ஒக்ரோபர், 2009 க்கான தொகுப்பு

என‌த‌ன்பு நண்பனுக்கு


ram

எண்ணம் போல் வாழ்க்கை
என்றுமே எங்களின் கனவுகளாகும்
ஆனால் நீயோ இந்த‌க் க‌னவுக‌ளின்
ந‌டுவில் ஓர் க‌திர‌வ‌னாய் உதித்தாய்
இந்த‌ அற்ப‌க் க‌ன‌வுக‌ளை உதிர்த்தாய்
இப்போதும் வாழ்கின்றாய் நீ உன் எண்ண‌ம் போல
எப்போதும் வாழ்வாய் நீ
உன் எண்ண‌ம் போல..
என் வீட்டிற்க்கு நீ வ‌ந்தால்
எனக்கு ம‌ட்டும‌ல்ல‌ என் தாய்
த‌ந்தைத் , த‌ம்பி எல்லோருக்கும்
நண்ப‌னாகி விடுவாய் நீ
இது என் வீடு என்ற‌ல்ல‌
நீ எவ்வீடு சென்றாலும்
அவ்வீடு முழுவ‌தும்
உன் ந‌ண்ப‌க்கூட்ட‌ங்க‌ளால்
என்றுமே நிறைந்திருக்கும்..

ஒன்ற‌ல்ல‌, இர‌ண்ட‌ல்ல‌
நீ கொடுத்த‌ ந‌ண்ப‌ர் ஓர் பட்டாள‌ம்
அள்ளி , அள்ளிக் கொடுத்தாலும்
என்றுமே குறையாத‌ என்
ந‌ண்ப‌க் குவிய‌ல் நீ

ப‌ல‌ ப‌ல‌ ஒற்றுமைக‌ள்
சில‌ சில‌ வேற்றுமைக‌ள்
எனக்கு உன்னிட‌மிருப்பினும்
என்றுமே நீ என் ந‌ண்ப‌னென்ப‌தில்
பெருமித‌ம் ம‌ட்டும‌ல்ல‌ ச‌ற்றுக்
க‌ர்வ‌மே உண்டென‌க்கு .

உனது அ‌ன்ப‌ன்
என்றுமே உன‌த‌ருமை ந‌ண்ப‌ன்
ப.ல.நற்றமிழன் இச்சிறிய‌க் காணிக்கையை ஏற்றுக்கொள்.

Advertisements


தலைப்பு ம்..ம்… தோன்றவில்லை
உனக்குத் தோன்றினால் நீயே வைத்துக்கொள்..

 MCM_edited

சிறு குறிப்பு எழுதச் சொன்னால்
ஒரு வரலாறு எழுதுபவன்
உன் வரலாறு எழுத எண்ணம்
என்ன செய்யப் போகிறேனோ ?…
உன்னைப் பற்றி உனக்கே
ஓர் அறிமுகமாம்..(க்.கும்)
பெண்ணை நிலவுடன் வர்ணித்து
பல இடங்களில் கேட்டதுண்டு..
பெண்ணே நிலவாக..
நிலவே பெண்ணாக..
இல்லை… நிலாப் பெண்ணாக‌
சுயம்புவானவள் என்னளவில் நீ மட்டும் தான்…

அன்பிற்க்கும் உண்டோ
அடைக்குந்தாழ் … அடைபட்ட
அடிபட்ட மனங்களில் நீ
அளிக்கின்றாய் அன்பை
ஓர் அன்னையாக…
விருப்பம் போல அமைவதில்லை
எல்லோர்க்கும் அவர் வாழ்க்கை
பிறர் விருப்பம் போல வாழுகின்றாய்
நீயும்… அது யாராகினும் வலிகள்
தான் உன் வழிகளெங்கிலும்

முயன்று முயன்றுப் பார்க்கின்றாய்
மனமின்மையால் தோற்க்கின்றாய்..
அழைக்கின்றேன் எனதன்பு
இயற்கையை அடுத்து வரும்
தருணங்களில் உனக்கான வாழ்க்கையை
உன்னிடமே கொடுப்பதற்க்காக.. 
கேட்டு விட்டு சிரிக்கின்றாய் நீ
சிறு சிறு குறிப்புகளாக….

என்னவென்று புரியாமல்
மலர்வது காதல்…
இது இன்னதென்று புரிவதால்
மலர்வது நட்பு….
அப்படியோர் நன்னாளில் மலர்ந்தது
தான் நம் நட்பும் கூட…

அன்று உனை எதற்க்காக நான்
அழைத்தேன் என் எண்ணிப்
பார்க்க முடிவிலே புலப்பட்டது
நன்றி சொல்லத் தான் என..
இன்னும் சொல்லவில்லை அன்னன்றியை
உன்னிடம் நான்….

உனைப் பற்றி நீயும் கூற‌
எனைப் பற்றி நானும் கூற‌
நகர்ந்தன நாட்களும்
நம் நட்பைப் பற்றிக் கூறிக்கொண்டே…..

பலவற்றில் பல திசைகளில்
பயணம் செய்யும் நாமும் கூட‌
பயணிக்கின்றோம் ஒரே திசையில்
நட்பெனும் பாதையிலே… 

இந்தவொரு திங்களில்
என்னவெல்லாம் ஆனாய் நீயெனக்கு
பிரியமான தோழியாக..
புதிர்ப் போடும் புத்திசாலியாக..
வகுப்பெடுக்கும் ஆசிரியையாக..
பாடம் படிக்கும் மாணவியாக…
என்னிரண்டாம் தாயுமாக..
குறும்பு செய்யும் ஒரு சேயுமாக..
ம்.ம்.ம். கேட்கிறதெனக்கும் நீ
போதுமென சொல்லும் வார்த்தையும்…
வார்த்தைகளில் வாழ்க்கையை
அடக்க முயலும் நான்
முட்டாளாக்கப்படுவது புதிதல்ல‌
என்பதால் சற்று முயன்றே
நானும் பார்த்தேன்….
எனதாசை ஒன்றுதான்
இவ்வுடலின் இறுதி வரை
எனக்கான தோழியாய்
என்றுமே நீ………………
நட்புடன்.
ப.ல.நற்றமிழன்..

எனதருமைத் தோழி புவ‌னாவிற்க்கு இச்சிறு கவிதையை(அப்படின்னு நினைக்கிறேன்) சமர்ப்பிக்கின்றேன் .

Advertisements
%d bloggers like this: