மான்சான்டோவின் முன்னாள் தெற்காசிய நிர்வாக தலைவரின் நேர்காணல்….


 

மான்சான்டோவின் முன்னாள் தெற்காசிய நிர்வாக தலைவரின் நேர்காணல்….

பி.டி.கத்திரியை எதிர்த்த எல்லா குரல்களில் மிகவும் முக்கியமான குரல் இவருடையது. இவரின் பெயர்.  டி.வி.ஜெகதீசன்.வயது எண்பத்து நான்கு. இருபத்தெட்டு வருட காலங்களாக மான்சாண்டோ நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார், அதிலும் கடைசி எட்டு வருடங்கள் மான்சாண்டோவின் தெற்காசிய பிராந்தியத்திற்கான நிர்வாக தலைமை இயக்குனராக பணிபுரிந்தார்.இவர் பணியிலிருந்து ஓய்வு பெற்று இருபது வருடங்கள் ஆகின்றன.தற்பொழுது பெங்களூரில் தங்கி வரும் டி.வி.ஜெகதீசனுடன் ஒரு நேர்காணல்.

சுற்றுச்சூழியல் அமைச்சர் ஜெயராம் ரமேஷின் பி.டி.கத்திரிகாயின் மீதான பொது மக்கள் கருத்துக்கேட்க்கும் நிகழ்வில் நீங்கள் இந்திய அரசின் நிர்வாகங்களையும் அத‌ன் ஒப்புத‌ல் வ‌ழ‌ங்கும் முறைக‌ளைப் ப‌ற்றியும் க‌ருத்து கூறியுள்ளீர்க‌ள், அதை நீங்க‌ள் இங்கே ச‌ற்று விள‌க்க‌மாக‌ கூற‌ முடியுமா? நீங்க‌ள் மான்சான்டோ இந்தியாவின் த‌லைவ‌ராக‌ இருந்த‌ பொழுது எந்த‌ பொருட்க‌ளுக்கு இந்தியாவில் ஒப்புத‌ல் அளிக்க‌ப்ப‌ட்ட‌து?

நான் ப‌ணிபுரியும் போது ப‌ல‌ க‌ளை எதிர்ப்பு விதைக‌ளை இந்தியாவில் கொண்டுவ‌ந்தோம். இத‌ற்கெல்லாம் நாங்க‌ள் அந்த‌ விதைப் ப‌ற்றிய‌ வேதியிய‌ல் த‌ர‌வுக‌ளை மைய‌ பூச்சிக்கொல்லிக‌ள் அமைப்பிற்க்கு த‌ர‌வேண்டும், அதை வைத்து தான் அவ‌ர்க‌ள் ஒப்புத‌ல் அளிப்பார்க‌ள். இந்தியாவில் உள்ள‌ இது போன்ற‌ எந்த‌வொரு அர‌சு அமைப்பிட‌மோ இது போன்ற‌ சோத‌னைக‌ளை மேற்கொள்வ‌த‌ற்கான‌ க‌ருவிக‌ளோ, நேர‌மோ இல்லை என்ப‌தால் அவ‌ர்க‌ள் நாங்க‌ள்(அந்த‌ந்த‌ நிர்வாக‌ம்) கொடுக்கும் த‌ர‌வுக‌ளை ம‌ட்டும் வைத்துக் கொண்டே அந்த‌ விதைக்கோ அல்ல‌து பூச்சிக்கொல்லிக்கோ ஒப்புத‌ல் அளிக்கின்ற‌ன‌ர். இந்த‌ கார‌ண‌த்தினால் எங்க‌ளைப் போன்ற‌ நிறுவ‌ன‌ங்க‌ள் தங்க‌ள‌து தாய‌ரிப்புக‌ள் ப‌ற்றிய‌ ந‌ல்ல‌தொரு சோத‌னை அறிக்கையையே கொடுக்கின்ற‌ன‌ர்.
பி.டி.க‌த்திரிகாய் போன்ற‌ பொருட்க‌ளை ஒரு நீண்ட‌ சோத‌னைக்கு உட்ப‌டுத்திய‌ பின்ன‌ரே அதை நாம் அனும‌திக்க‌ வேண்டும். இப்பொழுது பி.டி.க‌த்திரிகாயை கொண்டு வ‌ருவ‌த‌ற்கு எந்த‌வொரு அவ‌ச‌ர‌மும் இல்லை என்ப‌தே என் க‌ருத்து.

மான்சான்டோவின் நிர்வாக பண்பாடு எவ்வாறு இருக்கும்? நீங்க‌ள் உங்க‌ள் பொருட்க‌ளை சோத‌னை செய்வீர்க‌ளா?
ஆம், பூச்சிக்கொல்லிக‌ளைப் பொருத்த‌வ‌ரையில் நாங்க‌ள் சில‌ சோத‌னைக‌ளை எங்க‌ள் ஆய்வ‌க‌ங்க‌ளில் செய்தோம். ஆனால் சில‌ முறை நாங்க‌ள் எங்க‌ள் நிறுவ‌ன‌த்தின் மற்ற‌ நாட்டு ஆய்வ‌றிக்கைக‌ளை அப்படியே ஏற்றுக் கொண்டு அதை அர‌சிற்க்கு கொடுத்து ஒப்புத‌ல்க‌ளையும் பெற்றோம் ஏனென்றால் எங்க‌ள் ஆய்வ‌றிக்கைக‌ளை அவ‌ர்க‌ளால் முழுமையான‌ ப‌ரிசீலினைக்கு உட்ப‌டுத்த‌ முடியாது என‌த் தெரியும். 
அப்ப‌டியானால் நீங்க‌ள் த‌லைமை பொறுப்பு வ‌கித்த‌ நேரங்க‌ளில் சில ஆய்வ‌றிக்கைக‌ளில் ச‌ரியான‌வ‌ற்றை கொடுக்க‌வில்லை என்ப‌தை ஒப்புக்கொள்கின்றீர்க‌ளா?
என‌து பிராந்திய‌த்திற்க்குள் அவ்வாறு ந‌ட‌க்க‌வில்லை. ஆனால் எந்த‌ ஒரு நிர்வாக‌மும் தான் த‌யாரித்த‌ பொருளைப் ப‌ற்றிய த‌வ‌றான‌ அறிக்கையை கொடுக்காடு என்ப‌தை ம‌ட்டும் கூறுகிறேன்.

பி.டி.பருத்தி நீங்க‌ள் பொறுப்பு வ‌கித்த‌ நேர‌த்தில் உருவான‌து தானே? அந்த‌ பொருளில் ஏதாவ‌து உங்க‌ளுக்கு மாற்று க‌ருத்து உண்டா?
நான் அமெரிக்காவின் செயின்ட்.லூயிசில் ப‌ணியாற்றும் போது அங்கு உருவாக்க‌ப்ப‌ட்டது தான்‌ பி.டி.ப‌ருத்தி. ஆனால் இந்தியாவில் அது அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ போது நான் ப‌ணியில் இல்லை. அதனால் என‌க்கு அதைப்ப‌ற்றி முழுமையாக‌ தெரியாது.
சில‌ விவாசாயிக‌ள் இர‌ண்டு ம‌ட‌ங்கு அறுவ‌டை செய்தார்க‌ள், ம‌ற்ற‌வ‌ர்க‌ளின் அறுவ‌டை மிக‌வும் குறைந்துபோன‌தால் த‌ற்கொலை செய்து கொண்டார்க‌ள். அத‌ன் வ‌ர்த்த‌க‌ அறிமுக‌த்திற்க்கு பின்ன‌ர் அது தோல்வியை த‌ழுவிய‌து. குறிப்பாக‌ 2002 அறுவ‌டை மிக‌வும் குறைந்த‌து. அவ‌ர்க‌ள் கூறினார்க‌ள் நாங்க‌ள் த‌வ‌றான‌ பருத்தி விதையை தேர்வு எய்து விட்டோம் என‌.

பி.டி.ப‌ருத்தி விதைக‌ளை ஒவ்வொரு விதைப்பிற்க்கும் புதிய‌தாக‌ வாங்க‌ வேண்டும் என்று ஒரு க‌ருத்துள்ள‌தே?

ஆம். அவை ம‌ல‌ட்டு த‌ன்மையுள்ள ஈன்களை கொண்ட விதைக‌ள். இந்த‌ வகை விதைகளை ஒரு விதைப்பிற்க்கு ம‌ட்டுமே ப‌ய‌ன்ப‌டுத்த‌முடியும். பி.டி.ப‌ருத்தி விதைக‌ளை ஒவ்வொரு விதைப்பிற்கும் விவசாயிக‌ள் மான்சாண்டோவிட‌ம் வாங்கித்தான் ஆக‌ வேண்டும். அதுவும் முன்பைவிட‌ ச‌ற்று அதிக‌ விலையில்.

நீங்க‌ள் இதுபோன்ற‌ கேள்விக‌ளை உங்க‌ள் நிர்வாக‌த்திட‌ம் பேசிய‌து இல்லையா?
நான் ச‌க‌ ப‌ணியாள‌ர்க‌ள்ட‌ம் பேசும் போது அவ‌ர்க‌ள் என்னிட‌ம் ம‌ல‌ட்டுத் த‌ன்மை வாய்ந்த‌ ஈன் ப‌ற்றி கூறினார்க‌ள்.மான்சான்டோவின் பி.டி.பருத்தி விதைக‌ளை இப்பொழுது 63 நிறுவ‌ன‌ங்க‌ள் உற்ப‌த்தி செய்கின்ற‌ன‌. அவ‌ர்க‌ளிட‌ம் இருந்து மான்சாண்டோ காப்பு தொகையை பெற்றுக்கொள்கின்றது. 
மான்சாண்டோ பூச்சிக்கொல்லிக‌ளையும். பூச்சிக்கொல்லிக‌ளை த‌டுக்கும் ம‌ர‌ப‌ணு மாற்ற‌ப்பட்ட‌ விதைகளையும் உற்ப‌த்தி செய்கின்ற‌து, இது முர‌ண்பாடாக‌ உள்ள‌தே?
மான்சாண்டோ முத‌லில் பூச்சிக்கொல்லிக‌ளை அறிமுக‌ம் செய்த‌து ஆனால் அவை பூச்சிக‌ளுட‌ன் சேர்த்து சோயா பீனின் விதையையும் அழித்துவிட்ட‌து. அதனால் பூச்சிக்கொல்லிக‌ளுக்கு தாக்குபிடிக்கும் ம‌ர‌ப‌ணு மாற்ற‌ப்ப‌ட்ட‌ சோயா பீனின் விதையையும் உற்பத்தி செய்த‌து. முத‌லில் பூச்சிக்கொல்லி மூல‌ம் விதை அழித்து, பின்ன‌ர் பூச்சிக்கொல்லிக்கு தாக்குபிடிக்கும் விதைக‌ளை உருவாக்குவ‌தால் இர‌ட்டை வ‌சூல் கிடைக்கின்ற‌து.

அர‌சின் இது போன்ற‌ த‌வ‌றான‌ அனும‌தி அளிக்கும் முறையை த‌விர்த்து உங்க‌ளுக்கு பி.டி.க‌த்திரிகாயில் என்ன‌ முர‌ண்பாடு?
நிறைய‌ முர‌ண்கள் உள்ள‌ன‌. முத‌லாவ‌தாக‌ ந‌ம்மிட‌ம் உள்ள‌ ப‌ல‌வித‌மான‌ விதைகள் அழிந்துவிடும். இந்தியாவில் ஏற்க‌ன‌வே 2400 வ‌கை க‌த்திரி விதைக‌ள் உள்ள‌ன‌. க‌த்திரி ஒரு ம‌க‌ர‌ந்த‌வ‌கை விவ‌சாய‌ முரையைச் சார்ந்த‌து. நீங்க‌ள் பி.டி.க‌த்திரியை உங்க‌ள‌து நில‌த்தில் ப‌யிரிடும் போது அத‌ன் ம‌க‌ர‌ந்த‌ துக‌ள்க‌ள் காற்றின் மூல‌மாக்வோ. அல்ல‌து ப‌ற‌வையின‌, பூச்சியின‌ங்க‌ளின் மூல‌மாக‌வோ ம‌ற்றொரு நில‌த்தில் விதைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ விதைக‌ளையும் பாதித்து மாற்றும் த‌ன்மைகொண்ட‌து. இத‌ற்கு உதார‌ண‌மாக‌ க‌ன‌டாவில் ஒரு விவாசியிய்ன் மேல் மான்சாண்டோ வ‌ழக்கே போதுமான‌து. த‌ங்க‌ளின் அனும‌தி இல்லாம‌ல் க‌ன‌டாவில் ப‌ல‌ர் பி.டி.விதைக‌ளை ப‌ய‌ன்ப‌டுத்துகின்ற‌ன‌ர் என்பதே அந்த‌ வ‌ழ‌க்கு. இத‌ற்காக‌ நாம் காற்றையும் , பூச்சிய‌ன‌ங்க‌ளை குற்ற‌ம் சும‌த்த‌ முடியாது. அதே போல‌ இங்கும் ந‌ட‌க்க‌லாம்.

அப்ப‌டியானால் அர‌சிட‌ம் ச‌ரியான‌ சோத‌னை முறைக‌ளும், ஒப்புத‌ல் வ‌ழ‌ங்கும் முன் செய்ய‌ப்பட‌ வேண்டிய‌வ‌ற்றை ப‌ற்றிய‌ ச‌ரியான‌ முறை இல்லை என்கிறீர்க‌ளா?

ஆம், இது போன்ற‌ விதைக‌ளை ஒரு நீண்ட‌ கால‌ சோத‌ன‌க்குட்ப‌டுத்தி அத‌ன் முடிவுக‌ள் ச‌ரியாக‌ கிடைத்த‌ பின்ன‌ரே அனும‌தி வ‌ழ‌ங்க‌வேண்டும். ஏனெனில் இவையெல்லாம் ம‌ல‌ட்ட்த் த‌ன்மையுள்ள‌ ஈனைக் கொண்ட‌ விதைகள். அதே ம‌ல‌ட்டு த‌ன்மை அதை உண்ணும் ம‌னித‌னுக்கும் ஏற்ப‌டாது என்ப‌த‌ற்கு எந்த‌ உத்திர‌வாத‌மும் இல்லை.

உங்க‌ளைப் பொருத்த‌வ‌ரையில் பி.டி.க‌த்திரிக்கு ஏதேனும் தேவை உள்ள‌தா?
என‌க்கு பி.டி.க‌த்திரியின் அறிமுக‌மே ஐய‌த்தை எழுப்புகின்ற‌து. பிர‌த‌ம‌ருக்கு ஆலோச‌னை வ‌ழ‌ங்க‌க் கூடிய‌ அறிவு சார் குழுவில் மூன்று நிர‌ந்த‌ர நிறுவ‌ன‌ங்க‌ள் உள்ள‌ன‌. அவைக‌ளில் மான்சான்டோவும், ட‌வ் வேதியிய‌ல் பொருட்க‌ளை தயாரிக்கும் நிறுவ‌ன‌மும்(போபாலில் விப‌த்துக்கு கார‌ண‌மான‌ யூனிய‌ன் கார்பைடு நிறுவ‌ன‌த்தை வாங்கியுள்ளது ட‌வ்) உள்ள‌ன‌. இய‌ல்பாக‌வே அவ‌ர்க‌ள் தங்கள‌து பொருட்க‌ளை வெளியிடுவ‌த‌ற்கு அழுத்த‌தை கொடுப்பார்க‌ள். பி.டி.க‌த்திரி என்ப‌து வெறும் அறிமுக‌ம் ம‌ட்டுமே. இன்னும் பி.டி.அரிசி, கோதுமை, உருளைகிழ‌ங்கு போன்ற‌ எல்லாமே உள்ள‌ன‌. த‌ற்போதைய‌ கிலாரி கிளிண்ட‌னின் வ‌ருகை கூட‌ இந்தியாவின் விவ‌சாய‌த்தை அமெரிக்காவின் விருப்ப‌த் தெரிவாக‌ மாற்றுவ‌து என்ற‌ முக்கிய‌ கொள்கையை கொண்டதே( கிலாரிக்கு ம‌ர‌ப‌ணு மாற்ற‌ப்ப‌ட்ட‌ விதைக‌ள் ஏற்ப‌டுத்தும் பாதிப்பை ப‌ற்றி ஒன்றும் தெரியாது ,ஏனென்றால் அவ‌ருக்கு இதைப் ப‌ற்றி சொல்வ‌து கூட‌ மாண்சான்டோவில் வேலை பார்க்கும் அறிவிய‌லால‌ர்க‌ளே).

ம‌ர‌ப‌ணு மாற்ற‌ப்பட்ட‌ விதைகளின் மூல‌மாக‌வே த‌ற்போதைய‌ உண‌வுத் தேவையை ஈடுக‌ட்ட‌ முடியும் என‌க் கூறுகின்றார்க‌ளே?
இர‌ண்டு த‌லைமுறைக்கு முன் ப‌சுமைப்புர‌ட்சி கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ போது கூட‌ அவ‌ர்க‌ள் இதைத் தான் சொன்னார்கள். அப்பொழுது ப‌சுமை புர‌ட்சியை பார‌ட்டிய‌வ‌ர்கள் கூட‌ இன்று அத‌ன் தோல்வியை ஒப்புக்கொள்கின்ற‌ன‌ர்.

ஏன் நீங்க‌ள் த‌ற்பொழுது ம‌ட்டும் பேசுகின்றீர்க‌ள்?, முன்ன‌ரே பேசியிருக்க‌லாமே?
என‌க்கு இதுவ‌ரை அவ்வாறான‌ ஒரு வாய்ப்பு கிடைக்க‌வில்லை. இப்பொழுது அர‌சு பொதும‌க்க‌ளின் க‌ருத்தைக் கேட்ப‌தால் நானும் என‌து க‌ருத்தை வெளியிடுகின்றேன் .

ந‌ன்றி. தெக‌ல்கா வார‌ இத‌ழ்.

Advertisements
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Advertisements
%d bloggers like this: