பிப்ரவரி, 2010 க்கான தொகுப்பு

சிங்கள அரசு போர் குற்றவாளியே உலக மக்கள் தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பு. தமிழாக்கம். பூங்குழலி


மக்களின் உரிமைகள் மற்றும் விடுதலைக்கான லெலியோ பாசோ உலகளாவிய அமைப்பினால் ஆதரித்து ஊக்கப்படுத்தப்படும் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம், இத்தாலியில் உள்ள பொலோக்னாவில் ஜுன் 1979-இல், 31 நாடுகளைச் சேர்ந்த பல சட்ட வல்லுநர்கள், எழுத்தாளர்கள் மற்றும் நோபல் பரிசு வென்ற 5 பேர் உட்பட பிற பண்பாட்டு மற்றும் சமூகத் தலைவர்களால் உருவாக்கப்பட்டது. வியட்நாம் (1966-67) மற்றும் லத்தீன் அமெரிக்காவின் சர்வாதிகாரங்கள் (1974-76) மீதான ரஸ்சல் தீர்ப்பாயத்தின் மூலம் பெற்ற வரலாற்று அனுபவங்களை தனது அடிப்படையாக நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் கொண்டுள்ளது.
அயர்லாந்தின் தலைநகரான டப்ளினில் கூடிய இத்தீர்ப்பாயம் இலங்கைப் போரில் இறுதிக்கட்டத்தில் நடைபெற்ற அட்டுழியங்கள் குறித்து விசாரனை நடத்தி விரிவான அறிக்கையை அளித்துள்ளது. அந்த அறிக்கையின் சில பகுதிகள் இங்கு வெளியிடப்படுகின்றன.

போரின் இறுதிக் கட்டத்தில் நடைபெற்ற அட்டூழியங்கள்

பொதுவான பார்வையாளர்கள் முன் பல தொண்டு நிறுவனங்களும், தற்போது இலங்கையில் உள்ள ‘உள்நாட்டுப் போரின்’ நிலை குறித்து நிபுணர்களும் அளித்த பல அறிக்கைகளைத் தீர்ப்பாயம் கேட்டது. பெரும் எண்ணிக்கையிலான பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் புலம் பெயர்ந்த தமிழர்களின் வாக்குமூலங்களை அவர்களின் பாதுகாப்பை மனதில் கொண்டு அவர்கள் அடையாளத்தை மறைக்க ‘உள்ளக விசாரணை’ முறையில் தீர்ப்பாயம் விசாரித்தது.
இந்த உள்நாட்டுப் போர் ‘சாட்சிகளற்ற போர்’ என்பது பல முறை தனது வேலைகளின் போக்கில் இத்தீர்ப்பாயத்திற்கு நினைவூட்டப்பட்டது. ஏனெனில் இலங்கை அரசு எவ்வித தேசிய, பன்னாட்டு ஊடகங்களையும் போர்ப் பகுதிகளில் அனுமதிக்கவில்லை. உண்மையில், தொடக்கக் காலத்தில் பலியானவர்கள் பெரும்பாலும் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் களே. விமர்சன கருத்துக்களை ஊமையாக்க நினைத்த இலங்கை அரசின் திட்டங்களுக்கு ஏற்ப நடைபெற்றதாகவே இவை இருந்தன. பெரும்பாலான நிபுணர்கள் மற்றும் சாட்சிகளின் கருத்தின் படி இது ஓர் உள்நாட்டுப் போர், இன அழிப்பை செயற்படுத்தும் ஒரு நடவடிக்கை, சொல்லப்போனால் இனப்படுகொலை என்றே கூறலாம். இதை ஊடகங்களிடம் பகிர்ந்து கொள்ள இலங்கை அரசு தயாராக இல்லை. மாறாக, கொள்கைகள் குறித்தும், போர், எண்ணிக்கைகள், மற்றும் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் உள்ள மக்களின் நலன் குறித்தும் தவறான தகவல்களை கொழும்பு பரப்பியது.
இந்த தவறான தகவல்கள், இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டு, கனரக ஆயுதத் தாக்குதல்கள் மற்றும் வான் வழித் தாக்குதல்களுக்கு ஆளாகும் நிலையில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் உள்ள மக்கள் தொகையை குறைவாகவே கணக்கிட்டன. புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மிகவும் சுருங்கிய நிலையில் இறுதியாக நடந்த பாரிய இடப்பெயர்வு தொடங்கிய போதுதான், அவ்வாறு இடம் பெயர்ந்த மக்களை எண்ணியபோதுதான் அரசு உள் ளுர் மற்றும் வெளிநாட்டு ஊடகங்களுக்கு தவறான தகவல் கொடுத்தது தெரிய வந்தது.
இராணுவம் மேற்கொண்ட அட்டூழி யங்கள் பொது மக்களோடு தொடர்புப் பட்டவையாகவே இருந்தன. போர் விமானங்கள் மூலம் கொத்துக் குண்டுகள் வீசப்பட்டதற்கு சான்றுகள் உள்ளன. சர்வ தேச சட்டங்களுக்கு முரணாக வெள்ளை பாஸ்பரஸ் பயன்படுத்தப்பட்டதாக சில சாட்சிகள் சாட்சியம் அளித்துள்ளனர். காயப்பட்ட பொதுமக்களின் உடல்களில் தீக்காயங்களை பல சாட்சிகள் கண்டுள் ளனர். பிறர் நாபாம் போடப்பட்டதன் அறிகுறிகள் வெளிப்படையாக இருந்ததாக நம்புகின்றனர். வேறு பல எரியும் தன்மை யுள்ள பொருட்களுக்கான ஆதாரங்கள் இருந்ததை இம்மாதிரியானவைகளால் காயம்பட்ட நூற்றுக்கணக்கான தமிழ் மக் களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். நூற்றுக்கணக்கான உயிரற்ற உடல்கள் காணப்பட்டதை பல சாட்சிகள் உரைத்தனர். இதன் மூலம் காயம்பட்ட பலரோடு, பொது மக்களின் சாவு எண்ணிக்கை மிக அதிகமாக இருந்திருக்கிறது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் குறைந்த நிலையில் மனித நலன் சார்ந்த பொது கட்டமைப்புகள் அழிக்கப்பட்டது சாதாரண நிகழ்வாக இருந்தது. குறிவைக்கப்பட்ட வர்களில் பெண்களும் குழந்தைகளும் இருந்தனர்.
மருத்துவமனைகள், பள்ளிகள் போன்ற பொது கட்டமைப்புகள் உள்ளிட்ட பொதுமக்கள் வாழ்விடங்களில் விடு தலைப்புலிகளுக்கு எதிராக இராணுவம் நடத்திய தொடர்ச்சியான எறிகணை தாக்கு தலானது ஜெனிவா ஒப்பந்த மீறலாகும். குடி நீர் பற்றாக்குறை, அடிப்படை மருத்துவ வசதிகள் இன்மை, தொடர்ந்து கல்வி வசதி கள் கிடைக்காத தன்மை ஆகியவற்றால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவர்களின் அனைத்து அடிப்படை மனித உரிமைகள் பறிக்கப்பட்டன. மேலும் இச்சூழலில் பொது மக்களின் சாவு எண் ணிக்கையும் மிக அதிகமாக இருந்தது. அய்க்கிய நாடுகள் அவையின் உள் ஆவ ணங்களின் படி, ஏப்ரல் 2009 வரை, வான் வழித் தாக்குதல் மற்றும் கனரக ஆயுதங் களின் பயன்பாடு காரணமாக ஒரு நாளைக்கு 116 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதோடு போரின் இறுதி வாரங்களில் மட்டும் 20,000 தமிழர்கள் கொல்லப்பட்ட தாக பிரித்தானிய மற்றம் பிரெஞ்சு ஊடகங்கள் தெரிவித்தன.
சட்ட விரோதமான ஆயுதங்களை பயன்படுத்தியோ பயன்படுத்தாமலோ, தமிழ் மக்களை அழித்தொழிக்க முயல்வது என்பதே ஒரு வகையான போர்க் குற்ற மாகும். ஆயுத மற்றும் அரசியல் எதிர்ப்புக் களை அடக்குவதன் மூலம் இலங்கை அரசு தமிழ் மக்களை இனப் படுகொலை செய்வதையே தனது நோக்கமாகக் கொண்டிருந்ததா என்ற கேள்வி எழுகிறது. நிபுணர்கள் மற்றும் நேரடி சாட்சிகள் மூலம் இராணுவம் முற்றிலும் பொது மக்கள் வாழ் விடங்களாக மட்டும் இருந்த பகுதிகளான மருத்துவமனைகள், தப்பிச் செல்லும் இடம் பெயரும் மக்கள் மற்றும் நிறைய கிராமங் கள் போன்றவற்றையே தாக்கியதாக உறுதி யாகத் தெரிகிறது. மேலும், தாமாக முன் வந்து சரணடைந்த தமிழ் மக்கள் மற்றும் விடுதலைப் புலிகள் இயக்கக் கைதிகள் ஆகியோர் இராணுவத்தால் கொலை செய் யப்பட்டதற்கு போதுமான ஆதாரம் உள் ளது. இது இன அழிப்புக் குற்றச்சாட்டிற்கும் சர்வதேச சட்டங்களை மீறியதான குற்றச் சாட்டிற்கும் பெரிதும் சான்றுகளாக உள்ளன.
எந்த ஒரு முடிவுக்கும் வரும் முன் னர் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட பிற அடக்குமுறைகள் மற்றும் வன்கொடுமை கள் குறித்து ஆராயவேண்டும். இடம் பெயர் ‘முகாம்கள்’ அல்லது ‘தடுப்பு முகாம்கள்’ (வாக்குமூலங்களில் குறிப்பிட்டுள்ள படி) பற்றி சாட்சிகளின் வாக்குமூலங்கள் கவனத்திற்குரியவை. தடுத்து வைக்கப் பட்டுள்ள மக்கள் தங்கள் சொந்த வீடு களுக்குத் திரும்பும் வரையிலோ அல்லது மறு குடியமர்த்தப்படும் வரையிலோ தங்குவதற்கான இடை தங்கல் முகாம்கள் என்று அரசாங்கத்தால் வர்ணிக்கப்படும் இம்முகாம்கள், நலன்புரி கிராமங்களாகவே அரசால் ஒதுக்கப்பட்டுள்ளன. அப்படி 15 முகாம்கள் ஒதுக்கப்பட்டன. அந்த முகாம் களில் நடப்பவை தொடர்ந்து ஜெனிவா ஒப்பந்தம் மற்றும் மனித உரிமைக்கான அனைத்துலக அறிக்கை ஆகியவற்றை மீறுபவையாகவே இருக்கின்றன. அந்த முகாம்களுக்குள் நடந்த பல வேதனை யான நிகழ்வுகள் குறித்து தீர்ப்பாயத்தின் உறுப்பினர்களிடம் புகார் செய்யப்பட்டது. ஒருவருக்கு ஒதுக்கப்படும் வாழ்விடம் மிகச் சிறியதாக இருந்தது. கூரை தகரத்தால் போடப்பட்டிருந்தது. இதனால் வெயில் காலங்களில் வெப்பத்தினால் உடல்நலன் பாதிக்கப்பட்டு, சரும நோய்கள் ஏற்படு கின்றன. பலர், குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்கள் மற்றும் வயதானவர்களும் காலரா, மற்றும் சத்துக் குறைவினால் மரணமடைந்திருக்கின்றனர். நீர் வழங்கல் ஒரு முக்கிய பிரச்னையாக இருந்தது. ஒரு குடும்பத்தின் அனைத்துத் தேவைகளுக்கும் ஒரு நாளைக்கு 5 லிட்டர் நீர் மட்டுமே வழங்கப்பட்டது. இது போதாதது மட்டுமல்ல, சுகாதார சீர்கேட்டிற்கும் வழி வகுத்தது. அடிப்படை சுகாதாரம், கழிவறை பயன்பாடு மற்றும் துணி துவைப்பதற்கு தேவையான நீர் கிடைக்கவில்லை. அதிலும் பெரும் பாலானவர்களுக்கு உடுத்தியிருந்த உடை மட்டுமே இருந்தது. குப்பைகள் அந்தந்த இடங்களிலேயே கிடந்தன. கழிவுத் தொட்டிகள் சிமெண்ட்டால் கட்டப்படாததால் அடிக்கடி உடைந்து, கழிவு நீர் வெள்ளமாக வெளியேறி, சில சமயங்களில் சில குழந்தை கள் அவற்றில் மூழ்கி இறக்கும் அளவிற்கு இருக்கிறது. நிறைய குழந்தைகள் பெற்றோர் இருவரையும் இழந்து ஆதரவற்று இருக் கின்றனர். அல்லது பெற்றோரில் ஒருவரின் ஆதரவில் மட்டும் உள்ளனர். இதனால் முகாம்களில் நிலவும் பல்வேறு அச்சுறுத்தல் களுக்கும் ஆபத்துகளுக்கும் ஆளாக நேர்கிறது.

ஏற்றுக்கொள்ளப்பட முடியாத மற் றொரு அரசுக் கொள்கை என்னவெனில், தமிழ் மக்களைக் கொடுமைக்கு உள்ளாக்கி அவர்களைப் பணிய வைக்கும் ஆயுதமாக உணவு வழங்கலை நிறுத்தி வைத்தது. உணவு வழங்கலை தடை செய்தது, மற்றும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்த மக்களின் எண்ணிக்கையைக் குறைத்து மதிப்பிட்டது ஆகியவை ஆபத்தான உணவுப் பற்றாக்குறைக்கு வழிகோலின. அதோடு கூடுதலாக தமிழ்ப் பகுதிகளுக்கு மருந்து வழங்கலையும் தடை செய்ததும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததும் மனித உரி மைச் சட்டங்களுக்கு எதிரானதும் ஆகும்.
அழிக்கப்பட்ட கிராமங்களிலும், ‘நலன்புரி கிராமங்களிலும்’ அரசு இராணுவம் பெண்கள் மீது நடத்திய பாலியல் வன் கொடுமைகளும், வல்லுறவுகளும் போர்க் காலம் முழுவதிலும் அரச படையால் தொடர்ந்து நடத்தப்பட்ட மற்றுமொரு பாரிய கொடுமையாகும். மனித குலத்திற்கு எதிரான குற்றமாக ரோம் சட்டத்தில் குறிக்கப்படும் இது, கருக்கலைப்பு, குடும்ப பெருமைக்கு இழுக்கு, அவமானம், மன உளைச்சல்களு டன் வாழ முடியாமல் பாதிக்கப்பட்டது பெண்கள் தற்கொலை செய்து கொள்ளுதல் போன்ற மேலும் பல துயரங்களுக்கு வித் திட்டது. இப்படி குறிவைத்து நடத்தப்படும் கொடுமைகளுக்குப் போர்ப் பகுதிகளுக்கு வெளியே வாழும் தமிழர்களும் பலியாயினர். பெரும் எண்ணிக்கையில் இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டமை தவிர, கடத் தல், படுகொலை, முன்அறிவிப்பற்ற கைது கள், தடுத்து வைத்தல், பாலியல் வன்கொடு மைகள் மற்றும் சித்ரவதைகள் மூலம் தேர்ந் தெடுக்கப்பட்ட அச்சுறுத்தல் பிரச்சாரமும் நடந்தது.
மேலே உள்ள பத்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள செய்திகளை, மனித உரிமை கண்காணிப்பகம் (28.07.2009 மற்றும் 24.11.2009), சர்வதேச மன்னிப்பு சபை (10.08.2009) மற்றும் கொள்கை மாற்றுகளுக்கான மய்யம் (செப்டம்பர் 2009) ஆகியவற்றின் அறிக்கைகளில் காணலாம்.
தமிழ்த் தலைவர்களை குறிவைத்து படுகொலை செய்தல் மற்றொரு கொடுமை யாக இருந்தது. அதிலும் இப்படியான படு கொலைகளில் முக்கியமாக இராணுவத்தின் படுகொலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், நடராசா ரவிராஜ் மற்றும் டி. மகேசுவரன் ஆகியோர் குறிவைத்துக் கொல்லப்பட்டது முக்கியமானது.
விடுதலைப் புலிகளை பயங்கர வாதிகள் என அறிவித்த 1979-இன் பயங்கர வாதத் தடுப்புச் சட்டம் பல்வேறு கொடுமை களுக்கு வழிவகை செய்த அரசின் கொள்கைகளுள் முக்கியமானதாகும். அது சட்டத்திலும் இராணுவ சட்ட அமைப்பிலும் உள்ள பாதுகாப்புகளைக் குறைத்து அவற் றைப் தவறாக பயன்படுத்த வழி செய்தது.
இறந்தவர்களின் உடல்கள் அவமரி யாதை செய்யப்பட்டதும் சாட்சிகள் மூலம் தெரிய வருகிறது.
சுருக்கமாக, விடுதலைப் புலிகள் படையினரின் அச்சுறுத்தலை நீக்கவும், தமிழ் மக்கள் மீது தனது ஆதிக்கத்தை செலுத்தவும், இலங்கை அரசு, உலகளாவிய சட்டங்கள், ஜெனிவா ஒப்பந்தம் மற்றும் மனித உரிமைப் பிரகடனம் ஆகியவற்றிற்கு எதிரான ஓர் இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்தது. இதனால் விளைந்த கொடுமைகளான வல்லுறவு, சித்ரவதை, படுகொலைகள், ‘காணாமல் போதல்’, மற்றும் உணவு, நீர் மற்றும் மருந்து வழங்கலை தடை செய்தமை ஆகியவை தமிழ்ச் சமூகத்தின் இருப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்தன. கனரக ஆயுதங்கள் மற்றும் சட்டவிரோத ஆயுதங்களான வெள்ளை பாஸ்பரஸ் மற்றும் கொத்து குண்டுகள் ஆகியவற்றை பயன்படுத்தியதானது உலகளாவிய சட்ட நிலைகளுக்கு அப்பால் இலங்கை அரசை நிறுத்தியுள்ளன. வன்கொடுமைகள், இன அழிப்பு, சொல்லப் போனால் இனப் படு கொலை ஆகிய குற்றங்கள் கொழும்பில் திட்டமிடப்பட்டன என்பது ஆச்சரியமளிக்க வில்லை. போர்க் குற்றங்களும், மனிதக் குலத்திற்கு எதிரான குற்றங்களும் நடந் துள்ளன என்பது தெளிவாகத் தெரிகிறது.
பல்வேறு தொண்டு நிறுவனங்கள், பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்கள், நேரடி சாட்சிகளின் வாக்குமூலங்கள், நிபுணர்களின் வாக்குமூலங்கள், ஊடக அறிக்கைகள் என இத்தீர்ப்பாயத்தின் முன் வைக்கப்பட்ட ஆவணங்களின் அடிப் படையில் கடந்த 2002 முதல் (போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதிலிருந்து) இன்று வரை இலங்கை அரசால் மூன்று வகையான மனித உரிமை மீறல்கள் செய் யப்பட்டுள்ளன என நாங்கள் வரையறுக்கிறோம்.
• தமிழ் மக்களைக் குறி வைத்து நடத் தப்பட்ட வலுக்கட்டாயமாக ‘காணா மல் அடித்தல்’
• போர் மீண்டும் தொடங்கிய பிறகு நடந்த குற்றங்கள் (2006-2009), குறிப் பாக போரின் இறுதி மாதங்களில்.
• இராணுவ இலக்குகள் அல்லாத மக் களின் பொது கட்டமைப்புகளான மருத்துவமனைகள், பள்ளிகள் ஆகிய வற்றின் மீது குண்டுவீச்சு நடத்தியது
• அரசு அறிவித்த ‘பாதுகாப்பு வளையங்கள்’ மற்றும் ‘தாக்குதலற்ற பகுதிகள்’ மீது குண்டுவீச்சு நடத்தியது
• போர்ப் பகுதிகளில் உணவு, நீர் மற்றும் மருத்துவ வசதிகளைத் தடுத்தது
• கனரக ஆயுதங்கள், தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வான் வழித் தாக்குதல்களை பயன் படுத்தியது
• உணவு மற்றும் மருந்தை போர் ஆயுதங்களாகப் பயன்படுத்தியது
• கைது செய்யப்பட்ட அல்லது சரண டைந்த விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களை மோசமாக நடத்தியது, சித்ரவதை செய்தது மற்றும் கொலை செய்தது
• சித்ரவதை
• பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் வல்லுறவு
• தனி நபர்கள் மற்றும் குடும்பங்களை வலுகட்டாயமாக வெளியேற்றியது
• இறந்து போனவர்களின் உடல்களை சேதப்படுத்தியது
• போரின் போதும் அதற்குப் பிறகும் இடம் பெயர்ந்தோர் முகாம்களில் நடந்த மனித உரிமை மீறல்கள்
• தமிழ் மக்கள் மற்றும் விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர்களை சுட்டுக் கொலை செய்தது
• வலுகட்டாயமாக காணாமல் அடித்தல்
• வல்லுறவு
• சத்துக்குறைவு
• மருத்துவ உதவிகள் பற்றாக்குறை
போர்க் குற்றங்கள்

மேலே 2ஆவதாக குறிப் பிட்டுள்ள செயல்களானது இலங்கை அரசாங்கம், அதன் பாதுகாப்புப் படைகள், அதனுடன் இணைந்த துணை ஆயுதப் படைகள் ஆகியவை ஜெனிவா ஒப்பந்தம் மற்றும் ரோம் சட்டத்தின் பிரிவு 8-இன் கீழ் வரை யறுக்கப்பட்டுள்ள ‘போர்க் குற்றங்களை’ புரிந்துள்ளதை தெளிவாக்குகின்றன. ரோம் சட்டத்தின் பிரிவு 8 கீழ் வருமாறு கூறுகிறது:
இந்த போரானது நாடுகளுக்கு இடையிலானது என்றால் கீழ்க்காணும் குற்றச்சாட்டுக்கள் பொருந்தும் :
(b) நிறுவப்பட்ட உலகளாவிய சட்ட அமைப்பின்படி நாடுகளுக்கு இடை யிலான போர்களில் பின்பற்றப்பட வேண் டிய சட்டங்கள் மற்றும் மரபுகளை மீறுவது என்பது கீழ்க் காணும் செயல்களை உள்ளடக்கும் :
(i) பொது மக்கள் மீதோ அல்லது மோதலில் ஈடுபடாத தனி நபர்கள் மீதோ திட்டமிட்டு நடத்தப்படும் நேரடி தாக்குதல்கள்
(ii) இராணுவ இலக்கல்லாத பொது கட்டமைப்புகள் மீது திட்டமிட்டுத் தாக்குதல் நடத்துவது
(iii) தெரிந்தே திட்டமிட்டு ஒரு தாக்குதலை நடத்தி அதன் மூலம் அதனால் கிடைக்கக் கூடிய இராணுவ இலாபத்தை விட அதிகமாக உயிர்கள் கொல்லப்படுவது, பொது மக்களுக்கு காயம் ஏற்படுத்துவது, பொது கட்ட மைப்புகள் பொது மக்கள் உடைமைகள் ஆகியவற்றை பரவலாக சேதப்படுத்து வது, இயற்கை சூழலுக்கு நீண்ட கால மற்றும் பாரிய பாதிப்பினை ஏற்படுத்து வது ஆகியவை
(vi) ஆயுதங்களை கைவிட்டு விட்ட அல்லது ஆயுதங்கள் இல்லாத அல் லது தாமாக முன் வந்த சரணடைந்த ஒருவரை கொல்வது அல்லது காயப் படுத்துவது
(ix) மதம், கல்வி, கலை, அறிவியல் அல்லது தொண்டுக்காக அர்ப்பணிக்கப் பட்ட கட்டடங்கள், வரலாற்று முக்கியத்து வம் வாய்ந்த கட்ட டங்கள், மருத்துவ மனைகள் அல்லது இராணுவ இலக்காக அல்லாத காயம் பட்டவர்களோ நோய் வாய்ப்பட்ட வர்களோ கூடியிருக்கக் கூடிய இடங்கள் மீது நடத்தப்படும் திட்டமிட்ட தாக்குதல்கள்
(xxi) தன் மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்துவது போன்ற செயல்கள், குறிப்பாக அவமானப்படுத்தல் அல்லது மரியாதைக் குறைவாக நடத்துவது
(xxii) வல்லுறவு, பாலியல் அடி மைத்தனம், வலுக்கட்டாய விபச்சாரம், பிரிவு 7 பத்தி 2 (க)-இல் குறிப்பிடப் பட்டுள்ளபடியான வலுக்கட்டாய கர்ப்பம், வலுக்கட்டாய கருத்தடை அல்லது பிற வகையான பாலியல் வன்கொடுமைகள் ஆகியவையும் ஜெனிவா ஒப்பந்தத்திற்கு எதிரானவை ஆகும்.
(xxv) ஜெனிவா ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிவாரணப் பொருட் களை மக்களுக்கு கிடைக்கவிடாமல் செய்வது உட்பட பொது மக்கள் உயிர் வாழ்வதற்கு தேவையான பொருட்களை தடுப்பதன் மூலம் பட்டினியை போரில் ஓர் ஆயுதமாக பயன்படுத்துவது
மோதல் உள்நாட்டுத் தன்மையு டையதாயின் கீழ்க்காணும் குற்றச் சாட்டுக்கள் பொருந்தும்
(c) சர்வதேச அளவில் அல்லாத ஆயுத மோதலெனில், 12 ஆகஸ்ட் 1949 தேதியிட்ட 4 ஜெனிவா ஒப்பந்தங்களில் பொதுவாக உள்ள பிரிவு 3-அய் மீறுவ தானது, மோதலில் நேரடி பங்கு கொள்ளாத வர்கள், அவர்கள் ஆயுதப் படையின் பகுதியாக இருந்தாலும், ஆயுதத்தை கைவிட்டவர்கள் அல்லது நோய், காயம் அல்லது தடுத்து வைப்பு அல்லது பிற காரணங்களுக்காக போரிலிருந்து விலக்கி வைக்கப்பட்டவர்களுக்கு எதிராக கீழ்காணும் செயல்களை செய்வதாகும்.
(i) உயிருக்கும் மனிதர்களுக்கும் எதிரான வன்முறை,- குறிப்பாக எல்லா வகையிலான கொலைகள், சிதைத்தல், கொடூரமாக நடத்துதல் மற்றும் சித்ரவதை
(ii) தன் மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்துவது போன்ற செயல்கள், குறிப்பாக அவமானப்படுத்தல் அல்லது மரியாதைக் குறைவாக நடத்துவது
(iii) பணயக் கைதிகளாக பிடித்து வைத்தல்
(iv) நடைமுறையில் உள்ள ஒரு நீதிமன்றத்தால், அனைத்து சட்டப்பூர்வ மாக பாதுகாப்புகளும் வழங்கப்பட்ட நிலையில் அளிக்கப்பட்ட ஒரு முன் னோடி தீர்ப்பு இல்லாத நிலையில் வழங்கப்படும் தண்டனைகள் அல்லது கொலைகள்
(c) நிறுவப்பட்ட உலகளாவிய சட்ட அமைப்பின்படி நாடுகளுக்கு இடையில் அல்லாத போர்களில் பின்பற்றப்பட வேண்டிய சட்டங்கள் மற்றும் மரபுகளை மீறுவது என்பது கீழ்க் காணும் செயல்களை உள்ளடக்கும் :
(i) பொது மக்கள் மீதோ அல்லது மோதலில் ஈடுபடாத தனி நபர்கள் மீதோ திட்டமிட்டு நடத்தப்படும் நேரடி தாக்குதல்கள்
(iv) மதம், கல்வி, கலை, அறிவி யல் அல்லது தொண்டுக்காக அர்ப்பணிக் கப்பட்ட கட்டடங்கள், வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த கட்டடங்கள், மருத்துவ மனைகள் அல்லது இராணுவ இலக்காக அல்லாத காயம்பட்டவர்களோ நோய் வாய்ப்பட்டவர்களோ கூடியிருக்கக் கூடிய இடங்கள் மீது நடத்தப்படும் திட்டமிட்ட தாக்குதல்கள்
(vi) வல்லுறவு, பாலியல் அடிமைத் தனம், வலுக்கட்டாய விபச்சாரம், பிரிவு 7 பத்தி 2 (க) இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி யான வலுக்கட்டாய கர்ப்பம், வலுக்கட்டாய கருத்தடை அல்லது பிற வகையான பாலியல் வன்கொடுமைகள் ஆகியவையும் ஜெனிவா ஒப்பந்தத்திற்கு எதிரானவை ஆகும்.
எனவே, இலங்கையில் நடை பெற்ற போரை சர்வதேச அளவிலானது என்று கருதினாலும் உள்நாட்டுப் போர் என்று கருதினாலும் இலங்கை அரசு புரிந்துள்ள போர்க் குற்றங்களை நாம் தெளிவாக கண்டுள்ளோம்.
மனிதக் குலத்திற்கு எதிரான குற்றங்கள்
முதலாவதாகவும் (வலுக்கட்டாய மாக காணாமல் அடித்தல்) மூன்றாவதும் (இடம் பெயர் முகாம்களில் போரின் போதும் அதற்கு பிறகும் நடைபெற்ற மீறல்கள்) குறிப்பிடப்பட்டுள்ள செயல்களானது, ரோம் சட்டம் பிரிவு 7-இல் கொண்டுள்ளபடி தெளிவாக மனிதக் குலத்திற்கு எதிரான குற்றங்களாகும். அதிலும் குறிப்பாக கீழ்காணும் பிரிவு களின்படி :
கீழ்காணும் ஏதேனும் செயல்கள், ஒரு பரவலான அல்லது திட்டமிட்ட தாக்குதலின் பகுதியாக, ஒரு குறிப்பிட்ட மக்களின் மீது, தெரிந்தே நடத்தப் படுமாயின் :
(a) கொலை
(b) படுகொலை
(d) வெளியேற்றுதல் அல்லது மக்களை கட்டாயப்படுத்தி இடம் மாற்றுதல்
(e) உலகளாவிய சட்டங்களில் கூறப்பட்டுள்ள அடிப்படை சட்டத் திட்ட ங்களை மீறி சிறை வைத்தல் அல்லது நடமாட தடை விதித்தல்
(f) சித்ரவதை
(g) வல்லுறவு, பாலியல் அடிமைத் தனம், வலுக்கட்டாய விபச் சாரம், பிரிவு 7 பத்தி 2 (க) -இல் குறிப் பிடப்பட்டுள்ளபடி யான வலுக்கட்டாய கர்ப்பம், வலுக்கட்டாய கருத்தடை அல்லது பிற வகையான பாலியல் வன்கொடுமைகள்
(h) ஒரு குறிப்பிட்ட குழுவினர் அல்லது பத்தி 3-இல் விளக்கப் பட்டுள்ள படியான அரசியல், மரபின, இன, பண் பாட்டு, மத, பாலியல் அல்லது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிற அடிப்படை களில் உள்ள ஒரு கூட்டத் தினர் மீது நடத் தப்படும் வன்கொடு மைகள் அனைத்துல கச் சட்டத்தின்படி அனுமதிக்க முடியாது.
(i) வலுகட்டாயமாக காணாமல் அடித்தல்
(k) பெரும் துன்பத்தையோ அல்லது பெரும் உடல் காயத்தையோ அல்லது உளவியல் அல்லது உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பையோ ஏற்படுத்தக்கூடிய இதையொத்த பிற மனிதத்தன்மையற்ற செயல்கள்.
இனப் படுகொலை எனும் குற்றத்தை செய்திருப்பதற்கான சாத்தியங்கள்

இனப்படுகொலை குற்றச்சாட்டை விசாரிக்க தீர்ப்பாயத்திடம் கோரிக்கை வைக்கப்படவில்லை எனினும், வாக்கு மூலங்கள் அளித்த சில நிறுவனங்களும் தனிநபர்களும் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் மீது இனப்படுகொலை நடந்தது அல்லது நடந்திருக்கலாம் என் பதை அங்கீகரிக்குமாறு கூறினர். போர்க் குற்றம் மற்றும் மனிதக் குலத்திற்கு எதி ரான குற்றத்துடன் இனப்படுகொலைக் குற்றச் சாட்டையும் இணைக்கும் அளவிலான ஆதாரங்கள் தீர்ப்பாயத்தின் முன் வைக்கப் படவில்லை. சில உண்மைகள் அவை இனப்படுகொலைச் செயல்களாக இருக்கக் கூடும் என்ற அளவில் முழுவதுமாக ஆரா யப்படவேண்டும். அப்படியான உண்மை களில் கீழ்காணுபவையும் அடங்கும் :
– ‘ஒரு குழுவினர் தொடர்ந்து வாழ்வதற்கான அடிப்படைகளை’ அழிக்க என்று லெம்கின் கூறியது போல் (இங்கு தமிழ்க் குழுவினர்) தமிழ்ச் சமூகத்தின் முக்கிய உறுப்பினர்களுக்கு எதிராக (ஊடகவியலாளர்கள், மருத்து வர்கள், அரசியல்வாதிகள்) இலங்கை ஆயுதப் படையினரும், அரசின் ஆதர வோடும் வழிகாட்டுதலோடும் செயல் பட்ட துணை இராணுவக் குழுவினரும் மேற்கொண்ட தனிநபர்களை வலுக் கட்டாயமாக ‘காணாமல் போகச்’ செய்த முறை
– இடம் பெயர் முகாம்களில் உள்ள தமிழ் மக்களின் நிலை தொடர் வது. சுட்டுக் கொல்லப்படுதல், திட்ட மிட்ட வல்லுறவு, வலுகட்டாயமாக ‘காணாமல் போகச் செய்தல்’. நாட்டில் தமிழ் மக்கள் அதிகமாக வாழும் இடங்களில் பரவலாக அழிக்கப் பட்ட கட்ட மைப்புகள். தமிழ் மக்கள் தொடர்ந்து வாழ்வதற்கான அடிப்படைத் தேவை களான உணவு, மருந்து போன்ற வற்றிற்கு பற்றாக்குறை.
மேலே குறிப்பிடப்பட்டுள்ளவை தற்போதைய நிலை என்றாலும், அவற்றை குற்றச்சாட்டுகளில் இணைக்க போதுமான ஆதாரங்கள் எங்களுக்குக் கிடைக்க வில்லை. எனினும், இனப்படு கொலை நடந்திருக்கலாம் என்ற நோக் கில் தொடர்ந்த விசாரணையை மேற் கொள்ள வேண்டியதன் முக்கியத் துவத்தை தீர்ப்பாயம் ஏற்றுக்கொள்கிறது.
மனித உரிமைச் சட்டங்களின் கீழ் இருக்க எந்த ஒரு மனிதனுக்கும் உள்ள உரிமை
‘பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போர்’ என்று சொல்லப் படுகிற விசயமானது, இத்தகைய போர்களில் செய்யப்படும் எந்த ஒரு செயலும், மிக ஆபத்தான ஓர் எதிரியை அழிக்க வல்ல சிறந்த வழியாக கருதப்பட்டு அனுமதிக் கப்படவேண்டும் என்ற கருத்தை முன் வைக்கிறது. இந்த புதிய பாதுகாப்பு மாதிரியானது, மக்களில் ‘பயங்கரவாதிகள்’ என்று முத்திரைக் குத்தப்பட்டவர்களுக்கு எதிராக நடத்தப்படும் அனைத்துவித மனித உரிமை மீறல்களையும் நியாயப் படுத்துகிறது. ‘பயங்கரவாதிகள்’ என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் புரிந்த குற்றங்களை கணக்கில் எடுத்துக் கொண்டாலும் கூட அவர்களும் மனித உரிமை சட்டத்தின் பாதுகாப்பின் கீழ் வருவார்கள் என்பது இத்தீர்ப்பாயத்தின் தீர்ப்பிற்கு அடிப்படை யான கருத்தாகும். பாதிக்கப்பட்டவர்களின் எந்த ஒரு குற்றமும், இத்தீர்ப் பாயத்தினால் உறுதி செய்யப்பட்ட எந்த ஒரு போர்க் குற் றத்தையும் அல்லது மனிதக் குலத்திற்கு எதிரான குற்றத்தையும் நியாயப்படுத்த முடியாது.
இதனை முக்கியத்துவப்படுத்து வதன் காரணம் என்னவெனில், இந்த புதிய பாதுகாப்பு மாதிரிக்குள், ‘பயங்கர வாதிகள்’ அல்லது வேறு ஏதேனும் தீவிர பெயரில் முத்திரைக் குத்தப்பட்ட மக்கள், ஒட்டு மொத்த மனித குலத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டு, அதனால் மனித உரிமைச் சட்டத்தின்படி உறுதி செய்யப்பட்ட எந்த பாதுகாப்பையும் அனுபவிக்க முடியாது. இந்த கருத்தானது மனித உரிமைச் சட்டங்களின் இருப்பையே மறுப்பதாகும்.
சமாதானத்திற்கு எதிரான குற்றங்கள் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற குற்றச்சாட்டு

தீர்ப்பாயத்திடம் இறுதியாக அளிக் கப்பட்ட குற்றம் – ‘சமாதானத்திற்கு எதிரான குற்றங்கள்’. இலங்கை அரசும் அதனுடன் வேறு சில அந்நிய சக்திகளும் இணைந்து ஒரு வெறுப்புக் கொண்ட போரையே நடத்தின என்று குற்றம்சாட்டப்படுகிறது. நூரெம்பெர்க் தீர்ப்பாயத்தில் சமாதானத் திற்கு எதிரான குற்றங்கள் விளக்கப்பட்டுள் ளன : (அ) வெறுப்பின் மீது கட்டமைக்கப் பட்ட ஒரு போரையோ அல்லது சர்வதேச ஒப்பந் தங்கள், உடன்பாடுகள், அல்லது வாக்குறுதிகள் ஆகியவற்றை மீறிய ஒரு போரையோ நடத்த திட்டமிட்டு, ஆயத்த மாகி, தொடங்கி நடத்துவது (ஆ) அப்படியான செயல்களை முடிப்பதற்கான ஒரு பொதுத் திட்டத்திலோ அல்லது சதித் திட்டத்திலோ பங்கேற்பது.
இந்த குற்றச்சாட்டை ஏற்றுக் கொள் வதில் தீர்ப்பாயத்திற்கு உள்ள சிக்கலானது – தீர்ப்பாயத்தின் முன் இக் குற்றச்சாட்டை உறுதிப்படுத்த வைக்கப் பட்ட சாட்சியங் களால் மட்டுமல்ல – ஆனால் கூடுதலாகவும் முக்கியமாகவும், இக்குற்றச்சாட்டை மனித உரிமைச் சட்டங்களின் பகுதியாக ஏற்றுக் கொள்வதால் ஏற்படக்கூடிய விளைவுகள்.
சமாதானத்திற்கு எதிரான குற்றம் என்பது, சமாதானம் நிலவும் சூழலில், இரு தரப்பினரில் ஒரு தரப்பினர் வன் முறை யான ஒரு போரைத் தொடங்குவ தன் மூலம் இந்த சமாதானச் சூழலை உடைப்பது.
என்றபோதும், மனித குலம் அவலத்தை எதிர்நோக்கிய பெரும்பாலான ஆயுத மோதல்களில் ஒரு குழப்பமான மற்றும் சிக்கலான நோக்கிலிருந்து சூழலை ஆராயலாம். ஒரு போரில் முதன் முதலில் தாக்குதலைத் தொடங்கியவர் யாரென முடிவு செய்வது கடினமானது மட்டுமல்ல சார்பானதாகவும் ஆகிவிடுகிறது. ஒடுக்கு முறையானது பல ஆண்டுகள் சேர்ந்து கொண்டே போய் ஒரு இக்கட்டான நிலையில் வினையாற்றும் போது அது ஒரு வன்முறைப் போரின் தொடக்க செயலாகி விடுகிறது.
இதுதான் இலங்கையில் பல ஆண்டுகள் நடந்த போரின் நிலையும். எந்த பக்கம் நின்று இந்த மோதல் ஆரா யப்படுகிறது என்பதை பொருத்து யார் ‘சமாதானத்திற்கு எதிரான குற்றத்தைப்’ புரிந்தனர் என்பது முடிவாகும். அதனால் தான் இக்குற்றத்தைப் பொருத்த வரையில் தீர்ப்பாயம் குறிப்பானக் குற்றச்சாட்டுக்களை ஏற்கவில்லை.
இருந்தபோதும், கிடைத்த ஆதா ரங்கள் மற்றும் வாக்குமூலங்களின் அடிப் படையில் சர்வதேச சமூகத்தின் பொறுப்பை உணரும் அதே வேளை யில், தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்களை தடுக்க எவ்வித காத்திரமான முன்னெடுப்பு களையும் அது மேற் கொள்ளவில்லை என்பதையும் தொடர்ந்து போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங் களையும் அது புறந்தள்ளிவிட்டது என்பதையும் உணருகிறது.
போரின் இறுதி காலங்களில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு நீதி பெற்றுத் தரவேண்டிய தார்மீக பொறுப்பை நிறை வேற்றாது விட்ட அய்க்கிய நாடுகள் அவை யின் உறுப்பு நாடுகளுக்கு இத்தீர்ப்பாயம் அந்த பொறுப்பினை வலியுறுத்துகிறது. தொடர்ந்த வேண்டுகோள்களுக்குப் பிறகும், தமிழர்கள் அனுபவித்த மோச மான சூழல்களுக்குப் பிறகும், சில உறுப்பு நாடு களின் அழுத்தம் காரணமாக, அய்.நா மனித உரிமைகள் ஆணையமும், அய் நா பாதுகாப்பு ஆணையமும் நடந்த கொடுமைகளை விசாரிக்க ஒரு சுதந்திரமான ஆணை யத்தை அமைக்கத் தவறி விட்டன.
2002-இன் போர் நிறுத்த ஒப்பந் தத்தை அய்ரோப்பிய ஒன்றியம் வலு விழக்கச் செய்ததையும் இத்தீர்ப்பாயம் முன்னிறுத்துகிறது. ஒரு சமாதான முயற்சி முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதை யும் அதன் விளைவுகளையும் நன்கு அறிந்த நிலையிலும், அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் அழுத்தத்தின் காரணமாக, தமிழீழ விடுதலைப் புலிகளை உள்ளடக் கிய தமிழ்ப் போராட்டக் குழுவினை பயங்கரவாதிகள் இயக்கமென பட்டியலிட அய்ரோப்பிய ஒன்றியம் 2006-இல் முடிவெடுத்தது. இந்த முடிவானது, இலங்கை அரசு போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறித்து பாரிய இராணுவ நடவடிக்கைகளை மேற் கொள்ள அனுமதித்தது. அதன் விளைவாகவே மேற்குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விதமான மீறல்களும் நடை பெற்றன. அதோடு தமிழர்களை குறி வைத்து நடத்தப்பட்ட ஒரு போரில் இலங்கை அரசாங்கம் அதன் ஆயுதப் படைகள் ஆகியவற்றின் நடத்தைகளுக்கு ஒரு அரசியல் அங்கீகாரம் அளிக்கப்பட்ட தன் முழுப் பொறுப்பையும் ‘பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போரை’ நடத்தும் அமெரிக்கா தலைமையிலான நாடு களையே சாரும் என தீர்ப்பாயம் சுட்டிக் காட்டுகிறது.
அதோடு, இலங்கை அரசிற்கு ஆயுதங்கள் வழங்கியதற்காக பல நாடுகளுக்கு நேரடி பொறுப்பு இருப்பதையும் இத்தீர்ப்பாயம் சுட்டிக்காட்டுகிறது. இதில் சில ஆயுதங்கள் ‘சில மரபு ஆயுதங்கள் குறித்த ஒப்பந்தம்’ போன்ற பல ஒப் பந்தங்களினால் தடை செய்யப்பட்டுள்ளன. அதோடு இதில் சில நாடுகள், போர் நிறுத் தக் காலக்கட் டத்தில் இலங்கை இராணுவப் படையினருக்கு பயிற்சியும் அளித் திருக்கின்றன.
இலங்கை அரசுக்கு

நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் இலங்கை அரசுக்குக் கீழ்காணும் பரிந்துரைகளை செய்கிறது :
– 2002 போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்த பிறகு போரின் இறுதிக் கட்டங்களில் மோதலில் ஈடுபட்ட இருதரப்பிலும் புரிந்த மனித குலத்திற்கு எதிரான குற்றங்களையும் மற்றும் போர்க் குற்றங் களையும் விசாரிக்க உடனடியாக, சூழலின் அவசரத்தைக் கருத்தில் கொண்டு, சுதந்திரமான அதிகார முடைய ‘உண்மை மற்றும் நீதிக்கான ஆணையம்’ ஒன்றை அமைத்து, போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களுக்கு தகுந்த தண்டனை விதிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
– உடனடியாக அவசர நிலையை விலக்கிக் கொள்வதன் மூலமும், 1979-இன் பயங்கரவாத தடுப்புச் சட் டத்தை திரும்பப் பெற்றுக் கொள்வதன் மூலமும் தமிழ் மக்களின் அடிப்படை சுதந்திரத்தையும் அரசியல் உரிமைகளையும் மீட்டெடுக்க வேண்டும்.
– 12,000-க்கும் அதிகமான அரசி யல் கைதிகளின் பாதுகாப்பையும் கெளர வத்தையும் உறுதி செய்து, உலகளாவிய நடைமுறைகளின்படி அவர்களை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தி னர் சந்திக்கவும் சட்டப் பூர்வமாக தங்களை அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தவும் அனுமதிக்க வேண்டும்.
– உள்ளுர் மற்றும் பன்னாட்டு ஊடகவியலாளர்கள், மனித உரிமை காப் பாளர்கள் ஆகியோரின் பாதுகாப்பு மற் றும் சுதந்திரமாக செயல்படும் தன் மையை உறுதிப்படுத்துவதோடு அவர் களின் சட்டப் பூர்வமான மனித உரிமை களுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
– அனைத்து துணை இராணுவக் குழுக்களையும் கலைத்துவிட்டு, தமிழ்ப் பகுதிகளில் இராணுவப் படைகளின் இருப்பை குறைக்க வேண்டும்.
– வடகிழக்கின் நிருவாகம் மற்றும் மேலாண்மையில் தமிழர்களுக்கு செயல் படத்தக்க சட்டப்பூர்வமான பங்கெடுப் பினை வழங்கக் கூடிய அரசியல் அதி காரப் பங்கீட்டுத் தீர்வை நடைமுறைப் படுத்தி, சம குடியுரிமைக்கு அவர் களுக்கு இருக்கும் உரிமைகளை ஏற்றுக் கொண்டு, அனைத்து நிலைகளிலும் அவர்கள் பங்கெடுக்கவும் பிரதிநிதித்து வப்படுத்தவும் வாய்ப்பு வழங்கி, மே 2010-இல் நடைபெற உள்ள நாடாளு மன்றத் தேர்தல் சுதந்திர மாகவும், நியாயமாகவும், அமைதியாகவும் நடைபெற உறுதிப்படுத்த வேண்டும்.
– அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தை ஏற்படுத்தக் கூடிய ரோம் ஒப் பந்தத்தில் கையெழுத்திட்டு ஏற்றுக்கொள்ள வேண்டும்.
முகாம்களில் உள்ள தற்போதைய நிலைமைகள் மற்றும் உள்நாட்டில் இடம் பெயர்ந்தோரை பொருத்த அளவில் ‘நிரந்தர மக்கள் தீர்ப்பாயம்’ கீழ்காணுபவற்றை பரிந்துரைக்கிறது :
– அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம், மனித உரிமை காப்பாளர்கள் மற்றும் ஊடகங்கள் போன்ற மனித நேய அமைப்புகள் சுதந்திரமாகவும் தடையின்றி யும் முகாம்களுக்கு சென்றுவர அனுமதிக்க வேண்டும்.
– முகாம்களை இராணுவத்திட மிருந்து சிவில் நிருவாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்க ளின் முழு ஒத்துழைப்புடன் பன்னாட்டு நிறுவனங்களின் கண்காணிப்பில் சிவில் அதிகாரிகளின் நிருவாகத்தில் தமிழர்கள் அவர்களின் சொந்த வாழ்விடங்களில் மீள் குடியமர்த்தப்படுவதை உறுதி செய்யவேண்டும்.
– அய் நாவின் உள்நாட்டில் இடப் பெயர்விற்கான வழிகாட்டு நெறி முறைகள் போன்றவற்றில் கூறப்பட் டுள்ள தரத்தில் பாதுகாப்பாக திரும்பவும், திரும்புபவர்கள், புனர்வாழ்வு மற்றும் மறு கட்டமைப்பு செயல்களை சுதந்திரமான பன்னாட்டு கண்காணிப்பிற்கு அனுமதிக்கவும் வேண்டும்.
– பாதிப்புக் குறித்த மதிப்பீடு, மனித ஆய்வுகள் ஆகியவற்றை மேற் கொண்டு, தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்து சரியான மதிப்பீட்டிற்கு பின் அதற்கான இழப்பீட்டினை நிர்ணயிக்க ஒரு சரியான நடைமுறையை உருவாக்க வேண்டும்.
– பெண்கள், குழந்தைகள், பிரிந்து விட்ட குடும்பங்கள், அடிப்படை சேவை கள் சென்றடைதல், போருக்குப் பின் னான புனர்வாழ்வு, கல்வி மற்றும் உடல் நலன் மற்றும் அதிர்ச்சிக்குப் பின்னான மன அழுத்தம் மற்றும் மனப் பிறழ்வுக் கான சிகிச்சை உட்பட்ட உளவியல் நலன் ஆகிய வற்றை குறிப்பாக கவ னிக்க வேண்டும்.
உலக சமூகம், நிதியளிக்கும் அரசுகள் மற்றும் அய்க்கிய நாடுகள் அவை ஆகியவற்றிற்கு

மேற்கூறப்பட்டவர்கள் கீழ்காணு பவற்றை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என தீர்ப்பாயம் வேண்டுகிறது
• மோதலில் ஈடுபட்ட அனைத்துத் தரப்பினரும் புரிந்த மனித உரிமை மீறல்கள், மனித உரிமைச் சட்ட மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் குறித்து விசாரித்து அதற்குப் பொறுப்பாளர்களை அடையாளம் காண இலங்கைக்கென அய்நாவின் சிறப்பு அறிக்கையாளர் ஒருவரை நியமிக்க வேண்டும்.
• போர் நிறுத்த ஒப்பந்த சீர்குலைவுக்கும் அதனைத் தொடர்ந்த போர்க் குற்றங் கள் மற்றும் மனித குலத்திற்கு எதி ரானக் குற்றங்கள் ஆகியவற்றிற்கும் உலக சமூகம் எந்த அளவுக்குப் பொறுப்பானது என்பதையும், போர் நிறுத்தக் காலத்தில் இலங்கை அரசுக்கு அவை ஆயுதங்கள் வழங்கியமை குறித்தும் விசாரிக்க பொறுப்பான, புகழ் பெற்ற தனி நபர்களைக் கொண்ட ஒரு சுதந் திரமான குழுவை அமைப்ப தற்கு துணை நிற்க வேண்டும்.
• தமிழ் மக்களின் மனித உரிமைகளின் நிலை குறித்தும், தமிழர் புனர்வாழ்வு மற்றும் மறு குடியமர்த்தும் பணிகள் குறித்தும், அடிப்படை உரிமைகள், சுதந்திரம் மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகியவற்றை மீட்க மேற்கொள்ளப் படும் முயற்சிகள் குறித்தும் சுதந்திர மாக கண்காணிக்க அய் நா மனித உரி மைகள் ஆணையத்தின் செயல் அலு வலகம் ஒன்றை அமைக்க வேண்டும்.
• அமைதி மற்றும் போர் நிறுத்த நட வடிக்கைகளையும், கண்ணி வெடி அகற்றல், புனரமைப்பு, தமிழர்களின் விருப்பம் மற்றும் விருப்பத்திற்கேற்ற போருக்குப் பின்னான மறு கட்ட மைப்பு ஆகியவற்றிற்கு துணையாக நிதியளிக்கும் நிறுவனங்களின் நட வடிக்கைகளை ஒருங்கிணைக்கவும் பன்னாட்டு மற்றும் கூட்டு நடவடிக் கைப்படை ஒன்றை உருவாக்க வேண்டும்.
• தமிழ் மக்களின் நிலைத்த வாழ்விற் கும், அவர்களின் அடிப்படைத் தேவைகளுக்குமானவற்றை அளிக்க வும், சிங்களர்களுக்கும் தமிழர்களுக் கும் இடையே பண்பாட்டுப் பகிர்வு மற்றும் உரையாடல்களுக்கும் வழி வகுக்கக் கூடிய நம்பிக்கையூட்டும் நிகழ்வுகளுக்கு ஆதரவு அளிக்கவும் வேண்டும்.
• சுனாமி நிவாரணம் மற்றும் பேரவலத் திற்குப் பின்னான மறு கட்ட மைப்புக் காக வழங்கப்பட்ட பன் னாட்டு அவசர கால மற்றும் வளர்ச்சி நிதிகளின் இறு திப் பயன்பாடு மற்றும் சரியானபடியான மறுபகிர்வு குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
• 2010-இல் நடக்க இருக்கிற நாடாளு மன்றத் தேர்தலை கண்காணிக்க ஒரு சிறப்பு பன்னாட்டு தேர்தல் கண் காணிப்புக் குழுவினை நியமிக்க வேண்டும்.
• இலங்கை சிறைகளில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள 12,000 அரசியல் கைதிகள் நேர்மையான மற்றும் வெளிப்படையான விசார ணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்.
இறுதி குறிப்புகள்

தங்களுடைய வாழ்வை மிக ஆழமாகவும் நிரந்தரமாகவும் பாதித்து விட்ட உண்மைகளை வாக்குமூலங் களாக அளிக்க துணிச்சலுடன் முன் வந்த நேரடி சாட்சிகளின் அடிப்படை பங்களிப்பை குறிப்பாக அங்கீகரிக்காமல் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் தனது பணியை முடிக்க இயலாது. எண்ணற்ற அளவில் பாதிக்கப் பட்ட மக்களின் சரியான பிரதிநிதிகள் இவர்களே. அவர்களின் துன்பத்தை முழுமையாக விவரிக்கவே இயலாது. அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதும் அங்கீகரிப்பதுமே நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் இருப்பிற்கும் செயற் பாட்டிற்குமான காரணங்கள்.
தங்கள் நாட்டில் நடந்த கொடு மைகளை நேரடியாக கண்டவர்கள், தற்போதைய சூழலில், அவர்களது சுதந் திரம் மற்றும் உயிர் மீது நேரடியாகவோ அல்லது அவர்களது குடும்பத்தினர் மீதான தாக்குதல்கள் மூலமாகவோ அவர்களது உரிமைகள் மேலும் பறிக் கப்படலாம் என்பதை நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் நன்கு அறிந்திருக்கிறது.
எனவே எங்களிடம் வாக்கு மூலங்கள் அளித்தவர்களுக்கோ அல் லது அவர்களின் குடும்பத்தினருக்கோ ஏதே னும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு எங்கள் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரி களும், குற்றம் புரிந்தவர்களுமே முழுப் பொறுப்பு என நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் அறிவிக்கிறது. தீர்ப்பாயத்தின் உண்மை அறியும் முயற்சிக்கு துணிச்சலுடன் தங்கள் பங்களிப்பை நல்கிய சாட்சிகளின் பாது காப்புக் குறித்து சீரிய கவனம் செலுத்து வதை எங்கள் முக்கிய கடமையாக ஏற்கி றோம். அவர்களில் யாருக்கேனும் ஏதேனும் நேர்ந்தால், அதற்கு இலங்கை அரசே பொறுப்பென நாங்கள் உறுதிபட கூறுகிறோம்.
எங்கள் பணிக்கும் திட்டங்களுக் கும் பங்களிப்பை நல்கியதற்காக சாட்சி கள் துன்பப்படும் எந்த விளைவையும் கண்காணிக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்கவும் நேரடியான பணியாற்றவும் தயாராக இருக்கிறோம் என்றும் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் உறுதி கூறுகிறது
ந‌ன்றி ‍. save tamils

Advertisements

சல்வா ஜீடுமும் பழங்குடி இன மக்களும் 2


டாண்டிவாடா படுகொலையும், அரசுகளின் ஆட்களை மறைக்கும் வேலையும் .

டாண்டிவாடா மாவட்டம், சட்டீஷ்கர் மாநிலத்தில் உள்ள கோம்ப்பாடு என்ற கிராமத்தில் பதின்மூன்று பேரை இதுவரை காணவில்லை. இவர்கள் செய்தது ஒன்றும் தேசத் துரோகச் செயல் அல்ல சல்வாஜூடுமும், காவல்துறையும் சேர்ந்து இவர்கள் கண்முன்னே ஒன்பது பேரை கொன்றதை நேரில் பார்த்தவர்கள் என்பதை தவிர. இவர்களை அடுத்து வழக்கு விசாரிக்கும் நேரத்திற்க்குள் நீதிமன்றத்தில் கொண்டுவந்து நிறுத்த வேண்டும் என அரசிற்க்கு ஆணை இட்டது உச்ச நீதிமன்றம் .

இந்த பதிமூன்று பேர்களில் மிகவும் முக்கியமானவர் சோடி ஷாம்போ அரசின் அடக்குமுறைக்கு நேரடியாக ஆளானவர் என்பதே அந்த சிறப்பு தகுதி .ஆம் அவரது வலது காலில் காவல் துறை சுட்டதால் இப்பொழுது அதனால் தானோ என்னவோ இவரை மறைத்து வைப்பதில் அரசு அதிக கவனம் எடுத்துக் கொண்டது. அவரை முதல் முதலாக தெகல்கா காந்தியவாதி ஹிமான்சு குமாருடன் டெல்லிக்கு சிகிச்சைக்காக வந்த போது சந்தித்தோம். முதல் சந்திப்பு நடந்தது அக்டோபரில். அதன் பின்னர் அந்த பெண்ணை தேடும் பணியில் இறங்கிய தெகல்கா சென்ற மாதம் முழுவதும் ஈடுபட்டது. சோடி சாம்போ அரசு ஒடுக்குமுறைக்கும் மட்டும் ஒரு உதாரணமட்டுமல்ல , எந்த அளவிற்க்கு அரசு கீழ்த்தரமான நடவடிக்கைகளில் ஈடுபடும் என்பதற்கும் ஒரு உதாரனம் ஆகும்.

டாண்டிவாடா படுகொலைகள் உச்சநீதிமன்றத்தில் விசாரனைக்கு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு சோடி சாம்பவை சட்டீஷ்கர் மாநில காவல்துறை விசாரணை என்ற பெயரில் ஜனவரி மூன்றாம் திகடி கைது செய்தது. ஜனவரி நான்காம் திகதி தெகல்கா குழுவினர் அந்த பெண்ணை ஜக்த‌ல்புர் நகரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் வைத்திருந்த தகவலை சட்டீஷ்கர் மாநில காவல்துறை வெளிவிடவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது (மேலும் எந்த அரசிற்க்கு எதிராக அந்த பெண் வழக்கில் சாட்சியம் அளிக்கப் போகின்றாரோ அந்த மாநில காவல்துறையே அந்த பெண்ணை கைது செய்து புதுமை செய்கின்றது).தெகல்கா குழுவினர் அந்த பெண்ணை நெருங்கமுடியாதவாறு இரு காவலர்கள் அந்த பெண்ணை சுற்றி நின்றனர். மேலும் மூன்று பெண்கள் வந்து தெகல்கா குழுவினரை அந்த இடத்தை விட்டு அப்புறப்படுத்தி விட்டனர்.சோடியின் வாழ்வில் மேலும் மேலும் அரசு கயமைத் தனமான செயல்க‌ளைத் தொடர்ந்து நிகழ்த்தி வருகின்றது.

இந்த காரண‌த்தினால் தான் உச்சநீதிமன்றத்தில் அந்த பெண்ணை காண‌வில்லை என சட்டீஷ்கர் மாநில அரசு கூறியதை புறக்கணித்து சாட்சியங்கள் நீதிமன்றத்தை அணுகுவது ஒரு அரசின் கடமை என அந்த காரண‌த்தை புறக்கணித்து அடுத்த விசாரணையின் போது சோடி இங்கே இருக்க வேண்டு என உத்தரவிட்டது. இந்த உத்தரவு காந்தியவாதியான ஹிமாசுகுமாருக்கு ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. இப்பொழுது எங்களால் காவல்துறையின் கண்களில் பயத்தை காணமுடிகின்றது எனக் கூறினார்.

முந்தைய‌ நீதிமன்ற‌ உத்த‌ர‌வுக‌ளை புறக்க‌ணித்தைப் போல‌வே இந்த‌ பிப்ர‌வ‌ரி எட்டாம் திக‌தி உத்த‌ர‌வையும் அர‌சு புற‌க்க‌ணித்துவிட்ட‌து. தெக‌ல்கா ஜ‌ன‌வ‌ரியில் சென்று சோடியைப் பார்த்து விட்டு திரும்பிய‌ பின்ன‌ர் சோடியின் வ‌ழ‌க்க‌றிஞ‌ர் கோன்ச‌ல்வாஷ் சோடிக்கு மேல் சிகிச்சை அளிப்ப‌த‌ற்காக‌ உச்ச‌நீதிம‌ன்ற‌ உத்த‌ர‌வை கொண்டு வ‌ந்தார். அப்போழுது திடீர் திருப்ப‌மாக‌ சோடியை ஏற்க‌ன‌வே ம‌ருத்துவ‌னை வெளியேற்றிய‌து தெரிய‌ வ‌ந்த‌து. மேலும் அங்கிருந்து டெல்லிக்கு அழைத்துச் சென்று AIIMs ல் அந்த‌ பெண் சிகிச்சைக்காக‌ அனும‌திக்க‌ப்ப‌ட்டிருக்கின்றார் என்ப‌தே தெரிய‌வ‌ந்த‌து. தெக‌ல்கா குழுவின‌ரும், ம‌ற்ற‌ பிற‌ ஊட‌க‌விய‌லால‌ர்க‌ளும், ச‌மூக‌ போராளியான‌ அருந்த‌திராய் போன்றோறையும் அவ‌ர்க‌ள்(ம‌ருத்துவ‌ம‌ன‌ நிர்வாக‌ம்) பார்க்க‌ அனும‌திக்க‌வில்லை. மேலும் என‌க்கு காந்திய‌வாதி ஹிமான்சுகுமாரையும் வேறு யாரையும் தெரியாது என்றும் அவ‌ர்க‌ளை பார்க்க‌விருப்ப‌மில்லை என்றும் சோடி எழுதிய‌தாக‌ ஒரு க‌டித‌மும் காட்ட‌ப்ப‌ட்ட‌து. மீண்டும் உச்ச‌நீதிம‌ன்ற‌ம் ஜ‌ன‌வ‌ரி எட்டாம் திக‌தி இன்னொரு உத்த‌ர‌வையும் வெளியிட்ட‌து. “அர‌சு எந்த‌ வ‌கையிலும் குறுக்கீடுகளை ஏற்ப‌டுத்தக்கூடாது என‌வும், ஹீமான்சுகுமார், ம‌ற்றும் வ‌ழ‌க்க‌றிஞ‌ர் கோன்ச‌ல்வாசும் சோடியை ம‌ருத்துவ‌ம‌னையில் ச‌ந்திக்க‌லாம் என்றும் அவ்வாறு ச‌ந்திக்கும் போது காவ‌ல‌ர்க‌ள் உட‌னிருக்க‌த் தேவையில்லை என‌வும் கூறிய‌து”.

அர‌சு இன்ன‌மும் தான் ந‌க்சல்களைத் தான் கொன்றோம் என‌ப் பிடிவாத‌மாக‌ உள்ள‌து. ச‌ல்வாஜீடும் ந‌ட‌ந்த‌ உட‌னே அங்கிருந்து வேறு இட‌த்திற்க்கு சென்ற‌ ம‌க்க‌ளின் நேர்காண‌ல்க‌ளை எடுத்துள்ள‌ தெக‌ல்கா குழு அதை உச்ச‌நீதிம‌ன்ற‌த்திலும் கொடுத்துள்ள‌து.

ந‌ன்றி . தெக‌ல்கா வார‌ இத‌ழ்.

மான்சான்டோவின் முன்னாள் தெற்காசிய நிர்வாக தலைவரின் நேர்காணல்….


 

மான்சான்டோவின் முன்னாள் தெற்காசிய நிர்வாக தலைவரின் நேர்காணல்….

பி.டி.கத்திரியை எதிர்த்த எல்லா குரல்களில் மிகவும் முக்கியமான குரல் இவருடையது. இவரின் பெயர்.  டி.வி.ஜெகதீசன்.வயது எண்பத்து நான்கு. இருபத்தெட்டு வருட காலங்களாக மான்சாண்டோ நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார், அதிலும் கடைசி எட்டு வருடங்கள் மான்சாண்டோவின் தெற்காசிய பிராந்தியத்திற்கான நிர்வாக தலைமை இயக்குனராக பணிபுரிந்தார்.இவர் பணியிலிருந்து ஓய்வு பெற்று இருபது வருடங்கள் ஆகின்றன.தற்பொழுது பெங்களூரில் தங்கி வரும் டி.வி.ஜெகதீசனுடன் ஒரு நேர்காணல்.

சுற்றுச்சூழியல் அமைச்சர் ஜெயராம் ரமேஷின் பி.டி.கத்திரிகாயின் மீதான பொது மக்கள் கருத்துக்கேட்க்கும் நிகழ்வில் நீங்கள் இந்திய அரசின் நிர்வாகங்களையும் அத‌ன் ஒப்புத‌ல் வ‌ழ‌ங்கும் முறைக‌ளைப் ப‌ற்றியும் க‌ருத்து கூறியுள்ளீர்க‌ள், அதை நீங்க‌ள் இங்கே ச‌ற்று விள‌க்க‌மாக‌ கூற‌ முடியுமா? நீங்க‌ள் மான்சான்டோ இந்தியாவின் த‌லைவ‌ராக‌ இருந்த‌ பொழுது எந்த‌ பொருட்க‌ளுக்கு இந்தியாவில் ஒப்புத‌ல் அளிக்க‌ப்ப‌ட்ட‌து?

நான் ப‌ணிபுரியும் போது ப‌ல‌ க‌ளை எதிர்ப்பு விதைக‌ளை இந்தியாவில் கொண்டுவ‌ந்தோம். இத‌ற்கெல்லாம் நாங்க‌ள் அந்த‌ விதைப் ப‌ற்றிய‌ வேதியிய‌ல் த‌ர‌வுக‌ளை மைய‌ பூச்சிக்கொல்லிக‌ள் அமைப்பிற்க்கு த‌ர‌வேண்டும், அதை வைத்து தான் அவ‌ர்க‌ள் ஒப்புத‌ல் அளிப்பார்க‌ள். இந்தியாவில் உள்ள‌ இது போன்ற‌ எந்த‌வொரு அர‌சு அமைப்பிட‌மோ இது போன்ற‌ சோத‌னைக‌ளை மேற்கொள்வ‌த‌ற்கான‌ க‌ருவிக‌ளோ, நேர‌மோ இல்லை என்ப‌தால் அவ‌ர்க‌ள் நாங்க‌ள்(அந்த‌ந்த‌ நிர்வாக‌ம்) கொடுக்கும் த‌ர‌வுக‌ளை ம‌ட்டும் வைத்துக் கொண்டே அந்த‌ விதைக்கோ அல்ல‌து பூச்சிக்கொல்லிக்கோ ஒப்புத‌ல் அளிக்கின்ற‌ன‌ர். இந்த‌ கார‌ண‌த்தினால் எங்க‌ளைப் போன்ற‌ நிறுவ‌ன‌ங்க‌ள் தங்க‌ள‌து தாய‌ரிப்புக‌ள் ப‌ற்றிய‌ ந‌ல்ல‌தொரு சோத‌னை அறிக்கையையே கொடுக்கின்ற‌ன‌ர்.
பி.டி.க‌த்திரிகாய் போன்ற‌ பொருட்க‌ளை ஒரு நீண்ட‌ சோத‌னைக்கு உட்ப‌டுத்திய‌ பின்ன‌ரே அதை நாம் அனும‌திக்க‌ வேண்டும். இப்பொழுது பி.டி.க‌த்திரிகாயை கொண்டு வ‌ருவ‌த‌ற்கு எந்த‌வொரு அவ‌ச‌ர‌மும் இல்லை என்ப‌தே என் க‌ருத்து.

மான்சான்டோவின் நிர்வாக பண்பாடு எவ்வாறு இருக்கும்? நீங்க‌ள் உங்க‌ள் பொருட்க‌ளை சோத‌னை செய்வீர்க‌ளா?
ஆம், பூச்சிக்கொல்லிக‌ளைப் பொருத்த‌வ‌ரையில் நாங்க‌ள் சில‌ சோத‌னைக‌ளை எங்க‌ள் ஆய்வ‌க‌ங்க‌ளில் செய்தோம். ஆனால் சில‌ முறை நாங்க‌ள் எங்க‌ள் நிறுவ‌ன‌த்தின் மற்ற‌ நாட்டு ஆய்வ‌றிக்கைக‌ளை அப்படியே ஏற்றுக் கொண்டு அதை அர‌சிற்க்கு கொடுத்து ஒப்புத‌ல்க‌ளையும் பெற்றோம் ஏனென்றால் எங்க‌ள் ஆய்வ‌றிக்கைக‌ளை அவ‌ர்க‌ளால் முழுமையான‌ ப‌ரிசீலினைக்கு உட்ப‌டுத்த‌ முடியாது என‌த் தெரியும். 
அப்ப‌டியானால் நீங்க‌ள் த‌லைமை பொறுப்பு வ‌கித்த‌ நேரங்க‌ளில் சில ஆய்வ‌றிக்கைக‌ளில் ச‌ரியான‌வ‌ற்றை கொடுக்க‌வில்லை என்ப‌தை ஒப்புக்கொள்கின்றீர்க‌ளா?
என‌து பிராந்திய‌த்திற்க்குள் அவ்வாறு ந‌ட‌க்க‌வில்லை. ஆனால் எந்த‌ ஒரு நிர்வாக‌மும் தான் த‌யாரித்த‌ பொருளைப் ப‌ற்றிய த‌வ‌றான‌ அறிக்கையை கொடுக்காடு என்ப‌தை ம‌ட்டும் கூறுகிறேன்.

பி.டி.பருத்தி நீங்க‌ள் பொறுப்பு வ‌கித்த‌ நேர‌த்தில் உருவான‌து தானே? அந்த‌ பொருளில் ஏதாவ‌து உங்க‌ளுக்கு மாற்று க‌ருத்து உண்டா?
நான் அமெரிக்காவின் செயின்ட்.லூயிசில் ப‌ணியாற்றும் போது அங்கு உருவாக்க‌ப்ப‌ட்டது தான்‌ பி.டி.ப‌ருத்தி. ஆனால் இந்தியாவில் அது அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ போது நான் ப‌ணியில் இல்லை. அதனால் என‌க்கு அதைப்ப‌ற்றி முழுமையாக‌ தெரியாது.
சில‌ விவாசாயிக‌ள் இர‌ண்டு ம‌ட‌ங்கு அறுவ‌டை செய்தார்க‌ள், ம‌ற்ற‌வ‌ர்க‌ளின் அறுவ‌டை மிக‌வும் குறைந்துபோன‌தால் த‌ற்கொலை செய்து கொண்டார்க‌ள். அத‌ன் வ‌ர்த்த‌க‌ அறிமுக‌த்திற்க்கு பின்ன‌ர் அது தோல்வியை த‌ழுவிய‌து. குறிப்பாக‌ 2002 அறுவ‌டை மிக‌வும் குறைந்த‌து. அவ‌ர்க‌ள் கூறினார்க‌ள் நாங்க‌ள் த‌வ‌றான‌ பருத்தி விதையை தேர்வு எய்து விட்டோம் என‌.

பி.டி.ப‌ருத்தி விதைக‌ளை ஒவ்வொரு விதைப்பிற்க்கும் புதிய‌தாக‌ வாங்க‌ வேண்டும் என்று ஒரு க‌ருத்துள்ள‌தே?

ஆம். அவை ம‌ல‌ட்டு த‌ன்மையுள்ள ஈன்களை கொண்ட விதைக‌ள். இந்த‌ வகை விதைகளை ஒரு விதைப்பிற்க்கு ம‌ட்டுமே ப‌ய‌ன்ப‌டுத்த‌முடியும். பி.டி.ப‌ருத்தி விதைக‌ளை ஒவ்வொரு விதைப்பிற்கும் விவசாயிக‌ள் மான்சாண்டோவிட‌ம் வாங்கித்தான் ஆக‌ வேண்டும். அதுவும் முன்பைவிட‌ ச‌ற்று அதிக‌ விலையில்.

நீங்க‌ள் இதுபோன்ற‌ கேள்விக‌ளை உங்க‌ள் நிர்வாக‌த்திட‌ம் பேசிய‌து இல்லையா?
நான் ச‌க‌ ப‌ணியாள‌ர்க‌ள்ட‌ம் பேசும் போது அவ‌ர்க‌ள் என்னிட‌ம் ம‌ல‌ட்டுத் த‌ன்மை வாய்ந்த‌ ஈன் ப‌ற்றி கூறினார்க‌ள்.மான்சான்டோவின் பி.டி.பருத்தி விதைக‌ளை இப்பொழுது 63 நிறுவ‌ன‌ங்க‌ள் உற்ப‌த்தி செய்கின்ற‌ன‌. அவ‌ர்க‌ளிட‌ம் இருந்து மான்சாண்டோ காப்பு தொகையை பெற்றுக்கொள்கின்றது. 
மான்சாண்டோ பூச்சிக்கொல்லிக‌ளையும். பூச்சிக்கொல்லிக‌ளை த‌டுக்கும் ம‌ர‌ப‌ணு மாற்ற‌ப்பட்ட‌ விதைகளையும் உற்ப‌த்தி செய்கின்ற‌து, இது முர‌ண்பாடாக‌ உள்ள‌தே?
மான்சாண்டோ முத‌லில் பூச்சிக்கொல்லிக‌ளை அறிமுக‌ம் செய்த‌து ஆனால் அவை பூச்சிக‌ளுட‌ன் சேர்த்து சோயா பீனின் விதையையும் அழித்துவிட்ட‌து. அதனால் பூச்சிக்கொல்லிக‌ளுக்கு தாக்குபிடிக்கும் ம‌ர‌ப‌ணு மாற்ற‌ப்ப‌ட்ட‌ சோயா பீனின் விதையையும் உற்பத்தி செய்த‌து. முத‌லில் பூச்சிக்கொல்லி மூல‌ம் விதை அழித்து, பின்ன‌ர் பூச்சிக்கொல்லிக்கு தாக்குபிடிக்கும் விதைக‌ளை உருவாக்குவ‌தால் இர‌ட்டை வ‌சூல் கிடைக்கின்ற‌து.

அர‌சின் இது போன்ற‌ த‌வ‌றான‌ அனும‌தி அளிக்கும் முறையை த‌விர்த்து உங்க‌ளுக்கு பி.டி.க‌த்திரிகாயில் என்ன‌ முர‌ண்பாடு?
நிறைய‌ முர‌ண்கள் உள்ள‌ன‌. முத‌லாவ‌தாக‌ ந‌ம்மிட‌ம் உள்ள‌ ப‌ல‌வித‌மான‌ விதைகள் அழிந்துவிடும். இந்தியாவில் ஏற்க‌ன‌வே 2400 வ‌கை க‌த்திரி விதைக‌ள் உள்ள‌ன‌. க‌த்திரி ஒரு ம‌க‌ர‌ந்த‌வ‌கை விவ‌சாய‌ முரையைச் சார்ந்த‌து. நீங்க‌ள் பி.டி.க‌த்திரியை உங்க‌ள‌து நில‌த்தில் ப‌யிரிடும் போது அத‌ன் ம‌க‌ர‌ந்த‌ துக‌ள்க‌ள் காற்றின் மூல‌மாக்வோ. அல்ல‌து ப‌ற‌வையின‌, பூச்சியின‌ங்க‌ளின் மூல‌மாக‌வோ ம‌ற்றொரு நில‌த்தில் விதைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ விதைக‌ளையும் பாதித்து மாற்றும் த‌ன்மைகொண்ட‌து. இத‌ற்கு உதார‌ண‌மாக‌ க‌ன‌டாவில் ஒரு விவாசியிய்ன் மேல் மான்சாண்டோ வ‌ழக்கே போதுமான‌து. த‌ங்க‌ளின் அனும‌தி இல்லாம‌ல் க‌ன‌டாவில் ப‌ல‌ர் பி.டி.விதைக‌ளை ப‌ய‌ன்ப‌டுத்துகின்ற‌ன‌ர் என்பதே அந்த‌ வ‌ழ‌க்கு. இத‌ற்காக‌ நாம் காற்றையும் , பூச்சிய‌ன‌ங்க‌ளை குற்ற‌ம் சும‌த்த‌ முடியாது. அதே போல‌ இங்கும் ந‌ட‌க்க‌லாம்.

அப்ப‌டியானால் அர‌சிட‌ம் ச‌ரியான‌ சோத‌னை முறைக‌ளும், ஒப்புத‌ல் வ‌ழ‌ங்கும் முன் செய்ய‌ப்பட‌ வேண்டிய‌வ‌ற்றை ப‌ற்றிய‌ ச‌ரியான‌ முறை இல்லை என்கிறீர்க‌ளா?

ஆம், இது போன்ற‌ விதைக‌ளை ஒரு நீண்ட‌ கால‌ சோத‌ன‌க்குட்ப‌டுத்தி அத‌ன் முடிவுக‌ள் ச‌ரியாக‌ கிடைத்த‌ பின்ன‌ரே அனும‌தி வ‌ழ‌ங்க‌வேண்டும். ஏனெனில் இவையெல்லாம் ம‌ல‌ட்ட்த் த‌ன்மையுள்ள‌ ஈனைக் கொண்ட‌ விதைகள். அதே ம‌ல‌ட்டு த‌ன்மை அதை உண்ணும் ம‌னித‌னுக்கும் ஏற்ப‌டாது என்ப‌த‌ற்கு எந்த‌ உத்திர‌வாத‌மும் இல்லை.

உங்க‌ளைப் பொருத்த‌வ‌ரையில் பி.டி.க‌த்திரிக்கு ஏதேனும் தேவை உள்ள‌தா?
என‌க்கு பி.டி.க‌த்திரியின் அறிமுக‌மே ஐய‌த்தை எழுப்புகின்ற‌து. பிர‌த‌ம‌ருக்கு ஆலோச‌னை வ‌ழ‌ங்க‌க் கூடிய‌ அறிவு சார் குழுவில் மூன்று நிர‌ந்த‌ர நிறுவ‌ன‌ங்க‌ள் உள்ள‌ன‌. அவைக‌ளில் மான்சான்டோவும், ட‌வ் வேதியிய‌ல் பொருட்க‌ளை தயாரிக்கும் நிறுவ‌ன‌மும்(போபாலில் விப‌த்துக்கு கார‌ண‌மான‌ யூனிய‌ன் கார்பைடு நிறுவ‌ன‌த்தை வாங்கியுள்ளது ட‌வ்) உள்ள‌ன‌. இய‌ல்பாக‌வே அவ‌ர்க‌ள் தங்கள‌து பொருட்க‌ளை வெளியிடுவ‌த‌ற்கு அழுத்த‌தை கொடுப்பார்க‌ள். பி.டி.க‌த்திரி என்ப‌து வெறும் அறிமுக‌ம் ம‌ட்டுமே. இன்னும் பி.டி.அரிசி, கோதுமை, உருளைகிழ‌ங்கு போன்ற‌ எல்லாமே உள்ள‌ன‌. த‌ற்போதைய‌ கிலாரி கிளிண்ட‌னின் வ‌ருகை கூட‌ இந்தியாவின் விவ‌சாய‌த்தை அமெரிக்காவின் விருப்ப‌த் தெரிவாக‌ மாற்றுவ‌து என்ற‌ முக்கிய‌ கொள்கையை கொண்டதே( கிலாரிக்கு ம‌ர‌ப‌ணு மாற்ற‌ப்ப‌ட்ட‌ விதைக‌ள் ஏற்ப‌டுத்தும் பாதிப்பை ப‌ற்றி ஒன்றும் தெரியாது ,ஏனென்றால் அவ‌ருக்கு இதைப் ப‌ற்றி சொல்வ‌து கூட‌ மாண்சான்டோவில் வேலை பார்க்கும் அறிவிய‌லால‌ர்க‌ளே).

ம‌ர‌ப‌ணு மாற்ற‌ப்பட்ட‌ விதைகளின் மூல‌மாக‌வே த‌ற்போதைய‌ உண‌வுத் தேவையை ஈடுக‌ட்ட‌ முடியும் என‌க் கூறுகின்றார்க‌ளே?
இர‌ண்டு த‌லைமுறைக்கு முன் ப‌சுமைப்புர‌ட்சி கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ போது கூட‌ அவ‌ர்க‌ள் இதைத் தான் சொன்னார்கள். அப்பொழுது ப‌சுமை புர‌ட்சியை பார‌ட்டிய‌வ‌ர்கள் கூட‌ இன்று அத‌ன் தோல்வியை ஒப்புக்கொள்கின்ற‌ன‌ர்.

ஏன் நீங்க‌ள் த‌ற்பொழுது ம‌ட்டும் பேசுகின்றீர்க‌ள்?, முன்ன‌ரே பேசியிருக்க‌லாமே?
என‌க்கு இதுவ‌ரை அவ்வாறான‌ ஒரு வாய்ப்பு கிடைக்க‌வில்லை. இப்பொழுது அர‌சு பொதும‌க்க‌ளின் க‌ருத்தைக் கேட்ப‌தால் நானும் என‌து க‌ருத்தை வெளியிடுகின்றேன் .

ந‌ன்றி. தெக‌ல்கா வார‌ இத‌ழ்.

ஞானம் ?……


நிழலின் அருமை
உணர்ந்தேன் வெயிலில்…

உறவின் அருமை
உணர்ந்தேன் பிரிவில்…

இற‌ந்த‌ பின்னே
ஞான‌ம் வ‌ந்தால்?…….

சல்வா ஜீடுமும் பழங்குடி இன மக்களும்.


சல்வா ஜீடுமும் பழங்குடி இன மக்களும்.

“தெகல்கா வார இதழில் சென்ற வாரப் பதிப்பில் வந்த கட்டுரையை இங்கே மொழி பெயர்க்கின்றேன்.இது எனது முதலாவது மொழிபெயர்ப்பு, குறை இருப்பின் நண்பர்கள் கூறவும்”.

ச‌ல்வாஜுடும் என்றால் என்ன?

அர‌சாங்க‌த்தால் வ‌ள‌ர்க்க‌ப்ப‌ட்ட‌ ஒரு வெறி நாய் கும்பல். அந்த அரசாங்கத்திற்க்கு தேவையான பொழுது களத்தில் இறங்கி அரசாங்கத்திற்க்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை கடித்து குதுறுவது (நவீனமாக துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்தல்). இந்த‌ வெறி நாய் கும்பலுக்கு எதிராக எந்த வழக்குகளையும் அரசு பதிவு செய்யாது(ஏன்னா இது அரசினுடையது). அப்படி வளர்க்கப்பட்ட ஒரு வெறிநாய் கும்பலின் மூலம் நக்சலைட்டுகளை அழித்தொழித்தல் என்ற பெயரில் சட்டீஷ்கர் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்ட ஒரு திட்டத்தின் பெயர் “சல்வா ஜுடும்” ( இந்த பத்தியில் உள்ளது தெகல்கா வார இதழில் வந்ததல்ல. நண்பர்களின் புரிதலுக்காக “சல்வா ஜீடும்” பற்றி நான் எழுதியவையே இவை).

ச‌ல்வாஜூடுமினால் பாதிக்கப்ப‌ட்ட‌ ப‌ழ‌ங்குடி இன‌ ம‌க்க‌ளின் ப‌திவுக‌ள்.

எனது கிராமத்தில் ஒருவரையும் விட்டு வைக்கவில்லை சல்வா ஜுடும் ‍ சோடி.மேசைய்யா

மேசைய்யா பீஜ்ஜி என்ற கிராமத்தில் வாழ்ந்துவந்த 60 வயதான முதியவர்.சல்வாஜீடுமினால் இரண்டு நாட்களாக தனது குடும்பத்தினருடன் நடந்தே சட்டீஷ்கர் மாநிலத்திலிருந்து ஆந்திராவின் எல்லையோர மாவட்டதிற்க்கு வந்து சேர்ந்தார்.சல்வா ஜீடும் வெறி நாய் கும்பல் நான்கு பழங்குடி இனமக்களை கொன்றதை நேரில் கண்டவர். அவரின் மொழியில் ” நாங்கள் வசித்த கிராமம் தான் அந்த சுற்றுவட்டார பகுதியிலேயே சற்று பெரிய கிராமம். அங்கு பழங்குடி இன மக்களும், பழங்குடி அல்லாதவர்களும் ஒன்றாக வசித்து வந்தோம்.நான்கு மாதங்களுக்கு முன்பு ஒரு நள்ளிரவில் சல்வாஜீடும் கும்பல் எங்கள் கிராமத்தை தாக்கினார்கள். எனது கண் முன்னே நால்வரை அவர்கள் சுட்டுக் கொன்றனர். கிராமத்தில் உள்ள எல்லா குடிசைகளையும் எரித்தனர்.இறந்த மனிதர்களைத் தவிர அங்கு இருந்த மற்ற உயிரனங்களனைத்தையும் அவர்கள் கிராமத்தின் நடுப்பகுதியில் வைத்து தின்றனர்.கொன்றவர்களை விட்டு விட்டு மற்ற அனைத்து மக்களையும் அவர்கள் அருகிலுள்ள முகாமிற்க்கு அழைத்துச் சென்றார்கள். அவ்வாறு அழைத்துச் செல்லும் போதும் அவர்களை அடித்து துன்புறுத்தினார்கள். எனது குடிசை காட்டிற்க்கு வெகு அருகில் இருந்ததனால் நானும் எனது குடும்ப உறவுகளும் தப்ப முடிந்தது.

இது நடந்து ஒரு நாளுக்கு பிறகு நான் எனது பெய‌ரக்குழந்தையுடன் எனது கிராமத்திற்க்கு சென்று பார்த்தேன். அங்கே எனது வீடு இன்னும் எரிந்து கொண்டிருந்த‌து. வீட்டின் வெளியே உண‌வு ம‌ற்றும் தானிய‌ வ‌கைக‌ள் எல்லாம் த‌ரையில் சித‌றிக்கிட‌ந்த‌ன.அதைப் பார்த்த நான் அழ ஆரம்பிக்க என்னவென புரியாமல் எனது பெயரக் குழந்தையும் என்னுடன் சேர்ந்து அழத்தொடங்கியது.அங்கேயே சில‌ நேர‌ம் இருந்துவிட்டு பின் ச‌ல்வாஜூடும் ப‌டையின‌ர் திரும்பிவ‌ந்தால் என்ன‌ செய்வ‌து என‌த் தெரியாமல், என‌து குடும்ப‌ உற‌வுக‌ளுட‌ன் இர‌ண்டு நாட்க‌ள் ந‌ட‌ந்தே வ‌ந்து இப்போது இங்கு வாழ்கின்றோம்.

என‌து கிராம‌த்தில் எனக்கு சொந்த‌மாக‌ 20 குறுக்க‌ம் (ஏக்க‌ர்) நில‌ம் இருந்த‌து. அதில் நாங்க‌ள் 40 மூட்டைக‌ள் நெல்லும் ம‌ற்ற‌ பிற‌ தானிய‌ வகைக‌ளையும் ஒவ்வொரு அறுவ‌டையிலும் பெற்றோம்.இப்பொழுது எங்க‌ளுக்கு சொந்த‌மாக‌ ஒரு க‌ம்பிளித் துணி கூட‌ இல்லை. தின‌மும் 25 ரூபாய் கூலி வேலைக்கு நானும் எனது குடும்பத்தினருடன் செல்கின்றேன்.

நான் இனி எனது பிற‌ந்த‌ கிராமத்திற்க்குச் செல்ல‌ முடியாது ஏனெனில் இப்போது அங்கு சல்வாஜீடும் படையினர் தங்களது முகாமை அமைத்துவிட்டார்கள்.‌

அவ‌ர்க‌ள் கொன்ற‌து ந‌க்ச‌ல்க‌ளை அல்ல‌ மிதுவி முதி(கோம்ப்பாடு கிராம‌த்திலிருந்து வ‌ந்தவர்)

நாங்க‌ள் எங்கள் பொருட்க‌ளை எடுத்து கொண்டு புற‌ப்ப‌ட‌ ஆய‌த்த‌மான‌ போது எங்க‌ள் குழ‌ந்தைக‌ள் த‌ங்க‌ள‌து புத்த‌க‌ங்க‌ளையும் எடுத்துக் கொண்டுவ‌ர‌ மேண்டுமென‌ அட‌ம்பிடித்த‌ன.இப்பொழுதெல்லாம் எங்க‌ள் குழ‌ந்தைக‌ள் மற்ற‌வர்க‌ளைப் பார்த்தால் நட்பாக புன்னகைப்பதையும் நிறுத்தி விட்டார்க‌ள். பெண்க‌ளாகிய‌ நாங்க‌ள் ம‌ட்டும் பிற‌ பெண்க‌ளை பார்க்கும் பொழுது ந‌ட‌ந்த‌ தாக்குத‌லைப் ப‌ற்றிய‌ நினைவுக‌ளை பேசிக் கொள்வோம்.

அது ஒரு அதிகாலைப் பொழுது , நான் என‌து வீட்டிலிருந்து கொஞ்ச‌ தூர‌மே நடந்திருப்பேன். என‌து முக‌த்தின் முன்னே நவின இரக துப்பாக்கி(மெசின் க‌ன்) தாங்கிய‌ ஒருவ‌ன் எங்க‌ள் கிராம‌த்தில் வாழ்ந்த‌ ஒருவ‌ரைப் ப‌ற்றி என்னிட‌ம் விசாரித்தான். நான் என‌க்கு தெரியாது என‌க் கூறி விட்டு ஓட‌ ஆர‌ம்பித்தேன். அவ‌ன் என‌து சேலை இழுக்க‌ ஆர‌ம்பிக்க‌, சேலை அவ‌ன‌து கையிலேயே சென்று விட‌ நான் மிக‌வும் வேகமாக அங்கிருந்து ஓடினேன். முத‌ல் வேலையாக என‌து கிராம ‌ம‌க்க‌ளை எச்ச‌ரிக்கைப் ப‌டுத்த‌வும் , என‌து ம‌க‌னை காப்ப‌ற்ற‌வும் ஓடினேன் கத்திக் கொண்டே ஓடினேன். நான் எனது எட்டு வயது மகன் நாகேஷ்வரனை கூட்டிக் கொண்டு காட்டினூடே கத்திக் கொண்டே ஒடினேன். எனது அல‌றலைக் கேட்டவர்கள் த‌ங்க‌ளைக் காப்பாற்றிக் கொண்டார்க‌ள்.எனது அலறலை கேட்காத‌வ‌ர்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்டார்கள்.

அவ‌ர்க‌ள் எங்க‌ள‌து மக்களை சுட்டுக் கொன்றார்க‌ள் அல்ல‌து துக்கிலிட்டுக் கொன்றார்க‌ள். நான் எனது மாமா, அத்தை, மற்றும் ஒரு உறவினரை இந்த தாக்குதலில் இழந்துவிட்டேன். மேலுமென‌க்கு தெரிந்த‌ இருவ‌ரையும் அவ‌ர்க‌ள் கொன்று விட்ட‌ன‌ர். அவ‌ர்க‌ள் எங்க‌ள‌து வீட்டிலிருந்த‌ ப‌ண‌த்தையும், பொருட்க‌ளையும் கொல்லை அடித்து விட்டு. குடிசைக‌ளை கொளுத்தி விட்டார்க‌ள்.

என‌க்கு தெரியாது எங்க‌ளை தாக்கிய‌வ‌ர்க‌ள் காவ‌ல் துறையா, அல்ல‌து ச‌ல்வா ஜீடுமா என‌.

நாங்க‌ள் அங்கிருந்து கிள‌ம்பி ஒரு நாள் முழுவ‌தும் ந‌ட‌ந்தோம். எங்க‌ள‌து குழ‌ந்தைக‌ள் வ‌ழியில் அழ‌ ஆர‌ம்பித்து விட்ட‌ன‌. ஆனால் நாங்க‌ள் எங்கேயும் ஒரிரு நிமிட‌ங்க‌ளுகு மேலாக் நிற்க‌வில்லை.உண‌வு கூட‌ அன்று நாங்க‌ள் உண்ண‌ வில்லை. ஏனென்றால் சல்வாஜீடும் எங்க‌ளைப் பின் தொட‌ர்ந்து வ‌ந்து கொண்டிருந்தால் என‌ செய்வ‌தென்ற‌ உள்ளுற‌ ப‌ய‌ம்.

நாங்க‌ள் எங்க‌ள் உற‌வின‌ரின் கிராம‌த்தை நோக்கி ப‌ய‌ணித்தோம். கிராம‌த்தை அடைந்த பின்ன‌ர் தான் நாங்க‌ள் ஆந்திராவிலிருப்ப‌து எங்க‌ளுக்கு தெரிந்த‌து.நானும் எனது பத்து வயது மகளும் தினக்கூலிகளாக செல்கின்றோம். எனது கணவரும், எட்டு வயது மகனும் கிராமத்திலிருந்து நாங்கள் கொண்டு வந்த எருதை பராமரித்துக் கொண்டு உள்ளார்கள். இங்கு உணவுத் தட்டுபாடு அதிகம்.

எங்களுக்கு இருக்கும் மற்றுமொரு தெரிவு(வழி) சல்வா ஜூடும் நடத்தும் முகாம்களுக்கு சென்று வாழ்தல். எனக்கு நன்றாக தெரியும் அங்கே எங்களால் உயிரோடு வாழ இயலாதென்று. அதனால் அரை வயிறோடு நாங்கள் இங்கேயே வாழ்ந்து வருகின்றோம் வேறு வழியில்லை.

நான் இங்கு வ‌ந்த‌த‌ன் பின்பு என‌து கிராம‌த்தில் ஒன்ப‌து ந‌க்ச‌ல்க‌ளை கொன்றதாக‌ அர‌சு அறிவித்த‌து. என‌க்கு ந‌ன்றாக தெரியும் அவ‌ர்க‌ள் கொன்ற‌து ந‌க்ச‌ல்க‌ளை அல்ல‌. அவ‌ர்க‌ள் எங்க‌ள‌து கிராம‌த்திலேயே வாழ்ந்து வ‌ந்த‌வ‌ர்க‌ள். ஒன்றும் அறியாத அவ‌ர்க‌ளை ,அவ‌ர்க‌ள் தூங்கிக்கொண்டிருக்கும் போது கொன்றுவிட்டு இப்போது அவர்களை நக்சல் என்கின்றனர். உண்மையான நக்சல்களை பிடிக்க பயப்படும் அவர்கள்?
(இவரின் சார்பாக உச்சநீதிமன்றத்தில் அவர்கள் கொன்றது நக்சல்களை அல்ல என்று அரசை எதிர்த்து ஒரு மனு பதிவு செய்யப்பட்டுள்ளது)

நாங்க‌ள் ம‌ட்டும் தான் இங்கு சாகிறோம். சியாம‌ல் பொஜ‌ம்மா கோரா கிராம‌ம்.

இருநூறு மீட்ட‌ர் மொத்த சுற்ற‌ள‌வு கொண்ட‌ பாலி எத்திலினால் (பிளாஷ்டிக்) சுற்ற‌ப்ப‌ட்ட‌ ப‌ல‌ குடிசைக‌ளில் ஒன்றில் ஏழு பேர் வாழ்ந்தாக வேண்டும். அவ‌ர்க‌ள‌து முகத்தில் எந்த‌ வித‌ ச‌ல‌னுமில்லை. அவ‌ர்க‌ள் ஒருவருக்கொருவ‌ர் பேசிக்கொள்வார்களா என்ப‌தே ஐயம்(சந்தேகம்) தான். ஈரமான‌ துணிக‌ள் வெய்யிலில் காய்வ‌து போலே அவ‌ர்க‌ள் அங்கு வாழ்கிறார்க‌ள். இன்றோடு அவ‌ர்க‌ள் இந்த விசித்திரமான இடத்திற்க்கு வ‌ந்து எட்டு நாட்க‌ள் ஆகிவிட்ட‌து.இந்த இடத்திற்க்கும் அவர்களுக்கும் இருக்கும் ஒரே தொட‌ர்பு அவ‌ர்க‌ளின் தூர‌த்து உறவினர் ஒருவ‌ர் மூன்று வருடங்களுக்கு முன் இங்கு வ‌ந்து ஒரு குடிசை அமைத்துள்ளார்.

என‌து ப‌தினெட்டு வ‌ய‌து ம‌க‌ன் சியாம‌ல் ஆதிமையாவை ச‌ல்வா ஜீடும் குழுவின‌ரும், காவ‌ல்துறையும் சேர்ந்து ஒரு பொய்க் கார‌ண‌மிட்டு(fake encounter) சிங்கார‌ம் கிராம‌த்தில் ஜ‌ன‌வ‌ரி,8,2009 அன்று சுட்டுக் கொன்று விட்டார்க‌ள்.நான் அவ‌ன‌து ச‌ட‌ல‌த்தைப் பார்த்தேன். அவ‌ர்க‌ள் அவ‌ன‌து இரு க‌ண்க‌ளுக்கும் இடையில் சுட்டுள்ளன‌ர். மேலும் அவ‌ன‌து த‌லையை ஒரு கோடாரி கொண்டு பிழ‌ந்துள்ளார்க‌ள். என் நினைவில் என்றும் அழியாது அந்த‌ காட்சி. ஆதிமையா தான் என‌து இளைய‌ ம‌க‌ன்.

இர‌ண்டு மாத‌ங்க‌ளுக்குப் பின்ன‌ர் ச‌ல்வாஜீடும் குழுவின‌ர் வ‌ந்து மீத‌முள்ள‌வ‌ர்க‌ளையும் கொன்ற‌ன‌ர். என‌து இரு மூத்த‌ ம‌க‌னும் இங்கே ப‌ய‌த்திலேயே வாழ‌ பிடிக்காம‌ல், ஆந்திராவின் எல்லையோர பகுதிகளுக்கு சென்று ஒரு நிலையான‌ வாழ்வு வாழ கிராம‌த்தில் இருந்து கிள‌ம்பினார்க‌ள். என‌க்கு அவ‌ர்க‌ளுட‌ன் போக‌ பிடிக்க‌வில்லை.நான் என‌து பிற‌ந்த‌ கிராம‌த்திலே தான் சாவேன். நானும் அவ‌ர்க‌ளுட‌ன் கிள‌ம்பி விட்டால் அப்புற‌ம் யாருக்கும் என‌து இளைய‌ ம‌க‌ன் எங்கே இற‌ந்தான் என்ப‌தே தெரியாம‌ல் போய்விடும்.

இர‌ண்டு வார‌ங்க‌ளுக்குப் பின்ன‌ர் ச‌ல்வாஜூடும் குழுவின‌ர் மீண்டும் எங்க‌ள் கிராம‌த்திற்க்கு வந்தார்க‌ள். நானும் என‌து க‌ண‌வ‌ணும் காட்டினுள்ளே சென்று ஒழிந்துகொண்டோம். இதைக் கேள்விப்ப‌ட்ட‌ என‌து மூத்த‌ ம‌க‌ன்க‌ள் இருவ‌ரும் திரும்பி வ‌ந்து எங்க‌ளை அழைத்டுச் சென்றுவிட்டான். ஒரு நால் முழுவ‌தும் ந‌ட‌ந்தோம். என‌து ம‌க‌ன் ஆதிமையா திரும்ப‌ வ‌ருவான் என்றால் என்னால் ஒரு வ‌ருட‌ம் கூட‌ ந‌ட‌க்க‌ முடியும், ஆனால் அது தான் ந‌ட‌வாதே.

இங்கே உண‌வும் இல்லை. எங்க‌ளுக்கு விவசாய‌ம் செய்ய‌ நில‌மும் இல்லை. என்னை பொருத்த‌வ‌ரை இது ஒரு வேற்றுகிர‌க‌ம் ஏனென்றால் என‌து முன்னோர் யாரும் இங்கு புதைக்க‌ப்ப‌ட‌வில்லை. நீங்க‌ள் ஒரு வருட‌த்திற்க்கு பின் வ‌ந்து கேட்டால் கூட‌ நான் இதைத் தான் சொல்வேன் உங்களிட‌ம் மீண்டும்.இப்பொழுது நாங்க‌ள் அனைவ‌ரும் ஒரு க‌வ‌ள‌ம் அரிசியில் வாழ்கின்றோம்.

ந‌ன்றி. தெக‌ல்கா வார‌ இத‌ழ்.

Advertisements
%d bloggers like this: