மீண்டு வந்தார்கள் விடுதலைப்புலிகள்


உண்மை தான், மீண்டு வந்து விட்டார்கள் தமிழீழ விடுதலைப் புலிகள். தனது சாம்பலிலிருந்து மீண்டு வருமாம் பீனிக்சு பறவை, புலிகளும் அதே போல தனது சாம்பலிலிருந்து மீண்டு வந்திருப்பார்கள் என நினைக்கின்றேன். சொல்வ‌‌து நானாக இருந்தால் உங்களுக்கு ஐயம் எழுவது இயற்கை. ஆனால் இதைச் சொன்ன‌‌து இந்திய உளவுத்துறை. நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் இது தான் உண்மை.

புலிகள்  இந்தியாவின் தெற்கு கடலோர பகுதி வழியாக அண்மையில் ஊடுருவி தற்பொழுது தமிழகத்தில் இருக்கின்றார்கள். ச‌ன‌வ‌ரி மாத‌ம் த‌மிழ‌க‌ம் வ‌ரும் இந்திய‌ப் பிர‌த‌ம‌ர் ம‌ன்மோக‌ன் சிங்கையும்,  இந்திய உள் துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும் அவ‌ர்க‌ள் குறிவைத்துள்ளார்க‌ள், மேலும் த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ர். க‌ருணாநிதியையும் அவ‌ர்க‌ள் குறிவைத்துள்ளார்க‌ள் என‌ இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார் தமிழ்நாட்டின் மாநில காவல்துறைத் தலைவர்.  இல‌த்திகா ச‌ர‌ண் அவ‌ர்க‌ள் (இவ‌ர் முத‌லில் இந்த‌ ப‌த‌விக்கு தமிழக அரசால் நியமிக்கப்பட்டதும், அதன் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்ததும் அதில் அரசு இவருக்கு ஆதரவாக பேசியதும் வாசகர்கள் எல்லோருக்கும் தெரியும், அதனால் இவர் அரசின் சார்பாக பேசுகின்றார் என வாசகர்கள் நினைப்பதை நான் தடுக்க முடியாது, ஏன் என்னால் தடுக்க முடியாது என்பதை நான்காவது பத்தியில் விரிவாக கூறியுள்ளேன்).   மேலும் அந்த‌ அறிக்கையில் இந்த‌ த‌க‌வ‌லை வ‌ழ‌ங்கிய‌து இந்திய‌ உள‌வு துறை(IB) என்றும் அவ‌ர் கூறியுள்ளார்.(1)

இது இன்று வ‌ந்த‌ செய்தி, இப்பொழுது நாம் நேற்று வ‌ந்த ஒரு செய்தியைப் பார்ப்போம். ஏனென்றால் வ‌ர‌லாறு என்ப‌து நேற்றைய‌ நிக‌ழ்வுக‌ளின் தொட‌ர்ச்சி என‌ என் ந‌ண்ப‌ர். செந்தில் அடிக்க‌டி கூறுவார். நேற்றைய‌ச் செய்தி இந்தியாவில் விடுத‌லைப் புலிக‌ள் மீதான‌ த‌டையை நீக்க‌வேண்டும் என்று சென்னை உச்ச‌நீதிம‌ன்ற‌த்தில் வ‌ழ‌க்கு ப‌திவு செய்துள்ளார் மதிமுக தலைவர். வைகோ அவர்கள். இதில் அர‌சு த‌ன‌து ப‌திலை அளிக்க‌ வேண்டுமென‌ நீதிப‌தி நேற்று உத்த‌ர‌விட்டுள்ளார்.(2)


ஒருவேளை புலிகள் மீதான தடையை நீக்கக்கோரி பதிவு செய்யப்பட்ட‌ வழக்கில் அர‌சு த‌ர‌ப்பு தனது பிரதிவாதத்தை அளிக்க வேண்டும் என நேற்று சொன்ன‌தால் இன்று இப்படி ஒரு அறிக்கை வந்திருக்கலாமோ என வாசகர்களாகிய நீங்கள் எண்ணுவதை நான் தடுக்க முடியாது, ஏனென்றால் இந்தியா ஒரு மக்களாட்சி நாடு, ஒவ்வொரு குடிமகனுக்கும் “பேச்சுரிமை”, “எழுத்துரிமை”, “தாமாக சிந்திக்கும் உரிமை” உண்டு என்கிறது இந்திய அரசியலமைப்புச் சட்டம். ஏற்கனவே கடந்த சூன் 12,2010 அன்று நடைபெற்ற விழுப்புரம் தண்டவாள குண்டுவெடிப்பை விடுதலைப் புலிகள் செய்திருக்கலாம் என‌ இதே தமிழக காவல்துறை வழக்கைப் பதிந்து இன்னும் துப்பு(?) துலக்குவது தாங்கள் எல்லோரும் அறிந்ததே.  அதற்குள்ளாக விடுதலைப் புலிகள் அமைப்பின் மேல் மேலும் ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளது தமிழக காவல் துறை.  இந்த குற்றச்சாட்டிற்கு நீங்கள் ஆதாரம் எல்லாம் கேட்கக்கூடாது,  அப்படி கேட்டாலும் கிடைக்காது.   ஏனென்றால் இது இந்தியாவின் பாதுகாப்புத் தொடர்பானது,  சட்டப்படி இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களை வெளியிடுவது தவறு என தமிழக காவல் துறை கூறும்,  ஒரு வேளை உண்மையான தகவல் உங்களுக்கு கிடைத்தாலும் நீங்களும் வெளியிட முடியாது. அப்படி வெளியிட்டால் உங்கள் மீது தேச துரோக வழக்கு பாயும்.

தரவுகள்:
1) http://www.indianexpress.com/news/ltte-plans-to-attack-pm-home-minister-tn-cm-dgp/725210/
2)http://www.dnaindia.com/india/report_mdmk-leader-vaiko-s-plea-against-ltte-ban-centre-directed-to-file-counter-affidavit_1481127

ந‌ற்ற‌மிழ‌ன்.

Advertisements
 1. //ஒருவேளை புலிகள் மீதான தடையை நீக்கக்கோரி பதிவு செய்யப்பட்ட‌ வழக்கில் அர‌சு த‌ர‌ப்பு தனது பிரதிவாதத்தை அளிக்க வேண்டும் என நேற்று சொன்ன‌தால் இன்று இப்படி ஒரு அறிக்கை வந்திருக்கலாமோ //

  என்னக் கொடுமை சார் !!!

  • அரச கொடுமை தோழர்.இக்பால்

 2. உண்மை தான்…

  • thamizhmani
  • திசெம்பர் 16th, 2010

  பேய்கள் அரசாலும் நாட்டில் அரசு பணியாளர்கள் பிணம் தின்றுதானே ஆகவேண்டும்……..

  • புரிதலுக்கு நன்றி தோழர்.தமிழ்மணி

  • srisaravanakumar
  • திசெம்பர் 16th, 2010

  எல்லாம் சரி , புலிகள் ஏன் சோனியா காந்தியை குறி வைக்க வில்லை. சிறு பிள்ளைக்கு கூட தெரியும் ஈழத்தில் நடந்த இனபடுகொலைக்கு முக்கிய காரணம் சோனியா குடும்பம் என்று
  இந்த அறிக்கை ஜோடிக்கப்பட்ட ஒன்று என்று தெள்ள தெளிவாவது இந்த விசயத்தில் தான். மறைமுகமாக கூட சோனியா குடும்பத்தை ஈழ விசயத்தில் இழுத்து விடக் கூடாது என்பதில் நம் உளவு துறையும் காவல் துறையும் கவனமாக இருக்கின்றன. அப்படி சோனியாவையும் இந்த லிஸ்டில் சேர்த்தால் எங்க அப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையாகி விடுமே.

  • புரிந்துகொண்டால் ச‌ரி

 3. நாளைக்கு சாகப் போகிற கிழம்கட்டைகளை கொல்வதற்கு புலிகள் ஒன்றும் சிங்கள இராணுவமோ, அல்லது அதன் அடிமை தேசமான இந்திய நாட்டின் இராணுவமோ அல்ல. மிகவும் நேர்மையாகவும், கண்ணியமாகவும் நடந்த இராஜீவ் காந்தி என்ற ஒரு சாதாரண இந்திய குடிமனின் படுகொலை வழக்கு விசாரணை ஒருபுறம் இருக்கட்டும். அது நீங்கலாக ‘புலிகள்’ இந்தியாவின் பாதுகாப்பை சீர்குலைக்க இதுவரை ஏதாவது செய்துள்ளார்களா? அட… இலங்கை இராணுவம் போல 500 க்கும் மேற்ப்பட்ட இந்திய மீனவர்களை…சாரி..சாரி… தமிழக மீனவர்களை கொன்று இந்தியாவுடனான தனது நட்புறவை அவ்வப் போது வெளிபடுத்துவது போல, புலிகள் இதுவரை எத்தனை இந்தியர்களை சீண்டியுள்ளார்கள்? பட்டியலிடுவோருக்கு மொத்த தமிழக சினமாவையும் தன கட்டுபாட்டில் வைத்திருக்கும் கள்ள ரயில் ஏறி வந்த மு.கவின் வாரிசுகளான மூன்று நிதிகளின், ஏதாவது ஒரு நிதியின் பொங்கல் படத்திற்கு இலவச டிக்கெட் பரிசாக வாழ்கப் படும்.

 4. முட்டாள்த் தமிழனே நீ புலிகளை முன்னிலைப் படுத்தும்வரை உன் இனத்தை நீயே அழித்தவனாவாய். ஏனெனில் புலிகள்தான் உலகின் முதன்மை வாய்ந்த இழி பிறப்பினர்.

 5. பார்த்திபராசன் :
  முட்டாள்த் தமிழனே நீ புலிகளை முன்னிலைப் படுத்தும்வரை உன் இனத்தை நீயே அழித்தவனாவாய். ஏனெனில் புலிகள்தான் உலகின் முதன்மை வாய்ந்த இழி பிறப்பினர்.

  என்ன பார்த்திபராசன் இப்படி பண்ணிடீங்க… பாருங்க… உங்க கமெண்ட்டை நான் வாய் விட்டு வாசித்ததும் என் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு பெட்டை நாய் தெறிச்சு ஓடிடுச்சு…. அதனால அடுத்த தடவை கொஞ்சம் உருப்படியாகவும், மெதுவாகவும் *ரைங்க… சாரி… கருத்து எழுதுங்க…!!!

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Advertisements
%d bloggers like this: