இராசீவ் காந்தியை கொலை செய்ய முயற்சி….


1987 சூலை 30 புத‌ன் கிழ‌மை கையெழுத்தாகும் இந்திய‌ இல‌ங்கை ஒப்ப‌ந்த‌த்தை எதிர்த்து சூலை 29, 30 ஆகிய இர‌ண்டு நாட்க‌ளும் சிங்க‌ள‌ ம‌க்கள் போராட்ட‌த்தில் ஈடுப‌ட்ட‌ன‌ர். இந்த‌ ஒப்ப‌ந்த‌ம் த‌மிழ‌ர்க‌ளுக்கு அதிக‌ ச‌லுகைக‌ள் வ‌ழ‌ங்குவ‌தாக‌வும், அதிலும் குறிப்பாக‌ த‌னி நாடு கோரும் போராளி குழுக்க‌ளுக்கு அதிக‌ ச‌லுகைக‌ள் வ‌ழ‌ங்குவதாக‌ த‌வ‌றாக‌ க‌ருதிய‌தாலும்,  இந்திய‌ விரிவாதிக்க‌ கொள்கையின் ஒரு ப‌குதியாக‌ இந்திய‌ அமைதி ப‌டை என்ற‌ பெய‌ரில் இந்திய‌ இராணுவ‌ம் இல‌ங்கை வ‌ருவதையும் சிங்கள மக்கள் எதிர்த்தார்க‌ள்.  இந்த‌ இர‌ண்டு நாள் போராட்ட‌த்தில் ம‌ட்டும் 40 சிங்க‌ள‌ ம‌க்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்ட‌தாக‌ இல‌ங்கை அர‌சு கூறிய‌து(1).

 இந்த‌ எதிர்ப்பு போராட்ட‌த்தின் ஒரு ப‌குதியாக‌ இல‌ங்கை க‌ட‌ற்ப‌டையில் இருந்த‌ மூவ‌ர் இராசீவ் காந்தியை கொலை செய்ய‌‌ திட்ட‌மிட்டார்கள்.  உங்க‌ளுக்கு எல்லாம் விய‌ப்பாக‌ இருந்தாலும் நான் சொல்வ‌து உண்மை தான், ஆம் இராசீவ் காந்தியை கொலை செய்ய‌‌ திட்ட‌ம் தீட்டினார்கள். ஒருவர் தனது கையிலுள்ள துப்பாக்கியின் கனமான பின்புறத்தின் மூலம் இராசீவின் தலையில் அடித்து கீழே தள்ளவேண்டும், முதலில் அடிப்பவரின் இரு புறமும் இருப்பவர்கள் இராசீவ் காந்தியை மேலும் தாக்கி கொல்லவேண்டும். ஆனால் ஏதோ ஒரு கார‌ண‌த்தினால் முத‌லில் தாக்கிய‌வ‌ரின் இரு புற‌மும் இருப்ப‌வ‌ர்க‌ள் திட்ட‌மிட்ட‌ப‌டி இராசீவை தாக்க‌வில்லை. ஒரு வேளை அவ‌ர்க‌ள் இருவ‌ரும் இராசீவை தாக்கியிருந்தால் ப‌ல‌த்த‌ காய‌த்துடனோ அல்லது அவ‌ர் இறந்து போயிருக்கவும் கூடும். இந்த‌ திட்ட‌ம் மிக‌வும் இர‌க‌சிய‌மாக‌வே வைக்க‌ப்ப‌ட்ட‌து. வ‌ழ‌க்கு விசார‌ணையில் இதை விச‌ய‌முனிங்க‌ ரோக‌ன டி சில்வா ஒப்புக்கொண்டார்.  இந்த கொலை முயற்சியில் பங்குகொண்ட முக்கிய குற்றவாளியான விச‌ய‌முனிங்கவிற்கு ஆறு வருட சிறை த‌ண்ட‌னை அளிக்க‌ப்ப‌ட்ட‌து. பின்னர் பிரேமதாசா அதிபரானவுடன் விசயமுனிங்காவிற்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. (1)

கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு சுடாமல் ஏன் தாக்கினார்கள் என உங்களுக்கு கேள்வி எழுவது இயற்கையே. நாட்டின் பிர‌த‌ம‌ர், அதிப‌ர் போன்றோர் வ‌ருகையில் அதில் ப‌ங்குகொள்ளும் ப‌டை வீர‌ர்க‌ளுக்கு வழ‌ங்க‌ப்ப‌டும் துப்பாக்கியில் இர‌வைக‌ள்(Bullet) இருக்காது, ஒரு வேளை அவ்வாறு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டிருந்தால் ??????
 

 உங்க‌ளுக்காக‌ அந்த‌ காட்சி.

இந்த கொலைமுயற்சியைப் ப‌ற்றிய‌ சில‌ர‌து க‌ருத்தைப் பார்ப்போம்.

அதிப‌ர் செய்வ‌ர்தனே முத‌லில் ச‌மாளிப்ப‌த‌ற்காக‌க் கூறிய‌ வார்த்தைக‌ள் “சற்று மயக்கத்தில் இருந்ததால் அவர் துப்பாக்கியை நிலை தடுமாறி கீழே போட்டுவிட்டார்”.(1)
இராசீவ் “சிவப்பு கம்பள வரவேற்பு பெற்றுக்கொண்டிருக்கும் போது யாரோ ஒருவர் நகர்வதைப் பார்த்ததால் நான் சற்று தலையை கீழே குனிந்து விட்டேன், இருப்பினும் எனது இடது புற தோள்பட்டையையும், இடது செவியையும் சற்றே பதம் பார்த்துச் சென்றது அந்தத் துப்பாக்கி. நான் ந‌ன்றாகத் தான் உள்ளேன், உங்க‌ளுக்கு என‌து ச‌ட்டையை க‌ழ‌ற்றி காட்ட‌ வேண்டுமா” என மிகக் கோபத்துடன் கேட்டார் இராசீவ். இந்த நிகழ்வை கொலை முயற்சி எனச் சொலவதா அல்லது ஒரு தாக்குதல் நிகழ்வு எனச் சொல்வதோ எல்லாம் உங்கள்(ஊடகவியலாளர்களின்) விருப்பம் எனவும் இராசீவ் கூறினார். (1)

சோனியா “இந்த‌ ஒப்ப‌ந்த‌ம்(1987 இந்திய‌ இல‌ங்கை ஒப்ப‌ந்த‌ம்) சிங்க‌ள மக்களில் ஒரு பிரிவினரிடையே கோப‌த்தை உண்டாக்கிய‌து. 30 சூலை (1987) அன்று அவ‌ர் சிவ‌ப்பு க‌ம்ப‌ள‌ வ‌ர‌வேற்பு பெற்றுக் கொண்டிருக்கும் போது ஒரு க‌ட‌ற்ப‌டை சிப்பாய் ச‌ற்று ந‌க‌ர்ந்து அவ‌ரை குறிபார்த்து த‌ன‌து துப்பாக்கியின் க‌ன‌மான‌ பின்புற‌த்தால் தாக்கினான். இந்த‌ தாக்குத‌லில் அவ‌ர‌து த‌லை த‌ப்பிய‌து, ஆனால் துப்பாக்கியின் முழு விசையும் அவ‌ர‌து இட‌து தோள்ப‌ட்டையை ப‌ல‌மாக‌ தாக்கிய‌து.

திடீரென‌ இந்த‌ நிக‌ழ்வு ந‌ட‌ந்ததால் அந்த‌ இட‌த்தில் இருந்த‌ ஒரு சிலருக்கே அங்கு என்ன நடந்தது எனப் புரிந்தது. ஆனால் பல நாட்களுக்கு அவரால் தனது தோள்பட்டையை சுல‌பமாக‌ சுற்ற‌ முடிய‌வில்லை, இட‌து புறமாக‌ அவ‌ரால் ப‌டுத்து தூங்க‌க்கூட‌ முடிய‌வில்லை”.(1)

இல‌ங்கைக்கான‌ இந்தியத் தூதுவ‌ர் சே.என்.திட்சித் கூறுகையில்,

1) இது திட்ட‌மிட்ட(தவறிவிட்ட) கொலை முய‌ற்சி
2) இந்த‌ தாக்குத‌லினால் ஒன்று தெளிவாக‌ புரிகின்ற‌து. இந்திய‌ இல‌ங்கை ஒப்ப‌ந்த‌த்தை முத‌ன் முத‌லில் எதிர்த்த‌வ‌ர்க‌ள் சிங்க‌ள‌வ‌ர்க‌ளே, இத‌ன் விளைவே இந்த‌ தாக்குத‌ல்.

இந்த கொலை முயற்சிக்கு மூலகாரணமான இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் சரத்துகள்.

1) இலங்கை அரசமைப்பில் 13ஆவது திருத்தத்தை உருவாக்குவதன் மூலம் மாகாண சபைகளுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும் என இலங்கை அரசு அறிவிக்கின்றது.  வ‌ட‌க்கு கிழ‌க்கு ப‌குதியை இணைத்து ஒரு தற்காலிகமான தமிழ் மாகாணம் உருவாக்கப்படும். இது தொடர்வதா? இல்லையா? என தீர்மானிப்பதற்கு கிழக்கு பகுதி மக்களிடம் ஓராண்டுக்குள் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். முதலமைச்சர் தேர்வு செய்யப்படும் வரை இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படும்.

2) 1987 சூலை 31ல் இருந்து இல‌ங்கை அர‌சிற்கும் போராளிக‌ளுக்கும் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வருகின்றது

3) போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பின்னர் போராளி அமைப்புக‌ள் தங்களிடமுள்ள ஆயுத‌ங்க‌ளை இந்திய அமைதி ப‌டையின‌ரிட‌ம் கைய‌ளிக்க‌ வேண்டும்.

4) ஆகத்து 31, 1987 அன்று முதல் வடக்கு கிழக்கில் அவசர காலச்சட்டமும், இராணுவ ஆட்சியும் நீக்கப்படும்.

5)அர‌சிய‌ல் கைதிகளுக்கும், குற்ற‌ம் சாட்ட‌ப்ப‌ட்டுள்ள‌ போராளிக‌ளுக்கும் பொது ம‌ன்னிப்பு வ‌ழ‌ங்க‌ப்ப‌டுகின்ற‌து. இத‌ன் மூல‌ம் கைதான‌வ‌ர்க‌ள் அனைவ‌ரும் விடுவிக்க‌ப்ப‌ட‌ வேண்டும். (2)

இதில் இந்திய, இலங்கை அரசின் நலன் சார்ந்த பகுதிகளும் உள்ளன. இவை ம‌க்க‌ளுக்கு காட்ட‌ப்ப‌டாத‌ ப‌குதிக‌ள்.

இந்திய‌ அர‌சின் ந‌ல‌ன் சார்ந்த‌வை:

1) இலங்கையின் கிழக்கு பகுதியின் உள்ள திரிகோணமலை துறைமுகத்தை இந்தியாவின் நலனை பாதிக்கக்கூடிய வகையில் வேறு எந்த ஒரு நாட்டிற்கும் வழங்கக்கூடாது.(3)

2)இலங்கையின் எந்த பகுதியையும் வேறு எந்த நாடும், இராணுவமும் பயன்படுத்திக்கொள்வதற்கு இலங்கை இசைவு(permission) அளிக்க‌‌க்கூடாது.(3)

3) வெளிநாட்டு ஒலிபரப்பு நிலையங்கள், இராணுவ ரீதியான அச்சுறுத்தல் உள்ள ஒளிபரப்புகளை இலங்கை மண்ணில் இருந்து மேற்கொள்ளக்கூடாது.(3)

4) திரிகோண‌ம‌லை எண்ணெய் கிண‌றுக‌ளை இந்தியாவிற்கு த‌ர‌ வேண்டும்.(3)

இல‌ங்கை அர‌சின் ந‌ல‌ன் சார்ந்த‌வை:

1)இந்தியா இல‌ங்கை அரச‌ ப‌டையின‌ருக்கு ப‌யிற்சியையும், படைக்கலன்களும் தொடர்ந்து வழ‌ங்கப்பட‌ வேண்டும்.(3)

2) இந்தியாவில் உள்ள‌ போராளி அமைப்புக‌ளை சார்ந்த‌வ‌ர்க‌ள் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட‌ வேண்டும்.(3)

அரசியல் அனுபவம் இல்லாமல் இராசீவ் செய்த இந்த ஒப்பந்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள்.

1)இந்திய‌ அமைதிப்ப‌டை த‌மிழ‌ர் ப‌குதிக‌ளில் இருந்த‌தால், இல‌ங்கை இராணுவ‌ம் சிங்க‌ள‌ ப‌குதிக‌ளில் அர‌சுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுப‌ட்டுக்கொண்டிருந்த‌ சிங்க‌ள‌ ம‌க்களுக்கு எதிராக சண்டையில் ஈடுபட்டது, இதனால் கிளர்ச்சியில் ஈடுபட்ட‌ ஆயிர‌க்க‌ண‌க்கான‌ சிங்க‌ள‌ ம‌க்க‌ள் சுட்டுக்கொல்ல‌ப்ப‌ட்டார்க‌ள்.(4)

2)இந்திய‌ அமைதிப்ப‌டையினரின் தாக்குதலினால் ஆயிர‌க்க‌ண‌க்கான‌ பொதும‌க்க‌ள் சுட்டுக்கொல்ல‌ப்பட்டார்க‌ள், நூற்றுக்கும் அதிக‌மான‌ பெண்க‌ள் பாலிய‌ல் வ‌ல்லுறவுக்குள்ளாக்க‌ப்ப‌ட்டார்க‌ள்.(5)

3) போராளிகளுக்கு எதிரான‌ ச‌ண்டையில் ஆயிர‌த்திற்கும் அதிக‌மான‌ இந்திய‌ பாதுகாப்பு ப‌டையின‌ர் உயிரிழ‌ந்தார்க‌ள். இப்ப‌டி மூன்று த‌ர‌ப்பு ம‌க்க‌ளும் இந்த‌ ஒப்ப‌ந்தத்தால் பாதிக்க‌ப்ப‌ட்டார்க‌ள். அதே நேரம் இந்த‌ ஒப்ப‌ந்தத்தால் ப‌ல‌ன‌டைந்த‌து சிங்க‌ள‌ ஆளும் வர்க்கமும், இந்திய‌ ஆளும் வர்க்கமும் அத‌ன் விரிவாதிக்க‌ கொள்கை (முத‌லாளிக‌ளின் ந‌ல‌ன் தான் விரிவாதிக்க‌ கொள்கையின் சாராம்ச‌ம்) ம‌ட்டுமே.(5)

த‌ர‌வுக‌ள்:

(1)http://www.sangam.org/taraki/articles/2006/07-28_JVP_Rajiv.php?print=sangam

(2)http://www.ipcs.org/pdf_file/issue/1226731325IPCS-IssueBrief-No50.pdf

(3) வெடித்த‌ நில‌த்தில் வேர்க‌ளைத் தேடி ‍ ஆவ‌ண‌ப்ப‌ட‌ம்

(4)http://en.wikipedia.org/wiki/1987%E2%80%9389_JVP_Insurrection

(5)http://en.wikipedia.org/wiki/Ipkf

ந‌ற்ற‌மிழ‌ன்.

Advertisements
  1. என்னது இராஜீவ் காந்தி செத்துட்டாரா? எப்படி? என்னது கொன்னுட்டாங்களா? யாரு? என்னது புலிகளா? டேய்… யார் அங்க… இனி காட்டுல ஒரு புலிகூட இருக்க கூடாது. அவ்வளவு ஏன் ‘இந்தியாவோட தேசிய விளங்கா’ கூட இனி புலிகள் இருக்க கூடாது…. அடிச்சு கொல்லுங்கடா…!!! பாவம் எத்தனை காங்கிரஸ் காரங்க அவரோட சேர்ந்து செத்தான்களோ தெரியலியே…. என்னது ஒருத்தர் கூட சாகலியா? டேய்…நிறுத்து…நிறுத்து… எங்கையோ இடிக்குதே? நல்லா விசாரிச்சீங்களா? என்ன… விசாரணை aarampikkiRadhukku முன்னாடியே தீர்ப்பு கொடுத்துட்டாங்களா? என்னன்னு? ‘புலிகள்’ தான் இதை செஞ்சாங்கனா? யார் சொன்னா? ஒ… சுப்ரமணிய சாமி சொன்னாரா? தலை சுத்துதே…. ஏதோ வில்லங்கம் புடிச்சதா இருக்கும்போல இருக்கே… சரி நமக்கு எதுக்கு வம்பு…. எதுக்கும் சொல்லிவைப்போம் ‘புலிகள் ஒழிக’….’பிரபாகரன் ஒழிக’….!!!

  2. இந்த ஒப்பந்தத்தால் இலங்கை அரசு மட்டுந்தான் நன்மையடைந்தது,இந்தியாவுக்கு இன்னமும் வாழைப்பழம் மட்டுந்தான்.தோல் கூடக் கிடைக்காது.

    • ஆனால் இங்கு இருக்கும் சில தேசபக்தி பழங்களுக்கு இது புரியவில்லையே தோழர்.

  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Advertisements
%d bloggers like this: