ஊதி பெருக்கப்படும் பாபர் மசூதி தீர்ப்பு…..


     அமைதிபடை படத்துல சத்யராச் இந்த வசனத்தை பேசுவாப்ல “நம்மை செய்த பிரச்சனையல்லாம் மறைக்குணும்ன வைச்சுக்க மக்கள்ட்ட புதுசா பிரச்சனையை கிளப்பிவிட்டா போதும், மடையனுங்க நம்ம பண்ணுத மறந்துருவாங்க”. இந்த‌ க‌ருத்திய‌லை தான் இந்திய‌ அர‌சும், அத‌ற்கு ஒத்து ஊதுவ‌த‌ற்காக‌வே உருவாக்க‌ப்ப‌ட்டுள்ல‌ ஊட‌க‌ங்க‌ளும் பாபர் மசூதி தீர்ப்பின் மூல‌ம் மிக‌ திற‌மையாக‌ கையாண்டுவ‌ருகின்ற‌ன‌ர்.
அயோத்தி பிர‌ச்ச‌னை மிக‌ முக்கிய‌மான‌து என்ப‌தில் என‌க்கு எந்த‌ வித‌ மாற்று க‌ருத்தும் இல்லை. ஆனால் அதை ஒரு கார‌ணியாக‌ வைத்து “அர‌ச‌ உருவாக்கிய‌ பிர‌ச்ச‌னைக‌ள்” ம‌றைக்க‌ப்ப‌ட்டு விட்ட‌ன‌ என்ப‌தே என் கோப‌ம். வ‌ழ‌மை போல‌ பொதும‌க்க‌ள் தங்களை தாங்களே மடைய‌ர்க‌ளாக முத்திரை குத்திக் கொண்டார்க‌ள். ஆம், இது தான் உண்மை. ம‌க்க‌ளுக்கு எப்பொழுதுமே ஒரு நேர‌த்தில் ஒரு பிர‌ச்ச‌னை தான் முத‌ன்மை ம‌ற்ற‌வை எல்லாம் முக்கியமானவையாக இருந்தாலும் கூட பின்னுக்கு த‌ள்ள‌ப்ப‌ட்டுவிடும்.

 அயோத்தியை கார‌ணியாக்கி அர‌சு ஓர‌ம் க‌ட்டிய‌ இரு முக்கிய‌ பிர‌ச்ச‌னைக‌ள் “காசுமீர் பிர‌ச்ச‌னை”, “காம‌ன்வெல்த் ஊழ‌ல்” . இந்த‌ இர‌ண்டு பிர‌ச்சனைக்கும் மூலகாரணி இந்திய‌ அர‌சு தான். இந்த‌ இர‌ண்டு பிர‌ச்ச‌னைக‌ளையும் பொது ம‌க்க‌ளிட‌ம் இருந்து புற‌ம் த‌ள்ளுழ‌து எப்ப‌டி என்று அர‌சு யோசித்த‌த‌ன் விளைவு தான் அயோத்தி தீர்ப்பு. நான் முன்ன‌ரே கூறிய‌து போல‌ அயோத்தி தீர்ப்பு முக்கிய‌ம் வாய்ந்த‌து என்ப‌தில் என‌க்கு எள்ள‌ள‌வும் மாற்றுக்க‌ருத்து இல்லை. ஆனால் அப்ப‌டி ப‌ட்ட பாபர் மசூதி தீர்ப்பை அர‌சு வெளியிட‌ இதுவ‌ரை ந‌ட‌த்திய “புலிவ‌ருது”, புலிவருது” நாட‌க‌ங்க‌ளே அரசின் உண்மை முகம் வெளிவர காரணமாகும். இப்பொழுது நாம் இந்த‌  பாபர் மசூதி தீர்ப்பின் மூல‌ம் ஓர‌ம் க‌ட்ட‌ப்ப‌ட்டு விட்ட‌ இர‌ண்டு முக்கிய‌ பிர‌ச்ச‌னைக‌ளை பார்ப்போம்.

காசுமீர் பிர‌ச்ச‌னை:  

1947ல் இந்தியா டொமினிய‌னான‌ போது (1947 ஆகத்து 15லிருந்து 1950 சனவரி 26 வரையிலும் இந்தியா பிரிட்டனின் ஆளுகைக்கு கீழ் தான் இருந்தது, 1947ல் கிடைத்த‌து சுத‌ந்திர‌ம் அல்ல‌)ப‌தான்க‌ளின் ப‌டையெடுப்பை தடுக்க‌ காசுமீர் என்ற‌ நாட்டிற்கு சென்ற‌ இந்தியா இன்று வ‌ரை அவ‌ர்க‌ளை ஆக்கிர‌மித்து வ‌ருகின்ற‌து. இந்த‌ ஆக்கிர‌மிப்பை எதிர்த்து காசுமீரிக‌ள் தொட‌ர்ச்சியாக‌ போராடியும் ஒவ்வொருமுறையும் அந்த போராட்டங்களை இந்திய‌ ஆதிக்க‌ அர‌சு ந‌சுக்கியும் உள்ள‌து.  இப்ப‌டிப‌ட்ட‌ காசுமீர் பிர‌ச்ச‌னை இந்திய‌ நாட்டின் பொதும‌க்க‌ளிட‌ம் விவாத‌ பொருளாக‌ மாறுவ‌த‌ற்கு க‌ட‌ந்த‌ சூலையிலிருந்து ம‌ட்டும் நூற்றுக்கும் அதிகமான‌ காசுமீரிக‌ள் த‌ங்க‌ள் இன்னுயிரை தியாக‌ம் செய்துள்ளார்க‌ள். ஆனால் இன்று நாம் அந்த‌ நூற்றுக்கும் அதிக‌மான‌ உயிர்களின் தியாகத்தை தீயிலிட்டு பொசுக்கி விட்டோம். மேலும் இப்பொழுது வ‌ரும் தீர்ப்பு இந்துக்க‌ளுக்கு ஆத‌ர‌வாக‌ வ‌ந்தால், இனி காசுமீரிக‌ளின் விடுத‌லை போராட்ட‌ம் ‌ அர‌சாலும், அத‌ன் ஆளுகையிலுள்ள ஊட‌க‌ங்க‌ளாலும் “இசுலாமிய‌ ம‌த‌ போர‌ட்ட‌மாக” சித்த‌ரிக்க‌ப்ப‌டும் வாய்ப்பும் உள்ள‌து. எது எப்ப‌டியோ இன‌த்தின் விடுத‌லை போராட்ட‌த்தை நாம் ம‌ற‌ந்து ஒன்றுக்கும் உதவாத‌ தீர்ப்பை வைத்துக் கொண்டு விவாத‌ம் செய்து வ‌ருவோம். இப்படி ஒன்றுக்கும் உதவாத தீர்ப்பு என்று சொன்னது நானல்ல, அதை சொன்னது இந்திய‌ அர‌சின் உள்துறை செய‌ல‌ரான‌ சி.கே.பிள்ளை, ஆம் அதற்கு பதிலையும் அவரே கூறியுள்ளார் “உச்சநீதிமன்றம் எனறு ஒரு வாய்ப்பு இருக்கும் போது ஏன் இந்த தீர்ப்பிற்கு நாம் கவலைப்பட வேண்டும், இந்த தீர்ப்பு வந்தவுடம் நாளை உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்ய வேண்டியது தானே”. ஆம் இப்ப‌டி ப‌ட்ட‌ ஒரு தீர்ப்பிற்காக‌ தான் நாம் ஒரு இன‌த்தின் விடுத‌லை போராட்ட‌த்தை ம‌ற‌(றை)ந்து விட்டோம். இப்பொழுது சொல்லுங்க‌ள் நாம் ம‌டைய‌ர்க‌ள் தானே.
காம‌ன்வெல்த் போட்டி ஊழ‌ல்க‌ள்:

காமன்வெல்த் போட்டிக்கு செலவாகும் என்று முதலில் திட்டமிட்ட தொகை 617.5 கோடி, ஆனால் இப்பொழுது நூறு மடங்குக்கும் மேல் அதிகமான தொகையான‌ 65500 கோடி என்றளவில் உள்ளது. ஆனால் 2014ல் காமன்வெல்த் போட்டியை  நடத்தப்போகும் ஸ்காட்லான்ட் திட்டமிட்டுள்ள தொகை 3749 கோடிகள். இந்திய அரசு 2010 11 வரவு செலவில்(Budget) ம‌ருத்துவ‌த்திற்காகவும்(22,300), பள்ளிக்கல்விக்காகவும்(31,600) ஒதுக்கிய தொகையை கூட்டினால் கூட‌ 53,900 கோடி தான் வ‌ருகின்ற‌து ஆனால் இந்த‌ அள‌வையும் மீறி உள்ள‌து காம‌ன்வெல்த் போட்டிக்கான‌ ஊழ‌ல் தொகை. ஆம், இந்த‌ 65,500 கோடியையும் இந்தியா காம‌ன்வெல்த் போட்டியில் செலவு செய்ய‌வே இல்லை என்ப‌து சில‌ தின‌ங்க‌ளாக‌ வ‌ரும் செய்திக‌ளை க‌ண்டுவ‌ரும் சிறு குழ‌ந்தைக்கு கூட‌ புரியும் ஒன்று. இப்ப‌டி ப‌ட்ட‌ அகில உல‌க‌ ஊழ‌லையும் நாம் பாப‌ர் ம‌சூதி தீர்ப்பின் மூல‌மாக‌ ம‌ற‌(றை)ந்து விட்டோம். இப்பொழுது சொல்லுங்க‌ள் நாம் ம‌டைய‌ர்க‌ள் தானே.

இப்படிக்கு
உங்களைப் போன்றே ஒரு ம‌டைய‌ன்

Advertisements
 1. அயோத்தி தீர்ப்பில் சர்ச்சைக்குரிய இடம் “இராமர் பிறந்த இடம்” என்று நீதிமன்றம் கூறிவிட்டதாக பரப்புரை செய்யப்படுகிறது. ஆனால் அவ்வாறு தீர்ப்பில் கூறப்படவில்லை.

  இராமர் பிறந்த இடம் என்று இந்துக்கள் நம்புவதாக மட்டுமே கூறப்பட்டிருக்கிறது. நம்புவது வேறு, உண்மை வேறு. இரண்டும் ஒன்றல்ல.

  • ?
  • செப்ரெம்பர் 30th, 2010

  ARUL
  Antha nambikkai adipadaiyil thanae theerppu solli ullaargal

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Advertisements
%d bloggers like this: