ஏப்ரல், 2010 க்கான தொகுப்பு

பற்றி எரிந்த தலித் குடும்பங்கள்


பற்றி எரிந்த தலித் குடும்பங்கள்

 ஹ‌ரியானா மாநிலத்தில் உள்ள கிசார் மாவட்டத்தில் உள்ளது மிர்சாபூர் கிராமம். இங்கு வாழும் ஜாட் என்ற சமூகத்தை சேர்ந்த இராசேந்தர் என்பவர் வால்மீகி (தாழ்த்தப்பட்ட) சமூகத்தை சேர்ந்த யோகேசு என்பவரை கடந்த புதன் அன்று திட்டினார். இந்த பிரச்சனை பஞ்சாயத்திடம் செல்ல வால்மீகி சமூகத்தை சேர்ந்த வீர் பன் மற்றும் கர்ன்பால் என்ற இருவரும் சாட்சியம் சொல்ல சென்றனர் ஆனால் இவர்கள் இருவரையும் பெரும்பான்மை ஜாட் சமூகத்தை சேர்ந்தவர்கள் பஞ்சாயத்தில் வைத்து அடித்து விரட்டினர். இதனால் கோபமடைந்த வால்மீகி சமூகத்தை சேர்ந்தவர்கள் ஜாட் சமூகத்தை சேர்ந்த பிரச்சனைக்கு காரணமான இளைஞர்களை அடித்துள்ளனர்.இந்த செய்தி கேட்ட ஜாட் சமூகத்தினர் உடனே அந்த கிராமத்தில் இருந்த இருபத்தைந்திற்க்கும் மேலான வால்மீகி சமூகத்தை சேர்ந்தவர்களின் வீடுகளை கொளுத்தினார்கள். இதில் பதினெட்டு வயதான சிறப்பு உடல்நலம் கொண்ட ஒரு பெண்ணும், அவரது சகோதரரும் (சுமன்), அவரது தந்தையும்(தாரா சந்த்) உயிருடன் கொளுத்தப்பட்டார்கள். இதில் மூவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.இதனை தொடர்ந்து வால்மீகி சமூகத்தை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் இறங்கியதால் இருபத்தைந்து பேர் இதுவரை காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.அந்த பகுதி தாசில்தார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் வாழ்கிறது என்றார் காந்தி , இந்தியாவின் ஆன்மா மட்டுமல்ல தீண்டாமையும், சாதி வன்முறைகளும் கிராமங்களில் வாழ்கின்றது. ஒரு வேளை இதை தான் அந்த இராம இராச்சிய பிரியர் இந்தியாவின் ஆன்மா என்றாரோ?. நக்சல் பிரச்சனைகளுக்கு தீர்வாக பஞ்சாயத்து இராச்சியத்தை முன் வைக்க வேண்டுமென்று தெகல்கா வார இதழுக்கான நேர்காணலில் கூறினார் மணி சங்கர். ஆனால் பெரும்பான்மையான சமூகம் சிறுபான்மை சமூகத்தை கொடுமை படுத்தும் கிராமங்களில் அதிகாரத்தை அவர்கள் கைகளில் கொடுப்பது கொலைகாரன் கையில் கத்தியை கொடுப்பதைவிட மிக மோசமானது.இதனால் தான் அன்றைய சட்ட வரைவு குழு தலைவர் டாக்டர்.அம்பேத்கர் பஞ்சாயத்துகளுக்கு மிகவும் குறைந்த பட்ச அதிகாரங்களையே வழங்கினார்.

 நன்றி :டைம்சு ஆஃப் இந்தியா

Advertisements

ஐ.நாவின் மின்னணு கழிவுகளுக்கான அறிக்கையில் இந்தியாவின் தற்போதைய நிலை:தமிழாக்கம். நற்றமிழன்.


 ஐ.நா வெளியிட்ட மின்னணு கழிவுகளுக்கான இந்த வருட அறிக்கையில் உள்ள இந்தியாவின் தற்போதைய நிலைப்பாட்டை கட்டுரை ஆசிரியரான டேரில் டி’மாண்டி இங்கே எடுத்தாள்கின்றார் . டேரில் டி’மாண்டி “டைம்சு ஆஃப் இந்தியா” நாளிதழின் மும்பை ஆசிரியராவர். மேலும் இவர் இந்திய சூழியல் பத்திரிகையாளர் அமைப்பின் தலைவரும், சர்வதேச சூழியல் பத்திரிகையாளர் அமைப்பை தோற்றுவித்தவருமாவார்.
ஐ.நாவின் மின்னணு கழிவுகளுக்கான அறிக்கையில் இந்தியாவின் தற்போதைய நிலை:
31 மார்ச்சு 2010

  இந்தியா போன்ற‌ நாடுக‌ளில் அதி ந‌வீன‌ தொட‌ர்பு ம‌ற்றும் மின்னணு க‌ருவிக‌ளை பெரும்பான்மையானோர் மிக‌ ஆர்வ‌மாக‌ வ‌ர‌வேற்கின்ற‌ன‌ர். குறிப்பாக‌ அதி ந‌வீன‌ அலைபேசிக‌ள், அதி ந‌வீன‌ க‌ணிணிக‌ள், அதி ந‌வீன‌ குளிர்சாத‌ன‌ பெட்டிக‌ள் போன்ற‌ பொருட்க‌ளை வ‌ர‌வேற்று உப‌யோக‌ப்ப‌டுத்தி வ‌ரும் அதே நேர‌த்தில் ப‌ழைய‌ பொருட்க‌ளான‌ மின்ன‌ணு க‌ழிவுக‌ளை அப்புற‌ப்ப‌டுத்துவ‌தில் சிறித‌ள‌வேனும் க‌வ‌ன‌ம் செலுத்த‌ வேண்டும். ஒருவ‌ர் புதிய‌தாக‌ ஒரு அலைபேசியையோ (அ) க‌ணிணியையோ வாங்கினால் த‌ன்னிட‌ம் உள்ள‌ ப‌ழைய‌ பொருளை வெறும‌னே எங்காவ‌து வைத்து விடுகின்றார்க‌ள். இது ந‌ம‌து பார்வைக்கு த‌ட்டுப‌டாம‌ல் போனாலும் இதுவும் சூழிய‌லை பாதிக்கும் கார‌ணியாகும்.

  பிப்ர‌வ‌ரி 24லிருந்து 26வ‌ரை “பாலி”யில் ந‌டைபெற்ற‌ ஐநாவின் சூழிய‌ல் திட்ட‌க்குழு கூட்டம் இந்த வருடத்திற்கான மின்னணு கழிவுகள் தொடர்பான அறிக்கையை   “மின்ன‌ணு க‌ழிவுக‌ளின் ம‌று சுழ‌ற்சியும், வாழ்வாதார‌மும்” என்ற‌ த‌லைப்பின் கீழ் வெளியிட்டுள்ள‌ன‌ர். மின்ன‌ணு தொழில‌க‌ங்க‌ளிருந்தோ, வீடுக‌ளிலிருந்தோ வெளியேற்ற‌ப்ப‌டும் உப‌யோக‌ப்படாத‌ மின்ன‌ணு பொருட்கள், ‘மின்ன‌ணு க‌ழிவுகள்’ என‌ அழைக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. தொழில் புர‌ட்சி ந‌டைபெற்ற‌த‌ற்கு பின்னான‌ த‌ற்போத‌ய‌ கால‌ க‌ட்ட‌த்தில் இது போன்ற‌ பொருட்க‌ள் இல்லாம‌ல் இந்த‌ ந‌வீன‌ கால‌ வாழ்க்கை நிறைவு பெறுவ‌தில்லை. இந்த‌ க‌ருவிக‌ள் ம‌ருத்துவ‌ம், க‌ல்வி, உண‌வு பொருட்க‌ளை பாதுகாத்த‌ல் ம‌ற்றும் வ‌ழ‌ங்குத‌ல், தொலைத் தொட‌ர்பு துறை, பாதுகாப்பு, சூழிய‌ல் பாதுகாப்பு ம‌ற்றும் க‌லாச்சார‌ம் என‌ ப‌ல‌ இட‌ங்க‌ளில் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டுகின்ற‌ன‌. இதில் வீடுக‌ளில் பய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டும் குளிர்சாத‌ன‌ பெட்டி, துணி துவைக்கும் இய‌ந்திர‌ம், அலை பேசி, க‌ணிணி, மின்ன‌ணு அச்சு இய‌ந்திர‌ங்க‌ள், பொம்மை,தொலைகாட்சி போன்ற‌ பொருட்க‌ளும் அட‌ங்கும்.

 இந்த‌ அறிக்கை ப‌தினொரு வ‌ள‌ரும் நாடுக‌ளில் கிடைத்த‌ த‌ர‌வுக‌ளை வைத்து நிக‌ழ் ம‌ற்றும் எதிர்கால‌ மின்ன‌ணு க‌ழிவை க‌ணித்துள்ள‌து. இதில் உப‌யோக‌ப்ப‌டுத்த‌ப்படாத‌ ப‌ழைய‌ க‌ணிணிக‌ள், ம‌டிக் க‌ணிணிக‌ள்,அலை பேசி, க‌ணிணி, மின்ன‌ணு அச்சு இய‌ந்திர‌ங்க‌ள், பொம்மை,தொலைகாட்சி அதி ந‌வீன‌ ஒளி வாங்கி ம‌ற்றும், இசைக் க‌ருவிக‌ள் க‌ண‌க்கிலெடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌. இந்தியா ம‌ற்றும் சீனா போன்ற‌ நாடுக‌ளில் இந்த‌ பொருட்க‌ளின் விற்ப‌னை மிக‌வும் அதிரித்து வ‌ருவ‌தால் அடுத்து வ‌ரும் ஆண்டுக‌ளில் இந்த‌ மின்ன‌ணு க‌ழிவுக‌ளின் அள‌வும் ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ரிக்கும்.

 இந்த‌ ஆய்வு குறிப்பாக வ‌ள‌ரும் நாடுக‌ளின் மீது ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ ஒன்றாகும் இத‌ற்கு கார‌ண‌ம் என்ன‌ வென்றால் வ‌ள‌ர்ந்த‌ நாடுக‌ளில் மின்ன‌ணு க‌ழிவுக‌ள் வெளியேற்றுத‌ல் ம‌ற்றும் ம‌று சுழ‌ற்சி செய்த‌ல் தொட‌ர்பாக‌ ப‌ல‌ விதிக‌ள் ந‌டைமுறையில் உள்ள‌ன‌. வ‌ள‌ரும் ம‌ற்றும் ச‌ந்தை அள‌வு விரிவ‌டைந்து வ‌ரும் நாடுகளில் இந்த‌ பொருட்க‌ளுக்கான‌ ச‌ந்தை விரிவ‌டைந்து வ‌ருவ‌தும் ஒரு கார‌ண‌மாகும். ஐநாவின் சூழிய‌ல் திட்ட‌க்குழு வ‌ள‌ரும் நாடுக‌ளில் மின்ன‌ணு க‌ழிவுக‌ள் வெளியேற்றுத‌ல் ம‌ற்றும் ம‌று சுழ‌ற்சி செய்த‌லுக்கான‌ விதிமுறைக‌ள் உண்டா என்றும், அந்த‌ நாட்டு அர‌சுக‌ள் சிற‌ப்பு துறைக‌ள் அமைத்து ம‌றுசுழ‌ற்சியில் புதிய‌ க‌ண்டுபிடிப்புக‌ள் மேற்கொள்கின்ற‌ன‌வா என்ப‌தையும் இந்த‌ ஆய்வில் மேற்கொண்ட‌து.

 2006ல் இந்தியா 50,000 இல‌ட்ச‌ம் க‌ணிணிக‌ளை கொண்டிருந்த‌து. இந்த‌ எண்ணிக்கை ஆண்டிற்க்கு 25 விழுக்காடு அதிக‌ரிக்கின்ற‌து. 2020ல் ப‌ழைய‌ க‌ணிணிக‌ள் மூல‌ம் தோன்றும் மின்ன‌ணு க‌ழிவுக‌ள் 2007ல் இருந்த‌தை விட‌ 500 விழுக்காடு அதிக‌ரிக்கும் என‌ க‌ணிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. அலைபேசிக‌ள் மூல‌ம் தோன்றும் மின்ன‌ணு க‌ழிவுக‌ள் 2007ல் இருந்த‌தை விட‌ 18 ம‌ட‌ங்கு அதிக‌ரிக்கும், 1.5லிருந்து 2 ம‌ட‌ங்கு வ‌ரை தொலைக்காட்சி க‌ழிவும், இர‌ண்டு (அ) மூன்று ம‌ட‌ங்கு குளிர்சாத‌ன‌ பெட்டி க‌ழிவுக‌ளும் 2020ல் அதிக‌ரிக்கும் என‌ க‌ணிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

 இந்த‌ அறிக்கை வெளியீட்டின் போது  ஐநாவின் சூழிய‌ல் திட்ட‌க்குழுவின் நிர்வாக‌ இய‌க்குன‌ர் ம‌ற்றும் ஐநாவின் த‌லைமைச் செய‌ல‌க‌ நிர்வாவ‌ குழுவில் ஒருவ‌ருமான‌ அச்சீம் ச்டீன‌ர் இவ்வாறு கூறுகின்றார் “சீனா ம‌ட்டும் இந்த‌ மின்ன‌ணு க‌ழிவு ச‌வாலை த‌னியாக‌ ச‌ந்திக்க‌வில்லை இந்தியா, பிரேசில், மெக்சிகோ ம‌ற்றும் ப‌ல‌ நாடுகளும் சந்திக்கின்றன. மின்ன‌ணு க‌ழிவுக‌ள் மூல‌ம் ஏற்ப‌டும் சூழிய‌ல் விளைவுக‌ள் ம‌ற்றும் உட‌ல்ந‌ல‌ பிர‌ச்ச‌னைக‌ள் , மின்ன‌ணு க‌ழிவுக‌ளை ம‌று சுழ‌ற்சிக்கு உட்ப‌டுத்தும் அங்கீக‌ரிக்க‌ப்ப‌டாத‌ நிறுவ‌ன‌ங்க‌ளின் மூல‌ம் ஏற்ப‌டும் உட‌ல் ந‌ல‌ பிர‌ச்ச‌னைக‌ளை குறைப்ப‌த‌ற்கு ஒரு வ‌ழியாக‌ இந்த‌ ம‌று சுழ‌ற்சியை அங்கீக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌ நிறுவ‌ன‌ங்க‌ளின் மூல‌மாக‌ செய்ய‌ வேண்டும். மின்ன‌ணு க‌ழிவுக‌ளின் ம‌றுசுழ‌ற்சி விகிதாச்சார‌த்தை அதிக‌ரித்து ந‌ல்ல‌ வேலை வாய்ப்பையும், ப‌சுமைக் குடில் வாயு உமிழ் அள‌வை குறைக்க‌வும் ம‌ற்றும் மிக‌ அரிய‌ த‌னிம‌ங்க‌ளான‌ த‌ங்க‌ம், வெள்ளி, பல்லாடிய‌ம், தாமிர‌ம் ம‌ற்றும் இந்திய‌ம் போன்ற‌ பொருட்க‌ளை திரும்ப‌ பெற‌வும் முடியும். அத‌ற்காக‌ இந்த‌ நாடுக‌ள் மின்ன‌ணு க‌ழிவு ச‌வாலை மின்ன‌ணு ச‌ந்த‌ர்ப்ப‌மாக‌ மாற்ற‌ ந‌ல்ல‌ திட்ட‌மிடுத‌லும் அதை உட‌னே செய‌ல்ப‌டுத்த‌லும் மிக‌ அவ‌சிய‌மான‌ ஒன்றாகும்.

 உல‌க‌ள‌வில் மின்ன‌ணு க‌ழிவுக‌ளின் அள‌வு 400 இல‌ட்ச‌ம் க‌ல்லெடைக‌ள் (க‌ல்லெடை = 1000 கிலோ) ஒவ்வொரு வ‌ருட‌மும் அதிக‌ரிக்கின்ற‌து. அலைபேசி ம‌ற்றும் க‌ணிணிக‌ளை உற்ப‌த்தி செய்யும் நிறுவ‌ன‌ங்க‌ள் உல‌க‌ள‌வில் சுர‌ங்க‌ங்க‌ளிருந்து எடுக்க‌ப‌டும் த‌ங்க‌ம் ம‌ற்றும் வெள்ளியில் மூன்று விழுக்காடை உப‌யோக‌ப்ப‌டுத்துகின்ற‌ன‌. இதில் 13 விழுக்காடு ப‌ல்லாடிய‌ம் ம‌ற்றும் 15 விழுக்காடு கோபால்ட்டும் அட‌ங்கும். ந‌வீன‌ மின்ன‌ணு பொருட்க‌ள் கிட்ட‌த‌ட்ட‌ 60 வேறு த‌னிம‌ங்க‌ளை கொண்டுள்ள‌ன‌. இதில் ப‌ல‌ அரிதான‌வை. சில‌ ஆப‌த்தான‌வை ம‌ற்றும் சில‌ இரு குண‌ந‌ல‌ன்களையும் கொண்ட‌வை.
மின் ம‌ற்றும் மின்ன‌ணு பொருட்க‌ளில் உப‌யோக‌ப்ப‌டுத்த‌ப‌டும் தாமிர‌ம் ம‌ற்றும் ப‌ல‌ அரிய‌ த‌னிம‌ங்க‌ளை எடுப்ப‌த‌ற்காக‌ ந‌டைபெறும் சுர‌ங்க‌ வேலைக‌ளில் ம‌ட்டும் 230 இல‌ட்ச‌ம் க‌ல்லெடை கார்ப‌னை உமிழ்கின்ற‌ன‌. இது உல‌க‌ மொத்த‌ கார்ப‌ன் உமிழ்வில் 0.1 விழுக்காடு அள‌வாகும். (இதில் இரும்பு, அலுமினிய‌ம் (அ) நிக்க‌ல் போன்ற‌ பொருட்க‌ளின் உற்ப‌த்தி மூல‌ம் வெளியிட‌ப்ப‌டும் கார்ப‌ன் உமிழ்வின் அள‌வு சேர்க்க‌ப்ப‌ட‌வில்லை)

  அமெரிக்க‌ நாடே இந்த‌ மின்ன‌ணு க‌ழிவில் மிக‌ முக்கிய‌ ப‌ங்கு வ‌கிக்கின்ற‌து. 2008ல் ம‌ட்டும் 15 கோடி அலைபேசிக‌ள் விற்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌. இர‌ண்டில் ஒருவ‌ர் அங்கு அலைபேசி வாங்கியுள்ள‌தாக‌ இதை எண்ண‌லாம். இது 2003ல் 9 கோடி என்ற அள‌வில் இருந்த‌து. உல‌க‌ள‌வில் 2007ல் 100 கோடி அலைபேசிக‌ள் விற்றுள்ள‌ன‌. ஆறில் ஒருவ‌ர்  அலைபேசி வாங்கியுள்ள‌தாக‌ இதை எண்ண‌லாம். இந்த‌ அள‌வு 2006ல் 90 கோடி என்ற‌ அள‌விலிருந்த‌து.

புதிய‌ தொழில்நுட்ப‌ங்க‌ள்:
 
 ஐநாவின் த‌லைமைச் செய‌ல‌க‌ நிர்வாக‌ குழுவில் ஒருவ‌ரும் ஐநா ப‌ல்க‌லை க‌ழ‌க‌ நிர்வாகியுமான‌ கொன்ராட் ஓசுட்ட‌ர் வால்ட‌ரின் கூற்றுப்ப‌டி “ஒரு ம‌னித‌ன் குப்பை என‌ க‌ருதும் ஒரு பொருள் இன்னொரு ம‌னித‌னுக்கு மூல‌ப் பொருளாக‌லாம்”. மின்ன‌ணு க‌ழிவு ச‌வாலை ச‌ரியாக‌ எதிர்கொள்வ‌த‌ன் மூல‌ம் ஒரு ப‌சுமை பொருளாதார‌த்தை உருவாக்க‌ முடியும். புதிய‌ தொழில்நுட்ப‌ங்க‌ளின் மூல‌ம் இந்த‌ மின்ன‌ணு க‌ழிவை சொத்துக்க‌ளாக்க‌வும், புதிய‌ சூழிய‌ல் வேலைவாய்ப்புக‌ளை உருவாக்க‌வும் முடியும். இந்த‌ க‌ழிவுக‌ளிலிருந்து த‌னிம‌ங்க‌ளை பிரித்தெடுப்ப‌த‌ன் மூல‌ம் மீண்டும் இந்த‌ த‌னிம‌ங்க‌ளை சுர‌ங்க‌ங்க‌ளிருந்து எடுத்து உற்ப‌த்தி செய்ய தேவையான‌ கார்ப‌ன் உமிழ்வை நாடுக‌ள் குறைக்க‌ முடியும்.

 இந்த‌ புதிய‌ தொழில்நுட்ப‌ம் ப‌ல‌ ப‌டிநிலைக‌ளை கொண்ட‌து.1) மின்ன‌ணு க‌ழிவுக‌ளை சேக‌ரித்த‌ல், இத‌ன் மூல‌ம் மூல‌ப்பொருட்க‌ள் ப‌ற்றாக்குறையை போக்கி, ந‌ல்ல‌ பாதுகாப்பான‌ , பொருளாதார‌ நிலையில் ம‌று சுழ‌ற்சி நிறுவ‌ன‌ங்க‌ள் செயல் பட‌ உத‌வும்.
2) பிரித்த‌ல் ம‌ற்றும் முதல் நிலை வேலைக‌ளை செய்த‌ல். இந்த‌ நிலையில் தீங்கு விளைவிக்க‌ கூடிய‌ த‌னிம‌ங்க‌ள் பிரித்து பாதுகாப்பான‌ இட‌ங்க‌ளில் வைக்க‌ப‌டுவ‌தும், த‌னிம‌ங்க‌ள் பிரித்தெடுத்த‌லும் நிக‌ழ்கின்ற‌து.உதார‌ண‌மாக‌ மின்க‌ல‌ன்க‌ள் பிரிக்க‌ப்ப‌ட்டு அதிலுள்ள‌ கோபால்ட், நிக்க‌ல், தாமிர‌ம் போன்ற‌ த‌னிம‌ங்க‌ள் பிரித்தெடுக்க‌ப‌டுகின்ற‌ன‌.
3) இத‌ன் மூல‌மாக‌ பிரித்தெடுக்க‌ப்ப‌ட்ட‌ த‌னிம‌ங்க‌ள் ஒரு குறிப்பிட்ட‌ அள‌வை எட்டிய‌வுட‌ன் அவை இரும்பு ஆலைக‌ளுக்கும், அலுமினிய‌ க‌த‌வுக‌ள் த‌யாரிக்கும் ஆலைக‌ளுக்கும் அனுப்ப‌ப்ப‌டுகின்ற‌ன‌

 இந்த‌ அறிக்கை இந்தியாவின் மின்ன‌ணு க‌ழிவு ம‌று சுழ‌ற்சியில் அதிகார‌பூர்வ‌ம‌ற்ற‌ துறையே ஆதிக்க‌ம் செலுத்துகின்ற‌து என‌ கூறுகின்ற‌து. மேலும் இதில் பல்லாயிர‌க்க‌ண‌க்கான‌ தொழிலாள‌ர்க‌ள் அபாய‌க‌ர‌ சூழ‌லில் த‌னிம‌ங்க‌ளை பிரித்தெடுப்ப‌தன் மூல‌ம் த‌ங்க‌ள் வாழ்வை ந‌ட‌த்துவ‌தாக‌ கூறுகின்ற‌து. இந்த‌ அதிகார‌ம‌ற்ற‌ முறையை சரியான‌ முறைக‌ள் மூல‌ம் ச‌ட்ட‌ப்ப‌டுத்துவ‌த‌ற்கான‌ ப‌ல‌ முய‌ற்சிக‌ள் தோல்வி அடைந்த‌ன‌. இத‌ற்கு த‌டையாக‌ உள்ள‌ கார‌ணிக‌ளை அர‌சு ச‌ட்ட‌த்தை வ‌குக்கும் போது க‌வ‌ன‌த்தில் கொள்ள‌ வேண்டும்.

 இந்தியாவில் மின்ன‌ணு க‌ழிவுக‌ளுக்கென‌ த‌னிச் ச‌ட்ட‌ம் எதுவுமில்லை. மின்ன‌ணு க‌ழிவு ச‌ட்ட‌ங்க‌ள் வ‌குக்கும் போது கீழ்காணும் கார‌ணிக‌ளை க‌ருத்தில் கொள்ள‌ வேண்டும். சூழிய‌ல், நீர், காற்று, ந‌க‌ர‌ க‌ழிவுக‌ள் ம‌ற்றும் ஆப‌த்தான‌ க‌ழிவுக‌ளே அவை. மின்ன‌ணு க‌ழிவுக‌ள் கையாளும் முறை த‌ற்பொழுது மிக‌ ஆப‌த்தான‌ க‌ழிவுக‌ள் கையாளுத‌ல் என்ற‌ பிரிவின் கீழ் உள்ள‌து. இந்த‌ மின்ன‌ணு க‌ழிவில் சில‌ சிற‌ப்பு ப‌குதிக‌ளை ஏற்றும‌தி செய்வ‌த‌ற்கான‌ உரிம‌ம் வ‌ழ‌ங்கும் முறை தெளிவில்லாம‌ல் உள்ள‌து. இது இன்றும் ஆப‌த்தான‌ க‌ழிவுக‌ள் பிரிவின் கீழே உள்ள‌து.

 அதிக‌ அள‌விலான‌ கையூட்டு இந்த‌ ச‌ட்ட‌த்தை வ‌ளைப்ப‌த‌ற்கு ப‌ய‌ன்ப‌டுத்த‌ப‌டுகின்ற‌து. இந்த‌ ச‌ட்ட‌ம் அத‌ன் ப‌ங்குதார‌ர்க‌ளுக்கு ஒரு தெளிவான‌ ப‌ணி ம‌ற்றும் இட‌த்தை வ‌ழ‌ங்க‌வில்லை.

 முன்பே கூறிய‌து போல‌ மின்ன‌ணு க‌ழிவுக‌ள் ம‌றுசுழ‌ற்சி அங்கீகரிக்கப்படாத துறையே ஆதிக்க‌ம் செலுத்துகின்ற‌து. இங்கு ப‌ல‌ கீழ் நிலை தொழில்நுட்ப‌ங்க‌ளே உப‌யோகிக்க‌ ப‌டுகின்ற‌ன‌. மேலும் இது குறைந்த‌ திற‌மையுள்ள‌ ப‌ணியாள‌ர்க‌ளையும் கொண்டுள்ள‌து. இவை திற‌ந்த‌ வெளியில் ந‌ட‌ப்ப‌தால் தீ விப‌த்திற்க்கும், உட‌ல் ம‌ற்றும் சூழிய‌ல் தீங்குக‌ள் ஏற்ப‌ட‌வும் வாய்ப்ப‌ளிக்கின்ற‌து. மேலும் மின்ன‌ணு க‌ழிவில் உள்ள‌ தீங்கு விளைவிக்க‌ கூடிய‌ பொருட்க‌ளை நீக்குவ‌த‌ற்கு ச‌ரியான‌ வ‌ழிமுறையும் அவ‌ர்க‌ளிட‌ம் இல்லை.

 சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் புது தில்லியில் ந‌டைபெற்ற‌ “வ‌ட்ட‌வ‌ரான் சூழிய‌ல் திரைப்ப‌ட‌ விழாவில் திரையிடப்ப‌ட்ட‌ ஒரு ஆவ‌ண‌ பட‌ம்‌. த‌லைந‌க‌ரான‌ தில்லியில் இது போன்ற‌ அபாய‌க‌ர‌மான‌ நிலையில் வேலை செய்யும் தொழிலாள‌ர்க‌ளின் நிலை காட்ட‌ப்ப‌ட்டுள்ள‌து. பெரும்பான்மையான‌ தொழிலாள‌ர்க‌ள் இந்த‌ தீங்கு விளைவிக்கும் பொருட்க‌ள் ப‌ற்றி அறிந்திருக்க‌ வில்லை.
அங்கீக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌ ம‌றுசுழ‌ற்சி துறைக்கு முக்கிய‌மான‌ ச‌வாலாக‌ திக‌ழ்வ‌து மின்ன‌ணு க‌ழிவுக‌ளை சேக‌ரித்த‌ல் ம‌ற்றும் அதை நிறுவ‌ன‌ங்க‌ளுக்கு கொண்டு செல்லுத‌வ‌தேயாகும். இத‌ற்கு முக்கிய‌ கார‌ண‌ம் அங்கீக‌ரிக்க‌ப்ப‌டாத‌ துறையின் நேர‌டி போட்டியே கார‌ண‌ம். க‌ழிவுக‌ளை சேக‌ரித்த‌ல் ம‌ற்றும் நிறுவ‌ன‌ங்க‌ளுக்கு கொண்டு செல்லுத‌ல், தீங்கான‌ பொருட்க‌ள் ம‌ற்றும் அரிய‌ த‌னிம‌ங்க‌ளை நீக்குத‌ல் என‌ எல்லா செல‌வும் ம‌று சுழ‌ற்சி செய்யும் அந்த‌ நிறுவ‌ன‌த்தையே சார்ந்துள்ள‌து. இத‌னால் தெளிவான‌ பொருளாதார‌ நிலையை ம‌று சுழ‌ற்சி நிறுவ‌ன‌ங்க‌ள் கொண்டிருப்ப‌தில்லை.
பெங்க‌ளூரின் வெற்றி க‌தைக‌ள்:

 பெங்க‌ளூரில் உள்ள‌ மின்ன‌ணு க‌ழிவு ம‌று சுழ‌ற்சி நிறுவ‌ன‌ங்க‌ளை ம‌ற்ற‌ வ‌ள‌ர்ந்து வ‌ரும் நாடுக‌ளுக்கு ஒரு முன்னுதார‌ண‌மாக‌ இந்த‌ அறிக்கை எடுத்து காட்டுகின்ற‌து. இந்த‌ அமைப்பு ஒரு தனியார் அமைப்பாகும். இது பெரிய‌ நிறுவ‌ன‌ங்க‌ள், நிறுவ‌ன‌ கூட்டமைப்புக‌ள் அர‌ச‌ துறைக‌ள், ப‌ல‌ த‌ன்னார்வ‌ அமைப்புக‌ள் சேர்ந்து உருவாக்க‌ப்ப‌ட்ட‌தாகும். இத‌ன் முழு க‌வ‌ன‌மும் பெங்க‌ளூரின் மின்ன‌ணு க‌ழிவு ம‌ற்றும் அத‌ன் ம‌று சுழ‌ற்சி ம‌ட்டுமே.
மேலும் பெங்க‌ளூரில் மென்பொருள் தொழில்நுட்ப‌ உற்ப‌த்தியாள‌ர்க‌ள் கூட்ட‌மைப்பும் உள்ள‌து. இது ப‌யிற்சி, ஆராய்ச்சி ம‌ற்றும் புதிய‌ பொருட்க‌ளை உருவாக்குத்ல் போன்ற‌ சேவையை இந்திய‌ மென்பொருள் தொழில்நுட்ப‌ நிறுவ‌ன‌ங்க‌ளுக்கு வ‌ழ‌ங்கி வ‌ருகின்ற‌து. இந்த‌ நிறுவ‌ன‌மே எதிர்கால‌ மின்ன‌ணு க‌ழிவுகளை கையாளுத‌ல் ம‌ற்றும் ம‌று சுழ‌ற்சி தொட‌ர்பான‌ விதிக‌ளை உருவாக்க‌ வேண்டும் என்ற‌ க‌ருத்தை தேசிய‌ அள‌வில் முன்வைத்த‌து. இது இந்திய‌ செர்மானிய‌ சுவிசு அர‌சுக‌ளால் முன்னெடுக்க‌ப்ப‌ட்ட‌ ப‌ல‌ திட்ட‌ங்க‌ளுக்கு துணை நின்றுள்ள‌து.

 மின்ன‌ணு ந‌க‌ர‌ கூட்ட‌மைப்பு என்ப‌து பெங்க‌ளூரின் தெற்கு ப‌குதியில் உள்ள‌  மின்ன‌ணு ந‌க‌ரில் உள்ள‌ நிறுவன‌ங்க‌ளை சேர்த்து உருவாக்க‌ப்ப‌ட்ட‌ அமைப்பாகும். இதுவே இந்தியாவின் மிக‌ப்பெரிய‌ மென்பொருள் தொழில்நுட்ப‌ பூங்காவாகும். இதில் 100 மென்பொருள் தொழில்நுட்ப‌ பூங்காக்க‌ள் உள்ள‌ன‌.இந்த‌ மென்பொருள் தொழில்நுட்ப‌ பூங்காவில் உள்ள‌ நிறுவ‌ன‌ங்க‌ள் த‌ங்க‌ள‌து தின‌ச‌ரி ப‌ய‌ன்பாட்டிற்க்காக‌ மின் ம‌ற்றும் மின்ன‌ணு க‌ருவிக‌ளையே பெரிதும் ந‌ம்பியுள்ள‌ன‌. இதில் ஏற்ப‌டும் மின்ன‌ணு க‌ழிவை நீக்குவ‌த‌ற்காக‌ இந்த‌ மின்ன‌ணு ந‌க‌ர‌க் கூட்ட‌மைப்பு “சுத்த‌மான‌ மின்ன‌ணு க‌ழிவு வ‌ழி” என்ற‌ திட்ட‌த்தை அறிமுக‌ப்ப‌டுத்திய‌து. இத‌ன் மூல‌ம் இதில் உள்ள‌ எல்லா நிறுவ‌ன‌ங்க‌ளும் த‌ங்க‌ளின் மின்ன‌ணு க‌ழிவுக‌ளை ந‌ல்ல‌ ம‌ற்றும் சூழிய‌லுக்கு தீங்கு விளைவிக்காத‌ முறையில் வெளியேற்றுகின்ற‌ன‌.

 இ.பெரிசாரா என்ப‌து அர‌சால் அங்கீக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌ முத‌ல் மின்ன‌ணு க‌ழிவு ம‌று சுழ‌ற்சி நிறுவ‌ன‌மாகும். இது பெங்க‌ளூரின் புற‌ந‌க‌ர் ப‌குதியில் உள்ள‌து. இந்த‌ நிறுவ‌ன‌ம் தான் இந்தியாவின் முத‌ல் அறிவிய‌ல் பூர்வ‌மான‌ மின்ன‌ணு க‌ழிவு ம‌று சுழ‌ற்சி நிறுவ‌ன‌மாகும். இத‌ன் நோக்க‌ம் சூழிய‌லை பாதுகாத்த‌ல், நில‌த்தில் அடைக்க‌ப்ப‌டும் மின்ன‌ணு க‌ழிவின் அள‌வை குறைத்த‌ல் ம‌ற்றும் ப‌ல‌ அரிதான‌ த‌னிம‌ங்க‌ள், நெகிழி, க‌ண்ணாடி ம‌ற்றும் ப‌ல‌ பொருட்க‌ளை பாதுகாப்பான‌ முறையில் திரும்ப‌ பெறுத‌ல் போன்ற‌வையாகும்.இந்த‌ நிறுவ‌ன‌ம் த‌ங்க‌ள் வாடிக்கையாளிட‌ம் இருந்து ஆய்வு செய்து மின்ன‌ணு க‌ழிவை வாங்கி அதிலுள்ள‌ பொருட்க‌ளை பிரித்து அரிய‌ த‌னிம‌ங்க‌ள் ம‌ற்றும் பொருட்க‌ளை பிரித்த‌வுட‌ன் அழித்து தேவையெனில் சான்றித‌ழும் அளிக்கின்ற‌து.

 பெங்க‌ளூரை மைய‌மாக‌ கொண்ட ஒரு மின்ன‌ணு க‌ழிவு ம‌று சுழ‌ற்சி கூட்ட‌மைப்பும் உள்ள‌து. இது அங்கீகார‌ம‌ற்ற‌ துறையில் உள்ள‌ நிறுவ‌ன‌ங்களுட‌ன் ந‌ல்ல‌ உற‌வை கொண்டுள்ள‌து. “மின் ம‌ற்றும் மின்ன‌ணு க‌ழிவுக‌ள் ம‌று சுழ‌ற்சி,பிரித்த‌ல் ம‌ற்றும் வெளியேற்றுத‌ல்” என‌ இந்த‌ அமைப்பு அறிய‌ப்ப‌ட்ட‌து. இந்த‌ அமைப்பு க‌ர்நாட‌க‌ மாநில‌ மாசு க‌ட்டு பாட்டு வாரிய‌த்திட‌ம் 2007ல் த‌ன‌து வேலைக‌ளை துவ‌ங்குவ‌த‌ற்கு முறைப்ப‌டி அனும‌தி கேட்ட‌து. அந்த‌ நேர‌த்தில் இப்ப‌டியான‌ ஒரு கோரிக்கை இந்தியாவில் முத‌ன்மையான‌தும், முக்கிய‌மான‌துமாகும். “மின் ம‌ற்றும் மின்ன‌ணு க‌ழிவுக‌ள் ம‌று சுழ‌ற்சி,பிரித்த‌ல் ம‌ற்றும் வெளியேற்றுத‌ல்’ அமைப்பு இன்ன‌மும் அத்கார‌பூர்வ‌ம‌ற்ற‌ உள்ள‌ நிறுவ‌ன‌ங்களுட‌ன் ந‌ல்ல‌ உற‌வை கொண்டுள்ள‌து.இத‌ன் மூல‌ம் அங்கீக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌ நிறுவ‌ன‌ங்க‌ளின் முக்கிய‌ பிர‌ச்ச‌னையான‌ மூல‌ப்பொருள் ப‌ற்றாக்குறையை நீக்கிய‌து.

  மைய‌ அறிவிய‌ல் ம‌ற்றும் சூழிய‌ல் அமைப்பின் கூற்றுப்ப‌டி “மின் ம‌ற்றும் மின்ன‌ணு க‌ழிவுக‌ள் ம‌று சுழ‌ற்சி,பிரித்த‌ல் ம‌ற்றும் வெளியேற்றுத‌ல்” அமைப்பு 2008ல் அத‌ன் முத‌ல் பெரிய‌ நிறுவ‌ன‌ வாடிக்கையாள‌ரான‌ டைட்ட‌னுட‌ன் ஒரு ஒப்ப‌ந்த‌த்தை ஏற்ப‌டுத்திய‌து. ஒவ்வொரு வ‌ருட‌மும் க‌ழிவு விலை ம‌ற்றும் ப‌ழைய‌ க‌டிகார‌ங்க‌ளுக்கு புதிய‌ க‌டிகார‌ங்க‌ள் கொடுக்கும் முறையில் தான் பெறுகின்ற‌ன‌ ப‌ழைய‌ க‌டிகார‌ங்க‌ளை இந்த‌ அமைப்பிறிக்கு கொடுக்கின்ற‌து. க‌ட‌ந்த‌ வ‌ருட‌ம் 6 இல‌ட்ச‌த்திலிருந்து 7 இல‌ட்ச‌ம் வ‌ரை ப‌ழைய‌ க‌டிகார‌ங்க‌ளை நில‌த்தில் குப்பையாக‌ புதைப்ப‌தை தடுத்து டைட்ட‌ன் இந்த‌ அமைப்பிட‌ம் ம‌றுசுழ‌ற்சிக்காக‌ கொடுத்துள்ள‌து. தான் த‌யாரிக்கும் ந‌வீன‌ தொழில்நுட்ப‌ க‌டிகார‌ங்க‌ளும் மின் க‌ழிவின் கீழ் வ‌ரும் என்ப‌தை டைட்ட‌ன் நிறுவ‌ன‌ம் ந‌ன்க‌றியும். இந்த‌ அமைப்பு தாங்க‌ள் வாங்குகின்ற‌ மின்ன‌ணு க‌ழிவை பெங்க‌ளூரை சேர்ந்த‌ சாகாசு நிறுவ‌ன‌த்துட‌ன் சேர்ந்து மேற்கொள்கின்ற‌து. இந்த‌ நிறுவ‌ன‌ம் ஒரு ம‌று சுழ‌ற்சி நிறுவ‌ன‌மாகும். டைட்ட‌னிட‌ம் இருந்து பெறுகின்ற‌ ப‌ழைய‌ க‌டிகார‌ங்க‌ளை இறுதியில் இந்த‌ அமைப்பு சாகாசிட‌ம் கொடுக்கின்ற‌து. இவ‌ர்க‌ள் அதிலுள்ள‌ ப‌ல‌ அரிய‌ த‌னிம‌ங்க‌ளை பிரித்து விட்டு தீங்குவிளைவிக்கும் பொருட்க‌ளை நில‌த்தில் பாதுகாப்பாக‌ புதைத்து விடுகின்ற‌ன‌.

 எம்பா என்ற‌ சுவிசு நாட்டு ஆய்வ‌க‌ம் ஒன்று வேதிய‌ல் பொருட்க‌ள் மூல‌ம் த‌னிம‌ங்க‌ளை பிரித்தெடுப்ப‌து தொட‌ர்பான‌ ஆய்வு மேற்கொண்ட‌து. இந்த‌ ஆய்வின் மூல‌ம் அந்த‌ முறை அபாய‌க‌ர‌மான‌து என‌ த‌விர்க்க‌ப்ப‌ட்டு ந‌ல்ல‌ உப‌க‌ர‌ண‌ங்க‌ளை ப‌ய‌ன்ப‌டுத்தி த‌னிம‌ங்க‌ளை பிரித்தெடுக்கும் முறை தொட‌ங்க‌ ஒரு முண்ணுதார‌ன‌மாக‌ இருந்த‌து.

 அங்கீக‌ரிக்க‌ப்ப‌டாத‌ ம‌று சுழ‌ற்சி துறையில் வேலை செய்யும் தொழிலாள‌ர்க‌ள் தாங்க‌ள் வேலை செய்யும் முறையை மாற்றிக் கொள்ள‌வேன்டும், வெறும் த‌ங்க‌த்தை பிரித்தெடுப்ப‌த‌ற்காக‌ ம‌ட்டும் இல்லாம‌ல் எல்லா த‌னிம‌ங்க‌ளை பிரித்து ம‌ற்ற‌ ஆலைக‌ளின் மூல‌ப்பொருளாக்க‌ வேண்டும் என்ப‌தே இத‌ன் க‌ருத்து. இதில் “மின் ம‌ற்றும் மின்ன‌ணு க‌ழிவுக‌ள் ம‌று சுழ‌ற்சி,பிரித்த‌ல் ம‌ற்றும் வெளியேற்றுத‌ல்’ அமைப்பு ஒரு முக்கிய‌ க‌ண்டுபிடிப்பு மைய‌மாக‌வும் விள‌ங்குகின்ற‌து.

 மின்ன‌ணு க‌ழிவை பாதுகாப்பாக‌ மிக‌ச் ச‌ரியான‌ முரையில் பிரித்த‌வுட‌ன் இது உமிகோர் போன்ற‌ நிறுவ‌ன‌த்திற்க்கு அனுப்ப‌ப்ப‌டுகின்ற‌து. இவ‌ர்க‌ள் த‌னிம‌ங்க‌ளை பிரித்து தீங்கு விளைவிக்கும் பொருட்க‌ள் அழிக்க‌ப்படுகின்ற‌து. ந‌டைமுறையில் பொருட்க‌ளை அனுப்பிய‌திலிருந்து ஆறு மாத‌த்திற்க்கு பின் தான் இவ‌ர்க‌ளுக்கு அந்த‌ பொருளுக்கான‌ ப‌ண‌ம் கொடுக்க‌ப‌டுகின்ற‌து. இத‌னால் ம‌று சுழ‌ற்சி நிறுவ‌ன‌ங்க‌ள் நிதி பிர‌ச்ச‌னைக்கு ஆளாகின்ற‌ன‌. இத‌னால் இந்த‌ ம‌று சுழ‌ற்சி நிறுவ‌ன‌ங்க‌ளுக்கு உத‌வும் வ‌கையில் ஒரு இதி நிறுவ‌ன‌த்தை நிறுவி அவ‌ர்க‌ளின் நிதி பிர‌ச்ச‌னையை தீர்க்க‌ வேண்டும்.

…….
என‌க்கு இந்த‌ க‌ட்டுரையை மொழி பெய‌ர்க்கும் வாய்ப்பை வ‌ழ‌ங்கிய‌ தோழ‌ர்.வ‌ழ‌க்க‌றிஞ‌ர். சுந்த‌ர‌ராச‌னுக்கு என் ந‌ன்றிக‌ள் ப‌ல‌…

மூலப்பதிவிற்க்கான சுட்டி

http://www.indiatogether.org/2010/mar/env-unewaste.htm

மின்ன‌ணு க‌ழிவுக‌ள் தொட‌ர்பான‌ சில‌ மேல‌திக‌ த‌ர‌வுக‌ள்.

 அமெரிக்காவில் மின்ன‌ணு க‌ழிவுக‌ளை ம‌றுசுழ‌ற்சிக்கு உட்ப‌டுத்தும் ப‌ண‌ம் வாடிக்கையாள‌ரிட‌ம் இருந்து பெற‌ப்ப‌டுகின்ற‌து. இந்த‌ தொகையை மின்ன‌ணு பொருட்க‌ள் விற்க்கும் க‌டையின் உரிமையாள‌ர் முன் கூட்டியே க‌ட்டி விட்டு பின்ன‌ர் தான் விற்கும் பொருட்க‌ளின் விலையில் சேர்த்துக் கொள்ள‌லாம். அள‌வு வாரியான‌ ம‌றுசுழ‌ற்சி தொகை விவ‌ர‌ம்.
திரையின் அள‌வு                ம‌று சுழ‌ற்சி தொகை
  10 முத‌ல் 37.5 செ.மீ              ரூ.270
  37.5 முத‌ல் 87.5 செ.மீ            ரூ.360
  87.5 செ.மீ மேல்                   ரூ.450

……..

இந்திய‌ ம‌றுசுழ‌ற்சி நிறுவ‌ன‌ங்க‌ள் த‌ங்க‌ள‌து கொள்ள‌ள‌வில் ஒரு பகுதியை ம‌ட்டுமே உப‌யோக‌ப்ப‌டுத்துகின்ற‌ன.இதற்கான காரணங்கள் மேலே கட்டுரையில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன.

1) இ.பெரிசாரா 600 மெட்ரிக் க‌ல்ல‌டை கொள்ள‌ள‌வில் வெறும் 300 மெட்ரிக் ட‌ன் கொள்ள‌ள‌வில் ம‌ட்டுமே க‌ட‌ந்த‌ வ‌ருட‌ம் இய‌ங்கியுள்ள‌து.
2) ஆச் ம‌றுசுழ‌ற்சி நிறுவ‌ன‌ம் 240 மெட்ரிக் க‌ல்ல‌டை கொள்ள‌ள‌வில் வெறும் 36 மெட்ரிக் ட‌ன் கொள்ள‌ள‌வில் ம‌ட்டுமே க‌ட‌ந்த‌ வ‌ருட‌ம் இய‌ங்கியுள்ள‌து. இத‌ற்கு கார‌ண‌ம் மூல‌ப்பொருள் ப‌ற்றாக்குறை. இதை அந்த‌ நிறுவ‌ன‌ மேலாள‌ரான‌ இரா.ம‌னோக‌ர‌ன் இவ்வாறு கூறுகின்ற‌து. மென்பொருள் நிறுவ‌ன‌ங்க‌ள் பெரும்பாலும் அங்கீக‌ரிக்க‌ப்ப‌டாத‌ ம‌றுசுழ‌ற்சி துறையையே அணுகுகின்ற‌ன‌ இத‌ற்கு கார‌ண‌ம் அந்த‌ நிறுவ‌ன‌ங்க‌ள் ம‌றுசுழ‌ற்சிக்கு அங்கீக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌ துறையை அணுகுவ‌த‌ற்க்கு அர‌சு கொடுக்கும் மிக‌க் க‌டுமையான‌ வ‌ழிமுறையே கார‌ண‌மாகும் என்கிறார்.
…………….

 த‌ங்க‌ம் போன்ற‌ த‌னிம‌ங்க‌ள் க‌ணிணியின் மின்சுற்று ப‌ல‌கையிலும் ம‌ற்ற‌ இணைப்பு க‌ருவிக‌ளிளும் உள்ள‌ன‌.

……

த‌ர‌வுக‌ள் இல்லாத‌வை, எதிர் வினை,


த‌ர‌வுக‌ள் இல்லாத‌வை, எதிர் வினை,

 நான் மொழி பெய‌ர்த்த‌ இந்த‌ கட்டுரையில் த‌ர‌வுக‌ள் இல்லாத‌வ‌ற்றையும், சில‌ உட‌ன்ப‌டாத‌ வாக்கிய‌ங்க‌ளுக்கு என‌து எதிர் வினையையும் இங்கெ ப‌கிர்கின்றேன்.

மூன்றாம் ப‌குதியில் த‌னித்து விட‌ப்ப‌ட்ட‌ த‌மிழ‌ர்க‌ள் த‌லைப்பின் கீழ் உள்ள‌ கொளும்பு ம‌த்திய‌ வ‌ங்கி குண்டுவெடிப்பு தொட‌ர்பான‌ க‌ட்டுரையாசிரிய‌ரின் ப‌திவுக்கு என‌து எதிர் வினை                             (சோச‌லிச‌ போராட்ட‌ இய‌க்க‌ங்க‌ள் அந்த‌ நாட்டின் பொருளாதார‌த்தை சீர்குலைக்க‌ வ‌ங்கிக‌ளை தாக்குவ‌து வ‌ர‌லாற்றில் எங்கும் காண‌ப்ப‌டுவ‌தாகும். )

 (ஆயிர‌க்க‌ண‌க்கில் அப்பாவி பொதும‌க்க‌ளை கொன்ற‌தாக‌ கூறுப்ப‌டுவ‌த‌ற்கு ஆவ‌ண‌ங்க‌ள் எதுவும் க‌ட்டுரையாசிய‌ரினால் கொடுக்க‌ப்ப‌ட‌வில்லை.மேலும் ம‌ற்ற‌ இய‌க்க‌ங்க‌ளையும்,த‌மிழ் ஐக்கிய‌ விடுத‌லை முண்ண‌னியின் சில‌ த‌லைவ‌ர்க‌ளை கொன்ற‌த‌ற்கும் அவ‌ர்க‌ளின் இல‌ங்கை சார்பு கொள்கைக‌ளும், போராட்ட‌ங்க‌ளின் இய‌க்க‌விய‌லுமே காரண‌மாகும். )
போர் நிறுத்த‌ம் த‌லைப்பின் கீழ் ப‌திய‌ப்ப‌ட‌ வேண்டிய‌ மீத‌ப் ப‌குதி,
(10,000 ற்கும் அதிக‌மான‌ வீர‌ர்க‌ள் சிறைபிடிக்க‌ப்ப‌ட்டு இந்தியாவின் ச‌ம‌ர‌ச‌ பேச்சுவார்த்தையினால் புலிக‌ள் அவ‌ர்க‌ளை விடுவித்தார்க‌ள். இதுவும் போர் நிறுத்த‌திற்கு ஒரு காராண‌மாகும். )

(அவ்வாறு கூற‌ இய‌லாது சோச‌லிச‌ நாட்டின் க‌ட்டுமான‌த்தில் தான் அவ‌ர்க‌ள் மேற்கொண்டிருந்தார்க‌ள் என்ப‌தை மேற்கூறிய‌ ப‌த்திக‌ளில் ஆசிரிய‌ர் கூறியுள்ளார்.)

பகுதி – 4/5ல் ‍ நான்காவது பத்திக்கான எனது எதிர் வினை  .  ( முந்தைய‌ மூன்று ப‌குதிக‌ளிலும் “சிங்க‌ளா ம‌ட்டும்” என்ற‌ ச‌ட்ட‌த்தை கொண்டு வ‌ந்த‌திலிருந்தே அர‌சு ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்தை துவ‌க்கிய‌தாக‌ கூறிய‌ க‌ட்டுரை ஆசிரிய‌ர். இங்கு 1983லிருந்து ஆர‌ம்பித்த‌து என்று த‌ன‌து முந்தைய‌ நிலைப்பாடுக‌ளில் இருந்து மாறுப‌டுகின்றார். புலிக‌ள் ப‌ற்றிய‌ செய்திக‌ளுக்கு க‌ட்டுரையாசிரிய‌ருக்கு நான் மூன்றாம் ப‌குதியிலேயே என‌து ப‌திலை நான் கூறியுள்ளேன். )

பகுதி – 4/5ல் : போர்க்கால‌த்தில் அங்கு வாழ்ந்த‌ ம‌க்க‌ளின் பொதுவான‌ க‌ருத்து என்ற தலைப்பின் கீழ் உள்ள ஆறாவது பத்திக்கான எதிர் வினை:( குழ‌ந்தைக‌ளை போரில் ஈடுப‌த்திய‌த‌ற்கான‌ எந்த‌வித‌ ஆதார‌த்தையும் ,குற்ற‌ம் சாட்டும் ஊட‌க‌ங்க‌ள் கொடுக்க‌வில்லை, மேலும் வாளேந்தி போர் புரியும் அந்த‌ நாட்க‌ளில் ம‌க்க‌ளை ம‌னித‌ கேட‌ய‌ங்க‌ளாக‌ ப‌ய‌ன் ப‌டுத்த‌முடியுமே அன்றி தொலை தூர‌ எறிக‌ணை வீச்சுக‌ளிலும், விமான‌ குண்டு வீச்சுக‌ளிலும் எப்ப‌டி ம‌க்க‌ளை ம‌னித‌ கேட‌ய‌மாக‌ ப‌ய‌ன்ப‌டுத்த‌ முடியும் என்ப‌தை அவ‌ர்க‌ள் தான் விள‌க்க‌ வேண்டும். போர் ப்குதியிலிருந்து வெளியேறிய‌ ம‌க்க‌ளை புலிக‌ள் கொன்றதாக‌ கூறும் அர‌சு முன்ன‌ர் சான் பிளைஞ‌ர் கூறிய‌ க‌ருத்துட‌ன் ஒத்துள்ள‌து.)

Advertisements
%d bloggers like this: