மீனவர்கள் கடலுக்கு மட்டுமல்ல, கல்லூரிக்கு சென்றாலும் மரணம் தான் பரிசு…


த‌மிழ‌க‌ மீன‌வ‌ர்க‌ள் இல‌ங்கை க‌ட‌ற்ப‌டையால் கொல்ல‌ப்ப‌டுவ‌தும், அதை த‌டுக்க‌ச் சொல்லி பிர‌த‌ம‌ருக்கு க‌ருணா க‌டித‌ம் எழுதுவ‌தும், நாங்க‌ள் க‌ண்டிக்கின்றோம் என‌ இந்திய‌ அர‌சு கூறுவ‌தும், மீண்டும் இல‌ங்கை க‌ட‌ற்ப‌டை த‌மிழ‌க‌ மீன‌வ‌ர்க‌ளை கொல்வ‌தும் 1989லிருந்து ந‌ட‌ந்து வ‌ரும் வ‌ழ‌மையான‌ நிக‌ழ்வுக‌ளாகிவிட்ட‌ன‌. த‌மிழ‌க‌ ம‌க்களுக்கு  மீன‌வ‌ப் ப‌டுகொலைக‌ள் ஒரு செய்தி அவ்வ‌ள‌வே. அதை விடுத்து சூடு, சொரணையிருந்திருந்தால் கொல்ல‌ப்ப‌ட்ட‌ மீன‌வ‌ர்க‌ளுக்காக பொதும‌க்க‌ள் போராடியிருப்பார்கள். நாம் தான் ஆயிரக்கணக்கில் ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்ட போதே வேடிக்கை பார்த்தவர்கள் ஆயிற்றே. தயவு செய்து தமிழகத்தில் நடந்ததை போராட்டம் என சொல்லி, போராட்டத்தை கொச்சைப்படுத்த வேண்டாம். போராட்ட‌ம் என்றால் என்ன‌வென்பதற்கு இன்றைய எகிப்தையும், துனிசியாவை பாருங்கள். ஆப்பிரிக்க‌ர்க‌ள் நாக‌ரிக‌ம‌ற்ற‌வ‌ர்க‌ள், காட்டுமிராண்டிக‌ள் என‌ எண்ணிக் கொண்டிருக்கும் என‌த‌ருமை த‌மிழ் ம‌க்க‌ளே ச‌ற்றே யோசித்து பாருங்க‌ள் நீங்க‌ள் யாரென ?. க‌ட‌ந்த‌ ச‌ன‌வ‌ரியில் இரு மீனவர்கள்(பாண்டியன், செயக்குமார்) தொடர்ச்சியாக கொல்ல‌ப்ப‌ட்ட‌த‌னால் சில‌ மாற்ற‌ங்க‌ள் தெரிகின்ற‌ன‌. Twitter எனும் இணைய‌த‌ள‌த்தில் த‌மிழ‌க‌ மீன‌வ‌ர்க‌ளின் பிர‌ச்ச‌னை உல‌க‌ அள‌வில் அதிக‌மாக‌ விவாதிக்க‌ப்ப‌டும் நிக‌ழ்வுக‌ளில் மூன்றாமிட‌த்திற்கு கொண்டு சென்றுள்ளார்கள். ஆனால் இது போதுமா என்றால், இல்லை என‌த்தான் கூறுவேன். இந்தியாவிற்கும், த‌மிழ‌க‌ அர‌சுக்கும் அழுத்த‌ம் கொடுக்க‌வேண்டுமென்றால் அது த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் போராடினால் தான் முடியும். இல்லையென்றால் இதுவும் க‌ட‌ந்து போகும். மீண்டும் த‌மிழ‌க‌ மீன‌வ‌ர்க‌ள் கொல்ல‌ப‌டுவ‌தும் தொடரும். இந்த‌ நிலையில் என‌க்கொரு செர்மானிய‌ க‌விதை தான் ஞாப‌க‌த்திற்கு வ‌ருகின்ற‌து. இன்றைய‌ த‌மிழ‌க‌ சூழ‌லுக்கு ஏற்ப‌ அதை மாற்றியுள்ளேன்.

  

    முத‌லில் அவ‌ர்க‌ள் ஈழ‌த்த‌மிழ‌ர்களைக் கொன்றார்க‌ள்
       நான் போராட‌வில்லை, ஏனெனில் நான் ஈழ‌த்த‌மிழ‌ன் அல்ல‌

   பின்ன‌ர் அவ‌ர்க‌ள் த‌மிழ‌க‌ மீன‌வ‌ர்களைக் கொன்றார்க‌ள்
      நான் போராட‌வில்லை, ஏனெனில் நான் த‌மிழ‌க‌ மீன‌வ‌ன் அல்ல‌

    பின்ன‌ர் அவ‌ர்க‌ள் த‌லித் ம‌க்களைக் கொன்றார்க‌ள்
       நான் போராட‌வில்லை, ஏனெனில் நான் தலித்தும் அல்ல‌

   இறுதியாக‌ அவ‌ர்க‌ள் என்னைக் கொல்ல‌வ‌ந்தார்க‌ள்
      என‌க்காக‌ போராட‌ அன்று ஒருவ‌ரும் இல்லை.
                            இந்த‌க்க‌விதை உங்க‌ளுக்கு வேடிக்கையாக‌ தெரியலாம் ஆனால் த‌மிழ‌ர்க‌ளே இது க‌ண்டிப்பாக‌ ந‌ட‌க்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்ப‌தை தொட‌ர்ந்து ந‌ட‌க்கும் நிக‌ழ்வுக‌ள் காட்டுகின்றன‌. இதுவ‌ரை மீன‌வ‌ர்க‌ள் க‌ட‌லில் தான் கொல்ல‌ப்ப‌ட்டார்க‌ள் என்றால், நேற்றைக்கு முந்தைய‌ தின‌ம் வ‌ந்த‌ செய்தி இனி மீன‌வ‌ரின‌க் குழ‌ந்தைக‌ள் க‌ல்லூரிக்குச் சென்றாலும் ம‌ர‌ண‌ம் தான் ப‌ரிசு என‌ அறைகூவுகின்ற‌து. 

                 சென்னை பெசன்ட் நகர் ஆல்காட் மீனவப்பகுதியைச் சேர்ந்த திவ்யா, “ஜான‌கி எம்.ஜி.ஆர் க‌ல்லூரியில்” இள‌ங்க‌லை வ‌ணிக‌விய‌ல்(B.com) பிரிவில் மூன்றாமாண்டு ப‌டித்து வ‌ருகின்றார்.க‌‌ட‌ந்த‌ செவ்வாய‌ன்று (ச‌ன‌வரி 25) க‌ல்லூரியில் ஒரு மாண‌வி வைத்திருந்து 4,000 ரூபாய் ப‌ண‌ம் காணாம‌ல் போயுள்ள‌து. மாண‌விக‌ளில் யாரோ ஒருவ‌ர் தான் திருடி இருக்க‌வேண்டும் என‌ எல்லோரிட‌மும் விசாரித்துள்ளார்க‌ள் ப‌ண‌ம் கிடைக்க‌வில்லை. மாண‌வி. திவ்யாவின் மேல் ஐய‌ம் கொண்ட‌ பேயா(ரா)சிரியைக‌ள் திவ்‌யாவை ஆடைக‌ளைக் க‌ளைய‌ச்சொல்லி சோத‌னை செய்துள்ளார்க‌ள். சோத‌னையில் திவ்யா ப‌ண‌ம் எடுக்க‌வில்லை என‌ தெரிந்த‌து. இந்த‌ முறைய‌ற்ற‌ செய‌லால் ம‌ன‌முடைந்த‌ திவ்யா மாலை வீட்டிற்கு வ‌ந்த‌ உட‌ன் த‌ன் அம்மா சாந்தியிட‌ம் ந‌ட‌ந்தை கூறியிருக்கின்றார். அவ‌ர் க‌ல்லூரிக்கு வ‌ந்து நான் இதுப‌ற்றி பேசுகிறேன் என‌ கூறிய‌த‌ற்கு சாந்தி த‌ன‌து ம‌திப்பெண்க‌ளை குறைந்து விடுவார்க‌ளோ என‌ அஞ்சி த‌டுத்துவிட்டார் (சாந்தி ஏன் த‌ன் தாயை த‌டுத்தார் என்ப‌து த‌னியார் பொறியிய‌ல் க‌ல்லூரியில் ப‌டிக்கும் மாண‌வ‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் ந‌ன்றாக‌ தெரிந்திருக்கும். எங்கே த‌ன் ம‌திப்பெண் போய்விடுமோ என‌ எண்ணி சுய‌ம‌ரியாதையை அட‌கு வைத்துவிட்டு தான் இன்றைய‌ மாண‌வ‌ர்க‌ள் ப‌டித்து வ‌ருகின்றார்க‌ள்). பின்ன‌ர் க‌ல்லூரிக்கு சென்ற‌ மாண‌வி திவ்யாவை ச‌க‌ மாண‌விக‌ள் திருடி என‌க்கூறி கேலி செய்துள்ளார்க‌ள் (இதை என்னால் கேலி என‌ எடுத்துக்கொள்ள‌ முடிய‌வில்லை. வ‌க்கிர‌ ம‌ன‌து கொண்ட‌வ‌ர்க‌ள் தான் இவ்வாறு ந‌ட‌ந்துகொள்வார்க‌ள்). த‌ன் மேல் நிக‌ழ்த்த‌ப்ப‌ட்ட‌ முறைய‌ற்ற‌ சோத‌னையால் ஏற்க‌ன‌வே ம‌ன‌முடைந்த‌ நிலையில் இருந்த மாண‌வி.திவ்யா ச‌க‌ மாண‌விக‌ளின் வ‌க்கிர‌க் கேலியால் பிப்ர‌வ‌ரி(2) மாலை த‌ற்கொலை செய்துகொண்டார். த‌ற்கொலை செய்யும் முன்ன‌ர் ஒரு க‌டித‌ம் எழுதிவைத்துள்ளார் அதில், நான் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வருகிறேன். என் வகுப்பில் ரூ.4 ஆயிரம் காணாமல் போனதற்காக ஆசிரியர்கள் சோதனையிட்டனர். ஆனால் என்னை மட்டும்…… என்று எழுதி இருந்தார். இத‌னை க‌ண்ட‌ திவ்யாவின் அம்மா சாந்தி ஒரு வேளை நான் அன்று என் ம‌க‌ளுட‌ன் க‌ல்லூரிக்கு சென்றிருந்தால் என் ம‌க‌ளை காப்பாற்றியிருக்க‌லாமே என‌ க‌த‌றி அழுதுள்ளார்.

குடும்ப‌த்தின‌ருட‌ன் மாண‌வி.திவ்யா

      மாண‌வி.திவ்யாவின் க‌டித‌த்தில் குறிப்பிட்டுள்ள‌ நான்கு பேயாசிரியைக‌ளும் காவ‌ல்துறையால் கைது செய்ய‌ப்ப‌ட்டுள்ளார்க‌ள். இதைய‌றிந்த‌ ஆல்காட் ப‌குதி பெண்க‌ள் அந்த நான்கு பேய்களைப் பார்க்க வேண்டும் என‌ காவ‌ல்துறை அலுவ‌ல‌க‌த்திற்கு செல்ல‌, காவ‌ல்துறையின‌ர் அந்த‌ பேயாசிரியைக‌ளுக்கு பாதுகாப்பு வ‌ழ‌ங்கி, வ‌ந்த‌ பெண்க‌ளை காவ‌ல்துறையின் மூல‌ம் க‌லைத்துள்ளார்க‌ள். என்னே ஒரு நடுநிலைமையான காவல்துறை!. இதைய‌டுத்து அந்த‌ நான்கு பேயாசிரியைக‌ளையும் சிறைக்கு கொண்டு செல்லும் வ‌ழியில் நான்கு பேருக்கும் ஒரே நேர‌த்தில் நெஞ்சுவ‌லி வ‌ந்துள்ளது. நடுநிலை ஊடகங்களும் காவல்துறை கூறியதை அப்படியே கிளிபிள்ளைப் போல சொல்லுகின்றன. அது எப்படி ஒரே நேரத்தில் நான்கு பேருக்கும், ஒரே மாதிரி நெஞ்சு வலி வரும் என்ற கேள்வியை சிறு குழந்தைகள் கூட கேட்கும், ஆனால் இவர்கள் கேட்கவில்லை ஏனென்றால் இவர்கள் பணி கிளியைப் போல அப்படியே திருப்பி சொல்வது மட்டுமே, யோசித்து கேள்வி கேட்பது எல்லாம் கெட்டவார்த்தைகள் (இலங்கை அரசு மீனவர்களை நாங்கள் கொல்லவில்லை என்று கூறுவதைக் கூட அப்படியே ஒளிபரப்புவார்களே அன்றி, அப்படி நீங்கள் கொல்லவில்லை என்றால் யார் கொன்றார்கள் என கேட்பதற்கு ஆறாவது அறிவு வேண்டும். பாவம்  கிளிகளுக்கு ஐந்தறிவு தானே)(இத‌ற்கும் காவ‌ல்துறையின‌ருக்கும் ச‌த்தியமாக‌ எந்த‌ ஒரு தொட‌ர்பும் இல்லை. அதிலும் குறிப்பாக‌ அந்த‌ நான்கு பேராசிய‌ர்க‌ளில் ஒருவ‌ரின் க‌ண‌வ‌ரான‌ காவல்துறை அதிகாரிக்கு இதில் தொட‌ர்புடைய‌து என‌ நான் உங்க‌ளுக்கு ம‌றந்தும் கூட‌ கூற‌மாட்டேன்). இத‌னை தொட‌ர்ந்து இவ‌ர்க‌ள் நால்வ‌ரும் ம‌ருத்துவ‌ம‌னையில் சேர்க்க‌ப்ப‌ட்டுள்ளார்க‌ல். இதுவ‌ரை இவ‌ர்க‌ள் நால்வ‌ரின் புகைப்ப‌ட‌மும் எந்த ஊடகத்திலும் வ‌ர‌வில்லை(குறிப்பாக‌ சொல்ல‌வேண்டுமானால் எந்த‌ ஊட‌க‌த்தையும் புகை‌ப்ப‌ட‌ம் எடுக்க‌விட‌ வில்லை, காரண‌த்தை ஏற்க‌ன‌வே கூறிவிட்டேன்).

  ஊட‌க‌ங்க‌ளை நோக்கி ஒரு கேள்வி பூவ‌ர‌சி த‌ன‌து குழ‌ந்தையைக் கொன்ற‌தை ஏதோ ப‌டுபாத‌க‌ செய‌லைப் போல‌ மீண்டும், மீண்டும் ஒளிப‌ர‌ப்பி அதை ஒரு விவாத‌மாக்கிய‌ நீங்க‌ள் ஏன் இதை வெறும் ஒரு செய்தி ம‌ன‌ப்பான்மையிலேயே வெளியிட்டுவ‌ருகின்றீகள்.  மாண‌வி.திவ்யா ஏழ்மையான‌ மீன‌வ‌ குடும்ப‌த்தைச் சேர்ந்த‌வ‌ர். கொன்ற‌வ‌ர்க‌ள் ப‌ண‌ம், அதிகாரம் கொண்ட‌வ‌ர்க‌ள் என்ப‌தாலா?காவ‌ல்துறையில் இறுக்கும் க‌ண்ணிய‌வான் சைலேந்திர‌ பாபு அவ‌ர்க‌ளே இந்த‌ நான்கு பேய்க‌ளையும் போலிமோத‌லில்(என்க‌வுண்ட‌ரில்) உங்க‌ளால் கொல்ல‌முடியுமா? (போலிமோத‌லில் ஒருவ‌ரைக் கொல்வ‌து த‌வ‌று என்ப‌து என் க‌ருத்தாக‌ இருப்பினும், இந்த‌க் கேள்வியை முன்வைக்க‌ கார‌ண‌ம் போலி மோத‌லில் ஏழைக‌ளை ம‌ட்டும் தான் கொல்வார்க‌ளா, இல்லை இவ‌ர்க‌ளைப் போல‌ ப‌ண‌ம் ப‌டைத்த‌ குற்ற‌வாளிக‌ளையுமா? என‌ அறிந்துகொள்வ‌த‌ற்காக‌வே). பொதும‌க்க‌ளே நீங்க‌ள் ஏன் இதை ஒரு விவாத‌ பொருளாக்காமால் ஒரு செய்தியை ப‌டித்துவிட்டு க‌ட‌ந்து செல்வ‌து போல‌ செல்கின்றீர்க‌ள். உங்க‌ள் கால்க‌ளில் இருக்கும் செருப்பை எடுத்துக் கொண்டு ம‌ருத்துவ‌ம‌னையில் த‌ஞ்ச‌ம் புகுந்துள்ள‌ அவ‌ர்க‌ளை விலாசவேண்டிய‌து தானே?. இல்லை நீங்க‌ளெல்லாம் ஊட‌க‌ங்க‌ள் ஆட்டுவிக்கும் வெறும் பொம்மைக‌ளா?.
  ந‌ண்ப‌ர்க‌ளுக்கும், ச‌க‌ ப‌திவ‌ர்க‌ளுக்கும் ஒரு வேண்டுகோள் த‌ய‌வு செய்து இந்த‌க் கொலையைப் ப‌ற்றி உங்க‌ள் நண்ப‌ர்க‌ளிட‌மும், உற‌வுக‌ளிட‌மும் எடுத்துச் சொல்லி விவாதியுங்க‌ள். இல்லை என்றால் சென்னை நோக்கியாவில் க‌ட‌ந்த‌ ந‌வ‌ம்ப‌ர் அன்று கொலை செய்ய‌ப்ப‌ட்ட தொழிலாளி அம்பிகாவின் கொலையை(1) நாம் க‌ட‌ந்து வ‌ந்துள்ள‌தைப் போல‌ இதையும் க‌ட‌ந்து வ‌ந்துவிடுவோம்.

ந‌ன்றி: முக‌நூல் ந‌ண்ப‌ர்க‌ள். க‌விதா, ருத்ர‌ன், எண்பீல்ட‌ர்.

1) http://www.vinavu.com/2010/11/01/nokia-murders/

பின்குறிப்பு: இந்த‌ க‌ட்டுரையைப் ப‌டித்துவிட்டு ஆசிரியைக‌ளை பேய்க‌ளுட‌ன் ஒப்பிட்டு எழுதி உள்ளீர்க‌ளே என‌க் கேள்வி கேட்ப‌த‌ற்கு முன் இதுவ‌ரை நீங்க‌ள் ஏன் இந்த‌ பேய்க‌ளைப் ப‌ற்றி பேச‌வில்லை என்று கூறுங்க‌ள். மேலும் நான் இந்த‌ நால்வ‌ரை ம‌ட்டுமே பேய்க‌ளுட‌ன் ஒப்பிட்டுள்ள‌னே அன்றி வேறு யாரையும் அல்ல‌. என‌க்கு தெரிந்து நண்பர்களில் தேசிய‌ ந‌ல்லாசிரிய‌ர் விருது வாங்கிய‌வ‌ர்க‌ளும் உண்டு. திவ்யாவை கொட்டிய அந்த நான்கு கருந்தேள்களின் பெயர்கள். ஜெயலெட்சுமி, விஜயலெட்சுமி, சுதா, செல்வி.

ந‌ற்ற‌மிழ‌ன்.ப‌

Advertisements
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Advertisements
%d bloggers like this: