செப்ரெம்பர், 2009 க்கான தொகுப்பு

அமைதி


 

அமைதிக்காக (?) செய்த
யுத்தங்கள்
இதோ கிடைத்தே விட்டது
மயான அமைதி .

A6ICA13Q0M9CACNAXIDCAMZX43ZCAK0O5GPCAS685ODCA1396JJCA5U1SAUCA3I30D5CAAW2AIRCAUMZ8SXCA6TUL90CA23V1EKCA68O013CAQ0B20ACA43DSFACA2JUF4BCAO1UBO6CALTTOGCCA78D0HR

Advertisements

எங்கே ?…..


தேர்வேழுதச் சொன்னான்
எனை ஆமிக்காரனும்
எழுதி வந்தேன் நானும்
அவனுக்கான பதிலை அல்ல
எனக்கான கேள்வியை
அழுகிய பிணங்களிநூடே
ஆண்டு முழுக்க தேடியும்
கிடைக்காத என் அம்மாவின்
பிணம் எங்கே ?.

……. Times of India  நாளிதழின் செய்தி ஒன்று என்னை இந்த கவிதையை எழுத தூண்டியது . அந்த செய்தி ” முன்பு துப்பாக்கி பிடித்த சிறுவர்கள் , இப்பொழுது எழுதுகோல் பிடித்து தேர்வு எழுதுகிறார்கள் . அப்படி அவர்கள் தேர்வு எழுதினால் , அந்த பதில் தாள் இவ்வாறு தான் இருக்கும் .

வலி வணிகம்


 

நான்கு வயது சிறுவனைப்
பறிகொடுத்த ஒரு
தாயின் கதறல்
பரபரப்பான விற்ப்பனையில்
இப்போது….
இங்கே என் வலிகளும்
உங்கள் வணிகமாக

 

DSCN1362

விந்தை – 1


ஏகாதிபத்தியங்களை எதிர்த்து அறைகூவல்
விடுத்த என்னை
உன் புன்ன‌கை எனும் ஆயுதத்தால்
அடிமையாக்கி விட்டாய்.

smile

விந்தை


நீ போட்ட‌ வ‌ட்ட‌த்திற்க்குள்
நிற்க‌ வைத்து விட்டு
சொல்கின்றாய்
நீ நியாக‌வே இரு என்று ……

Circle_With_Dot

என்ன செய்ய ?


நட என்றாய் நடந்தேன்
தத்தி தத்தி ரசித்தாய் நீ…
நன்றாய் நடக்கிறேன் ..
உக்கார மாட்ட ஒரு இடத்தில
என்ன செய்ய…..?(சொல் தாயே)

பேசு என்றாய் பேசினேன்
திக்கி திக்கி இன்றும் ரசித்தாய் நீ..
நன்றாக பேசுகிறேன்
சனியன் வாய தொறந்தா மூட மாட்டேங்குது
இன்று நீ

சொல் தாயே நான் என்ன செய்ய…?

42-15659944
————-ஒரு குழ‌ந்தையின் ம‌ன‌நிலையை ப‌திவு செய்ய‌ முய‌ன்றிருக்கின்றேன்.

தொடர்….தொல்லைகள்


பிள்ளை அழுதது
அம்மாவும் அழுதால்
பிள்ளைக்காக அல்ல
தொ(ல்)லைக் காட்சி தொடர்
நாயகிக்கு தரும் தொல்லைக்காக…

அம்மா சொல்லச் சொன்னால்
அம்மா என்றல்ல
சித்தீ (தொடரின் பெயர்)…என்று..
எங்கோ உறுத்தியது எனக்கு

 

suntv_arasi_banner

%d bloggers like this: