இருத்தல்


இருத்தலுக்கான போரினிலே
இறந்ததுவும் தெரியாமல்
இயங்கிக் கொண்டே
இருந்து விட்டேன்….

உள்ளிருந்த பிணவாடை
வெளிவந்து தன்னை
தனக்கே முகம் காட்ட‌
முயலுகிறது வெகு வருடங்களாய்….

என்று நான் இறந்து போனேன்?
இறந்த பின்னுமா அறுவை சிகிச்சை ?
மனிதம் மறந்த அன்றா ?
இல்லாத பொருளினால்
இறப்பது சாத்தியமா?

உண்மைகள் ஊமையானதே அன்றா ?
மீளக் கூறுகிறேன்
இல்லாத பொருளினால்
இறப்பது சாத்தியமா?

இளமைப் பருவத்திலா ?
ம்ம்ம்…..

ஆம் , குழந்தைப் பருவத்திலே
நீங்கள் நிகழ்த்திய செய்கையது
என்னுலகம் விட்டு என்னை
இவ்வுலகம் இழுத்து வந்து
இறந்து போன இதயத்தை
உயிர்ப்பிக்கச் செய்தீர்கள்
வாழுகிறேன் பிணமாக………

 

skeleton-work-2_~k0041590

Advertisements
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Advertisements
%d bloggers like this: