ப‌ற்றியும் ஐ.நா நிபுண‌ர் குழு கூறியுள்ள‌து.

1)10 ந‌ப‌ர்க‌ள் கொண்ட‌ இந்த‌க் குழுவில் ப‌குதி பேர் முன்னாள் இராணுவ‌த்தின‌ர். இதில் ஒரு பெண் கூட‌ இல்லை.
2) உண்மை நிலை என்ன‌ என்ப‌தை அவ‌ர்க‌ள் ச‌ரியாக‌ விசார‌ணை செய்ய‌வே இல்லை.
3) சாட்சிய‌ங்க‌ளுக்கு பாதுகாப்பு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட‌வேஇல்லை.
4) போரினால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் இந்த ஆணைய‌த்தை நோக்கி வ‌ர‌வில்லை.
5) உண‌ர்வு பூர்வ‌மான‌, பாலின‌, உள‌விய‌ல் அடிப்ப‌டையில் இந்த‌க் குழு நிய‌மிக்க‌ப்ப‌ட‌வில்லை. (எப்ப‌டி ஒரு பெண் 10 ஆண்க‌ள் இருக்கும் அறையில் வ‌ந்து தான் கற்ப‌ழிக்க‌ப்ப‌ட்ட‌தைக் கூற‌ முடியும்?)
6) இந்த‌க் குழுவிற்கென்று நிர‌ந்தர‌மாக‌ அலுவ‌ல‌க‌ம் எதுவும் கிடையாது. இவ‌ர்க‌ள் இந்த‌ போர் ந‌டைபெறாத‌ கொழும்பில் இருந்து இய‌ங்கினார்க‌ள். போரினால் மிக‌வும் பாதிக்க‌ப்ப‌ட்டு 3,00,000 ம‌க்க‌ள் அடைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ இட‌ப்பெய‌ர்வ்ய் முகாம் ப‌குதியான‌ ம‌ன்னாரில் கூட‌ இவ‌ர்க‌ள் வெறும் இர‌ண்டு நாட்க‌ள் ம‌ட்டுமே விசார‌ணை ந‌ட‌த்தினார்க‌ள்.
7) இந்த‌ விசார‌ணைக் குழுவை மேற்பார்வையிடுவ‌த‌ற்கோ, க‌ண்காணிப்ப‌த‌ற்கோ எந்த‌ ஒரு ப‌ன்னாட்டு ஊட‌க‌த்திற்கும் அனும‌தி வ‌ழ‌ங்க‌ப்ப‌ட‌வே இல்லை.
8) குழுவின் வெளிப்ப‌டைத்த‌ன்மை கேள்விக்குறிய‌தே (இந்த‌ போரில் ப‌ங்கு கொண்ட‌ இராணுவ‌த்தின‌ரே இந்த‌க் குழுக்க‌ளிலும் இருந்தார்க‌ள். இவ‌ர்க‌ள் எந்த‌ அடிப்ப‌டையில் நிய‌மிக்க‌ப்ப‌ட்டார்க‌ள்?)

…..
மேலும் ஐ.நா நிபுண‌ர் குழு இல‌ங்கையில் உள்ள நீதித்துறையின் க‌ட்ட‌மைப்பு ப‌ற்றியும் கூறியுள்ள‌து.

1)ச‌ரியான‌ க‌ட்ட‌மைப்பு இல்லாம‌ல் பெய‌ருக்கும் இய‌ங்கும் நீதித்துறை (தீவிர‌வாத‌ த‌டுப்பு ச‌ட்ட‌ம், அவ‌ச‌ர‌ காலச் ச‌ட்ட‌ம் போன்ற‌ அர‌சு ஆதிக்க‌ ச‌ட்ட‌ங்க‌ளைக் கொண்டதே அந்த‌ நீதித்துறை)
2) இது போன்ற‌ நிலையில் பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் எவ்வாறு நீதிம‌ன்ற‌த்திற்கு சென்று முறையிட‌ முடியும்? 
சிங்க‌ள பொதும‌க்க‌ளிட‌ம் நாம் இந்த‌ப் போரை வெற்றிக்கொண்டு விட்டோம் என்ற‌ நிலையும், அவ‌ர்க‌ள் போர் ந‌டைபெற்ற‌ இட‌ங்க‌ளை ஒரு சுற்றுலா போல‌ சென்று பார்த்து வ‌ருகின்றார்க‌ள். போர்க்கால‌த்தில் த‌டைசெய்ய‌ப்பட்ட‌ ஊட‌க‌த்தடையும், அவ‌ச‌ர‌ கால‌ச் ச‌ட்ட‌மும் இன்னும் அம‌லில் இருக்கின்ற‌ன‌. த‌மிழ‌ர்க‌ள் அங்கு போரில் தோல்வி அடைந்த‌ ம‌னித‌ர்க‌ளாக‌வே இல‌ங்கையில் பார்க்க‌ப்ப‌டுகின்றார்க‌ள்.

………….
ஐ.நா நிபுண‌ர் குழுவின் கோரிக்கைக‌ள்:

1) போர்க்குற்ற‌ம், ம‌னித‌ குல‌த்திற்கு எதிரான‌ குற்ற‌ங்க‌ள் ந‌டைபெற்ற‌த‌ற்கான‌ ஆதார‌ங்க‌ள் கிடைத்துள்ள‌தால் இவை ப‌ற்றி ஒரு சுயேட்சையான‌ ப‌ன்னாட்டு விசார‌ணைக்குழு விசாரிக்க‌ வேண்டும் .

2) த‌ற்பொழுதும் அங்கு ந‌டைபெற்றுக்கொண்டிருக்கும் வ‌ன்முறைக‌ள் நிறுத்த‌ப்ப‌ட‌வேண்டும்.

3) விசாரணை ப‌ன்னாட்டு ச‌ட்ட‌ விதிக‌ளின் ப‌டி ந‌டைபெற‌ வேண்டும்.

4) ஐ.நாவும் இந்த‌ பிர‌ச்ச‌னையில் சில‌ த‌வ‌றுக‌ளைச் செய்துள்ள‌து.

………………………
வ‌ரிவ‌டிவ‌ம்: ப‌.ந‌ற்ற‌மிழ‌ன்.

Follow

Get every new post delivered to your Inbox.