செப்ரெம்பர், 2009 க்கான தொகுப்பு

உணர்ந்து கொண்டேன்


பூகம்பம் மட்டும் அல்ல‌
பூக்களும் கூட சில நேரங்களில்
இரணங்களை உண்டாக்கும் என‌
உன்னை பார்த்த பின்
உணர்ந்து கொண்டேன்.

8G0CASI52RQCAS8DOCECAKU9R97CARTAXQMCAVGP0XDCAINXTG5CAGKHIX0CA8LQZYJCAZT8B4QCA7D4TU1CA7YL6TICAKKSN0OCAXQ06E2CAZXGCL9CABHZAZYCA0ITTNKCAKW2XCZCAFM3565CASI5PYA

Advertisements

ஊனம் ?


 

photo

 

உள்ளூறப் பாய்ந்து
ஊடறுத்துப் போன‌
உனது பார்வையினால்
உள்ளம் ஊனமாகிப்
போனவன் ஓடுகிறேன்
மனிதம் மறந்து போன‌
மண்ணெங்கும் ஓடுகிறேன்
ஊனத்தை சரிசெய்ய‌
முன் சென்ற ஊனனவன் கூறுகிறான்
ஊனம் ஒரு குறையில்லை
தம்பி ஊனம் ஒரு குறையில்லை
உலகம் ஊனமாகிப் போனதனால்….
வா , உள்ளே போகலாம் ?

உப்புக்கரிக்கும்……


rain

இரவு பகல் பாராமல்
இயங்கிக் கொண்டே இருக்கும்
உன் புறம் தழுவிய‌
ஓர் மழைத் துளி
உதடு வழி உள் செல்ல‌
ஆம் , மழையும் உப்புக்கரிக்கும் …..

இருத்தல்


இருத்தலுக்கான போரினிலே
இறந்ததுவும் தெரியாமல்
இயங்கிக் கொண்டே
இருந்து விட்டேன்….

உள்ளிருந்த பிணவாடை
வெளிவந்து தன்னை
தனக்கே முகம் காட்ட‌
முயலுகிறது வெகு வருடங்களாய்….

என்று நான் இறந்து போனேன்?
இறந்த பின்னுமா அறுவை சிகிச்சை ?
மனிதம் மறந்த அன்றா ?
இல்லாத பொருளினால்
இறப்பது சாத்தியமா?

உண்மைகள் ஊமையானதே அன்றா ?
மீளக் கூறுகிறேன்
இல்லாத பொருளினால்
இறப்பது சாத்தியமா?

இளமைப் பருவத்திலா ?
ம்ம்ம்…..

ஆம் , குழந்தைப் பருவத்திலே
நீங்கள் நிகழ்த்திய செய்கையது
என்னுலகம் விட்டு என்னை
இவ்வுலகம் இழுத்து வந்து
இறந்து போன இதயத்தை
உயிர்ப்பிக்கச் செய்தீர்கள்
வாழுகிறேன் பிணமாக………

 

skeleton-work-2_~k0041590

………..


உலகின் மிக அழகான ஒன்றும்
மிக ஆபத்தான ஒன்றும்
ஒரு புள்ளியில் சந்தித்தன
” மன்னிப்பு ”

forgive

” கண் தானம் “


உள்ளூற உறங்கிய பின்னும்
உலகம் காணுவோம் வாருங்கள்

eye

விளையாட்டு !!!!!!


எனது தாயை கற்பழிக்கின்றான்
சிங்களவன் என் கண்முன்னே
முரளீதரன் பந்துவீச்சில்
இந்தியனொருவன் தனது ஆட்டத்தை
பறிகொடுத்து வெளியேறுகின்றான்
வருந்துகின்றான் நண்பன்(?) இந்தியனுக்காக‌
மன்னியும் நண்பனை சாக்கடையிலிருந்து
தாய்ப்பால் பருகியவனவன்
இந்நிகழ்ச்சியை இணைந்து வழங்கியவர்கள்
அம்பானியும் , அகில உலகமும்
பார்வையாளனாக மட்டும்
இங்கே மாண்டுபோன‌ மாந்த நேயமும் ,,,,,,

 

http://video.yahoo.com/watch/5687575/14904457

Advertisements
%d bloggers like this: