சல்வா ஜீடுமும் பழங்குடி இன மக்களும்.


சல்வா ஜீடுமும் பழங்குடி இன மக்களும்.

“தெகல்கா வார இதழில் சென்ற வாரப் பதிப்பில் வந்த கட்டுரையை இங்கே மொழி பெயர்க்கின்றேன்.இது எனது முதலாவது மொழிபெயர்ப்பு, குறை இருப்பின் நண்பர்கள் கூறவும்”.

ச‌ல்வாஜுடும் என்றால் என்ன?

அர‌சாங்க‌த்தால் வ‌ள‌ர்க்க‌ப்ப‌ட்ட‌ ஒரு வெறி நாய் கும்பல். அந்த அரசாங்கத்திற்க்கு தேவையான பொழுது களத்தில் இறங்கி அரசாங்கத்திற்க்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை கடித்து குதுறுவது (நவீனமாக துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்தல்). இந்த‌ வெறி நாய் கும்பலுக்கு எதிராக எந்த வழக்குகளையும் அரசு பதிவு செய்யாது(ஏன்னா இது அரசினுடையது). அப்படி வளர்க்கப்பட்ட ஒரு வெறிநாய் கும்பலின் மூலம் நக்சலைட்டுகளை அழித்தொழித்தல் என்ற பெயரில் சட்டீஷ்கர் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்ட ஒரு திட்டத்தின் பெயர் “சல்வா ஜுடும்” ( இந்த பத்தியில் உள்ளது தெகல்கா வார இதழில் வந்ததல்ல. நண்பர்களின் புரிதலுக்காக “சல்வா ஜீடும்” பற்றி நான் எழுதியவையே இவை).

ச‌ல்வாஜூடுமினால் பாதிக்கப்ப‌ட்ட‌ ப‌ழ‌ங்குடி இன‌ ம‌க்க‌ளின் ப‌திவுக‌ள்.

எனது கிராமத்தில் ஒருவரையும் விட்டு வைக்கவில்லை சல்வா ஜுடும் ‍ சோடி.மேசைய்யா

மேசைய்யா பீஜ்ஜி என்ற கிராமத்தில் வாழ்ந்துவந்த 60 வயதான முதியவர்.சல்வாஜீடுமினால் இரண்டு நாட்களாக தனது குடும்பத்தினருடன் நடந்தே சட்டீஷ்கர் மாநிலத்திலிருந்து ஆந்திராவின் எல்லையோர மாவட்டதிற்க்கு வந்து சேர்ந்தார்.சல்வா ஜீடும் வெறி நாய் கும்பல் நான்கு பழங்குடி இனமக்களை கொன்றதை நேரில் கண்டவர். அவரின் மொழியில் ” நாங்கள் வசித்த கிராமம் தான் அந்த சுற்றுவட்டார பகுதியிலேயே சற்று பெரிய கிராமம். அங்கு பழங்குடி இன மக்களும், பழங்குடி அல்லாதவர்களும் ஒன்றாக வசித்து வந்தோம்.நான்கு மாதங்களுக்கு முன்பு ஒரு நள்ளிரவில் சல்வாஜீடும் கும்பல் எங்கள் கிராமத்தை தாக்கினார்கள். எனது கண் முன்னே நால்வரை அவர்கள் சுட்டுக் கொன்றனர். கிராமத்தில் உள்ள எல்லா குடிசைகளையும் எரித்தனர்.இறந்த மனிதர்களைத் தவிர அங்கு இருந்த மற்ற உயிரனங்களனைத்தையும் அவர்கள் கிராமத்தின் நடுப்பகுதியில் வைத்து தின்றனர்.கொன்றவர்களை விட்டு விட்டு மற்ற அனைத்து மக்களையும் அவர்கள் அருகிலுள்ள முகாமிற்க்கு அழைத்துச் சென்றார்கள். அவ்வாறு அழைத்துச் செல்லும் போதும் அவர்களை அடித்து துன்புறுத்தினார்கள். எனது குடிசை காட்டிற்க்கு வெகு அருகில் இருந்ததனால் நானும் எனது குடும்ப உறவுகளும் தப்ப முடிந்தது.

இது நடந்து ஒரு நாளுக்கு பிறகு நான் எனது பெய‌ரக்குழந்தையுடன் எனது கிராமத்திற்க்கு சென்று பார்த்தேன். அங்கே எனது வீடு இன்னும் எரிந்து கொண்டிருந்த‌து. வீட்டின் வெளியே உண‌வு ம‌ற்றும் தானிய‌ வ‌கைக‌ள் எல்லாம் த‌ரையில் சித‌றிக்கிட‌ந்த‌ன.அதைப் பார்த்த நான் அழ ஆரம்பிக்க என்னவென புரியாமல் எனது பெயரக் குழந்தையும் என்னுடன் சேர்ந்து அழத்தொடங்கியது.அங்கேயே சில‌ நேர‌ம் இருந்துவிட்டு பின் ச‌ல்வாஜூடும் ப‌டையின‌ர் திரும்பிவ‌ந்தால் என்ன‌ செய்வ‌து என‌த் தெரியாமல், என‌து குடும்ப‌ உற‌வுக‌ளுட‌ன் இர‌ண்டு நாட்க‌ள் ந‌ட‌ந்தே வ‌ந்து இப்போது இங்கு வாழ்கின்றோம்.

என‌து கிராம‌த்தில் எனக்கு சொந்த‌மாக‌ 20 குறுக்க‌ம் (ஏக்க‌ர்) நில‌ம் இருந்த‌து. அதில் நாங்க‌ள் 40 மூட்டைக‌ள் நெல்லும் ம‌ற்ற‌ பிற‌ தானிய‌ வகைக‌ளையும் ஒவ்வொரு அறுவ‌டையிலும் பெற்றோம்.இப்பொழுது எங்க‌ளுக்கு சொந்த‌மாக‌ ஒரு க‌ம்பிளித் துணி கூட‌ இல்லை. தின‌மும் 25 ரூபாய் கூலி வேலைக்கு நானும் எனது குடும்பத்தினருடன் செல்கின்றேன்.

நான் இனி எனது பிற‌ந்த‌ கிராமத்திற்க்குச் செல்ல‌ முடியாது ஏனெனில் இப்போது அங்கு சல்வாஜீடும் படையினர் தங்களது முகாமை அமைத்துவிட்டார்கள்.‌

அவ‌ர்க‌ள் கொன்ற‌து ந‌க்ச‌ல்க‌ளை அல்ல‌ மிதுவி முதி(கோம்ப்பாடு கிராம‌த்திலிருந்து வ‌ந்தவர்)

நாங்க‌ள் எங்கள் பொருட்க‌ளை எடுத்து கொண்டு புற‌ப்ப‌ட‌ ஆய‌த்த‌மான‌ போது எங்க‌ள் குழ‌ந்தைக‌ள் த‌ங்க‌ள‌து புத்த‌க‌ங்க‌ளையும் எடுத்துக் கொண்டுவ‌ர‌ மேண்டுமென‌ அட‌ம்பிடித்த‌ன.இப்பொழுதெல்லாம் எங்க‌ள் குழ‌ந்தைக‌ள் மற்ற‌வர்க‌ளைப் பார்த்தால் நட்பாக புன்னகைப்பதையும் நிறுத்தி விட்டார்க‌ள். பெண்க‌ளாகிய‌ நாங்க‌ள் ம‌ட்டும் பிற‌ பெண்க‌ளை பார்க்கும் பொழுது ந‌ட‌ந்த‌ தாக்குத‌லைப் ப‌ற்றிய‌ நினைவுக‌ளை பேசிக் கொள்வோம்.

அது ஒரு அதிகாலைப் பொழுது , நான் என‌து வீட்டிலிருந்து கொஞ்ச‌ தூர‌மே நடந்திருப்பேன். என‌து முக‌த்தின் முன்னே நவின இரக துப்பாக்கி(மெசின் க‌ன்) தாங்கிய‌ ஒருவ‌ன் எங்க‌ள் கிராம‌த்தில் வாழ்ந்த‌ ஒருவ‌ரைப் ப‌ற்றி என்னிட‌ம் விசாரித்தான். நான் என‌க்கு தெரியாது என‌க் கூறி விட்டு ஓட‌ ஆர‌ம்பித்தேன். அவ‌ன் என‌து சேலை இழுக்க‌ ஆர‌ம்பிக்க‌, சேலை அவ‌ன‌து கையிலேயே சென்று விட‌ நான் மிக‌வும் வேகமாக அங்கிருந்து ஓடினேன். முத‌ல் வேலையாக என‌து கிராம ‌ம‌க்க‌ளை எச்ச‌ரிக்கைப் ப‌டுத்த‌வும் , என‌து ம‌க‌னை காப்ப‌ற்ற‌வும் ஓடினேன் கத்திக் கொண்டே ஓடினேன். நான் எனது எட்டு வயது மகன் நாகேஷ்வரனை கூட்டிக் கொண்டு காட்டினூடே கத்திக் கொண்டே ஒடினேன். எனது அல‌றலைக் கேட்டவர்கள் த‌ங்க‌ளைக் காப்பாற்றிக் கொண்டார்க‌ள்.எனது அலறலை கேட்காத‌வ‌ர்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்டார்கள்.

அவ‌ர்க‌ள் எங்க‌ள‌து மக்களை சுட்டுக் கொன்றார்க‌ள் அல்ல‌து துக்கிலிட்டுக் கொன்றார்க‌ள். நான் எனது மாமா, அத்தை, மற்றும் ஒரு உறவினரை இந்த தாக்குதலில் இழந்துவிட்டேன். மேலுமென‌க்கு தெரிந்த‌ இருவ‌ரையும் அவ‌ர்க‌ள் கொன்று விட்ட‌ன‌ர். அவ‌ர்க‌ள் எங்க‌ள‌து வீட்டிலிருந்த‌ ப‌ண‌த்தையும், பொருட்க‌ளையும் கொல்லை அடித்து விட்டு. குடிசைக‌ளை கொளுத்தி விட்டார்க‌ள்.

என‌க்கு தெரியாது எங்க‌ளை தாக்கிய‌வ‌ர்க‌ள் காவ‌ல் துறையா, அல்ல‌து ச‌ல்வா ஜீடுமா என‌.

நாங்க‌ள் அங்கிருந்து கிள‌ம்பி ஒரு நாள் முழுவ‌தும் ந‌ட‌ந்தோம். எங்க‌ள‌து குழ‌ந்தைக‌ள் வ‌ழியில் அழ‌ ஆர‌ம்பித்து விட்ட‌ன‌. ஆனால் நாங்க‌ள் எங்கேயும் ஒரிரு நிமிட‌ங்க‌ளுகு மேலாக் நிற்க‌வில்லை.உண‌வு கூட‌ அன்று நாங்க‌ள் உண்ண‌ வில்லை. ஏனென்றால் சல்வாஜீடும் எங்க‌ளைப் பின் தொட‌ர்ந்து வ‌ந்து கொண்டிருந்தால் என‌ செய்வ‌தென்ற‌ உள்ளுற‌ ப‌ய‌ம்.

நாங்க‌ள் எங்க‌ள் உற‌வின‌ரின் கிராம‌த்தை நோக்கி ப‌ய‌ணித்தோம். கிராம‌த்தை அடைந்த பின்ன‌ர் தான் நாங்க‌ள் ஆந்திராவிலிருப்ப‌து எங்க‌ளுக்கு தெரிந்த‌து.நானும் எனது பத்து வயது மகளும் தினக்கூலிகளாக செல்கின்றோம். எனது கணவரும், எட்டு வயது மகனும் கிராமத்திலிருந்து நாங்கள் கொண்டு வந்த எருதை பராமரித்துக் கொண்டு உள்ளார்கள். இங்கு உணவுத் தட்டுபாடு அதிகம்.

எங்களுக்கு இருக்கும் மற்றுமொரு தெரிவு(வழி) சல்வா ஜூடும் நடத்தும் முகாம்களுக்கு சென்று வாழ்தல். எனக்கு நன்றாக தெரியும் அங்கே எங்களால் உயிரோடு வாழ இயலாதென்று. அதனால் அரை வயிறோடு நாங்கள் இங்கேயே வாழ்ந்து வருகின்றோம் வேறு வழியில்லை.

நான் இங்கு வ‌ந்த‌த‌ன் பின்பு என‌து கிராம‌த்தில் ஒன்ப‌து ந‌க்ச‌ல்க‌ளை கொன்றதாக‌ அர‌சு அறிவித்த‌து. என‌க்கு ந‌ன்றாக தெரியும் அவ‌ர்க‌ள் கொன்ற‌து ந‌க்ச‌ல்க‌ளை அல்ல‌. அவ‌ர்க‌ள் எங்க‌ள‌து கிராம‌த்திலேயே வாழ்ந்து வ‌ந்த‌வ‌ர்க‌ள். ஒன்றும் அறியாத அவ‌ர்க‌ளை ,அவ‌ர்க‌ள் தூங்கிக்கொண்டிருக்கும் போது கொன்றுவிட்டு இப்போது அவர்களை நக்சல் என்கின்றனர். உண்மையான நக்சல்களை பிடிக்க பயப்படும் அவர்கள்?
(இவரின் சார்பாக உச்சநீதிமன்றத்தில் அவர்கள் கொன்றது நக்சல்களை அல்ல என்று அரசை எதிர்த்து ஒரு மனு பதிவு செய்யப்பட்டுள்ளது)

நாங்க‌ள் ம‌ட்டும் தான் இங்கு சாகிறோம். சியாம‌ல் பொஜ‌ம்மா கோரா கிராம‌ம்.

இருநூறு மீட்ட‌ர் மொத்த சுற்ற‌ள‌வு கொண்ட‌ பாலி எத்திலினால் (பிளாஷ்டிக்) சுற்ற‌ப்ப‌ட்ட‌ ப‌ல‌ குடிசைக‌ளில் ஒன்றில் ஏழு பேர் வாழ்ந்தாக வேண்டும். அவ‌ர்க‌ள‌து முகத்தில் எந்த‌ வித‌ ச‌ல‌னுமில்லை. அவ‌ர்க‌ள் ஒருவருக்கொருவ‌ர் பேசிக்கொள்வார்களா என்ப‌தே ஐயம்(சந்தேகம்) தான். ஈரமான‌ துணிக‌ள் வெய்யிலில் காய்வ‌து போலே அவ‌ர்க‌ள் அங்கு வாழ்கிறார்க‌ள். இன்றோடு அவ‌ர்க‌ள் இந்த விசித்திரமான இடத்திற்க்கு வ‌ந்து எட்டு நாட்க‌ள் ஆகிவிட்ட‌து.இந்த இடத்திற்க்கும் அவர்களுக்கும் இருக்கும் ஒரே தொட‌ர்பு அவ‌ர்க‌ளின் தூர‌த்து உறவினர் ஒருவ‌ர் மூன்று வருடங்களுக்கு முன் இங்கு வ‌ந்து ஒரு குடிசை அமைத்துள்ளார்.

என‌து ப‌தினெட்டு வ‌ய‌து ம‌க‌ன் சியாம‌ல் ஆதிமையாவை ச‌ல்வா ஜீடும் குழுவின‌ரும், காவ‌ல்துறையும் சேர்ந்து ஒரு பொய்க் கார‌ண‌மிட்டு(fake encounter) சிங்கார‌ம் கிராம‌த்தில் ஜ‌ன‌வ‌ரி,8,2009 அன்று சுட்டுக் கொன்று விட்டார்க‌ள்.நான் அவ‌ன‌து ச‌ட‌ல‌த்தைப் பார்த்தேன். அவ‌ர்க‌ள் அவ‌ன‌து இரு க‌ண்க‌ளுக்கும் இடையில் சுட்டுள்ளன‌ர். மேலும் அவ‌ன‌து த‌லையை ஒரு கோடாரி கொண்டு பிழ‌ந்துள்ளார்க‌ள். என் நினைவில் என்றும் அழியாது அந்த‌ காட்சி. ஆதிமையா தான் என‌து இளைய‌ ம‌க‌ன்.

இர‌ண்டு மாத‌ங்க‌ளுக்குப் பின்ன‌ர் ச‌ல்வாஜீடும் குழுவின‌ர் வ‌ந்து மீத‌முள்ள‌வ‌ர்க‌ளையும் கொன்ற‌ன‌ர். என‌து இரு மூத்த‌ ம‌க‌னும் இங்கே ப‌ய‌த்திலேயே வாழ‌ பிடிக்காம‌ல், ஆந்திராவின் எல்லையோர பகுதிகளுக்கு சென்று ஒரு நிலையான‌ வாழ்வு வாழ கிராம‌த்தில் இருந்து கிள‌ம்பினார்க‌ள். என‌க்கு அவ‌ர்க‌ளுட‌ன் போக‌ பிடிக்க‌வில்லை.நான் என‌து பிற‌ந்த‌ கிராம‌த்திலே தான் சாவேன். நானும் அவ‌ர்க‌ளுட‌ன் கிள‌ம்பி விட்டால் அப்புற‌ம் யாருக்கும் என‌து இளைய‌ ம‌க‌ன் எங்கே இற‌ந்தான் என்ப‌தே தெரியாம‌ல் போய்விடும்.

இர‌ண்டு வார‌ங்க‌ளுக்குப் பின்ன‌ர் ச‌ல்வாஜூடும் குழுவின‌ர் மீண்டும் எங்க‌ள் கிராம‌த்திற்க்கு வந்தார்க‌ள். நானும் என‌து க‌ண‌வ‌ணும் காட்டினுள்ளே சென்று ஒழிந்துகொண்டோம். இதைக் கேள்விப்ப‌ட்ட‌ என‌து மூத்த‌ ம‌க‌ன்க‌ள் இருவ‌ரும் திரும்பி வ‌ந்து எங்க‌ளை அழைத்டுச் சென்றுவிட்டான். ஒரு நால் முழுவ‌தும் ந‌ட‌ந்தோம். என‌து ம‌க‌ன் ஆதிமையா திரும்ப‌ வ‌ருவான் என்றால் என்னால் ஒரு வ‌ருட‌ம் கூட‌ ந‌ட‌க்க‌ முடியும், ஆனால் அது தான் ந‌ட‌வாதே.

இங்கே உண‌வும் இல்லை. எங்க‌ளுக்கு விவசாய‌ம் செய்ய‌ நில‌மும் இல்லை. என்னை பொருத்த‌வ‌ரை இது ஒரு வேற்றுகிர‌க‌ம் ஏனென்றால் என‌து முன்னோர் யாரும் இங்கு புதைக்க‌ப்ப‌ட‌வில்லை. நீங்க‌ள் ஒரு வருட‌த்திற்க்கு பின் வ‌ந்து கேட்டால் கூட‌ நான் இதைத் தான் சொல்வேன் உங்களிட‌ம் மீண்டும்.இப்பொழுது நாங்க‌ள் அனைவ‌ரும் ஒரு க‌வ‌ள‌ம் அரிசியில் வாழ்கின்றோம்.

ந‌ன்றி. தெக‌ல்கா வார‌ இத‌ழ்.

Advertisements
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Advertisements
%d bloggers like this: