தேர்தல் பலிகடாவாகிய‌ இராசா….


 
  இன்றைய பரபரப்பு செய்தி இராசா இரண்டாம் தலைமுறை(2G) அலைக்கற்றை ஊழலில் கைதான நிகழ்வு தான். இதன் மூலம் ஏதோ விடிவு காலம் வந்துவிட்டதை போல பலர் சிந்தித்து வருகின்றார்கள். ஆனால் இந்த கைது முடிவு கருணா தில்லியில் தொகுதி பங்கீடு குறித்து பேசும் போதே எடுக்கப்பட்ட ஒன்று தான். இராசா தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக பலியிடப்பட்ட ஆடு அவ்வளவே அன்றி. இந்தியாவில் மீண்டும் சனநாயகம்  ஒன்றும் பூத்துக்குலுங்கவில்லை.


இராசா கைதினால் ஏற்ற‌ப்ப‌ட்டுள்ள‌ ப‌ல‌ன்க‌ள்

1) இந்த தேர்தலில் முதன்மை பிரச்சாரமாக இருக்க வேண்டிய இர‌ண்டாம் த‌லைமுறை அலைக்க‌ற்றை ஊழ‌லில் இருந்து த‌ன்னையும், த‌ன் க‌ட்சியையும் காப்பாற்றிக்கொள்ள‌ முடியும்.  க‌ழ‌க‌க் க‌ண்ம‌ணிகள் இப்பொழுதே கருணாவின் ச‌ன‌நாய‌க‌த்தை(!) க‌ண்டும், நேர்மையை (!)க‌ண்டும் புல்ல‌ரிக்க‌த் தொட‌ங்கி விட்டார்க‌ள்.

2) காங்கிர‌சு க‌ட்சி இராசாவைக் கைது செய்த‌த‌ன் மூலம் த‌ன் மேல் இதுவ‌ரை இருந்த‌ குற்ற‌ங்க‌ளை நெருப்பில் க‌ழுவி விட்டு வ‌ந்த‌ ப‌ரிசுத்த‌னைப் போல‌ காட்டிக்கொள்ளும்.
3) ஊட‌க‌ங்களுக்கு இனிமேல் இராசா கைது தான் முக்கிய‌ செய்தி. இர‌ண்டாம் அலைக்க‌ற்றை ஊழ‌லின் சூத்திர‌தாரியான‌ நீரா ராடியாவைப் ப‌ற்றி எல்லாம் கொஞ்ச‌ நாட்க‌ளுக்கு ச‌த்த‌ம் வ‌ருவ‌த‌ற்கு வாய்ப்பு மிக மிகக் குறைவு.

50 ஆண்டுக‌ளில் ந‌ம‌க்கு கிடைத்த‌ ச‌ன‌நாய‌க‌ம். இந்த‌ ஒரு துளி தான்.

இராசா கைதின் மூல‌ம் ம‌க்க‌ளுக்கு ஏற்ப‌ட்டுள்ள‌ பிர‌ச்ச‌னைக‌ள்:

1) இதுவ‌ரை ந‌ம‌க்கு இர‌ண்டாம் அலைக்க‌ற்றை ஊழ‌லில் ஒரே ஒரு ப‌குதி ம‌ட்டும் தான் காட்ட‌ப்ப‌ட்ட‌து. அதாவ‌து இராசாவும், தி.மு.க.வும்  தான் இந்த ஊழலுக்குக் கார‌ண‌ம் என்பதைப் போல‌ ம‌க்க‌ளுக்கு காட்ட‌ப்ப‌ட்ட‌து. அதிலும் குறிப்பாக‌ நீரா ராடியா தி.மு.க‌ழ‌க‌த்தின‌ரிட‌ம் பேசிய‌ அலைப்பேசி ப‌திவுக‌ள் ம‌ட்டும் தான் வெளியிட‌ப்ப‌ட்ட‌ன‌. காங்கிரசு கட்சியினரிடம் பேசிய‌ அலைப்பேசிப் ப‌திவுக‌ள் எவையும் வெளியிட‌ப்ப‌ட‌வில்லை என்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து. தரகர்கள் இரு தரப்புடனும் பேசுவது இயல்பான் ஒன்று, அப்படியெனில் நீரா ராடியா எனும் தரகர் காங்கிரசு கட்சியுடனும் பேசியுள்ளார். அதன் விளைவாகத் தானே இராசா தொலைத்தொடர்புத்துறை மந்திரி ஆனது.  இனிமேல் அந்த பதிவுகள் எதுவும் வெளிவ‌ராது. இர‌ண்டாம் அலைக்க‌ற்றை ஊழ‌லின் ஒட்டுமொத்த‌ ப‌லிக‌டாவாக‌வும் இராசா வெட்ட‌ப்ப‌ட்டுள்ளார் (இதுவும் கூட‌ தேர்த‌ல் முடியும் வ‌ரை தான் நீடிக்க‌க் கூடும். தேர்த‌லில் மீண்டும், தி.மு.க வெற்றி பெற்றால் இராசா வெளியில் வ‌ந்துவிடுவார்)
2)இராசாவை கைது செய்த‌த‌ன் மூல‌ம் ப‌ரிசுத்த‌மான‌வ‌ர்க‌ளாகிய‌ தி.மு.க‌, காங்கிர‌சு சொல்லும் ஆகாச‌புளுகுக‌ளை தேர்த‌ல் பிர‌ச்சார‌ம் என்ற‌ பெய‌ரில் கேட்க‌ வேண்டிவ‌ரும்.

3) ந‌ட‌ந்த‌ ஊழ‌லில் உண்மை நிலையை வெளிக்கொணர‌வேண்டும் என்ப‌த‌ற்கா இல்லை அந்த ஊழலில் எங்கள் பங்கை கொடு என்றா என எதற்காக போராடினார்கள் என்றெல்லாம் தெரியவில்லை, அவ்வாறு போராடிய‌ எதிர்க‌ட்சிக‌ளும் இனிமேல் அதிக‌ம் பாராளும‌ன்ற‌ கூட்டுக் குழு ப‌ற்றி வாய் திற‌க்க‌ மாட்டார்க‌ள் என்றே எண்ணுகின்றேன். இதன் மூலம் பிப்ரவரி 24 அன்று மீண்டும் கூடும் பாராளுமன்றத்தில் வரவு செலவு கணக்கு(Budget)கூட்டத்தொடர் போன குளிர்கால கூட்டத்தொடர் போல இல்லாமல்(போன கூட்டத்தொடர் முழுவதும் இரத்து செய்யப்பட்டது) ஒரளவு அமைதியாக நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

4) செய்திகளின் உண்மைத்தன்மைக்காக(!) இர‌வு ப‌க‌ல் பாராம‌ல் உழைக்கும் ஊட‌க‌ங்க‌ளும் இனிமேல் இராசாவின் வாலைப்பிடித்துக்கொண்டே தான் ப‌ய‌ண‌ம் செய்வார்க‌ள். வ‌ழ‌மைப் போல‌ ந‌டுநிலை என்ற‌ வெங்காய‌ம் ம‌ட்டும் ந‌டுத்தெருவில் நின்று இதை எல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும். இன்று இருக்கும் ஊட‌கங்கள் எல்லாம் Investigative Journalisim என்ற‌ புல‌னாய்வுத் த‌ன்மைமையை விட்டு விட்டு, சொன்னதை திரும்பச் சொல்லும் கிளியைப் போல‌ மாறிவிட்டார்க‌ள்.
   காங்கிர‌சு, தி.மு.க‌ கூட்ட‌ணிக்கு இத‌னால் எந்த‌ ஒரு பாதிப்பும் இல்லை. மேற்கூறிய‌து போல‌ பாதிப்பு எல்லாம் ம‌க்க‌ளுக்கு தான். பலாப‌ல‌ன்க‌ள் ம‌ட்டும் கட்சிக‌ளுக்கு சென்ற‌டையும்.

உத்த‌புர‌த்தில் உரிமைக்காக‌ போராடும் த‌லித் ம‌க்க‌ளுக்கும், அவ‌ர்க‌ளுக்காக‌ போராடும் தோழ‌ர்க‌ளுக்கும் ச‌ன‌நாய‌க‌த்தின் ப‌ரிசு

 இந்த‌க்க‌ட்டுரையை ப‌டித்து விட்டு, இந்தியாவில் ச‌னநாய‌க‌ம் துளிர்விடும் நேர‌த்தில் இப்ப‌டி அர‌சிய‌ல் செய்கின்றீர்க‌ளே என‌ என்னை ச‌பிக்கும் முன், தமிழகத்தின் உத்த‌புர‌த்தில் அம்மணமாக  திரிந்து கொண்டிருக்கும் ச‌ன்நாய‌க‌த்திற்கு மாற்றுத்துணி வாங்கி கொடுத்துவிட்டு வாருங்க‌ள் ச‌ன‌நாய‌க‌த்தைப் ப‌ற்றி விரிவாக‌ பேசுவோம்.

பின்குறிப்பு: இராசா குற்றவாளி என்பதிலோ, அவரை கைது செய்ய வேண்டும் என்பதிலோ எனக்கு எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது. இவ்வளவு காலம் இராசா கைது செய்யப்படாமல் இருந்ததற்கு காரணம் அரசியல், இப்பொழுது அவர் கைது செய்யப்பட்டதற்கு காரணமும் அதே அரசியல் தான். இராசா கைது ஏன் இப்பொழுது ந‌டைபெற்ற‌து என்ப‌தை என‌க்கு தெரிந்த‌ அர‌சிய‌ல் அறிவிற்கு உட்ப‌டுத்தி பார்த்த‌த‌ன் விளைவே இக்க‌ட்டுரை.

நற்ற‌மிழ‌ன்.ப‌

Advertisements
 1. உங்களின் உணர்வுகள் சரியானது. நல்ல சிந்தனைக்குப் பின் எழுதி இருக்கிறீர்கள். நாம் எப்படி நம்மை மாற்றிக் கொள்ள முடியும் என்பதை யோசிக்க வேண்டும். 110 கோடியை தாண்டியும் நம்மால் நமக்கு ஒரு மாற்று சக்தியை உருவாக்க முடியவில்லை. நான் மாற்றாக வருவேன் என்று பேசுகிற புதியவர்களும் வந்த பின் பழைய பாணியில் பயணிக்கத் தொடங்கி விடுகிறார்கள்.

  நம்மை நாம் சரியான மாற்று அரசியலுக்கு உட்படுத்திக் கொள்ளாதவரை நமக்கு விடிவு என்பது இல்லை என்றே சொல்லலாம். நம் மக்கள் இது பற்றி யோசிப்பதாக கூட தெரியவில்லை. ஒரு பொட்டலம் பிரியாணிக்கும், ஒரு புட்டி மதுவுக்கும் அடிமையாய் இருக்கும் நம் மக்களின் உணர்வுகளை, அவர்களின் வயிறு தாண்டி வரவழைக்க வேண்டும்… அப்போதுதான் அவர்கள் சிந்தனை சிறகடிக்கும். ஒரு ஏழையை நம்பித்தான் அரசாங்கம் போய்க கொண்டிருக்கிறது. அவர்களிடம்தான் இவர்களால் எளிதில் ஏமாற்றி ஓட்டு வாங்க முடியும்.

  நாம் யோசிக்க ஆரம்பித்தால் இவர்கள் ஓட்டம பிடிக்க ஆரம்பிப்பார்கள். நாம் யோசிப்போமா..?

  • மிகவும் விரிவான, ஆழமான பின்னூட்டமிட்டதிற்கு நன்றி நண்பர். இதயக்காதலன்.

   கண்டிப்பாக மக்கள் யோசிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதையே நமக்கு துனிசியா, எகிப்தில் நடைபெறும் போராட்டங்கள் காட்டுகின்றது. நம் தமிழக மக்களும் ஒர் நாள் அவர்களைப் போல தெருவில் இறங்கி போராடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் நான் இருக்கின்றேன்.

    • neelan
    • பிப்ரவரி 3rd, 2011

    sadasd

  • K. Jayadev Das
  • பிப்ரவரி 4th, 2011

  மதுரை தினகரன் பத்திரிக்கை அலுவலகத்தில் தீ வைத்து நான்கு பேர் எரித்துக் கொள்ளப் பட்டனர். நேர்மையான விசாரணை நடக்க வேண்டுமென வழக்கு CBI க்கு மாற்றப் பட்டது, அவர்கள் அதை விபத்து என்று கடுபிடித்து விட்டனர், யாருமே குற்றம் செய்யவில்லை, நிரபராதிகளாகி விட்டனர். அதே மாதிரி, இந்த ராசா வழக்கும் தேர்தலுக்குப் பின் ஊத்தி மூடப் படும் ஒன்றாகவே இருக்கப் போகிறது. நமக்கு விடிவு காலமே கிடையாது. [அப்படியே இவனை உள்ளே தள்ளினாலும், நஷ்டமான 1.76 லட்சம் கோடியை யார் தருவது?]

  • எந்த ஒரு நிலையும் கண்டிப்பாக மாறும் தோழர். மாற்றத்திற்கான வழி நம் கைகளில் தான்.

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Advertisements
%d bloggers like this: