எங்கப்பாவும் நானும்


சமர்ப்பணம் – இந்த கவிதையின் நாயகனான எங்கப்பா இரா.பழநிசாமிக்கு (என்னை பெற்று வளர்த்து..வாழவும் வைத்துக் கொண்டிருக்கும்) என்னால் ஆன ஒரு சிறு காணிக்கை…
எங்கப்பாவும் நானும்

IMG_4028 IMG_4047

காக்கான்னா என்னன்னு கத்தி
கத்தி நான் கேக்க
இதுதாம்பா காக்கான்னு பலதரம் தான் நீ சொன்ன
கணிணீன்னா என்னன்னு ஒரு தரம் தான் நீ கேக்க
உனக்கெல்லாம் புரியாது விடுப்பான்னு நான் சொன்னேன்…

உடல் களைக்க வேலை
செஞ்சு நீ வந்த வீட்டுக்கு
எங்கப்பா எந்தீனீன்னு
எழுந்தரிச்ச நான் கேக்க
நாளைக்கு வாங்கித் தாரே
தூங்குன்னு நீ சொன்ன
உம்குகும் இன்னைக்கே
வேணுமின்னே அடமாத்தான்
நான் அழுதேன்……

புது சட்டை நான் போட்டு
பட்டாசு தான் வெடிக்கையிலே
கை கிழிந்த சட்டை போட்டு
சந்தோசமா நீ இருந்த…

நல்லா தான் சாப்பிடுப்பான்னு என்னைச்
சொன்ன எங்கப்பா
ஒரு நேரம் சாப்பிட்டியா
உருப்பிடியா நீயும் தான்…

எம்புள்ளை இவன் தான்னு ஊர்
முழுக்க சொன்ன நீயும்
எங்கப்பா இவர் தான்னு
ஒருத்தர்ட்ட சொன்னேனா…

எல்லோரோட வரலாற்றையும்
நல்லா படிச்சான் நானுந்தான்
வரலாறா வாழுற உன்னை மட்டும் விட்டுப்புட்டே..

படம் படமா நான் பாத்தேன்
எங்கப்பன் உன் காசில தான்
ஒரு படம் தான் நீயும் பாத்த
உங்குடும்ப வாழ்க்கையிலே….

ஒரு பேச்சு பேசிருப்பியா
என் முகத்தை நீ பாத்து
பல பேச்சு பேசிப் புட்டேன்
உன் முகத்தை பாக்காமத் தான்…

எனக்கான சுதந்திரத்தை முழுசாத் தான்
நீ கொடுத்த
உனக்கான சுதந்திரத்தை இன்னமும்
நான் கொடுக்கலியே…..

இப்படி தான் வளத்தாரா
உங்கப்பா உன்னையும் தான்
இப்படி தான் வளக்கனுமோ
எம்புள்ளைய நானுந்தான்….
இரா.பழநிசாமியோட புள்ளை வெங்கடேசன்(எனது இயற்பெயர் வெங்கடேசன் . நானாக நல்ல தமிழில் வைத்துக் கொண்டது நற்றமிழன்)

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

Advertisements
    • பாலாஜி
    • ஜூன் 17th, 2012

    அருமை தோழரே…

  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Advertisements
%d bloggers like this: