செப்ரெம்பர், 2009 க்கான தொகுப்பு

தமிழ்


தமிழ் பேசு தங்க காசு
எங்கோ கேட்டேன்

தாய்ப் பால் கொடு தங்க காசு
எங்கோ கேட்பேன்

தாய்ப் பால் குடித்தால்
செழுமை பெறும் உங்க‌ள் குழ‌ந்தை
தாய் மொழிப் பால் குடித்தால்
செழுமை பெறும் உங்க‌ள் எண்ணக்குழ‌ந்தை

இன்னும் போக‌வில்லை
எங்க‌ளுக்கு அந்த அடிமைப் புத்தி
அன்று ஆங்கிலேய‌னுக்கு
இன்று ஆங்கில‌த்திற்க்கு

ஆங்கில‌த்தைக் கொல்ல‌ மாட்டோம்
ஏனென்றால் எங்க‌ளுக்கு அது சோறு போடுகின்ற‌து
தாயில்லாம‌ல் த‌னியே நிற்க்கும் ஆத‌ர‌வ‌ற்ற‌ குழ‌ந்தைப் போல‌
த‌னியே த‌விப்ப‌து தாய் மொழி த‌மிழ் தானே
அத‌னால் கொல்லுகின்றோம் த‌மிழை
ஆங்கில‌ம் எனும் ந‌ஞ்சு க‌ல‌ந்து

த‌வ‌றில்லை ஆங்கில‌ம் பேசுவ‌து
அதே போல‌த் தான் த‌வ‌றேதுமில்லை
பிற‌ மொழிக் க‌ல‌ப்பின்றி த‌மிழ் பேசுவ‌தும்
என்னுடைய‌ முய‌ற்சியை தொட‌ங்கிவிட்டேன்
நீங்க‌ள் எப்பொழுது ?

3lj1

Advertisements

உல‌கன்னை நீ


 teresa

காறி உமிழ்ந்தன் தாயே…
உன் முகத்திலே…
போதும் எனக்கு … எங்கே என்
பிள்ளைகளுக்கு என்றாய் நீயோ…
கதறி வீழ்ந்தன் அவனே…
அம்மா என உன் காலடியிலே..
அன்றிலிருந்து ஆனாய் நீ
என் உலகன்னையாக..

(அன்னை தெரசா-வை பற்றிய கவிதை அவரது வாழ்க்கையிலிருந்து)

என் அம்மா


 Zzpycql

என்னுயிர் தான் வெளி வரவே
உன்னுயிர் நோக துடித்தவள் நீ…
(இன்னுயிரை துறந்தவர் பலர்)

உன்னுதிரம் தான் திரித்து
எனக்கமுது அளித்தவள் நீ….

உனக்கான உன் உணர்வை
எனக்காக அழித்தவள் நீ…..

எனக்கொன்று என்றாலும் அது
தனக்கென்று துடித்தவள் நீ…

என் வாழ்வை நான் வாழ ,
ஊணுறக்கம் பாராமல் உன் வாழ்வை
து(ம)றந்தவள் நீ…

விதை எனவே இருந்த என்னை
விருச்சமாக்கி விட்டவள் நீ…

உன் கரம் தான் எப்பொழுதும்
அது எனைக் காக்க காத்திருக்கும்…

உன் முகம் தான் எப்பொழுதும்
அது என் அகம் தான் காட்டிடுமே…

உன் மகிழ்ச்சி எப்பொழுதும்
அது என் மகிழ்ச்சி ஒன்று தானே….
அம்மா என்ற ஒற்றைச் சொல்லே
உனக்கெல்லாமுமாய் ஆனதுவே…..
ப.லட்சுமியின் மகனான வெங்கடேசன்(நற்றமிழன்) .

என் அம்மாவிற்க்கு ஒரு சிறு காணிக்கையாக இந்த கவிதையை சமர்ப்பிக்கின்றேன்.

எங்கப்பாவும் நானும்


சமர்ப்பணம் – இந்த கவிதையின் நாயகனான எங்கப்பா இரா.பழநிசாமிக்கு (என்னை பெற்று வளர்த்து..வாழவும் வைத்துக் கொண்டிருக்கும்) என்னால் ஆன ஒரு சிறு காணிக்கை…
எங்கப்பாவும் நானும்

IMG_4028 IMG_4047

காக்கான்னா என்னன்னு கத்தி
கத்தி நான் கேக்க
இதுதாம்பா காக்கான்னு பலதரம் தான் நீ சொன்ன
கணிணீன்னா என்னன்னு ஒரு தரம் தான் நீ கேக்க
உனக்கெல்லாம் புரியாது விடுப்பான்னு நான் சொன்னேன்…

உடல் களைக்க வேலை
செஞ்சு நீ வந்த வீட்டுக்கு
எங்கப்பா எந்தீனீன்னு
எழுந்தரிச்ச நான் கேக்க
நாளைக்கு வாங்கித் தாரே
தூங்குன்னு நீ சொன்ன
உம்குகும் இன்னைக்கே
வேணுமின்னே அடமாத்தான்
நான் அழுதேன்……

புது சட்டை நான் போட்டு
பட்டாசு தான் வெடிக்கையிலே
கை கிழிந்த சட்டை போட்டு
சந்தோசமா நீ இருந்த…

நல்லா தான் சாப்பிடுப்பான்னு என்னைச்
சொன்ன எங்கப்பா
ஒரு நேரம் சாப்பிட்டியா
உருப்பிடியா நீயும் தான்…

எம்புள்ளை இவன் தான்னு ஊர்
முழுக்க சொன்ன நீயும்
எங்கப்பா இவர் தான்னு
ஒருத்தர்ட்ட சொன்னேனா…

எல்லோரோட வரலாற்றையும்
நல்லா படிச்சான் நானுந்தான்
வரலாறா வாழுற உன்னை மட்டும் விட்டுப்புட்டே..

படம் படமா நான் பாத்தேன்
எங்கப்பன் உன் காசில தான்
ஒரு படம் தான் நீயும் பாத்த
உங்குடும்ப வாழ்க்கையிலே….

ஒரு பேச்சு பேசிருப்பியா
என் முகத்தை நீ பாத்து
பல பேச்சு பேசிப் புட்டேன்
உன் முகத்தை பாக்காமத் தான்…

எனக்கான சுதந்திரத்தை முழுசாத் தான்
நீ கொடுத்த
உனக்கான சுதந்திரத்தை இன்னமும்
நான் கொடுக்கலியே…..

இப்படி தான் வளத்தாரா
உங்கப்பா உன்னையும் தான்
இப்படி தான் வளக்கனுமோ
எம்புள்ளைய நானுந்தான்….
இரா.பழநிசாமியோட புள்ளை வெங்கடேசன்(எனது இயற்பெயர் வெங்கடேசன் . நானாக நல்ல தமிழில் வைத்துக் கொண்டது நற்றமிழன்)

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

Hello world!


Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!

Advertisements
%d bloggers like this: