கமல்…நீங்கள் வலது கால் செருப்பா? இடது கால் செருப்பா?


 

 மன்மதன் அம்பு என்ற படத்தில் நன்றாக சிரிக்க வைத்துக் கொண்டே செருப்பால் அடிக்கின்றீர்களே. இது என்ன புது வித்தை. இந்த வித்தையை எங்கே கற்றுக் கொண்டீர்கள் நண்பர்.கமல் அவர்களே.

 ம‌ன்ம‌த‌ன் அம்பு அருமையான‌ ந‌கைச்சுவைப் ப‌ட‌மாக‌ இருந்திருக்க‌ வேண்டிய‌து. ஆனால் நீங்க‌ள் வைத்த‌ சில‌ க‌ருத்துக‌ள் தேசிய‌ இன‌ங்க‌ளின் விடுத‌லைப் போராட்ட‌த்தின் மீது எச்சில் உமிழ்வ‌து போல‌ உள்ள‌து. இப்ப‌டிப்ப‌ட்ட‌ ஒரு ப‌ட‌த்தின் க‌தை, திரைக்க‌தை, வ‌ச‌ன‌த்தை எழுதிய‌து நீங்க‌ள் தான் என்ப‌தை நான் முத‌லில் உங்க‌ளைத் தொட‌ரும் இர‌சிக‌க‌ண்ம‌ணிக‌ளுக்கு தெரிய‌ப்ப‌டுத்தி விடுகின்றேன். ஒருவேளை நீங்க‌ள் இதில் ந‌டித்த‌வ‌ர் ம‌ட்டுமே, இந்த‌ப்ப‌ட‌த்தின் க‌தை, வ‌ச‌ன‌த்தில் எல்லாம் உங்க‌ளுக்கு எந்த‌ ஒரு தொட‌ர்பும் இல்லாம‌ல் இருந்திருக்கலாம் என‌ அவ‌ர்க‌ள் எண்ண‌க்கூடும்.

காசுமீரிகளின் தேசிய‌ விடுத‌லைப் போராட்ட‌த்தில் நீங்க‌ள் முத‌லில் எச்சில் உமிழ ஆர‌ம்பிக்கின்றீர்கள். ஆம், காசுமீரி தீவிர‌வாதிக‌ள் ஒருவ‌ன் தான் ப‌ட‌த்தில் உங்க‌ளின் க‌தாநாய‌கியையும், அவ‌ர‌து த‌ந்தையையும் க‌ட‌த்தி வைத்திருப்ப‌தாக‌ கூறுகின்றீர்க‌ள். ப‌ட‌த்தின் க‌தைப்ப‌டி இது ஒரு மூன்று வ‌ருட‌ம் முன்ன‌ர் ந‌ட‌க்கின்ற‌து. அதாவ‌து 2009ல் நீங்க‌ள் இந்த‌க் க‌தையை எழுதியிருந்தால் 2006ல் அப்ப‌டி ஒரு நிக‌ழ்வு காசுமீரில் ந‌ட‌ந்திருக்க‌ வேண்டும். குறிப்பாக 2006ல் அப்படி ஒரு நிகழ்வு நடக்கவில்லை என்கிறது என் ஆய்வு. காசுமீர் என்ற உடனே தீவிரவாதிகள் என்ற எண்ணத்தை உங்களது படத்தில் வரும் இந்தக் காட்சியும் மக்களின் மனதில் உருவாக்கும் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அப்புறம் எதற்கு இப்படி ஒரு காட்சியை நீங்கள் படத்தில் வைத்தீர்கள் என நான் உங்களை கேட்கலாம் என நினைக்கின்றேன். ஏன் காசுமீரில் தீவிரவாதம் உருவானது என நீங்கள் இதுவரை யோசித்ததே கிடையாதா? 1987 தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களை மூன்றாண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைத்து கொடுமை படுத்தி(1), மக்களின் கடைசி நம்பிக்கையான தேர்தல் வழியையும் அடைத்து அவர்களின் கைகளில் ஆயுதங்களை திணித்ததே ஆக்கிரமிப்பு செய்யும் இந்தியா தானே. இது உங்களுக்கு தெரிந்திருக்குமே. இதன் பின்னால் தானே அங்கே ஆயுதப் போராட்டம், தீவிரவாதம் எல்லாமே. சரி அதை எல்லாம் விடுங்கள். கடந்த 2010ல் மக்களனைவரும் வீதிக்கு வந்து கற்களின் மூலம் தங்களின் சோகக்கதைகளை உலகத்தாரிடம் கூறியதற்கு பரிசாக 113 சிறுவர், சிறுமியர்கள் இந்திய ஆயுதப் படையினரால் கொல்லப்பட்டார்களே. கடந்த வருடத்தில் போராளிக்குழுக்கள் தாக்குதலால் இறந்தவர்களை விட பன்மடங்கு மக்கள் இந்திய ஆயுதப்படை தாக்கியதால் இறந்தார்கள் என எல்லா ஊடகங்களும் தமுக்கு அடிக்காத குறையாக கூறினார்களே, அதெல்லாம் உங்கள் காதுகளில் விழவில்லையா, இல்லை விழாதது போல் நடிக்கின்றீர்களா? அங்குள்ள களநிலைமை இவ்வாறு இருக்கையில் நீங்கள் இந்தப் படத்தில் வைத்திருக்கும் அந்தக் காட்சி அங்கு போராடுகின்ற மக்களின் முகத்தில் எச்சில் உமிழும் செயல் என்றால் அது மிகையாகது என நான் நினைக்கின்றேன். அதே போல இங்கே நான் கொடுக்கின்ற தகவல்களை எல்லாம் பாருங்கள் காசுமீரில் 1987ல் இருந்து 2010 சூலை வரையிலான தகவல்கள் இவை. 2010 சூலையிலிருந்து இறந்த பொதுமக்களின் எண்ணிக்கையை மேலே நான் கொடுத்துள்ளேன்.

கொல்ல‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளின் எண்ணிக்கை 93,214

 விசார‌ணையில் இருக்கும் போது கொல்ல‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளின் எண்ணிக்கை 6,969 கைது செய்ய‌ப்ப‌ட்ட‌ பொதும‌க்க‌ளின் எண்ணிக்கை 1,17,117

 வித‌வைக‌ளாக்க‌ப்ப‌ட்ட‌ பெண்க‌ளின் எண்ணிக்கை 22,726

 அநாதையாக்க‌ப்ப‌ட்ட‌ சிறுவ‌ர்க‌ளின் எண்ணிக்கை 1,07,347

 பாலிய‌ல் வ‌ல்லுறவுக்கு ஆக்க‌ப்ப‌ட்ட‌ பெண்க‌ளின் எண்ணிக்கை 9,912

              அதே போல படத்தில் வரும் ஒரு வசனம் விருமாண்டியின் தொடர்ச்சி என நினைக்கின்றேன். இனிமேல் இந்தியா பாகிசுதானுக்கு இடையே சண்டை கிடையாது, இருவருமே நட்பு நாடுகள் ஆகிட்டோம் அப்படின்னு சொன்னதுக்கு அப்புறம், நான் என் நண்பனை (சண்டையில்)கொன்ன பாகிசுதான் இராணுவ வீரனை தேடி போயி கொல்ல முடியாதில்லை என நீங்கள் சொல்வீர்கள். இதே கேள்வியை அங்க இருக்கிற பாகிசுதானைச் சேர்ந்த இராணுவ வீரனும் கேட்கலாமே. இந்தக் கேள்வி உங்கள் தரப்பில் சரி என்றால், அவர்களது தரப்பிலும் சரி தானே. நான் தெரியாம தான் கேட்கிறேன் இதுக்கும் அந்தக் காட்சிக்கும் என்ன தொடர்பு. இந்தப் படத்தில் வரும் மேற்கூறிய இரு காட்சிகளின் கருத்தியலில் தான் இந்துத்துவ மதவெறியர்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றார்கள். அப்படின்னா நீங்க யாரு நண்பர்.கமல் அவர்களே? உங்களை எல்லாம் நாத்திகவாதி எனக் கூறுகின்றார்களே. அதெல்லாம் பொய், நீங்கள் ஒரு இந்துத்துவ வெறியர் அப்படின்னு இந்த இரண்டு காட்சிகள் சொல்லுதே, இதற்கு உங்கள் பதில் என்ன நண்பர். கமல் அவர்களே. 

 அப்புறம் தமிழ் தெருப்பொறுக்கும், மெல்லச்சாவும் என்ற வசனங்கள் தேவையா, இல்லை தேவையான்னு கேட்கிறேன், கேட்டா என்ன சொல்லுவீங்க தமிழ் மெல்லச் சாவும் என பாரதியே கூறிவிட்டார், அவர் கூறிய இடமும் நீங்கள் கூறிய இடமும் ஒன்றா நண்பர்.கமல். அதென்ன தமிழ் தெருப்பொறுக்கும்? புரியலை உங்களை கதை, வசனம் எழுதவிட்டால் இனி தமிழ் தெருப்பொறுக்கும் என மறைமுகமாக ஏதும் சொல்ல வருகின்றார்களா?. இதில் ஈழத்தமிழ் இனத்தை  கேவலப்படுத்தி இருக்கீங்க. இதுக்கு கொஞ்சம் பின்னாடி யோசிச்சு பார்த்தோம்னா, பாரதி ராசா தனது பத்ம சிறீ விருதை இந்திய அரசிடம் திருப்பிக் கொடுத்த போது(ஈழத்தில் போர் உச்ச நிலையில் இருந்த காலகட்டம், காரணம் இந்தியா தான் அந்த போரை நடத்துகின்றது எனக்கூறி, அதை பின்னாட்களில் மன்மோகன் சிங் சென்னையிலேயே ஒப்புக்கொண்டார்)
உங்களையும் சூடு, சொரணையோடு அய்ஃபா (iifa) விருதுகள் வ‌ழ‌ங்கும் விழாவை இனப்படுகொலை இலங்கையில் நடத்தும் FICCIயின் தென்னிந்திய இயக்குநர் பதவியில் இருந்து விலகக்கோரி சென்னையில் மே 17  இயக்கமும், மற்ற பிற இயக்கங்களும் போராடின, அதை திரித்து உங்களை பத்ம சிறீ விருதை திருப்பித்தர சொல்லுகின்றார்கள் எனக்கூறினீர்களே, மேலும் அவர்களை நீங்கள் சிறு அலை எனக் கூறியதும் என் நினைவில் வருகின்றன‌. இதெல்லாம் உங்களால் மட்டுமே சாத்தியப்படும் கமல். திரித்துக்கூறுவதில் முனைவர்.பட்டமே உங்களுக்கு வழங்கலாம். உங்களிடம் கேட்டது என்ன, காசுக்காக நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் இனப்படுகொலையுடன் கை கோர்க்கின்றது என்றால், உங்களுக்கு தந்த விருதை திருப்பித் தரச் சொல்லுகின்றார்கள் என்கிறீர்கள். சூடு, சொர‌ணை இருந்திருந்தால் பதவி விலகி, விருதையும் கூட‌ நீங்கள் திருப்பி தந்திருப்பீர்க‌ள். ஆனால் நீங்க‌ள் தான் க‌யிறு திரிக்கின்றீர்க‌ளே ந‌ண்ப‌ர்.க‌ம‌ல்.  ஒருவேளை இதை மனதில் வைத்துக்கொண்டு தான் நீங்கள் படத்தில் வேண்டுமென்றே அப்படி ஒரு காட்சியை வைத்து, ஈழத்தமிழர்களை கேவலப்படுத்துகின்றீர்களோ என என் உள்ளம் எண்ணுவதை என்னால் தடுக்க இயலவில்லை. மே 15, 16,17  என்ற மூன்று நாட்களில் மட்டும்  ஒவ்வொரு நாளும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இறந்தார்கள் என ஐ.நா கூறுகின்றது. அவர்களுக்கு எதிராக இனப்படுகொலை இலங்கை மேற்கொண்ட போர்க்குற்றங்கள் ஒவ்வொன்றாக வெளிவரும் இன்றைய நிலையில் இப்படி ஒரு காட்சியை நீங்கள் வைத்ததால் நீங்களும் ஒரு ஐந்தாம் படையோ என்ற கேள்வி எழுகின்றது.

  எனது நண்பர்கள் சொல்லுகின்றார்கள் நீங்கள் பகுத்தறிவுவாதியாம். இப்படிப்பட்ட பகுத்தறிவுவாதியா “குப்பனுக்கும், சுப்பனுக்கும் அறிவு இல்லை” என கூறுவார்(உன்னைப் போல் ஒருவன்)? மேற்கூறிய பெயர்களை எந்த ஒரு சமூகம் வைக்கும் என்பதை நான் உங்களுக்கு விலக்கத்தேவை இல்லை என நினைக்கின்றேன். ம‌ற்றுமொரு உதார‌ண‌ம் எங்க‌ள் ச‌மூக‌த்திலும் இப்பொழுது ப‌டித்த‌ ஆட்க‌ளெல்லாம் இருக்கின்றார்க‌ள் என‌ த‌சாவ‌தார‌ம் ப‌ட‌த்தில் நீங்க‌ள் கூறுவீர்க‌ள். உங்க‌ள‌து இந்த‌க் கூற்றின் ப‌டி முன்னாட்க‌ளில் அந்த‌ ச‌மூக‌ம் ப‌டிப்ப‌றிவில்லாத‌ ச‌மூக‌ம், அத‌ற்கு அவ‌ர்க‌ள் தான் கார‌ண‌ம் என‌ சொல்ல‌ வ‌ருகின்றீர்க‌ள். மெத்த‌ ப‌டித்த‌ உங்க‌ளைப் போன்ற‌ ‘ப‌குத்த‌றிவுவாதி’ இப்ப‌டி சொல்வ‌து முறையா? 1937வ‌ரை ம‌ருத்துவ‌ நுழைவுத் தேர்வு சம‌சுகிருத‌த்தில் இருந்த‌து உங்க‌ளுக்கு தெரிந்திருக்குமே ந‌ண்பர்.க‌ம‌ல். அந்த‌ கால‌க‌ட்ட‌த்தில் ச‌ம‌சுகிருத‌ம் தெரிந்த‌வ‌ர்க‌ள் த‌மிழ்நாட்டில் மூன்று விழுக்காடு தானே. அப்பொழுது யார் ம‌ருத்துவ‌ம் ப‌டித்திருப்பார்க‌ள் ? ஒரு ச‌மூக‌த்தை நீங்க‌ள் குறிவைத்து தாக்குகின்றீர்க‌ளோ என‌ என்னுள் அச்ச‌ம் எழுவ‌தை என்னாள் த‌விர்க்க‌ முடிய‌வில்லை ந‌ண்ப‌ர்.க‌ம‌ல் அவ‌ர்க‌ளே. உட‌னே உங்க‌ள் ந‌ற்ப‌ணி ம‌ன்ற‌ ந‌ண்ப‌ர்க‌ள்( அதாவ‌து இர‌சிக‌ர்க‌ள்), இத‌ற்கும் க‌ம‌லுக்கும் என்ன‌த் தொட‌ர்பு, அவ‌ர் வெறும் ந‌டிக‌ர் தானே என‌ விரைந்தோடி வ‌ந்து என்னைக் கேட்க‌லாம். த‌சாவ‌தார‌ ப‌ட‌த்தின் க‌தை, வ‌ச‌ன‌ம் எழுதிய‌து அவ‌ர் தான், உன்னைப் போல் ஒருவ‌ன் பட‌த்தின் க‌தை, வ‌ச‌ன‌ம் எழுதிய‌ குழுவில் க‌ம‌லும் ஒருவ‌ர். இது போன்ற‌ க‌ருத்துக‌ளினால் நீங்க‌ள் ஒரு ப‌குத்த‌றிவுவாதியா ? என‌ உங்க‌ளை நான் கேட்ப‌து ச‌ரி என்று உங்க‌ளுக்கு தெரியும். அப்ப‌டியே உங்க‌ள் க‌ண்ம‌னிக‌ளுக்கும் சொல்லிவிடுங்க‌ள்.

பின்குறிப்பு: இந்த‌ த‌லைப்பு உங்க‌ள் ம‌ன‌தை புண்ப‌டுத்த‌வோ, அல்ல‌து உங்க‌ள் இர‌சிக‌ க‌ண்ம‌ணிக‌ளின் உள்ள‌த்தை புண்ப‌டுத்த‌வோ நான் வைக்க‌வில்லை. நீங்க‌ள் என்ன‌ கார‌ண‌த்திற்காக உங்க‌ள் ப‌ட‌த்தில் ஒரு ஈழ‌த்த‌மிழ‌ர் கூறுவ‌தாக‌ இப்ப‌டி ஒரு வ‌ரியை வைத்தீர்க‌ளோ, அதே நோக்க‌த்தில் தான் நானும் இதை வைத்துள்ளேன். பொதுவாக‌ நான் திரைப்ப‌ட‌ங்க‌ளை ப‌ற்றி எழுதுவ‌து கிடையாது,  ஆனால் இந்த‌ப் ப‌திவு நீங்க‌ள் தேசிய‌ இன‌ங்க‌ளின் போராட்ட‌ங்க‌ளைக் கொச்சைப்ப‌டுத்திய‌ கார‌ண‌த்தினாலும், குறிப்பிட்ட‌ ச‌மூக‌த்தை நீங்க‌ள் தொட‌ர்ந்து தாக்கி வ‌ருவ‌தாலும்  இதைப்ப‌ற்றி நான் எழுத‌வேண்டிய‌ நிலைக்கு த‌ள்ள‌ப்ப‌ட்டேன்.

Notes:

1) http://news.bbc.co.uk/2/hi/south_asia/2223364.stm.

ந‌ட்புட‌ன்
ந‌ற்ற‌மிழ‌ன்.ப‌

Advertisements
  • venkattan
  • ஜனவரி 5th, 2011

  nice… he did the same stupid things in unnaipool oruvan.

  • Oviyambalu
  • ஜனவரி 5th, 2011

  அமைதியான மிகவும்
  அற்புதமான கோபம்

  கமல் ரசிகன் என்ற முறையில்
  நான் வேதனைபடுகிறேன் இனி இந்த
  தவறை தொடர்ந்து செய்யாமல் படம் எடுங்கள்

  என்றும்
  தேசிய தலைவரின் அன்பு தம்பி
  ஓவியம் பாலு

  • Vidyasakaran
  • ஜனவரி 5th, 2011

  thamizh ini mella chaakum – andha
  merku mozhikaL puvimisai ekum
  enRe andha ‘pedhai’ uraithaan.

  – Bharathi (Bharathidasan alla)

  Madhavan’s character oru pedhai

  • senthil
  • ஜனவரி 6th, 2011

  ungal varutham purigiradhu..aanaal onru yosiyungal, kamal edharkaga eezhath thamizharai igazhndhu koora vendum? idhanaal avarukku edhavadhu laabam undaa? ungalaippol palarin veruppukkey aalaga neridum enbadhai ariyadha moodar illai avar. en karuthuppadi idhu oru nagaichuvai kaatchiye anri eezhath thamizharai izhivu paduthuvadharkana nokkam anru. ethanaiyo thamizhppadangalil thamizh naatu pichaikkarargalai kaamithullanar. udharanathirku, vivek comedy eduthukollungal. oru padathil kovai saralavin andha “snegidhaney…” idhai athanai thamizh makkalum nagaichuvai unarvodu paarth sirithuvittu ponarey thavira, adhai peridhaga eduthukkondu, adhu eppadi oru thamizhachiyai pichai kaariyaga kamikkalam ena porkkodi thookavillai. idhae pol pala thiraippadangalil palveru tharappatta makkal andhandha kadhaapaathirathai aerthullanar. Kutram kandupidikkavendum enrey boodhakkanaadiyai vaithu paarthaal, edhuvum kutramaga dhan theriyum. idhanai oru thanippatta kadhaa paathiramaga karudha vendiyadhey thavira ottu motha thamizh makkalin izhivaga karudhappaduvadhu satrum sariyanadhaga enakku pulappadavillai. idhu en thaazhmaiyana karuthu.

  • நண்பர். செந்தில்,

   எந்த இடத்தில் எதை பேசுவது என்று கமலுக்கு தெரியாதா என்ன?, ஈழத்தமிழர்கள் இன்று இருக்கும் நிலை என்ன, அவர்களை இப்படியா கேவலமாகவா காட்டுவது. வரலாறு என்ப‌து நேற்றைய நிகழ்வுகளின் தொடர்ச்சி நண்பா, கமலின் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்டியது IIFA விருதுகள் வழங்கும் விழா. சரி எந்த பிரச்சனையில் என் உண்மை முகம் வெளிப்பட்டதோ, அந்த பிரச்சனைக்கு மூல காரணமான அந்த இனத்தை கிண்டல் செய்தலின் மூலமாக மன ஆறுதல் அடைதல், உளவியல் தாக்குதலும் தொடுத்தல். சீக்கிய இனத்தை வைத்து வரும் கிண்டல்களுக்கு பின் அதை உருவாக்கிய ஆங்கிலேயனின் வன்மமும், உளவியல் தாக்குதல் உத்தியும் உங்களுக்கு தெரிகின்றதா?, இல்லை என்றால் தெரிந்து கொள்ளுங்கள், ஆங்கிலேய‌ர்க‌ளுக்கு எதிராக‌ போராடிய‌ தேசிய‌ இன‌ங்க‌ளில் மிக‌வும் முக்கிய‌மான‌ அறிவாளியான, உடல் பலமும் கொண்ட‌‌ இன‌ம் சீக்கிய‌ர்க‌ள்..சிற‌ப்பான‌ உதார‌ண‌ம்.ப‌க‌த் சிங். இந்த‌ இன‌த்தை உள‌விய‌ல் பூர்வ‌மாக‌ தாக்க‌ வேண்டும் என‌ முடிவு செய்த‌ ஆங்கிலேய‌ன் அவ‌ர்க‌ளை வைத்து ப‌ல‌ ந‌கைச்சுவைக‌ளை ந‌ம் ம‌க்க‌ளிடையே உல‌வ‌ விட்டான். அது தெரியாதா ந‌ம் ம‌க்க‌ள் இன்றும் கூட‌ அவ‌ர்க‌ளை வைத்து ந‌கைச்சுவை செய்வ‌து முட்டாள்த‌ன‌மான‌ ஒன்று. இதில் மெத்த‌ ப‌டித்த‌ மேதாவிக‌ளும் இருப்ப‌து ந‌கைமுர‌ண்.

   ந‌ட்புட‌ன்
   ந‌ற்ற‌மிழ‌ன்.ப‌

 1. பதிவை கமல் படித்தால் நன்றாக இருக்கும்!. படிப்பாரா!@…

  • ஈழ ‘தெனாலி’,கஷ்மீர் அம்பு தாண்டி இப்போது விசுவரூப பயங்கரவாதத்தை பற்றி அவர் உலகுக்கு சொல்ல வேண்டிய ஆழ்ந்த பணிகளில் இருப்பார்….!!! இன்று வரை ‘அறிவுமதி’ போன்றோர் கமல்,ஞானி போன்றவர்களை ஒதுக்கியே வைத்துள்ளனர்…. நாம தான் லேட்டு…!!!

  • HAJI
  • ஜனவரி 13th, 2011

  கமல் ஒரு பார்ப்பனர் என்றால் அவர் ஒரு இந்துத்துவ வாதியாக தானே இருக்க முடியும்……….?????????

  • நண்பர். ஹாஜி,

   கமலை நான் ஒரு பார்ப்பனியவாதியாகத் தான் பார்க்கின்றேனே அன்றி, பார்ப்பனராக அல்ல. பார்ப்பனியம் என்பதற்கு நான் கொண்டிருக்கும் பொருள் உண்மையை மறைத்து, பொய்யைப் பரப்புதல், தான் மட்டும் தான் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருத்தல் அவ்வளவே.

   நட்புடன்
   நற்றமிழன்.

 2. கமல் ஒரு மகா கலைஞன் என்ற பிம்பம் உடையவர்கள் இதை சற்று பார்க்கவும்.
  http://jackofall.blogspot.in/2005/03/inspired-kamal-hassan.html

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Advertisements
%d bloggers like this: