மார்ச், 2010 க்கான தொகுப்பு

போருக்கு பின் , வ‌தைமுகாம் அவ‌ல‌ங்க‌ள். பகுதி 5/5. த‌மிழாக்க‌ம். ந‌ற்ற‌மிழ‌ன்.


போருக்குப் பின் , வ‌தைமுகாம் அவ‌ல‌ங்க‌ள். பகுதி 5/5. த‌மிழாக்க‌ம். ந‌ற்ற‌மிழ‌ன்.

    “இன‌ அழித்தொழிப்பின் பெயரால் 2009 ஆம் ஆண்டு இல‌ங்கை அர‌சு கொடூரமான போர்க் குற்ற‌ங்களைச் செய்ததோடு, மூன்று இல‌ட்ச‌ம் த‌மிழ‌ர்க‌ளை சட்டத்திற்க்கு புறம்பாக உள்நாட்டிலேயே இட‌ப்பெய‌ர்வுக்கு ஆளாக்கி முகாம்க‌ளில் அடைத்து வைத்து தனது இன‌வெறியை வெளிப்ப‌டுத்தியுள்ளது. த‌மிழ‌ர்க‌ளை சிறுபான்மையினாராக்கி, அவ‌ர்க‌ளை இல‌ங்கையில் த‌னித்து விட்டுள்ள‌து. இந்த‌ இன‌வெறி ச‌மூக‌ புற‌க்க‌ணிப்புக‌ள், பொருளாதாரத் த‌டைக‌ள், நாச‌ப்ப‌டுத்துதல்,சித்திரவதை செய்தல் போன்ற‌ கொடுமைகளின் தொட‌ர்ச்சியான‌ வ‌ர‌லாற்றைக் கொண்ட‌து. “முத‌லில் அமைதி வ‌ழி போராட்டமாகத் தோன்றி, பல பத்தாண்டுக்கால உள்நாட்டுப் போராக நீடிக்க காரணமான வேர்கள் இந்த இனவெறியில் தான் உள்ளன‌” என‌க் கூறுகின்றார் ச‌மூக‌ ஆர்வ‌ல‌ர் அருந்த‌தி ராய்.(47)

“காசாவில் ந‌ட‌ந்த‌தை விட மிக‌ மோச‌மான‌ நிக‌ழ்வு இது. காசாவிலாவ‌து போர்ப் பகுதியில் ஊட‌க‌விய‌லாள‌ர்களும், பார்வையாள‌ர்களும் அனும‌திக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர். ஆனால் இங்கு அதுவும் இல்லை” எனக் கூறுகின்ற‌து ஐ.நா. ஆசியாவின் மீக‌ நீண்ட‌ போரான‌ இந்த‌ உள்நாட்டுப் போரில் 6,200 வீர‌ர்க‌ளும், 22,000 கொரில்லாப் போராளிக‌ளும் கொல்ல‌ப்ப‌ட்ட‌தாக‌ இல‌ங்கை இராணுவம் கூறுகின்ற‌து. 80,000லிருந்து 1,00,000 வ‌ரையிலான‌ பொதும‌க்க‌ள் இந்தப் போரினால் இற‌ந்த‌தாகக் கூறுகின்ற‌து ஐ.நா”. இதை எலிசா ரிச்சே என்ப‌வ‌ர் “பிரேன்சா ம‌ரியா சோச‌லிச‌ட்டாவில்” என்ற நாளிதழில் அவ‌ர் எழுதியுள்ளார். (48)

 ரிச்சே மேலும் இவ்வாறு கூறுகின்றார். “போரின் போது இர‌ண்டு இல‌ட்ச‌ம் துருப்புகளைக் கொண்ட‌ இராணுவ‌ம், இந்த‌ அமைதிக் கால‌த்தில் மேலும் ஒரு இல‌ட்ச‌ம் துருப்புகளைச் சேர்த்துள்ள‌து. போர்க் காலத்தைவிட‌‌ அதிக‌ எண்ணிக்கையில்‌ துருப்புகளைக் கொண்ட அமைதி காலம் மிகவும் விசித்திர‌மானது…..”

 திட்ட‌மிட்ட‌ முறையில் தமிழின அழித்தொழிப்பைத் தொட‌ருவ‌த‌ற்காக‌ அதிக‌ துருப்புக‌ள் தேவைப் ப‌டுகின்ற‌ன‌ர். த‌மிழ‌ர்க‌ளின் பூர்வீக‌ நில‌ங்க‌ள் சிங்க‌ள‌ குடியேற்ற‌ங்க‌ளால் நிர‌ப்ப‌ப்ப‌டுகின்ற‌து. இந்த‌ நிக‌ழ்வைத் தான் ஜான் பில்ஜ‌‌ர் இசுரேல் பால‌சுதீன‌த்தில் மேற்கொண்ட செயல்திட்டத்துடன் ஒப்பிடுகின்றார்.

 இல‌ங்கை த‌ன‌து போர் வெற்றியை அறிவித்த‌ ம‌று நாள‌ன்று இல‌ங்கைக்கான‌ இந்திய‌ தூத‌ராக‌ ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ள் ப‌ணியாற்றிய‌ ப‌த்ர‌குமார் என்ப‌வ‌ர் இவ்வாறு கூறினார்:

 “ஏற்க‌ன‌வே த‌மிழ‌ர்க‌ளின் கிழ‌க்கு ப‌குதியில் அவ‌ர்க‌ள் பிர‌ச்ச‌னையைத் தீர்த்து விட்டார்க‌ள்…. அதாவ‌து அங்கு இனி த‌மிழ‌ர்க‌ள் பெரும்பான்மையினர் இல்லை. அதே போல‌ நாளையிலிருந்து அவ‌ர்க‌ள் தொட‌ர்ச்சியான‌ திட்ட‌மிட்ட‌ சிங்க‌ள‌ காலனீய‌ ஆதிக்க‌த்தின் மூல‌ம் க‌ட‌ந்த இருபது வ‌ருட‌ங்க‌ளாக பிர‌பாக‌ர‌ன் கோலோச்சிய தமிழர்களின் வ‌ட‌க்குப் ப‌குதியிலும் மேற்கொள்வர்கள்….வடக்கு பகுதி இனி தமிழர்களின் பகுதியாக நீடிக்க விடக்கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.  அதிக‌ப‌ட்ச‌மாக‌ ஒரு பத்து வ‌ருட‌ங்க‌ள் போதும், அவ‌ர்க‌ள் த‌மிழ‌ர்க‌ளின் இரத்தம் தோய்ந்த நீண்ட‌ துயரமான போராட்டத்தை வெறும் வ‌ர‌லாற்று சின்னமாக மாற்றி விடுவார்க‌ள்”. (49)

 இன அழித்தொழிப்பு ப‌ல‌ இல‌ட்ச‌க்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ளை சிறைப் ப‌டுத்தி, அவ‌ர்க‌ளுக்குத் தேவையான‌ அடிப்ப‌டை உரிமைக‌ளை ம‌றுத்துவ‌ருவ‌த‌ன் மூல‌ம் தொட‌ர்கின்ற‌து. போர் முடிவ‌த‌ற்கு ஒரு வ‌ருட‌த்திற்க்கு முன் இல‌ங்கை அரசு போர்ப் ப‌குதியிலிருந்து வெளியேறி ம‌க்க‌ளை ந‌ல‌ன்புரி முகாம்களுக்கு வரச் சொல்லியது. இந்த‌ முகாம்க‌ள் ஐ.நாவின் விதி முறைக்கு உட்ப‌ட்ட‌தே. உண‌வு, குடிநீர், சுத‌ந்திர‌மான‌ ந‌ட‌மாட்டம், முகாமில் இருந்து வெளியேறி த‌ன‌து குடும்ப‌த்துட‌ன் சேர்வ‌து ஆகிய‌‌ அனைத்து உரிமைக‌ளும் தேவைகளையும் அங்கு தங்கியுள்ள த‌மிழ‌ர்க‌ளுக்கு ம‌றுக்க‌ப்ப‌ட்டு ஐ.நாவின் விதிமுறைக்கு நேர்மாறாக உள்ளன முகாம்கள்.

 “நான் த‌மிழ‌ர்க‌ளை பட்டினி போட்டு முற்றிலுமாக இந்நாட்டிலிருந்தே ஒழித்து விட்டால், சிங்க‌ள‌ ம‌க்க‌ள் ம‌கிழ்ச்சியாக‌ இருப்பார்க‌ள்” என‌ “டெய்லி டெலிகிராப் (இங்கிலாந்து)” நாளித‌ழுக்கு யூலை 11, 1983 அன்று அதிப‌ர் செய‌வ‌ர்த்த‌னே அளித்த‌ நேர்காண‌லில் கூறினார்.

கால் நூற்றாண்டுக்குப் பின் த‌ற்போதைய‌ அதிப‌ர் த‌னது முன்ன‌வ‌ர்க‌ளின் இன‌ப்ப‌டுகொலை எண்ண‌த்தை நிறைவேற்றி உள்ளார். ம‌கிந்த இராசபக்சே “சட்டத்திற்க்கு புறம்பாக உள்நாட்டிலேயே இட‌ப்பெய‌ர்வுக்கு ஆளாகி முகாம்க‌ளில் தங்கி இருப்போர் தங்கள் விருப்ப‌த்துட‌னே அங்கு வாழ்வ‌தாக‌வும்”, அங்கு அவ‌ர்க‌ளுக்கு எல்லா அடிப்படைவசதிகளும் கொடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌தாக‌வும் தொட‌ர்ந்து சொல்லி வ‌ருகின்றார். ஐ.நாவின் ம‌னித‌ உரிமைக்குழு விவாதம் இலங்கையின் மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணையை தடுத்து விட்டதால், சில‌ ஐ.நா பார்வையாள‌ர்கள் வ‌ருகையை த‌விர‌ எந்த‌ ஒரு விசார‌ணையும் ந‌ட‌த்த‌ப்ப‌ட‌வில்லை. அவ்வாறு பார்வையிட்ட‌வ‌ர்களின் கருத்துகளும் இராசபக்சேவின் கருத்துகளும் நேரெதிராக உள்ளன‌.

செப்ட‌ம்ப‌ரில் ஐ.நாவின் அர‌சிய‌ல் குழு த‌லைவ‌ரான‌ லின் பாசுகோ இந்த‌ முகாம்களைப் பார்வையிட்ட‌ போது “ம‌க்க‌ள் சுத‌ந்திர‌மாக‌வும், அடிப்ப‌டை உரிமைக‌ளுட‌னும் அங்கு ந‌ட‌த்த‌ப‌ட‌வில்லை” என்றும், உல‌க‌ நாடுக‌ளில் உள்நாட்டு அகதிகள் முகாம்க‌ளில் கடைப்பிடிக்க‌ப‌டும் விதிக‌ளுக்கு நேரெதிராக‌ இந்த‌ முகாம்கள் இருப்பதாகவும், ஒரு வெளிப்படையான தன்மையே இல்லை” என்றும் கூறினார்.(50)

“சுத‌ந்திர‌மான‌ ந‌ட‌மாட்ட‌ம் என்ப‌த‌ற்கு இராச‌ப‌க்சேவோ பாசுகோவிட‌ம் வேறொரு க‌தையைக் கூறுகின்றார். இராணுவ‌ம் போர் ந‌டை பெற்ற‌ ப‌குதிக‌ளிலிருந்து க‌ண்ணி வெடிகளை அக‌ற்றி வ‌ருவ‌தாக‌வும், ம‌க்க‌ளிடையே மறைந்துள்ள சில‌ போராளிக‌ள் கண்டுபிடிப்பதற்காகவுமே சுதந்திரமான நடமாட்டம் தடை செய்யப்பட்டுள்ளதாகவும்”  கூறுகின்றார். அமெரிக்க‌ குடிம‌க்க‌ள் ஒருங்கிணைப்பாள‌ர் கூறிய‌தாக‌ ச‌ர்வ‌தேச‌ ம‌ன்னிப்பு ச‌பை கூறிய‌து. “ச‌ர்வ‌தேச‌ ம‌னித‌ உரிமை ச‌ட்ட‌ங்களின் படி‌ போரில் சிறைப் பிடிக்க‌ப்ப‌ட்ட‌ போராளிக‌ளை போர் முடிவடைந்த பின்னர் எந்த‌வித‌ த‌டையுமின்றி உடனடியாக விடுவிக்க‌வேண்டும் எனக் கூறுகின்ற‌ன”.

யூலை மாத‌த்தில் புலிக‌ள் அமைப்பில் இருந்த‌தாக‌வும், புலிக‌ளுட‌ன் தொட‌ர்புள்ள‌தாக‌வும் க‌ருத‌ப்ப‌ட்ட‌ 9,400 ம‌க்க‌ள் கைது செய்ய‌ப்ப‌ட்டு தனியே வைக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர்.  ஆறுமாதங்களாகியும் இன்னும் அவர்கள் விடுத‌லை செய்ய‌ப்ப‌ட‌வில்லை.

மேலும் ச‌ர்வ‌தேச‌ ம‌ன்னிப்பு ச‌பை “முகாம்க‌ள் எல்லாம் இராணுவ‌ம‌ய‌மாக்க‌ப்ப‌டுள்ள‌தாக‌வும், 19 உறுப்பின‌ர்களைக் கொண்ட‌ இராணுவ‌ சென‌ர‌ல் ச‌ந்திர‌கிரி த‌லைமையிலான‌ குழு மே மாத‌ இறுதியில் அமைக்க‌ப்ப‌ட்ட‌து. ” உள்நாட்டு அகதிகள் முகாம்க‌ளில் வாழும் ம‌க்க‌ளை அவ‌ர்க‌ளின் வாழ்விட‌ங்க‌ளில் மீள்குடியேற்ற‌வும், வ‌ட‌க்குப் ப‌குதிக‌ளில் க‌ட்ட‌மைப்பு மற்ரும் மேம்பாட்டுப் ப‌ணிகளும் இக்குழுவிடம் கொடுக்க‌ப்ப‌ட்ட‌ன‌. ஆனால் இன்று வ‌ரை எந்த ஒரு பணியும் ந‌டை பெற‌வில்லை. இந்த‌ இராணுவ‌ சென‌ர‌லான‌ சந்திர‌கிரி வ‌ட‌க்கு பிராந்திய‌த்திற்கு க‌வ‌ர்ன‌ராக‌வும் நிய‌மிக்க‌ப்பட்டுள்ளார். ஆனால் இன்னும் ம‌க்க‌ள் முள்வேலிக‌ளுக்குள்ளேயே ஆயுத‌ம் தாங்கிய‌ இராணுவ வீரர்களால் மிருகத்தனமாக‌  சிறை வைக்க‌ப்ப‌டுள்ள‌ன‌ர். “இந்த‌ முகாம்க‌ளில் ம‌க்க‌ள் கைது செய்ய‌ப‌டுவ‌தும், ம‌க்க‌ள் காணாம‌ல் அடிக்கப்படுவதும் அதிக‌ரித்துள்ளதாக‌ இல‌ங்கை ம‌னித‌ உரிமை அமைப்புக‌ள் கூறுகின்ற‌ன‌ ” என‌ ச‌ர்வ‌தேச‌ ம‌ன்னிப்பு ச‌பை கூறியுள்ள‌து.

” 1980 களிலிருந்து சிங்கள பயங்கரவாதத்தினால் பொதுமக்கள் காணாமல் அடிக்கப்பட்டு வருகிறார்கள். பொதுமக்கள் காணாமல் அடிக்கப்படுவதில் இலங்கை உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது .இதை விசாரணை செய்ய ஒரு சுதந்திரமான அமைப்பு இலங்கையில் இல்லை….இது ம‌னித‌ உரிமை மீற‌ல்க‌ளை மேலும் அதிக‌ரிக்கச் செய்கின்ற‌து. புலிக‌ளுட‌ன் தொட‌ர்புள்ளதாக‌ க‌ருத‌ப்ப‌டும் ம‌க்க‌ள் ச‌ட்ட‌ விரோத‌மான‌ முறையில் கொல்ல‌ப்ப‌டுவ‌தும், காணாம‌ல் அடிக்கப்படுவதும், கொடுமையான‌ முறையில் சித்திரவதைப்படுவதும் நடந்துள்ளதாக‌ முந்தைய‌ ஆய்வுக‌ள் கூறுகின்ற‌ன‌”.

“ந‌ல‌ன் புரி முகாம்க‌ள் என‌ அர‌சு கூறிகொள்ளும் இந்த “வ‌தை முகாம்க‌ளில்” ம‌க்க‌ள் சுத‌ந்திரமாக‌ ந‌டமாடவிடாதது ம‌ட்டும‌ல்லாமல், இராணுவ‌ வீர‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்கு விருப்ப‌ப‌ட்ட‌ பெண்களைக் க‌ற்ப‌ழிப்ப‌தும், அங்கே க‌ழிவுக‌ள் நிறைந்த‌ ப‌குதிக‌ளில் நோய் தொற்றும் வாய்ப்பு உள்ள‌ இட‌ங்க‌ளில் ம‌க்க‌ள் வாழ்கின்றனர். இது தவிர போதிய‌‌ உணவு, குடிநீரும், ம‌ருத்துவ‌ உத‌விகளும் இல்லாம‌ல் அங்கு இற‌ப்பு விகித‌ம் அதிக‌மாகியுள்ள‌தாகவும் கூறுகின்ற‌து ச‌ர்வ‌தேச‌ ம‌ன்னிப்பு ச‌பை.

பெண்களும், குழந்தைகளும் மிகவும் மோசமான முறையில் நடத்தப்படுவதாக யுனிசெப்பின் த‌லைமைச் செய்தித் தொட‌ர்பாள‌ர் எல்ட‌ர் கூறுகின்றார். இவ‌ரின் இந்த‌ அறிக்கைக்குப் பின் இவ‌ர் இல‌ங்கையிலிருந்து வெளியேற்ற‌ப்ப‌ட்டார். எல்ட‌ர் மேலும் கூறுகிறார் “நினைத்துப் பார்க்கக்கூட‌ முடியாத‌ நிலையில் போரினால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ குழ‌ந்தைக‌ள் அபாயகரமான‌ காய‌ங்க‌ளுட‌ன் வாழ்ந்து வ‌ருவ‌தாகக் கூறினார்”. (51)

ஐ.நாவின் த‌லைமைச் செய‌ல‌ரான‌ பான்.கி.மூன் இல‌ங்கையை ஆரம்ப‌த்தில் விம‌ர்சிக்க‌வில்லை. இவ‌ர் புலிக‌ள் அமைப்பை ம‌ட்டும் அத்துமீறலுக்காக‌ விம‌ர்சித்தார். ஆனால் அவ‌ரும் கூட‌  போர் ந‌ட‌ந்து ஒருவார‌த்திற்குப் பின் முகாம்களைப் பார்வையிட்ட‌ பின் இவ்வாறு கூறியுள்ளார்.

 ” நான் ப‌ல‌ நாடுக‌ளில் இது போன்ற முகாம்களைப் பார்வையிட்டுள்ளேன். ஆனால் இந்த‌ இட‌ம் என‌து ம‌ன‌தை மிக‌வும் பாதித்துள்ள‌து. இடம்பெயர்வுக்கு ஆளாகி இங்கு வாழும் ம‌க்க‌ளுக்காக‌ நான் வ‌ருந்துகிறேன்”. என‌ அவ‌ர் சி.என்.என்னிற்கு அளித்த‌ நேர்காண‌லில் இவ்வாறு கூறினார். இவ‌ர் பார்வையிட்ட‌ மானிக்ஃ பார்ம் முகாம் தான் எல்லோருக்கும் காட்ட‌ப்படும் ஒரு முகாமாகும். மேலும் அவ‌ர் பொது ம‌க்க‌ள் மீதான குண்டு வீச்சுக‌ளின் மேல் விசார‌ணை ந‌ட‌த்துவ‌தாக‌வும் உறுதிய‌ளித்தார்.(52)

2,80,000 ம‌க்க‌ளில் வெறும் 15,000திலிருந்து 40,000 வ‌ரையிலான‌ ம‌க்க‌ள் ம‌ட்டுமே ந‌வ‌ம்ப‌ர் 1, 2009 அன்று விடுவிக்க‌ப்ப‌ட்ட‌தாக‌வும், இவ‌ர்க‌ளிலும் பெரும்பால‌ன‌வ‌ர்க‌ள் கையூட்ட‌ளித்த‌த‌ன் மூல‌ம் விடுவிக்க‌ப்ப‌ட்டாதாக‌வும் கூறுகின்றது “ச‌ண்டே டைம்சு” நாளிதழ். அங்கு வாழ்ப‌வ‌ர்க‌ளின் விடுத‌லைக்காக‌ அவ‌ர்க‌ளின் உற‌வின‌ர்க‌ள் கட்டாயமாக கையூட்டளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும்‌ கூறுகின்ற‌து அந்த‌ நாளித‌ழ்.(53)
எதிர்கால‌ம்:

போர் முடிவ‌டைந்து ஒரு வார‌த்திற்குப் பின் பெரும்பாலான‌ த‌லைவ‌ர்க‌ள் இற‌ந்து விட்ட‌தாக‌வும் ஆனால் அமைப்பு சுத‌ந்திர‌ த‌மிழீழ‌த்திற்காக‌ அமைதியான‌ முறையில் போராடும் என்றும் புலிக‌ள் அமைப்பினர் கூறின‌ர். யூலை 22 அன்று புலிக‌ள் ச‌ர்வ‌தேச‌ உற‌வுக‌ளுக்கு த‌லைவ‌ராக‌ செல்வ‌ராசா ப‌த்ம‌நாப‌னை நிய‌மித்த‌து.(54) ஆக‌த்து 8 அன்று இங்கிலாந்தின் சுத‌ந்திரா நாளித‌ழ் ப‌த்ம‌நாப‌ன் கைது செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌தாக‌வும், தொட‌ர்பு கொள்ள‌ முடியாத‌ நிலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள‌தாக‌வும் கூறியுள்ள‌து. (55)

 த‌மிழ் ம‌க்க‌ள் வாழ்வுக்கும், உரிமைக்கும் இட‌து சாரி அமைப்புக‌ளும், சோச‌லிச‌ க‌ம்யூனிச‌ புர‌ட்சிக‌ர‌ அர‌சுக‌ளும் முன்னின்று போராட‌ வேண்டும்  என‌ அக்டோப‌ர் 2009ல் ஆசுத்திரேலியாவின் சோச‌லிச‌ இட‌து சாரி அமைப்பான‌து த‌ன‌து ச‌ர்வ‌தேச‌ நிலைப்பாடு குறித்த அறிக்கையில் இதனை மிகத் தெளிவாகக் கூறியுள்ள‌து.

“இப்போது த‌மிழ‌ர்க‌ளின் போராட்ட‌ம் ஒரு புதிய‌ க‌ட்ட‌த்தை எட்டியுள்ள‌து.அடிப்ப‌டை ம‌னித‌ உரிமைகளின்றி, சட்டத்திற்க்கு புறம்பாக உள்நாட்டிலேயே இட‌ப்பெய‌ர்வுக்கு ஆளாக்கி முகாம்க‌ளில் இல‌ங்கை அர‌சால் வ‌தை ப‌டும் ம‌க்க‌ளை விடுவித்து அவ‌ர்க‌ளின் வாழ்விட‌ங்க‌ளில் குடிய‌ம‌ர்த்துவதே நமது முதன்மை செயல்பாடாக இருக்க வேண்டும். இத‌ன் மூல‌ம் கொலைக‌ள், க‌ற்ப‌ழிப்புக‌ள் போன்ற‌வ‌ற்றிக்கு ஒரு முற்றுப் புள்ளி வைப்பதுடன் மட்டுமல்லாமல் அவ‌ர்க‌ளுக்குத் தேவையான‌ வீடு, உண‌வு, குடிநீர் போன்ற‌ அடிப்படை வசதிகளையும் ஏற்ப‌டுத்தித் தரவேண்டும்”. (8)

  சமூக நீதியுடன் அமைதி நிலவ இயலாமல், ஒடுக்குமுறையும் பயங்கரவாதமும் தலைவிரித்தாடும் நிலையில் அதனை எதிர்த்து நிற்பதும் அமைதி வழிப் போராட்டம் பயனற்றுப் ஆயுதப் போராட்டத்தில் இறங்குவதும் சுதந்திர போராளியின் உரிமை என்ற கருத்தை வலியுறுத்தி, அதே வேளையில் சமூக நீதியும், சமத்துவமும் நிலவும் சோசலிசம் என்னும் நமது கொள்கைக்கு முரணாக பயங்கரவாதத்தைத் திணிப்போரைக் கண்டிக்கின்றோம். அவர்கள் நமது சோசலிச கொள்கைக்குப் பொருத்தமான தார்மீக நெறிகளுக்கேற்ப தமது வழிமுறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கோருகிறோம்.

 போர் நீண்ட காலம் நீடிக்கும் போது பெரும்பாலான ஆயுதப்போராட்ட இயக்கங்கள் வன்முறையிலும், பயங்கரவாதச் செயல்களிலும் இறங்குவது தவிர்க்கவியலாதது. எடுத்துக்காட்டாக, கொலம்பிய மக்கள் தேசிய விடுதலை இயக்கம் (), பாலசுதீனிய விடுதலை போராட்டக் குழு() ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.அதே நேரம் அவர்களின் விடுதலை போராட்டத்தை நான் ஆதரிக்கிறேன். புலிகளை விட இவர்கள் அதிகமான வன்முறைகளில் ஈடுபட்டுள்ளார்கள்.பெரும் இராணுவ வலிமையும், பொருளாதார வலிமையும் கொண்ட அரசின் முடிவற்ற பயங்கரவாதத்தை அவர்கள் எதிர் கொள்ள வேண்டியிருந்தது. ஆப்பிரிக்க தேசிய காங்கிரசும் ()தென் ஆப்பிரிக்க விடுதலைப் போரில் இதையே தான் செய்தார்கள் என்பதை இங்கே நினைவு கூறுகிறேன்.

  ஏறத்தாழ அரை நூற்றாண்டாக நான் அந்த‌ இய‌க்க‌ங்க‌ளுக்கு ஆத‌ர‌வாக இருப்பதற்கும்,  இன்னும் விடுத‌லை விரும்பும் இட‌து சாரி சிந்த‌னையுட‌னும், எழுத்தாள‌னாக‌வும் இருப்பதற்கு தார்மீக அடிப்படைகள் உள்ளன. தார்மீக அடிப்படை என்பதை நான் பின்வருமாறு வரையறுக்கிறேன்: தாக்குதலுக்கும், அத்துமீறலுக்கும், தாங்கொணா ஒடுக்குமுறைக்கும் ஆட்பட்டாலன்றி நாம் பிறரை தாக்கி அழிக்க கூடாது என்று உறுதியோடிருக்க வேண்டும். இந்த அடிப்படை உறுதிப்பாட்டோடுதான் அன்றாட வாழ்விலும், நீதிக்கான போராட்டத்திலும் எந்தவொரு நேர்மையான மனிதனும், இயக்கமும், அரசியல் கட்சியும் செயற்பட வேண்டும். ஒழுக்கம் என்பது குறித்தான எனது வரையறை இதுதான்.

(அ) ந‌ம‌து செய‌ல்பாடுக‌ள் ஒரு ம‌னிதன் மீதோ, இனத்தின் மீதோ ஆதிக்கம் செலுத்த‌வோ (அல்லது) அடிமைப்ப‌டுத்த‌வோ கூடாது.

(ஆ) ஆதிக்க‌வாதிகளுக்கும் ஒடுக்குவோருக்கும் எதிரான போரில் நாம் பொது ம‌க்களைக் கொல்வதோ, பண‌ய‌க் கைதியாகக்குவதோ, க‌‌ட்டாய‌மாக‌ ச‌ண்டையில் ஈடுப‌டுத்துவதோ கூடாது.

(இ) நாம் ம‌க்க‌ளிடையே ச‌ம‌ உரிமையை நிலைநாட்ட‌ போராட‌ வேண்டும்.

(ஈ) இலாப‌த்திற்காக‌ தொழிலாள‌ர்களைச் சுரண்டுகிற தனிமனிதர்களையும், குழுக்களையும், வர்க்க அடிப்படையில் ஒடுக்குகின்ற அமைப்புகளையும் அழித்து, நீதி ம‌ற்றும் ச‌ம‌ உரிமையுட‌ன் கூடிய‌ ச‌ம‌ வாய்ப்புக‌ளுடைய‌ ஒரு பொருளாதார‌த்தை உருவாக்கப் போராட‌ வேண்டும். அனைத்து வளங்களும் சமமாகப் பகிரப்படும் போது அங்கே பட்டினி என்பதே இருக்காது.

(உ) உள்ளூர், தேசிய‌ ம‌ற்றும் ச‌ர்வ‌தேசிய‌ கொள்கைகளின் உருவாக்க‌த்தில், எல்லோருடைய‌ ப‌ங்க‌ளிப்பையும் உறுதி செய்யும் அர‌சிய‌ல் அமைப்பை உருவாக்க‌ நாம் பாடுப‌ட‌ வேண்டும்.

(ஊ) தனி மனிதர்கள் அன்னியப்படுவதை எதிர்த்து நாம் போராட‌ வேண்டும்.

   கூபாவின் விடுத‌லைக்குப் பின்ன‌ர் க‌ட‌ந்த அரை நூற்றாண்டாக‌ அந்த‌ அர‌சை கவனித்து வருபவன், அந்த‌ அர‌சுக்காக‌ எட்டு வ‌ருட‌ங்க‌ள் உழைத்த‌வ‌ன் நான். இர‌ண்டு வ‌ருட‌மே நீடித்த “கூபாவின் கொரில்லாப் போராட்டம் தார்மீகமானது என்று‌ நான் உண‌ர்கிறேன். கூபாவின் புர‌ட்சிக‌ர போராட்ட‌ம் இந்த‌ வ‌கையில் தனித்துவம் மிக்கது. பிரான்சு ம‌ற்றும் அமெரிக்காவின் ஆக்கிர‌மிப்பிற்கு எதிராக‌ விய‌ட்நாமிய‌ர்க‌ளின் போராட்ட‌மும் அறவழியிலேயே ந‌டைபெற்ற‌து. இவை போல வேறு சில மக்கள் விடுதலை போராட்டமும் உண்டு; அதில் ஒன்று அசல் சாந்தினிஸ்தாக்களின் போராட்டம்

 உல‌கெங்கும் வாழும் ப‌ல‌ இல‌ட்ச‌க‌ண‌க்கான‌ ம‌க்க‌ளும் “சே குவாராவை” விரும்புவ‌த‌ற்கான‌ கார‌ண‌மாக‌ நான் க‌ருதுவ‌து அவ‌ர‌து கொள்கையும், புரட்சிகர தலைமையுமே. இந்த‌ நீண்ட‌ க‌ட்டுரையை புரட்சிக‌ர‌ த‌லைவ‌ரான‌ “சே குவாராவின்” “சோச‌லிசமும் ம‌னிதனும்” என்ற புத்தகத்தில் அவர் கூறியுள்ள‌ வார்த்தைகளைக் கொண்டே முடிக்கின்றேன்.

 “உண்மையான‌ புர‌ட்சியாளனை மக்கள் மீது அவன் கொண்டிருக்கும் ஆழ்ந்த அன்புதான் வழிநடத்துகிறது…..இப்படிச் சொல்வதற்காக நான் கேலிக்கு ஆளாகலாம் என்று தெரிந்ததே தான் சொல்கிறேன்…புரட்சியின் முன்னணியிலிருப்போர் மக்கள் மீதான இந்த அன்பையே தமது உயரிய இலக்காக, புரட்சிக்கான புனித காரணியாக, பிளவு படுத்த முடியாத ஒற்றை நோக்கமாகக் கொள்ள வேண்டும்…. வரம்பற்ற ஆணவத்தாலும் வரட்டுத்தனமான பண்டிதத்தாலும் மக்களிடமிருந்து அன்னியப்பட்டு விடாமலிருக்க வேண்டுமானால், அளவு கடந்த மனித நேயமும், நீதியும், நேர்மையும் வழுவாத உறுதியும் புரட்சியாளனுக்கு தேவை. மனித குலத்தின் பாலுள்ள இந்த அன்பு போற்றத்தக்க செயல்களாக, முன்னுதாரணங்களாக‌, புரட்சியை முன்னகர்த்தும் உந்து சக்தியாக உருமாற நாம் அன்றாடம் போராட வேண்டும்”.

முற்றும்.

குறிப்புக‌ள்
47. http://www.guardian.co.uk/commentisfree/2009/apr/01/sri-lanka-india-tamil-tigers
48. http://www.aporrea.org/imprime/a79295.html
49. http://axisoflogic.com/artman/publish/Article_55839.shtml
50. http://www.bloomberg.com/apps/news?pid=20601080&sid=a_SMjax2xKq8
51. www.csmonitor.com/2009/0921/p06s06-wosc.htm
52. http://malaysiasms.wordpress.com/2009/05/25/sri-lanka%E2%80%99s-camps-%E2%80%98most-appalling%E2%80%99-in-the-world-%E2%80%93-ban-ki-moon/
53. “Doing the Right Thing in Sri Lanka”, Rohini Hensman, 1/10, www.dissidentvoice.org
54. http://www.tamilnation.org/ltte/international_relations/090722kp_leader.htm
55. http://www.independent.co.uk/news/world/asia/new-tamil-tiger-overseas-head-captured-1769210.html
8. http://www.dsp.org.au/node/229

மூலப்பதிவு : http://www.ronridenour.com/articles/2009/1122-rr.htm

Advertisements

தீவிரவாதிகள் ‍. இலங்கையின் இனவெறி கொடுமைகளுக்கு சர்வதேச ஒத்துழைப்பு. ப‌குதி 4/5. தமிழாக்க‌ம். ந‌ற்ற‌மிழ‌ன்.


தீவிரவாதிகள் ‍. இலங்கையின் இனவெறிக் கொடுமைகளுக்கு சர்வதேச ஒத்துழைப்பு
 ப‌குதி 4/5. தமிழாக்க‌ம். ந‌ற்ற‌மிழ‌ன்.

  ” தீவிர‌வாத‌ம் குறித்த‌ செனீவா தீர்மான‌ம் 1987 மே 29 அன்று ஐக்கிய‌ நாடுக‌ள் ச‌பையில் தாக்க‌ல் செய்ய‌ப்ப‌ட்ட‌து. “இன, பிராந்திய ரீதியில் மக்களை பாரபட்சமாக அணுகும் அரசுகளே தீவிரவாதிகள் என்று இந்தத் தீர்மான‌ம் கூறுகின்ற‌து. இந்த‌ அறிக்கை தாக்க‌ல் செய்ய‌ப்ப‌ட்ட‌  கால‌த்தில் அர‌ச‌ தீவிர‌வாத‌ செயல்க‌ளில் ஈடுப‌ட்டுள்ள‌ நாடுக‌ளாக‌ குறிப்பிட‌ப்ப‌ட்ட‌வை ” வட‌அமெரிக்கா, இசுரேல், தென் ஆப்பிரிக்கா ம‌ற்றும் ச‌ர்வாதிகாரிகளின் கீழுள்ள இல‌த்தின் அமெரிக்க‌ நாடுகள் ”.

 அர‌ச தீவிரவாதத்தின் கூறுகளாக அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளவை: தனது சொந்த மக்களுக்கு எதிரான‌ காவல் அல்லது இராணுவ நடவடிக்கைகள் மூலம் மக்களை பயத்திலேயே இருக்கும் படி செய்தல், பொதுக் கூட்டங்களை தடை செய்தல், பத்திரிகைத் துறைக்கு கட்டுப்பாடுகள் விதித்தல், பொது மக்களை அடித்தல், துன்புறுத்துதல், பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி பெருமளவில் மக்களை கைது செய்தல், வதந்திகளைப் பரப்புதல், பெயருக்காக விசாரணை நடத்துதல், மரண தண்டனை விதித்தல், தொடர்ச்சியாக‌ படுகொலைகளைச் செய்தல்.

“பாதிக்கப்படும் மக்களுக்காக போராடும் குழுக்களின் வன்முறை செயல்களை விட‌, ஒடுக்குமுறை அரசுகள் தங்களிடம் உள்ள படை பலத்தாலும் அதி நவீன ஆயுதங்களாலும் மக்களை அழித்தொழிக்கும் விகிதம் பல மடங்கு அதிகரித்து வந்துள்ளது என்பது கண்கூடு”. “….தங்கள் சுய நிர்ணய உரிமையை பெறுவதற்காக ஒரு போராட்டக் குழுவை கட்டமைத்து சர்வதேச மனித உரிமை விதிகளுக்குட்பட்டு காலனீய ஆதிக்கத்திற்கு எதிராகவும், வந்தேறிகளுக்கு எதிராகவும், இனவெறி அரசுகளுக்கு எதிராகவும் போராட ஒடுக்கப்பட்ட‌ மக்களுக்கு உரிமை உண்டு”. (36)

   1983லிருந்து இல‌ங்கை அர‌சு மேற்கொண்ட‌ ந‌ட‌வடிக்கைக‌ளுக்கும், த‌மிழீழ‌ விடுத‌லை புலிக‌ளுக்கும் இந்த‌ தீர்மானத்திலுள்ள‌ வாசகங்கள் சாலப் பொருந்தும்.  த‌மிழீழ‌ விடுதலைப் புலிக‌ள் ஒரு குறிப்பிட்ட‌‌ கால‌த்திற்குப் பிற‌கு அனைத்துல நாடுகளின்‌ ம‌னித‌ உரிமை ச‌ட்ட‌ங்க‌ளுக்கு புற‌ம்பாக‌ ந‌ட‌ந்தார்க‌ள்.
  ”தீவிர‌வாத‌ம்” என்ற பெயரால் குறிப்பிடப்படும் ப‌டுகொலைக‌ளும், வ‌ன்முறைக‌ளும் என்னை வ‌ருத்த‌திற்கு உள்ளாக்குகின்ற‌ன‌. இல‌ங்கையில் போரில் ஈடுப‌ட்டுள்ள‌ இர‌ண்டு த‌ர‌ப்புமே என்னை பொருத்த‌வ‌ரை தீவிர‌வாதிக‌ள் தான்.தான் கொலை செய்ய‌ப்ப‌டுவோம் என‌ முன்பே யூகித்த சிங்கள ப‌த்திரிகையாள‌ர் ம‌னிலால் விக்ர‌ம‌துங்க இல‌ச‌ந்தாவின் க‌டைசிக் க‌ட்டுரையை அவ‌ர் ப‌ணி புரிந்த‌ “தி ச‌ண்டே லீடர்” நாளித‌ழ் அவ‌ர் கொல்லப்பட்டு மூன்று நாள் க‌ழித்து வெளியிட்டிருந்த‌து. இவ‌ர‌து இந்த‌ வாச‌க‌ங்க‌ள் ப‌ல‌ முறை ப‌ல‌ ப‌த்திரிகைக‌ளால் வெளியிட‌ப்ப‌ட்டுள்ள‌ன‌.

 ” தீவிர‌வாதிக‌ளாலோ அல்லது அர‌சினாலோ மேற்கொள்ள‌ப்ப‌டும் தீவிர‌வாத‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ள் எல்லாமே இந்நாட்க‌ளில் அன்றாட நிகழ்வாக‌‌‌ மாறி விட்ட‌து. படுகொலை என்பது விடுத‌லையின் க‌ர‌ங்க‌ளை வெட்ட‌ அர‌சின் பிரதான‌ க‌ருவியாக மாறிவிட்டது……”

  “இல‌ங்கை வெளிப்ப‌டையான‌, ம‌த‌ச்சார்ப‌ற்ற‌, சுத‌ந்திர‌ ச‌ன‌நாய‌க‌ நாடாக‌ வேண்டும் என்பதே எங்க‌ள‌து நோக்க‌ம் . நான் ம‌த‌ச் சார்பின்மை அவசியம் என்று கருதக் காரணம் இல‌ங்கை ப‌ல‌ இன‌, ப‌ல பண்பாடுகளைக் கொண்ட‌‌ ச‌மூக‌ங்களைக் கொண்ட நாடு. ம‌த‌ச்சார்பின்மையே எல்லா ம‌க்க‌ளும் ஒன்றாக‌ இணைய‌ உத‌வும் ஒரே த‌ளமாகும்”.

 ”….நாங்க‌ள் தொட‌ர்ச்சியாக‌ பிரிவினைவாத‌ தீவிர‌வாத‌த்தை நீக்கவேண்டுமென‌‌ எங்க‌ள் கருத்தை வலியுறுத்தியுள்ளோம். அதே நேரம், தீவிர‌வாத‌த்தின் மூல‌ கார‌ண‌ங்க‌ளை கண்டறிவதவும், தமிழின‌ப் போராட்ட‌த்தை “தீவிரவாதம்” என்ற முத்திரை குத்தாமல் ஒரு வரலாற்றுப் பார்வை கொண்டு அணுக‌‌ வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றோம். ”தீவிர‌வாத‌த்திற்கு எதிரான‌ போர்” என்ற பெயரில் அரசு மேற்கொள்ளும் பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்த்துள்ளோம். இல‌ங்கை என்ற‌ ஒரே ஒரு நாடு தான் த‌ன் சொந்த‌ ம‌க்க‌ளின் மீதே தொட‌ர்ச்சியாக‌ குண்டுக‌ளை வீசி படுகொலை செய்துவருகின்றது என்ற கொடுமையையும் ஒளிவு ம‌றைவுமின்றிக் கூறுகின்றோம்”.

 “இந்த பூமியை அழிக்க வந்த “இரத்த வெறி பிடித்த, இரக்கமற்ற” தீவிரவாத இயக்கங்களுள் ஒன்று தான் புலிகள் அமைப்பும். அவ‌ர்க‌ள் க‌ண்டிப்பாக‌ இந்த‌ மண்ணில் இருந்து துடைத்தெறியப்ப‌ட‌வேண்டும் என்ப‌தில் எனக்கு எவ்வித ஐயமும் இல்லை. அதே நேர‌த்தில் த‌மிழ் ம‌க்க‌ளின் உரிமையை ப‌றித்து, அவ‌ர்க‌ளை துப்பாக்கியாலும், வெடிகுண்டுக‌ளாலும் ஈவு இரக்கமின்றி கொன்றழிப்பது தவறு மட்டுமல்ல‌, புத்த‌ரின்  வழிவந்த‌ சிங்க‌ள‌வ‌ர்க‌ளுக்கு இது அவ‌மானமும் கூட‌. இது போன்ற படுகொலைக‌ள் ஊட‌க‌ங்க‌ளின் மீதான‌ த‌டையினால் நிரந்தரமாக‌ பொது ம‌க்களிட‌மிருந்து ம‌றைக்க‌ப்ப‌ட்டு வ‌ருகின்ற‌ன‌…..”

“த‌மிழ் ம‌க்களை சுயமரியாதை அற்ற இர‌ண்டாம் த‌ர‌ குடிம‌க்க‌ளாக மாற்றி, அவ‌ர்க‌ள் வாழ்ந்த‌ வ‌ட‌க்கு, கிழக்கு பிராந்தியங்களில் நிரந்தர‌ இராணுவ‌ ஆக்கிர‌மிப்பை உள்ளாக்கிவிட்டீர்கள். அரசே இது போதாதா?….”

 ”நான் இர‌ண்டு முறை கொடூரமாக தாக்க‌ப்ப‌ட்ட‌தும், என‌து வீடு துப்பாக்கியால் ச‌ல்லடையாக‌ துளைக்க‌ப்ப‌ட்ட‌தும் நீங்க‌ள் எல்லாம் அறிந்த‌தே. அர‌சின் உறுதியான‌ உத்திர‌வாத‌த்தின் பின்னும் இந்த‌ கொடுஞ்செய‌ல்க‌ளில் ஈடுப‌ட்ட‌வ‌ர்க‌ள் இன்னும் க‌ண்டு பிடிக்க‌ப்ப‌ட‌வில்லை அல்லது க‌ண்டுபிடிக்க‌ காவ‌ல் துறை எந்த‌ முய‌ற்சியும் எடுக்க‌வில்லை. இந்தக் கொலை முய‌ற்சிக‌ள் எல்லாம் அர‌சால் ஊக்குவிக்க‌ப்ப‌ட்ட‌வையே என்று கருத ஆதாரமிருக்கிறது. நான் ஒரு வேளை கொல்ல‌ப்ப‌ட்டால் என்னைக் கொன்ற‌து இல‌ங்கை அர‌சாக‌த் தான் இருக்கும்”.

 ”பொதும‌க்க‌ளுக்குத் தெரியாத இன்னொரு உண்மையும் உண்டு. இலங்கை அதிப‌ர் ம‌கிந்தாவும் நானும் கால் நூற்றாண்டு கால‌ நண்ப‌ர்க‌ள்….. என்ன‌ ஒரு வேடிக்கையான உண்மை ம‌கிந்தா! உங்க‌ள‌து இள‌மைக்கால‌த்தில் நீங்க‌ள் க‌ன‌வு க‌ண்ட‌ ந‌ம‌து தேச‌ம் உங்க‌ளால் மூன்றே ஆண்டுக‌ளில் முற்றிலுமாக‌ அழிக்க‌ப்ப‌ட்டுவிட்ட‌து. இந்த‌ தேச‌த்தை நேசிப்பதாகக் கூறிக்கொண்டு நீங்க‌ள் ம‌னித‌ உரிமைகளை முற்றிலுமாக‌ குழி தோண்டி புதைத்து விட்டீர்க‌ள். மேலும் வரம்பற்ற ஊழலையும் வ‌ள‌ர்த்து விட்டீர்க‌ள், இதுவ‌ரை ப‌த‌வி வ‌கித்த‌ எந்த‌ ஒரு அதிப‌ரும் கொள்ளைய‌டிக்காத‌ அள‌விற்கு பொதும‌க்களின் ப‌ண‌த்தை நீங்க‌ள் கொள்ளைய‌டித்துள்ளீர்க‌ள்…..”(37)

இல‌ச‌ந்தாவின் ம‌ர‌ண‌ சாச‌ன‌மான‌ இந்த‌ த‌லைய‌ங்க‌ம் வ‌ருவ‌த‌ற்கு முன்பே அவ‌ர் வேலைக்கு வ‌ரும் வ‌ழியில் மோட்டார் வ‌ண்டியில் வ‌ந்த‌ நான்கு ந‌ப‌ர்க‌ளால் சுட்டுக் கொல்ல‌ப்ப‌ட்டார். இந்த‌ திட்ட‌மிட்ட‌ கொலைக்குப் பின்னால் இருப்ப‌தாக கருத‌‌ப்ப‌டுப‌வ‌ர் இல‌ச‌ந்தாவின் ந‌ண்ப‌ரின் த‌ம்பியும் போர் செய‌ல‌ரும், வட‌அமெரிக்காவில் பிற‌ந்து  வ‌ள‌ர்ந்தவருமான கோத்த‌ப‌யா இராச‌ப‌க்சேவே. கோத்த‌ப‌யாவின் செய‌ல்க‌ளின் மீது விம‌ர்ச‌னம் செய்த‌தால் 2008 டிச‌ம்ப‌ரில் இவ‌ர் “ச‌ண்டே லீட‌ர்” ப‌த்திரிக்கைக்கு தடை விதித்திருந்தார். மேலும் அந்த‌ ப‌த்திரிகையில் ப‌ணிபுரியும் எழுத்தாள‌ர்களுக்கும், அதை விற்ப‌வ‌ர்க‌ளுக்கும் கொலை மிர‌ட்ட‌ல் விடுத்துள்ளார்.(38)

 இல‌ச‌ந்தாவின் கொலைக்கு ஒரு வார‌த்திற்கு முன்ன‌ர் தான் கோத்த‌ப‌யாவின் இராணுவ‌ம் த‌மிழீழ‌த்தின் த‌லைந‌க‌ரான‌ கிளிநொச்சி ப‌குதியை கைப்ப‌ற்றிய‌து. புலிக‌ள் அங்கிருந்து வெளியேறிய‌ பின்னர் கூட‌ பொது ம‌க்க‌ள் சில‌ர் வாழ்ந்து வந்தார்கள். இராணுவ‌ம் அங்கு வாழ்ந்து வந்த‌‌ நூற்றுக்க‌ண‌க்கான‌ ம‌க்களைக் கொன்றொழித்த‌து. ஆக‌த்து 25, 2009 அன்று இங்கிலாந்து ஊட‌க‌மான‌ “சேன‌ல் 4″ இல‌ங்கை இராணுவ‌ம் ஒன்ப‌து த‌மிழ் இளைஞ‌ர்க‌ளை நிர்வாண‌மாக்கி சுட்டுக் கொன்ற‌ காணொளியை தனது செய்தி அறிக்கையில் ஒளிப‌ர‌ப்பிய‌து. இந்த வன்முறையை இராணுவ‌ வீர‌ர் ஒருவர் அவ‌ர‌து அலைபேசியின் மூல‌ம் படம் பிடித்துள்ளார். இல‌ங்கையில் ச‌ன‌நாய‌த்திற்காக‌ பாடுப‌டும் ஊட‌க‌விய‌லாள‌ர்க‌ள் (சிங்க‌ள‌ ம‌ற்றும் த‌மிழ‌ர்க‌ள்) இந்த‌ காணொளியைக் கைப்ப‌ற்றி “சேன‌ல் 4″ ற்கு அனுப்பி உள்ள‌ன‌ர். அவ‌ர்க‌ளும் காணொளியின் உண்மைத் த‌ன்மையை பரிசோதித்த‌ பின்னரே செய்தியில் வெளியிட்டுள்ளார்க‌ள்.

 வட‌அமெரிக்க‌ அர‌சாங்க‌ம் இல‌ங்கையின் இராணுவத் தாக்குதலைப் பாராட்டிய‌து.” கொழும்பில் உள்ள வட‌அமெரிக்க‌ தூத‌ர‌க‌ம் த‌ன‌து அறிக்கையில் ”வட‌அமெரிக்க‌ அர‌சு இல‌ங்கைக்கும் புலிக‌ளுக்கும் இடையே எந்த‌வித‌ ச‌ம‌ர‌ச‌ பேச்சுவார்த்தையும் ந‌டத்தும் படி வலியுறுத்தாது” என‌க் கூறியது.(39)

 போரில் ஏற்பட்ட மோசமான தோல்விக்குப் பின்னர் சில‌ ச‌துர‌ கிலோ மீட்ட‌ர் ப‌ர‌ப்புதான் புலிகள் வசமிருந்தது. ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ள் தங்க‌ள‌து வாழ்விட‌ங்க‌ளை விட்டு ச‌ன‌வ‌ரி 20, 2009அன்று இல‌ங்கை இராணுவம் ஏற்ப‌டுத்திய “பாதுகாப்பு வ‌ளைய‌ங்க‌ளுக்கு” சென்றார்கள். ஆனால் இந்த முகாம்களோ மனிதர்கள் வாழத் தகுதியற்ற நிலையில் இருந்தன‌(நான் இதை எழுதுகின்ற‌ நேர‌த்தில் ஏற‌க்குறைய‌ இர‌ண்டு இல‌ட்ச‌த்து ஐம்ப‌தாயிர‌ம் ம‌க்க‌ள் வாழ்வதற்கு தகுதியற்ற அந்த‌ முகாம்க‌ளில் இன்னும் உள்ளார்கள்). அவ‌ர்க‌ள் அங்கேயே இருக்க‌ நிர்ப‌ந்திக்க‌ப்ப‌டுகின்றார்க‌ள்.  எந்த‌ ஒரு அர‌சிட‌ம் இருந்தும் நிதி உதவியை பெறாத‌‌ நம்பகமான ம‌னித‌ உரிமை அமைப்புக‌ளில் ஒன்றான‌ ச‌ர்வ‌தேச‌ ம‌ன்னிப்பு ச‌பை அண்மையில் இந்த‌ முகாம்களைப் ப‌ற்றிய‌ ஆய்வ‌றிக்கை வெளியிட்டுள்ள‌து.

 ”இல‌ங்கை  அர‌சு ஐநாவின் இடப்பெயர்வுக்கு உள்ளாக்கப்பட்ட‌‌ மக்களுக்கான சர்வதேச‌ விதிமுறைக‌ளை மீறி இட‌ப்பெய‌ர்வு முகாம்க‌ளில் குடியுரிமைகளை மறுத்து பொதும‌க்க‌ளை அடைத்து வைத்துள்ள‌து”. (40)

போர்க்கால‌த்தில் அங்கு வாழ்ந்த‌ ம‌க்க‌ளின் பொதுவான‌ க‌ருத்து:

 ” பொது ம‌க்க‌ளால் அங்கிருந்து ந‌க‌ர‌முடியாது என்க‌றிந்த‌ பின்னும் அர‌சு மீண்டும் எரிக‌ணை வீச்சுக‌ளை தொட‌ர்ந்துள்ளது. பாதுகாப்பு வ‌ளைய‌ங்க‌ளில் இருந்தவ‌ர்களின் மீதும் எறிகணைகளை வீசியுள்ள‌‌து. அதிவேக‌ க‌ஃபீர் வ‌கை போர் விமான‌த்தின் சத்தத்தைக் கேட்ட‌ உட‌னே நாங்க‌ள் ஓடிச் சென்று ப‌துங்கு குழிக‌ள் ம‌றைந்துகொள்வோம். சில‌ மாத‌ங்க‌ளுக்கு ப‌துங்கு குழிக‌ளில் உட்கார்ந்திருப்பதே எங்கள் விதியாகிப் போனது…”

மேலும் சர்வதேச மன்னிப்பு சபை கூறுகையில் ”இல‌ங்கை அர‌சு வெளிநாட்டு பார்வையாளர்களை போர்ப் ப‌குதிக்குள் வ‌ருவ‌தை த‌டை செய்த‌த‌ன் மூல‌ம், போர்ப்ப‌குதியை மேலும் த‌னிமை ப‌டுத்திய‌து. 2008 செப்ட‌ம்ப‌ரில் போர் செய‌ல‌ர் கோத்த‌ப‌யா எல்லா ம‌னித‌ உரிமை அமைப்புக‌ள் ம‌ற்றும் ஐநாவைச் சேர்ந்த‌வ‌ர்க‌ளையும் அவ‌ர்க‌ள‌து பொருட்களையும், வண்டிகளையும் எடுத்துக் கொண்டு போர்ப் ப‌குதியை விட்டு உடனே வெளியேறுமாறு அதிகார‌ பூர்வ‌ அறிக்கையை நேர‌டியாக‌வே வெளியிட்டார். மேலும் இந்த‌ அறிக்கையான‌து ஊட‌க‌விய‌லாள‌ர்க‌ள், எதிர்க‌ட்சிக‌ள், ம‌ற்ற‌ ம‌னித‌ உரிமை அமைப்புக‌ள் என எல்லா தரப்பினரையும் போர் ப‌குதியான‌ வ‌ன்னியை விட்டு வெளியேற உத்தரவிட்டது.(40)

இல‌ங்கையின் இந்த‌ த‌னிமை ப‌டுத்தும் திட்ட‌த்தை ஜான் பில்ஜ‌‌ர் இவ்வாறு கூறுகின்றார்.

 ” இல‌ங்கை அர‌சான‌து த‌ன‌து நவீன குருவான‌ இசுரேலிட‌ம் இருந்து ஒரு ப‌ழைய‌ பாட‌த்தைக் க‌ற்றிருக்கிறது என்று நான் கருதுகிறேன். ஒரு கொலையையோ, பாலிய‌ல் வ‌ன்கொடுமையையோ, ச‌ட்ட‌ விரோதச் செய‌லையோ செய்வ‌த‌ற்கு முன்ன‌ர் அந்தப் ப‌குதியிலிருந்து அன்னிய‌ர்க‌ளை வெளியேற்று என்ப‌தே அந்தப் பாடம். இதற்கு ஒப்ப‌ இல‌ங்கை அரசு த‌மிழ‌ரின் ப‌குதியான‌ முள்ளிவாய்க்காலில்(க‌டைசி க‌ட்ட‌ ச‌ண்டை ந‌டை பெற்ற‌ இட‌ம்) அந்நிய‌ர்க‌ளையும், அவ‌ர்க‌ள‌து ஊட‌க‌ங்களையும் த‌டை செய்த‌து. த‌மிழ‌ர்க‌ளின் ப‌குதியில் இய‌ங்கி வ‌ந்த‌ ம‌ருத்துவ‌மனையில் இருந்த 75பேரைக் கொன்றுள்ள‌து. இந்த கொலையை செய்தது த‌மிழ் த‌ற்கொலைப் போராளி தான் என்று‌ பொய் சொல்லியது” (12)

 2006-07 ல் அதிப‌ர் இராச‌ப‌க்சே நாட்டின் மொத்த‌ வ‌ர‌வு செலவு தொகையில்(75 கோடி டாலர்) ஐந்தில் ஒரு ப‌குதியான‌ 15 கோடி டால‌ரை போருக்காக‌ செல‌விட்டுள்ளார். த‌மிழ‌ர்க‌ளின் பூர்விக‌ நில‌த்தில் பெரும்ப‌குதியை கைப்ப‌ற்றிய‌ இராணுவத்திற்கு இசுரேல், பாகிசுதான், ம‌ற்றும் சீனா, இந்தியா போன்ற‌ நாடுக‌ள் போர்க்க‌ருவிகளையும், போர்ப்ப‌யிற்சியையும் கொடுத்து மேலும் ப‌ல‌ப்ப‌டுத்தினார்கள். 2008ஆம் ஆண்டின் இறுதியிலிருந்து புலிக‌ளை வெல்லும் வ‌ரையிலும் இல‌ங்கை இராணுவ‌ம் தாங்க‌ள் உண்டாக்கிய‌ பாதுகாப்பு வ‌ளைய‌ங்க‌ளில் வாழ்ந்த‌ த‌மிழ் பொது ம‌க்க‌ளின் மீது ச‌ட்ட‌ விரோத‌மாக‌ ப‌ல‌ முறை குண்டுகளையும், எறிகணைகளையும் வீசி ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ளை கொன்றுள்ள‌து.

“த‌மிழீழ‌த்தின் த‌லைந‌க‌ரான‌ கிளிநொச்சியின் வீழ்ச்சிக்கு பின்ன‌ரும் அதி ந‌வீன‌ போர் க‌ருவிக‌ளையும், அதிக‌ எண்ணிக்கையிலான‌ வீர‌ர்ளையும் கொண்ட‌ இல‌ங்கை இராணுவ‌த்திற்கு புலிக‌ளின் இராணுவ‌த்தை வீழ்த்த‌ ஐந்த‌ரை மாத‌ங்க‌ள் தேவைப்ப‌ட்டுள்ள‌து. இதில் ப‌ல நேருக்கு நேரான‌‌ க‌ள‌முனைக‌ளும் உண்டு. இதில் சமராடிய புலிப் போராளிகள் மீதும், மீதப்‌ ப‌குதியில் வாழ்ந்த‌ பொதும‌க்க‌ள் மீதும் குண்டுவீச்சுக‌ளையும் தொலை தூர‌ எறிக‌ணை வீச்சுக‌ளையும் மேற்கொண்ட‌து இல‌ங்கை அர‌சு” என‌ ச‌ர்வ‌தேச‌ ம‌ன்னிப்பு ச‌பை குற்றம் சாட்டியுள்ளது.

“க‌டைசி க‌ட்ட‌ போரில் அங்கு வாழ்ந்த‌வ‌ர்க‌ள் உணவோ, குடி நீரோ, அடிப்ப‌டை ம‌ருத்துவ‌ உதவியோ இல்லாமல் வாழ நிர்பந்திக்கப்பட்டுள்ளார்கள்”. புலிகளும், அர‌ச‌ ப‌டைகளும்  சரி அனைத்துல மனித‌ விதிகளை பலமுறை மீறியுள்ளார்கள். இந்த சண்டையில் சிக்குண்ட பொது மக்கள் பயத்தோடும், படு காயங்களோடும் பல குடும்ப உறுப்பினர்களை இறந்த துயரத்துடனும், அல்லல்பட்டும் கொண்டிருந்தார்கள். ப‌ல‌ர் த‌ங்க‌ள் வாழ்வையே ப‌றிகொடுத்தும் வ‌ந்துள்ள‌ன‌ர். இல‌ங்கையின் தாக்குத‌லிருந்து த‌ப்புவ‌த‌ற்காக‌ ம‌க்க‌ளை ம‌னித‌ கேட‌ய‌ங்க‌ளாக‌ ப‌ய‌ன்ப‌டுத்தியும், குழ‌ந்தைக‌ளை போரில் ஈடுபடுத்தியும் அங்கிருந்து வெளியேறும் ம‌க்க‌ளை தாக்கியும் உள்ள‌து புலிக‌ள் அமைப்பு. இல‌ங்கை அரசோ ம‌க்க‌ள் நெருக்கமாக இருந்த‌ ப‌குதிக‌ளில் எறிக‌ணை வீசியும், ம‌ருத்துவ‌ம‌னை மீது குண்டு வீசி அங்கிருந்த‌ நோயாளிகளையும், ம‌ருத்துவ‌ம‌னை ஊழிய‌ர்களையும், காயமடையவும், படுகொலை செய்யப்படவும் காரணமாயிற்று.(40)

 த‌மிழராக பிறந்த அனைவரையும் கொன்று இல‌ங்கையின் இராணுவ‌ம் வெற்றி பெற்றுள்ள‌து. ப‌ல‌ முத‌லாளித்துவ‌ நாடுகளும், சோச‌லிச‌ நாடுக‌ள் என்று த‌ங்க‌ளை கூறிக்கொள்ளும் நாடுகளும் வழங்கிய‌‌ த‌டையில்லாத இராணுவ‌ ஆத‌ரவே இந்த வெற்றியை சாத்தியப்படுத்தியது. இங்கே இந்த போரின்‌ முக்கிய‌ ப‌ங்குதார‌ர்க‌ளை ப‌ற்றி கூறுகின்றேன்.

1) இந்தியா 1987லிருந்து இல‌ங்கைக்கு போர்க்க‌ருவிகள், கதுவி (Rador) ம‌ற்றும் போர் ப‌யிற்சியையும் வ‌ழ‌ங்கி வ‌ருகின்ற‌து. ஆனால் பெரும்பாலான‌ நேர‌ங்க‌ளில் இந்தியா இல‌ங்கைக்கு என்ன‌ உத‌வி செய்த‌து என்ப‌தை இரகசியமாக வைத்தே வந்துள்ளது. இலங்கை அரசு தமிழர்களின் மீது நடத்தி வந்த இனவெறி தாக்குதல்களால் இந்தியர்கள் கோபமுற்றொருந்ததே இதற்கு காரணமாகும். இதனால் கொஞ்ச காலத்திற்கு இலங்கைக்கு இராணுவ உதவியை நிறுத்தி வைத்த இந்திய அரசு, 2008ன் இறுதியில் இலங்கை அரசு தமிழர்களை முற்றிலுமாக அழித்தொழிக்கும் போரை தொடங்கியவுடன் பன்மடங்கு இராணுவ உதவியளித்தது. ஏப்ர‌ல் 2009ல் மூன்று அதிவிரைவு க‌ட‌ற்ப‌டை க‌ப்ப‌ல்க‌ளையும், ஒரு ஏவுக‌ணையை செலுத்தும் போர்க்க‌ப்ப‌லையும் 500 மில்லியன் டாலர் க‌டனை‌ இல‌ங்கைக்கு வழங்கியது. இவ்வாறு புலிகளை முற்றிலுமாக அழித்தொழிக்கும் உரிமை இலங்கைக்கு இந்தியா வழங்கியது. தெற்காசிய‌ பிராந்திய‌த்தில் அது வ‌ரை ஆதிக்க‌ம் செலுத்தி வ‌ந்த‌ இந்தியா வேக‌மாக‌ வ‌ள‌ர்ந்து வ‌ரும் சீனாவை ஒதுக்க திட்டமிட்டது. அதற்காகவே 1 விழுக்காடு ம‌க்க‌ள் ம‌ட்டுமே பின்பற்றி வந்த பௌ‌த்த ஆட்சி மதமாக கொண்ட‌ இல‌ங்கைக்கு த‌ன‌து உத‌வியை தொட‌ர்ந்து செய்துவந்தது.இந்தியாவிற்கு என்று திட்டமிட்ட வெளியுறவுக் கொள்கை என்று எதுவுமில்லை. எதிரியின் எதிரி என‌து ந‌ண்ப‌ன் என்ற கொள்கையை பின்பற்றியது இந்தியா.

2) வட‌அமெரிக்கா: பொருளாதார‌ ம‌ற்றும் இராணுவ‌ உத‌விக‌ளை இல‌ங்கைக்கு உள்நாட்டு போரின் ஆர‌ம்ப‌ கால‌க‌ட்ட‌த்தில் இருந்தே வழங்கி வ‌ருகின்ற‌து.(41) இந்து ம‌கா ச‌முத்திர‌ம் க‌ட‌ல் வ‌ழி ச‌ர‌க்கு போக்குவ‌ரத்திலும், எரிபொருள் போக்குவ‌ர‌த்திலும் ஒரு முக்கிய‌ பங்கு வ‌கிக்கின்ற‌து. இத‌னால் அமெரிக்கா 2007 மார்ச் 5ல் இல‌ங்கையுட‌ன் பத்தாண்டு கால‌‌ ப‌ரிவ‌ர்த்த‌னை ஒப்ப‌ந்தத்தில் கையெழுத்திட்ட‌து. வியாபாரத்திற்கும், பரஸ்பர சேவைக்கும் இந்த‌ ஒப்ப‌ந்த‌ம் வ‌ழிவ‌கை செய்கிறது. மேலும் வட அமெரிக்கா இராணுவ தளவாடங்களை நிறுத்தி வைக்கவும், கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்பி கொள்ளவும் இந்த ஒப்பந்தம் வழிவகை செய்கின்றது. ஏற்க‌ன‌வே வட‌அமெரிக்கா இல‌ங்கையின் திரிகோண‌ம‌லை ப‌குதியில் த‌னது வானொலி நிலைய‌மான  “அமெரிக்காவின் குர‌லை” அங்கு நிறுவி அத‌ன் மூல‌ம் தெற்காசிய‌ நாடுகளை உளவு பார்க்கும் வேலையையும் செய்து வ‌ருகின்ற‌து. குறைந்த‌ப‌ட்ச‌ம் 1990க‌ளிலிருந்து வட‌அமெரிக்கா இல‌ங்கைக்கு இராணுவ ப‌யிற்சியையும், போர் க‌ருவிகளையும் பதினைந்து இலட்சம் டாலர் பெருமான ஆயுதங்களை விற்று வ‌ந்துள்ள‌து. இது போர் நிறுத்த‌ கால‌மான‌ 2002ல் 2,60,000 டாலர் என்ற அள‌விற்கு குறைந்து போனது. இதுவும் கூட இராணுவ பயிற்சி கட்டணம் மட்டுமே. இலங்கையின் அரச பயங்கரவாத நடவடிக்கைகளால் புலகாங்கிதமடைந்த அதிபர்.புசு மீண்டும் உள்நாட்டுப் போரைத் தொடங்குவதற்காக, கொழும்பிற்கு 29,00,000 டாலர் அளவிற்கு புதிய உதவியை வழங்கினார். வட அமெரிக்காவின் இராணுவ தலைமையகமான‌ பென்ட‌க‌ன் மூல‌ம் அரச‌ எதிர்ப்பு குழுக்க‌ளை அழிப்பதற்கான‌ ப‌யிற்சியையும், ஒரு கதுவி (Rador), பல ரோந்து கப்பல்களையும், சில‌ போர் விமான‌ங்க‌ளையும் இலங்கைக்கு வழங்கியது. புஷ்சின் இர‌ண்டாவ‌து ஆட்சி கால‌த்தில் வட‌அமெரிக்கா ஆப்கனிலும், ஈராக்கிலும் போரில் ஈடுப‌ட்டிருந்த‌தால் ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கான‌ உத‌விக‌ளை குறைத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தமேற்பட்டது. இத‌ற்கு புல‌ம்பெய‌ர் வாழ் த‌மிழ் ம‌க்க‌ளின் எதிர் வினைக‌ளும் ஒரு கார‌ண‌மாகும். வட‌அமெரிக்க‌ காங்கிர‌சு சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் தமிழர்கள் மீதான திட்டமிட்ட வன்முறையையும், மனித உரிமை மீறல்களையும் கண்டித்தது. அர‌சின் எல்லைபாதுகாப்பு ப‌டையில் குழ‌ந்தைக‌ளை ப‌ணிய‌ம‌ர்த்திய‌தையும் இது க‌ண்டித்த‌து. 2008ல் 1.45 மில்லியன் டாலர் மதிப்புள்ள‌ போர் க‌ருவிகளையும், ப‌யிற்சியையும் உள்ளிட்ட‌ 7.4 மில்லியன் டாலட் மதிப்பு கடனை இல‌ங்கைக்கு வழங்கிய‌‌து. போரின் இறுதி க‌ட்ட‌த்தில் ம‌ட்டுமே ம‌னித‌ உரிமை மீற‌ல்க‌ள் ந‌டைபெறுவ‌தாக‌ கூறியது வட‌அமெரிக்கா. மக்களை பாதுகாப்பதற்காக அல்லாமல் சீனவை இந்திய பெருங்கடல் பகுதியிலிருந்து அகற்ற வேண்டுமென்ற ஒரு நோக்கித்திற்காக தான் இதை கூறியது வட அமெரிக்கா. எந்த‌ ஒரு நேர‌த்திலும் போரை நிறுத்துவ‌ற்கான‌ முய‌ற்சியை வ‌ட‌அமெரிக்கா மேற்கொண்டதே இல்லை.
3) இசுரேல் இல‌ங்கை அர‌சின் அர‌சிய‌ல் ஆலோச‌க‌ராக‌ ப‌ல‌முறை கௌர‌விக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. 1970க‌ளில் பாலசுதீன பகுதிகளில் இசுரேலில் விரிவாக்கத்தை கண்டித்து இசுரேலுடனான அரசுமுறை உறவுகளை இலங்கை துண்டித்து விட்டது. இருந்த போதிலும் இலங்கையிலுள்ள வட அமெரிக்க தூதரகத்தினுள் இசுரேலில் இரகசிய அலுவலகம் இயங்கி வந்தது. மே 2000ல் இலங்கை இசுரேலுடனான அரச உறவுகளை புதுப்பித்து கொண்டது. இல‌ங்கையில் தொடர்ச்சியாக ஆட்சியிலிருந்த‌‌ அர‌சுக‌ள் இசுரேலுட‌ன் மரைமுகமாக ந‌ட்புற‌வையே கொண்டிருந்த‌ன‌. இசுரேல் த‌ன‌து உள‌வுப‌டை வீர‌ர்க‌ளையும், தீவிர‌வாத‌ எதிர்ப்பு சிற‌ப்பு காவ‌ல்ப‌டை வீர‌ர்க‌ளையும் இல‌ங்கைக்கு அனுப்பி பயிற்சி கொடுத்து வ‌ந்த‌து. மொசாட் அமைப்பே இசுலாமிய‌ர்களுக்கும், த‌மிழ‌ர்க‌ளுக்கும் இடையே பிர‌ச்ச‌னையை தோற்றுவித்தது. இல‌ங்கை இராணுவ‌த்தின் யானையிர‌வு தோல்விக்கு பின்ன‌ர் இசுரேல் 16 க‌ஃபீர் வ‌கை அதிவேக‌ போர்விமான‌ங்க‌ளையும், கப்பலை தாக்கியழிக்கும் போர் விமானங்களையும், சில‌ செய‌ற்கைகோள் புகைப்ப‌ட‌ க‌ருவிகளையும், ஒரு சிற‌ப்பு ஆலோச‌னை குழுவையும், தொழில்நுட்ப‌ குழுவினரையும் இல‌ங்கைக்கு அனுப்பிய‌து. இசுரேலின் வீர‌ர்க‌ள் த‌மிழ‌ர்க‌ளுக்கு எதிரான‌ போரில் ஈடுப‌ட்ட‌ இராணுவ‌த்தில் இடம் பெற்றிருந்தார்கள், இசுரேல் விமானிக‌ளே க‌ஃபீர் வ‌கை விமான‌ங்க‌ளை ஓட்டியுள்ளார்கள், அவற்றை ஓட்டுவதற்கான பயிற்சியை அளித்தும் வந்துள்ளார்கள். போரின் இறுதி க‌ட்ட‌த்தில் புலிக‌ள் ஒரு க‌ஃபீர் போர் விமான‌த்தை சுட்டு வீழ்த்தினார்கள். போரின் இறுதிக‌ட்ட‌த்தில் இல‌ங்கை பிர‌த‌ம‌ர் விக்ர‌நாய‌கே இசுரேலுக்கு சென்று பெருமளவு போர்க‌ருவிக‌ளை வாங்குவதற்கான‌‌ ஒப்ப‌ந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார்.(42)

4) பிரிட்ட‌ன் ம‌ற்றும் ஐரோப்பிய நாடுக‌ள்: இலங்கைக்கு போர்க்கருவிகளை வ்ழங்கியதால் பிரிட்டனின் ஏற்றுமதி 60% உயர்ந்ததாக‌ சான் பிளைஞ‌ர் கூறுகிறார்.(12) 2008ல் பிரிட்ட‌ன் அர‌சு 1.4 மில்லியன் பௌண்ட் பெறுமதியான‌ போர் க‌ருவிகளை இலங்கைக்கு ஏற்றும‌தி செய்ய‌ அங்கீகாரமளித்தது. பிரான்சு ரோந்து ப‌ட‌குக‌ளை வ‌ழ‌ங்கிய‌து. ம‌ற்ற‌ ஐரோப்பிய‌ நாடுகளும் சிறிய‌ அளவில் இருந்தாலும் தொட‌ர்ச்சியான இராணுவ உத‌வியை அளித்து வ‌ந்த‌ன. ஏற்கனவே இல‌ங்கை அரசின் முக்கிய‌‌ நட்பு நாடுகள் தேவையான‌‌ உதவியை அளித்திருந்ததால், ஐரோப்பிய யூனியன் இலங்கைக்கு பெரிய‌ அளவில் உதவ‌ வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது.

5) இலங்கைக்கு பொருளாதார உதவி அளிப்பதில் முதலிடத்தில் சப்பானே இருந்து வந்தது. 2008.09ல் தான் சீனா அந்த இடத்தை பிடித்தது. சப்பான் தொழில்நுட்ப உதவியையும், பெரும் பணத்தையும் கடன்களாக இலங்கைக்கு ஆண்டுதோறும் வழங்கி வந்தது. குறிப்பாக‌ 1997ல் இது 52 மில்லியன் டாலர் க‌ட‌ன்க‌ளை வழ்ங்கிய‌து. கூட்டுத் தொழில் முயற்சிகளுக்காக 20 மில்லியன் டாலரை கொடுத்துதவியது. இது 2001ல் 310 மில்லியன் டாலர் அள‌விற்கு அதிக‌ரித்த‌து. மேலும் ச‌ப்பான் அர‌ச‌ தொலைக்காட்சி நிறுவ‌ன‌மான‌ ரூப‌வாகினி அமைக்க‌ உத‌விய‌து. ச‌ப்ப‌னின் உத‌விக‌ள் போர் உத‌விக‌ள் அல்ல .ஆனால் இந்த‌ உத‌விக‌ள் மறைமுகமாக‌ இல‌ங்கையை த‌ன‌து வ‌ர‌வு செல‌வில் பெரும‌ள‌வு ப‌ங்கை போருக்காக ஒதுக்க‌ உத‌விய‌து.(43) ம‌ற்ற‌ ஆசிய‌ நாடுக‌ளும் ச‌ப்பானை போல‌வே பொருளாதார‌ உத‌விக‌ளை இல‌ங்கைக்கு வ‌ழ‌ங்கி வந்த‌ன‌.

6) ஈரான்: இல‌ங்கை அர‌ச‌ க‌ருவூல‌த்தின் செயல‌ர் உல‌க‌ வ‌ங்கியிட‌ம் உங்க‌ள் உதவி (இத்தனை நிபந்தனைகளுடன்) எங்க‌ளுக்கு தேவை இல்லை என‌ போன‌ வ‌ருட‌ம் கூறினார்.(44) புலம் பெயர்ந்த மக்களின் கண்டனக்குரல்கள் எழுந்த போது அனைத்துல நாடுகளாக‌‌ த‌ங்க‌ளை அடையாளம் காட்ட விரும்பும் வட அமெரிக்கா, ஐரோப்பிய அரசுகள் இலங்கைக்கு அதுவரை அளித்து வந்த‌ உத‌விக‌ளை குறைத்து கொண்டன. த‌மிழ் ம‌க்கள் மீதான வன்முறையை‌ கேள்வி கேட்க தொடங்கினார்கள். ஆனால் இல‌ங்கையோ ஒரு நாட்டை ம‌ற்றொரு நாட்டிற்கு எதிராக திருப்பிவிட்டு விளையாடியது. இந்தியாவை வை‌த்து பாகிசுதான்,சீனாவையும், சீனாவை வைத்து வட அமெரிக்காவையும், இசுரேல், ஈரானை வைத்து லிபியாவையும், அணிசேரா நாடுக‌ளை வைத்து மேற்குல‌குக்கு எதிராக‌வும் விளையாடிய‌து . ஈரான் இல‌ங்கையின் எண்ணைய் சுத்திக‌ரிப்பிற்காக 1.9 பில்லியன் டாலரை கடனாக வ‌ழங்கிய‌து. மேலும் நீர்மின் திட்ட‌த்திற்கு 450 மில்லியன் டாலரை தானமாக‌ வ‌ழ‌ங்கிய‌து. லிபியா அர‌சும் இல‌ங்கைக்கு 500 மில்லியன் டாலர் க‌ட‌னை வ‌ழ‌ங்க‌ முன்வ‌ந்த‌து. லிபியா ஈரானுக்கு எதிரான‌ கொள்கைகையை கொண்ட‌ அரசு என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

7) பாகிசுதான் 2008ல் சீனா கொடுத்த தைரியத்தினால் இல‌ங்கையின் போர்ச் சிக்கலுக்குள் நுழைந்தது. 2009ன் ஆர‌ம்ப‌த்தில் 100 மில்லியன் டாலர் பெறுமானமான போர்க்க‌ருவிக‌ளை இலங்கைக்கு வழங்கியது. இல‌ங்கை சீனாவிலிருந்து புதிதாக‌ வாங்கிய‌ விமான‌ங்க‌ளை ஓட்ட பாகிசுதான் ப‌யிற்சி அளித்த‌து. பாகிசுதான் அமெரிக்காவுட‌ன் இணைந்து தீவிரவாதத்திற்கு எதிரான ஆப்க‌ன் போரில் வட அமெரிக்காவுடன் இணைந்து கொண்டது. இந்த‌ போரில் பாகிசுதான் கலந்து கொண்டதால் மக்களிடையே பிரிவினை ஏற்பட்டது. பாகிசுதான் கியூபா, ஆல்பா நாடுகளுக்கு தோழமை நாடாகும். ஒரே நேர‌த்தில் அணிசேரா கூட்ட‌மைப்பிலும், உல‌க‌த்திலேயெ பெரிய‌ தீவிர‌வாத‌ நாடான வட அமெரிக்காவுடன் இணைந்தும் செய‌ல்ப‌ட்டு வ‌ருகின்ற‌து பாகிசுதான்.

8) சீனா 2005ல் இல‌ங்கைப் போரின் பங்குதாரராக உள்ளே நுழைந்த‌து. சீனா வட‌ அமெரிக்காவை அடுத்தபடியாக எரிபொருள் பயன்பாட்டில் உலகின் இரண்டாவது இடத்தில் உள்ள நாடாகும். எண்ணெய் போக்குவ‌ர‌த்திற்கான‌ முக்கிய‌ பாதைக‌ள் ம‌ற்றும் க‌ட‌ல் வ‌ழிக‌ளை கைப்பற்ற‌ துவ‌ங்கிய‌து சீனா. அமெரிக்காவின் இல‌ங்கையுட‌னான‌ ஒப்ப‌ந்த‌த்திற்கு ஒரு மாதத்திற்கு பிற‌கு சீனாவின் “பாலி டெக்னால‌சி” என்ற‌ நிறுவ‌ன‌ம் 36.5 மில்லியன் டாலர் பெருமானமான போர் க‌ருவிக‌ளை இல‌ங்கைக்கு வழங்கியது. சீனாவின் உள‌வு நிறுவ‌ன‌த்துட‌ன் தொட‌ர்பு கொண்டுள்ள‌தாக‌ க‌ருத‌ப்ப‌டும் குவேய் நிறுவ‌ன‌ம் 150 மில்லியன் டாலர் அள‌விற்கு இல‌ங்கையுட‌ன் தொழில் ஒப்ப‌ந்த‌ம் ஒன்றை செய்துள்ளது. இந்த ஒப்பந்தப்படி நாட்டின் எல்லா பகுதிகளிளும் அரசு மேற்கொள்ளும் கட்டமைப்பு மற்றும் தொலைதொடர்பு பணிகளை குவேய் நிறுவனம் மேற்கொள்ளும். இதில் மிக‌ முக்கிய‌மான‌து. இல‌ங்கையின் தெற்கு துறைமுகப்ப‌குதியில் உள்ள ஹ‌ம்ப‌ன்தோட்டா என்ற‌ ப‌குதியில் சீனா த‌ன‌து எண்ணெய் போக்குவ‌ர‌த்திற்காக‌வும், க‌ட‌ற்ப‌டை க‌ப்பல்க‌ளை நிறுத்த‌வும், எரிபொருள் நிர‌ப்ப ஒரு துறைமுக‌த்தை க‌ட்டமைக்க பெரும் ப‌குதியை இல‌ங்கை வ‌ழ‌ங்கிய‌து.இந்த‌ திட்ட‌த்திற்கு இல‌ங்கை அனும‌திய‌ளித்த‌திலிருந்து புலிகளை வீழ்த்துவதற்காக இல‌ங்கையுட‌ன் ஒத்துழைக்க‌ ஆர‌ம்பித்த‌ சீனா 2007லிருந்து போர் க‌ருவிகளையும், கடன்களையும், அரசுமுறை ஒத்துழைப்பையும் மேற்குலகின் எதிர்வினை ப‌ற்றிய‌ க‌வ‌லையே இல்லாம‌ல் நல்கி வந்துல்ளது என‌ டைம்சு (பிரிட்ட‌ன்) நாளித‌ழ் எழுதியுள்ள‌து.(45) 2007ல் உத‌விய‌தை விட‌ ஐந்து ம‌ட‌ங்கு அதிக‌மாக‌ இல‌ங்கைக்கு உத‌விய‌து சீனா.இந்த உதவிகளை கொடுக்கும் போது சீனா இல‌ங்கை தொழிலாளர்களின் நிலை, சிறுபான்மையின‌ரின் நிலை ப‌ற்றிய‌ எந்த‌வித‌ கேள்வியையும் எழுப்பவில்லை. ஏப்ர‌ல் 2007ல் இல‌ங்கை சீனாவின் போர் க‌ருவிக‌ளை வாங்க‌ ஒப்ப‌ந்த‌ம் செய்த‌து. சீனா ஆறு எஃப் 7 இர‌க‌ போர் விமான‌ங்க‌ள், ஒரு நீர்மூழ்கி க‌ப்ப‌ல், விமான‌ எதிர்ப்பு பீர‌ங்கிக‌ள், ம‌ற்றும் டாங்கிக‌ள், கதுவிகள் உள்ளிட்ட போர்க்கருவிகளை வ‌ழ‌ங்கிய‌து. ஒரு எஃப் இர‌க‌ போர் விமான‌ம் போரின் இறுதி க‌ட்ட‌த்தில் புலிக‌ளால் சுட்டு வீழ்த்த‌ப்ப‌ட்ட‌து. போர் முடிவ‌டைந்த‌ பின் யூன் 2009ல் சீனா 891 மில்லியன் டாலர் செலவு பிடிக்கும் நோரோச்சோலை அனல் மின் திட்ட‌த்திற்கு இலங்கையும் ஒப்ப‌ந்தம் செய்த‌து. சீன‌ நிறுவ‌ன‌ங்க‌ள் 33 வ‌ருட‌ கால‌த்திற்கு பொருளாதார‌ ம‌ண்ட‌ல‌ங்க‌ள் அமைக்க‌ இல‌ங்கையுட‌ன் ஒப்ப‌ந்த‌ம் செய்த‌ன. 28 மில்லியன் டாலர் அள‌விற்கு மூன்று வ‌ருட‌ங்க‌ள் தொட‌ர்ச்சியாக‌ கியூசென் நிறுவ‌ன‌ம் மிரிகாமா பொருளாதார‌ ம‌ண்ட‌ல‌த்தில் முத‌லீடு செய்ய‌ ஒப்ப‌ந்த‌மிட்ட‌து. இல‌ங்கையில் முத‌ல் முறையாக‌ ஒரு வெளிநாட்டு நிறுவ‌ன‌த்திற்கு ஒரு இட‌த்தை கொடுத்த‌து இதுவே முதல் முறை.‌ இல‌ங்கையில் பெரும‌ள‌வு திட்ட‌ங்க‌ளை சீனா தொட‌ர்ந்து வருவது வட‌அமெரிக்க இந்திய கூட்டிற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

   போரின் க‌டைசி வார‌ங்க‌ளில் இல‌ங்கை இராணுவ‌ம் சீன‌ போர்க‌ருவிக‌ளை ப‌ய‌ன் ப‌டுத்தி மீத‌முள்ள‌ த‌மிழர் ப‌குதிக‌ளில் திட்ட‌மிட்டு‌ குண்டுக‌ளை வீசிய‌து. இறுதி ஐந்து நாட்க‌ளில் ம‌ட்டும் 20,000 த‌மிழ‌ர்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்டிருக்க‌லாம் என‌ கூறுகின்ற‌து பிரிட்ட‌ன் ஊட‌க‌ம் ஒன்று. ஆனால் அதிப‌ர் இராச‌ப‌க்சேவோ “பொது ம‌க்க‌ள் மீது இராணுவ‌ம் குண்டே வீச‌ வில்லை என்றும், ஒரு தமிழர் கூட இற‌க்க‌‌வில்லை என்றும் கூறிவ‌ருகின்றார். (46)

ஏகாதிப‌த்திய‌ சார்பு ஊட‌க‌மான‌ டைம்சின் கூற்று ப‌டி ” செய்மதி(satelite) புகைப்ப‌ட‌ங்க‌ள், அர‌ச‌ ஆவ‌ண‌ங்க‌ள் , நேரில் க‌ண்ட‌வ‌ர்க‌ளின் சாட்சிய‌ங்களைக் கொண்டு இலங்கையை ப‌ற்றிய‌ புதிய‌ செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. இறுதியில் 5 ச‌துர‌ கிலோமீட்ட‌ர் ப‌ர‌ப்புக்குள் வாழ்ந்த‌ மூன்று இல‌ட்ச‌ம் த‌மிழ் ம‌க்க‌ள் மீது அர‌சு தொட‌ர்ச்சியாக‌ இறுதி மூன்று வார‌ங்க‌ள் குண்டு வீசியுள்ள‌து. இந்த‌ மூன்று வார‌த்தின் ஒவ்வொரு நாளிலும் ஏற‌க்குறைய‌ 1,000 பொதும‌க்க‌ள் கொல்ல‌ப்பட்டுள்ளார்கள். பெரும்பாலான‌ புலி த‌லைமைக‌ள் வீழ்ந்த‌பின் ச‌ர‌ண‌டைந்த‌ புலிக‌ளையும், பெரும்பாலான‌ ம‌க்க‌ளையும் அர‌சு படுகொலை செய்துள்ள‌து.

 டைம்சு ஊட‌க‌த்திற்கு செய்தி சேக‌‌ரித்து கொடுப்ப‌வ‌ர்க‌ளில் ஒருவ‌ரான‌ அருட்த‌ந்தை. அம‌ல்ராச் மே 16 வ‌ரை போர் ந‌ட‌ந்த‌ ப‌குதியில் இருந்துள்ளார். இந்த கட்டுரை வெளிவரும் மே 29 அன்று மானிக்ஃபார்ம் எனப்படும் இராணுவ முகாமில் பிடித்து வைக்கப்பட்டுள்ளார்.

 ஏகாதிப‌த்திய‌ சார்பு ஊட‌க‌மான‌ “பிரிட்ட‌னின் போர்குழுக்க‌ள்” ப‌த்திரிகையின் ஆசிரிய‌ர் இல‌ங்கை அர‌சே இட‌ப்பெய‌ர்ந்து முகாம்க‌ளுக்கு சென்ற‌ ம‌க்க‌ளை கொன்ற‌து என்றும் கொன்றவர்கள் புலிக‌ள் அல்ல‌ என்றும் கூறியுள்ள‌து. இதை அர‌சு விமான‌ குண்டுவீச்சு மூல‌மும், த‌ரைப்ப‌டையின் மூல‌மும் ந‌ட‌த்தியுள்ள‌து.

“சீனா, எகிப்து, கியூபா, இந்தியா போன்ற‌ நாடுக‌ளின் ஆதரவைக் கொண்டு ஐக்கிய நாடுக‌ள் ச‌பையின் ம‌னித‌ உரிமைக் குழுவில் ம‌னித‌ உரிமை மீற‌ல்கள் தொடர்பான தீர்மானத்தில் இலங்கை பெற்றிபெற்றுள்ள‌‌து” என‌ த‌ன‌து அறிக்கையை முடிக்கின்ற‌து டைம்சு நாளித‌ழ்.

குறிப்புக‌ள்:
12. Ibid. John Pilger, “Distant Voices, Desperate Lives,” New Statesman, May 13, 2009.
36. htt://i-p-o.org/GDT.htm
37.http://www.thesundayleader.lk/20090111/editorial-.htm
38. http://en.wikipedia.org/wiki/Gotabhaya_Rajapaksa
39. http://www.globalresearch.ca/index.php?context=va&aid=11769
40. http://www.amnesty.org.uk/news_details.asp?NewsID=18368.
41. http://www.cdi.org/PDFs/CSBillCharts.pdf
42. http://www.dailymailnews.com/dmsp0204/dm44.html
http://niqnaq.wordpress.com/2009/05/10/wayne-madsen-on-israel-and-sri-lanka/ http://adamite.wordpress.com/2009/06/05/sri-lanka-israels-dirty-secrets/
43. http://www.tamilnation.org/tamileelam/aid/index.htm
44. http://ipsnews.net/news.asp?idnews=42075 and http://www.smh.com.au/opinion/sri-lanka-takes-a-step-to-the-east-20090522-bi83.html
45. http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article6207487.ece
46. http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article6383449.ece and
http://www.channel4.com/news/articles/politics/international_politics/tamil+medic+describes+camp+conditions/3346512

மூல‌ப் பிர‌தி: http://www.ronridenour.com/articles/2009/1120-rr.htm

சம உரிமை அல்லது சுயநிர்ணயம் . ப‌குதி 3/5 .தமிழாக்கம். நற்றமிழன்


சம உரிமை அல்லது சுயநிர்ணயம் .
ப‌குதி 3/5

  “1948ல் சுத‌ந்திர‌த்திற்குபின் ஆட்சிக்கு வ‌ந்த மேட்டுக்குடி அரசியல்வாதிகள் இன‌ங்க‌ளுக்கு இடையே பிரிவை ஏற்ப‌டுத்தி அத‌ன் மூல‌ம் சிங்கள‌ இன‌த்தின் பெரும்பான்மையான‌ வாக்குக‌ளை பெற‌ எல்லா செயல்க‌ளையும் செய்த‌ன‌ர். ஆனால் வறுமையை அவர்கள் முயலவே இல்லை. இங்கு தான் மொழி பிரிவினைவாதத்தின் ஒரு கருவியாக விதைக்கப்பட்டது”.என்று அண்மையில் எழுதிய‌ கட்டுரையில், எழுத்தாளரும் ஆவணப்பட இயக்குநருமான “சான் பிள்கர்” எழுதியுள்ளார்.(12)

பிரித்தானிய காலனீயவாதிகளிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் தாங்களும் சிங்களவர்களுக்கு இணையாக சம உரிமையுடன் வாழமுடியும் என்று தமிழர்கள் எண்ணினார்கள். காலனீயவாதிகளிடம் இருந்து பிரிந்து சுதந்திரம அடைந்த காலகட்டத்தில் தமிழர்கள் தனித்தேசத்திற்கான கோரிக்கையை எழுப்பவில்லை.

 இரண்டாம் உலகப் போரில் அச்சுநாடுகளின் (செர்மனி, இத்தாலி,சப்பான்)  வீழ்ச்சிக்கு முன்னதாகவே பிரிட்டன் சிலோனிற்கு விடுதலை கொடுக்க எண்ணியது.1943ல் சிலோனின் காலனீய செயலர் இவ்வாறு கூறுகின்றார். “அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து அரசியல் சாசனம் வடிவமைக்கப்படும் என்றும், அதற்கு ஒரே ஒரு நிபந்தனையை மட்டும் விதித்தார். அது என்னவெனில் அவ்வாறு உருவாகின்ற சிலோன் பாராளுமன்றம் எந்த ஒரு இனத்தையோ, மதத்தையோ ஒருதலை பட்சமாக நடத்தவதற்கான சட்டத்தை இயற்றக் கூடாது (அல்லது) ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு மட்டும் கட்டுபாடுகள் விதிக்க கூடாது”….சோல்பரி குழுவின் பரிந்துரை எண் 29 ஐ பார்க்கவும்.(15).

  பிரிட்ட‌ன்   “1944ல் சோல்ப‌ரி குழுவை நிர்ணிய‌த்த‌து. அந்த‌ கால‌க‌ட்ட‌த்தில் மிக‌ முக்கியமான‌ சிங்க‌ள‌ அர‌சிய‌ல்வாதி சேன‌நாய‌கா ஆவார். இவ‌ர் விடுதலை கோரிக்கையை முன்வைத்து ஐக்கிய‌ தேசிய‌ க‌ட்சியை தோற்றுவித்தார். இவர் ஒரு பழமைவாதியும், வலதுசாரி முதலாளித்துவ கொள்கை கொண்டவருமாவார்.  பின்னாட்களில் இவர் இல‌ங்கையின் “தேச‌ த‌ந்தை” என்று அழைக்க‌ப்ப‌ட்டார். 1944ஆம் ஆண்டில் சிலோன் தேசிய தமிழர் காங்கிர‌சு க‌ட்சியை தோற்றுவித்த தமிழின தலைவரான பொன்னம்பலத்தை இவர் சமாதானபடுத்தி விடுதலை பேச்சுவார்த்தையில் ப‌ங்கெடுக்க‌ வைத்தார்.

 சோல்ப‌ரி குழுவின் இன்னொரு முக்கிய‌ ப‌ரிந்துரை “குறிப்பிட்ட ஒரு ச‌ட்ட‌ம் ஒரு இன‌த்திற்கோ (அல்லது) ம‌த‌த்திற்கோ எதிர்ப்பு கிளம்பினாலோ அல்லது கவர்னர் செனரலின் கருத்துப்படி ஒரு குறிப்பிட்ட இனத்தை ஒடுக்கக்கூடியதாகவோ அல்லது அநீதி இழைப்பதாகவோ இருக்குமானால் அந்த சட்டத்தை நீக்குவதற்கு அவருக்கு எல்லா அதிகாரமும் உண்டு.(15)

” சுத‌ந்திர‌ இல‌ங்கைக்கான” ச‌ட்ட‌ம் தாக்க‌ல் செய்ய‌ப்ப‌ட்ட‌ போது அதை அனைத்து இசுலாமிய‌ உறுப்பின‌ர்க‌ளும், பெரும்பான்மையான‌ சிங்க‌ள‌, த‌மிழ் உறுப்பின‌ர்க‌ளும் ஆத‌ரித்து வாக்க‌ளித்த‌ன‌ர்.  இந்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க விரும்பாத பிற சிறுபான்மை இன பிரதிநிதிகளில் சிலர் வாக்கெடுப்பு நாளன்று அவைக்கு வரவே இல்லை, வந்திருந்த சிலரும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இறுதியாக‌ 1945 செப்ட‌ம்ப‌ர் 8 ம‌ற்றும் 9 ஆம் திகதிகளில் சுத‌ந்திர‌ இல‌ங்கைக்கான அரசியலமைப்புச் சட்டம் விவாத‌த்திற்கு வ‌ந்த‌து. 51 வாக்குகள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஆத‌ர‌வாக‌வும், 3 வாக்குகள் எதிராக‌வும் ப‌திவாயின.வெற்றிக்கு தேவையாக‌ நான்கில் மூன்று ப‌ங்கு வாக்குக‌ளைப் பெற‌ வேண்டும் என‌ சோல்ப‌ரி குழு நிர்ண‌யித்திருந்த‌து. எல்லா இனக்குழுக்களும் அரசியலமைப்பு சட்டத்தின் மேல் வைத்திருந்த நம்பிக்கையாகவே இந்த வாக்கெடுப்பு கருதப்பட்டது. பெரும்பான்மை இனத்தவரை போலவே சிறுபான்மை இனத்தவரும் தன்னாட்சி வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.(15)

 வாக்கெடுப்பிற்கு பிற‌கு பேசிய‌ சேன‌நாய‌கா சிறுபான்மைக‌ளின் கோரிக்கைக‌ளை ஏற்றுக்கொள்ளும் வித‌மாக‌ பேசினார். “விவாத‌த்தின் போது எல்லா நேர‌த்திலும் ஒன்று ம‌ட்டுமே எல்லா உறுப்பின‌ர்க‌ளின் ம‌ன‌தில் இருந்த‌து, அது அதிக‌ப‌ட்ச‌ விடுத‌லை என்ப‌தே. நாங்கள் கேட்பது சிங்க‌ள‌ மேலாதிக்கமல்ல ஒட்டு மொத்த‌ சிலோனின் மேலாதிக்கமே.

சிறுபான்மையின‌ருக்கு அதிக‌ முக்கிய‌த்துவ‌ம் வ‌ழ‌ங்குவ‌து போல‌ ந‌ம் ச‌ட்ட‌ம் மாற்ற‌ப்பட்டுள்ளது. ந‌ம‌து முக்கிய‌ குறிக்கோள் சிறுபான்மையின‌ரின் ந‌ல‌னை பாதுகாப்ப‌தே. எல்லா முக்கிய அதிகார‌ங்க‌ளும் கவர்னர் செனரலுக்கே அளிக்க‌ப்பட்டுள்ள‌‌‌து. சுதந்திரமான‌‌ அர‌சு ப‌ணியாள‌ர் தேர்வாணைய‌ம் ஒன்று உருவாக்க‌ப்ப‌டும் இத‌ன் மூல‌ம் ஒரு குறிப்பிட்ட‌ இன‌ம் ம‌ட்டுமே அர‌சு ப‌ணிக்கு தேர்வாவ‌து த‌டுக்க‌ப்ப‌ட்டு எல்லா இன‌ங்க‌ளுக்கும் ச‌ம‌மாக‌ வாய்ப்பு வ‌ழ‌ங்க‌ப்ப‌டும். நான் பொதுவாக ஒரு சிங்களவனாக ம‌ட்டும் பேசுவ‌தில்லை. அது போல‌வே இந்த‌ குழுவின் த‌லைவர் தன்னை சிங்க‌ளர்க‌ளின் பிர‌திநிதியாக எண்ணிக்கொள்ள வேண்டியதில்லை என கருதுகிறேன். ஆனால் நான் ஒரு சிங்களனாக பேசப் போகிறேன். நாமெல்லாம் எந்த மதமாக இருந்தாலும் ஒன்றே என்று எனது எல்லா அதிகாரங்களையும் கவனத்தில் கொண்டு ஒரு இனத்தின் நலன் என்பது அனைத்து இனங்களின் நலன்களை உள்ளடக்கியது என்று உறுதிபட கூறுகிறேன். (15)

  1947 ஆக‌த்து 23லிருந்து செப்டம்ப‌ர் 30 வ‌ரை இல‌ங்கையின் முத‌ல் தேர்த‌ல் ந‌டைபெற்ற‌து. இதில் 95 உறுப்பின‌ர்க‌ள் போட்டியிட்ட‌ன‌ர். இவ‌ர்க‌ளுக்கு 1,881,364 ம‌க்க‌ள் வாக்க‌ளித்த‌ன‌ர். ஆறு க‌ட்சிக‌ளும் பல சுயேட்சைக‌ளும் போட்டியிட்ட‌ன‌ர். முடிவு, (16)

ஐக்கிய‌ தேசிய‌ க‌ட்சி 39.8% (42 உறுப்பின‌ர்க‌ள்)
லங்கா சம சமாச கட்சி 10.8% (10 உறுப்பின‌ர்க‌ள்)
போல்சுவிக் லெனினிசுட்டு இந்திய கட்சி 6% (5 உறுப்பின‌ர்க‌ள்)
சிலோன் த‌மிழ் காங்கிர‌சு 4.4%( 7உறுப்பின‌ர்க‌ள்)
சிலோன் இந்திய காங்கிரசு 3.8% (6 உறுப்பின‌ர்க‌ள்)
இல‌ங்கை க‌ம்யூனிசுட் க‌ட்சி 3.7% (3உறுப்பின‌ர்க‌ள்)
தொழிலாள‌ர் க‌ட்சி 1.4% (1உறுப்பின‌ர்)
சுயேட்சை 29%.

 “எந்த‌ இனத்தவரனாலும், ம‌தத்தவரானாலும் நாமெல்லாம் ஒன்றே” என்ற‌ உறுதிமொழியுட‌ன் சுத‌ந்திர‌ நாட்டின் தந்தையாக‌‌ சேன‌நாய‌கா ப‌தவியேற்றுக்கொண்டார். அதுவ‌ரை எல்லா இன‌ங்க‌ளும், ம‌த‌ங்க‌ளும் ச‌ம‌மாக‌ ம‌திக்க‌ப்படும் என்று எல்லோரும் எண்ணினர் ஆனால் புதிய‌ குடியுரிமை ச‌ட்டம் (New Citizenship act) கொண்டுவ‌ர‌ப்ப‌ட்ட‌திலிருந்து அவ‌ர்க‌ளின் துரோக‌ம் வெளிப்ப‌ட‌ ஆர‌ம்பித்த‌து.

                1948 பிப்ர‌வ‌ரி 4ஆம் நாள் புதிய‌ அர‌சு “சிலோன் குடியுரிமை ச‌ட்ட‌த்தை” பாராளும‌ன்ற‌த்தில்  தாக்க‌ல் செய்த‌து. மேலோட்ட‌மாக‌ பார்த்தால் ம‌க்க‌ளுக்கு குடியுரிமை வ‌ழ‌ங்குவ‌து தான் இத‌ன் நோக்க‌ம் போல‌ தோன்றினாலும் , அத‌ன் முக்கிய‌ நோக்க‌ம் இதுவ‌ரை இந்த‌ நாட்டின் வ‌ள‌ர்ச்சிக்காக‌ அடிமையாக‌ உழைத்த‌ இந்திய‌ த‌மிழ‌ர்க‌ளின் குடியுரிமையை ப‌றித்து நாட‌ற்ற‌வ‌ர்க‌ள் ஆக்குவ‌தே. இது சிலோன் குடியுரிமைச ச‌ட்ட‌ம் எண் 18ல் குறிப்பிட‌ப்ப‌ட்டுள்ள‌து. இத‌ன் மூல‌ம் நாட்டின் 11விழுக்காடு ம‌க்க‌ள் நாட‌ற்ற‌வ‌ர்க‌ளாக‌ ஆக்க‌ப்ப‌ட்டார்க‌ள்.

     சிலோன் த‌மிழ் காங்கிர‌சு ஆர‌ம்ப‌த்தில் இதை எதிர்த்தாலும், ஆனால் இறுதியில் அவர்களும் இந்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். இத‌னால் கோப‌ம‌டைந்த‌ அத‌ன் பாதிக்கும் மேற்ப‌ட்ட‌ உறுப்பின‌ர்க‌ள் க‌ட்சியிலிருந்து வெளியேறி செல்வ‌நாய‌க‌ம் த‌லைமையில் ஐக்கிய க‌ட்சியை ஆர‌ம்பித்த‌ன‌ர். ஒரு வ‌ருட‌த்திற்கு பின் கொண்டு வ‌ந்த‌ இந்திய‌ ம‌ற்றும் பாகிசுதான் ம‌க்க‌ள் வாழ்வுரிமை ச‌ட்ட‌ம் எண் 3 முற்றிலுமாக‌ எல்லா இந்திய வம்சாவழி த‌மிழ‌ர்க‌ளின் குடியுரிமையையும் ப‌றித்த‌து. அத‌ன் 7 பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளையும் வெளியேற்றிய‌து இந்த‌ ச‌ட்ட‌ம். இத‌னால் 1952 பாராளும‌ன்ற‌ தேர்த‌லில் எந்த‌ ஒரு இந்திய‌ த‌மிழ‌ரும் போட்டியிட‌ முடிய‌வில்லை. 1988 வ‌ரை இந்த‌ நிலையே நீடித்த‌து. 2003ல் இந்திய‌ குடியுரிமை பெறாத‌  1,68,141 இந்திய வம்சாவழித் தமிழ‌ர்க‌ளுக்கு இல‌ங்கை குடியுரிமை வ‌ழ‌ங்கிய‌து.

 புதிய‌ அர‌சு த‌மிழ‌ர்க‌ளின் பூர்வீக‌மான‌ வ‌ட‌க்கு மற்றும் கிழக்கு பகுதியில் நில‌ங்க‌ளை வாங்குவ‌த‌ற்கு சிங்க‌ள‌வ‌ர்க‌ளை அனும‌தித்த‌து. கிராமம் முழுவதிலும் வாழ்ந்த‌ தமிழர்கள் வெளியேற்றப்ப‌ட்டு சிங்க‌ள‌வ‌ர்க‌ள் குடியேற்ற‌ப்ப‌ட்ட‌ன‌ர். த‌மிழ‌ர்க‌ளின் பூர்வீக‌ நில‌த் தொட‌ர்பை துண்டிப்பதற்காக‌ மேற்கொள்ள‌ப்ப‌ட்ட இன அழித்தொழிப்பு நிக‌ழ்வு இது(17). இன அழித்தொழிப்பின் தொட‌க்க‌ நிலை இது. சிறிது கால‌த்திற்குள் த‌மிழ‌ர்க‌ளின் பூர்விக‌ நில‌மான‌ வ‌ட‌க்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் முற்ப‌து விழுக்காடு நில‌ங்களும், வீடுகளும் சிங்க‌ள‌வ‌ர்க‌ளால் ஆக்கிர‌மிக்க‌ப்ப‌ட‌ன. இது போன்ற செயல்களை தான் இசுரேல் ஆரம்ப காலங்களில் பாலசுதீனத்தில் மேற்கொண்டது.

 1956ல் “சிங்களம்” ம‌ட்டுமே அர‌சின் அதிகார‌ மொழி என்ற‌ ச‌ட்ட‌ம் அம‌லுக்கு வ‌ந்த‌து. அந்த காலகட்டத்தில் 70 விழுக்காடு ம‌க்க‌ள் ம‌ட்டுமே சிங்க‌ள‌ மொழியை பேசினார்க‌ள்.

இந்த‌ ச‌ட்ட‌த்தை ஆத‌ரித்த‌வ‌ர்க‌ள் காலனீய‌வாதிக‌ளிட‌மிருந்து விடுத‌லை பெற்று, த‌ங்க‌ளை வேறுப‌டுத்தி காட்டுவ‌த‌ற்காக‌ கொண்டுவ‌ர‌ப்ப‌ட்ட‌தென்றார்கள், எதிர்த்த‌வ‌ர்க‌ள் மொழியினால் பெரும்பான்மையின‌ர், சிறுபான்மையின‌ரை ந‌சுக்குவ‌த‌ற்காக‌ கொண்டுவ‌ர‌ப்ப‌ட்ட‌ ச‌ட்ட‌ம் என்று இதைக் கூறினார்க‌ள். இந்த‌ ச‌ட்ட‌மான‌து  பெரும்பான்மை சிங்க‌ள‌ர்கள் இல‌ங்கையை ஒரு சிங்க‌ள‌ நாடு என்று அடையாள‌ப‌டுத்த உதவியது.த‌மிழினம் சிறுபான்மை இனமாக ஒடுக்கப்பட்டது. இந்த சட்டமே தமிழர்கள் பின்னாட்களில் தனிநாட் கோரிக்கை எழுப்புவதற்கும், முப்பது வருடத்திற்கும் மேலான விடுதலை போரை தொடருஅதகும் காரணமாயிற்று.(18)

       த‌மிழ‌ர்க‌ள் இந்த‌ இன‌வெறி ச‌ட்ட‌த்தை எதிர்த்து காந்திய‌ முறையில் அமைதி வழி உண்ணாவிர‌த‌ போராட்ட‌ங்க‌ளை ந‌ட‌த்தினார்கள். ஆனால் இதைக்கூட‌ பொறுக்க‌முடியாத‌ சிங்க‌ள‌வ‌ர்க‌ள் புத்த‌ துற‌விக‌ளின் த‌லைமையில் சென்று த‌மிழ‌ர்களை தாக்கினார்க‌ள்.

  சிறுபான்மை இல‌ங்கை த‌மிழ‌ர்க‌ளின் மீது (சுத‌ந்திர‌த்திற்கு பின்) சிங்களவர்கள் ந‌டத்திய‌‌ முத‌ல் இனத் தாக்குதல் தான் “கால் ஓயா தாக்குதல்”, 1956 சூன் 11 அன்று ஆர‌ம்ப‌மான‌ இந்த‌ தாக்குதல் தொட‌ர்ந்து ஐந்து நாட்க‌ள் ந‌டை பெற்ற‌து. கால் ஓயா நிறுவ‌ன‌ ப‌ணியாள‌ர்க‌ளும், அங்கு வாழ்ந்து வ‌ந்த‌ சிங்க‌ள‌ காடைய‌ர் கும்ப‌லும் அரசாங்க‌ வாக‌ன‌ங்களில் வெடி ம‌ருந்துகளையும், ஆயுதங்களையும் ஏற்றிச் சென்று சிறுபான்மை த‌மிழர்களை படுகொலை செய்த‌ன‌ர்.இந்த தாக்குதலில் அண்ணளவாக(Approximately) 150 த‌மிழ‌ர்க‌ள் இற‌ந்திருக்க‌லாம் என்று கணக்கிடப்பட்டது. தாக்குதல் கால‌ங்க‌ளில் எதுவும் செய்யாத‌ காவ‌ல் ம‌ற்றும் இராணுவ‌ம் தாக்குதல் முடிந்த‌‌பின் நிலைமையை க‌ட்டுக்குள்(!) கொண்டுவந்த‌து.(19)

 த‌மிழ் அர‌சிய‌ல் த‌லைவ‌ர் செல்வ‌நாய‌க‌ம் ஒரு மிக‌ப்பெரிய‌ ச‌த்தியாகிர‌க‌ போர‌ட்ட‌த்தை(அமைதி வ‌ழி போராட்ட‌ம்)இந்த‌ ச‌ட்ட‌த்திற்கு எதிராக‌ முன்னெடுத்தார். வ‌ன்முறைக‌ளை த‌விர்ப்ப‌த‌ற்காக‌ பிர‌த‌ம‌ர் சால‌ம‌ன் ப‌ண்டார‌நாய‌கா த‌மிழ‌ர்க‌ள் பெரும்பான்மையாக‌ வாழும் பகுதிக‌ளில் தமிழும் அர‌ச‌ மொழியாக்கப்படும் என்று கூறும் ஒப்பந்தத்தை செல்வ‌நாய‌க‌த்துட‌ன் இணைந்து கையெழுத்திட்டார். இது சிங்க‌ளவ‌ர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. மீண்டும் புத்த‌ துற‌விக‌ள் த‌லைமையிலான‌ சிங்கள காடையர்கள் த‌மிழ‌ர்க‌ளை தாக்கி சில‌ இட‌ங்க‌ளில் ப‌டுகொலையும் செய்த‌ன‌ர். மேலும் புத்த‌ துற‌விக‌ள் ப‌ண்டார‌நாய‌கேவின் வீட்டுக்கு சென்று அவரை பயமுறுத்தியதால், ப‌ண்டார‌நாயகே அந்த‌ ஒப்ப‌ந்த‌த்தை தானே கிழித்து எறிந்து விட்டார். இருப்பினும் 1958ஆம் ஆண்டு “சிங்களா ம‌ட்டும்” ச‌ட்ட‌த்தில் சிங்க‌ள‌ பாராளும‌ன்ற‌த்தில் சில‌ மார்க்சிய‌ ம‌ற்றும் டிராட்சிய‌ சிந்த‌னை கொண்ட‌ சிங்க‌ள‌ க‌ட்சியின‌ர் ஒரு ச‌ட்ட‌ திருத்த‌ம் செய்தார்க‌ள். இத‌ன் மூல‌ம் த‌மிழ‌ர்க‌ள் பெரும்பான்மையாக‌ வாழும் வ‌டக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் சிங்க‌ள‌த்துட‌ன் இணைந்து த‌மிழும் ஆட்சி மொழியான‌து. இத‌னால் கோப‌ம‌டைந்த‌ சிங்க‌ள காடைய‌ர்க‌ள் 200லிருந்து 300 த‌மிழ‌ர்க‌ளை ப‌டுகொலை செய்த‌ன‌ர். இந்த‌ நேர‌த்திலும் சில‌ சிங்க‌ள‌வ‌ர்க‌ள் த‌மிழர்க‌ளுக்கு த‌ங்க‌ள் வீடுக‌ளில் த‌ஞ்ச‌ம் அளித்த‌ன‌ர். ப‌ல‌ த‌மிழ் பெண்க‌ள் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டார்கள், த‌மிழ் ஆண்க‌ள் நிர்வாண‌மாக்க‌ப்பட்டு உயிருடன் கொளுத்த‌ப்ப‌ட்டார்க‌ள். இது வட‌அமெரிக்காவில் தெற்கில் வாழுந்த‌ வெள்ளைய‌ர்கள் க‌ருப்பின‌ ம‌க்க‌ளை உயிருட‌ன் கொளுத்திய‌ நிகழ்வை நமக்கு நினைவூட்டுகின்ற‌து.

   இல‌ங்கை பிர‌த‌ம‌ரான‌ ப‌ண்டார‌நாய‌கே த‌மிழ‌ர்க‌ளுட‌ன் ச‌ம‌ர‌ச‌மாக‌ செல்வ‌தாக‌ எண்ணி அவ‌ர் மீது மிகுந்த‌ கோப‌ம் கொண்ட‌ன‌ர் பௌத்த துறவிகள். இறுதியில் 1959ல் ஒரு பௌத்த‌ துறவியே ப‌ண்டார‌நாய‌கேவை சுட்டுக் கொன்றார்.

        இந்த‌ மொழிச்ச‌ட்ட‌ம் த‌ன‌து பாதிப்புக‌ளை அர‌சு ப‌ணியாள‌ர் துறையில் காட்ட‌த் தொட‌ங்கிய‌து. ஏனெனில் கிருத்துவ‌ ம‌த‌ நிறுவ‌ன‌ங்க‌ள் மூல‌மாக‌ மேற்குல‌க‌ க‌ல்வி முறையை ந‌ன்கு ப‌யின்று 1955 ஆண்டுகளில் அர‌சு ப‌ணியில் அதிக‌மாக‌ த‌மிழ‌ர்க‌ள் இருந்த‌ன‌ர். இந்த‌ ச‌ட்ட‌மான‌து இவ‌ர்க‌ளை ப‌ணியிலிருந்து துற‌த்த‌வும், சிங்க‌ள‌வ‌ர்க‌ளுக்கே மீண்டும் எல்லா அதிகார‌ங்க‌ளையும் கொடுக்க‌வும் செய்த‌து. ஏனெனில் இந்த‌ ச‌ட்ட‌த்தின் மூல‌ம் சிங்க‌ள‌ மொழி ம‌ட்டுமே அரசு ப‌ணித்துறையின் ஒரே மொழியான‌து. 1970க‌ளில் அர‌சு ப‌ணித்துறை மொத்த‌மும் சிங்க‌ள‌வ‌ர்க‌ளின் வ‌ச‌மான‌து. ஆயிர‌க்க‌ண‌க்கான‌ த‌மிழ் அர‌சு அதிகாரிக‌ள் ச‌ர‌ள‌மாக‌ சிங்க‌ள‌ம் பேச‌த் தெரியாத‌ ஒரே கார‌ண‌த்தால் தங்க‌ள் ப‌ணியிலிருந்து வெளியேற‌ நிர்ப‌ந்திக்க‌ப்ப‌ட்டார்க‌ள். இதற்காக 1960க‌ளில் அர‌சாங்க‌ விண்ண‌ப்ப‌ ப‌டிவ‌ங்க‌ளைத்தும் சிங்க‌ளமான‌து , இத‌னால் இந்த அரசு வேலை வாய்ப்புகள் தமிழர்களுக்கு இல்லை என்ற நிலை உருவானது. இது இல‌ங்கையில் ஒரு புதிய‌ இசுரேலை உருவாக்கிய‌து, சிங்க‌ள‌வ‌ர்க‌ள் யூத‌ர்க‌ளானார்க‌ள், தமிழ‌ர்க‌ள் பால‌சுதீனிய‌ர்க‌ளானார்க‌ள்.

    இங்கே நாம் புர‌ட்சிக‌ர‌ அர‌சுக‌ளான கூபா ம‌ற்றும் இல‌த்தின் அமெரிக்க‌ நாடுக‌ளுக்கெல்லாம் ஒரு செய்தியை வ‌லியுறுத்தி கூறுகின்றோம் இலங்கையில் த‌மிழ‌ர்க‌ள் ஒரு திட்ட‌மிட்ட‌, தொட‌ர்ச்சியான‌ வ‌ன்முறைக்கும், இனப்பாகுபாட்டிற்கும் ஆளாக்கப்பட்டார்கள். இலங்கையில் சிங்கள அரசுகள் தமிழர்களின் மேல் மேற்கொண்ட நடவடிக்கைகள் எல்லாம், ஐ.நாவின் இனப்படுகொலைக்கான வரையறையில் காணப்படுகின்றன (“இல‌ங்கை த‌மிழ‌ர்க‌ளுக்கான‌ நீதி” என்ற‌ முத‌ல் அத்தியாத்தில் நீங்க‌ள் இதை பார்க்க‌லாம்).

  உலகின் முத‌ல் பெண் பிர‌த‌ம‌ராக‌ சிரிமாவோ ப‌ண்டார‌நாய‌கே 1960ல் தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌து இலங்கையை உல‌க நாடுக‌ளின் த‌லைப்பு செய்திக‌ளில் கொண்டு சேர்த்த‌து. முன்னாள் பிர‌த‌ம‌ரும், சிறீல‌ங்கா சுத‌ந்திர‌ க‌ட்சியை தோற்றுவித்த‌வருமான, மறைந்த‌‌‌ ப‌ண்டார‌நாய‌கேவின் துணைவியார் என்பது இவருக்கு கூடுதல் பலன்கள் இருந்தன. இவ‌ர் ப‌த‌விக்கு வ‌ந்த‌தும் இல‌ங்கையை அணிசேரா நாடுக‌ளின் கூட்ட‌மைப்பில் சேர்த்தார். இந்த‌ கூட்ட‌மைப்பை இந்தியாவின் நேரு, எகிப்தின் நாச‌ர், யுகோசுலாவியாவின் டிட்டோ ம‌ற்றும் கானாவின் க்ரூமாக் போன்றோர்களினால் 1961ல் உருவாக்க‌ப்ப‌ட்ட‌து. இந்த கூட்டமைப்பு அந்த காலகட்டத்தில் வ‌ல்ல‌ர‌சுக‌ளுட‌ன் அணி சேராத‌ நாடுக‌ளின் இறையாண்மை பாதுகாப்ப‌த‌ற்காக‌ உருவாக்க‌ப்பட‌ட‌து.(20)

  சிறீல‌ங்காவின் பெரும்பான்மையான‌ சிங்க‌ள‌ க‌ட்சிகளின் தலைவர்கள் எப்பொழுதும் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, இசுரேல் போன்ற‌ நாடுக‌ளுட‌ன் பொருளாதார‌ ம‌ற்றும் இராணுவ‌ உற‌வை தொட‌ர்ந்து பேணி வ‌ந்த‌னர். ச‌மூக‌ ந‌ல‌த்திட்ட‌ங்க‌ள் முதலாளித்துவ மாதிரியிலேயே இல‌ங்கையில் ந‌டை பெற்று வந்தன. இதுவே புரட்சிகர முண்ணனி அரசுக்கு எதிராக போராட‌ காரணமாயிற்று. 1971ல் ஆயிர‌க்க‌ண‌க்கான‌ சிங்க‌ள‌ மாண‌வ‌ர்க‌ள் ம‌ற்றும் ம‌லைய‌க‌ இந்திய‌ த‌மிழ‌ர்க‌ள் புதிய‌ த‌லைமையின் கீழ் ஒன்று சேர்ந்து, மார்க்சிய‌ க‌ட்சியான‌ ச‌ன‌தா விமுக்தி பேரமுனாவை உருவாக்கினார்க‌ள்.இதற்கு  த‌மிழில் ம‌க்க‌ள் விடுத‌லை முண்ண‌னி எனப் பொருள்.இவர்கள் பல இடங்களில் அரசை எதிர்த்து கலவரம் செய்தார்கள். இந்த கலவரங்களில் பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர்  அரச படையால் கொல்லப்பட்டார்கள்.(21)

 ஆட்சிக்குவ‌ந்த‌பின் , சிறீமாவோவும் த‌மிழ‌ர்க‌ளின் மீதான‌ சிங்க‌ள‌ இன‌ப்ப‌டுகொலை திட்ட‌த்தை மாற்றாம‌ல் தொட‌ர்ந்து வ‌ந்தார். அரசமைப்பை மாற்றுவதன் மூலம் சாமர்த்தியமாக தமிழர்களை மேலும் இனஒடுக்குமுறைக்கு ஆட்படுத்த முயன்றார். மூன்று சிங்க‌ள‌ அர‌சிய‌ல் க‌ட்சிக‌ளை இணைத்து சிறீமாவோ 1970 தேர்த‌லில் போட்டியிட்டார். இந்த தேர்தலில் அமலில் இருக்கும் 1948ஆம் ஆண்டு டொமினியன் அரச‌மைப்பை‌ மாற்றி இலங்கையை ஒரு குடிய‌ர‌சு நாடாக ஆக்க‌வேண்டும் என்ற‌ கோரிக்கையை இலங்கை மக்கள் முன்வைத்தார். இது ஏழு சிங்க‌ள‌ பிராந்தியங்களிலும் வெற்றி பெற்ற‌து. ஆனால் த‌மிழ‌ர்க‌ளின் வ‌டக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் படுதோல்வியை த‌ழுவிய‌து. இந்த பிராந்தியத்தில் இந்த‌ கோரிக்கைக்கு 14% வாக்குகள் மட்டுமே கிடைத்த‌ன‌.(22)

 சிறுபான்மை மக்க‌ளின் இன‌ ம‌ற்றும் ம‌த‌ அடையாள‌ங்க‌ளை பாதுகாக்கும் ச‌ட்ட‌ம் நீக்க‌ப்ப‌ட்டு புத்த‌ம‌த‌மே அர‌ச‌ ம‌த‌மான‌து.இலங்கை ஒரு முழு சிங்கள பௌத்த‌ நாடாக‌ இத‌ன் மூல‌ம் மாற்ற‌ப்ப‌ட்ட‌து. த‌மிழ‌ர்க‌ளின் பூர்வீக‌ ப‌குதியான‌ நொச்சிகுள‌த்தில் 50,000 குறுக்கம்(Acre) நில‌த்தை சிங்க‌ள‌ர்க‌ள் கைப்ப‌ற்றினார்கள். பின்னர் அந்த இடத்திற்கு “நொச்சியாகமா” என‌ சிங்க‌ளத்தில் பெயரிட்ட‌ன‌ர். அடுத்த ஆண்டு 10,738 சிங்க‌ள‌ குடும்ப‌ங்க‌ள் விதிமுறைகளுக்கு மாறாக‌‌ திரிகோண‌ம‌லை ப‌குதியில் குடியேற்றப்பட்டார்கள்.

   தனி இனமாக, தனித்த நிலப்பரப்பில், தனி மொழிய்டன் வாழ்ந்து வந்த தமிழனத்தின் இறையாண்மை பறிக்கப்பட்டது.(22)

   இந்த இழப்பிற்கு பின்னால் புத்துயிர் பெற்ற‌ சிலோன் தே‌சிய‌ காங்கிர‌சும், ஐக்கிய கட்சியும் 1972ல் ஒன்று சேர்ந்து த‌மிழ‌ர் ஐக்கிய‌ முண்ண‌னியை உருவாக்கின.  ஈழம் என்ற பெயரில் இலங்கையின் ஒரு தனி பகுதியாக‌ தனி நாடு அல்லது சுய‌நிர்ணய உரிமை என்ப‌து ஒவ்வொரு த‌மிழரினுடைய‌ கோரிக்கையான‌து. இந்த காலகட்டத்தில் முப்ப‌து த‌மிழ் போராளி‌குழுக்க‌ள் உருவாகியிருந்த‌ன‌.

இவ‌ர்க‌ளின் இய‌ங்கு த‌ள‌ம் த‌மிழீழ‌ம் ஆகும். அதாவ‌து ஈழ‌த்த‌மிழ் ம‌க்க‌ள் வாழும் ப‌குதி என‌ பொருள் கொள்ள‌லாம். ஈழ‌ம் என்ற‌ வார்த்தை ச‌ங்க‌ கால‌‌ த‌மிழ் இலக்கிய‌த்திலிருந்து தொட‌ர்ந்து வரும் ஒரு சொல்லாகும். ச‌ங்க‌ காலம் என்பது கி.மு 200லிருந்து கி.பி.250க்கும் இடைப்ப‌ட்ட‌ கால‌மாகும். இங்கே ஈழ‌ம் என்ப‌த‌ற்கு முழு இல‌ங்கை என்றே பொருள். ஏனென்றால் சிங்க‌ள‌ர்க‌ள் வ‌ரும் முன்பு த‌மிழ‌ர்க‌ளே இல‌ங்கை முழுவ‌தும் வாழ்ந்து வந்தார்கள்.(23)

 சிறீமாவோவின் இர‌ண்டாவ‌து ஆட்சி கால‌த்தில் த‌மிழ‌ர்க‌ளின் மேல் இன்னொரு பாத‌க‌மான‌ ச‌ட்ட‌ம் பாய்ந்த‌து. அது தான் “த‌ர‌ப்ப‌டுத்துத‌ல்” என்ற‌ ச‌ட்ட‌ம், இத‌ன் மூல‌ம் த‌மிழ் மாணவர்க‌ள் ப‌ல்க‌லை க‌ழ‌க‌ங்ளில் சேர‌ வேண்டுமானால் சிங்க‌ள‌ மாண‌வ‌ர்க‌ளை விட‌ அதிக‌ ம‌திப்பெண் எடுக்க‌ வேண்டும். உதார‌ண‌த்திற்கு சிங்க‌ள மாண‌வ‌னுக்கு 50 ம‌திப்பெண்னும், த‌மிழ் மாண‌வ‌னுக்கு 75 ம‌திப்பெண்னும் நிர்ண‌யிக்க‌ப்ப‌ட்ட‌து.

1970ஆம் ஆண்டு முழுவ‌தும் சிங்க‌ள‌ காடைய‌ர்க‌ள் இன அழித்தொழிப்பை தொட‌ர்ந்து ந‌ட‌த்தினார்கள். இது த‌மிழ‌ர்க‌ளின் மேல் ம‌ட்டும‌ல்ல‌ இசுலாமிய‌ர்க‌ளின் மீதும் தொட‌ர்ந்த‌து. 1976ல் இசுலாமிய‌ர்க‌ளின் 271 வீடுகளையும், 44 க‌டைகளையும் சிங்க‌ள‌ர்க‌ள் கொளுத்தினார்க‌ள். இதில் ப‌ல‌ இசுலாமிய‌ர்க‌ள் கொல்ல‌ப்பட்டார்கள்.

   1976ஆம் ஆண்டு வ‌ட்டுக்கோட்டையில் ந‌டைபெற்ற‌ மாநாட்டில் த‌மிழ‌ர் ஐக்கிய‌ முண்ண‌னி என்ற கட்சியின் பெய‌ரை த‌மிழ‌ர் ஐக்கிய‌ விடுத‌லை முண்ண‌னி என‌  மாற்றி கொண்ட‌து. சுதந்திரமான, இறையாண்மை கொண்ட ஒரு தனி நாட்டுக்கான கோரிக்கையை மக்கள் முன் இந்த மாநாட்டில் கட்சியின் சார்பாக வைக்கப்பட்டது. இந்த தனிநாடு தமிழ் மக்களின் பூர்விக பகுதியான வ‌டக்கு மற்றும் கிழக்கில் அமையும் என்றும், இந்த நாடு “மதச்சார்பற்ற சோசலிச தமிழீழ நாடு” என அழைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.(24)

 1975ல் த‌மிழ‌ர் போராளி‌க்குழுக்க‌ளின் எண்ணிக்கையில் மேலும் ஒன்று அதிக‌மான‌து. வேலுபிள்ளை பிர‌பாக‌ர‌னின் த‌லைமையிலான‌ “த‌மிழீழ‌ விடுத‌லை புலிக‌ள்” என்ற‌ அமைப்பு தோன்றிய‌து. இவர் தன்னை சேகுவேராவை பின்பற்றும் மார்க்சியர்கள் என்று அறிவித்து கொண்டார். ஆரம்ப காலகட்டத்தில் த‌மிழீழ‌ விடுத‌லை புலிக‌ள்  இராணுவ‌த்துட‌ன் சிறிய‌ அள‌விலான மோதல்க‌ளில் ஈடுபட்டு வந்தார்கள்.

  வ‌ட்டுகோட்டை தீர்மான‌த்தை ம‌க்க‌ள் முன்வைத்து 1977 யூலை தேர்த‌லில் போட்டியிட்ட‌ த‌மிழ‌ர் ஐக்கிய‌ விடுத‌லை முண்ண‌னி போட்டியிட்ட‌ 14 இங்க‌ளிலும் அமோக‌ வெற்றி பெற்ற‌து. இது இலங்கையின் மொத்த‌ வாக்குக‌ளில் 6.4% வாக்குக‌ளை பெற்ற‌து. செய‌வ‌ர்த்த‌னா த‌லைமையிலான‌ ஐக்கிய‌ தேசிய‌ க‌ட்சியும் சிங்க‌ள‌ ப‌குதிக‌ளின் பெரும்பான்மையாக‌ வெற்றி பெற்ற‌து.அர‌சு அமைக்க‌ தேவையான‌ 168 இருக்கைக‌ளில் ஐக்கிய‌ தேசிய‌ க‌ட்சிக்கு மேலும் நான்கு உறுப்பின‌ர்க‌ள் தேவைப்ப‌ட்ட‌ன‌ர். இத‌ற்காக‌ இவ‌ர்க‌ள் த‌மிழ‌ர் ஐக்கிய‌ விடுத‌லை முண்ண‌னியுட‌ன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்தார்கள். த‌மிழ‌ர்கள் அதிகளவில்‌ வெற்றி பெற்றதை எதிர்த்தும், அவர்கள்(தமிழர்கள்) அமைதி வழியில் போராடியதன் கார‌ண‌மாக‌வும் கோப‌ம‌டைந்த‌ சிங்க‌ள‌ர்க‌ள் மீண்டும் புத்த‌ மத துறவிக‌ளின் த‌லைமையில் சென்று ம‌ற்றுமொரு இனதாக்குதலைத் தமிழ‌ர்க‌ளின் மேல் ந‌ட‌த்தினார்க‌ள். இந்த‌ இன‌க் க‌ல‌வ‌ர‌த்தில் 300 த‌மிழ‌ர்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்ட‌ன‌ர். அவ‌ர்க‌ளின் வீடுகளும், க‌டைகளும் கொளுத்த‌ப்ப‌ட்ட‌ன.

     1978 யூலை இல‌ங்கையின் பிர‌த‌ம‌ரான‌ செய‌வ‌ர்த்த‌னே இல‌ங்கையின் பெயரையும், அர‌ச‌மைப்பையும் மீண்டும் மாற்றினார்.  “சோச‌லிச‌ ச‌ன‌நாயக இலங்கை குடியரசு” என‌ அறிவித்தார். இதில் புதிதாக‌ ஒரு அதிப‌ர் ப‌தவியையும் உருவாக்கினார். அதிபர் தான் பிரதமரை நியமிப்பார் என்றும், பிர‌த‌ம‌ரை விட‌ அதிகார‌ங்க‌ள் அதிகம் அதிப‌ருக்கு உண்டு என்றும் வரையறுக்க‌‌ப்ப‌ட்ட‌து. அதிப‌ரே இராணுவ‌த்தின் த‌லைமை நிர்வாகியாக‌வும், பாராளும‌ன்ற‌த்தின் த‌லைவ‌ராக‌வும் ஆனார். அதிப‌ருக்கு பாராளும‌ன்ற‌த்தை க‌லைக்கும் ச‌ட்ட‌ அதிகார‌மும் கொடுக்க‌ப்ப‌ட்ட‌து.

செய‌வ‌ர்த்த‌னே இலங்கையின் முத‌ல் அதிப‌ரானார். இவர் தனது கட்சியைச் சேர்ந்த‌ பிரேம‌தாசாவை பிர‌த‌ம‌ராக‌ நிய‌மித்தார். என்ன‌ தான் ” சோச‌லிச‌ ச‌ன‌நாய‌க‌  குடியரசு நாடு” என‌ப் பெய‌ர் மாற்றினாலும் அது முத‌லாளித்துவ‌ பொருளாதார‌ க‌ட்ட‌மைப்பையே பின்ப‌ற்றிய‌து. அர‌ச‌ நிறூவ‌ன‌ங்க‌ள் க‌லைக்க‌ப்ப‌ட்டு த‌னியார் நிறுவ‌ன‌ங்க‌ளுக்கு முன்னுரிமை அளிக்க‌ப்ப‌ட்ட‌து.

 1981 மே 31ல் த‌மிழ‌ர் ஐக்கிய‌ விடுத‌லை முண்ண‌னி த‌மிழ‌ர்க‌ளின் பூர்வீக‌மான‌ யாழ்ப்பாண‌த்தில் ஒரு பேர‌ணி ந‌ட‌த்திய‌து. இதில் காவ‌ல‌ர்க‌ள் த‌மிழ‌ர்க‌ளை தாக்க‌ ப‌திலுக்கு காவ‌ல‌ர்க‌ளை த‌மிழர்கள் தாக்கிய‌தில் இர‌ண்டு காவ‌ல‌ர்க‌ள் இறந்தார்கள். அடுத்த‌ மூன்று நாட்க‌ளுக்கு சிங்க‌ள‌ காடைய‌ர்க‌ள், காவ‌ல‌ர்க‌ள், இராணுவ‌ம் எல்லாம் ஒன்றாக‌ சேர்ந்து த‌மிழ‌ர்க‌ளை தாக்கினார்க‌ள். ப‌ல‌ த‌மிழ‌ர்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டு கொல்ல‌ப்ப‌ட்டார்க‌ள், த‌மிழ‌ர் ஐக்கிய‌ விடுத‌லை முண்ண‌னியின் த‌லைமை அலுவ‌ல‌க‌ம், ப‌த்திரிக்கை அலுவ‌ல‌க‌ம், அச்சு அலுவ‌ல‌க‌ம் போன்ற‌வை சூறையாட‌ப்ப‌ட்ட‌ன‌. இதில் மிக‌வும் துய‌ர‌மான‌ நிகழ்வான 97,000 புத்த‌க‌ங்க‌ளையும், அரிய‌ வ‌ர‌லாற்று கைப்பிரதிகளைக் கொண்ட‌ யாழ்ப்பாண‌ நூல‌க‌ம் சிங்க‌ள‌வ‌ர்க‌ளால் தீவைத்து இர‌வோடு இர‌வாக‌ எரிக்க‌ப்ப‌ட்ட‌து. சிங்க‌ள‌ அர‌சு மற்றும் அத‌ன் அமைச்ச‌ர்க‌ளால் திட்ட‌மிட்டு த‌மிழ‌ர்க‌ளின் ப‌குதியில் இருந்த‌ இந்த‌ அறிவு சுர‌ங்க‌மான‌ யாழ் ப‌ல்க‌லைக‌ழ‌க‌மும் அத‌ன் நூல‌க‌மும் அழிக்க‌ப்ப‌ட்ட‌து. நூல‌க‌ம் எரிக்க‌ப்ப‌ட்ட‌தற்கு முந்தைய‌ இர‌வில் ப‌ல‌ சிங்க‌ள‌ அமைச்ச‌ர்க‌ள் யாழ்ப்பாண‌த்தில் இருந்தார்கள்.

  அடுத்த‌ நாள் வெளியான‌ எந்த‌ ஒரு தேசிய செய்திதாளிலும் யாழ்ப்பாண‌ நூல‌கம் எரிக்கப்பட்ட‌ செய்தி வெளியிடப்பட‌வில்லை. த‌மிழ‌ர்க‌ளின் வாழ்விட‌ங்க‌ளுக்கு துணை இராணுவ‌ம் அனுப்ப‌ப் ப‌ட்ட‌து. த‌மிழ‌ர்க‌ளுக்கும், த‌மிழ் அர‌சிய‌ல்வாதிக‌ளுக்கும் இல‌ங்கையில் வாழ‌ பிடிக்க‌வில்லையென்றால் தங்கள் தாய்நாடான இந்தியாவிற்கு சென்று வாழலாம் என‌ ஆளும் ஐக்கிய‌ தேசிய‌ க‌ட்சியின் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் லோகுப‌ந்தாரா நேர‌டியாக‌வே கூறினார்.

  “இங்கே(இல‌ங்கையில்) த‌மிழ‌ர்க‌ள் ஒரு த‌லைப‌ட்சமாக ந‌ட‌த்த‌ப்ப‌ட்டால் ஏன் இன்னும் அவ‌ர்க‌ள் இங்கேயே வாழ‌ வேண்டும். இது அவ‌ர்க‌ளின் சொந்த‌ நாடும் இல்லை. அவ‌ர்க‌ளின் சொந்த‌ நாடான இந்தியாவிற்கே(ம‌லைய‌க‌த்தில் வாழ்ப‌வ‌ர்க‌ள் ம‌ட்டுமே இந்திய‌ த‌மிழ‌ர்க‌ள், வ‌ட‌க்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வாழ்பவ‌ர்க‌ள் சிங்க‌ள‌வ‌ர்க‌ளுக்கு முன்பிருந்தே இல‌ங்கையில் வாழ்ந்த பூர்வகுடிகள் என்ப‌தை நினைவில் கொள்க‌) சென்று வாழ‌லாமே?”. (25)

  இருப‌து வ‌ருட‌ங்க‌ளுக்கு பின்னும்  யாழ்ப்பாண‌த்தின் 1981ஆம் ஆண்டு மேய‌ரான‌ ந‌ட‌ராசா நூல‌க‌ எரிப்பையும், அதில் ஒரு மாண‌வ‌ர் எரிந்ததும் இன்றும் த‌ன் க‌ண்முன்னே தெரிவ‌தாக‌ கூறியுள்ளார்.  பின்ன‌ர் இவ‌ரும் 2006ல் த‌லைந‌க‌ரான‌ கொழும்பில் அடையாள‌ம் தெரியாத‌ ஒருவ‌ரால் சுட்டுக்கொல்ல‌ப்ப‌ட்டார். (25)
 
விடுதலைக்கான‌ போரும், த‌மிழீழ‌ விடுத‌லை புலிக‌ளும் :

       1983ன் கோடை கால‌த்தில் சிறிய‌ கொரில்ல‌ போர் இய‌க்க‌மான‌ த‌மிழீழ‌ விடுத‌லை புலிக‌ள் தமிழர்களின் பூர்விக பகுதியான வடக்கு மற்றும் கிழக்கின் பெரும்பான்மையான‌ ப‌குதிக‌ளில் ந‌ன்றாக‌ நிலை பெற்றுவிட்ட‌ன‌ர்.

  சிங்க‌ள‌வ‌ர்க‌ள் த‌மிழ‌ர்க‌ளை ப‌ல‌ இட‌ங்க‌ளில் க‌டுமையாக‌ தாக்கினார்கள். ஒரு உதாரணமாக திரிகோண‌மலையில் 1983ல் காவ‌ல் நிலைய‌த்தில் தடுப்பு காவலில் வைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ த‌மிழ் இளைஞ‌ன் இற‌ந்தார். மே 31ல் நீதிம‌ன்ற‌ விசார‌ணையில் அவ‌ர் த‌ற்கொலை செய்து கொண்டார் என்று கூற‌ப்ப‌ட்ட‌து. இது ந‌ட‌ந்து மூன்று வார‌ங்க‌ளுக்கு பின் ஒரு புதிய‌ ச‌ட்ட‌ம் அம‌லுக்கு வ‌ந்த‌து.

 இந்த சட்டத்தின் மூல‌ம் காவ‌ல் துறை க‌ட்டுபாட்டில் உள்ள‌வ‌ர்க‌ள் இற‌ந்தால் அவ‌ர்க‌ளை எந்த‌ வித‌ பரிசோத‌னையுமின்றி காவ‌ல்துறை புதைக்க‌வோ (அ) எரிக்க‌வோ முடியும் என்றானது.
 
  ச‌ர்வ‌தேச‌ ம‌ன்னிப்பு ச‌பை அதிப‌ர் செய‌வ‌ர்த்த‌னேவிட‌ம் தொலைபேசியில் தொட‌ர்பு கொண்டு இந்த‌ ச‌ட்ட‌த்திற்கு எதிரான‌ த‌ன‌து க‌ண்ட‌ன‌த்தையும் , இந்த‌ ச‌ட்ட‌ம் ம‌னித‌ உரிமையை அடியோடு அழித்துவிடும் என்றும், இதை உட‌னே இர‌த்து செய்ய‌வேண்டும் என‌ கேட்டுக்கொண்ட‌து. ஆனால் இத‌ற்கு நேர்மாறாக‌ 1983 யூன் 3 அன்று நாட்டில் அவ‌ச‌ர‌ நிலை பிர‌க‌ட‌ன‌ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌து. அவ‌ச‌ர‌நிலை அறிவிக்க‌ப்ப‌ட்ட‌ அன்றே த‌மிழ‌ர்க‌ள் திரிகோண‌ம‌லை ப‌குதியில் தாக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர்.

  திரிகோண‌ம‌லை பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ரான‌ இரா.ச‌ம்ப‌ந்த‌ன் தமிழர்கள் மீதான இனத்தாக்குதலைப் பற்றி பின்வருமாறு கூறுகின்றார், சிங்க‌ள‌ கும்ப‌ல் கிராம‌ம் கிராம‌மாக‌ சென்று த‌மிழர்க‌ளின் வீடுகளையும், க‌டைகளையும் எரித்தார்கள். த‌மிழ‌ர்க‌ள் த‌ங்க‌ள் வீடுக‌ளில் பெரும‌ள‌வில் ஆயுத‌ங்க‌ளை ப‌துக்கி வைத்திருப்ப‌தாக‌ கூறி அவ‌ர்களின் வீடுக‌ளை எந்த‌ வித‌ சோத‌னை அனும‌தி சீட்டும் இல்லாம‌ல் சோதனையிடலாம் என்ற ஒரு புதியதோர் அநியாயம் நடைமுறைக்கு வந்தது. இவ்வாறு அவ‌ர்க‌ள் தேடிய‌தில் வீட்டிற்கு தேவையான‌ பொருட்க‌ளை த‌விர‌ எதுவும் அவ‌ர்க‌ளுக்கு கிடைக்க‌வில்லை. ஐய‌த்தின் கார‌ண‌மாக‌ ப‌ல‌ த‌மிழ் இளைஞ‌ர்க‌ள் கைது செய்ய‌ப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டாவர்கள் வீடு திரும்பவே இல்லை. இது போல‌ பல திட்டமிட்ட‌ நிக‌ழ்வுக‌ள் ஒரு மாத‌ கால‌ம் ந‌டைபெற்றன‌. இதன் பின்னர் தான் இராணுவ‌த்திற்கு எதிரான‌ மிக‌ப்பெரிய‌ தாக்குதலை யாழ் வ‌ளைகுடா பகுதியில் புலிகள் யூலை 24 அன்று நடத்தினார்கள். த‌மிழீழ‌ விடுத‌லை புலிக‌ள் க‌ண்ணி வெடிகணை வைத்து இராணுவ‌ வாக‌ன‌ங்க‌ளை தாக்கினார்கள். இதில் 15 பேர் இராணுவ‌ வீரர்க‌ள் இறந்தார்கள்.
 
தாக்குத‌ல் ந‌ட‌ந்த‌ அன்று இர‌வு தொட‌ங்கி ப‌ல‌ வார‌ங்க‌ளாக‌ த‌மிழ‌ர்க‌ள் தாக்கப்பட்டார்கள். குறிப்பாக‌ த‌லைந‌க‌ர் கொளும்பில் த‌மிழ‌ர்க‌ள் நிர்வாண‌மாக்க‌ப்ப‌ட்டு தீவைத்து எரிக்க‌ப்பட்டார்கள். இந்த “க‌ருப்பு யூலை” இனத்தாக்குதலில் 3000 த‌மிழ‌ர்க‌ள் கொல்ல‌ப்பட்டார்கள். இதில் 53 அர‌சிய‌ல் கைதிக‌ளும் அட‌க்க‌ம். இந்த‌ அர‌சிய‌ல் கைதிக‌ளில் முக்கிய‌மானவராக கருதப்பட்டவர் குட்டி மணி. இவர் த‌ன‌து க‌ண்க‌ளால் சுத‌ந்திர‌ ஈழ‌த்தை பார்ப்பேன் என்று சூளுரைத்ததால் இவ‌ர‌து கண்களை தோண்டி எடுத்து சிங்க‌ள‌ காவல‌ர் த‌ன‌து காலில் போட்டு மிதித்தார். ஒரு இல‌ட்ச‌ம் த‌மிழ‌ர்க‌ள் வீடிழந்தார்கள். இவ‌ர்க‌ள் எல்லோரும் எதிலிக‌ளாக‌ இந்தியா,  க‌ன‌டா ம‌ற்றும்ஐரோப்பிய‌ நாடுக‌ளுக்கு புலம்பெயர்ந்து சென்றார்கள்.

 அமைதியான‌ முறையில் த‌மிழ‌ர்க‌ளின் சுத‌ந்திர‌த்திற்காக‌, த‌னித்தேச‌த்திற்காக‌ போராடிய‌  அர‌சிய‌ல் க‌ட்சியான‌ த‌மிழ‌ர் ஐக்கிய‌ விடுத‌லை முண்ணனியும் ச‌ன‌நாய‌க‌ அமைப்பிலிருந்து தூக்கியெறிய‌ப்ப‌ட்ட‌து. த‌னிதேச‌ம் கோரும் எல்லா ந‌ப‌ர்க‌ளையும் நாடாளும‌ன்ற‌ உறுப்பின‌ர் ப‌த‌வியிலிருந்து வெளியேற்றிய‌து ஆறாவ‌து ச‌ட்ட‌ திருத்த‌ம். இத‌னால் பாராளுமன்றத்தில் இருந்த‌‌ 16 த‌மிழ் உறுப்பின‌ர்க‌ளும் த‌ங்க‌ள் ப‌த‌வியை இழந்தார்கள். ஆயிர‌க்க‌ண‌க்கான‌ த‌மிழ் இளைஞ‌ர்க‌ள் போராளி இய‌க்க‌ங்க‌ளில் சேர்ந்த‌ன‌ர். இந்த போராளி இயக்கங்களில் த‌மிழீழ‌ விடுத‌லை புலிக‌ள் இய‌க்க‌ம் ம‌ட்டும் க‌டுமையான‌ ஒழுக்க‌ விதிக‌ளுட‌ன் ஒழுங்காக‌ க‌ட்ட‌மைக்க‌ப்ப‌டிருந்த‌து.

  தமிழர்களின் பூர்விக பகுதியான வடக்கு மற்றும் கிழக்கில் 1980ற்க்கும் 1990க்கும் இடைப்ப‌ட்ட‌ ஆண்டுக‌ளில் த‌மிழீழ‌ விடுத‌லை புலிக‌ள் இய‌க்க‌ம் ஒரு நிர்வாக அரசை (De Facto Stae) உருவாக்கினார்க‌ள். இது “த‌மிழீழம்” என்ற‌ழைக்க‌ப்ப‌ட்ட‌து. நீதி ம‌ன்ற‌ங்க‌ள், காவ‌ல்துறை, வ‌றுமையில் வாழ்ப‌வ‌ர்க‌ளுக்கு இலவசமாக அடிப்ப‌டைக் க‌ல்வி, மருத்துவ‌ உத‌விக‌ள் கொடுக்கும் ச‌மூக‌ ந‌ல‌த்துறை போன்ற‌வை அதன் அரசமைப்பில் இருந்த‌ன‌.இது ம‌ட்டும‌ல்லாம‌ல் த‌மிழீழ‌ விடுத‌லை புலிக‌ள் இய‌க்க‌ம் “வங்கி”, “ஒரு வானொலி நிலையம்” (புலிக‌ளின் குர‌ல்), “தொலைக்காட்சி நிறுவ‌னம்” என‌ எல்லாவ‌ற்றையும் க‌ட்ட‌மைத்து நிர்வ‌கித்து வ‌ந்தது. கெரில்ல‌‌ போர்க்குழு த‌லைவ‌ர்க‌ள் பார‌ம்ப‌ரிய‌ விவசாய‌ முறைப்ப‌டி சிறிய‌ கூட்டுற‌வு ப‌ண்ணைக‌ளையும் அமைத்தார்கள். த‌மிழீழ‌ விடுத‌லை புலிக‌ள் இய‌க்க‌ம் சாதிய‌ க‌ட்ட‌மைப்பை அக‌ற்றினார்கள். பெண்க‌ளின் மீதான‌ வ‌ன்முறைகளைக் களைய புதிய‌ ச‌ட்ட‌ங்களை இய‌ற்றினார்கள். த‌மிழீழ‌ விடுத‌லை புலிக‌ளின் க‌ட்டுபாட்டின் கீழ் இந்த‌ அர‌ச‌ நிர்வாக‌ அமைப்பு இருந்த‌து. இங்கு வாழ்ந்த‌ ம‌க்க‌ள் புலிக‌ள் அமைத்த‌ ச‌ட்ட‌ திட்ட‌ங்க‌ளுக்கு உட்ப‌ட்டு அமைதியாக‌ வ‌ழ்ந்து வ‌ந்தார்க‌ள். இல‌ங்கை அர‌சு தான் அவ்வ‌ப்போது குண்டுவீசி அமைதியை சீர்குலைத்த‌து.

 இந்த காலகட்டத்தில் தான் சிறீல‌ங்காவின் ம‌ற்ற‌ ப‌குதிக‌ளில் பல கலவரங்கள் நடைபெற்றன. முற்போக்கு‌ சிங்க‌ள இளைஞர்களை உறுப்பினராக கொண்ட‌ ச‌ன‌தா விமுக்தி பேரமுனா சோச‌லிச‌த்தை நோக்கி முன்னேற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். 1987ல் மீண்டுமொரு முறை ச‌ன‌தா விமுக்தி பேரமுனா அர‌சுக்கு எதிரான கலவரத்தில் இற‌ங்கிய‌து. ஆனால் இது 1989ன் பிற்ப‌குதிக‌ளில் மோதலை கைவிட்டு பாராளும‌ன்ற‌ முத‌லாளித்துவ‌ அர‌சிய‌லில் 1994 பொதுத் தேர்த‌லில் முதல் முறையாக போட்டியிட்ட சனதா விமுக்தி பேரமுனா பழமைவாத சிங்கள கட்சிகளுடன் சேர்ந்து  போட்டியிட்ட‌து. இதிலிருந்து சனதா விமுக்தி பெரானாவும் த‌மிழ‌ர்களுக்கு ச‌மஉரிமை கொடுப்ப‌தை எதிர்க்க ஆரம்பித்தது.

 பிரேம‌தாசா பிப்ர‌வ‌ரி 1978லிருந்து ச‌ன‌வ‌ரி 1, 1989 வ‌ரை அதிப‌ர் செய‌வ‌ர்த்த‌னேவின் கீழ் பிர‌த‌ம‌ராக‌ இருந்தார். அத‌ன் பின்ன‌ர் அதிப‌ரான‌ பிரேம‌தாசா 1993 மேமாத‌ம் ப‌டுகொலை செய்ய‌ப்ப‌டும் வ‌ரை அதிபர் ப‌த‌வியில் நீடித்தார். பெரும்பான்மையான‌ சிங்க‌ள மேல் தட்டு வர்க்கத்தினர் இவ‌ர் த‌மிழ‌ர்க‌ளுட‌ன் ச‌ம‌ர‌சமாக‌ செல்வதால், த‌ங்க‌ளுக்கு த‌லைவ‌ராக‌ இருக்க‌ த‌குதிய‌ற்ற‌வ‌ரென்று எண்ணினார்கள். பல முரணான கொள்கைகள்‌ இவ‌ர‌து ப‌த‌விகால‌த்தில் நடைமுறைபடுத்தப்பட்ட‌‌ன‌. மொழிக் கொள்கையில் மாற்ற‌ம், இன அழித்தொழிப்பு ம‌ற்றும் இந்தியாவின் இல‌ங்கை தலையீடு போன்றவை அவற்றில் சில‌. முத‌ல் முரண் “த‌மிழை வ‌டக்கு மற்றும் கிழ‌க்கில் சிங்க‌ள‌த்துக்கு இணையான‌ மொழியாக மாற்றினார். தேசிய‌ மொழியாக‌ சிங்களத்தையும், த‌மிழையும் மாற்றினார். அரசின் அதிகார‌ப்பூர்வ‌ மொழியாக‌ சிங்க‌ள‌த்தையும் இணைப்பு மொழியாக ஆங்கிலத்தையும் மாற்றி இவ‌ர் ச‌ட்ட‌திருத்தம் செய்தார்.

 இந்த சட்டத்திற்கு ஒரு குயுக்தியான‌(Double tongue) பொருள் உள்ளது. இது இர‌ண்டு மொழியையும் ச‌மாதான‌ப்படுத்திய‌து. இந்தியாவில் எல்லா மொழிக‌ளும் அர‌ச மொழிக‌ளாக்க‌ப்ப‌ட்ட‌து போல‌ சிங்க‌ள‌மும், த‌மிழும் அர‌சின் மொழிகளாக‌ ச‌மமாக அறிவிக்கப்படவில்லை.

தனிமைப்படுத்த‌‌ப்ப‌ட்ட‌ த‌மிழ‌ர்க‌ள்:
                   வட‌அமெரிக்க நூல‌க‌ காங்கிர‌சின் ஆய்வறிக்கையில் த‌மிழ‌ர்க‌ள் இலங்கையில் தனிமைப்படுத்த‌ப் பட்டு விடார்கள் என கூறுகின்ற‌து. “இலங்கை ஒரு ஆய்வு” என்ற இந்த அறிக்கை 1989ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதில் “தனிமைப்படுத்த‌‌ப்பட்ட‌ த‌மிழர்கள்” என்ற பகுதியில் ஆய்வாசிரியர் பின்வருமாறு எழுதியுள்ளார்.(27)

 ” தொடர்ந்து வந்த சிங்கள அரசுகளின் கொள்கைகளால் தமிழர்கள் தனிமைப்படுத்த‌‌ப்ப‌ட்டார்கள். 1950ஆம் ஆண்டு “சிங்களம் ம‌ட்டுமே” அரசு‌ மொழி என்று ச‌ட்டம் நிறைவேற்றப்பட்டதிலிருந்தே சாதாரண தமிழ் மக்களும், போராளி இயக்கங்களும் சிங்கள அரசை ஐயத்துடனும், கோபத்துடனமே அணுகிவந்துள்ளார்கள்”.

 “தொடர்ந்து நடந்த இனப்பாகுபாட்டின் காரணமாக‌ இல‌ங்கையில் த‌மிழ‌ர்க‌ள் தனிமைப்படுத்த‌‌ப்ப‌ட்டார்க‌ள் என்பது வெளிப்படையானது. இதை எதிர்த்து போராடுவதற்கு எல்லா தரப்பு மக்களும் ஆதரவளித்தார்கள். இதில் குறிப்பாக இளைஞர்கள் தரப்பின் ஆதரவு போராளி குழுக்களை உருவாக்கியது. ஆனாலும் சிங்க‌ள‌வ‌ர்க‌ளின் மொழியே அர‌ச‌ மொழியாக‌வும், அர‌ச ப‌ணிக‌ளில் ப‌ணியாற்ற‌ சிங்க‌ள‌ மொழி தேர்ச்சியும் தேவைப்ப‌ட்ட‌து. சிங்க‌ள‌வ‌ர்க‌ளின் விண்ண‌ப்ப‌ங்க‌ளுக்கே ப‌ல்க‌லைக‌ழ‌க‌ங்க‌ளிலும், அர‌ச‌ ப‌ணிக‌ளிலும் முன்னுரிமை கொடுக்க‌ப்ப‌ட்ட‌து. இது ம‌ட்டுமல்லாம‌ல் ப‌ல‌ த‌மிழ‌ர் ப‌குதிக‌ளில் சிங்க‌ள‌வ‌ர்க‌ளை கட்டாயமாக குடியேற்றும் ப‌ணியையும் அர‌சு தொட‌ர்ந்து ஊக்க‌ப்ப‌டுத்தி வ‌ந்த‌து.

 ” தமிழர்களின் பூர்விகமான வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அர‌சாங்க‌த்தால் ஊக்குவிக்க‌ப்ப‌ட்ட‌ சிங்க‌ள குடியேற்ற‌ங்க‌ள் அந்த பகுதிகளில் ந‌டைபெற்ற‌ இன‌க்குழு மோத‌லுக்கு முக்கிய‌ கார‌ணமாயின‌. 1980க‌ளின் ந‌டுப்ப‌குதியில் வ‌ட‌க்கின் வ‌ற‌ண்ட‌ ப‌குதிக‌ளில் 30,000 சிங்க‌ள‌ர்க‌ளை குடியேற்றி, அவ‌ர்களுக்கு வீடு க‌ட்ட‌ ப‌ண‌மும் கொடுத்து, அவ‌ர்க‌ளின் பாதுகாப்பிற்காக இயந்திர துப்பாக்கிகளையும் கொடுத்த‌து அர‌சு. த‌மிழ் அர‌சிய‌ல் க‌ட்சிக‌ளின் செய்தித் தொட‌ர்பாள‌ர்க‌ள் அரசின் இந்த ந‌வ‌ காலனீய‌ செய‌ல்பாட்டை க‌ண்டித்தார்கள். ஆனால் செய‌வ‌ர்த்தனே அர‌சோ நாட்டின் எந்த ஒரு பகுதியும் ச‌ட்ட‌பூர்வ‌மாக‌ எந்த‌ ஒரு இன‌த்தின் பூர்விக‌ நில‌மும் அல்ல‌ என‌க்கூறி சிங்க‌ள‌ குடியேற்ற‌ங்க‌ளை அதிக‌ப்ப‌டுத்திய‌து. தமிழர்கள் பகுதிகளில் குடியேற வ‌றுமைகோட்டிற்க்கு கீழே வாழும் ஏழை சிங்க‌ளவர்க‌ள் நிர்ப‌ந்திக்கப்பட்டார்கள்.

  சேகுவேரா ம‌னித‌ர்க‌ள் தனிமைப்படுத்த‌‌ப்ப‌டுவ‌தை க‌ண்டித்தார்.(2)……. மனிதனை அந்நியபடுத்தலில் இருந்து விடுதலை பெறச் செய்வதே புரட்சியின் த‌லையாய நோக்கமாகும் என மிக தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

இலங்கை குறித்த இந்தியாவின் ஊசலாட்டமான கொள்கை:

இல‌ங்கையின் உள்நாட்டு போரில் இந்தியாவின் ப‌ங்கு தான் மிக‌வும் முக்கியபிரச்சனையே. இந்திராவின் ம‌க‌னான பிரதமர் இராசீவ் முத‌லில் த‌மிழீழ‌ விடுத‌லைப் புலிக‌ளை ஆத‌ரித்தார். இந்திய‌ விமான‌ ப‌டை 25 ஆயிர‌ம் கிலோ உண‌வு பொருட்க‌ளை யாழ்ப்பாண‌ த‌மிழ‌ர்க‌ள் ப‌குதியில் போட்ட‌து (பூமாலை திட்ட‌ம்). இத‌ற்கு ஒரு மாத‌த்திற்கு பின் இந்திய‌ இல‌ங்கை ச‌மாதான‌ ஒப்ப‌ந்த‌ம் இராசீவிற்கும், பிரதமர். பிரேமதாசாவுக்கும் இடையில் 1987 யூலை 29ல் கையெழுத்திட‌ப்ப‌ட்ட‌து. இதில் செய‌வ‌ர்த்த‌னேவுக்கு கீழே இருந்த‌ பிர‌த‌ம‌ர் பிரேம‌தாச‌விற்கு உட‌ன்பாடில்லை. செயவர்த்தனேவின் வற்புறுத்தலால் தான் பிரேமதாசா இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டார். இந்த‌ ச‌மாதான‌ உட‌ன்ப‌டிக்கை உள்நாட்டு போரை ஒரு முடிவுக்கு கொண்டுவரும் என எதிர்பார்க்கப்பட்டது. த‌மிழ‌ர்க‌ளுக்கு ச‌ம‌ உரிமை கொடுப்ப‌த‌ற்கும், த‌மிழ‌ர்க‌ளின் ப‌குதிக‌ளில் நிலை கொண்டிருந்த‌ இராணுவ‌த்தை திரும்ப‌ பெறுவ‌த‌ற்கும் ஒப்புக்கொண்ட‌ அர‌சு இத‌ற்கு ப‌திலாக‌ போராளி இய‌க்க‌ங்க‌ளை ஆயுத‌ங்க‌ளை க‌ளையச் சொன்ன‌து. இந்த‌ ச‌மாதான பேச்சுவார்த்தை புலிகளின் ஒப்புதலும், பங்கேற்பும் இன்றியே நடந்தேறியது. புலிகள் தங்கள் விருப்பத்திற்கு மாறாகவே இந்திய‌ ச‌மாத‌ன‌ப‌டையிட‌ம் த‌ங்க‌ள‌து ஆயுத‌ங்க‌ளை கையளித்தார்கள். இத‌ன் சில‌ மாத‌ங்க‌ளுக்கு பின் இர‌ண்டு த‌ர‌ப்புக‌ளும் ஒருவ‌ர் மேல் ஒருவ‌ர் குறை கூற‌ ஆர‌ம்பித்தார்கள். இது மோதலாக‌‌ வெடித்த‌து இந்த‌ முறை த‌மிழீழ‌ விடுத‌லை புலிக‌ள் இந்திய‌ ச‌மாத‌ன‌ ப‌டையை எதிர்த்து போராட‌‌ வேண்டிய‌தாயிற்று. போராளி இய‌க்க‌ங்க‌ளை விட‌ அதிக‌ அளவில் உயிரள‌ப்பு இந்திய‌ ச‌மாதான‌ ப‌டைக்கு ஏற்ப‌ட்ட‌து.  1500 பேர் கொல்ல‌ப்பட்டார்கள். 4500 பேர் காய‌ம‌டைந்தார்கள்.

   இந்திய‌ ச‌மாதான‌ ப‌டைக‌ள் மூன்று மாத‌த்தில் இல‌ங்கையை விட்டு வெளியேறும் என்று  கோரிக்கையை முன்வைத்து வெற்றி பெற்ற‌ பிரேம‌தாசா 1989 சனவரியில் இலங்கையின் அதிப‌ரானார். இந்திய‌ ச‌மாதான‌ப்டை இந்தியாவிலும் பெரும்பான்மையினாரால்‌ ஏற்றுக்கொள்ள‌ப்ப‌ட‌வில்லை. குறிப்பாக‌ ஐந்து கோடி த‌மிழ‌ர்க‌ளாலும் இது தீவிர‌மாக‌ எதிர்க்க‌ப்ப‌ட்ட‌து. ஆனால் இராசீவ் சமாதான ப‌டையை திருப்பப் பெறவில்லை. இந்த‌ போரை முடிக்க‌ ஒரே வ‌ழியாக‌ த‌மிழீழ‌ விடுத‌லை புலிகளுடன் அரசு ஒரு ஒப்பந்தத்திற்கு வரவேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டது . ஆனால் இந்தியாவில் வி.பி.சிங் பிர‌த‌ம‌ரான‌வுட‌ன் அ‌வ‌ர் ப‌டைக‌ளை திரும்ப‌ பெற்றுக்கொண்டார்.

இந்திய அமைதி படை செய்த‌ ப‌டுகொலைக‌ளுக்கு ப‌ழிவாங்கும் ந‌ட‌வ‌டிக்கையாக‌ 1991 மே 21ல் த‌மிழீழ‌ விடுத‌லை புலிக‌ள் அமைப்பின் பெண் உறுப்பினர் ஒருவ‌ர் மனித வெடிகுண்டாகி இராசீவை கொன்றார்.(28) 1992ல் இலங்கைக்கு முன்ன‌தாக‌வே இந்தியா த‌மிழீழ‌ விடுத‌லை புலிக‌ளை தீவிர‌வாத‌ இய‌க்க‌மாக‌ அறிவித்த‌து.

  அதிப‌ர் பிரேம‌தாசா மீண்டும் உள்நாட்டு போரை தொட‌ர்ந்தார்.இது ஒரு முடிவிலியான‌து. பிரேமதாசவின் மேல் பலர் கடும் கோபம் கொண்டிருந்தார்கள். இதில் முக்கியமானவர் அதுலத்முதலி. இவர் 1991ல் பிரேமாதாசாவின் மேல் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார். அதுல‌த்முத‌லி யூத‌ இன‌வாத‌ கொள்கைக‌ளில் வெறி கொண்ட, இசுரேலிய சார்புடைய‌வ‌ர்.

  “இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ங்களுக்கு முன்பு அதுல‌த்முத‌லி பிரேம‌தாவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த‌ போது, பிரேம‌தாசா இது இசுரேலின் உள‌வு நிறுவ‌ன‌மான‌ மொச‌ட்டின் சதிவேலையே என்று பாராளும‌ன்ற‌த்தில் குற்றம் சாட்டினார்”.

  ” நான் பாராளுமன்றத்தில் இருந்து இசுரேலிய‌ ஆத‌ரவு ஆற்றல்களை முற்றிலுமாக‌ நீக்கி விட்டேன். அத‌ன் ஒரு விளைவே நீங்க‌ள் காணும் இசுரேலிய‌ உளவு நிறுவ‌ன‌மான‌ மொசாட்டின் இந்த‌ குற்ற‌ச்சாட்டுக‌ள். ந‌ம்முள்ளே இசுரேலிய‌ ப‌ல்க‌லைக‌ழ‌க‌ங்க‌ளுக்கு சென்று அங்கே ப‌ணியாற்றி கறைபடிந்த ப‌ணத்தை ச‌ம்பாதித்த ப‌ல‌ துரோகிக‌ள் உள்ளார்கள்”. இது ச‌ச்சி காந்தாவினால் எழுத‌ப்ப‌ட்ட‌ ” பிரேம‌தாசா ப‌டுகொலை ஒரு மீளாய்வு” என்ற‌ புத்த‌க‌த்தில் கூறப்பட்டுள்ள‌து.(29)

ஏப்ர‌ல் 1993ல் அதுல‌த்முத‌லி கொலை செய்ய‌ப்ப‌ட்டார்.இது ந‌ட‌ந்த எட்டு நாட்க‌ளுக்கு பின் மே முத‌ல் தேதிய‌ன்று பிரேம‌தாசா ப‌டுகொலை செய்ய‌ப்ப‌ட்டார். த‌மிழீழ‌ விடுத‌லை புலிக‌ள் இத‌ற்கு உரிமை கோர‌‌வில்லை. எனினும் சிங்க‌ள‌ பெரும்பான்மை ஊட‌க‌ங்கள் அவ‌ர்க‌ளையே இத‌ற்கு கார‌ண‌ம் என‌ சித்த‌ரித்த‌ன‌ர்.

   ” அதுல‌த்முத‌லி ஏப்ர‌லில் கொல்ல‌ப்ப‌ட்ட‌ போது அவ‌ர‌து க‌ட்சி உறுப்பின‌ர்க‌ள் பிரேம‌தாசா தான் அவ‌ரை கொன்றார் என‌ குற்ற‌ம் சாட்டினார்கள். பிரேம‌தாசாவின் ப‌டுகொலை இலங்கை அர‌சிய‌லில் த‌ங்க‌ள‌து முக்கிய‌ ஆத‌ர‌வளாரான‌ அதுல‌த்முத‌லியின் கொலைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இசுரேலின் உளவு நிறுவனமான மொசட் அமைப்பை பயன்படுத்தி செய்ய‌ப்பட்டுருக்கலாம்”.(29)

 இர‌ண்டாம் ஈழ‌ப்போர் 1989ல் தொட‌ங்கி 1994 ந‌வ‌ம்ப‌ர் வ‌ரை நீடித்த‌து. ம‌க்க‌ள் கூட்ட‌ணியின் பிர‌நிதியான‌  ச‌ந்திரிகா ப‌ண்டார‌நாய‌கே குமார‌துங்க வெற்றி பெறும் வ‌ரை இது தொட‌ர்ந்த‌து. ஆனால் ச‌மாதான‌ பேச்சுவார்த்தை முறிந்து மீண்டும் போர் 1995ல் தொட‌ங்கி 2001ன் இறுதி வ‌ரை நீடித்த‌து. 2001ன் இறுதியில் போர் நிறுத்த‌ம் தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. இதுவும் கூட‌ இல‌ங்கையின் 2,30,00பேர் கொண்ட‌ இராணுவ‌த்திற்கு தாங்க‌ள் இணையான‌வ‌ர்க‌ள் என‌ 5,000 பேர் கொண்ட‌ கொரில்ல‌ போர் இய‌க்க‌மான‌ த‌மிழீழ‌ விடுத‌லை புலிக‌ள் நிரூபித்ததன் காரணமாகவே. த‌மிழீழ‌ விடுத‌லை புலிக‌ளின் ப‌ல‌ வெற்றிக‌ளுக்கு கார‌ண‌மான‌ கட‌ற்புலிக‌ள் அமைப்யும், வான்புலிகள் அமைப்பின் பங்கும் உள்ள‌து.புலிக‌ளின் க‌ட‌ற்ப‌டை கொள்ளைய‌டிப்ப‌த‌ற்காக‌ ப‌ல‌ ப‌ட‌குக‌ளை தாக்கி அழித்துள்ளார்க‌ள். அதே போல‌ உள்நாட்டு போக்குவ‌ர‌த்திற்காக‌ புலிக‌ள் ப‌ய‌ன்ப‌டுத்திய‌ விமான‌ங்க‌ளைக் கொண்டே ப‌ல‌ முறை இல‌ங்கை விமான‌ ப‌டை விமான‌ங்க‌ளை தாக்கியழித்து வெற்றி க‌ண்டுள்ளார்க‌ள்.

 இலங்கை இராணுவ‌ம் த‌மிழீழ‌ விடுத‌லை புலிக‌ளின் க‌ட்டுபாட்டுப‌குதியில் உள்ள‌ த‌மிழ் பொதும‌க்க‌ளின் மீது ப‌ல‌ முறை குண்டுவீசி தாக்கியுள்ள‌து. மேலும் த‌மிழ் ம‌க்க‌ள் த‌ங்க‌ள் விருப்ப‌த்திற்க்கு மாறாக புலிகளால் த‌டுத்து வைக்க‌ப்ப‌ட்டிருப்ப‌தாக‌வும் அரசு கூறிய‌து. பொதும‌க்க‌ளை பிணைக்கைதிக‌ளாக‌ புலிக‌ள் வைத்திருப்ப‌தாக‌ அர‌சு கூறிய‌தை மேற்குல‌கும், அத‌ன் பெரும்பான்மை ஊட‌க‌ங்க‌ளும் உண்மை என‌ ந‌ம்பின‌. மேலும் புலிக‌ள் குழ‌ந்தைக‌ளை க‌ட்டாய‌ப்ப‌டுத்தி படைகளில் சேர்க்கின்றார்கள் என்றும் குற்ற‌ம் சாட்ட‌ப்ப‌ட்ட‌து.

  1996 ச‌ன‌வ‌ரி 31ஆம் திக‌தி அன்று கொளும்பில் உள்ள மைய‌ வ‌ங்கியை வெடிக்க‌ச் செய்த‌த‌ன் மூல‌ம் த‌மிழீழ‌ விடுத‌லை புலிக‌ள் இலங்கையை விய‌ப்பில் ஆழ்த்தினர். இந்த‌ வ‌ங்கியில் தான் இல‌ங்கையின் முக்கியமான‌ வ‌ணிக‌ க‌ண‌க்குக‌ள் எல்லாம் இருந்த‌ன‌. 200 கிலோ வெடி பொருட்க‌ளுட‌ன் வ‌ந்த‌ த‌ற்கொலைபடையை சேர்ந்த‌ ஒருவ‌ர் வ‌ங்கியின் முக்கிய‌ வாச‌லில் குண்டை வெடிக்க‌ செய்தார். இதனால் வங்கியின் கட்டிடத்தில், பல மாடிகளும், அருகில் இருந்த கட்டிடங்களும் இடிந்து விழுந்தன‌. அத‌ன் பின்ன‌ர் வாக‌ன‌த்தில் வ‌ந்த‌ இர‌ண்டு வீர‌ர்க‌ள் சிறிய வெடிகுண்டு எரிக‌ருவியின் மூல‌மும், துப்பாக்கிக‌ள் மூல‌ம் வ‌ங்கியை மேலும் தாக்கினார்கள். பெரிய‌ அள‌விலான‌ சொத்து சேத‌ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌து, 53 பேர் உயிரிழந்தார்கள். 1400 பேர் வ‌ரை காய‌ம‌டைந்தார்கள். இதில் இறந்தவர்கள் பெரும்பாலும் பொதுமக்களே.
 
  யூலை 24, 1996 த‌மிழீழ‌ விடுத‌லை புலிக‌ள் பொது ம‌க்க‌ள் செல்லும் தொட‌ர்வ‌ண்டியை குண்டு வைத்து தகர்த்ததில் 70 சிங்க‌ள‌ பொதும‌க்க‌ள் இற‌ந்தார்கள். 1990க‌ளின் இறுதியில் இர‌ண்டு த‌ர‌ப்புமே ஆயிர‌க்க‌ண‌க்கான‌ பொதும‌க்க‌ளை கொன்றிருந்தார்கள். புலிக‌ள் இராணுவ‌ நிலைக‌ளின் மீது ந‌ட‌ந்த‌ தாக்குத‌ல்க‌ளின் போது ம‌ட்டுமே சில‌ பொதும‌க்க‌ள் இற‌ந்திருக்க‌லாம் என‌க்கூறினார்கள். ஆனால் தொட‌ர் வ‌ண்டி தாக்குத‌ல்க‌ள் போன்ற சில தாக்குதல்களை எல்லாம் ஏற்றுகொள்ள‌ இயலாது. இதும‌ட்டும‌ல்லாம‌ல் ம‌ற்ற‌ போராளி இய‌க்க‌ங்க‌ளையும், புலிக‌ளை விம‌ர்சிப்ப‌வ‌ர்க‌ளையும் , த‌மிழ் ஐக்கிய‌ விடுத‌லை முண்ண‌னியின் சில‌ த‌லைவ‌ர்க‌ளையும் புலிக‌ள் கொன்றுள்ளார்கள்.(30)

ஏப்ர‌ல் 22, 2000 அன்று த‌மிழீழ‌ விடுத‌லை புலிக‌ள் இல‌ங்கையின் யானையிற‌வு இராணுவ‌ முகாமை தாக்கி வெற்றி கொண்டார்க‌ள். இந்த‌ தாக்குத‌லில் 1000திற்கும‌திக‌மான‌ இராணுவ‌ வீர‌ர்க‌ள் இற‌ந்தார்கள். பெரும‌ளவு ஆயுத‌ங்க‌ளும், வெடி ம‌ருந்துகளும் புலிக‌ளால் கைப்ப‌ற்ற‌ப்ப‌ட்ட‌து.

யூலை 24, 2001 அன்று த‌மிழீழ‌ விடுத‌லை புலிக‌ள் இல‌ங்கையின் ச‌ர்வ‌தேச‌ விமான‌ நிலைய‌த்தை தாக்கி மீண்டும் உல‌கை விய‌ப்பில் ஆழ்த்தினார்கள். “காலை 03.30 ம‌ணிக்கு விமான‌த‌ள‌த்தின் மின்னிணைப்பை துண்டித்து எல்லையோர‌ த‌டுப்பு க‌ம்பிக‌ளை அறுத்து விமான‌ நிலைய‌த்தின் உள்ளே நுழைந்த‌ன‌ர் 14 க‌ரும்புலி த‌ற்கொலை ப‌டையின‌ர். இவ‌ர்க‌ள் கொண்டு வ‌ந்திருந்த‌ வெடிம‌ருந்துகளைப் பயன்படுத்தி ப‌தினொரு போர் விமான‌ங்க‌ளையும், இர‌ண்டு ப‌யிற்சி விமான‌ங‌க‌ளையும் இவ‌ர்க‌ள் தாக்கிய‌ழித்தார்கள். இந்த‌ தாக்குத‌லில் மொத்த‌மாக‌ 26 விமான‌ங்க‌ள் முற்றிலுமாக‌வோ (அல்லது) பகுதி‌ அள‌விலோ தாக்கிஅழிக்க‌ப்ப‌ட்ட‌ன‌”.(31)

எட்டு புலிக‌ளும் மூன்று விமான‌ப‌டை அதிகாரிக‌ளும் இந்த தாக்குத‌லில் உயிரிழ‌ந்தார்கள். மீத‌முள்ள‌ ஆறு புலிக‌ளும் அருகிலுள்ள பண்டாரநாயக்கா விமான நிலையத்தில் நுழைந்து ஆட்க‌ளில்லாத‌ ப‌ய‌ணிக‌ள் விமான‌த்தை தாக்கினார்கள். இதில்  ஒரு A 340 விமானம் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. A330 விமானம் எரிகுண்டினால் தகர்க்கப்பட்டது. மேலும் ஒரு A320 200, A340 300 விமானமும் இந்த சண்டையில் தகர்க்கப்பட்டன‌(31)

 “தாக்குத‌ல்க‌ளின் இறுதியில் 14 போராளிக‌ளும் கொல்ல‌ப்பட்டார்கள். இவ‌ர்க‌ளோடு ஆறு விமான‌ப்ப‌டை அதிகாரிக‌ளும், ஒரு இராணுவ‌ வீர‌ரும் கொல்லப்பட்டார்கள். ஒரு இர‌சிய‌ நாட்டை சேர்ந்த‌ பொறியாள‌ரும் ,12 இராணுவ வீரர்களும், மூன்று பொது ம‌க்க‌ளும் காயமடைந்தார்கள். இலங்கைக்கு ப‌ய‌ணிக‌ள் விமான‌த்தின் மூல‌ம் ம‌ட்டும் 350 பில்லியன் அமெரிக்க‌ டால‌ர்க‌ள் இழ‌ப்பு ஏற்ப‌ட்ட‌து. இந்த‌ தாக்குத‌லின் மூல‌ம் ஒட்டு மொத்த‌ இல‌ங்கையின் பொருளாதார‌மும் 1.4% வீழ்ச்சியடைந்தது. சுற்றுலா பயணிகளின் வருகை ஆண்டு இறுதியில் மொத்தம் 15.5% குறைந்திருந்த‌‌து.

போர்நிறுத்த‌ம்:

  இருபது ஆண்டுகளாக நடைபெற்ற போராட்டத்தின் போது ப‌ல‌ முறை த‌மிழீழ‌ விடுத‌லை புலிக‌ள் அமைப்பு அமைதிக்காகவும், இனப்பாகுபாட்டை நீக்குவதற்காகவும் சில நிபந்தனைகளை  முன்வைத்து போர் நிறுத்த‌தை வ‌லியுறுத்தியனர். இந்த‌ இராணுவ‌ வெற்றி மூல‌ம் மீண்டும் அவ‌ர்க‌ள் போர் நிறுத்த‌திற்கு கோரிக்கை வைத்த‌ன‌ர். சில‌ தேசிய‌வாதிக‌ளும், ப‌ல‌ ச‌ர்வ‌தேசிய‌ நாடுக‌ளும் போர் நிறுத்த‌ம் வேண்டும் என‌ இல‌ங்கையை நிர்ப‌ந்தம் செய்த‌ன‌. நார்வே போர் நிறுத்த‌தை நோக்கி சில‌ உறுதியான‌ ந‌க‌ர்வுக‌ளை மேற்கொண்ட‌து. ஆனால் புலிக‌ளின் மாபெரும் வெற்றியும், அரசின் பொருளாதார‌ இழ‌ப்புமே இல‌ங்கையை பேச்சுவார்த்தையை நோக்கி த‌ள்ளிய‌து.

  பிப்ர‌வ‌ரி 22, 2002 அன்று பிர‌தம‌ர் ர‌ணில் விக்க‌ர‌மிசிங்கேயும், புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிர‌பாக‌ர‌னும் போர் நிறுத்த‌ ஒப்ப‌ந்த்த‌தில் கையெழுத்திட்ட‌ன‌ர். ச‌ம‌ர‌ச‌ தூதுவ‌ரான‌ சான் பீட்ட‌ர்சன் நார்வேயின் வெளியுற‌வு துறை சார்பாக‌ கையெழுத்திட்டார்.

  இர‌ண்டு த‌ர‌ப்புக‌ளும் தாங்க‌ள் த‌ற்போது உள்ள‌ ப‌குதிகளே எல்லைப்ப‌குதியாக‌ குறிக்க வழிவகைசெய்ய‌ப்ப‌ட்ட‌ன‌. பெரும‌ள‌வில் ஆயுத‌ங்க‌ளை எடுத்த‌ச் செல்வ‌தோ, தாக்குவ‌தோ த‌டை செய்ய‌ப்ப‌டிருந்த‌து.

த‌மிழீழ‌ விடுத‌லை புலிக‌ள் த‌மிழ‌ர்க‌ளின் பூர்விக‌ நிலத்தை நிர்வகிக்க‌ ஒரு இடைக்கால‌ அர‌சை உருவாக்க‌ வேண்டும், நிலுவையிலுள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், தேர்தலை நடத்த வேண்டும் என்ற‌ கோரிக்கைகளை வைத்தார்கள். இந்த‌ போர் நிறுத்த‌ம் “இல‌ங்கை மேற்பார்வைக் குழுவின்” மூல‌ம் க‌ண்காணிக்க‌ப்ப‌ட்ட‌து. இதன் மைய குழுவில் நார்வே, சுவீடன், பின்லாந்து, டென்மார்க் மற்றும் ஐசுலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் இருந்தனர். இந்த‌ குழுவில் ஐரோப்பிய யூனியன் நாடுகளைச் சேர்ந்தோரும், வட‌அமெரிக்கா, பிரிட்ட‌ன் நாடுக‌ளைச் சேர்ந்தோரும் இருந்த‌ன‌ர். இத‌ன் த‌லைமைய‌க‌ம் கொழும்பில் நிறுவ‌ப்ப‌ட்ட‌து. அறுப‌து பார்வையாள‌ர்க‌ள் ஆறு பிராந்திய‌ங்க‌ளிலும், இர‌ண்டு க‌ட‌ற்கரை ப‌குதிக‌ளிலும் இருந்த‌ன‌ர். இந்த‌ குழு போர் நிறுத்த‌தை மீறுவ‌தை க‌ண்காணிக்க‌வும், அமைதி காக்க‌‌வும் நிர்ணிய‌க்க‌ப்ப‌ட்ட‌து. ஆனால் இவ‌ர்க‌ளுக்கு இரு தரப்புகளை நிர்ப்பந்திக்கின்ற உரிமையோ, கண்டிக்கின்ற உரிமையோ இல்லை. மேலும் சர்வதேச நாடுகள் கொடுக்கும் நிதி உதவிகளை யாருக்கு எவ்வளவு கொடுக்கவேண்டும் என ஆலோசனை கூறக் கூட உரிமை இல்லை. பெரும்பான்மையான‌ சிங்க‌ள‌ர்க‌ள் இந்த‌ குழு புலிக‌ளுக்கு ஆத‌ர‌வாக‌ செய‌ல்ப‌டுவ‌தாக‌வே க‌ருதினார்க‌ள். இந்த‌ போர் நிறுத்த கால‌த்தில் விவ‌சாய துறை பணிக‌ளும், பொதுக் க‌ட்ட‌மைப்பு வேலைக‌ளும் த‌மிழர் தாயகப்பகுதிகளில் மிகத்துரிதமாக ந‌ட‌ந்த‌ன‌. வெளிநாடுக‌ளை சேர்ந்தவ‌ர்க‌ள் பார்வையிட‌ அழைக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர். தமிழீழ‌த்தின் ப‌ல‌ ப‌குதிக‌ளில் ந‌ல்ல‌ நிலை காண‌ப்ப‌ட்ட‌து. நிர்வாக‌ ரீதியாக‌வும், பொருளாதார‌ ரீதியாக‌வும் எல்லா பணிகளும் முறையாக நிறைவேற்றப்பட்டன‌‌. இந்த‌ நேர‌த்தில்  சில‌ர் பொதும‌க்க‌ளுக்கு கருத்துரிமையே வ‌ழ‌ங்க‌ப் ப‌ட‌வில்லை என‌ புலிக‌ளை குற்ற‌ம் சாட்டினார்கள். புலிக‌ள் ஒரு ச‌ர்வ‌தேசிய‌ அர‌சிய‌ல் இய‌க்க‌த்தை இந்த‌ நேர‌த்தில் தோற்றுவிக்க‌வில்லை. பொருளாதார‌ உத‌விக‌ளை அவ‌ர்க‌ள் கோரினார்க‌ள். புல‌ம்பெய‌ர்ந்து வாழும் த‌மிழ‌ர்க‌ள் இத‌ற்கு பெரும‌ள‌வில் உத‌வினார்கள். கூட்டுறவு மற்றும் தனியார் நிறுவனங்களைக் கொண்ட சமூக நல அரசு உருவாவதை இல‌ங்கை தொட‌ர்ந்து எதிர்த்தால், இராணுவ ரீதியாக இலங்கையை வெற்றி கொள்வதென்று முடிவெடுத்துள்ளார்கள். புலிக‌ள் மிக‌வும் ம‌திக்க‌ப்ப‌ட்டார்க‌ள், அவ‌ர்க‌ள் நேரடியாகவே போர் க‌ருவிக‌ளை சில நாடுகளிடம் இருந்து வாங்கினர். ஆனால் அவர்கள் வட‌அமெரிக்கா/ ஐரோப்பிய‌ நாடுகளிடம் இருந்து நேரடியாக வாங்காமல், அவர்களை எதிர்த்து வந்த பாகிசுதான், சீனா, ஈரானிடமிருந்து நேரடியாக‌ ஆயுத‌ங்க‌ளை வாங்கின‌ர். 2009 மே 29 அன்று டைம்சு இணைய இதழ் ஒன்று புலிக‌ள் 11 வியாபார‌க் க‌ப்ப‌ல்கள் நிறைய‌ உக‌ரைன், சைப்ர‌சு, தாய்லாந்து போன்ற‌ நாடுக‌ளிட‌ம் இருந்து வாங்கிய‌ ஆயுத‌ங்க‌ளை கொண்டுவந்தார்கள் என செய்தி வெளியிட்டுள்ளது. 2005ல் அங்கீகரிக்கப்படாத தனி நாடு என்று “தமிழீழத்தை” உலக வங்கியின் இலங்கைக்கான செயலாளர் பீட்டர் கெரால்டு கூட ஒப்புக் கொண்டுள்ளார்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களும், ஈழத்தமிழர்களும் படிப்பதற்காக புலிக‌ள் ஒரு த‌மிழ் ப‌ல்க‌லைக‌ழ‌க‌ம் க‌ட்டிக் கொண்டிருந்தார்க‌ள். புல‌ம் பெய‌ர்ந்து ஐரோப்பிய‌ ப‌ல்க‌லைக‌ழ‌க‌த்தில் சுற்றுப்புற‌ சூழ‌லிய‌லில் முதுக‌லை ப‌டித்து முனைவ‌ர் ப‌ட்ட‌ம் வாங்கிய‌  ஒருவரிடம் நான் பேசிய போது அவர் பின்வருமாறு கூறினார். நான் முப்ப‌து வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் என‌து தாய‌க‌த்திலிருந்து வெளியேறினேன். ஆரம்ப காலங்களில் நான் அடிக்கடி தாயக்ம் சென்று வந்தேன். இந்த‌ ப‌ல்க‌லைக‌ழ‌க‌ம் க‌ட்டி முடிக்க‌ப்ப‌ட்ட‌தும் அங்கு சென்று நான் விரிவுரையாள‌ர் ப‌ணியில் ஈடுபடலாம் என எண்ணியிருந்தேன் .

  அவர் தனது பெயரை வெளியிட விரும்பவில்லை. அமைதியான முறையில் போராடி விடுத‌லை அடைய முடியும் என்று நம்பும் போராளி அவர். மேலும் இவர் ஒரு கல்லூரி பேராசிரியரும் கூட‌. புலிக‌ள் ச‌மூக நிர்வாக அமைப்பில் ஆதிக்க‌ம் செலுத்துவ‌தாக‌வும், அவர்க‌ளை எதிர்த்து பேசாத வரையில் தமிழர் தாயக பகுதிகளில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் சிங்கள அரசு பல முறை குண்டு வீசி இந்த அமைதியை சீர்குலைக்கின்றது. புலிகள் தங்களுடைய கடந்த காலங்களில் வன்முறையை உபயோகித்துள்ளதையும், விமர்சனம் செய்த‌ அரசியல் தலைவர்களை கொன்று விடுவதாகவும் இவர் கூறினார். ஆனால் இந்த பேராசிரியர் புலிகள் குழ‌ந்தைகளை  படையில் சேர்த்ததாகவோ, பொது மக்களை ம‌னித‌ கேட‌யமாக பயன்படுத்தியதாகவோ கூறுவில்லை.

 ”புலிக‌ள் ந‌ல்ல அன்பானவர்கள், அறிவானவர்கள். மேலும் இவர்கள் இய‌ற்கை, ம‌க்க‌ள் மீது ப‌ற்றுக் கொண்ட‌வ‌ர்க‌ள். ஆனால் சில‌ நேர‌ங்க‌ளில் இதற்கு நேர்மாறாகவும் செய‌ல்பட்டுள்ளார்கள். அவ‌ர்க‌ள் ஒரு விசித்திர‌மான‌ ம‌னித‌ர்க‌ளாவ‌ர்”.

போர்நிறுத்த‌ முடிவு:

    2004 டிச‌ம்ப‌ர் 26 அன்று உல‌க‌ம் மிக‌ மோச‌மான‌ ஆழிப்பேரலையையும், நில‌ந‌டுக்க‌த்தையும் ச‌ந்தித்த‌து. இது ரிக்ட‌ர் அள‌வுகோளில் 9.3 என்று ப‌திவாகிய‌து. இந்த ஆழிப்பேரலை தெற்காசியாவை மிகக்கடுமையாக பாதித்தது. இது தான் உல‌கிலேயே இது வ‌ரை ப‌திவான‌தில் அதிகவீரியம் கொண்ட நிலநடுக்கமாகும். மொத்த‌ம் 2,30,000 பேர் இற‌ந்த‌ன‌ர் (அல்லது) காணாம‌ல் போயின‌ர். இது இல‌ங்கையையும் மிக‌ மோச‌மாக‌ பாதித்த‌து. இல‌ங்கையில் ம‌ட்டும் 40,000 பேர் இறந்தார்கள் (அல்லது) காணாம‌ல் போயின‌ர்.15 இல‌ட்ச‌ம் பேர் வீடிழந்தார்கள். அனைத்துல நாடுகளின்‌ உத‌விக‌ள் வ‌ந்து குவிந்த‌ன‌. ஆனால் சிங்க‌ள‌வ‌ர்க‌ளின் எதிர்ப்பு கார‌ண‌மாக‌ இதில் அதிக‌மாக‌ பாதிக்க‌ப்ப‌ட்ட‌ வ‌டக்கு மற்றும் கிழ‌க்கு ப‌குதிகளில் வாழ்ந்த‌ பெரும்பான்மையான தமிழருக்கு எந்த உத‌வியையும் அர‌சு செய்ய‌வில்லை. த‌மிழீழ‌ விடுத‌லை புலிக‌ள் த‌மிழ‌ர் ப‌குதியில் பாதிக்க‌ப்பட்டிருந்த‌‌ இல‌ட்ச‌க‌ண‌க்கான‌ ம‌க்க‌ளுக்கு உதவினார்கள். வெளிநாட்டு தன்னார்வ பணியாளர்களும், தொண்டு நிறுவனங்களும் இந்த இயற்கை பேரழிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக‌ புலிகள் மேற்கொண்ட உடனடி நடவடிக்கைக‌ளை பாராட்டியுள்ளார்கள். இதற்கு ப‌ல சான்றுகள் உள்ளன‌.(32)

  ம‌கிந்த‌ இராச‌ப‌க்சே 2004 ஏப்ர‌ல் 6ல் பிர‌த‌ம‌ராக‌ ப‌த‌வியேற்றார். பின்ன‌ர் இவ‌ர் 2005 ந‌வ‌ம்ப‌ரில் வெறும் 50.3% வாக்குகளை பெற்று அதிப‌ரானார். இவர் “ஐக்கிய‌ ம‌க்க‌ள் விடுத‌லைக் கூட்டணி” என்ற புதிய‌ கூட்ட‌ணியை உருவாக்கினார். இவர் போர் வெறி கொண்டவர். இவர் உருவாக்கிய புதிய கூட்டணியின் வேட்பாளராக தன்னையே முன்னிறுத்தினார்.(31) த‌மிழ் அர‌சிய‌ல் க‌ட்சிக‌ள் ஆழி பேர‌லையால் பாதிக்க‌ப்ப‌ட்ட தமிழர்களுக்காக பணம் கொடுத்த வெளிநாட்டு மீட்பு நிறுவனங்க‌‌ள் இந்த‌ ப‌ண‌த்தை தமிழர்களுக்காக‌ துளி கூட‌ கொடுக்காம‌ல் வேறு செல‌வுக‌ளுக்கு உபயோக‌ப‌டுத்தினார் என‌‌ ம‌கிந்தாவை குற்ற‌ம் சாட்டினார்கள். பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு ஒரு துளி உதவியும் செய்யக்கூடாது என்றும், போர் நிறுத்த‌த்தை முடிவுக்கு கொண்டுவ‌ந்து புலிக‌ளை முற்றிலுமாக‌ அழித்து ஒழிக்க‌வேண்டுமெனவும் வலியுறுத்தியவர் தான். மார்க்சிய, டிராட்சுகிய‌ சிந்த‌னை கொண்ட‌ அர‌சியல்வாதிகளெனவும், அமைதி விரும்பும்(!) புத்த‌ம‌த‌ துற‌விகளெனவும் தங்களை அழைத்துக் கொண்ட‌வர்கள்.

ஐக்கிய‌ ம‌க்க‌ள் விடுத‌லை கூட்ட‌ணி ஐயத்திற்கிடமின்றி ஒரு மிக‌ப்பெரிய‌ கூட்ட‌ணியாகும். இந்த‌ கூட்ட‌ணி 2004ல் முத‌லாளிய‌ ச‌முதாய‌ க‌ட்ட‌மைப்பை காப்ப‌த‌ற்கும், தனிநாடு கோரும் போராளிகளை முற்றிலுமாக‌ அழிக்க‌வும் எல்லா தரப்பினரையும் இணைத்து உருவாக்க‌ப்பட்ட‌து. (33)

 இந்த‌ கூட்ட‌ணியில் முத‌லாளித்துவ‌‌ க‌ட்சிக‌ள், ம‌ட்டும‌ல்லாம‌ல் த‌ங்க‌ளை முற்போக்காளர்க‌ள் என்று கூறிக்கொள்ளும் க‌ட்சிக‌ளும் இருந்த‌ன‌. இல‌ங்கை விடுத‌லை க‌ட்சி, ச‌ன‌தா விமுக்தி பேரமுனா, இல‌ங்கை ம‌காச‌ன‌ ப‌க்ச‌யா, இசுலாமிய தேசிய ஐக்கிய கூட்ட‌மைப்பு, ம‌காச‌ன‌ ஏக்சாத் பேர‌முனா, ஐக்கிய‌ தேசிய‌ முண்ண‌னி, ம‌ற்றும் தேசா விமுக்தி ச‌ன‌தா போன்ற‌ க‌ட்சிக‌ள் தொடக்க காலத்தில் இந்த கூட்டணியில் இருந்தவை.

 இல‌ங்கையின் க‌ம்யூனிசுட்டு க‌ட்சி ம‌ற்றும் ல‌ங்கா ச‌ம‌ சாம‌ச்ச‌ க‌ட்சி இந்த‌ கூட்ட‌ணியுட‌ன் செய்து கொண்டதனால் இவ‌ர்க‌ளின் உறுப்பின‌ர்கள் இந்த‌ கூட்ட‌ணியின் சார்பில் போட்டியிட்டார்கள். பின்ன‌ர் இவ‌ர்க‌ளும் ஏப்ர‌ல் 2, 2004ல் இந்த கூட்ட‌ணியுட‌ன் முழுவ‌துமாக‌ இணைந்தார்கள். இந்த‌ கூட்ட‌மைப்பு 45.6 % வாக்குக‌ளை பெற்று 225 இடங்கள்  கொண்ட‌ பாராளும‌ன்ற‌த்தில் 105 இடங்க‌ளை பிடித்த‌‌து.
 
 புத்த‌ம‌த‌ க‌ட்சியான‌ சாதிக‌ க‌ள‌ உறுமய‌ க‌ட்சி 2004 பிப்ரவரியில் ஆர‌ம்பிக்க‌பட்டது , அதே‌ வ‌ருட‌த்தில் ந‌டைபெற்ற‌ தேர்த‌லில் ஆறு விழுக்காடு வாக்குக‌ளை பெற்று ஒன்ப‌து இடங்க‌ளை கைப்பற்றிய‌‌து. இந்த கட்சி மேற்கூறிய‌ கூட்ட‌ணிக்கு த‌ன‌து ஆத‌ர‌வை வ‌ழ‌ங்கிய‌து. பின்ன‌ர் 2007ல் முழுமையாக‌ கூட்ட‌ணியுட‌ன் இணைந்து ஒரு அமைச்ச‌ர் ப‌த‌வியையும் பெற்ற‌து.

        ஏப்ர‌ல் 3, 2008ல் சாதிக‌ க‌ள‌ உறுமய‌‌ க‌ட்சியின் த‌லைவ‌ர் த‌மிழ‌ருக்கு எதிரான‌ போருக்கு தாங்கள் ஆதரவளித்ததற்கான கார‌ண‌ங்க‌ளை வட‌அமெரிக்கா அரசினால் நடத்த பெறும் வானொலி நிலைய‌மான “அமெரிக்காவின் குர‌லுக்கு” வ‌ழ‌ங்கிய‌ நேர்காண‌லில் பின்வருமாறு கூறினார். 

 இலங்கை பாரளுமன்றத்தில் சாதிக‌ க‌ள‌ உறுமய கட்சியின் தலைவரும், பௌத்த துறவியுமான அதுரிலிய ரத்னா கூறுகையில் “நீண்ட நாட்களாக நடைபெறும் இந்த போரை முடித்து, மக்களின் துயரத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். புலிக‌ளுக்கு எதிரான அரசின் இராணுவ முன்னெடுப்பை நாங்க‌ள் ஆதரிக்கின்றோம்”.

 ”ம‌க்க‌ளின் அமைதி போராளிகுழுக்க‌ளால் சீர்குலைகின்ற‌து. அப்பொழுதெல்லாம் அர‌சிய‌ல் சாச‌ன‌ விதிக‌ளின் ப‌டி அந்த பிர‌ச்ச‌னையில் த‌லையிடுவ‌த‌ற்கான‌ உரிமை அர‌சாங்க‌த்திற்கு இருக்க‌ வேண்டும். அரசியல் சாசன விதிப்படி த‌மிழீழ‌ விடுத‌லைப் புலிக‌ள் அமைப்பு ஒரு ச‌ட்ட‌விரோத‌ அமைப்பாக‌ இருப்ப‌தால் அவ‌ர்க‌ளுக்கு ஆயுத‌ம் ஏந்த‌ உரிமையில்லை. அவ‌ர்க‌ளை அக‌ற்றுவ‌தே அர‌சின் முத‌ல் வேலையென்றும், உங்க‌ள் வேலையை செய்யுங்க‌ள் என்றும் நாங்க‌ள் அர‌சை வ‌லியுறுத்துகின்றோம்.

” மேற்கூறிய‌ க‌ருத்துகளை வெளியிட்டதால் அவ‌ரை இல‌ங்கை ஊட‌கங்கள் “போரை விரும்பும் துறவி” என்ற முத்திரையை அவ‌ர் மீது குத்தின‌, ஆனால் பெரும்பாலான‌ சிங்க‌ள‌ர்க‌ள் இந்த‌ ம‌ன‌நிலையில் தான் இருந்தார்கள்”.
 
 ”அவ‌ர் பௌத்த சிங்கள இல‌ங்கையின் ஒரு பிர‌ப‌ல‌மான‌ அடையாள‌மாகிவிட்டார். இது போன்ற‌ க‌ருத்துக‌ளினால் உந்த‌ப்ப‌ட்ட‌ சிங்க‌ள‌ இளைஞ‌ர்க‌ள் 30,000 பேர் இராணுவ‌த்தில் சேர்ந்தார்கள்”. (34)

 இந்த‌ புதிய‌ கூட்ட‌ணியில் உள்ள‌ அர‌சிய‌ல் க‌ட்சிக‌ளின் க‌ருத்துக்களும், பொருளாதார திட்டங்களும் ஒன்றுக்கொன்று எதிராக‌ இருந்த‌ன‌. சில‌ நேர‌ங்க‌ளில் யார் எந்‌த  கொள்கைக‌ளில் உள்ளார்கள், ஏன் அவர்கள் இவ்வாறான ஒரு அரசியலை மேற்கொள்கிறார்கள் என்பதே யாருக்கும் தெரியாது. ஒரு மாத‌ம் ஆய்விற்கு பின் என்னிட‌ம் தோன்றிய‌ கேள்வி எத‌ற்காக‌ த‌ங்க‌ளுக்குள் ப‌ல்வேறு க‌ருத்துக‌ளை கொண்ட‌ இவ‌ர்க‌ள் எல்லாம் புலிகளை அழிப்ப‌த‌ற்காக‌ ம‌ட்டும் அல்லாமல் ஒட்டு மொத்த தமிழனத்தையே அழிக்க வேண்டும் என்பதில் இவ்வளவு ஆர்வமாக உள்ளார்கள் என்ற கேள்வியெழுந்தது. பெரும்பான்மையான சிங்களர்களின் மனதில் வளர்த்து விட‌ப்பட்ட த‌மிழ‌ர்க‌ளின் மீதான‌ இன‌வெறியே இதன் முக்கிய கார‌ண‌மாகும். ஆனால் இந்த சிங்கள வெறியர்களுடன் தமிழ் அரசியல் கட்சியான‌ ஈழ‌ ம‌க்க‌ள் விடுத‌லை க‌ட்சி எப்படி கூட்டணி வைக்க‌முடியும்? மேலும் இந்த‌ க‌ட்சிக்கென்று போராளி‌க்குழுவும் உண்டு. இவ‌ர்கள் இல‌ங்கை அர‌சோடு சேர்ந்து புலிக‌ளை எதிர்த்து வருபவர்கள். இந்த‌ க‌ட்சிக்கு ஒரு பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ரும் உள்ளார். இந்த‌ குழு ஏற்க‌ன‌வே ப‌ல‌ பொதும‌க்க‌ளையும், பி.பி.சி தொலைகாட்சி நிருப‌ரான‌ நிர்ம‌ல‌ராசன் மயில்வாகனம் என்பவரையும் படுகொலை செய்துள்ள‌து. (35)

 போர் நிறுத்த‌ உட‌ன்ப‌டிக்கை எதிர்பார்த்த‌‌ப‌டியே புதிய‌ அர‌சினால் தூக்கியெறிய‌ப்ப‌ட்ட‌து. மேலும் அரசு, இலங்கை மேற்பார்வையாள‌ர்க‌ள் குழு புலிக‌ளுக்கு ஆத‌ர‌வாக‌ செய‌ல்ப‌டுவ‌தாக‌வும் குற்ற‌ம் சாட்டிய‌து. ஆனால் நிலைமையோ த‌லைகீழ், சூன் 30, 2005 வரை அந்த‌ குழு புலிக‌ளின் மீது 3006 குற்ற‌ங்க‌ளையும், அர‌சின் மீது 133 குற்ற‌ங்க‌ளையும் பதிந்துள்ள‌து. மே 2006லிருந்து இந்த அமைப்பு கலைக்கப்பட்ட ச‌ன‌வ‌ரி 2008 வ‌ரை செய‌ல்ப‌ட்ட‌ இந்த‌ குழுவின் நடவடிக்கை ஒரு பக்க சார்பாகவும், ஊசலாட்டமானதாகவும் இருந்தது. மே 11, 2006ல் க‌ட‌ற்புலிகள் நடத்திய‌ தாக்குதலிலிருந்து இவ்வாறு அவ‌ர்கள் செயல்படத் தொடங்கினார்கள் எனக் கொள்ளலாம்.

 இதன் பிறகு தான் ஐரோப்பிய‌ யூனிய‌ன் புலிகள் அமைப்பை தீவிர‌வாதிகள் அமைப்பென்று த‌டை செய்த‌து. அதே சமயம் எந்த சட்டத்தையும் மதிக்காத இலங்கை அரசின் போக்கையும், அதன் கட்டுப்பாட்டின் கீழுள்ள நிலப்பரப்பில் நிலவும் வன்முறையை கட்டுபடுத்தாதையும் விமர்சித்தது. ஐரோப்பிய யூனியனை தொடர்ந்து சுவீடன், பின்லாந்து போன்ற நாடுகளும் புலிகள் அமைப்பை தீவிரவாதி பட்டியலில் சேர்த்தன. இதனால் புலிக‌ள் ஐரோப்பிய‌ யூனிய‌ன் நாடுக‌ளை சேர்ந்த‌ மேற்பார்வையாள‌ர்க‌ளை வெளியேற சொன்னார்கள், இவ‌ர்க‌ள் வில‌கிய பின்ன‌ர் நார்வே மற்றும் ஐசுலாந்தைச் சேர்ந்த‌ வெறும் இருப‌து உறுப்பின‌ர்க‌ளே க‌ண்காணிப்பு குழுவில் இருந்த‌ன‌ர். இவ‌ர்க‌ளும் 2008ல் அர‌சால் த‌டை செய்ய‌ப்ப‌ட்ட‌தால் த‌விர்க்க‌ முடியாத‌ போர் தொட‌ங்கிவைக்க‌ப்ப‌ட்ட‌து.
உத‌விய‌ நூல்க‌ள்:
12. ibid” Distant voices, Desparate lives,” The Gaurdian, May 13,2009
15.http://en.wikipedia.org/wiki/solbury_commision
17.”The unspeakable truth” British tamil forum (www.tamilsforum.com), 2008, p.8
18. Http://en.wikipedia.org/wiki/sinhala_only_act
19. Http://en.wikipedia.org/wiki/gal_oya_riots
20.In 1976, Colombo was the summit site , In 1979, the Havana declaration ensured “the national independence, soverginity, heritage integrity and security of Non-aligned countries.
21.  Http://en.wikipedia.org/wiki/janatha_vimukthi_perana
22. www.tamilnation.org/self determination/tamil eelam /9202 revision htm
23. www.sangam.org/taraki/articles 3006/05-03__eelam_ilangai.php?uid=1707
24. Http://en.wikipedia.org/wiki/tamil_united_liberal_front.
My heading of tamil history shows many discrepancies in dates and events. different writing on the LTTE contend it was created at different times, either in 1972,1975 or 1976.
25. Http://en.wikipedia.org/wiki/Buring_of_jafana library
26. http://blackjuly83.com/further freading/htm
27.http://countrystudies.us/srilanka/71.htm
28. http:// Http://en.wikipedia.org/wiki/rajiv_gandhi
29. www.sangam.org/2008/05/Pramedhasa assassination.php?uid+2906.
30. http://www.wsws.org/articles/1999/aug1999/ltte-a2.shtml
31. http:// Http://en.wikipedia.org/wiki/bandaranaike airport attack and http://www.janes.com/security/international security/news/jir/jir010903_1_n.shtml
32. www.tamilnation.org/diaspora/t.sunami/sampavi2.htm
33. http://facebook.com/group.php?gid=111022131146 and http://en.wikipedia.org/wiki/united_peoples_freedon_aliance
34. http://www.voanews.com/english/archive/2008-04/2008-040-03-voa19cfm.
35. http:// Http://en.wikipedia.org/wiki/eelam_peoples_democratic_party and http://news.bbc.co.uk/2/hi/south_asia/2340433.stm

தமிழ் ஈழம்: தமிழ் தேசிய இன‌ வரலாறு. பகுதி 2/5. தமிழாக்கம் நற்றமிழன்


தமிழ் ஈழம்: தமிழ் தேசிய இன‌ வரலாறு
 பகுதி 2/5

          சிறீல‌ங்கா முன்னாளில் ஆங்கில‌த்தில் சிலோன் என்றும், அர‌பியில் செர‌ன்தீப் என்றும் அழைக்க‌ப்ப‌ட்டாலும், அத‌ன் அழ‌கிய‌ நில‌ப்ப‌ர‌ப்பும் இய‌ற்கை வ‌ள‌ங்க‌ளும்  அந்நாடு ‘கீழையுலகின் முத்து’ என்று வ‌ர்ணிக்க‌ப்ப‌ட‌ கார‌ண‌மாயின‌. அர‌சின் இன‌வெறிக் கொள்கைக‌ளும், இன‌ அழித்தொழிப்பு ந‌ட‌வ‌டிக்கைக‌ளும், 2009 ஆம் ஆண்டு மே மாத‌ம் ந‌ட‌ந்து முடிந்த‌ போரும், போர் முடிந்து ப‌ல‌ மாத‌ங்க‌ளாகியும் வ‌ட‌க்குப் ப‌குதியில் இன்று வ‌ரை தொட‌ரும் வ‌தைபுரி முகாம்க‌ளின் கொடூர‌ங்க‌ளும் இன்று அந்த‌ அழகிய‌ நில‌ப்ப‌ர‌ப்பினை வெறுப்பினால் சிதைத்து அழித்து விட்ட‌ன‌. இல‌ங்கையில் சிறுபான்மை இன‌த்த‌வ‌ரான‌ த‌மிழ‌ர் பெரும்பான்மை சிங்க‌ள‌வ‌ருக்கு ச‌ம‌மாக‌ வாழும் உரிமையையும் அந்த‌ ச‌ம‌ உரிமை இல்லாத‌ ப‌ட்ச‌த்தில், த‌மிழ் இன‌ம் த‌ன‌க்கென‌ ஒரு தாய் நாட்டை அமைத்துக் கொள்ளும் உரிமையையும் சிங்க‌ள‌ பேரின‌வாத‌ அர‌சுக‌ள் தொட‌ர்ச்சியாக‌ ம‌றுத்து, த‌மிழ் இன‌த்தின் மீது வெறுப்பை வ‌ள‌ர்த்து வ‌ந்துள்ள‌ன‌.

                 சிறீலங்காவில் வழிவழியாக வாழ்ந்து வரும் பூர்வகுடிகள் தமிழர்களே. சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் இலங்கைத் தீவில் வாழ்ந்ததாக அறியப்படுகிறது அந்த தீவில் 34,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். அவர்கள் பாலங்கோடா மனிதர்கள் என்று அறியப்பட்டனர் (அவர்கள் வாழ்ந்த இடத்தில் இதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன‌). இவர்கள் மிருகங்களை வேட்டையாடி குகைகளில் வாழ்ந்த வேடர் இனத்தவராவர்.இன்று இந்த வேடர் இனம் முற்றிலுமாக‌ அழிந்து விட்ட‌து.

  தமிழர்கள் முன்னதாக ஈழ மக்கள் என்று அழைக்கப்பட்டார்கள். ஈழமக்கள் என்பதற்கு “இயற்கையாக‌ வாழ்பவர்கள்” என்று பொருள்.தமிழர்கள் திராவிட மொழியை பேசினார்கள். அந்த மொழி வேறு எந்த மொழிக்குடும்பத்திலிருந்தும் வந்ததல்ல. தமிழர்களும் அவர்களின் மொழிக்குடும்பமும் முதல் நாகரீகம் தோன்றியதாக கருதப்படும் சுமேர் மற்றும் உர‌ல்க‌ளுடன்(இன்றைய ஈரான்) தொட‌ர்பு கொண்ட‌வ‌ர்க‌ளாக‌ க‌ருத்த‌ப்ப‌ட்டார்க‌ள். சுமேர் ம‌ற்றும் த‌மிழ‌ர்க‌ள் க‌ளிம‌ண் பலகைகளில் எழுதி‌ முத‌ல் மொழியை உருவாக்கினார்க‌ள். க‌ல்வெட்டுகளில் காணப்படும் த‌மிழ் மொழி இலக்கியம் குறைந்த‌ப‌ட்ச‌ம் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுக‌ள் ப‌ழ‌மையான‌தாகும். த‌ற்பொழுது 10 லிருந்து 20 கோடி ம‌க்க‌ள் த‌மிழ் மொழியை பேசுகின்ற‌ன‌ர்(9).

             கிருத்துவ‌ர்க‌ளின் பைபிளில் ஈழ‌ம் இவ்வாறு குறிப்பிட‌ப்ப‌டுகின்ற‌து.  “க‌ட‌லைச் சார்ந்து வாழும் ஒவ்வொரு நாட்டிலும் ஒரு தனி மொழி உண்டு”(10). நோவாவின் இதிகாச‌க் கதைப்படி நோவாவின் மூன்று மகன்களில் ஒருவரின் வம்சாவளியில் வந்தவரின் பெயர் தான் ஈழம் என குறிப்பிடப்படுகின்றது(11). முத‌லில் ச‌க்க‌ர‌ங்க‌ளை ப‌ய‌ணிப்பத‌ற்காக‌ ப‌ய‌ன்ப‌டுத்திய‌வ‌ர்க‌ள் த‌மிழ‌ர்க‌ளே. ப‌ய‌ணித்தின் போது அவ‌ர்க‌ள் த‌ற்போதைய‌ இந்தியாவிற்க்கும், அதனோடு அந்த காலத்தில் இணைந்திருந்த‌ ஈழ‌த்திற்கும் வ‌ந்த‌ன‌ர்.இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பழமையான‌ கையெழுத்துப் படிகள் தமிழில் எழுதப்பட்டவையே. த‌மிழ் க‌ல்வெட்டுக‌ள் எகிப்திலும், தாய்லாந்திலும் க‌ண்டெடுக்க‌ப்பட்டுள்ளன‌‌.

இர‌ண்டாயிர‌த்து ஐநூறு ஆண்டுக‌ளுக்கு முன்ன‌ர் இந்தியாவிலிருந்து முத‌ல் சிங்க‌ள‌ன் ஈழ‌த்திற்கு வ‌ந்தான். அவ‌ர்க‌ள் அங்கு வ‌ருவ‌த‌ற்கு நூறு வருடங்களுக்கு முன்பாக‌வே த‌மிழ‌ர்க‌ள் அங்கு இராச்சிய‌ம் அமைத்து வாழ்ந்து வ‌ந்த‌ன‌ர். அவ‌ர்க‌ள் வாழ்ந்த இட‌ம் த‌ற்போத‌ய‌ யாழ்ப்பாண‌ம் ஆகும். அப்பொழுது அந்த‌ இட‌ம் ஜாஃப்னா என‌ அறிய‌ப்ப‌ட்ட‌து. சிங்க‌ள‌ம் என்ற‌ வார்த்தை முத‌ல் சிங்க‌ள‌ ம‌ன்ன‌னான‌ விச‌ய‌ன் இந்தியாவில் ஆட்சி புரிந்த‌ சிங்க‌புரா என்ற இடப்பெயரில் இருந்தே வ‌ந்த‌து. த‌மிழ‌ர்க‌ளே இல‌ங்கையின் பூர்வ‌குடிக‌‌ள். கி.மு. 543 ஆம் ஆண்டு சிங்கபுராவிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட விசயன் பரிவாரங்களுடன் இலங்கைக்கு வந்து, தமிழ் பூர்வகுடிகளுடன் சண்டையிட்டான். பின்ன‌ர் வ‌ந்த‌ சிங்க‌ள‌வ‌ர் இல‌ங்கையின் தெற்கு ப‌குதியிலும், ந‌டுப்ப‌குதியிலும்(அதாவது கண்டியிலும், கோட்டையிலும்) இராச்சிய‌ம் அமைத்து வாழ்ந்து வ‌ந்த‌ன‌ர்.

 சிங‌கள‌ர்க‌ள் இந்திய‌ ஆரிய‌ மொழி பேசும் ப‌ல‌ இன‌க்குழுக்க‌ளில் ஒருவ‌ராவ‌ர். சிங‌க‌ள‌ர்க‌ள் பேசும் பாலி மொழியான‌து மூவாயிர‌ம் ஆண்டுக‌ளுக்கு முன்ன‌ர் த‌ற்போதைய சிந்து, குச‌ராத், ம‌ற்றும் வங்காள‌ ப‌குதிக‌ளில் தோன்றியதாக கருதப்படுகின்றது.

 பெரும்பான்மையான தமிழர்கள் இந்து மதத்தை பின்பற்றினார்கள்.புத்த‌ம‌த‌ம் சித்தார்த்த‌ கௌத‌மர் கி.மு ஆறாம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்ட‌ ம‌த‌மாகும். பெரும்பாலான‌ சிங்க‌ள‌வ‌ர்க‌ள் பௌத்த‌ ம‌த‌த்தையும், சில‌ர் கிருத்துவ‌த்தையும் பின்ப‌ற்றினார்க‌ள். கிருத்துவ‌ம் கி.பி. முத‌லாம் அல்ல‌து இர‌ண‌டாம் நூற்றாண்டு வாக்கில் சிரியாவிலிருந்து வ‌ந்த‌ வ‌ணிக‌ர்க‌ளால் இல‌ங்கையில் அறிமுக‌ப‌டுத்தப்ப‌ட்ட‌து.
மகாவ‌ம்சம்:

 சிங்க‌ள‌வ‌ர்க‌ளும், த‌மிழ‌ர்க‌ளும் வெவ்வேறு இன‌, மொழி, ம‌த‌ம் ம‌ற்றும் ப‌ண்பாட்டைக் கொண்ட‌வ‌ர்க‌ள். இவ்விரு இன‌க்குழுவினரும் தனித்தனி நிலப்‌ ப‌குதிக‌ளில் வாழ்ந்து வ‌ந்த‌ன‌ர். தொட‌ர்ச்சியாக‌ த‌ங்க‌ளுக்குள் போர் புரிந்தும் வ‌ந்துள்ள‌ன‌ர். சிங்க‌ள‌ர்க‌ள் த‌ங்க‌ள‌து மொழி, ம‌தம் ம‌ற்றும் இன‌ம் தான் உய‌ர்ந்த‌து என்ற‌ மேலாதிக்க‌ கொள்கையைக் கொண்ட‌வ‌ர்க‌ள். மேலும் தங்கள் மொழியும், மதமும் தான் இலங்கை முழுவதும் பரவி இருக்க வேண்டும் என்றும் எண்ணினார்கள். ம‌ற்ற‌ இனத்தவரை அவ‌ர்க‌ள் வேற்று கிர‌க‌த்திலிருந்து வ‌ந்தவரைப் போல‌வே பார்த்த‌ன‌ர். இந்த‌ க‌ருத்து அறிமுகமாகியது புத்த‌ துற‌வி ம‌க‌தீரா ம‌கான‌மாவால் பாலி மொழியில் எழுத‌ப்ப‌ட்ட‌ சிங்க‌ள‌ வ‌ரலாற்று இதிகாசப் பாட‌லான ‘மகா வ‌ம்சம்’ என்ற‌ நூலின் மூலமாகவே தொடர்ந்து வந்த சிங்களர்களிடம் இந்த கருத்து வேரூன்றி போயிற்று. இதில் ஒரு ஆயிர‌ம் வ‌ருட‌ சிங்க‌ள‌ இராச்சிய‌த்தின் வரலாறு எழுத‌ப்ப‌ட்டுள்ளது‌.
                                     சிங்க‌ள‌வ‌ர்க‌ள் இல‌ங்கை ஒரு பௌத்த‌ நாடே என்று கூறுகின்றார்க‌ள். அவ்வாறே வ‌ர‌லாறு முழுவ‌தும் இருந்து வ‌ந்த‌தாக‌வும் சொல்கின்றார்கள். அவ‌ர்களைப் பொருத்தவ‌ரை முத‌ல் ஆண்டு என்ப‌து ம‌கா வ‌ம்சாவில் கூற‌ப்ப‌ட்டுள்ள‌ கி.மு.543 லிருந்து தான் தொட‌ங்குகின்ற‌து. அத‌ற்கு ப‌ல‌ நூற்றாண்டுக‌ளுக்கு முன்னிருந்தே த‌மிழ‌ர்கள் வாழ்ந்த வரலாறு வரலாறு திட்டமிட்டே விலக்க‌‌ப்ப‌ட்டுள்ளது.

 1505ஆம் ஆண்டு முத‌லில் போர்ச்சுக்கீசிய‌ர்க‌ள் அங்கு வ‌ந்த‌ பொழுது மூன்று இராச்சிய‌ங்க‌ள் அங்கே இருப்ப‌தைக் கண்டார்கள். சிங்க‌ள‌ அர‌சுக‌ளான‌ கோட்டை ம‌ற்றும் க‌ண்டி இராச்சிய‌மும், த‌மிழர் அரசாண்ட‌ ஜஃப்னா‌ இராச்சியமும் அங்கே இருந்தன. போர்ச்சுக்கீசிய‌ வ‌ணிக‌ர்க‌ள் த‌ங்க‌ளுட‌ன் இராணுவ‌த்தையும் அழைத்து வந்திருந்தார்க‌ள். அந்த‌ இராணுவ‌ம் கோட்டை அர‌சை எளிதாக‌ கைப்பற்றி விட்ட‌து. அதி ந‌வீன‌ போர்க்க‌ருவிகளை வைத்திருப்பினும் அவ‌ர்க‌ளால் க‌ண்டியையும், யாழ்ப்பாணத்தையும் கைப்ப‌ற்ற‌ முடிய‌வில்லை. பல பத்தாண்டுகள் கழித்து இறுதியில் வெற்றி பெற்றாலும் போர்ச்சுக்கீசியர்கள் சிலோனில் இருந்த வரை மக்களின் எதிர்ப்பை சந்தித்தபடியே இருந்தார்க்ள். போர்ச்சுக்கீசிய‌ர்க‌ள் அந்தத் தீவை சிலாவோ என‌ப் பெய‌ரிட்ட‌ன‌ர். பின்ன‌ர் வ‌ந்த‌ ஆங்கிலேய‌ர் அதை சிலோன் என்று ஆங்கில‌த்தில் அழைத்தனர்.

 1658 ஆம் ஆண்டு இலங்கை மீது ட‌ச்சுக்காரர்கள் படையெடுத்தனர். இவ‌ர்க‌ள் முத‌லில் போர்ச்சுக்கீய‌ர்க‌ளுட‌ன் ச‌ண்டையி‌ட்டு கோட்டை அர‌சை கைப்ப‌ற்றின‌ர். டச்சுகாரர்களை எதிர்த்து கண்டி மக்கள் கெரில்லா யுத்தம் புரிந்தனர். டச்சுகாரர்கள் சிலோனின் தென் க‌ட‌ற்க‌ரையோர‌ ப‌குதிக‌ள‌னைத்தையும் த‌ங்க‌ள் வ‌ச‌ம் வைத்திருந்த‌ன‌ர். ஆனால் வடக்கு மற்றும் கிழ‌க்கில் இருந்த‌ த‌மிழ‌ர் இராச்சிய‌மும், ம‌த்திய (கோட்டை)ப‌குதி சிங்க‌ள‌ இராச்சிய‌மும் அவர்களால் கைப்பற்றப்படவே இல்லை.

 1795 ஆம் ஆண்டு அங்கு நுழைந்த ஆங்கிலேய‌ர்க‌ள் ட‌ச்சுக்காரர்களை வெளியேற்றி அவர்கள் வசமிருந்த பகுதிகளை ஒரு வருட காலத்திலேயே கைப்பற்றினார்கள். சிலோனில் வெவ்வேறு இன‌க்குழுக்களின் தனித்தனி இராச்சிய‌ங்க‌ள் இருப்பதை ஆங்கிலேயர்கள் கண்டார்கள். 1796 ஆம் ஆண்டு பிரிட்ட‌னின் அர‌ச செய‌லரான ஹியூ கிளெக்கான் தனது அர‌சுக்கு பின்வருமாறு எழுதினார்:
 

 இர‌ண்டு வெவ்வேறு இனகுழு அரசுகள் இலங்கையில் ப‌ல‌கால‌மாக‌வே இருந்து வ‌ருகின்ற‌ன‌. சிங்க‌ள‌வ‌ர்க‌ள் தெற்கு ம‌ற்றும் மேற்கு ப‌குதியில் வெள்ளுவே ந‌தி பாயும் சில்லால்வ‌ரையிலும், ம‌லபாரிகள் (த‌மிழ‌ர்க‌ள்) வ‌ட‌க்கு ம‌ற்றும் கிழ‌க்கு ப‌குதியிலும் நிலை கொண்டுள்ள‌ன‌ர். இவ்விரு தேசங்களும் முற்றிலும் மாறுப‌ட்ட‌ இன‌, மொழி, பண்பாட்டு அடையாள‌ங்களைக் கொண்ட‌வையாகும்.

 “இந்த‌ இரு அர‌சுக‌ளையும் வெற்றி கொள்வ‌த‌ற்கு ஆங்கிலேய‌ருக்கு முப்ப‌து ஆண்டுக‌ள் தேவைப்ப‌ட்ட‌து. 1811ல் ப‌ண்டார‌ வ‌ன்னியனின் கெரில்லா படையை தோற்கடித்து தமிழரின் வ‌ன்னி பிர‌தேச‌த்தையும், 1815ஆம் ஆண்டு இறுதியாக‌ க‌ண்டி இராச்சிய‌த்தையும் ஆங்கிலேய‌ர்க‌ள் கைப்பற்றினார்க‌ள்.

  அங்கு அதிகமாக விளைந்த இலவங்கப்பட்டை, தேங்காய் போன்ற விளைபொருட்களையும், கிராஃபைட் போன்ற தனிமங்களை உற்பத்தி செய்வதை நிறுத்திவிட்டார்கள். மாறாக‌ விவசாய நிலங்களை தேயிலைத் தோட்ட‌ங்களாகவும், இர‌ப்ப‌ர் தோட்ட‌ங்களாகவும், காப்பித் தோட்ட‌ங்களாகவும் மாற்றினார்கள். ஆங்கிலேய‌ வ‌ர்த்த‌க‌ர்க‌ள் எப்பொழுதும் விலைமிகு பொருட்க‌ளை திருடுவ‌திலேயே ஆர்வ‌ம் கொண்ட‌வ‌ர்க‌ள். சிலோனின் செமையான விவசாய பொருளாதாரத்தை அவ‌ர்கள் ஏற்றுமதிக்கான ப‌ண‌ப்ப‌யிர் விவ‌சாய‌மாக‌ மாற்றினார்கள்.

 காலனீய‌வாதிக‌ளால் ம‌த‌மான‌து ம‌க்க‌ளின் மேல் அதிகார‌ம் செலுத்த‌வும், அவ‌ர்க‌ளை கட்டுப் ப‌டுத்த‌வும் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌து. போர்ச்சுக்கீசிய‌ர்க‌ள் திட்ட‌மிட்டு க‌த்தோலிக்க‌ ம‌த‌த்தை ப‌ர‌ப்பினார்க‌ள். பின்னர் வ‌ந்த‌ ட‌ச்சுக்கார‌ர்க‌ளும், ஆங்கிலேய‌ர்க‌ளும் த‌ங்க‌ள‌து புரட்டஸ்டாண்டு ம‌த‌ நிறுவ‌ன‌ங்க‌ள் மூல‌ம் அப்ப‌ணியைத் தொட‌ர்ந்த‌ன‌ர். சில‌ர் ம‌த‌ம் மாறின‌ர் அல்ல‌து மாற்ற‌ப்ப‌ட்ட‌ன‌ர். இருப்பினும் பெரும்பான்மையான‌ ம‌க்க‌ள் த‌ங்க‌ள‌து ம‌த‌ ந‌ம்பிக்கைக‌ளை மாற்றிக் கொள்ள‌வில்லை. அவ‌ர்க‌ள் பௌத்த‌ அல்ல‌து இந்து மதத்தையே பின்பற்றினார்கள்.அர‌பு வ‌ணிக‌ர்க‌ளால் அங்கு இசுலாமும் அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌து.

 “இலங்கையில் ஆங்கிலேய‌ர்க‌ள் பிரித்தாளும் ஆட்சி முறையை பின்ப‌ற்றினார்க‌ள்” ஜான் பிள்க‌‌ர்.

  ஆங்கிலேய‌ருக்கு தேநீர் தேவைப்ப‌ட்ட‌தால் சிங்க‌ள‌ ம‌க்க‌ள் பெரும்பான்மையாக‌ வாழும் மலைப்பாங்கான மத்திய‌ப்பகுகளில் தேயிலைத் தோட்ட‌ங்க‌ளை அமைத்த‌ன‌ர். இத்தோட்டங்களில் வேலை செய்ய‌ சிங்க‌ள‌ர்க‌ள் முன்வ‌ராததால் இந்தியாவில் இருந்து த‌மிழ‌ர்க‌ளை அடிமைக‌ளாகக் கொண்டுவ‌ந்த‌ன‌ர். அதே நேரம் உள்நாட்டிலிருந்த ப‌டித்த நடுத்தர வர்க்க த‌மிழீழ‌ ம‌க்களை நாட்டின் நிர்வாக பணிகளை செய்ய தயார்படுத்தினார்கள் என்கிறார் பிள்க‌‌ர்(12). சிலர் கொடுத்த வேலையை செய்தார்கள், மற்றவர்களோ இந்த அதிகாரத்தை ப‌ய‌ன்ப‌டுத்தி தாழ்த்தப்பட்ட சாதியினரை ஒடுக்க பயன்படுத்தினார்கள்.

 இன‌க்குழு, வர்க்கம், சாதிப் பாகுபடுகள் ஆகியவை பூர்வகுடிகள் இடையே மட்டுமின்றி, புதிதாக குடியேறிவர்கள் மத்தியிலும்  திட்டமிட்டு புகுத்தப்பட்டது. 18ஆம் நூற்றாண்டின்  மத்தியில் ஆங்கிலேய, செர்மானிய கல்வியாளர்கள் “இன‌ மேலாதிக்கம்” செய்வதற்காக‌ முதலில் மொழியை அடிப்படையாக‌ வைத்தும், அடுத்து இனக்குழுவை அடிப்படையாக வைத்தும் ஒரு க‌ருத்தியலை வரையறுத்தார்கள். ஆங்கிலேயர்கள் சிங்களர்களை தங்களது ஆரிய குடும்பத்தைச்(உயர் வகுப்பினர்) சேர்ந்தவர்களாக கருதினார்கள். அதாவது ஆங்கிலேயர்(மற்றும் செர்மானியர்) உயர் வகுப்பினர்(வெள்ளை ஆரியர்கள்) என்றும், சிங்களவர்கள் அதற்கு அடுத்த நிலையில் உள்ள மேல் வகுப்பினர் (இந்திய ஆரியர்கள்) என்றும், த‌மிழ‌ர்கள் க‌ருப்பாக‌ இருந்த‌த‌னால் காலனீய அடிமை உழைப்பாளிகளாக அதாவது “தாழ்த்தப்பட்ட வகுப்பினராக” ஆக்க‌ப்ப‌ட்டார்க‌ள். மகாவம்சத்தில் கண்டுள்ளபடி சிங்களவர்கள் நாங்கள் உயர்வானவர்கள் என்ற மேலாதிக்க கருத்தியலுக்கு இது மேலும் வலு சேர்த்தது. 1870ஆம் ஆண்டு செர்மானிய‌ எழுத்தாள‌ரான‌ மேக்சு முல்லர் இந்தோ ஆரிய மொழிகளின் தோற்றம் குறித்து எழுதிய போது தான், “ஆரிய இனம்” என்ற பதத்தை உருவாக்கினார். இதற்காக பின்னாட்களில் அவர் வருத்தம் தெரிவிக்கும் படி நேர்ந்தது(13).

   கிரேக்கமும், இல‌த்தீனும் உய‌ர்ந்த‌ மொழிகள் என்ற‌ க‌ருத்தாக்க‌ம் ஐரோப்பிய‌ர்களிடம் இருந்த‌து. எனவே அவற்றை ஒத்த சிங்க‌ள மொழியும் உய்ர்வான மொழி என்று காலனீய ஆட்சியாளர்கள் கருதினார்கள்.சிங்கள மொழி சமஷ்கிருத மொழியில் இருந்து தோன்றியது.இந்த மொழி அடையாளத்தை கொண்டு மூலம் காலனீயவாதிகள் உள்நாட்டில் இருந்த இரு இனக்குழுக்களிடையே பிரிவினையை மிக ஆழமாக நிறுவினார்கள். இந்த அடிப்படையில் சிங்களவர்களுக்கு அவர்கள் நில உரிமையை அளித்தார்கள். நாட்டின் மத்திய பகுதியில் அமைக்கப்பட்ட ஆங்கிலேய தேயிலை, இரப்பர் தோட்டங்களில் உழைப்பதிலிருந்து அவர்களுக்கு விலக்களித்தார்கள்‌. மேலும் அம்ம‌ண்ணின் பூர்வ‌ குடிக‌ளான‌ த‌மிழ‌ர்க‌ளை ஆங்கிலேய‌ர்க‌ள் வ‌ட‌க்கு ம‌ற்றும் கிழ‌க்கு ப‌குதிக‌ளுக்குள் மட்டும் குடியிருக்க இசைவளித்தார்கள். தென் இந்தியாவிலிருந்து அழைத்து வ‌ர‌ப்ப‌ட்ட எட்டு இலட்சம் முதல் ப‌தினைந்து இல‌ட்ச‌ம் த‌மிழ‌ர்க‌ளும் தேயிலைத் தோட்ட‌ங்க‌ள் உருவாக்கும் ப‌ணிக‌ளில் ஈடுப‌டுத்துவதற்காக அடிமை உழைப்பாளிகளாக அழைத்துவரப்பட்டார்கள். இவ‌ர்க‌ளில் கால் பகுதியினர் (சுமார் 70,000 பேர்) 1840களில் வ‌ரும் வ‌ழியிலேயே நோய்க‌ளுக்குப் பலியாயின‌ர். இந்த தமிழர்களின் நிலை அமெரிக்கா நாடுகளில் அடிமைக‌ளாக உழைக்க அழைத்து வரப்பட்ட‌‌ ஆப்பிரிக்க‌ர்க‌ளுக்கு ஒப்பான‌து.

  புரட்ட‌சுடாண்டு ம‌த‌ நிறுவ‌ன‌ங்க‌ள் தான் வ‌டக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வாழ்ந்த‌ த‌மிழ‌ர்களுக்கு கல்வியின் மூலம் அர‌சிய‌ல் விழிப்புண‌ர்வு ஏற்ப‌டுத்தினர் என்பது ஒரு வரலாற்று முரண்! இதுவே கிருத்த‌வ‌ மேலாதிக்க‌த்தை எதிர்க்கும் வகையில் இந்து மத உணர்வை மேலோங்கச் செய்தது. அதுபோலவே அர‌பு நாடுக‌ளில் ஆண்க‌ளுக்கு த‌னியாக‌வும், பெண்க‌ளுக்கு த‌னியாக‌வும் க‌டுமையான மத கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு வ‌ருவ‌ததை அண்மைய‌ வரலாற்றிலிருந்து நாம் காண்கின்றோம். இவையெல்லாம் மேற்கத்திய வல்லரசுகளின் ஊடுருவலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவே‌ உருவாக்கப்பட்டன. இதே கண்ணோட்டத்தில் தான் பால‌சுதீன‌த்தில் யூத‌ர்கள் திணிக்கும் தீண்டாமையை நாம் பார்க்க வேண்டும்.

  ப‌தினெட்டாம் நூற்றாண்டின் மத்தியில் கிருத்துவ‌ ம‌த‌ நிறுவன‌ங்க‌ளின் மேலாதிக்க‌த்தை த‌டுப்ப‌த‌ற்காக இந்து சீர்திருத்தவதி ஆறுமுக‌ நாவ‌ல‌ர் என்ப‌வ‌ரால் ப‌ல சங்கங்களும், ப‌ள்ளிக‌ளும், கோயில்க‌ளும், அச்சுக் கூட‌ங்க‌ளும் தொட‌ங்க‌ப்ப‌ட்டன. கிருத்தவ மத மேலாதிக்கத்தை எதிர்ப்பதற்காக த‌மிழ‌ர்க‌ள் த‌ங்க‌ள‌து இல‌க்கியங்களையும், செய்தித்தாள்க‌ளையும் தாங்களே பதிப்பித்தார்கள். கல்வி அறிவு இந்து மதத்தையும், அதன் கொள்கைகளையும் பரப்புவதற்காகவும் பயன்படுத்தப்பட்டது.  த‌மிழ‌ர்கள் தங்களை தனிப்பட்ட இனக்குழுவாக உறுட்யுடன் நிலைநிறுத்தி கொண்டார்கள். இதுவே பின்னாளில் த‌மிழ‌ர்க‌ள் சிங்க‌ள‌வ‌ர்களுக்கு இணையாக நடத்தப்பட வேண்டும் அல்லது ஈழத் தமிழர்களுக்கு தனிதேசிய உரிமை அளிக்கப்பட வேண்டும் என்று கோருவதற்கு அடிப்படையாக அமைந்தன.‌

 ப‌ல்வேறு கால‌ங்க‌ளில் அங்கு ஆட்சி செய்த‌ காலனீய‌ க‌வ‌ர்ன‌ர்க‌ள் இரு இன‌க் குழுவையும் ச‌ம‌மாக‌ ம‌தித்த‌ன‌ர். ஆனால் அவ‌ர்க‌ள் ஒருவ‌ரை வைத்து இன்னொருவ‌ரை ஆளும் பிரித்தாளும் சூழ்ச்சியை செய்தார்க‌ள். 1833ஆம் ஆண்டு வரை அங்கிருந்த‌ ப‌ழைய‌ நிர்வாக‌ அமைப்பைக் கலைத்து, எல்லாப் ப‌குதிக‌ளையும் ஒன்று சேர்த்து புதிய‌ நிர்வாக‌ அமைப்பு உருவாக்க‌ப்ப‌ட்ட‌து. புதிய‌ நிர்வாக‌ அமைப்பில் மூன்று ஐரோப்பிய‌ர்க‌ளும், ஒரு சிங்க‌ள‌ த‌ர‌ப்பைச் சேர்ந்த‌வ‌ரும், ஒரு த‌மிழ், ஒரு ப‌ர்கர்(ஐரோப்பிய, ஆசிய கலப்பினத்தவர்கள்) ஆகியோர் இடம் பெற்றனர்.

  ம‌லைய‌கத் த‌மிழ் தொழிலாள‌ர்க‌ளுக்கும், அர‌பு இசுலாமிய‌  இன‌த்தைச் சேர்ந்த‌வ‌ர்க‌ளுக்கும் பிர‌திநிதித்துவ‌ம் கொடுக்க‌ப்ப‌ட‌வில்லை. 1915ல் இன‌வெறி சிங்க‌ளர்க‌ள் பெரும்பான்மையான ம‌லைய‌க‌த் த‌மிழ‌ர்களைக் கொன்ற‌ன‌ர். 1931ல் ம‌லைய‌க‌த்தில் உழைக்கும் ம‌க்க‌ளில் சிறுபான்மையின‌ரான‌ ம‌லையாளிக‌ள் சிங்க‌ள‌வ‌ர்களால் தாக்க‌ப்ப‌ட்டார்க‌ள். அத‌னால் அவ‌ர்க‌ள் கேர‌ளாவிற்கு திரும்பச் சென்று விட்ட‌ன‌ர்.

 1921ஆம் ஆண்டு காலனீய‌வாதிக‌ள் நிர்வாக‌ அமைப்பை மீண்டும் மாற்றியபோது, சிங்க‌ள‌வ‌ர்க‌ளுக்கு பதிமூன்று இட‌மும், த‌மிழ‌ர்க‌ளுக்கு மூன்று இட‌மும் கொடுக்கப்பட்ட‌து. இதிலிருந்து தமிழ‌ர்க‌ள் தாங்க‌ள் சிறுபான்மையின‌ர் என‌ உண‌ர‌த் தொட‌ங்கினார்கள்.  1931ஆம் ஆண்டில் மீண்டும் நிர்வாக‌ அமைப்பை மாற்றி ஒரு நபருக்கு ஒரு வாக்கு என்ற அடிப்படையில் த‌மிழ‌ர்க‌ளுக்கும் ச‌ம‌ உரிமை கொடுக்க‌ பிரிட்ட‌ன் முன் வ‌ந்த‌போது பெரும்பான்மையான‌ சிங்க‌ளர்க‌ளால் அது எதிர்க்க‌ப்ப‌ட்ட‌து.  இந்த‌ எதிர்ப்பு இன்று வ‌ரை தொட‌ருகின்ற‌து.வ‌ர்க்க‌ சாதி பிரிவினைக‌ளை வ‌லியுறுத்தி, சிறுபான்மைத் த‌மிழினத்தை ஒடுக்கும் உரிமையை பெரும்பான்மை சிங்க‌ளர்கள் த‌க்க‌வைத்துக் கொண்ட‌னர். அர‌ச‌மைப்பில் க‌வ‌ன‌ம் எடுத்துக் கொள்ளாம‌ல் அதிகார‌ப் ப‌கிர்வில் அங்க‌ம் வ‌கிப்ப‌து குறித்தே இரு த‌ர‌ப்பின‌ரும் க‌வ‌ன‌ம் குவித்த‌தால், இரு த‌ர‌ப்பு தேசிய‌வாதிக‌ளும் ப‌கையை அதிக‌ரித்துக் கொண்டே சென்றார்கள், இது இன்று வ‌ரை தொட‌ர்கின்ற‌து.

 நூற்றைம்ப‌து ஆண்டு கால‌ பிரிட்ட‌னின் ஆட்சியில் பிரிட்ட‌ன் நிலையான‌ கொள்கைக‌ள் எதையும் கொண்டிருந்த‌தில்லை. ப‌ல‌  ச‌ம‌ய‌ங்க‌ளில் த‌மிழ‌ருக்கும் சிங்க‌ள‌வ‌ருக்கும் இடையே ச‌ண்டை ஏற்பட்டது. ஆனால் இது பௌத்தர்களுக்கு, இந்து, கிருத்துவ, இசுலாமிய மதத்தவரிடையே நிலவும் மதப்பிரச்சனையாக முன்னிறுத்தப்ப‌ட்ட‌து. இத‌ன் தொட‌ர்ச்சியே இன்றும் தொட‌ரும் பௌத்த‌ ம‌த‌ வெறியாகும். பெரும்பான்மையான‌ நேர‌ங்க‌ளில் பௌத்த‌ ம‌த‌ ந‌ம்பிக்கை கொண்ட‌வ‌ர்க‌ளே ம‌ற்ற‌ ம‌த‌ ந‌ம்பிக்கை கொண்ட‌வ‌ர்களைத் தாக்கினார்க‌ள். இது போன்ற‌ வ‌ன்முறை ச‌ம்ப‌வ‌ங்க‌ள் ந‌டைபெறும் பொழுது பிரிட்டன் அரச காவலாளிக‌ள் ஓரமாக‌ நின்று அமைதி காத்தன‌ர்.
 
  1930 க‌ளின் பிற்ப‌குதியில்  குறிப்பாக‌ இர‌ண்டாம் உல‌க‌ப் போர் கால‌க‌ட்ட‌த்தில் த‌மிழ‌ர்களும், சிங்க‌ள‌ர்களும் சுத‌ந்திர‌ம் கோரினார்க‌ள். ப‌ல்வேறு இட‌துசாரி அமைப்புக‌ளும், சில‌ பழ‌மைவாத‌ இன‌க்குழுக்க‌ளும் உருவாகின. பெரும்பான்மையான இலங்கை மக்கள் காலனீய பிரிட்டனின் மேல் கொண்ட வெறுப்பினால் போரில் செர்மனியின் வெற்றியை எதிர்பார்த்த‌ன‌ர்.

 ஆங்கில‌த்தை ஆட்சி மொழியிலிருந்து அக‌ற்றி சிங்க‌ள‌மும், த‌மிழும் ச‌ம உரிமையுட‌ன் ஆட்சி மொழியாக்க‌ த‌மிழ‌ர்க‌ள் பாடுப‌ட்ட‌ன‌ர். இதை சில‌ சிங்க‌ளத் த‌லைவ‌ர்க‌ள் ஆத‌ரித்த‌ன‌ர். ஆனால் பெரும்பாலான‌ சிங்க‌ள‌ர்க‌ள் இதை எதிர்த்த‌ன‌ர். மகாவம்ச கருத்தியலின் படி சிங்க‌ளமே அர‌சு மொழியாக‌வும், பௌத்த‌ ம‌த‌மே அர‌சு ம‌த‌மாக‌வும் நிறுவப்படுவ‌தை பொன்ன‌ம்ப‌ல‌ம் என்ற‌ த‌மிழ்த் த‌லைவ‌ர் 1939ல் கண்டித்துப் பேசினார். இத‌னால் ஆத்திர‌ம‌டைந்த‌ சிங்களக் காடைய‌ர்க‌ள் ப‌ல‌ த‌மிழ‌ர்களைக் கொன்ற‌ன‌ர். இந்த‌ வ‌ன்முறையை ம‌ட்டுமே பிரிட்ட‌ன் முத‌ன் முறையாகத் த‌டுத்த‌து. ஆனால் இருப‌த்தி ஆறு ஆண்டு கால‌ உள்நாட்டுப் போருக்கான‌ விதை இங்கே தான் விதைக்க‌ப்ப‌ட்ட‌து.

 இர‌ண்டாம் உல‌க‌ப் போரின் முடிவுக்குப் பின் பிரிட்ட‌ன் அர‌சு பல தேசிய இனங்களும், நாடுகளும் தங்களது இறையாண்மையைக் காப்ப‌த‌ற்காக முன்னெடுத்த‌ போராட்ட‌ங்களைக் கவனத்தில் எடுத்துக் கொண்டது. 1947ல் இந்தியா பிரிட்டன் அரசின் ஆளுகைக்குட்பட்ட நிர்வாக அரசாகவும், பின்னர் இந்த நிர்வாக அமைப்பில் சில‌  ‌ மாறுத‌ல்க‌ளை செய்து இந்தியா 1950ல் குடியராக்கிய‌‌து. காந்தியால் முன்னெடுக்க‌ப்ப‌ட்ட‌ ஒத்துழையாமை இய‌க்க‌ம் வெற்றி பெற்ற‌து. இருந்த‌ போதிலும் “இந்து தேசிய‌வாதி” ஒருவ‌ரால் காந்தி 1948ல் ச‌ன‌வ‌ரி முப்ப‌தாம் திக‌தி அன்று சுட்டுக் கொல்ல‌ப்ப‌ட்டார். காந்தி எல்லா  இந்தியர்களும் ஒன்றாக‌ வாழ‌ வேண்டும் என விரும்பினார். ஆனால் பெரும்பான்மையான‌ முசுலிம்க‌ளோ த‌னிநாடு கோரின‌ர்.ப‌ல்வேறு இன‌க் க‌ல‌வ‌ர‌ங்க‌ளில்
முசுலிம்கள் பலர் கொல்ல‌ப்ப‌ட்டனர், பெரும்பான்மையான‌ முசுலிம்கள் வீடுகளை இழந்தனர். இதற்கு இந்தியா பொறுப்பேற்று இழப்பீட்டு தொகை வழங்கவேண்டும் என காந்தி எண்ணினார். இதை பெரும்பாலான “இந்து தேசியவாதிகள்” எதிர்த்தனர். இறுதியில் ஒரு “இந்து தேசியவாதியே” அவரை கொலை செய்தார்.

 இந்தியாவில் வாழும் பெரும்பான்மையான‌ இந்துக்க‌ள் ம‌ற்ற‌ இன‌த்த‌வரைத் தாழ்வாக‌ ந‌ட‌த்திய‌தைப் போல‌வே, பௌத்த‌ சிங்க‌ளர்க‌ள் த‌மிழ‌ர்க‌ளையும், முசுலிம்க‌ளையும் ந‌ட‌த்தின‌ர். த‌மிழ‌ர்க‌ளின் ம‌க்க‌ள்தொகை பெரும‌ள‌வில் குறைந்த‌து. நாட்டின் ம‌க்க‌ள் தொகையில் 30 விழுக்காடு இருந்த‌ த‌மிழ‌ர்க‌ள் 12.6 விழுக்காடு அள‌விற்குக் குறைந்து போனார்க‌ள். ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ள் தொட‌ர்ந்து ந‌டைபெற்ற‌ உள்நாட்டு போரில் கொல்ல‌ப்ப‌ட்டார்க‌ள். ஏறக்குறைய‌ ப‌த்து இல‌ட்ச‌ம் த‌மிழ் ம‌க்க‌ள் இல‌ங்கையிலிருந்து வெளியேறி ப‌ல‌ நாடுக‌ளில் அக‌திக‌ளாக‌ த‌ஞ்ச‌ம் அடைந்து வாழ்ந்து வ‌ருகின்ற‌னர்(14).

ஆசுத்திரேலிய‌ பொதுவுடைமை ச‌ர்வ‌தேசிய‌ குழுவின் அறிக்கை (ஒக்டோப‌ர் 2009 தேசிய‌ க‌மிட்டி)

போரின் இறுதியில் ஏற்ப‌ட்ட‌ த‌மிழீழ‌ விடுதலைப் புலிக‌ளின் தோல்வி த‌மிழ‌ர்க‌ளின் த‌னி நாட்டு கோரிக்கையில் ஒரு முக்கிய‌ திருப்ப‌த்தை ஏற்ப‌டுத்தியிருக்கின்ற‌து. இது ஒரு புதிய‌ க‌ட்ட‌த்திற்குள் த‌மிழ‌ர்க‌ளின் த‌னி தேசத்திற்கான போராட்டத்தில் தமிழர்களை த‌ள்ளியுள்ள‌து.

த‌ற்போது கிடைத்துள்ள‌ புதிய‌ த‌க‌வ‌ல்க‌ளின்ப‌டி வட‌அமெரிக்காவின் முக்கிய‌ இராணுவ‌ உத‌விக‌ளால் இல‌ங்கை அர‌சை ஒரு அட‌க்குமுறை‌ போரின் மூலமாக‌ த‌மிழீழ‌ விடுத‌லைப் புலிக‌ளை முற்றிலுமாக கட்டாயப்ப‌டுத்தியுள்ள‌‌து. புவிசார் அர‌சிய‌லுக்கும், த‌ன‌து ஏகாதிப‌த்திய‌ எல்லையை இந்து ச‌முத்திரப் ப‌குதிக‌ளில் விரிவுப‌டுத்துவத்தும் நோக்கத்திற்காக‌  வட‌அமெரிக்காவிற்கு இதை செய்தது.

 இல‌ங்கையின் இறுதிப் போரில் சீனாவும் வட‌அமெரிக்காவிற்குப் போட்டியாக‌ த‌ன‌து வ‌ர்த்த‌க‌ புவிசார் அர‌சிய‌ல் நோக்கங்க‌ளுக்காக இலங்கை அரசிற்க்கு இராணுவ உதவி அளித்துள்ள‌து.

நாம் இப்பொழுது முக்கிய‌மாகப் பார்க்க‌வேண்டிய‌ விட‌ய‌ம் உள்நாட்டில் இட‌ப்பெய‌ர்வுக்கு ஆளாக்கப்பட்டு முகாம்க‌ளில் வாழும் ம‌க்க‌ளின் அடிப்படைத் தேவைக‌ளையே. ஆனால் இல‌ங்கை அர‌சோ தொட‌ர்ச்சியான சித்தரவதை, வன்புணர்ச்சி, கொலைகள் மூல‌ம் அதை ஒரு வ‌தைபுரி முகாமாக‌ மாற்றி வ‌ருகின்ற‌து. மேலும் உணவு, நீர் போன்றவை மறுக்கப்பட்டு த‌மிழ‌ர்க‌ள் மிகக்க‌டுமையான‌ அட‌க்குமுறைக்கு ஆட்பட்டுள்ளார்கள்.

இது ஆசுத்திரேலியா, தென் ஆப்பிரிக்க‌ இட‌து சாரி அமைப்புகளிடம் கையளித்துள்ள, கூபா உள்ளிட்ட ஆல்பா நாடுக‌‌ளிட‌ம் பேசி உண்மை நிலையை அவர்களுக்குத் தெரிவித்து தமிழர்களின் தனித் தேசத்திற்கான‌ உரிமையை ஏற்றுகொள்ளச் செய்ய‌ வேண்டிய முக்கிய வேலையையும், இலங்கையுடனான இராச்சிய‌ உறவுகளைத் துண்டிக்க வேண்டிய ச‌ர்வ‌தேசக்‌ க‌ட‌மையை இது எங்க‌ளுக்கு ஏற்ப‌டுத்தியுள்ள‌து.

 சிம்பாவே, ஈரான், இலங்கை போன்ற ஒடுக்குமுறை அரசுகளின் ‘ஏகாதிபத்திய எதிர்ப்பு’ என்ற போலியான முழக்கத்தை நம்பி, மூன்றாம் உலக நாடுகளிலுள்ள அசலான தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டங்களை எந்தக் காரணத்திற்க்காக ஆதரிக்க தவறினாலும், அது ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை போருக்கு எதிரானதேயாகும்(8).

குறிப்புக‌ள்.
9. This condensed history is gleaned for many sources: author maravanpulavu K. Sachithananthan (tamilnool@gmail.com ); latin americal friendship association, tamilnadu, India.( mughil@gmail.com); www.wikipedia.org many articles about tamil eelam, srilanka and their histories, religions and languages;
www.tamilnation.org/heritage/index.htm and many other sections in this comprehensive tamil self determination website. iam uncertain about the exatitude of the origins. who came first, specific dates, or how to determine linguistic lineages. The record is unclear, but what is clear is Sinhalese have jumped and treated tamils as inferior beings.
10. Genesis 10
11. Genesis 5-9
12. John pliger.”distant voices, desperatye lives”.New stateman, May 13. 2009.
13. see chapter. “Understanding the Aryan theory” by marisa angell, a american jew. the chapter is part of ” Culture and politics of identity in srilanka:. edited by Mithran thiruchelvam and dattathreya C.S., Published by International center for ethnic studies, Colombo, Sri lanka, 1998
14. Current poppulation statistics of the Democratic Republic od SriLanka – So named since 1978 – Show a population of 21 million people. 74%(15 million) Sinhalese; 12.6% (2.5 million) Tamils, 7.4%(1.5 Million) Moors,5.2% (1 Million) Indian tamil. 1978ஆம் ஆண்டு க‌ண‌க்கெடுப்பின்ப‌டி 74 விழுக்காடு சிங்க‌ள‌வ‌ர்க‌ளும், 12.6 விழுக்காடு த‌மிழ‌ர்க‌ளும், 7.4விழுக்காடு மூர்க‌ளும், 5.2 விழுக்காடு இந்திய‌ த‌மிழ‌ர்க‌ளும் இருந்த‌ன‌ர்.

மூலப்பிரதி : http://www.ronridenour.com/articles/2009/1116-rr.htm

ஈழத் தமிழனத்தை கைவிட்ட கூபாவும், இலத்தின் அமெரிக்க முற்போக்கு அர‌சுக‌ளும்(ALBA).பாகம் 1/5


ஈழத் தமிழனத்தை கைவிட்ட கூபாவும், இலத்தின் அமெரிக்க முற்போக்கு அர‌சுக‌ளும்(ALBA)
பாகம் 1/5

“உலகெங்கிலும் ஒடுக்கப்பட்டவர்கள் நம் உறவுகள், ஒடுக்குபவர்கள் நம் எதிரிகள்”. எங்க‌ள் நாடே ஒரு முழு உல‌க‌ம், எல்லா புர‌ட்சியாள‌ர்க‌ளும் எங்க‌ள் ச‌கோத‌ர‌ர்களே.—அதிபர்.பிதல் காஸ்த்ரோ(1)

“புர‌ட்சிக‌ர கருத்துகளே புர‌ட்சியை வ‌ழிந‌ட‌த்திச் செல்லும் உந்து விசை ஆகும். எப்பொழுது ஒருவ‌ன் பாட்டாளி வ‌ர்க்க‌ ச‌ர்வேதேசிய‌த்தை ம‌ற‌க்க‌ ஆர‌ம்பிக்கின்றானோ, அப்பொழுதே அவ‌ன் முன்னெடுத்துச் செல்லும் புர‌ட்சியான‌து முனை மழுங்கியும், அவன் ஒரு சோம்பேறி நிலைக்கு ஆளாவதால் அப்புரட்சி நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத‌ எதிரிக‌ளான‌ ஏகாதிப‌த்திய‌வாதிக‌ளின் கைக‌ளில் விழுந்து விடுவ‌தால், அவன் அப்புர‌ட்சியை முழுவதாக ம‌ழுங்கச் செய்து விடுகின்றான். பாட்டாளி வ‌ர்க்க‌ ச‌ர்வ‌தேசிய‌மே ந‌ம‌து க‌டமை; அதுவே புர‌ட்சியின் தேவையும் கூட. ஆத‌லால் தோழ‌ர்க‌ளே நாம் இக்க‌ருத்தை ந‌ம் ம‌க்க‌ளிட‌ம் எடுத்துச் செல்ல‌ வேண்டும்.—– “சே குவாரா”(2)

  தம‌து த‌டையில்லாத‌ ஆத‌ர‌வை இன‌வெறி இல‌ங்கைக்கு அளித்த‌த‌ன்  கூபா, பொலிவியா, நிக‌ர‌குவா ம‌ற்றும் இல‌த்தின் அமெரிக்க‌ நாடுக‌ளெல்லாம் இல‌ங்கைத் த‌மிழ‌ர்க‌ளை இன‌வெறி இல‌ங்கைக் குடிய‌ர‌சிட‌ம் கைய‌ளித்துவிட்ட‌ன. மேலும் “பாட்டாளி வ‌ர்க்க‌ ச‌ர்வதேசிய‌த்தையும்”, ம‌ற்றும் உல‌கெங்கும் ஒடுக்க‌ப்ப‌டுகின்ற  ம‌க்க‌ளையும் இந்நாடுக‌ள் கைவிட்டுவிட்டன‌.

  இல‌ங்கை அரசு நடத்திய‌ இன‌ப்ப‌டுகொலைக்கு எதிராக மே 27,2009 அன்று ஐ.நா மனித உரிமைக் குழுவில் நடந்த ஓட்டெடுப்பில் கூபாவும்,பொலிவியாவும், நிக‌ரகுவாவும், மற்றும் இலத்தின் அமெரிக்க முற்போக்கு அர‌சுக‌ளும் (ALBA – Bolivarian Aliance for Latin America. வெனிசுவேலா, கூபா, பொலிவியா, நிகரகுவா, சிலே, ஈக்குவெடார் முதலிய நாடுகள் இந்த கூட்டமைப்பில் உள்ளன‌) இனவெறி இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தது மட்டுமல்லாமல்,இலங்கை அரசு “மனித உரிமையை பாதுகாக்கவும், மேம்படுத்தவும்” செய்துவரும் நடவடிக்கைகளை பாராட்டின. இனவெறி அர‌சுக்கெதிராக 1983 முத‌ல் மே 2009 வரை சமரசமின்றி போராடிய‌‌ “த‌மிழீழ‌ விடுத‌லை புலிக‌ள்” அமைப்பை க‌ண்டித்து உள்ளன‌.

 ”போரின் இறுதி கட்டத்தில் ம‌ட்டும் ஏற‌க்குறைய‌ ஐந்து இல‌ட்ச‌ம் ம‌க்க‌ளை நியாயமற்ற முறையில், இரும்புக்க‌ர‌ம் கொண்டு இட‌ப்பெய‌ர்வுக்கு ஆளாக்கிய‌து இல‌ங்கை அர‌சு. இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ம‌க்க‌ளை ப‌ல்வேறு “ந‌ல‌ன்புரி முகாம்க‌ள்” என்ற‌ழைக்க‌ப்ப‌டும் இட‌ங்க‌ளில் அடைத்து வைத்துள்ளார்க‌ள்.போர் முடிந்து ஆறு மாதமாகியும் இது வரை இவ‌ர்க‌ளில் சில‌ ஆயிர‌ம் பேர்க‌ளே விடுவிக்க‌ப் ப‌ட்டுள்ள‌ன‌ர். இந்த ந‌ல‌ன்புரிமுகாமோ “மனித உரிமை பாதுகாப்பிற்க்கும், மேம்பாட்டிற்க்கும்”  நேரெதிரான நிலையில் உள்ளன. இதன் விளைவாக‌ உண‌வு, குடிநீர், அடிப்ப‌டை ம‌ருத்துவ‌ உத‌விக‌ள் இல்லாம‌ல் நூற்றுக்கண‌க்கான‌ ம‌க்க‌ள் வார‌ந்தோரும் இற‌க்கின்ற‌ன‌ர்.”

இன‌வெறி இல‌ங்கைக்கு ஆத‌ர‌வாக‌வும், ஒரு த‌லை ப‌ட்ச‌மாக‌வும் கையெழுத்திட்ட‌ வ‌ள‌ர்ந்து வ‌ரும் இல‌த்தீன் அமெரிக்க‌ முற்போக்கு அர‌சுக‌ளும் இலங்கையின் கடுமையான அடக்குமுறையை மட்டும் விமர்சிக்கவே இல்லை, அதுமட்டுமல்லாமல் அங்கே சட்டத்திற்க்கு புறம்பாக உள்நாட்டிலேயே இடப்பெயர்வுக்கு ஆளாக்கப்பட்டு முகாம்க‌ளில் வாழும்  ம‌க்களின் தற்போதைய மோசமான நிலை பற்றியோ, அவர்களின் அடிப்படை உரிமையான உணவு, குடிநீர், அடிப்படை மருத்துவ உதவிகள் மறுக்கப்படுவது குறித்தோ ஒரு வார்த்தையைக் கூட‌ தங்க‌ள‌து தீர்மானத்தில் குறிப்பிடாமல் தமிழ் மக்களை முற்றிலுமாக‌ புறக்கணித்துவிட்டன. பிரிட்ட‌னிட‌ம் இருந்து சுத‌ந்திர‌ம் அடைந்த‌ நாள் முத‌லாக‌வே சிங்க‌ள ஆதிக்க‌ அர‌சுக‌ள் த‌மிழ‌ர்க‌ளை ஒருதலைப் ப‌ட்ச‌மாக‌வே ந‌ட‌த்தி வ‌ந்திருக்கின்ற‌ன‌, அத‌ன் இறுதி வ‌டிவ‌மே இந்த‌ “இன‌ப்ப‌டுகொலை”.

  ஆல்பாவிற்கு த‌லைமையேற்றிற்கும் வெனிசுவேலா, ஐ.நாவின் மனித உரிமை குழுவில் இல்லை. ஆனால் அந்த வெனிசுவேலாவின் அதிப‌ர். ஊகோ சாவேசு ஐ.நாவின் மனித உரிமைக்குழுவில் இலங்கை அடைந்த வெற்றிக்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்(3). இந்த முற்போக்கு‌ த‌லைவ‌ர்க‌ள் இக்க‌ட்டான‌ சூழ‌லில் உள்நாட்டில் இட‌ப்பெய‌ர்வுக்கு ஆளாக்கப்பட்டு முகாம்க‌ளில் அடைக்கப்பட்டிருக்கும் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ம‌க்க‌ளுக்கு உதவி, இலங்கையின் மிருகத்தனமான இன‌வெறி செய‌ல்பாடுக‌ளை க‌ண்டித்து தா செய்த தவறுகளை திருத்தி கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன். த‌மிழ் ம‌க்க‌ளின் உரிமையான‌ பிரிந்து போத‌ல், த‌ங்க‌ளுக்கான‌ தேச‌த்தை க‌ட்ட‌மைத்த‌ல் போன்ற‌வை அங்கீக‌ரிக்க‌ப்ப‌ட‌ வேண்டும். குறிப்பாக‌ ஒரு கால‌த்தில் அடிமை சமூகங்களையும், பிற பூர்வகுடிகளையும் இந்த முற்போக்கு‌ அர‌சுக‌ள் இதை அங்கீக‌ரிக்க‌ வேண்டும்.

  ஐந்து ப‌குதிகள் கொண்ட க‌ட்டுரையின் இந்த முத‌ல் ப‌குதியில் இல‌ங்கை அர‌சின் இனபடுகொலை செய‌ல்பாடுகளை எடுத்துக் கூறுகின்றேன். மேலும் எந்த‌ கார‌ண‌த்தைக் கொண்டு இந்த ஆல்பா‌ நாடுகள் எல்லாம் உண்மைக்கு புறம்பாக‌‌, எந்த‌வித‌ த‌னிப்ப‌ட்ட‌ ஆய்வுமின்றி குரூரமான இன‌வெறி அர‌சிற்கு ஆத‌ர‌வ‌ளித்த‌ன‌ என்ற‌ என‌து க‌ருத்தை அடுத்தடுத்த ப‌குதிக‌ளில் கூற‌வுள்ளேன். சிங்க‌ள‌, த‌மிழ் ம‌க்க‌ளின் வ‌ர‌லாற்றையும்,ச‌ம‌ உரிமைக்கான‌ அவ‌ர்க‌ள‌து போராட்ட‌ங்க‌ளையும், த‌மிழ் ம‌க்களின்‌ த‌னித் தேச கோரிக்கைக்கான‌ கார‌ண‌ங்க‌ளையும்,மேற்குல‌க‌ நாடுகளும், சமயம் பார்த்து சீனா, இரான் போன்ற நாடுக‌ளும் மேற்கொண்ட‌ புவிசார் அர‌சிய‌லையும், த‌ற்போதைய‌ த‌மிழ‌ர்க‌ளின் நிலையையும் எடுத்துக் கூற‌ உள்ளேன்.

ம‌னித‌ உரிமைக் குழுவின் தீர்மான‌ம் s-11/1: ம‌னித‌ உரிமைக‌ளை பாதுகாக்க‌வும், மேம்ப‌டுத்த‌வும் இல‌ங்கைக்கு உத‌வுத‌ல்:

        போரின் இறுதியில் 47 உறுப்பின‌ர்களைக் கொண்ட‌ ஐ.நா ம‌னித‌ உரிமைக்குழுவில் 17 உறுப்பு நாடுக‌ள் இல‌ங்கையின் நிலையைப் ப‌ற்றி சிறப்பு கூட்டம் நடத்தி விவாதிக்க‌ முடிவு செய்த‌ன‌. ஐ.நாவின் ம‌னித‌ உரிமைக் குழுவின் த‌லைமை நிர்வாகியான‌ நவி பிள்ளையோ ” த‌னிப்ப‌ட்ட‌ ஒரு ச‌ர்வ‌தேச‌ குழு ” போரில் இரண்டு த‌ர‌ப்புக‌ளின் ம‌னித‌ உரிமை மீற‌ல்க‌ளையும் விசாரணை செய்து அறிக்கை தாக்க‌ல் செய்ய‌ வேண்டும் என‌க் கூறினார்.

 ” பொதும‌க்களைப் பாதுகாப்போம் என்ற‌ உத்தரவாத‌த்தை மீறி அர‌சு க‌ன‌ர‌க‌ ஆயுத‌ங்க‌ளை ம‌க்க‌ள் க‌ணிச‌மாக‌ வாழும் ப‌குதிக‌ளின் மீது ப‌ல‌முறை பிர‌யோகித்துள்ள‌து. மேலும் ம‌ருத்துவ‌ம‌னைக‌ளின் மீது ப‌ல‌முறை குண்டுவீசித் தாக்கியுள்ளது”.

 ” இந்த‌ ம‌க்க‌ளுக்குத் அடிப்ப‌டை தேவைகளான‌ உண‌வு, குடிநீர், ம‌ருத்துவ உத‌விக‌ள் போன்றவை தேவை. ஏற்க‌ன‌வே ப‌ல‌ தொற்று நோய்க‌ள் அங்கே ப‌ர‌வ‌த் தொட‌ங்கி விட்ட‌ன‌”.

 ” போர் ந‌ட‌க்கும் இடத்தை விட்டு வெளியேறும் குழ‌ந்தைக‌ள் ம‌ற்றும் பெண்க‌ளின் நிலை ந‌ம்மை உடனடியாக‌‌ செய‌ல்ப‌டக் கோருகின்றன‌” இவ்வாறு நவி பிள்ளை த‌ன‌து அறிக்கையில் கூறியுள்ளார்.

   நவி பிள்ளையின் ந‌டுநிலையான இந்தப் ப‌ரிந்துரை விவாத‌த்திற்கே எடுத்துக் கொள்ள‌ப் பட‌வில்லை என்ப‌து வேத‌னை த‌ரும் செய்தி. பெரும்பாலான‌ ஐரோப்பிய‌ நாடுக‌ள், க‌ன‌டா மற்றும் அர்ஹென்தினா, மெக்சிகோ,சிலே, உருகுவே போன்ற‌ ப‌தினேழு உறுப்பு நாடுக‌ள் முன்வைத்த‌ தீர்மான‌மோ மிகவும் விசித்திர‌மான‌து. இல‌ங்கை அர‌சு மேற்கொண்ட‌ போர்க்குற்ற‌த்தையும், இன‌ப்ப‌டுகொலையையும் அந்த‌ அர‌சே விசாரித்து அறிக்கை த‌ரவேண்டும் என்ற‌ தீர்மான‌த்தைஇவை முன்வைத்த‌ன‌. இது ஒரு கொலைகார‌னிட‌மே கொலைக்கான‌ விசாரணைப் பொறுப்பை ஒப்ப‌டைப‌த‌ற்கு நிகரான‌து.ம‌ற்ற‌ தீர்மான‌ங்க‌ளில் இருந்து வேறுப‌ட்ட ஒரு தீர்மானமும் முன்வைக்கப்பட்டது. “உள்நாட்டிலேயே இட‌ப்பெய‌ர்வுக்கு ஆளாக்கப்பட்ட மக்கள் வாழும் முகாம்க‌ளில் நுழையவதற்கும், ம‌க்க‌ளுக்கு உத‌வுவ‌த‌ற்கும் ச‌ர்வ‌தேச‌ செஞ்சிலுவை ச‌ங்க‌ம் போன்ற‌ ம‌னித‌ உரிமை அமைப்புக‌ளுக்கு த‌டையில்லாத‌ அனும‌தியை வ‌ழ‌ங்க‌ வேண்டுமென்ற‌ கோரிக்கையை பெரும்பாலான‌ அணிசேரா நாடுக‌ள் முன்வைத்த‌ன‌. அதிலும் சிலே நாடு ம‌ட்டும் எந்த‌ விசார‌ணையும் தேவை இல்லை என்ற கருத்தை முன்வைத்த‌து. இந்த‌ “த‌டையில்லாத‌ அனும‌தி” என்ற‌ கோரிக்கையும் கூட‌ “தேவையான‌ போது அனும‌தி” என்ற‌ள‌விற்கு குறுக்க‌ப்ப‌ட்டது, இதன் விளைவாக அர‌சை உணவு / நீர் / ம‌ருத்துவ‌ உத‌விக‌ள் ஆகியவற்றை  த‌ன‌து சொந்த‌ம‌க்க‌ளுக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்தும் வாய்ப்பு இவ்வாறு இலங்கை அரசுக்கு அளிக்கப்பட்டது.

 இந்த‌ விவாதத்தின் போது இல‌ங்கை ஒரு பார்வையாள‌ராக மட்டுமே ஐ.நா.மனித உரிமைக் குழுவில் அங்க‌ம் வ‌கித்த‌து. 2006லிருந்து 2008 வ‌ரை ஐ.நா ம‌னித‌ உரிமைக் குழுவில் உறுப்பு நாடாக‌ இருந்த‌து இல‌ங்கை. 2008ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ம‌றுதேர்த‌லில் தோல்விய‌டைந்த‌ ஒரே ஆசிய‌ நாடு இல‌ங்கை ம‌ட்டுமே. இன்று இலங்கைக்கு வாக்களித்த இதே அணிசேரா நாடுகள் தான் அன்று இலங்கை அரசு அபாயகரமானது என்று கூறின. மேலும் உல‌கெங்கும் உள்ள‌ த‌மிழ‌ர்களும், அமைதிக்கான‌‌ நோப‌ல் ப‌ரிசு பெற்ற‌ உல‌க‌ நாடுக‌ளின் ம‌ரியாதைக்குரிய‌ ” தெசுமாண்ட் டுட்டு, அடோல்ப் பிரெசு இவ்விருவரின் மிகக்க‌டுமையான‌ எதிர்ப்புக‌ளே  ஐ.நா.ம‌னித‌ உரிமை குழு உறுப்பின‌ர் தேர்தலில் இல‌ங்கை தோல்வியடைய‌ முக்கிய‌ கார‌ணம் என்பதை இந்த ஒட்டெடுப்பின் போது அணிசேரா நாடுகள் வசதியாக மறந்துவிட்டார்கள்!.

இல‌ங்கையின் ம‌னித‌ உரிமைக் குழு தேர்த‌லின் போது இல‌ங்கையை எதிர்ப்ப‌த‌ற்கான‌ கார‌ண‌மாக தெசுமாண்ட் டுட்டு 2008ல் பின்வருமாறு கூறினார் ”இல‌ங்கையில் அர‌சப் ப‌டைகள் த‌ன‌து சொந்த‌ ம‌க்க‌ளின் மீதே செய்த திட்ட‌மிட்ட‌ ம‌னித‌ உரிமை மீற‌ல்களையும், ஆட் க‌ட‌த்துதலையும், நினைத்து கூட‌ பார்க்க‌ முடியாத பல சித்ரவதைகளையும், கொலைகளையும் செய்து வருகின்றது” .

ஒரு வ‌ருட‌த்திற்குப் பின் ம‌னித‌ உரிமைக் குழுவின் பெரும்பான்மையானோர் இலங்கையின் “ம‌னித‌ உரிமைப் ப‌ணிக‌ளை(!) பாராட்டுவ‌தாக‌ கூறிய‌து என்னைத் திகைப்பில் ஆழ்த்திய‌து. நான் மிகவும் நேசிக்கும் நாடும்,  எந்த நாட்டின் அரசிற்காக எட்டு வ‌ருட‌ம் வேலை செய்தேனோ அந்த கூபா நாடு தான் இந்த தீர்மானத்தை  நிறைவேற்றுவதற்காக மிகுந்த அக்கறை காட்டியது எனக்கு மிகுந்த் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கூபாவின் தூதுவ‌ரான ஹூவான் அன்தோனியோ அணிசேரா நாடுக‌ளின் சார்பாகப் பேசினார். அவ‌ர் இது வ‌ரை ந‌ட‌ந்து வ‌ந்த‌ போருக்கு ஒரு முற்றுப் புள்ளி இட்ட‌ இலங்கை அரசைப் பாராட்டினார். குறிப்பாக‌ ” இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாப்ப‌த‌ற்காக‌ தீவிர‌வாத‌த்தை எதிர்த்தும், பிரிவினைக் கொள்கைக‌ளை எதிர்த்தும் போராடிய‌தை ம‌திப்ப‌தாக” அவ‌ர் கூறினார்.

   “பிரிவினைவாதம், தீர்மானகரமான தேச எல்லையின் வ‌ரலாற்றை பின்ன‌ர் நாம் விரிவாகக் காண்போம். பிரிவினைவாதம், ஒரே நிலப்பரப்பு என்று கூறுவதற்கு முன் சிங்கள, தமிழ் மக்களின் வரலாற்றையும், சுதந்திரத்திற்கு முன்னான அவர்களின் வாழ்வு பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். சிங்க‌ள‌வ‌ர்க‌ள் அந்தத் தீவிற்க்கு வ‌ருவ‌த‌ற்கு ப‌ல‌ நூற்றாண்டுக‌ளுக்கு முன்பே த‌மிழ‌ர்க‌ள் தங்கள் பூர்வீக நிலத்தில் அரசாட்சி அமைத்து வாழ்ந்து வந்தனர்.

 இந்தியா, எகிப்து, பாகிசுதான் போல‌ கூபாவும் இலங்கைக்கு சிற‌ப்பு வ‌ழ‌க்க‌றிஞ‌ர் போல‌வும், ச‌ம‌ர‌சப் பேச்சாள‌ர் போல‌வும் ந‌ட‌ந்து கொண்ட‌து. கூபா இலங்கையைப் ப‌ற்றி கூறியவை‌ய‌னைத்தும் கூபாவால் தயாரிக்க‌ப்ப‌ட்ட‌ தீர்மானத்தில் இருக்கின்றன‌.

 வாக்களிப்பதற்கு சில் நாட்களுக்கு முன்னர் ஐநாவின் மனித உரிமை குழு கூட்டத்திற்கு சென்ற பொலிவியாவின் தூதுவ‌ரான ஏஞ்ச‌லிகாவோ விவாத‌த்தை முன்னெடுத்த‌ 17 நாடுக‌ளில் பலவும் உறுதிய‌ற்ற‌ நிலைப்பாட்டை கொண்டிருப்பாத‌வும், அத‌னால் விவாத‌த்திற்கு முன் த‌ங்க‌ளுக்குள் ஒரு சிற‌ப்புக் கூட்ட‌ம் ந‌டைபெற‌ வேண்டும் என‌வும் கூறினார். மேலும் இது போன்ற‌ ந‌வ‌காலனிய‌ செய‌ல்பாடுக‌ளை அவ‌ர் க‌ண்டிப்ப‌தாக‌வும் கூறினார்.இத‌ன் சில‌ நாட்க‌ளின் பின்ன‌ர் அதே தூதுவரே “த‌மிழீழ‌ விடுதலைப் புலிகளை” தீவிர‌வாத அமைப்பு என்றும், இலங்கைக்கு அதன் இறையாண்மையை பாதுகாப்ப‌த‌ற்கு உரிமை உண்டு என‌வும் கூறியுள்ளார் (இத‌ற்குப் பின்னால் ந‌டைபெற்ற‌ அர‌சிய‌ல் காய் ந‌க‌ர்த்த‌ல்க‌ளை நீங்க‌ள் புரிந்து கொள்ள‌லாம்).

 
s-11/1 தீர்மானத்தை பெரும்பான்மையான‌ நாடுக‌ள் ஏற்றுக்கொண்ட‌து(29 நாடுக‌ள்), 12 நாடுக‌ள் எதிர்த்த‌ன‌. ஆறு நாடுக‌ள் வாக்கெடுப்பிற்கு வ‌ர‌வில்லை. அந்த‌ தீர்மான‌த்தில் முன்மொழிய‌ப்ப‌ட்ட‌ க‌ருத்துக்க‌ளை இங்கு நான் தொகுத்து கூறுகிறேன்.

” த‌ன‌து இறையாண்மையைப் பாதுகாத்துக் கொள்ள‌வும், தன‌து ம‌க்க‌ளையும், எல்லையையும் தீவிர‌வாத‌த்திலிருந்து பாதுகாக்க‌வும் குடிய‌ர‌சான இல‌ங்கைக்கு உரிமை உண்டு என்ப‌தை மீண்டுமொரு முறை உறுதிபட‌ கூறுகின்றோம்”. த‌மிழீழ‌ விடுத‌லைப் புலிகள் ம‌க்களை தாக்கியதையும், ம‌க்க‌ளை பாதுகாப்பு கேட‌ய‌மாக பயன்ப‌டுத்திய‌தையும் இத்தீர்மானம் வன்மையாக‌ க‌ண்டிக்கின்ற‌து.

” த‌மிழீழ‌ விடுத‌லைப் புலிக‌ளின் க‌ட்டுப்பாட்டின் கீழ் தங்க‌ள‌து விருப்ப‌த்திற்கு மாறாக‌ த‌டுத்து வைக்க‌ப்ப‌டிருந்த‌ ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ளை விடுவித்த‌தையும் இத்தீர்மானம் வ‌ர‌வேற்கின்ற‌து. மேலும் நாட்டில் நிரந்தர அமைதியையும், பாதுகாப்பையும் ஏற்படுத்துவதற்காக அரசு மேற்கொண்ட‌ ந‌ட‌வடிக்கைக‌ளை பாராட்டுகின்ற‌து”.

“த‌மிழீழ‌ விடுத‌லைப் புலிக‌ளின் க‌ட்டுபாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்நாட்டிலேயே இடப்பெயர்வுக்கு ஆளான‌ ம‌க்க‌ளுக்குத் தேவையான‌ உத‌விக‌ள் ம‌ற்றும் அவ‌ர்க‌ளுக்கான‌ வாழ்வாதார‌ங்க‌ளை உருவாக்குத‌ல்,  நாட்டின் பொருளாதார‌ம் ம‌ற்றும் க‌ட்ட‌மைப்பை மீள‌மைத்த‌ல் போன்ற‌வ‌ற்றை இத்தீர்மானம் வ‌ற்புறுத்துகின்ற‌து”.

”ம‌னிதர்கள் நலமுடன் வாழத் தேவையான பாதுகாப்பான‌ குடிநீர், உண‌வு, சுற்றுப்புற‌ சுகாதார‌ம், க‌ழிவ‌றைக‌ள் அமைத்து கொடுத்த‌ல், அடிப்ப‌டை ம‌ருத்துவ‌ உத‌விக‌ள் போன்ற‌வ‌ற்றை உள்நாட்டிலேயே இடப்பெயர்வுக்கு ஆளாகி முகாம்க‌ளில் வாழும் ம‌க்க‌ளுக்கு இல‌ங்கை அர‌சு ம‌ற்றும் ஐக்கிய‌ நாடுக‌ள் ச‌பையின்  உத‌வியின் மூல‌மாக‌ செய்து கொடுத்தல்”….

1) உள்நாட்டிலேயே இடப்பெயர்வுக்கு ஆளாகி முகாம்க‌ளில் வாழும் ம‌க்க‌ளுக்கான‌ அவ‌ச‌ர‌ தேவைக‌ளை அர‌சாங்க‌ம் உட‌ன‌டியாக‌ ம‌திப்பிட்டு செய‌ல்ப‌டுத்துத‌ல்.

2) ம‌னித‌ உரிமைகளைப் பாதுகாப்ப‌திலும், மேம்ப‌டுத்துவ‌திலும் த‌ன‌து தொட‌ர்ச்சியான‌ ப‌ங்க‌ளிப்பை இலங்கை அர‌சு மேற்கொண்டு வ‌ருவ‌தை பாராட்டுகின்ற‌து.

5)உள்நாட்டிலேயே இடப்பெயர்வுக்கு ஆளான‌ ம‌க்கள் வாழும் முகாம்க‌ளில் தேவையான‌ பொழுது ம‌னித‌ உரிமை அமைப்புக‌ளை அனும‌திக்கும் திட்ட‌தை இத்தீர்மானம் முன்மொழிகின்ற‌து. இத‌ன் மூல‌ம் அங்கு வாழும் ம‌க்க‌ளுக்கு ம‌னித‌ உரிமை அடிப்படையிலான உத‌விக‌ள் கிடைக்கும்.

ஆத‌ர‌வு தெரிவித்த‌ நாடுக‌ள்: அங்கோலா, அசர்பைசான்,பக்ரைன்,வ‌ங்காள‌தேச‌ம், பொலிவியா, பிரேசில், புர்கினோ பாசோ, கேம‌ரூன், சீனா, கூபா, திசிபௌத்தி, எகிப்து, கானா, இந்தியா, இந்தோனேசியா, சோர்டான், ம‌டகாசுக‌ர், ம‌லேசியா, நிக‌ர‌குவா, நைசீரியா, பாகிசுதான், பிலிப்பைன்சு, க‌த்தார், இரசிய கூட்டமைப்பு, ச‌வுதி அரேபியா, செனக‌ல், தென் ஆப்பிரிக்கா,உருகுவே, சாம்பியா.

எதிர்ப்பு தெரிவித்த‌ நாடுக‌ள்: போசுனியா ம‌ற்றும் கெர்ச‌சிகோவினா, க‌ன‌டா, சிலே, பிரான்சு, செர்ம‌னி, இத்தாலி, மெக்சிகோ, நெத‌ர்லாந்து, சுலோவாகியா, சுவிட்ச‌ர்லாந்து, இங்கிலாந்து, வ‌ட‌க்கு அய‌ர்லாந்து.

ப‌ங்கேற்காத‌ நாடுக‌ள்:அர்ஹென்தினா, கேபோன், மொரீசிய‌ஸ், கொரிய‌ குடிய‌ர‌சு, உக்ரைன்,ச‌ப்பான்(4).

 1,2,மற்றும் 5 ஆம் புள்ளிக‌ளில் குறிப்பிட‌ப்ப‌ட்ட‌ க‌ருத்துக‌ள் எப்பொழுதும் இலங்கையில் இருந்த‌தில்லை என்ப‌தை வ‌ருகின்ற‌ ப‌குதிக‌ளில் விரிவாக‌ கூறுகின்றேன். இலங்கை எப்பொழுதும் த‌மிழ‌ர்க‌ளை அமைதியாக வாழ‌வோ, அவ‌ர்க‌ள‌து அடிப்படை உரிமைகளை கூட நிறைவேற்ற முய‌ன்ற‌து கூட‌ இல்லை என்பது தான் வரலாறு.

தீவிர‌வாதமும், இன‌ப்ப‌டுகொலையும்:

த‌மிழீழ‌ விடுத‌லைப் புலிக‌ளின் மீது தீவிர‌வாதிக‌ள் என்று முத‌ன் முத‌லாக‌ இந்தியாவால் 1992 ஆம் ஆண்டு  த‌டை கொண்டுவ‌ர‌ப்ப‌ட்ட‌து. ஆனால் இல‌ங்கை 1998வ‌ரை த‌மிழீழ‌ விடுத‌லைப் புலிக‌ளின் அமைப்பை அவ்வாறு கூறவோ, த‌டை செய்ய‌வோ இல்லை என்பது வேடிக்கையான உண்மை. 1997ல் அமெரிக்கா கொண்டு வ‌ந்த‌ த‌மிழீழ‌ விடுத‌லைப் புலிக‌ளின் மீதான‌ த‌டையைத் தொட‌ர்ந்தே இல‌ங்கையும் அவ்வ‌மைப்பைத் த‌டை செய்த‌து.2006 ஆம் ஆண்டு மே மாத‌ம் ஐரோப்பிய‌ யூனிய‌ன் த‌மிழீழ‌ விடுத‌லைப் புலிக‌ளின் மீதான த‌டையை கொண்டுவ‌ந்த‌து. த‌மிழீழ‌ விடுத‌லைப் புலிக‌ளுக்கு ப‌ண‌ உத‌விக‌ளும், ஆயுத் உத‌விக‌ளும் செய்வ‌து த‌டை செய்ய‌ப்ப‌ட்ட‌து. த‌மிழீழ‌ விடுத‌லைப் புலிகள் ஐரோப்பிய நாடுகளில் சேர்த்த் வைந்திருந்த பணத்தையும், அவர்களின் வ‌ங்கிக் க‌ண‌க்குகள் அனைத்தையும் ஐரோப்பிய‌ யூனிய‌ன் முட‌க்கியது மட்டுமல்லாமல், இலங்கை அரசு உடனடியாக தனது கட்டுபாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிளும் புலிகளை ஒடுக்கி வன்முறைக்கு கடிவாளமிடவும் வேண்டும் என்று ஆணையிட்டு த‌னது தடையில்லா ஆதரவையும் இலங்கைக்கு நல்கியது. (ஐரோப்பிய‌ யூனிய‌ன், ம‌ற்றும் பிற‌ நாடுக‌ள் த‌மிழீழ‌ விடுத‌லைப் புலிக‌ளை த‌டை செய்த‌ போது அவ‌ர்க‌ள் “போர் நிறுத்த உட‌ன்ப‌டிக்கையில்” கையெழுத்திட்டு சமதானமாக இருந்தார்க‌ள்.ச‌மாத‌ன‌ உட‌ன்ப‌டிக்கை கால‌த்தில் தான் த‌மிழீழ‌ விடுத‌லைப் புலிக‌ளை ப‌ல‌ நாடுக‌ள் த‌டை செய்த‌ன. அத‌ற்கு முந்தைய‌ போரில் த‌மிழீழ‌ விடுத‌லைப் புலிகள் அடைந்த வெற்றியே இத‌ற்குக் கார‌ணம்).போரில் “புலிக‌ள்” வெற்றிய‌டைந்திருந்த‌ போது 32நாடுக‌ள் அவ‌ர்க‌ளை ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ள் என்று முத்திரை குத்தியிருந்த‌ன‌.

தெற்காசியாவிலோ அல்ல‌து இல‌ங்கையிலோ ஒருபோதும் வாழ்ந்திராத‌ என்னால் த‌மிழீழ‌ விடுத‌லைப் புலிக‌ள் தீவிர‌வாத‌ இய‌க்கமா? இல்லையா? என‌க் கூறுவ‌து ச‌ற்று க‌டின‌மே. அவர்கள் செய்த‌ பல வன்முறைச் செய்திகளை ப‌டித்த‌ பின்ன‌ர், சிங்க‌ளப் பொது ம‌க்க‌ளை பேருந்துக‌ளிலும், தொட‌ர்வ‌ண்டிகளிலும் வைத்துக் கொன்ற‌தை வைத்து, த‌மிழீழ‌ விடுத‌லைப் புலிக‌ள் முத‌லில் மார்க்சிய‌ புர‌ட்சிக‌ர‌ இய‌க்க‌மாக‌ தோன்றி பின்ன‌ர் தீவிர‌வாத‌ இய‌க்க‌மாக மாற‌ நிர்ப‌ந்திக்க‌ப்ப‌ட்டார்க‌ள் என்று நான் புரிந்து கொள்கிறேன்.

அதே நேர‌த்தில் உல‌கிலேயே மிக‌ப்பெரிய‌ தீவிர‌வாத‌ நாடான வட‌அமெரிக்காவின் கூற்றுப்ப‌டி அத‌ன் கருத்தியலுக்கு ஒத்து வராத‌ விடுத‌லை இய‌க்க‌ங்க‌ள் எல்லாமே தீவிர‌வாத‌ இய‌க்க‌ங்க‌ள் என்றும், ச‌ட்ட‌த்திற்க்கு எதிரான‌வை என்றும் நிறுவப்ப‌டுகின்ற‌ன‌.

ம‌ற்ற‌ தீவிர‌வாத‌அரசுக‌ளான‌ கொசோவா அர‌சு போன்ற‌வை தங்களது எல்லை பாதுகாப்பு ப‌டையின் மூல‌மாக‌ போதை ம‌ருந்து, ஆட் க‌ட‌த்தலிலும் ஈடுப‌ட்டாலும் வட‌அமெரிக்கா அவ‌ர்களைத் தீவிர‌வாதி என‌க் கூறாத‌தால் அவ‌ர்க‌ள் தீவிர‌வாதிக‌ள் இல்லை என்றாகி விடுமா?. வ‌ல்ல‌ர‌சுக‌ள் த‌ங்க‌ள‌து க‌ருத்திய‌லுக்கு ஒத்துவ‌ரும் விடுதலை இய‌க்க‌ங்க‌ளை ஏற்றுக் கொள்வ‌தும், மற்ற விடுதலை இய‌க்க‌ங்களைத் த‌டை செய்வ‌தும் வரலாற்றில் தொடர்ந்துவரும் ஒஉ நகைமுரண். இது அய‌ர்லாந்து, ஸ்பெயினின் பாசுகேசு ம‌ற்றும் பாலசுதீன‌ விடுதலைப் போராட்ட‌ங்க‌ளுக்கும்  பொருந்தும்.

நேரடி போர் அல்லது இராணுவ தலையீட்டின் மூலம் இதுவரை 66 நாடுகளில் வட அமெரிக்காவின் பயங்கரவாதம் தனது மூக்கை நுழைத்து உலகத்தில் நிரந்தரமாக போர் புரிந்து கொண்டே உள்ளது. வட‌அமெரிக்கா இர‌ண்டாம் உல‌க‌ப் போருக்குப் பின் இதுவ‌ரை 159 முறை பிற‌ நாடுக‌ளின் மீது ப‌டையெடுத்துள்ள‌து(5).

நாம் க‌ண்டிப்பாக‌ த‌மிழீழ‌ விடுத‌லைப் புலிகளும், ம‌ற்ற‌ அமைப்புகளும் மேற்கொண்ட‌ வ‌ன்முறையை க‌ண்டித்தே ஆக‌ வேண்டும். அதே நேர‌த்தில் இந்த வன்முறை எவ்வாறு, எதற்காக தோன்றியது என்ற‌‌ க‌ட‌ந்த‌ கால‌ வ‌ர‌லாற்றையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். த‌மிழ் ம‌க்க‌ளின் அடிப்ப‌டை உரிமைக‌ளை நாம் ஆதரிக்க‌ வேண்டும். அவ‌ர்களின் த‌ற்போதைய‌ நிலையையும் நாம் புற‌க்க‌ணிக்க‌க் கூடாது. குறிப்பாக‌ ஏகாதிப‌த்திய‌ங்க‌ளுக்குத் துணை போகும் அர‌சு அங்கே கேட்பாரின்றி ந‌டந்து கொண்டிருக்கும் போது நாம் அங்கு வாழும் ம‌க்க‌ளை நேர்மையுடன் அணுகிப் பார்க்க‌‌ வேண்டும்.

இலங்கையின் சுத‌ந்திர‌த்திற்குப் பிற‌கான‌ வ‌ர‌லாற்றை உற்று நோக்குப‌வ‌ர்க‌ள் அர‌சின் திட்ட‌மிட்ட‌ இன‌ப்ப‌டுகொலையை சரியாக புரிந்துகொள்ள‌‌ முடியும். ஐ.நாவின்  “இன‌ப்ப‌டுகொலை” என்ற‌ சொல்லிற்கான‌ வ‌ரைய‌றையை இல‌ங்கை அர‌சு 1950 ஆம் ஆண்டு ஏற்றுக் கொண்ட‌து. மேலும் ஜெனீவா தீர்மான‌மான‌ “இன‌ப்ப‌டுகொலையைத் த‌டுத்த‌ல் ம‌ற்றும் இன‌ப்ப‌டுகொலையில் ஈடுப‌டுப‌வ‌ர்க‌ளை த‌ண்டித்த‌ல்” என்ப‌து டிச‌ம்ப‌ர் 9, 1948ல் வ‌ரைய‌றுக்க‌ப்ப‌ட்டு, ஜ‌ன‌வ‌ரி 12, 1951லிருந்து ந‌டைமுறைக்கு வந்த‌‌து(6).

பகுதி 2: இப்பொழுதுள்ள‌ வ‌ரைய‌றையின் படி கீழ்க்காணும் தவறுகளுள் ஏதேனும் ஒன்றைச் செய்தல் “இனப்படுகொலைக்கு” ஒப்பாகும். அங்கு வாழும் ஒரு தேசிய‌ இன‌த்தை முற்றிலுமாக‌வோ அல்ல‌து ப‌குதியாக‌வோ அழித்த‌ல், இன‌வெறியுட‌ன் ந‌ட‌த்துத‌ல் போன்றவையும் இவ்வரையறைக்குள் அடங்கும்‌.

அ) குறிப்பிட்ட‌ இன‌க்குழுவின் உறுப்பின‌ர்க‌ளை கொல்லுத‌ல்

ஆ) குறிப்பிட்ட‌ இன‌க்குழுவின் உறுப்பின‌ர்க‌ளுக்கு ம‌ன‌த‌ள‌விலோ அல்ல‌து உட‌ல‌ள‌விலோ தீங்கு விளைவித்த‌ல்.

இ) திட்ட‌மிட்ட‌ உட‌ல்ரீதியிலான‌ பாதிப்பை அக்குழுவிற்க்கு ஏற்ப‌டுத்துத‌ல்.

ஈ) அந்தக் குழுவில் மேலும் குழ‌ந்தைக‌ள் பிற‌க்காத‌வ‌ண்ண‌ம் ந‌ட‌வ‌டிக்கைக‌ளை மேற்கொள்ளுத‌ல்.

உ) க‌ட்டாய‌மாக‌ அந்த‌ இன‌க் குழ‌ந்தைக‌ளை வேறொரு குழுவிற்கு இட‌மாற்ற‌ம் செய்தல்.

 ஒரு இனக் குழுவை (தமிழர்களை) முற்றிலுமாக‌வோ அல்ல‌து ப‌குதியாக‌வோ அழிக்கும் நட‌வ‌டிக்கை தான் க‌ட‌ந்த‌ ஆறுப‌து ஆண்டுக‌ளாக‌ சிங்க‌ள‌ அர‌சுக‌ளும், பௌத்த‌ ம‌த‌த் த‌லைவ‌ர்க‌ளும் த‌மிழ‌ர்களுக்கு எதிராக‌ மேற்கொண்டு வருகின்றார்கள். இத‌ற்கான‌ ஆதார‌ங்க‌ளை அடுத்து வ‌ரும் ப‌குதிக‌ளில் விரிவாகக் கூறுகின்றேன். ”த‌மிழ‌ர்கள் மக்களை‌ இன‌ப்ப‌டுகொலைக்கு ஆளாக்கிய காரணத்திற்காக‌‌ இராணுவ‌த் த‌ள‌ப‌தி ச‌ர‌த் பொன்சேகா மீதும், பாதுகாப்பு செயல‌‌ர் கோத்த‌ப‌யா இராச‌ப‌க்சே மீதும் ரீகனின் அரசில் உதவி அட்ர்னி செனரலாக பணியாற்றியவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இதில் அவர்கள் மீது 1 குற்றசாட்டுகளையும் பதிவு செய்துள்ளார்.

இந்த‌ வ‌ழ‌க்கு புரூசு பெயின் மூல‌மாக‌ பிப்ர‌வ‌ரி 2009ல் க‌லிபோர்னியா மாவ‌ட்ட‌ நீதிம‌ன்ற‌த்தில் தாக்க‌ல் செய்ய‌ப்ப‌ட்ட‌து(7).

இந்த‌ வ‌ழ‌க்கு வட‌அமெரிக்காவில் ப‌திய‌ப்ப‌ட்ட‌தற்கு‌ பாதுகாப்பு செயல‌‌ர் கோத்தபயா வட‌அமெரிக்க‌ குடிம‌க‌ன் என்பதும், இராணுவ‌ த‌ள‌ப‌தி வட‌அமெரிக்காவில் குடியுரிமையை பெற்றவர் என்பதே காரணமாகும். ”3750 மக்களை சட்டத்திற்கு புறம்பாக கொன்றது, 10,000 பேருக்கு மேல் உட‌ல் ஊன‌த்தை ஏற்ப‌டுத்திய‌து, பதின்மூன்று இல‌ட்ச‌ம் ம‌க்க‌ளை நாட்டை விட்டு வெளியேற்றதற்கு கோத்தபயா தான் காரணம் என குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது. மேலும் புரூசு பெயினின் கூற்றுப்படி, இந்த‌ இடம்பெய‌ர்வு கொசொவா அரசின் இன‌ப்ப‌டுகொலை நடவடிகைக்கு பயந்துஇடம்பெய்ர்ந்த மக்களின் எண்ணிக்கையை விட‌ அதிகம்.

 கோத்த‌ப‌யா இராச‌ப‌க்சே பி.பி.சி தொலைகாட்சிக்கு வ‌ழ‌ங்கிய‌ நேர்காண‌லில்   “நீங்க‌ள் த‌மிழீழ‌ விடுதலைப் புலிக‌ளுக்கு எதிராக‌ போராட‌வில்லையெனில் நீங்க‌ளும் தீவிர‌வாதி தான், அத‌னால் உங்க‌ளையும் கொல்வோம்” எனக் கூறிய‌தையும் பெயின் த‌ன‌து வ‌ழ‌க்கில் மேற்கோள் காட்டியுள்ளார்.  தமிழ்மக்களின் சார்பாக வாதாடும் வழக்கறிஞர் இந்த தமிழ் இனப்படுகொலைக்கு மிகச்சிறந்த சாட்சி கோத்தபயா இராசபக்சேவே என்கிறார்.
ஏன் இல‌த்தின் அமெரிக்க‌ சோச‌லிச‌ நாடுக‌ள் இல‌ங்கைக்கு ஆத‌ர‌வாக‌ வாக்க‌ளித்த‌ன‌ , சில‌ கார‌ண‌ங்க‌ள்:

இல‌ங்கைக்கு ஆத‌ர‌வாகவும் த‌மிழ‌ர்க‌ளின் மீதான‌ திட்ட‌மிட்ட‌ இன‌ப்ப‌டுகொலைக்கு ஆதரவாக‌வும் வாக்க‌ளித்த கூபா உள்ளிட்ட ஆல்பாவையும் கேட்கிறேன்; தமிழர்களின் மீது திட்டமிட்டு இனப்படுகொலை செய்த இலங்கை அரசை ஏன் ஆதரித்தீர்கள்? குறைந்த‌ப‌ட்ச‌ம்  த‌ற்பொழுது உள்நாட்டிலேயே இடப்பெயர்வுக்கு ஆளாக்கப்பட்டு முகாம்க‌ளில் க‌டுமையான‌ அட‌க்குமுறைக‌ளுக்கு ந‌டுவே வாழும்  இல‌ட்ச‌க்க‌ண‌க்கான‌ த‌மிழ் ம‌க்க‌ளை ஏன் மீண்டும் இன‌வெறி சிங்க‌ள‌வ‌ரிட‌ம் கைய‌ளித்தீர்க‌ள். இந்த‌  நிலைப்பாட‌னது “எல்லா மொழி, ம‌த‌, பொருளாதார‌ நிலையிலுள்ள‌ ம‌க்க‌ளுக்கும் ச‌ம‌ உரிமை கொடுக்க‌ப்ப‌ட‌ வேண்டும்” என்ற இல‌த்தின் அமெரிக்க முற்போக்கு நாடுகளின் க‌ருத்தியலுக்கு நேரெதிரான‌து. இப்பொழுது புதிய‌தாக‌ அமைக்க‌ப்ப‌ட்ட‌ பொலிவிய அரசியலமைப்பும் , வெனிசுவேலா அரசியலமைப்பும் மேற்கூறிய‌வ‌ற்றையே வலியுறுத்துகின்ற‌ன‌. இவ்வாறு இருக்க இந்த சோச‌லிச‌ நாடுக‌ள் எவ்வாறு ஒரு இன‌வெறி, அட‌க்குமுறை அர‌சாங்க‌த்திற்கு ஆத‌ர‌வ‌ளித்தன? இதற்கு‌ சில‌ கார‌ண‌ங்க‌ள் இதோ….

அ) பிரிவினைவாத‌ம்:

 கூபா, நிக‌ர‌குவா ம‌ற்றும் பொலிவியா ஆகிய நாடுகளின் பூர்வகுடிகள் கருப்பு தோல் கொண்டவர்களென்பதும், அவகளில் பலர் வெள்ளையர்க‌ளால் அடிமையாக‌ ஆக்க‌ப்ப‌ட்டவர்கள் என்பதும்(குறிப்பாக பொலிவியாவின் பூர்வ‌குடிகள் நீண்டகாலமாக வெள்ளையர்களாலும், கலப்பினத்தவராலும் அடிமையாக நடத்தப்பட்டவர்கள்) என்பது வரலாறு சொல்லும் செய்தி, உண்மை இவ்வாறு இருக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் இந்த நாடுகளின் முற்போக்கான‌ புரட்சிகர தலைவர்கள் எப்படி சிங்க‌ள‌ இன‌வெறி அரசிற்கு கருத்தியல் ரீதியாகவும், ஆணித்தரமாகவும் ஆதரவளித்தது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு முரண். இதற்கு அவ‌ர்க‌ள் இல‌ங்கை வ‌ரலாற்றைப் ப‌டிக்காத‌தும் கூட ஒரு கார‌ணமாக‌ இருக்க‌லாம். ஆனால் இதற்கு மாறான உறுதியான‌ ஒரு கார‌ணம் இருக்கக்கூடும். இந்த‌ த‌லைவ‌ர்க‌ள் ஒரே தொட‌ர்ச்சியான‌ நில‌ப்ப‌ரப்பில் இர‌ண்டு தேச‌ங்கள் என்பதான வாதம் ஏற்றுக்கொள்ள முடியாதது. அதிலும் குறிப்பாக‌ கூபாவோ த‌ன‌து புர‌ட்சி வெற்றி பெற்ற நாள் முத‌லே ‌ஒற்றுமையை வ‌லியுறுத்தியும், பிரிவினைவாத‌த்தை எதிர்த்தும் வ‌ருகின்ற‌து. கூபாவும் ம‌ற்ற‌ புர‌ட்சிக‌ர‌ அர‌சுக‌ளும் இங்கே பல செய்திகளை புரிந்து கொள்ளத் த‌வறிவிட்டார்கள், த‌மிழ‌ர்க‌ள் ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ சிங்க‌ள‌ர்க‌ளுட‌ன் ச‌ம‌ உரிமையோடு வாழப் போராடினார்க‌ள், இதை பெரும்பாலான‌ சிங்க‌ள‌ர்கள் மார்க்சிய கொள்கைகளை தழுவியவர்கள் என்றாலும் தமிழர்களின் சம உரிமை கொள்கையைக் க‌டுமையாக‌ எதிர்த்து நின்றார்கள். எல்லா சமாதான‌க் க‌த‌வுக‌ளும் அடைபட்ட‌ பின்ன‌ரே கூபா உள்ளிட்ட‌‌ இல‌த்தின் அமெரிக்க‌ சோச‌லிச போராட்ட‌ இயக்கங்களைப் போல ஆயுதம் ஏந்தி போராடுவதே விடுதலைக்கான வழி என்று கருதி த‌மிழ‌ர்க‌ள் ஆயுதம் ஏந்தினார்க‌ள் . இல‌ங்கை அதன் பிரிவினைவாதம் தொடர்பான கொள்கையில் கூபா உள்ளிட்ட ஆல்பா‌ நாடுகளின் அரசுகள் இலங்கயை ஆதரிக்கும் நிலையை எடுத்தற்கு சீனாவின் த‌லையீடு ஒரு முக்கிய காரணமாகும். (திபெத்தில் த‌னி நாடு கோரும் பௌத்தர்களுக்கு எதிரான நிலையை எடுப்பதற்கு பிரிவினைவாதம் கூடாது என சீனா சாக்கு சொல்கின்றது. ஆனால் இலங்கையிலோ பிரிவினை கூடாது என்று இலங்கையில் வாழும் தமிம் மக்களின் தனி நாட்டு கோரிக்கையிலும் சீனா கருதிபார்ப்ப‌தால் தான்  அவற்றை “பிரிவினைவாத அச்சறுத்தல்” என்று முத்திரை இடுகின்றது. இலங்கையில் பௌத்தர்களுக்கு ஆதரவாகவும், இந்து, கிருத்துவ், இசுலாமியர்களுக்கு எதிரான் நிலைபாட்டையும் கொண்டிருக்கின்றது. வெனிசுவேலாவும், பொலிவியாவும் கூட‌ பிரிவினைவாத‌ கோரிக்கைக‌ளை த‌ங்க‌ள‌து நாட்டினுள்ளே இருந்தே கேட்டுள்ள‌ன‌ர், ஆனால் அவை பாதிக்க‌ப்ப‌ட்ட‌ ஒரு இன‌க்குழுவிடமிருந்து வந்தவை அல்ல‌, அந்த‌ கோரிக்கை ப‌ண‌க்கார‌ வெள்ளைய‌ர்க‌ளிட‌ம் இருந்துவந்தவை .இவர்கள் இம்மண்ணின் மக்கள் என்பதற்கான எந்த ஒரு சான்றும் இல்லை. இதற்கும் இலங்கைவாழ் தமிழ் மக்கள் தனி நாடு கோருவதற்கும் எவ்வித ஒற்றுமையும் இல்லை‌.

ஆ) புவிசார் அர‌சிய‌ல்:

 இலங்கையின் சிங்க‌ள‌ ஆதிக்க‌ அர‌சுக‌ளுக்கு போர்க் கருவிகளையும், பொருளாதார‌ உத‌விகளையும் ப‌ல‌ நாடுக‌ள் தந்துள்ள‌ன‌. இதில் சில‌ தங்க‌ளுக்குள்ளே பகை உறவு கொண்டவை (இந்தியா, பாகிசுதான் போல‌) உள்ளன‌. சில‌ இட‌துசாரி அர‌சுக‌ளும், அமைப்புக‌ளும் “ந‌ம் எதிரியின் எதிரி ந‌ம‌க்கு ந‌ண்பன்” என்ற‌ கோட்பாட்டில் இய‌ங்குகின்றன. இந்த அடிபடையில் தான் கம்யூனிச புரட்சிகர நாடுகள் சீனா, ஈரான் போன்ற சர்வாதிகார அரசுகளை அணுகுகின்றன. அமெரிக்கா, ஐரோப்பியா, க‌ன‌டா, ஆசுத்திரேலியா, ச‌ப்பான் போன்ற‌ ஏகாதிப‌த்திய‌ நாடுக‌ள் இல‌ங்கையை எதிர்ப்பதாக‌ த‌வறாக புரிந்துகொண்டு இலங்கையை ஆதரிக்கின்றன. சீனா ம‌ற்றும் ஈரான் த‌ங்க‌ளின் புவி சார் அர‌சிய‌லுக்காவும், வ‌ர்த்தக‌ ந‌ல‌ன்க‌ளுக்காகவும் ம‌ட்டுமே சில‌ நாடுக‌ளில் இய‌ங்குகின்ற‌ன‌. இது இல‌ங்கை மட்டுமல்ல‌ கூபா உள்ளிட்ட ஆல்பா‌ நாடுகளினின் கொள்கைக்கும் இது பொருந்தும்.ந‌ல்ல‌வேளை த‌ற்போது வ‌ட‌ அமெரிக்கா அதிப‌ரோ அல்ல‌து இராணுவ‌ த‌ள‌ப‌தியோ “குரைத்தால்” அத‌ற்கு ஏற்ப‌ தாள‌ம் போடுவ‌தை இல‌த்தின் அமெரிக்க‌ அரசுக‌ள் நிறுட்தி விட்ட‌ன‌. அதும‌ட்டும‌ல்ல‌ அவை த‌ற்போது பிராந்திய‌ கூட்ட‌மைப்புக‌ளை ஏற்ப‌டுத்துவ‌திலும், முன்னெப்போதும் இல்லாத‌ அள‌விற்கு புதிய நிதி நிறுவ‌ன‌ங்க‌ளிட‌ம் இருந்து அந்நிய‌ முத‌லீட்டை பெறுவ‌திலும் ஆர்வ‌ம் காட்டி வ‌ருகின்ற‌ன‌.

சீனாவும், ஈரானும் எந்த‌ வித‌ கேள்வியுமின்றி த‌ங்க‌ள‌து முழு ஆத‌ர‌வை இலங்கைக்கு வ‌ழ‌ங்கி த‌மிழ‌ர்க‌ளின் மேல் க‌டுமையான‌ அட‌க்குமுறையை தொட‌ர்ந்து மேற்கொள்ள‌ உத‌வியதைப் போல‌வே ப‌ல‌ இட‌துசாரி அர‌சுக‌ளும் புர‌ட்சிக‌ர‌ த‌லைமை உள்ள‌ நாடுக‌ளும் தங்க‌ள‌து ஆத‌ர‌வை இல‌ங்கைக்கு வ‌ழ‌ங்கின‌. இலங்கையின் ம‌னித‌ உரிமை மீற‌ல்க‌ளை வட‌அமெரிக்கா அல்ல‌து ஐரோப்பா போன்ற நாடுகள் பெயருக்காக எழுப்பும் கேள்விகளை தவறாக் புரிந்து கொண்டு, இந்த‌ இட‌துசாரி அர‌சுக‌ள் வ‌ழ‌மை போல வட‌அமெரிக்காவுக்கு / ஐரோப்பாவுக்கு எதிர‌ணியில் சேர்ந்து விட்ட‌ன‌.

 சீனா இப்பொழுது ஒரு சோச‌லிச‌ நாடு அல்ல‌. அத‌ன் பொருளாதார‌ம் அர‌சு ஆத‌ர‌வுள்ள‌ த‌னியார் நிறுவ‌ன‌ங்களைச் சார்ந்துள்ளது. தொழிலாள‌ர்க‌ளை க‌ச‌க்கிப் பிழிவ‌தும் அங்கு  ந‌டைபெற்று வ‌ருகின்ற‌து. தொழிற்ச‌ங்க‌ பாதுகாப்புக‌ள் கிடையாது, நீண்ட வேலை நேர‌ங்கள், குறைந்த கூலி, குழந்தை தொழிலாளர் என்பது மட்டுமின்றி வேலைப் பாதுகாப்பும் அங்கு கிடையாது.நிலையான‌ தேசிய‌, ச‌ர்வ‌தேசிய‌ கொள்கைக‌ள் கிடையாது. உழைக்கும் ம‌க்க‌ளுக்கு அடிப்படைக் க‌ல்வியோ, மருத்துவ‌மோ முத‌லாளிக‌ள் கேட்கும் தொகையை செலுத்தாம‌ல் அங்கு கிடைப்ப‌தில்லை. மேலும் ம‌ற்ற‌ ஐரோப்பிய‌ ஏகாதிப‌த்திய நாடுக‌ளில் வேலை செய்யும் தொழிலாள‌ர்க‌ளின் நிலை சீன‌த் தொழிலாள‌ர்க‌ளின் நிலையை விட‌ ந‌ன்றாக‌வே உள்ளது. கோடீசுவ‌ர‌ர்க‌ளே க‌ம்யூனிசக் க‌ட்சி என்ற‌ழைக்க‌ப்படும் க‌ட்சியின் உய‌ர் ப‌தவிக‌ளில் உள்ள‌ன‌ர். இவ‌ர்க‌ளே தொழிலாள‌ர்க‌ளின் எண்ணிக்கையையும், அவ‌ர்க‌ளுக்கான ஊதியங்கள்,உரிமைக‌ள் போன்ற‌வ‌ற்றை தீர்மானிப்ப‌வ‌ர்க‌ளாக‌ உள்ள‌ன‌ர். சீனா இப்பொழுது ப‌ழைய, குரூரமான‌ முத‌லாளித்துவ‌ பொருளாதார‌த்தை பின்ப‌ற்றுகின்ற‌து. சீனா, வட‌அமெரிக்க‌ நிறுவ‌ன‌ங்க‌ளில் 8 விழுக்காடு முத‌லீடு செய்துள்ள‌து. இப்பொழுது வட‌அமெரிக்காவின் ச‌ந்தைப் பொருளாத‌ர‌த்தையும், ஏகாதிபத்தியத்திற்கான‌ போர்களையும் சார்ந்தே சீனாவின் பொருளாதாரம் உள்ள‌து.

 ஈரான் இப்பொழுது ம‌த அடிப்படைவாதிக‌ளால் ஆள‌ப்ப‌டும் முத‌லாளித்துவ‌ பொருளாதார‌த்தைக் கொண்ட‌ நாடு. சீனாவைப் போல‌வே இங்கும் உழைக்கும் வ‌ர்க்கத்தினர் அதிகார‌ம‌ற்ற‌வ‌ர்க‌ளாக‌வே உள்ள‌ன‌ர். ஈரானும், வட‌அமெரிக்க‌ ஏகாதிப‌த்திய‌மும் போர் ப‌ங்காளிகள். ஈராக்கிற்கு எதிரான வட‌அமெரிக்காவின் போரில் ஈரான் இராணுவ‌ம் பல்லாயிரக்கணக்கான‌ அப்பாவி ஈராக்கிய‌ர்க‌ள் மீது க‌டுமையான‌ அட‌க்குமுறையையும், வ‌ன்முறையையும் ஏவியுள்ள‌து. வட‌அமெரிக்க‌ ஆதிக்க‌ இசுலாமிய‌ இன கூட்டமைப்பை ஈரான் ஆத‌ரிக்கின்ற‌து.

இல‌ங்கை அர‌சை ஆத‌ரிக்கும் வ‌ள‌ரும் நாடுக‌ள் தங்க‌ள் பொருளாதார‌ ந‌ல‌னைக் க‌ருத்தில் கொண்டு, த‌மிழ் ம‌க்க‌ளுக்கு எதிராக‌ செய‌ல்ப‌டுகின்ற‌னவா? சீனாவும், ஈரானும் வ‌ளரும் நாடுக‌ளுக்கு தேவையான‌ மூல‌த‌ன‌த்தையும், தொழில்நுட்ப‌த்தையும் த‌ந்து உத‌வுவ‌தாலேயே அந்நாடுக‌ளின் த‌வ‌றான‌ நிலைப்பாடுக‌ள் கேள்விக்குள்ளாக்கப் ப‌டுவ‌தில்லையா? அவ்வாறு இருப்பின் வ‌ள‌ரும் நாடுக‌ளின் இந்நிலைப்பாடு சோச‌லிச‌ க‌ருத்திய‌லுக்கும், ம‌னித‌நேய‌க் கோட்பாடுக‌ளுக்கும் முர‌ணான‌து. அற‌நெறிக‌ளுக்கு எதிரான‌து. அர‌சிய‌ல் ரீதியாக‌ அடிப‌ணியாம‌ல் வ‌ள‌ரும் நாடுக‌ள் வ‌ள‌ர்ந்த‌ நாடுக‌ளுட‌ன் வ‌ர்த்த‌க‌ உறவைப் பேண‌ முடியாதா?

ம‌ற்றொரு பிர‌ச்ச‌னை ம‌த‌ச்சார்பின்மை. ஆல்பா நாடுக‌ளும் உண்மையில் சோச‌லிச‌த்தை நோக்கி செல்லும் அர‌சுக‌ளும் ம‌த‌வாத‌த்தை அடிப்ப‌டையாகக் கொண்ட‌தாக‌ இல்லை; இருக்க‌வும் கூடாது. ஒரு ம‌தத்தை, அதுவும் ஒரேயொரு ம‌த்த‌தை ம‌ட்டும் தேசிய‌ ம‌த‌மாக‌வும், அர‌சின் ம‌த‌மாக‌வும் அறிவித்துள்ள‌ இல‌ங்கை அர‌சை ம‌த‌ச்சார்ப‌ற்ற‌ அர‌சுக‌ளும், அமைப்புக‌ளும் எவ்வாறு ‘ச‌ன‌நாய‌க‌ சோச‌லிச‌’ அர‌சாக‌க் க‌ருத‌ முடியும்? ம‌த‌ச்சார்பின்மை என்ற‌ அடிப்ப‌டையில் மட்டும் தான் அனைவ‌ரையும் ஒரே தளத்தில் ஒன்றிணைக்க‌ முடியும்.

முடிவுரை:

ப‌ல ஆண்டுக‌ளாக‌வே த‌மிழ் நாட்டைச் சேர்ந்த முற்போக்கு த‌மிழ் மக்கள் கூபாவையும் ஆல்பா கூட்டமைப்பின் உருவாக்கத்தையும் ஆத‌ரித்தே வ‌ந்துள்ள‌ன‌ர். இல‌த்தீன் அமெரிக்க‌ ந‌ட்புறவுக் க‌ழ‌க‌ங்க‌ள் வாயிலாக‌ ப‌ல‌ நிகழ்ச்சிக‌ளை ந‌ட‌த்தி உள்ளார்கள். இல‌த்தீன் அமெரிக்க‌ எழுத்த‌ளார்க‌ளின் புத்த‌க‌ங்க‌ளையும், “பித‌ல் காஸ்த்ரோ, சே குவாராவின் புத்த‌க‌ங்க‌ளையும் த‌மிழில் வெளியிட்டுள்ளன‌ர். கீழ்க்காணும் கடிதத்தை எழுதியவரான‌ தோழர். அம‌ரந்த்தா (விசாலாட்சி) க‌ட‌ந்த‌ இருப‌த்தைந்து வ‌ருட‌ங்களுக்கும் மேலாக‌ இல‌த்தீன் அமெரிக்கப் புத்த‌க‌ங்க‌ளை தானே த‌மிழில் மொழி பெய‌ர்த்தும், சில நூல்களை எழுதியும் இருக்கின்றார்.
 நாங்க‌ள் தோழ‌ர்.பித‌லின் 80ஆவ‌து பிற‌ந்த‌நாளை , கூபா ப‌ல்வேறு துறைக‌ளில் செய்த‌ சாத‌னைக‌ளை எட்டு புத்த‌கங்களாக‌த் தொகுத்து வெளியிட்டு கொண்டாடினோம். மேலும் கூபப் புர‌ட்சியின் 50ஆவ‌து ஆண்டு விழாவைக் கொண்டாடுவ‌த‌ற்கான‌ ஆய‌த்தப் ப‌ணிக‌ளில் ஈடுப‌ட்டுள்ளோம்.

ஆனால் ஐ.நா.ம‌னித‌ உரிமைக் குழுவில் இலங்கைக்கு ஆத‌ர‌வாக‌ நீங்க‌ள் ந‌ட‌ந்த முறை எங்க‌ளை வாய் பேச‌ முடியாத‌ ஊமையின் நிலைக்கு த‌ள்ளிவிட்ட‌து. இருபத்தியொராம் நூற்றாண்டில் சோச‌லிச‌த்தை நிறுவும் என‌ எந்த‌ இல‌த்தீன் அமெரிக்க‌ நாடுக‌ளை ந‌ம்பினோமோ, அவை செய்த‌ இச்செய‌லால் ந‌ம்பிக்கையிழ‌ந்து ஊமையாகி விட்டோம்.

ஏன் இந்த‌ நாடுக‌ளெல்லாம் இல‌ங்கையின் பூர்வகுடிக‌ளான‌ த‌மிழ‌ர்க‌ளை அந்த‌ ம‌ண்ணை விட்டுத் துடைத்து எறிவ‌தில் இவ்வ‌ள‌வு ஆர்வ‌ம் காட்டுகின்ற‌ன? இந்த‌ சோச‌லிச‌ நாடுக‌ள் எந்த‌ த‌க‌வ‌ல்க‌ளின் அடிப்ப‌டையில் இல‌ங்கையின் இனவெறி, இன‌ப்ப‌டுகொலையை ஐ.நாவில் ஆத‌ரித்த‌ன?  “இவ்வுலகின் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உயிர் நீத்த சர்வதேசியவாதியான மாவீரன் சேகுவாராவின் மறைவு ஏற்படுத்திய வெற்றிடம் முன்னெப்போதைக் காட்டிலும் இக்கணத்தில் எம்மைத் திணறச் செய்கிறது”. என்று அவர் ஆல்பா நாடுக‌ளை கேள்வி கேட்கின்றார்.

இவருடனும், www.greenleft.org.au. இணைய தளத்தில் தங்களது கருத்துகளை வெளியிடும் ஆசுத்திரேலிய சனநாயக சோசலிச அமைப்பான சோசலிச கூட்டணியின் கருத்துடனும் நான் உடன் படுகின்றேன்.           

 நாம் கூபா, வெனிசுவேலா, பொலிவியா போன்ற‌ புர‌ட்சிக‌ர‌ நாடுக‌ளிட‌ம் த‌மிழ‌ர்க‌ளின் தேசிய உரிமைகளைக் குறித்து எடுத்துக் கூறி, இன‌வெறி இலங்கையுட‌னான‌ ந‌ட்பை க‌ளைய‌ச் செய்ய‌ வேண்டும். ஒடுக்குமுறை அரசுகளின் ‘ஏகாதிபத்திய எதிர்ப்பு’ என்ற போலியான முழக்கத்தை நம்பி, மூன்றாம் உலக நாடுகளிலுள்ள அசலான தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டங்களை எந்தக் காரணத்திற்க்காக ஆதரிக்க தவறினாலும், காலப்போக்கில் அது புரட்சிகர அரசுகளுக்கு அபாயகரமான விளைவுகளையே ஏற்படுத்தும் (8).

குறிப்புக‌ள்:
உத‌விய‌ நூல்க‌ள்
1. Fidel told writer, photographer Lee Lockwood: ” Castro’s Cuba, Cuba’s Fidel”, Macmillan .N.Y.1967
2. “Socialism and men” Marcha,Uruguay, March 12, 1965
3. ” Hugo chavez praises president Rajapaksa’s Leadership in defeating LTTE” Sri lanka Daily news, September 4,2009
In this piece, published by a por government newspaper, their is not one question by hugo chavez, who speaks with Rajapakse when they were in Lybia. the piece paraphrases what the anonymous writer asserts Chavez said-an example : Chavez apparently said that the defeat of LTTE Terrorism ” is a glowing example to other countries beset with the same problem.”words of the writer. Cjavez allgedely praised Rajapakse for His leadership.
4.http://www2.ohchr.org/english/bodies/hrcouncil/docs/11special session/S-11-1-Final-E.doc http://portal.ohchr.org/portal/HRCExtranet/11th specialsession: http://www.earthtimes.org/articles/show/270638,un-resolution-commends-srilanka-on-human-wrights– summary.html.
5. http://www.ronridenour.com/articles/2006/0815-rr.htm
6. http://www.preventgenocide.org/law/convention/text.htm
Although US Signed the 1948 convention, it did not accede to it till have november 1988. as of 2008, 140 nation states have acceded.
7.http://www.rediff.com/cms/print.jsp?docpath=//news/2009/feb/10genocide-case-filed-against-lankan-authorities-in-us.htm
8. http://www.dsp.org.au/node/22

மூலப்பதிவு :  http://www.ronridenour.com/articles/2009/1114-rr.htm

Advertisements
%d bloggers like this: