நீ என் முன்தோன்றின்


bridge01

க‌ட‌வுளே ?
நீ என் முன்தோன்றின்
த‌யாராயிரு என் தாக்குத‌லுக்கு பயப்படாதே ,உன் தொண்ட‌ர்ப்(ப‌க்த‌ப்) ப‌டை
ந‌ட‌த்தும் கொலை வெறித் தாக்குத‌ல‌ல்ல‌
இது எங்க‌ள‌ன்பு கொள்கைச்சார்
தாக்குத‌ல் .
இங்கே என்னிட‌மோ
கேள்விக‌ள் ஆயிர‌மாயிரமாய்
ப‌த‌ற்ற‌ப் படாம‌ல் ப‌தில்க‌ளோடு வா
த‌வ‌றென்றால் உன‌க்காகவே
காத்திருக்கின்ற‌து நீ
ப‌டைத்த‌ ந‌ர‌க‌மும்(?)
உன்னிலும் தீண்டாமை உண்டோ
ம‌காமுனியைப் பார்ப்பாயா ?
க‌ருப்பைத் தொட்டுப் பேசுவாயா ?
செய்வாயா நீ , எல்லாவ‌ற்றையும்
ப‌டைத்த‌வ‌னே (?) நீ தானே
பின்ப‌ற்றாம‌லா இருப்பாய் நீ
நீ ப‌டைத்த‌ தீண்டாமையை
உன்னிலும் .

பிற‌ப்பிலேயே பிரித்து
வை‌த்து விட்டாயே
நீ எங்க‌ளை , ஏன் ?
சேர்ந்து இருந்தால் நாங்க‌ள்
சேர்ந்திருந்தால் உன்னால்
தொழில் ந‌ட‌த்த‌ முடியாதோ ?

பிரித்தாளும் சூழ்ச்சி என்றால்
வெள்ளைய‌னைச் சொல்லும்
என் ந‌ண்ப‌னோ சுல‌பமாக‌
ம‌ற‌ந்துவிட்டான் சூத்திர‌தாரி
உன் பெய‌ரை .

வித்தியாச‌மான‌ நீதிம‌ன்ற‌ம் ஐயா
உன்ன‌து . இங்கே செய்யும்
த‌வ‌ற்றிக்கு எங்கேயோ அதுவும்
எப்போதோ த‌ண்ட‌னையாம் .
தெரியாம‌ல் தான் கேட்கின்றேன்
இப்ப‌டி நீ நீதி கொடுப்பின்
எந்த‌ விள‌க்கெண்ணை ஐயா
தான் செய்யும் த‌வ‌ற்றை நிறுத்துவான்
வ‌ந்து உன் ? உல‌க‌ம் பார்
நீ வ‌ழ‌ங்கிய‌ நீதியின் இல‌ட்சின‌த்தை
உன் க‌ண் கொன்டு நீயே பார் .

நீ தான் ஆளுகின்றாய்
அகில‌ம் எல்லாம் என்றான்
என் ந‌ண்ப‌னுமே .
அத‌னாலோ என்ன‌வோ உன்
தொண்ட‌ர்ப்(ப‌க்த‌ப்) ப‌டை நட‌த்தும்
கொலை , கொள்ளை ஏராள‌மாய்
ஓ இது தான் ஆளுங்க‌ட்சி
அட்டூழிய‌மோ .
ஏன‌ய்யா த‌டுக்க‌வில்லை
நீயும் வ‌ந்து த‌ண்டிக்க‌வில்லை
ஆளுவ‌த‌னால் உல‌கை
ஆளுவ‌த‌னால் நீயும் ஆனாயோ
போலி அர‌சிய‌ல்வா(வி)யாதியாய் .

Advertisements
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Advertisements
%d bloggers like this: