Archive for the ‘ ஈழம் ’ Category
எனது தாயை கற்பழிக்கின்றான் சிங்களவன் என் கண்முன்னே முரளீதரன் பந்துவீச்சில் இந்தியனொருவன் தனது ஆட்டத்தை பறிகொடுத்து வெளியேறுகின்றான் வருந்துகின்றான் நண்பன்(?) இந்தியனுக்காக மன்னியும் நண்பனை சாக்கடையிலிருந்து தாய்ப்பால் பருகியவனவன் இந்நிகழ்ச்சியை இணைந்து வழங்கியவர்கள் அம்பானியும் , அகில உலகமும் பார்வையாளனாக மட்டும் இங்கே மாண்டுபோன மாந்த நேயமும் ,,,,,, http://video.yahoo.com/watch[ READ MORE ]
காத்திருக்கின்றேன் ரொட்டித்துண்டுக்காக நானிங்கு வந்து நகர்ந்தே விட்டது ஒரிரு திங்களும் காத்திருக்கின்றேன் ரொட்டித்துண்டுக்காக வடக்கின் வசந்தமாம்(?) இராஜபக்சே பிளிறுகிறது காத்திருக்கின்றேன் ரொட்டித்துண்டுக்காக புலிகளால் மட்டும் தான் இவ்வளவு பிரச்சனையாம் மடை மாற்றுகிறார்கள் புத்திசாலிகள்(?) காத்திருக்கின்றேன் ரொட்டித்துண்டுக்காக இங்கே இருப்பது இன்னல் முகாம் இடப்பெயர்வு முகாமல்ல கதைக்கின்றனர் மாந்தநேயர்கள் காத்திருக்கின்றேன் ரொட்டித்துண்டுக்காக இங்கே நிலைமையை சீர்(ழ்)படுத்த இந்தியாவும் கொடுத்தது அறுநூறு கோடியும் காத்திருக்கின்றேன் ரொட்டித்துண்டுக்காக சோமாலியா தேவை இல்லை இங்கே வந்து எங்களைப் பாருங்கள் காத்திருக்கின்றேன் ரொட்டித்துண்டுக்காக [ READ MORE ]
உண்மை அறியும் குழுவொன்று எங்களூர்(ஈழம்) வந்தபின் சென்றது ஊமையாக …[ READ MORE ]
புதை குழியின் மேல் பாடசாலை என் தாய் தந்தையின் புதை குழியின் மேல் பாடசாலை கற்ப்பிக்கின்றான் சிங்களவனும் அன்பு செய்யென எனைப் பார்த்தே அன்பு செய்யென எனைப் பார்த்தே[ READ MORE ]
அமைதிக்காக (?) செய்த யுத்தங்கள் இதோ கிடைத்தே விட்டது மயான அமைதி [ READ MORE ]
தேர்வேழுதச் சொன்னான் எனை ஆமிக்காரனும் எழுதி வந்தேன் நானும் அவனுக்கான பதிலை அல்ல எனக்கான கேள்வியை அழுகிய பிணங்களிநூடே ஆண்டு முழுக்க தேடியும் கிடைக்காத என் அம்மாவின் பிணம் எங்கே ?. ……. Times of India நாளிதழின் செய்தி ஒன்று என்னை இந்த கவிதையை எழுத தூண்டியது . அந்த செய்தி ” முன்பு துப்பாக்கி பிடித்த சிறுவர்கள் , இப்பொழுது எழுதுகோல் பிடித்து தேர்வு எழுதுகிறார்கள் . அப்படி அவர்கள் தேர்வு எழுதினால் , அந்த [ READ MORE ]
Get every new post delivered to your Inbox.