ஜூலை, 2010 க்கான தொகுப்பு

தோழர்.ஆசாத் படுகொலையும், இந்திய அரசின் அமைதி பேச்சுவார்த்தையின் கோரமுகமும் ! – மொழியாக்கம்‍- ப.நற்றமிழன்.


சுவாமி.அக்னிவேஷ் கடந்த மே,2010லிருந்து இந்திய அரசிற்கும், மாவோயிசுட்டுகளுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடத்தி வருபவர்.இது வரை இரண்டு தரப்புகளும் இரண்டு கடிதங்களை இவர் மூலம் அனுப்பி உள்ளனர். சூன் 26 அன்று இவர் அரசு தரப்பிலிருந்து வந்த மூன்றாவது கடிதத்தை மாவோயிசுட்டுகளின் தலைமைக்குழுவில் உள்ள சேருகுரி இராஜ்குமார் என்ற ஆசாத்திடம் கொடுத்து விட்டு, அமைதி பேச்சுவார்த்தை ஆரம்பிப்பதற்கான பதிலை எதிர்பார்த்து காத்திருந்தார். அக்னிவேஷ் கூறுகையில் “நான் அவர்களிடம் (மாவோயிசுட்டுகளிடம்) இருந்து அமைதி பேச்சு வார்த்தை துவங்குவதற்கான தேதியை எதிர்பார்த்து காத்திருந்தேன்”. ஆனால் அவருக்கு வந்த செய்தியோ வேறு. மாவோயிசுட்டு தரப்பிலிருந்து பேச்சுவார்த்தை நடத்திவரும் ஆசாத் ஆந்திராவின் காட்டுப் பகுதியில் காவல் துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதே அந்த செய்தி.

 “ஆசாத் அரசின் மூன்றாவது கடித்தை பெற்றதனால் தனது மெய்பாதுகாவலர்களை விலக்கிக் கொண்டிருக்கலாம்”, மேலும் “ஆசாதின் படுகொலை நமக்கு எல்லாம் பேரிழப்பு, ஏனென்றால் ஆசாத் மாவோயிசுட்டுகளால் அமைதி பேச்சு வார்த்தைக்கு நியமிக்கப்பட்டவர். இதனால் அமைதி பேச்சுவார்த்தையில் ஒரு பெரிய தடை ஏற்பட்டுள்ளது” என்றார் அக்னிவேஷ்.

ஆனால் உள்துறை அமைச்சகமோ வேறொரு பார்வையை கொண்டுள்ளது. “இந்த படுகொலை அமைதி பேச்சிவார்த்தையில் எந்த ஒரு தடையையும் ஏற்படுத்தாது. மாவோயிசுட்டுகளிடம் இருந்து அமைதி பேச்சுவார்த்தையை நோக்கி எந்த ஒரு சமிஞையும் எங்களுக்கு வரவில்லை” என்கிறார் உள்துறை செயலர். பிள்ளை.

 ஆசாத் கொலை செய்யப்படுவதற்கு இரண்டு நாட்கள் முன்பு மாவோயிசுட்டுகள் மத்திய ஆயுதப் பிரிவைச்(CRPF) சேர்ந்த 27 காவலர்களை கொன்றுள்ளனர். இந்த தாக்குதல் மாவோயிசுட்டுகள் அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை என்றும் எடுத்து கொள்ளலாம். அக்னிவேஷ் மூலம் நடைபெற்ற திரைமறைவு பேச்சு வார்த்தை மூலம் நடைபெற்று வரும் வன்முறையை நிறுத்தி அமைதி பேச்சுவார்த்தை தொடங்க ஒரு நாள் குறிப்பிடப்படவேண்டும். அப்படி ஒரு நாள் குறிப்பிடாத பட்சத்தில் இரண்டு தரப்புகளும் தங்களது போரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். ஆசாத் படுகொலை செய்யப்பட்டு அதே வாரத்தில் லால்கரில் 5 மாவோயிசுட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர். மேலும் மாவோயிசுட்டு ஆத‌ர‌வாள‌ர்க‌ள் என்று க‌ருதப்ப‌ட்ட‌ ப‌ல‌ர் கைது செய்ய‌ப்ப‌ட்ட‌ன‌ர். ஆதிவாசி பெண்க‌ள் பாதுகாப்பு ப‌டையின‌ரால் க‌ற்ப‌ழிக்க‌ப்ப‌டும் நிக‌ழ்வுக‌ளும் தொட‌ர்ந்து கொண்டு தான் உள்ள‌ன‌. மாவோயிசுட்டுக‌ளிம் தாங்க‌ள் கொல்வ‌தை நிறுத்த‌ போவ‌தில்லை.

இங்கே ஆசாதின் ம‌ர‌ண‌த்தை ஏன் நாம் இந்த‌ வ‌ன்முறை பிர‌ச்ச‌னையிலிருந்து வில‌க்கி பார்க்க‌வேண்டி இருக்கின்ற‌து என்றால் ஆசாத் தான் (மாவோயிசுட்டு)க‌ட்சிக்கு அக்னிவினேசு மூல‌மாக‌ ப‌.சித‌ம்ப‌ர‌த்தின் க‌டித‌ங்க‌ளை எடுத்துச் செல்ப‌வ‌ரும், ந‌ம்ப‌த‌குந்த‌வ‌ருமாவார். ஆசாத் க‌ட்சிக்குள்ளே அமைதி பேச்சுவார்த்தையின் மேல் ஒரு ந‌ம்பிக்கையை கொண்டு வ‌ர‌ முய‌ற்சித்த‌வ‌ர். மேலும் க‌ட்சிக்குள்ளே ந‌ல்ல‌ ம‌ரியாதை உள்ள‌வ‌ருமாவார். ஆனால் அவ‌ரை கொன்ற‌த‌ன் மூல‌ம் அர‌சு தான் எப்போதும் பேச்சுவார்த்தைக்கு வ‌ர‌ப்போவ‌தே இல்லை என்று தெளிவாக‌ அறிவித்து விட்ட‌து” என்கிறார் மாவோயிசுட்டுக‌ளின் த‌ண்ட‌கார‌ண்ய‌ ப‌குதியின் செய்தி தொட‌ர்பாள‌ர். உசென்டி.

 முதல் இர‌ண்டு க‌டித‌ங்க‌ளும் ஊட‌க‌ங்க‌ள் மூல‌ம் ம‌க்க‌ளை சென்ற‌டைந்து விட்ட‌ன‌. ஆனால் மூன்றாவ‌து க‌டித‌ம் இன்னும் இர‌க‌சிய‌மாக‌வே உள்ள‌து. ஆனால் இந்த‌ மூன்றாவ‌து க‌டித்தை ப‌டித்த‌ சில‌ர் இர‌ண்டு த‌ர‌ப்புக‌ளும் அமைதி பேச்சுவார்த்தை மிக‌ அருகில் வ‌ந்திருந்த‌தாக‌வும், அதுவே ஆசாத் கொலை செய்ய‌ப்ப‌ட்ட‌த‌ன் கார‌ண‌மாக‌வும் மாறிவிட்ட‌து. இதில் இர‌ண்டு த‌ர‌ப்புக‌ளுக்கும் இடையே உள்ள‌ ஆதிவாசிக‌ளின் நிலை தான் மிக‌வும் மோச‌மான‌து. இந்த‌(ஆசாதின்) கொலைக்கு மாவோயிசுட்டுக‌ள் க‌ண்டிப்பாக‌ ப‌ழிவாங்குவார்க‌ள்.

ஆசாத் ம‌ற்றும் பாண்டேவின் புகைப்ப‌ட‌ங்க‌ள்

2004ல் ஆந்திராவில் அர‌சுக்கும் மாவோயிசுட்டுக‌ளுக்கும் இடையே ந‌டுநிலையாள‌ராக‌ செய‌ல்ப‌ட்ட‌ ஹ‌ர‌கோபால் கூறுகையில் “இந்த பாசிச‌ அர‌சு ம‌க்க‌ளை கொல்வ‌த‌ன் மூல‌ம் அமைதி திரும்பி விடும் என்று எண்ணுகிற‌து”. இது போன்ற‌ நிக‌ழ்வுக‌ள்(ஆசாதின் கொலை) இந்த‌ அரசின் நிலையற்ற தன்மையை வெளிப்படுத்துகின்றன‌‌. ஆந்திராவின் காட்டு ப‌குதியில் துப்பாக்கி ச‌ண்டையில் ஆசாத் கொல்ல‌ப்ப‌ட்ட‌து அர‌சை பொறுத்த‌ வ்ரை ஒரு சாத‌னை. ஆசாத் மாவோயிசுட்டுக‌ளில் மூன்றாம் இட‌த்தில் இருப்ப‌வ‌ர். க‌ட்சியின் மைய‌க் குழு உறுப்பின‌ர். மேலும் மாவோயிசுட்டுக‌ளின் த‌லைவ‌ர். க‌ண‌ப‌திக்கு ப‌க்க‌ ப‌ல‌மாக‌ இருந்த‌வ‌ர்.

 ஆசாத் ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்ட‌தில் பிற‌ந்த‌வ‌ர். அவ‌ர‌து த‌ந்தை ஒரு உண‌வ‌க‌ முத‌லாளி. ஆசாத்திற்கு த‌ற்போது வ‌ய‌து 55. வாராங்க‌லில் உள்ள‌ ம‌ண்ட‌ல‌ பொறியிய‌ல் க‌ல்லூரியில் ப‌டித்த‌வ‌ர். இர‌ண்டு முதுநி‌லை பொறியிய‌ல்(M.tech) ப‌ட்ட‌ம் பெற்ற‌வ‌ர். புர‌ட்சிக‌ர‌ மாண‌வ‌ர் யூனிய‌னை துவ‌க்கிய‌வ‌ர். எம‌ர்ஜென்சி கால‌க‌ட்ட‌த்தில் சிறையில் அடைக்க‌ப்ப‌ட்டார். அத‌ன் பின்ன‌ர் இவ‌ர் த‌லைம‌றைவு வாழ்க்கை வாழ‌ ஆர‌ம்பித்தார்.

 ஆதிலாபாத் காவ‌ல்துறை க‌ண்காணிப்பாள‌ர். பிர‌மோத் குமார் கூறுகையில் “அதிலாபாத் காட்டு ப‌குதியில் 25லிருந்து 30 மாவோயிசுட்டுக‌ள் இருப்ப‌தாக‌ உள‌வுதுறை த‌க‌வ‌ல் வ‌ந்த‌து. நாங்க‌ள் ஒரு காவ‌ல் துறைப் ப‌டையை மாவோயிசுட்டுக‌ளுக்கு எதிராக‌ ச‌ண்டை போட‌ அனுப்பினோம். “எங்க‌ள் ப‌டை அவ‌ர்க‌ளை ச‌ர‌ண‌டைய‌ சொன்னார்க‌ள் ஆனால் அவ‌ர்க‌ள் ச‌ண்டையை ஆர‌ம்பித்தன‌ர்”.  காவ‌ல் துறை க‌ண‌க்குப்ப‌டி இந்த‌ மோத‌ல் சூலை 1 இர‌வு 11.30 ம‌ணிக்கு ஆர‌ம்பித்து சூலை 2 காலை 2 ம‌ணி வ‌ரை நீடித்த‌து. மோத‌ல் முடிந்த‌வுட‌ன் ஆசாதுட‌ன் அடையாள‌ம் தெரியாத‌ ஒரு ந‌பரும் மோத‌லில் கொல்ல‌ப்ப‌ட்ட‌தாக‌ காவ‌ல் துறை கூறிய‌து.

ஆனால் இந்த‌ மோத‌லை ப‌ற்றி கிடைத்த‌ த‌க‌வ‌ல்க‌ளோ வேறு. மோத‌ல் ந‌டை பெற்ற‌தாக‌ கூறும் ச‌ர்கிபாலி கிராம‌ ம‌க்க‌ள் சூலை இர‌வு எங்க‌ளுக்கு எந்த‌ ஒரு துப்பாக்கி ச‌ண்டை ச‌த்த‌மும் கேட்க‌வில்லை என்று கூறுகின்ற‌ன‌ர். மாவோயிசுட்டுக‌ளும் இந்த‌ மோத‌ல் போலியான‌‌ ஒன்று என‌ கூறுகின்ற‌ன‌ர். “ஆசாத் சூலை 1 அன்று நாக்பூரில் இருந்தார். அவ‌ர் அதிலாபாத்தில் இல்லை. எங்க‌ள‌து திட்ட‌ப்ப‌டி அவ‌ர் சூலை 1 அன்று எங்க‌ள் ஆள் ஒருவ‌ரை அவ‌ர் திரைய‌ர‌ங்கில் ச‌ந்திக்க‌ வேண்டும்” என்கிறார் மாவோயிசுட்டுக‌ளின் செய்தி தொட‌ர்பாள‌ர். உசென்டி.

 அடையாள‌ம் தெரியாத‌ அந்த‌ இர‌ண்டாவ‌து உட‌லே இது போலி மோத‌ல் என‌ உறுதிப‌டுத்துவ‌த‌ற்கான‌ கார‌ண‌ங்க‌ளை கொடுக்கின்ற‌து. இவ‌ரின் புகைப்ப‌ட‌ங்க‌ள் ஆந்திர‌ நாளித‌ழ்க‌ளில் வ‌ந்த‌ பின்ன‌ர் இவ‌ர் மாவோயிசுட்டு இல்லை ஒரு ஊட‌க‌விய‌ல‌ர் என்றும் உத்த‌ர்க‌ண்டில் உள்ள‌ இவ‌ர‌து குடும்ப‌ம் கூறிய‌து. இவ‌ர‌து பெய‌ர் ஹேம்ச‌ந்திர‌ பாண்டே. 2007லிருந்து அவ‌ர் டெல்லியில் வ‌சித்து வ‌ந்த‌வ‌ர். “என‌து க‌ண‌வ‌ர் சூன் 30 அன்று டெல்லியிலிருந்து நாக்பூருக்கு அலுவ‌ல் கார‌ண‌மாக‌ சென்று சூலை 2 அன்று டெல்லி திரும்ப‌ வேண்டிய‌வ‌ர்” என்கிறார் பாண்டேவின் ம‌னைவி. அவ‌ர‌து குடும்ப‌த்தார் கூறுகையில் பாண்டே “நை துனியா, இராசிட்ரிய‌ ச‌காரா, டெய்னிக் ஜ‌க்ர‌ன்” போன்ற‌ தின‌ச‌ரிக‌ளில் வேலை செய்தார் . ஆனால் இந்த‌ தின‌ச‌ரிக‌ளின் ஆசிரிய‌ர்க‌ளோ அவ‌ர் இங்கு வேலை பார்க்க‌வில்லை என்று கூறினாலும் அவ‌ர‌து பெய‌ரில் மேற்கூறிய‌ தின‌ச‌ரிக‌ளில் வெளிவ‌ந்துள்ள‌ ப‌திவுக‌ள் தெக‌ல்காவிட‌ம்(வார‌ இத‌ழ்)  உள்ள‌ன‌.

 2010லிருந்து அவ‌ர் சேத்னா என்ற‌ இத‌ழில் வேலை செய்து வ‌ந்துள்ளார். இது டெல்லி அசாம் இருப்பு பாதை அலுவ‌ல‌க‌த்திற்கு(Delhi Assam Railway corporation ltd)  சொந்த‌மான‌து. அவ‌ருட‌ன் சேத்னா அலுவ‌லக‌த்தில் வேலை செய்து வ‌ரும் ம‌ற்ற ந‌ண்ப‌ர்க‌ளோ பாண்டே ஒரு அமைதியான‌, உத‌வும் எண்ண‌ம் கொண்ட‌ ந‌ண்ப‌ர் என‌ கூறுகின்ற‌ன‌ர். இதில் ஒரு விசித்திர‌ம் என்ன‌வென்றால் ஆதிலாபாத்தில் அவ‌ர் கொல்ல‌ப‌ட்ட‌தாக‌ காவ‌ல்துறை கூறும் சூலை 1 அவ‌ர் அலுவ‌ல‌க‌ம் வ‌ந்த‌தாக‌வும் கூறுகின்ர‌ன‌ர். “சேத்னா இத‌ழ் அலுவ‌ல‌க‌ நிர்வாகியான‌ அபிசேக் கூறுகையில் பாண்டே சூலை 1 அன்று ம‌திய‌ம் வ‌ரை அலுவ‌ல‌க‌த்தில் வேலை செய்து விட்டு பின்ன‌ர் அரை நாள் விடுப்புக் கேட்டுள்ளார். பாண்டேவின் மேலாள‌ர் அவ‌ர‌து கைபேசியில் உள்ள‌ பாண்டேவின் குறுஞ்செய்தியையும் ந‌ம‌க்கு காட்டினார் “அதாவ‌து சூலை 1 அன்று தாம் அரை நாள் ம‌ட்டும் அலுவ‌ல‌க‌த்தில் இருப்ப‌தாக‌வும், பின்ன‌ர் விடுப்பு எடுப்ப‌தாக‌வும் கூறியுள்ளார்”.

ஆனால் பாண்டேவின் குடும்ப‌த்தார் பாண்டே சூன் 30 அன்று டெல்லியை விட்டு தொடர்வ‌ண்டியில் சென்ற‌தாக‌வே கூறுகின்ற‌ன‌ர். டெல்லியில் ம‌திய‌ம் 2 ம‌ணி வ‌ரை இருந்து விட்டு அதே நாள் இர‌வு ஆந்திராவின் தொலைதூர காட்டுப் ப‌குதியில் கொரில்லா போரில்  ஈடுப‌டுவ‌து என்ப‌து ந‌ம்ப‌த‌குந்த‌த‌ல்ல‌.

 சூலை 1 அன்று என்ன‌ ந‌ட‌ந்த‌தற்கு தாமும் ஒரு வ‌கையில் கார‌ண‌மாகி விட்டோமோ என்றும் எண்ணுகிறார் அக்னிவேஷ். மே 6 லிருந்து 8 வ‌ரை அக்னிவேசும் ம‌ற்றும் சில‌ரும் இராய்பூர் ம‌ற்றும் தாண்டிவாடா சென்று ந‌டைபெற்று வ‌ரும் வ‌ன்முறையை நிறுத்த‌ கோரினார்க‌ள். மே 11 அன்று சித‌ம்ப‌ர‌ம் அர‌சின் நிலையை விள‌க்கி கூறி அக்னிவேசிற்க்கு ஒரு க‌டித‌ம் அனுப்பினார். அதில் மாவோயிசுட்டுக‌ள் வ‌ன்முறையை நிறுத்திக் கொள்ள ஒரு நாளை குறிப்பிடச் சொல்லியிருந்தார். “நாங்க‌ள் அந்த‌ குறிப்பிட்ட‌ நாளில் மாவோயிசுட்டுக‌ள் வ‌ன்முறையை நிறுத்தி விடுவார்க‌ள் என்று இருந்தோம்” மேலும் சித‌ம்ப‌ர‌ம் “நாங்க‌ள் அந்த‌ குறிப்பிட்ட‌ நாளில் இருந்து 72 ம‌ணி நேர‌ங்க‌ளுக்கு மாவோயிசுட்டுக‌ள் எந்த‌ ஒரு வ‌ன்முறையிலாவ‌து ஈடுப‌டுகின்றார்க‌ளா என்று கூர்ந்து க‌வ‌னிப்போம். மேலும் இந்த‌ 72 ம‌ணி நேர‌த்தில் அர‌ச‌ ப‌டைக‌ளும் எந்த‌ ஒரு ச‌ண்டையிலும் ஈடுப‌டாது. அந்த‌ நேர‌த்தில் நாம் அமைதி பேச்சு வார்த்தையை தொட‌ங்க‌லாம் என்றும் கூறியிருந்தார்”.

இந்த‌ க‌டித‌ம் மிக‌ முக்கிய‌மான‌ ஒன்றாகும் ஏனென்றால் இதில் தான் அர‌சு முத‌ன்முறையாக‌ மாவோயிசுட்டுக‌ளுட‌ன் பேச்சு வார்த்தை ந‌ட‌த்த‌ ச‌ம்ம‌தித்துள்ள‌து. இத‌ற்கு ப‌தில் த‌ரும் வ‌கையில் மே 31 அன்று ஆசாத் ஒரு க‌டித‌ம் அனுப்பினார். அதில் “எங்க‌ள‌து க‌ட்சி அமைதி பேச்சு வார்த்தைக்கு ஒப்புத‌ல் தெரிவித்துள்ள‌து. இத‌னை மிக‌ மோச‌மாக‌ பாதிக்க‌ப்ப‌டும் இல‌ட்ச‌க்க‌ண‌க்கான‌ ஆதிவாசிக‌ளை க‌ருத்தில் கொண்டே நாங்க‌ள் எடுத்துள்ளோம்.அமைதி பேச்சு வார்த்தையில் அர‌சு மிக‌ ஆர்வ‌மாக‌ உள்ள‌தென்றால் அர‌சு நீண்ட‌ கால ச‌ண்டை நிறுத்த‌த்திற்க்கு ஒப்புக் கொள்ள‌ வேண்டும். 72 ம‌ணி நேர‌ ச‌ண்டை நிறுத்த‌ம் என்ப‌து ந‌கைச்சுவையாக‌ உள்ள‌து. மேலும் இந்த‌ கால‌க‌ட்ட‌த்தில் கைது செய்யப்ப‌ட்டு சிறையில் இருக்கும் எங்க‌ள் இய‌க்க‌த்தைச் சேர்ந்த‌வ‌ர்க‌ளை விடுவிக்க‌வும், எங்க‌ள் மீதுள்ள‌ த‌டையையும் அர‌சு நீக்க‌ வேண்டும். மேலும் அர‌சு த‌ற்போது ச‌ண்டையில் ஈடுப‌ட்டுள்ள‌ ப‌டையை திருப்பி பெற‌ வேண்டும்” என்றும் ஆசாத் கூறியுள்ளார்.

 அக்னிவேஷ் இந்த‌ க‌டிதத்தை ப‌.சித‌ம்ப‌ர‌த்திட‌ம் சேர்த்துள்ளார். மேலும் மாவோயிசுட்டுக‌ள் எழுப்பியுள்ள‌ கேள்விக‌ளுக்கு விடை கூறும் வ‌கையில் மூன்றாவ‌து க‌டித‌த்தை ப‌.சித‌ம்ப‌ர‌த்தை ச‌ந்தித்த‌ பின்ன‌ர் ஆசாதிற்க்கு அனுப்பி உள்ளார். அதில் ச‌ண்டை நிறுத்த‌ம் வெறும் 3 நாட்க‌ள் ம‌ட்டும‌ல்ல‌ அது நீண்ட‌ கால‌ நோக்கிலே இருக்கும் என்றும் கூறியுள்ளார். இந்த‌ மூன்றாவ‌து க‌டிதத்திற்கு மாவோயிசுட்டுகளின் த‌ர‌ப்பில் இருந்து ச‌ண்டை நிறுத்த‌த்‌தை அறிவிக்கும் அந்த‌ நாளை குறிப்பிட‌ வேண்டும். இந்த‌ நிலையில் தான் ஆசாத் போலி மோத‌லில் அர‌சினால் கொல்ல‌ப்ப‌ட்டார்.

“இந்தியாவின் அமைதி பேச்சு வார்த்தையின் கோர‌முக‌ம் இவ்வாறு இருக்கின்ற‌து. இதைவிட‌ இன்னொரு கொடுமை என்ன‌வென்றால் இந்திய‌ பிர‌த‌ம‌ரே ஒப்புக்கொண்ட‌ ஆதிவாசிக‌ளின் தற்போதைய நிலை ப‌ற்றியும், அதை மேம்படுத்துவது தொடர்பாகவும் ப‌ஞ்சாய‌த் இராஜ் அமைச்ச‌க‌த்தால் ச‌ம‌ர்ப்பிக்க‌ப்ப‌ட்ட ஆய்வ‌றிக்கை இதே அர‌சால் குப்பை தொட்டியில் போட‌ப்ப‌ட்டுள்ள‌து. இதை ப‌ற்றிய‌ மொழிபெய‌ர்ப்பை விரைவில் நீங்க‌ள் எதிர்பார்க்க‌லாம்”

மூலப்பதிவு….  http://www.tehelka.com/story_main46.asp?filename=Ne170710thirdletter.asp

 ந‌ன்றி— தெக‌ல்கா வார‌ இத‌ழ்.

ப.நற்ற‌மிழ‌ன்

Advertisements

காவ‌ல் துறை ம‌க்க‌ளின் சேவ‌க‌னா? அர‌சின் கைக்கூலியா?– மொழியாக்கம் . ப.நற்றமிழன்


 
சென்னை உயர் நீதி மன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் காவல் துறையால் தாக்கப்பட்டனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் கருணாநிதிக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற வழக்கறிஞர்கள் காவல் துறை அதிகாரிகளின் கண்முன்னே தாக்கப்பட்டனர், மேலும் தாக்குதல்களுக்கு ஆளான வழக்கறிஞர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். அமைச்சர் மற்றும், உயர் காவல்துறை அதிகாரிகளின் கண்முன்னே தென் மாவட்டத்தில் காவல் துறை ஆய்வாளர் வெட்டி கொல்லப்பட்டார். தங்களது ஆட்சியை யாரெல்லாம் விமர்சித்தார்களோ அவர்கள் மீது தேச துரோக சட்டம் பாய்ந்தது (பின்னர் அவர்கள் குற்றமற்றவர்கள் என நீதிமன்றம் தீர்ப்பு கூறியது). இவை எல்லாம் மீக சமீபமாக ஊடகங்களில் வெளி வந்த செய்திகள். வெளிவராதவை ஏராளம். இது போன்ற பிரச்சனைகளை களைய என்ன வழி என்று இந்த கட்டுரையில் கூறுகின்றார் திரு. பிரகாஷ் சிங். பிரகாஷ் சிங்கை பற்றி இவர் உலகிலேயே மிகப்பெரிய துணை இராணுவ குழுவான இந்திய எல்லை பாதுகாப்பு படையின் தலைமை அதிகாரியாக பணியாற்றியவர். மேலும் உத்திர பிரதேசம் மற்றும் அசாமின் காவல்துறை தலைமை அதிகாரியாக பணியாற்றிவர்.

——————

  நந்திகிராமத்தில் நடந்த வன்முறையை தவிர்த்திருக்க முடியாதா?. 2002 குஜராத் இனக்கலவரத்தை தடுத்திருக்க முடியாதா? நம்மால் உறுதியாக கூற முடியாது. ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாக கூற இயலும், இது போன்ற கலவரங்கள் தடுக்க முடியாத நிலையில் ஏற்பட்டிருந்தாலும் கூட இந்த வன்முறைகள் மேலும் பரவாமலும், இதன் மூலமாக ஏற்பட்டிருக்கும் இழப்புகளின் எண்ணிக்கையை , வலியையும் குறைத்திருக்க இயலும். காவல் துறை அரசியல்வாதிகளின் கட்டுபாட்டில் இல்லாமல் இருந்திருந்தால்.


  காவல் துறை சீரமைப்பை பற்றி நாம் தொடர்ச்சியாக பேசி கொண்டே இருக்கின்றோம். செப்டம்பர் 22, 2006 அன்று உச்ச நீதி மன்றம் வழங்கிய வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு காவல் துறையினை அரசியல்வாதிகளின் தளைகளிலிருந்து விடுவித்தது. 145 வருட காவல் துறை கட்டமைப்பை ஒரு தீர்ப்பில் மாற்றி எழுதியது. 1861ல் காவல்துறை சட்டம் ஆங்கிலேயனின் அரசியல் நலனுக்காக உருவாக்கப்பட்டது. 1857ல் நடைபெற்ற மக்கள் புரட்சி ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் அடித்தளத்தை சற்று பலமாகவே தாக்கியது. இது போன்ற கலகங்கள் நடைபெறாமலும் தனது ஏகாதிபத்தியத்தை பாதுகாத்து கொள்ள ஆங்கிலேய அரசு உருவாக்கியது தான் காவல் துறை சட்டம். ஏகாதிபத்தியம் நம்மை விட்டு சென்ற‌ சுதந்திரத்திற்கு பின்பு இந்திய அரசியல் தலைவர்கள் இந்த காவல் துறை கட்டமைப்பை மாற்றி காவல் துறையை மக்களுக்கான ஒன்றாக மாற்ற முயன்றிருக்கலாம். ஆனால் அவ்வாறு நடக்கவே இல்லை. தொடர்ந்த வந்த அரசுகள் காவல் துறையை தனது சொந்த அரசியல் விருப்பு வெறுப்பு சார்ந்து தவறாகவே பயன் படுத்தி வந்தன.

 சுதந்திரத்திற்க்கு பின்னர் பல அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்களும், சமூக மாற்றங்களும் நடைபெற்ற பின்னரும் இந்த மாற்றங்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் காவல் துறை கட்டமைப்பில் எந்த ஒரு மாற்றமும் செய்ய வில்லையே என்று எண்ணியதால் 1977ல் இந்திய அரசு தேசிய காவல் துறை ஆணையத்தை நிறுவியது. இந்த தேசிய காவல் துறை ஆணையம் 1979 லிருந்து 1981ற்க்குள் காவல் துறை அடி நிலையிலிருந்து மேல் மட்டம் வரை எவ்வாறு இயங்க வேண்டும் என்று எட்டு விரிவான அறிக்கைகளை அரசுக்கு கொடுத்தது.

 ஆனால் மைய அரசோ அந்த எட்டு அறிக்கைகளை கண்டுகொள்ளவே இல்லை. 1983ல் இந்த அறிக்கைகள் மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்டது , மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கண்துடைப்புக்காக சொல்லப்பட்டது. இந்த அறிக்கையின் சில இடங்களில், தேசிய காவல் துறை ஆணையம் ஷா கமிட்டியின் பரிந்துரைகளை அமல் படுத்த வேண்டும் என்று கோரியது. ஆனால் பல மாநில அரசுகள் இந்த பரிந்துரைகளை முற்றிலுமாக நிராகரித்து விட்டன. மேலும் இந்த அறிக்கையின் சில இடங்களில் அரசியல் மற்றும் காவல் துறை செயல் படும் முறையையும் அதன் கட்டமைப்பையும் மிக கடுமையாக விமர்சித்துள்ளது. தற்சமயம் நடைபெற்றுவரும் ஒருதலைபட்சமான நடவடிக்கைகளை வெளிக் கொணரவும், அதை சரி செய்தவதற்கான வழிகளை உருவாக்குவதே இது போன்ற கடுமையான விமர்சனங்களின் நோக்கம். இவ்வளவு தெளிவான‌ இந்த தேசிய காவல் துறை ஆணையத்தின் பல முக்கிய பரிந்துரைகளை மாநில அரசுகள் அமல் படுத்தாதது யாருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்காது.

 இந்த பரிந்துரைகள் எல்லாம் 1996ல் உச்ச நீதி மன்றத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு பொது நல வழக்கின் மூலமாக் மீக்கொணரப்பட்டன. இந்த வழக்கு பதிவு செய்யப்பட்ட போது உச்ச நீதிமன்றத்தின் கவனம் மேலும் சிலவற்றின் மீதும் விழுந்தது. இந்தியாவையே உலுக்கிய இரு பயங்கர வன்முறைகளே அது. இந்த இரு பயங்கர வன்முறைகளும் காவல் துறையினால் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட முடியாமல் போனதால் ஏற்பட்டவை. 1984ல் நடந்த தில்லி கலவரம், 1992ல் அயோத்தியில் பாபர் மசூதியை இடித்தது. 1984 தில்லி கலவரத்தை ஆராய்ந்த நானாவதி கமிட்டி பின்வருமாறு பரிந்துரைத்தது ” எந்த வித அரசியல் தலையீடுகளும் இல்லாத சுதந்திரமான மற்றும் சரியான உபகரணங்களுடன் உள்ள‌ காவல் துறையே இது போன்ற கலவரங்களை உடனடியாக கட்டுபடுத்த முடியும்”. அயோத்தி கலவரத்தை ஆராயும் லிபரான் கமிட்டி இன்னும் தனது அறிக்கையை அளிக்கவில்லை.

 இந்த பொது நல மனு நீதிமன்றத்தில் இருக்கும் போதே இன்னொரு வன்முறையும் காவல் துறையின் ஒரு தலைபட்சமான நடைமுறைகளால் இந்தியாவில் நடைபெற்றது. 2002 குஜராத் இனக்கலவரம் . இந்த இனக்கலவரத்தை ஆய்வு செய்த தேசிய மனித உரிமை ஆணையம் இவ்வாறு கூறியது ” இந்த இனக்கலவரமும், இந்தியாவில் மற்ற இடங்களில் நடைபெற்ற கலவரங்களும், இதற்கு முன்னரே தேசிய காவல் துறை ஆணையம் பரிந்துரைத்த‌ காவல் துறை சீரமைப்பை உடனே நடைமுறை படுத்த வேண்டும். இது காவல் துறையின் விசாரணைகளில் ஏற்படும் அரசியல் குறுக்கீடுகளை தவிர்க்க உதவும்”.

இந்த பொது நல வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போதே அரசு காவல் துறையை சீரமைக்க வேண்டுமா என திட்டமிட்டே மூன்று ஆணையங்களை அமைத்தது. 1) ரிபேரியோ ஆணையம் 1998, 2) பத்மநாபன் ஆணையம் 2000, 3)குற்றவியல் தண்டணைச் சட்டம் தொடர்பாக ஆய்வு செய்ய மாலிமாத் ஆணையம் 2002. இந்த மூன்று ஆணையங்களும் புதிதாக உருவாகிவரும் சவால்களை சந்திக்க காவல் துறை உடனடியாக சீரமைக்கப்பட வேண்டும் என்ற ஒரே முடிவுக்கு வந்தன. இந்த காவல் துறை சீரமைப்பு என்பது இன்று வரை அமல் படுத்தாதற்க்கு ஒரே காரணம் அரசியல் கட்சிகளின் ஒட்டுமொத்த எதிர்ப்பே.

 காவல் துறை சீரமைப்பில் அரசுக்கு தேவையான நேரத்தை நீதிமன்றம் வழங்கியது. இறுதியாக உச்ச நீதிமன்றம் இறுதியாக தனது வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது. 1)இந்த பிரச்சனையில் உள்ள முக்கியத்துவத்தை கருதியும், 2) சட்டத்தை பாதுக்காக்கவும், பலப்படுத்துவதற்குமான அவசர தேவை கருதியும், 3) இந்த வழக்கு கடந்த பத்து வருடங்களாக நிலுவையில் இருப்பதாலும், 4) பல்வேறு ஆணையங்களும் நாட்டின் காவல் துறை சீரமைப்பை வலியுறுத்தியுள்ளதாலும் 5) எப்பொழுது காவல் துறை சீரமைப்பு நிகழும் என்பது கேள்விக்குறியாக இருப்பதால், மேலும் நம்மால் காத்திருக்க‌ இயலாத காரணத்தினால், காவல் துறை சீரமைப்பு குறித்த சட்டம் மைய / மாநில அரசுகள் இயற்றும் வரை கீழ்க்காணும் வழிமுறைகளை உடனடியாக அமல் படுத்த வேண்டும்.

 இந்த வழிமுறைகள் புதிய காவல் துறை சட்டம் வரும் வரை செயல் படுத்தபடும். உச்ச நீதிமன்றம் மாநில அளவில் மூன்று அமைப்புகளை உருவாக்க வேண்டும் , இவை விசாரணைகளில் ஏற்படும் வெளிப்புற(அரசியல்) குறுக்கீடுகளை களைவதற்கும், சுதந்திரமாகவும் அதே சமயம் தனது செயல்களுக்கான பொறுப்புடனும் காவல் துறை செயல்பட உதவும். அவையாவன,

 1) கலவரங்களை தடுக்கவும், மக்களுக்கான சேவையை நோக்கியும் காவல் துறை செயல்படுவதற்கான விரிவான வழிமுறைகளை வகுத்து செயல்படுத்த‌ ஒரு மாநில பாதுகாப்பு ஆணையம்.

 2) மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பதவிக்கு கீழே உள்ள காவல் துறை அதிகாரிகளை நியமித்தல், பதவி உயர்வு, பதவி மாற்றம் மற்றும் அவர்களுக்கான பணி தொடர்பான வேலைகளை செய்யவும், மேலும் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் அவரது பணிக்கு மேலே உள்ள அதிகாரிகளை நியமித்தல், பதவி உயர்வு மற்றும் பதவி மாற்றம் போன்றவற்றை மாநில அரசுக்கு பரிந்துரை செய்யவதற்கு ஒரு தலைமை காவல்துறை இயக்குநரையும், நான்கு மூத்த அதிகாரிகளையும் கொண்ட காவல்துறை தேர்வாணையம்.

 3) காவல் துறை அதிகாரிகளின் மேலான புகார்களை விசாரிக்க மாவட்ட மற்றும் மாநில அளவில் காவல்துறை புகார் மையம்.

மேலும் இந்த தீர்ப்பில், மைய பணியாளர் தேர்வாணையத்தால் பரிந்துரைக்கப்படும் தகுதியான மூன்று மூத்த அதிகாரிகளிலிருந்தே மாநில அரசுகள் காவல் துறை தலைமை அதிகாரியை தேர்வு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது.

மேலும் இவ்வாறு நியமிக்கப்படும் தலைமை காவல் துறை இயக்குநர் குறைந்தபட்சம் இரண்டு வருடம் அதே பொறுப்பில் இருக்க வேண்டும். மேலும் களத்தில் செயல்படும் காவல்துறை அதிகாரிகளான காவல்துறை தலைவர், காவல் துறை துணை தலைவர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர், ஆய்வாளர்களும் இரண்டு வருடம் அதே பொறுப்பில் இருக்க வேண்டும். இட மாறுதல்களும், பதவி மாறுதல்களும் மாநிலங்களில் மிகப் பெருமளவில் தற்பொழுது நடைபெறுகின்றன. எப்பொழுதெல்லாம் ஆட்சி மாற்றம் ஏற்படுகின்றதோ அப்பொழுதெல்லாம் உயர் பதவியிலிருந்து தொடங்கி மாவட்ட தலைமை பதவி வரை பதவி மாறுதல்கள், இட மாறுதல்கள் நடைபெறுவது வழக்கமாகி விட்டது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அமல்படுத்த பட்டால் இது போன்ற பதவி, இட மாறுதல்களெல்லாம் அரிதாகி விடும்.

 விசாரணை செய்யும் காவல் துறை அதிகாரிகளையும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் காவல்துறை அதிகாரிகளையும் பிரித்து வைக்க வேண்டும், இது விரைவாக விசாரணை நடக்கவும் ,மக்களுடன் ஒரு நல்ல உறவை ஏற்படுத்தவும் உதவும் என நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

 மைய காவல் துறை தலைமை அதிகாரிகளை தெரிவு செய்யவும், அங்கு பணியாற்றும் அதிகாரிகளின் பணி சூழலை மேம்படுத்தவதன் மூலம் அந்த படைகளின் அடுத்த தளத்திற்க்கு நகர்த்துவதற்க்காக மைய அரசு ஒரு தேசிய பாதுகாப்பு ஆணையத்தை உருவாக்கவும் தனது தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

 சோலி சரப்ஜீ கமிட்டி ஒரு உதாரண காவல் துறை சட்டத்தையும் மைய அரசுக்கு 2006 அக்டோபர் 30 அன்று கொடுத்துள்ளது. இந்த சட்டம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளில் உள்ள அடிப்படை கூறுகளை எடுத்து கொண்டு, சற்று வேறு வகையில் அதை நடைமுறைபடுத்துவது எவ்வாறு என கூறியுள்ளது. அதாவது உச்ச நீதிமன்ற தீர்ப்பில் உள்ள ” மாநில பாதுகாப்பு ஆணையம்” சோலி சரப்ஜீ கமிட்டியில் “மாநில காவல்துறை ஆணையம்” என்றும், “மாநில காவல்துறை தேர்வாணையம்” என்பது ” மாநில காவல்துறை தேர்வாணை குழு” என்றும், “காவல் துறை புகார் ஆணையம்” என்பது காவல்துறை பொறுப்பு ஆணையம்” என்றும் மாற்றப்பட்டு உள்ளது. உச்ச நீதிமன்றமும், சோலி சரப்ஜீ கமிட்டியும் காவ‌ல்துறை உயர்நிலை அதிகாரிகளின் பணி வருடத்திலும், விசாரணை செய்யும் காவல் துறை அதிகாரிகளையும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் காவல்துறை அதிகாரிகளையும் பிரித்து வைக்க வேண்டும் என்பதில் ஒத்த கருத்து கொண்டுள்ளன.

 இந்த சீரமைப்பு காவல் துறையின் புகழுக்காக அல்ல, நாட்டில் உள்ள மக்களை நல்லமுறையில் பாதுகாக்கவும், மனித உரிமைகளை பாதுகாக்கவும், அரசமைப்பை அடுத்த தளத்திற்க்கு கொண்டு செல்லவும் என புரிந்துகொள்ள வேண்டும். இந்த தலைமுறை காவல்துறை அதிகாரிகள் நிகழ்வுகளுக்கு தகுந்தாற்போல வளர்ந்து மக்களின் எதிர்ப்பார்பை பூர்த்தி செய்ய வேண்டும்.

 இந்த மாறுதல்கள் அவ்வளவு எளிதாக நடந்துவிட முடியாது. அசாம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா, உத்தராஞ்சல், கோவா போன்ற பத்து மாநிலங்களே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை முழுமையாகவோ (அ) பெரும்பான்மையாகவோ ஏற்றுக்கொண்டு செயல் படுத்த தொடங்கியுள்ளன. மீதமுள்ள பெரும்பான்மையான மாநிலங்கள் இதை செயல்படுத்துவதில் இலுவை நிலையையே தொடர்கின்றன.

இந்த தீர்ப்பை சிறிது கூட மதிக்காத மிக மோசமான மாநிலங்கள் தமிழ் நாடு, மகாராஷ்ட்ரா, உத்திரபிரதேஷ். நீதிமன்றங்களுக்கு மாநிலத்தின் அரசமைப்பை மாற்றுவதற்க்கு உரிமை இல்லை என்று வாதாடுகின்றது தமிழ் நாடு . மகாராஷ்ட்ரா அரசோ உச்ச நீதிமன்றத்தின் வழிமுறைகள் “நடமுறையில் உள்ள அமைப்புக்கு தொடர்பில்லாத வழிமுறைகள்” என்று கூறுகின்றது. உத்திர பிரதேசமோ காவல்துறை சீரமைப்பு ஆணையத்தை உருவாக்கி ஒரு சிறப்பு சட்டத்தை உருவாக்க முயன்றுவருகின்ற‌து.

 மேலும் பீகார்,சட்டீசுகர், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், குஜராத், கேரளா மற்ரும் இராஜஸ்தான் போன்ற ஒன்பது மாநிலங்களும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தடுக்கும் வகையில் சட்டம் ஒன்றை உருவாக்கி உள்ளனர். பீகார் காவல் துறை சட்டம் 2007ல் உருவாக்கப்பட்ட மிக மோசமான ஒரு சட்டம் ஆகும்.

 இது போன்ற காவல் துறை சட்டங்கள் நடைமுறைக்கு வரும் பொழுது மக்களின் நம்பிக்கையை பெறுவதில்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடைமுறை படுத்தாத மாநிலங்களில் பொது மக்களை பெருமளவில் ஒன்று திரட்டி அந்தந்த மாநிலங்களுக்கு நெருக்குதலை உண்டாக்க வேண்டும்.

 உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் நடைமுறை படுத்த படும்போது, காவல் துறை வேலை செய்யும் விதமே மாறி விடும், ஆட்சியாளர்களின் காவல் துறை என்பது மக்களுக்கான காவல் துறை என்பதாக மாறும்.

 மூலப்பதிவிற்க்கான சுட்டி : http://www.littlemag.com/security/prakashsingh.html

மொழியாக்கம்  செய்வதற்கான‌ வாய்ப்பை வழங்கியமைக்கு நன்றி: கீற்று இரமேஷ்

Advertisements
%d bloggers like this: