ஏப்ரல், 2011 க்கான தொகுப்பு

ஈழத்தமிழர்கள் புதிய வழிகளைச் சிந்திக்க வேண்டிய தருணமிது மொழியாக்க‌ம்: ந‌ற்ற‌மிழ‌ன்.


ஈழத்தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கும் நோக்கில் நய‌வஞ்சமாக இரண்டு முறை இந்தியா போரில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல், இலங்கையில் ஈழத்தமிழர்களின் மீது எந்தெந்த  வகையிலெல்லாம் இனப்படுகொலை நடைபெற்றாலும் இந்தியாவிற்கு எதிரான எந்த ஒரு நாட்டுடனும் இலங்கை கூட்டு வைத்திருப்பினும் அதை கண்டுகொள்ளாமல் கொழும்பில் ஆட்சியதிகாரத்தில் இருக்கும் ஏதோ ஒரு சாத்தானைப் தான் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கும் என்பதை இந்தியா பலமுறை நிரூபித்திருக்கின்றது, ஆனால் ஈழத்தமிழ் மக்களோ இந்த(இந்திய-இலங்கை) சமன்பாட்டை எதிர்கொள்வதற்கு தேவையான ஒரு வெளியுறவுக் கொள்கையை உருவாக்குவதை நோக்கி நகர்ந்தபாடில்லை. “இந்து” நாளிதழின் ஆசிரியரான என்.இராமுக்கு அண்மையில் அளித்த செவ்வியில்(Interview) மகிந்த இராசபக்சே “பிரபாகரனுக்கு நாங்கள் எதைக்(ஈழம்) கொடுக்க மறுத்தோமோ அதை(ஈழத்தை) நாங்கள் யாருக்கும் கொடுக்கப்போவதில்லை” என்று கூறியுள்ளார். அது போல, என்னதான் தமிழர்கள் இந்தியாவின் மீது தனித்துவமான சார்பு நிலையைக் கொண்டிருப்பதாக வெளிபடுத்தினாலும், இதுவரைக்கும் செயல்படாத இந்தியா இனிமேலும் ஈழத்தமிழர்களுக்காக செயல்படப்போவதில்லை. இந்த முயற்சியில் இன்னும் ம‌ன‌ம்த‌ளார‌த‌வ‌ர்க‌ள் அதே நிலையிலேயே இருக்க‌ட்டும். அத‌னால் ஏதாவ‌து ப‌ல‌ன்கள் விளைந்தாலும் ந‌ல்ல‌த‌ற்கே. ஆனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மைய அர‌சிய‌ல் நீரோடையில் உள்ள‌வ‌ர்க‌ள் ஈழ‌த்த‌மிழ் ம‌க்க‌ளின் விடுதலை விருப்பங்களுக்கு உதவக் கூடிய வகையில் மேற்கூறிய‌ ச‌ம‌ன்பாட்டை எதிர்கொள்ளும் மாற்று வ‌ழிக‌ளைப் ப‌ற்றி சிந்திக்க‌ வேண்டிய‌ கால‌மிது.

தமிழ்நெட் ஆசிரியர் குழு.

2010 ஆம் ஆண்டு மாவீரர் நாள் முன்னெப்போதும் இல்லாத அரசியல் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.

 ஒரு பக்கம் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் மாவீரர் நாளை மிகுந்த உத்வேகத்துடனும், ஒற்றுமையுடனும் கடைபிடிக்க, மறுபக்கம் ஒடுக்குமுறை அரசுகளான இலங்கையும், இந்தியாவும் ஈழ‌த்தமிழர்களைவிட மிகவும் கவனமாக மாவீரர் நாளை இலங்கைத்தீவிலும், தமிழ்நாட்டிலும் கண்காணித்து வந்தார்கள்.

  இந்திய, இலங்கை அரசுகள் ஈழத்தமிழர்களுக்கு எந்த அரசியல் உரிமையும் வழங்காது என்பதையும், அதே நேரம் ஈழத்தமிழ் மக்கள் தங்களின் வேட்கையாக‌வும், உளவியல்பூர்வ தேவையாகவும் வைத்துள்ள‌ அரசியல் தீர்வை நோக்கி நகர்வதில் ஒரு மிகப்பெரிய வெற்றிடம் இருப்பதையும் மாவீரர் நாள் வாரத்தில் நடந்த நிகழ்வுகள் நமக்கு தெளிவாக படம் பிடித்துக் காட்டுகின்றன.

  ஈழத்தமிழர்களின் தாயக பூமியில் மாவீரர் நாளன்று மாவிரர்களின் உடன்பிறந்தவர்களோ, பெற்றோர்களோ இறந்த மாவீரர்களை நினைவு கூறுவது அவர்கள் வாழ்வில் பிரிக்க முடியாத ஒரு நிகழ்வாகும் ஆனால் இந்நிகழ்வை ஒடுக்குவதற்காக‌ மிகவும் கடுமையான செயல்களில் ஆக்கிரப்பு இராணுவம் ஈடுப்பட்டது. அன்றைய நாளில் ஆலயங்களில் மணிகள் ஒலிப்பதைக் கூட தடை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலோ தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடையின் பெயரால் மாவீரர் நாள் நிகழ்வு ஒடுக்கப்பட்டிருந்தது.

   தமிழ் ஈழத்தில் மாவீரர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மாவீரர் நாள் நிகழ்வை மிகவும் அமைதியாக கடைபிடிக்க, தமிழ்நாட்டில் வீரவணக்க, மாவீரர் நாள் நினைவு சுவரொட்டிகள் மூலம் மக்கள் மாவீரர் நாளை கடைபிடித்தனர். ஈழத்தமிழர்களை விட மிகவும் உன்னிப்பாக‌ இந்தியாவும், இலங்கையும் மாவீரர் நாளை கண்காணித்து வந்ததாக ஈழத்திலும், தமிழ்நாட்டிலும் உள்ள அரசியல் நோக்கர்கள் கூறினார்கள்.

   அதே நேரத்தில் தங்களது மேலாதிக்கத்தை வெளிப்படுத்தும் அரச தந்திர நடவடிக்கையாக‌ மாவீரர் நாளன்று இந்திய வெளியுற‌வுத்துறைச் செயலாளர். திரு எசு.எம்.கிருசுணா யாழ்ப்பாணத்தில் உள்ள கந்தர்மடத்தில் இந்திய தூதரகத்தை திறப்பதற்கான நாளாக தேர்வு செய்தார். தமிழர் தாயகத்தில் திறக்கப்பட்ட இந்தியாவின் முதல் அரச அலுவலகம் இது தான். வழமை போலவே  அரசியல் தீர்வைப் பற்றியோ, கொழும்பு அரசின் இராணுவ ஒடுக்குமுறையைப் பற்றியோ, அரசு தமிழர் பகுதிகளில் மேற்கொள்ளும் சிங்களமயமாக்கல்  மூலம் காலனீயாதிக்கத்தை மேற்கொள்வது பற்றியோ திரு.கிருசுணா எதையும் பேசவில்லை. அன்றும் கூட பொருத்தமில்லாமல் 13ஆவது சட்ட‌திருத்தத்தைப் பற்றியே அவர் பேசினார். இந்த 13ஆவது சட்ட திருத்தத்தை இந்தியா இலங்கையில் நடைமுறைப்படுத்த தவறி இருபது வருடங்களுக்கு மேலாகவே ஆகிவிட்டது. இந்த காலகட்டத்தில் இந்தியா ஈழத்தமிழர்களுடன் இரண்டு முறை போரிலும் ஈடுபட்டாகிவிட்டது. ஒருமுறை நேரடியாக, இரண்டாவது முறை மறைமுகமாக.

   ஆறுமுக நாவலருக்கும், தாமோதரம்பிள்ளைக்கும் இடையேயான நட்புறவைச் சுட்டி ஈழத்தமிழர்களுக்கும், தென்னிந்தியாவிற்குமான உறவைப்பற்றி யாழ்ப்பாணத்தில் பேசிய கிருசுணா, தென்னிலங்கையில் பேசிய போது புத்தர் பிறந்த 2600ஆவது ஆண்டு விழாவிற்க்காக கபிலவசுதுவில் உள்ள சிலைகளை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என பேசினார்.

    ஒருபுறம் தமிழர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னரே புறக்கணித்த 13ஆவது சட்ட திருத்தத்தை நடைமுறைப்படுத்துவோம் என்ற‌ மிக வழமையான‌ பொய்யை யாழ்ப்பாணத்தில் கூறிய கிருசுணா, மறுபுறம் அரசியல் தீர்வை நோக்கிய(மழுங்கடிக்கும்) பல கட்ட பேச்சுவார்த்தைக்கு இலங்கை அரசுடன் ஒப்புக்கொண்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மகிந்த இராசபக்சேவின் திட்டமான ஈழத்தமிழர்களின் தேவையான அரசியல் தீர்வை பயனற்ற ஒன்றாக‌ செய்யும் திட்டத்திற்கு தேன் முலாம் பூசி இந்தியா எதிரொலிக்கின்றது என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றார்க‌ள்.

   ஈழத்தமிழர்களின் தேவையான அரசியல் தீர்வு பற்றி பல கட்டங்களாக‌ பேசிக் கொண்டிருக்கும் போதே, தமிழர் தாயகப்பகுதியில் சிங்கள குடியேற்றங்களை உருவாக்கியும், இராணுவமயப்படுத்தியும் அந்த அந்த அரசியல் தீர்வை மழுங்கடித்து பயனற்ற நிலைக்கு கொண்டு செல்லும் தங்களது கொள்கைக்கு இந்தியா இசைவு(agree) தெரிவித்திருப்பது இலங்கை அரசாங்கத்திற்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.
 
    கொழும்பு வழமை போலவே கிருசுணாவின் வருகைக்கு பதில் சொல்லும் விதமாக அழகாக அதற்கு அடுத்த நாள் இராணுவ உடன்படிக்கைகளில் கையெழுத்திடுவதற்காக பாகிசுதான் அதிபரை வரவழைத்தும், அதற்கு முன்பே சீனாவிலிருந்து ஒரு முக்கியமான அமைச்சரையும் வரவழைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  “The Economist” இதழில் அண்மையில் வெளியான கட்டுரை ஒன்றில் “காசுமீரில் இந்தியாவும், திபெத்தில் சீனாவும் எவ்வாறு பல ஆண்டுகளாக அந்த மண்ணின் மைந்தர்களை அடக்குமுறை இராணுவப்படைகளைக் கொண்டு ஒடுக்கிவருவகின்றன எனவும், இந்தியா, சீனாவின் இந்த‌ ஒடுக்குமுறையிலிருந்தே இலங்கை அரசு  ஈழத்தமிழர்களை எவ்வாறு ஒடுக்குவது என்பதற்கான முறைகளை கற்றுக்கொண்டிருக்கலாம்” எனக் கூறியுள்ள‌‌து. மேலும் “உண்மை நிலை கொஞ்சம் கொஞ்சமாக தெரிய வருகின்ற இந்த நிலையில் போருக்குப் பின்னரான ஒரு ஒளிமயமான எதிர்காலம் என்பது ஈழத்தமிழர்களுக்கு உண்மையில் சாத்தியமா? என்ற கேள்வியை அந்த கட்டுரை முன் வைக்கின்றது.
 
   மாவீரர் நாளை எல்லா தரப்பு ஈழத்தமிழ் மக்களும் மிகுந்த ஆர்வத்துடன் கடைபிடித்த போதிலும், இந்த‌   இக்கட்டான சூழலை எவ்வாறு எதிர்கொள்வது என்ற திட்டவட்டமான நடவடிக்கைகளை நோக்கி ஈழத்தமிழர்கள் நகரவில்லை என்பதையும் ந‌ம‌க்கு உண‌ர்த்துகின்ற‌து.

      இந்திய, அமெரிக்க அரசுகள் இன்று ஈழத்தமிழர்கள் தங்களது தேசிய மற்றும் இன அடையாளங்களைப் பற்றி எண்ணக்கூடாது என்றும், ஈழத்தமிழர்கள் “ஒரு சிறுபான்மையினம்” என்றும் கூறிவருகின்றார்கள். ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழர்களை இனப்படுகொலை செய்யும் இலங்கை அரசு தமிழர்கள் ஒன்று தங்கள் அடையாளங்களை, சுயமரியாதையை இழந்து வாழ வேண்டும் அல்லது தங்களது விடுதலைக்காக போராட வேண்டும் என்ற தெரிவுகளைத் தான் வழங்கியிருக்கின்றது என்பதை முழுமையாக தெரிந்துகொண்டு தான் அவர்கள் ஈழத்தமிழர்களிடம் உங்கள் அடையாளங்களை மறந்து விடுங்கள் என்று கூறிவருகின்றார்கள்.
     

      ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்கு நீதிபோத‌னைக‌ளை பிர‌ச்சார‌ம் செய்யும் எல்லோரும் ஈழத்தமிழர்கள் ஒரு பேர‌ழிவுக்கு உட்பட்டு இருந்த‌ நிலையில் கூட தங்களின் க‌ட‌மைக‌ளை செய்ய‌த்த‌வறியவர்கள் என்ப‌து இங்கே குறிப்பிட‌த்த‌க்க‌து.

    பெரிய நாடுகளுக்கு இடையே சிக்கிய தேசிய இனங்களுடைய நிலையிலேயே இன்று ஈழத்தமிழ் தேசம் உள்ளது. கொரிய, மங்கோலிய, பாசுகிய(Basques) தேசங்கள் இதற்கு முன்னர் இந்த நிலையை அனுபவித்துள்ளார்கள். 

    சிங்களவர்களின் “ஈழ‌த்தில் வாழுகின்ற‌ த‌மிழ‌ர்க‌ள் த‌மிழ்நாட்டில் வாழும் த‌மிழ‌ர்க‌ளின் நீட்சி” என்பது எந்த ஒரு ஆதாரமும் அற்ற கூற்று என பல முறை பலரும் சுட்டிக்காட்டியுள்ளார்கள், ஈழ‌த்த‌மிழ‌ர்கள் இலங்கைத்தீவில் தம்மைப்(சிங்களர்களைப்) போல் சரிசமமான உரிமையைக் கொண்ட ஒரு தேசிய இனம் என்ற‌ முழுமையான வரலாற்று உண்மையை ஏற்க மறுப்பதற்கு இந்த அறமற்ற‌ வாதத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.    

     19ஆம் நூற்றாண்டில் உருவாகிய நவீன தேசியக் கருத்தாக்கத்தின் அடிப்படையிலேயே ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் தாங்க‌ள் ஒரு தனித்தேசிய‌ இன‌ம் என்று கூறினார்கள்.மேலும் ஈழத்தமிழர்கள் சிங்க‌ளவ‌ர்க‌ளுக்கு ப‌தில‌டி கொடுக்கும் வித‌மாக‌ அல்லாம‌ல் த‌மிழ்நாட்டு த‌மிழ‌ர்கள் அதுவரை அவ‌ர்கள் மேல் வைத்திருந்த பார்வைக்கு தெளிவு கொடுக்கும் விதமாகத்தான் தனித் தேசிய இன கருத்தாக்கத்தை உருவாக்கினார்கள். ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்கென்ற‌ ஒரு த‌னித்த‌ வ‌ரலாற்றையும், இல‌க்கிய‌ ப‌ங்க‌ளிப்பையும் கொண்ட தமிழக தமிழர்களுக்கு  இணையான ஒரு தேசிய‌ இன‌ம் என்ப‌தை முத‌லில் அவ‌ர்க‌ளுக்கு எடுத்துக்கூறிய‌து ஆறுமுக‌ நாவ‌ல‌ரே. (ந‌ல்லறிவு‌ச்சுட‌ர் கொழுத்த‌ல், 1869, ஆறுமுக‌ நாவ‌ல‌ர் பிர‌ப‌ந்த‌ திர‌ட்டு)

       19ஆம் நூற்றாண்டில் இல‌க்கியத் தொகுப்பை உருவாக்கிய‌ அதே நேரம் த‌மிழை உல‌க‌ம‌ய‌ப்ப‌டுத்திய‌து வ‌ரை த‌மிழ் மொழிக்கான‌ ப‌ங்க‌ளிப்பில் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் ப‌ங்க‌ளிப்பு அள‌ப்பெரிய‌து. ஆனால் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் த‌ங்க‌ளைப் போல‌வே ஒரு த‌னித்தேசிய‌ இன‌ம் என்ப‌த‌ற்கான‌ ஒரு உறுதியான‌ அங்கீகார‌ம் த‌மிழ்நாட்டின் பொதுபுத்தியிலிருந்து இன்னும் வ‌ர‌வில்லை. அவ்வாறான‌ ஒரு அங்கீகார‌ம் இன்னும் த‌மிழ்நாட்டிலிருந்து வ‌ராத பொழுது, எப்ப‌டி நாம் சிங்க‌ள‌ தேசிய‌ இன‌ம் ஈழ‌த்த‌மிழ் தேசிய‌ இன‌த்தை அங்கீக‌ரிக்கும் என‌ எதிர்பார்க்க‌முடியும்?
    
            1936ல் வங்காளிகள் மதத்தின் அடிப்படையில் மேற்கு வங்காளம், கிழக்கு வங்காளம் என்று  தனித்தனியே பிரிகின்றார்கள். மேற்கு வங்காளிகள்(இன்றைய மேற்கு வங்காளம்) கிழக்கு வங்காளிகளை(இன்றைய வங்காள தேசம்)ஒரு த‌னி தேசிய‌ இன‌ம் என்றும், அவர்களின் வ‌ங்காள‌ தேசம் ஒரு தனி தேசம் என்றும்‌ அங்கீகாரமளிக்கின்றனர். இந்த தெளிவு தான் வ‌ங்காள‌ தேச‌த்திற்கான‌ விடுத‌லைக்கு மிக அடிப்படையான‌ பலமாக இருந்தது. இதே போன்ற சிந்தனை (ஈழத்தமிழர்கள் ஒரு தனி தேசிய இனம், ஈழம் ஒரு தனி தேசம்) த‌மிழ்நாட்டு ம‌க்கள் ம‌ன‌தில் தோன்றுவ‌தற்காக நாம் நிறைய‌ வேலைகளை செய்ய‌‌‌ வேண்டும்.

      இல‌ங்கை தீவில் மூன்று த‌மிழ் பேசும் ம‌க்க‌ள் குழுமங்கள் வ‌‌சிப்பதாக‌ கூறுவ‌தில் சில‌ இந்திய‌ எழுத்தாள‌ர்க‌ள் க‌ண்ணும் க‌ருத்துமாக‌ உள்ளார்க‌ள். இதில் இன்னும் சில‌ர் நான்கு த‌மிழ் பேசும் ம‌க்க‌ள் குழுமங்கள் வ‌சிப்பதாக‌வும் கூறுகின்ற‌ன‌ர்.  இவர்களி‌ன் நோக்க‌ம் என்ன‌வென்றால் எல்லா ம‌க்க‌ள் குழுமங்க‌ளையும் “சிறுபான்மையின‌ர்” ஆக்குவதே அன்றி வேறல்ல‌. இல‌ங்கைத்தீவில் தமிழர்கள் எங்கு வ‌சித்தாலும் அவர்கள் சுயமரியாதையுடன் உயிர்வாழ்வதற்கு தமிழீழ‌த்தை உருவாக்க‌ வேண்டிய‌து த‌விர்க்க‌ இயலாத‌ ஒன்று என்ற உணர்வுத்தளத்தை எவ்வாறு கட்டி எழுப்புவது என்று தமிழீழ‌ தேசிய‌ வாதிகள் புதிதாக‌  சிந்திக்கவேண்டும்.

   தங்களைப் போலவே தெற்காசியாவில் விடுதலைக்காக‌‌ போராடிக்கொண்டிருக்கின்ற தேசங்களோடு,  ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் ஒரு கூட்ட‌ணியை கண்டிப்பாக உருவாக்க முடியும். தனிநாட்டுக் கோரிக்கை என்பதை ஒரு மதக் கோட்பாடு போல நாம் பிடிவாதமாக‌  வாதிட‌த் தேவையில்லை. இறுதியாக நமது தேவை என்னவென்றால் எதன் அடிப்படையில் நாம் ஒடுக்கப்படுகிறோமோ அந்த ஒடுக்குமுறையிலிருந்து விடுபட்டு சுயமரியாதையுடன் கூடிய ஒரு வாழ்க்கையை உறுதி செய்வதே ஆகும். ஒருவ‌ன் த‌னது தேசிய‌ இன‌ அடையாள‌த்தின் அடிப்படையில் ஒடுக்குமுறைக்கும், இன‌ப்ப‌டுகொலைக்கும் ஆளானால், அவன் அதே தளத்தில் இருந்த அந்த ஒடுக்குமுறையை எதிர்கொண்டு த‌ன் தேச‌த்திற்கான‌ முழுமையான‌ விடுத‌லையையும், இறையாண்மையையும் வென்றெடுக்க வேண்டும். அவ்வாறு போராடும் அதே நேர‌த்தில்  கூட்டமைப்பிலுள்ள சிறிய நாடுகள்  சமமான பங்காளிகளாக நடத்தப்படக்கூடிய ஐரோப்பிய  ஒன்றியம் போன்ற ஒரு கட்டமைப்பைத் தெற்காசியாவில் ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் தேச‌ங்க‌ள் எல்லாம் ஒன்றிணைந்து கருத்தியல் ரீதியாக உருவாக்க முயற்சி செய்யலாம்.

 தமிழீழத் தேசிய இனத்திற்கும், சிங்களத் தேசிய இனத்தின் மீள் இணக்கப்பாடு ஏற்படுவதற்கே நாம் முதலில் பிரிந்தாக வேண்டும் என்ற கருத்தியலைச் சிங்கள தேசத்தில் உள்ள புரிந்துகொள்ளக் கூடிய பக்குவம் கொண்ட குழுமங்களுக்கு நாம் எடுத்துக்கூறவேண்டும்.

   த‌ங்க‌ளை சில‌ வ‌ல்ல‌ர‌சுக‌ளின் கொல்லைப்புற‌த்தில் தஞ்சம்‌ வைத்துக்கொள்வ‌தே ச‌ரியான‌து என‌ சில‌ ஈழ‌த்த‌மிழ் குழும‌ங்க‌ள் நம்பக்கூடும். ஆனால் அந்த குழுக்களில் இருக்கும் ந‌ம்பக்கைக்குரிய‌‌ முக்கிய‌மான‌ அர‌சிய‌ல் ஆற்ற‌ல்க‌ள் தைரிய‌மாக‌வும், திற‌ந்த‌ம‌ன‌துட‌னும், ந‌ம்பிக்கையுட‌னும் பூளோக‌ ஆற்ற‌ல் ச‌ம‌ன்பாட்டை(Global Power Equation) எதிர்கொள்ள‌வேண்டும். ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் சீனாவையும், பாகிசுதானையும் விலக்கி வைத்து பார்க்கக்கூடாது.

  தங்கள் பிர‌ச்ச‌னை உலகளவில் அங்கிகரிக்கப் பட வேண்டிய ஒரு சூழலை உருவாக்க வேண்டிய தேவை  உள்ளது,  அந்த அங்கீகாரத்தை அடையவும், நீண்ட‌கால‌மாக‌ நீடித்துக்கொண்டிருக்கும் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் பிர‌ச்ச‌னையின் தன்மையை கருத்தில் கொண்டும்,  ஒடுக்குமுறைக்கு உள்ளான‌ ம‌க்க‌ள் அனைத்து சாத்திய‌மான‌ வ‌ழிக‌ளிலும்  முயற்சி செய்ய‌ வேண்டும்.

   ஈழ‌த்த‌மிழ‌ர்களின் நலன்களை உறுதிசெய்வதென்பது இப்போது இந்தப்பிரச்சனையில் தலையிட்டுக் கொண்டிருக்கும் நாடுகளுடைய தவிர்க்க முடியாத தேவை என்று உணர செய்வதற்கான முயற்சியை நாம் மேற்கொள்ளவில்லை என்றால் நாம் அடையப் போவது எதுவுமில்லை.

மொழியாக்க‌ம்: ந‌ற்ற‌மிழ‌ன்.

மூலப்பதிவு:

http://www.tamilnet.com/art.html?catid=99&artid=33184

நன்றி: தமிழ் முழக்கம் – திங்களிருமுறை இதழ் (இந்த இதழின் சென்ற பதிப்பில் இந்த மொழியாக்கம் வெளிவந்துள்ளது).    கீற்று இணைய‌த்திலும் இக்க‌ட்டுரை வெளிவ‌ந்துள்ள‌து

Advertisements

இலங்கையில் “தேசிய இணக்கப்பாடு” சாத்தியமா?…… தமிழாக்கம். ப.நற்றமிழன்.


க‌ட்டுரையில் நுழையும் முன் க‌ட்டுரையின் மைய‌  விவாத பொருளான இண‌க்க‌ப்பாடு(Reconcilation) என்ற சொல் புழக்கத்தில் இல்லாமல் இருப்பதால் அதன் பொருள் பெரும்பான்மையான‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு தெரிந்திருக்கும் என்ப‌து ஐய‌மே. இண‌க்க‌ப்பாடு என்ப‌தை சேர்ந்து வாழுத‌ல் என‌ப் பொருள் கொள்ள‌லாம்.  கே.பி என்றறியப்படும் குமரன் பத்மபநாபன் சமீபத்தில் ஒரு ஊடகத்திற்கு செவ்வி அளிக்கும்பொழுது  இல‌ங்கையில் த‌மிழ‌ர்க‌ள் சிங்க‌ள‌வ‌ர்க‌ளுட‌ன் சேர்ந்து வாழ‌ வேண்டும் என்று கூறியுள்ளார். அவ‌ரின் அந்த‌ கூற்று சாத்திய‌மான‌ ஒன்றா என‌ இக்க‌ட்டுரையில் விரிவாக‌ ஆராய்ந்துள்ளார் ஆசுத்திரேலியாவில் வாழ்ந்து வரும் சிங்க‌ள‌ ம‌ருத்துவ‌ரான‌ பிரைன் சேன‌விர‌த்னே அவ‌ர்க‌ள்.

………………………………………….

த‌ன‌து ச‌மீப‌த்திய‌ க‌ட்டுரையான‌ “ஏன் இலங்கையில் இணக்கப்பாடு என்பது சாத்தியமில்லை ?” என்ற‌ க‌ட்டுரையில் பிரைன் சேன‌விர‌த்னே இல‌ங்கையில் “இண‌க்க‌ப்பாடு” என்ற வாதமே க‌ற்பனையான ஒன்று என்கிறார், மேலும் த‌மிழ் ம‌க்க‌ளின் மீது நடைபெற்ற உலகின் மிக‌ மோச‌மான‌ ம‌னித‌ உரிமை மீற‌லும், தொட‌ர்ந்து ந‌டைபெற்று வருகின்ற‌ இன‌ அழித்தொழிப்பு ந‌ட‌வ‌டிக்கைக‌ளும் இல‌ங்கையில் “இண‌க்க‌ப்பாடு” என்ற‌ ஒன்றையே இல்லாம‌ல் செய்து விட்டன என்கிறார் அவர். மேலும் “எரிகின்ற வீட்டில் பிடுங்கிய வரை இலாபம்” என்பதை போல ச‌ர்வ‌தேசியம்(International) தங்களது சுய இலாபத்திற்காக‌ செய்த‌ திட்டமிட்ட  க‌ழுத்தறுப்புகள், த‌மிழ‌ர்க‌ளை “இண‌க்கப்பாடு” ப‌ற்றி யோசிக்கவே விடாம‌ல் செய்து விட்ட‌து. 76 வ‌ய‌தான‌ பிரைன் சேன‌விர‌த்னே ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளின் உரிமைக்காக‌ ப‌ல‌ ஆண்டுக‌ளாக போராடிவருபவர். பண்டார நாயக்கா குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும் இவர் ஈழ தமிழர்களின் உரிமைக்காக போராடி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மேலும் கூறுகையில், சிங்க‌ள‌ ப‌குதிக‌ளில் ந‌டைபெறுவ‌தாக‌ சொல்ல‌ப்ப‌டும் அபிவிருத்தி(Development) ப‌ணிகளுக்கான‌ திட்டமிடும் அதிகாரம் கொழும்பில் உள்ள‌வ‌ர்க‌ளிடமே தொடர்ந்தால் சிங்கள பகுதிகளில் கூட அபிவிருத்தி என்ப‌து சாத்திய‌மான‌ ஒன்று அல்ல என்கிறார்…….

“ச‌ர்வ‌தேசிய‌ம் ம‌ற்றும் சர்வதேச நிதியத்தின்(IMF) தேவையில்லாத‌ த‌லையீடுக‌ள் இல்லாம‌ல் இருந்திருந்தால், ஒரு வேளை இல‌ங்கையில் சிங்க‌ள‌ ம‌ற்றும் த‌மிழ் இன‌ங்களுக்குள்ளே ஒரு ச‌மாதான‌ உட‌ன்பாடும், இண‌க்க‌பாடும் ஏற்ப‌ட்டிருக்கும் என‌ நான் உறுதியாக‌ ந‌ம்புகின்றேன்”  என‌க் கூறுகின்றார் ம‌ருத்துவ‌ர்.பிரைன் சேன‌விர‌த்னே. 1984ல் இந்த‌ பிர‌ச்ச‌னைக்கு தான் முன்வைத்த‌ “ஐந்து தேச‌‌ திட்ட‌த்தை” சற்றே த‌ன் ம‌ன‌தில் அசை போடுகின்றார்.(இதை ப‌ற்றி பின்ன‌ர் விரிவாக‌ காண்போம்)

“சிங்க‌ள‌ பெரும்பான்மைக்கும், ஒடுக்க‌ப்ப‌டுகின்ற‌ த‌மிழ் சிறுபான்மைக்குமான‌ இடைவெளி மேலும், மேலும் அதிக‌ரித்து கொண்டே செல்கின்ற‌து. அதே போல‌ த‌ங்க‌ளுக்கு எது “தேவை”,  எது “தேவை இல்லை” என்ப‌து தொட‌ர்பான‌ இடைவெளியும் தெற்கில் வாழும் சிங்க‌ள‌ர்க‌ளிட‌ம் அதிக‌ரித்து வ‌ருகின்ற‌து. ஊழ‌ல் மிகுந்த‌, அட‌க்குமுறை அர‌சினாலும், சர்வதேச நிதியத்தின் நிப‌ந்த‌னைக‌ளுக்காக‌ அர‌சு மேற்கொள்ளும் ம‌னித‌ உரிமைய‌ற்ற‌ செய‌ல்க‌ளினாலும் இந்த இடைவெளி அதிக‌ரித்துக் கொண்டே செல்கின்றது”.

“இந்த‌ திட்ட‌ங்க‌ளினால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளோ ஒழுங்கின்மையுட‌ன், ப‌ல‌ குற்ற‌ச்செய‌ல்க‌ளில் அதிக‌ளவில் ஈடுப‌ட்டு வ‌ருகின்றார்க‌ள். இவ‌ர்க‌ளுக்காக‌ குர‌ல் கொடுப்ப‌த‌ற்கு வெளியில் ச‌க்தி வாய்ந்த‌ ஒரு ச‌மூக‌ம் இல்லை. இது தான் ஏழைக‌ளின் பிர‌ச்ச‌னை. இத‌னால் தான் நான் இவ‌ர்க‌ளின் துய‌ர‌ங்க‌ளுக்காக‌ வ‌ருத்த‌ப்ப‌டுவ‌தோடு ம‌ட்டும‌ல்லாம‌ல், ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ இவ‌ர்க‌ளுக்காக‌ குர‌ல் கொடுத்தும் வ‌ருகின்றேன்”.

“உல‌கெங்கிலும் புலம்பெயர்ந்து வாழுகின்ற‌ ப‌த்து இல‌ட்ச‌த்திற்கும் மேற்ப‌ட்ட‌ தமிழ் சமூகம் இல‌ங்கை அர‌சு “இண‌க்க‌ப்பாடு” என்று கூறுவ‌தற்கான‌ உண்மை காரணத்தை புள்ளி விவ‌ர‌ங்க‌ளுட‌ன் ச‌ர்வ‌தேச‌ ச‌முதாய‌த்திட‌ம் எடுத்து வைத்து, “இண‌க்கப்பாடு” என்ப‌து இல‌ங்கையில் ஏன் சாத்திய‌மில்லை என‌ ஆதார‌பூர்வ‌மாக‌ விள‌க்க‌வேண்டும். இத‌ற்கு ந‌ம்மிட‌ம் தெளிவான‌ புள்ளிவிவ‌ர‌ங்க‌ள் வேண்டும்,  இந்த‌ ஒரு கார‌ண‌த்திற்காக‌த் தான் இக்க‌ட்டுரையை  நான் இந்த தருணத்தில் எழுதுகின்றேன்”.

க‌ட்டுரையிலிருந்து……….

இல‌ங்கையில் “தேசிய‌ இண‌க்க‌ப்பாடு” என்பது ப‌ற்றிய‌ பேச்சு இப்பொழுது ப‌ர‌வ‌லாக‌ பேச‌ப்ப‌டுகின்ற‌து. இந்த “இண‌க்க‌ப்பாடு” என்ப‌து குறிப்பாக‌ சிங்க‌ள‌ ஆதிக்க‌ அர‌சிற்கும், த‌மிழ் ம‌க்க‌ளுக்கும் இடையில் வேண்டும் எனவும் கூற‌ப்ப‌டுகின்ற‌து. த‌மிழ் ம‌க்க‌ள் ச‌ம‌ உரிமையுட‌னும், கௌர‌வ‌த்துட‌னும் எந்த‌ ஒரு இன‌ப்பாகுபாடும் இல்லாம‌ல் வாழ்வத‌ற்காக‌ போராடிய‌ சிங்க‌ள‌ன் என்ற‌ முறையில் கூறுகிறேன், இப்பொழுது தாங்க‌ள் பிற‌ந்த‌ ம‌ண்ணில் அவ‌ர்க‌ளுக்கு வாழ‌ வ‌ழியே இல்லாத நிலைமை உள்ளது, இந்த காரணத்தினால் அங்கு இண‌க்க‌ப்பாடு என்ப‌து சாத்தியமே இல்லை.
1948லிருந்து த‌மிழ‌ர்க‌ளின் மேல் இழைக்க‌ப்ப‌டும் கொடுமைக‌ளை நான் மிக‌வும் உன்னிபாக‌ க‌வ‌னித்து வ‌ருகின்றேன். 1948ல் ப‌த்து இல‌ட்ச‌ம் “இந்திய‌ ம‌லைய‌க‌ த‌மிழ‌ர்க‌ளை” (அந்த‌ கால‌க‌ட்ட‌த்தில் இல‌ங்கையின் மொத்த‌ ம‌க்க‌ள் தொகையில் ஏழில் ஒரு பங்கான இவர்களை) நாட‌ற்ற‌வ‌ர்க‌ளாக‌ மாற்றிய‌து அர‌சின் அநாக‌ரீகமான இனப்பாகுபாட்டு‌  ந‌ட‌வ‌டிக்கை (இந்த இந்தியத் தமிழர்கள் தான் இலங்கையின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிக்கும் தேயிலை தோட்டங்களையும், இருப்புப் பாதை போக்குவரத்து கட்டமைப்பையும் உருவாக்கியவர்கள் எனபதை இங்கே நினைவில் கொள்ளவும்). இது போன்ற ஒருத‌லைப‌ட்ச‌மான‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ள் 1956லிருந்து தொட‌ர்ந்து வந்த சிங்க‌ள‌ அர‌சுக‌ளால்  பாரபட்சமில்லாமல் தொட‌ர்ச்சியாக‌ நிக‌ழ்ந்த‌து. இதில் அர‌சு நிறுவ‌ன‌ங்க‌ளின் திட்ட‌மிட்ட எண்ண‌ற்ற பாரபட்சமான நட‌வ‌டிக்கைக‌ளும் அட‌ங்கும். அர‌சின் இது போன்ற‌ திட்ட‌மிட்ட  இனப்பாகுபாடுக‌ளையும், ம‌னித‌ உரிமைய‌ற்ற‌ செய‌ல்க‌ளையும் பார்த்து வ‌ந்த‌தால் தான் நான் இல‌ங்கையில் “தேசிய‌ இண‌க்க‌ப்பாடு” என்ப‌து சாத்திய‌மில்லாத ஒன்று என‌ உறுதியாக கூறுகின்றேன்.

“த‌மிழ் தீவிர‌வாத‌த்தை” துடைத்தெறிகின்றோம் என்ற‌ பெய‌ரில் ச‌மீப‌த்தில் அர‌சு ந‌ட‌த்திய‌ த‌மிழர்கள் மீதான ப‌டுகொலைக‌ள் “தேசிய‌ இண‌க்க‌ப்பாட்டை” இல்லாமலே செய்துவிட்ட‌ன.

“தேசிய‌ இண‌க்க‌ப்பாடு” ந‌ட‌ப்ப‌த‌ற்கு சில‌ முக்கிய‌ அடிப்ப‌டை கார‌ணிக‌ள் உள்ள‌ன.

1) இண‌க்க‌ப்பாடு வேண்டும் என்ற‌ ச‌ரியான‌ உள்நோக்க‌ம் (அரசுக்கு இருக்க)வேண்டும்.

2) இது வ‌ரை தாங்கள் செய்த‌‌ த‌வ‌றுக‌ளை உண‌ர்ந்து அவர்கள் ம‌ன்னிப்பு கேட்க‌ வேண்டும்.

3) இன‌ப்பிர‌ச்ச‌னை ந‌ட‌க்க‌ கார‌ண‌மான‌ முக்கிய‌ பிர‌ச்ச‌னைக‌ளை க‌ண்டுண‌ர்ந்து அவ‌ற்றை க‌ளைவ‌த‌ற்கு தேவையான‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளை மேற்கொள்ள‌ வேண்டும்.

4) இண‌க்க‌ப்பாடு தொட‌ர்பான‌ திட்ட‌த்தில் உள்ள‌ த‌டைக‌ளை நீக்க‌ வேண்டும்.

மேற்கூறிய‌வ‌ற்றில் எந்த‌ ஒரு நிக‌ழ்வும் இல‌ங்கையில் ந‌ட‌ப்ப‌து போல‌ தெரிய‌வில்லை. இத‌னால் “தேசிய‌ இண‌க்க‌ப்பாடு” சாத்திய‌மில்லை என்ப‌து சிறு குழ‌ந்தைக்கு கூட‌ புரியும் ஒன்றாகும்.
“தேசிய‌ இண‌க்க‌ப்பாடு” என்ற‌ ந‌ம்ப‌ முடியாத‌ பொய்யை இல‌ங்கை த‌ன‌து ச‌ர்வாதிகார‌ அர‌சை த‌க்க‌வைப்ப‌த‌ற்காக ச‌ர்வ‌தேசிய‌ ச‌மூக‌த்திட‌ம் திட்ட‌மிட்டு ப‌ர‌ப்பி வ‌ருகின்ற‌து.
இத‌ற்கு முன்னால் சில‌ அடிப்ப‌டை பிரச்சனைகளைப் ப‌ற்றி நாம் விரிவாக‌ பேச‌ வேண்டியுள்ள‌து. இதில் நான்கு முக்கிய‌ புள்ளிக‌ள் உள்ள‌ன‌.

1) ச‌ன‌நாய‌க‌த்தை முற்றிலுமாக‌ துடைத்தெறியும் ந‌ட‌வ‌டிக்கைகள்.

2) இல‌ங்கையை சிங்க‌ள‌ பௌத்த‌ நாடாக‌ மாற்றும் திட்ட‌மிட்ட‌ நோக்கம்

3) த‌ன‌து புவிசார் அர‌சிய‌லுக்காக‌வும், சுய‌ இலாப‌த்திற்காக‌வும் இந்த‌ பிர‌ச்ச‌னையில் த‌லையிட்ட உலக‌நாடுகள்

4) இல‌ங்கை ஆங்கிலேய‌ கால‌னீய‌ க‌ட்ட‌மைப்பைக் கொண்ட‌ தோல்விய‌டைந்த‌ நாடு. இந்த‌ க‌ட்ட‌மைப்பை முற்றிலுமாக‌ மாற்றும் வ‌ரை இங்கு அமைதி, இண‌க்க‌ப்பாடு, ஒற்றுமை என்ப‌தெல்லாம் கற்பனையில் கூட ந‌ட‌க்கவியலாதவை. […….]

வெளி உல‌கிற்கு இல‌ங்கை ஒரு ச‌ன‌நாய‌க‌ நாடு என‌ காட்டுவ‌தற்கு ப‌ய‌ன்ப‌டும் ஒரு க‌ருவியாக‌ இல‌ங்கை அர‌சிய‌ல்வாதிக‌ள் “அர‌சியலமைப்பை” ப‌ய‌ன்ப‌டுத்துகின்ற‌ன‌. ஆனால் உண்மையில் இந்த  “அரசியலமைப்பை” பெரும்பான்மை சிங்க‌ள‌ ஆதிக்க‌ எண்ண‌த்திற்காக இந்த ச‌ட்ட‌த்தை எப்படியெல்லாம் வ‌ளைக்க‌, உடைக்க முடியுமே அப்படியெல்லாம் சிங்களர்கள் பயன்படுத்தியுள்ளார்கள். த‌மிழ‌ர்க‌ள் “பெரும்பான்மை அல்லாத‌வ‌ர்க‌ள்” ஆகையால் அவ‌ர்க‌ளுக்கு இங்கே க‌ருத்து கூற‌ கூட‌ அனும‌தி இல்லை. அவர்க‌ள் இந்த‌ ச‌ட்ட‌த்தை எடுத்து கொள்ளவதும் அல்ல‌து அப்ப‌டியே விட்டு விட்டு செல்வதும் அவர்கள் விருப்பம், இதைப்ப‌ற்றியெல்லாம் அர‌சு (எப்பொழுதுமே சிங்க‌ள‌ பெரும்பான்மை கொண்ட அரசு) ஒரு பொழுதும் க‌வ‌லையே ப‌டாது.

அர‌சிய‌லமைப்பிற்கு இவ்வ‌ள‌வு தான் அதிகார‌ம் உண்டு. ஒரு நிக‌ழ்வு எப்ப‌டி ந‌ட‌க்க‌ வேண்டும் என்ற‌ வ‌ரைமுறையை வ‌ரைய‌றுக்கும் அதிகாரமும், அர‌சு என்ன‌ செய்ய‌லாம், என்ன‌ செய்ய‌கூடாது என‌ சொல்லும் உரிமை ம‌ட்டும் தான் உண்டு. இதற்கு மேல் அர‌சிய‌லமைப்புக‌ளுக்கு எந்தவொரு அதிகாரமும் இல்லை. அர‌சு அதிகார‌த்தை கைப்ப‌ற்றுவ‌ர்க‌ளிட‌ம் உள்ள‌ நேர்மை, நாண‌ய‌ம் போன்ற‌வையே இவ‌ற்றை நிர்ண‌ய‌க்கின்ற‌ன‌. அர‌சு அதிகார‌த்தை கைப்ப‌ற்றுப‌வ‌ர்க‌ள் ச‌ர்வாதிகாரிக‌ளாக‌ இருந்தால் ச‌ர்வாதிகார ஆட்சி தான் அங்கு ந‌ட‌க்கும், அர‌சிய‌ல‌மைப்பு இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் ச‌ரி.

[……]

த‌மிழீழ‌ விடுத‌லைப் புலிக‌ளை அழிக்க‌ அர‌சு எல்லா முய‌ற்சிக‌ளையும் மேற்கொண்ட‌து. இங்கே புலிக‌ள் பிர‌ச்ச‌னை அல்ல‌, புலிக‌ள் இந்த‌ பிர‌ச்ச‌னையால் உருவான‌வ‌ர்க‌ள் ம‌ட்டுமே. ப‌ல இன‌, ப‌ல ம‌த‌, ப‌ல‌ மொழிக‌ள், ப‌ல‌ க‌லாச்சார‌ங்க‌ளை கொண்ட‌ இல‌ங்கையை சிங்க‌ள‌ பௌத்த‌ நாடாக‌ மாற்றிய‌ இன‌வெறியே இந்த‌ “பிர‌ச்ச‌னைக்கு” முக்கிய கார‌ண‌மாகும்.

இங்கே அழிக்க‌ப்ப‌ட்ட‌து த‌மிழீழ‌ விடுத‌லைப் புலிக‌ள் ம‌ட்டும‌ல்ல அவர்களுடன் சேர்த்து நீதி, அமைதி என்ற எல்லாமே அழிக்க‌ப்ப‌ட்டு விட்டது. வ‌ட‌க்கு ம‌ற்றும் கிழ‌க்கில் வாழ்ந்து வ‌ந்த‌ 40,000 த்திற்கும் அதிக‌மான‌  த‌மிழ‌ர்க‌ளை சிங்க‌ள‌ அர‌ச‌ ப‌டைக‌ள் கொடூரமாக ப‌டுகொலை செய்துள்ள‌ன‌. இந்த படுகொலைக்கு முன்ன‌ர் ச‌ர்வ‌தேசிய‌ பார்வையாள‌ர்களையும், தொண்டு நிறுவ‌ன‌ங்களைச் சேர்ந்தவர்களையும் அந்த‌ இட‌த்தில் இருந்து வெளியேற்றி “சாட்சியமே இல்லாத‌ இன‌ப்ப‌டுகொலையை” நடத்தியுள்ளது இலங்கை இனவெறி அரசு.

இந்த‌ ப‌டுகொலையில் இருந்து த‌ப்பித்த‌ 2,80,000 த‌மிழ‌ர்களோ “வ‌தை முகாம்க‌ளில்” அடைக்க‌ப்பட்டு தினம் தினம் சித்ரவதைகளுக்கு ஆளாகின்றனர். இந்த‌ முகாம்களோ இல‌ங்கை அர‌சு கையெழுத்திட்டுள்ள சர்வதேச ம‌னித‌ உரிமை விதிக‌ளுக்கு நேரெதிராக‌ உள்ள‌ன‌.

ச‌ர்வ‌தேசிய‌ ச‌மூக‌த்தின் க‌டுமையான‌ நிர்பந்த‌த்தினால் இவ‌ர்க‌ளில் 2,00,000 த‌மிழ‌ர்க‌ள் விடுவிக்க‌ப்பட்டுள்ளார்கள். இவ‌ர்க‌ளின் நிலமோ போரினால் ஒட்டு மொத்த‌மாக‌ அழிக்க‌ப்ப‌ட்டு, க‌ண்ணி வெடிக‌ள் நிர‌ம்பி காட்சிய‌ளிக்கின்றது. இவ‌ர்க‌ள் அரசினால் உள்நாட்டிலேயே அக‌திக‌ளாக‌ ஆக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர். சூன் 2010 க‌ண‌க்கின் ப‌டி இன்றும் 60,000 த‌மிழ‌ர்க‌ள் “வ‌தை முகாம்க‌ளில்” அடைக்கப்பட்டுள்ளார்கள். க‌ட‌ந்த‌ ஒரு வ‌ருட‌த்திற்கும் மேலாக‌ அவ‌ர்க‌ள் இங்கு அடைத்து வைக்க‌ப்ப‌ட்டுள்ளார்கள். ஆயிர‌க்க‌ண‌க்கானோர் அகதி தஞ்சம் ‌கோரி புல‌ம் பெய‌ர்ந்து பல நாடுகளுக்கு சென்று வருகின்றார்கள். இல‌ங்கை அர‌சு “தேசிய‌ இண‌க்க‌ப்பாட்டிற்காக” செய்தது இதை தான்.

[…..]

இர‌ண்டு தேசங்களை உருவாக்க வேண்டிய தேவையும் அதற்கான இடமும் இல‌ங்கையில் உள்ளது( சிங்க‌ள‌ நாடு ஒன்று, த‌மிழ் நாடு ஒன்று), என்னை பொருத்தவரை ஐந்து தேசங்களை உருவாக்குவ‌த‌ற்கான‌ தேவையும் அதற்கான இடமும் கூட‌ இல‌ங்கையில் உள்ள‌து என்பேன் (வ‌ட‌க்கு, கிழ‌க்கு, ந‌டுப்ப‌குதி, தெற்கு, மேற்கு) அந்த‌ந்த‌ ப‌குதிக‌ளுக்கான‌ த‌லைந‌க‌ர‌ங்க‌ள் அந்த‌ ப‌குதிக‌ளிலேயே வைத்து, அந்தந்த‌ ப‌குதியின் அபிவிருத்தி திட்ட‌ங்க‌ளுக்கான முழு அதிகாரத்தை அவர்களிடம் கொடுக்க‌ வேண்டும்.

இல‌ங்கை இவ்வாறெல்லாம் பிரிக்க‌ இய‌லாத‌ மிக‌ச்சிறிய‌ நாடு எனக் கூறுவ‌து மிகவும் முட்டாள்த‌ன‌மான‌ ஒன்று. இந்த‌ திட்ட‌ம் தான் இல‌ங்கையில் உள்ள‌ எல்லா ப‌குதியும் அபிவிருத்திய‌டைய உதவும். இதை விடுத்து விட்டு அபிவிருத்திக்கான‌ எல்லா அதிகார‌ங்க‌ளையும் கொழும்பில் உள்ள‌வ‌ர்க‌ளிட‌ம் கொடுப்பதும் எல்லா அதிகாரங்களையும் கொண்ட மைய அரசும் ச‌ரியான அமைப்பு முறைய‌‌ல்ல‌.

[……]

இல‌ங்கையில் உள்ள‌ பெரும்பான்மை ம‌க்க‌ளின் ம‌ன‌நிலையை புரிந்துகொள்வ‌து மிக‌ க‌டின‌மான‌ ஒன்று. “அமைதி ம‌ற்றும் இண‌க்க‌ப்பாடு” என்ப‌து ந‌ட‌க்க‌விய‌லாத‌ ஒன்று. கொழும்பில் உள்ள‌ ஊழ‌ல் க‌றை ப‌டிந்த‌, த‌குதிய‌ற்ற‌, ஒடுக்குமுறை அர‌சை பாதுகாக்க‌ ந‌ட‌க்கும் ச‌ர்வ‌தேச‌ அர‌சிய‌லை புரிந்துகொள்ளாம‌ல் “அமைதி ம‌ற்றும் நீதி” பற்றி கதைப்பது சிறுபிள்ளைத் த‌ன‌மான‌தும், ந‌டைமுறைக்கு ஒவ்வாத‌துமாகும்.

ம‌த்திய‌ கிழக்கு நாடுகளில் உள்ள‌ “பெட்ரோல்” எப்படி அவர்களின் பிர‌ச்ச‌னைக்கு கார‌ண‌மோ, அதே போல‌ இந்திய‌ பெருங்க‌ட‌ல் ப‌குதியில் இல‌ங்கை அமைந்துள்ள‌ இடமே அத‌ன் பிர‌ச்ச‌னைக்கு முக்கிய‌ கார‌ண‌மாகும். இலங்கை இந்தியாவிலிருந்து 36 கிலோ மீட்ட‌ர் தொலைவில் உள்ள‌து. இந்தியாவின் கொல்லைப்புற நாடு தான் இல‌ங்கை. இந்திய‌ப் பெருங்க‌டல் பகுதி உல‌கிலேயே பெரிய‌ க‌ட‌ல் பகுதியா என்றால் இல்லை, ஆனால் இந்த கடல் பகுதி தான் உல‌கிலேயே அதிகமாக‌ க‌ட‌ல்போக்குவ‌ர‌த்து நிக‌ழும் ப‌குதியாகும். இந்திய‌ பெருங்க‌ட‌ல் ப‌குதியை சுற்றியுள்ள‌ நாடுக‌ள் தான் உல‌கின் 40 விழுக்காடு பெட்ரோலிய‌த்தை உற்ப‌த்தி செய்கின்ற‌ன‌. இந்த‌ க‌ட‌ல் ப‌குதியில் தான் 70 விழுக்காடு பெட்ரோலிய‌ போக்குவ‌ர‌த்தும், 50விழுக்காடு கடல்வழி ச‌ர‌க்கு போக்குவ‌ர‌த்தும் நிக‌ழ்கின்ற‌து. “யார் இந்திய‌ பெருங்க‌ட‌ல் ப‌குதியை க‌ட்டுப‌டுத்துகின்றார்களோ அவர்களே ஆசியாவில் ஆதிக்க‌ம் செலுத்துவார்கள்” என்ற‌ ஒரு நூற்றாண்டுக்கு முன்ன‌ர் கூறினார் வ‌ட அமெரிக்க‌ க‌ட‌ற்ப‌டை த‌லைவ‌ர் ஆல்பிரெட் மேக‌ன்.

த‌மிழ‌ர் ப‌குதியான‌ வ‌ட‌க்கு ம‌ற்றும் கிழ‌க்கு ப‌குதியில் உள்ள‌ திரிகோண‌ம‌லை ப‌குதி தான் உல‌கிலேயே நான்காவ‌து பெரிய‌ இய‌ற்கை துறைமுக‌மாகும். இந்த‌ ப‌குதியை கைப‌ற்ற‌ ப‌ல உலக‌நாடுக‌ள் ப‌ல‌ நூற்றாண்டுக‌ளாக‌ போராடினார்கள். இன்றும் கூட‌ போராடி வ‌ருகின்றார்கள்.

சீனாவின் “முத்து மாலை” திட்ட‌த்தில் இல‌ங்கை முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த‌ திட்ட‌த்தை சீனா த‌ன‌து எண்ணெய் போக்குவ‌ர‌த்தை பாதுகாப்ப‌த‌ற்காக‌வும், ஐரோப்பிய‌ நாடுக‌ளுக்கு ஏற்றும‌தி செய்யும் கடல் வழி ச‌ர‌க்கு போக்குவ‌ர‌த்தினை பாதுகாப்பத‌ற்காக‌வும்  ஒரு திட்டத்தை உருவாக்கியது. இந்த திட்டத்தின் படி தனது இராணுவ‌த்தை சீனா பல்வேறு நாடுகளில் நிறுவி வ‌ருகின்ற‌து. திரிகோண‌ம‌லை ப‌குதிக்காக‌ இந்தியாவுட‌ன் போராடிக் கொண்டிராமல், சீனா இல‌ங்கையின் தெற்கு ப‌குதியில் உள்ள‌ அம்ப‌ன்தோட்டா (இது ம‌கிந்தாவின் சொந்த‌ தொகுதியாகும்) என்ற‌ சிறிய‌ மீன்பிடி துறைமுக‌த்தை மிகப்பெரிய‌ துறைமுக‌மாக மாற்றியும், அங்கு ஒரு ச‌ர்வ‌தேச விமான‌ நிலைய‌ம் ஒன்றையும் கட்டமைத்து வருகின்றது (இதில் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டு விட்டது).

இந்த‌ திட்ட‌த்தை த‌ன‌து துருப்பு சீட்டாக‌ கொண்ட‌ இராச‌ப‌க்சே த‌மிழ‌ர்க‌ளை அழிப்ப‌த‌ற்காக சிங்கள இராணுவ‌த்தை மேலும் ப‌ல‌ப்ப‌டுத்த, இராணுவத்திற்கு தேவையான‌ க‌ருவிக‌ள் அனைத்தையும் சீனாவிடம் இருந்து பெற்றுக்கொண்டார். இவ்வளவு உதவிகளைச் செய்த சீனாவோ இல‌ங்கை அரசின் ம‌னித‌ உரிமை மீற‌லை ப‌ற்றி ஒருவார்த்தை கூட கூறிய‌து இல்லை.

இல‌ங்கையில் சீனா வ‌ள‌ர்ந்து வ‌ருவ‌தை க‌ண்ட‌ வ‌ட‌ அமெரிக்கா இல‌ங்கையை மீண்டும் மேற்குல‌க‌ கூட்ட‌மைப்பில் கொண்டுவ‌ருவ‌த‌ற்கு முய‌ற்சி செய்ய‌ ஆர‌ம்பித்த‌து. ச‌ர்வ‌தேசிய‌ நிதிய‌ம் வ‌ட‌ அமெரிக்காவில் இல்லாம‌ல் இருந்தாலும், வ‌ட‌ அமெரிக்கா தான் அந்த நிதிய‌‌த்தை முழுமையாக‌ க‌ட்டுப‌டுத்துகின்ற‌து. இல‌ங்கை முத‌லாளித்துவ‌ நாடுக‌ளின் கூட்ட‌மைப்பில் உள்ள‌ ஒரு முக்கிய நாடாகும், இந்த கூட்டமைப்பில் ‘க‌ம்யூனிச‌’ சீனாவும் சேர்ந்திருப்பது சற்றே ஆச்ச‌ரிய‌மான உண்மை. வ‌ட‌ அமெரிக்காவின் வெளியுற‌வு கொள்கை தொடர்பான‌ ஆலோசனை குழுவில் உள்ள‌வ‌ர்க‌ள் இந்திய‌ பெருங்க‌ட‌ல் ப‌குதியில் முக்கிய‌மான‌ இட‌த்தில் உள்ள இல‌ங்கையை நாம் எக்காரணம் கொண்டும் த‌வ‌ற‌விட்டு விட‌க்கூடாது என‌ அர‌சை எச்ச‌ரித்துள்ளார்கள்.
தன் அருகிலேயே உள்ள‌ ஒரு நாட்டில் சீனாவும், வ‌ட‌ அமெரிக்காவும் வ‌ள‌ர்வ‌து க‌ண்ட இந்தியா இல‌ங்கையின் அர‌சிய‌லுக்குள் நுழைந்த‌து. வ‌ட‌ அமெரிக்காவையும், சீனாவையும் இல‌ங்கையில் இருந்து வெளியேற்றுவது, மேலும் இல‌ங்கையை இந்திய பேர‌ர‌சின் கீழ் ஒரு கால‌னீய‌ நாடாக்குவது, அதன் மூலம் இல‌ங்கையிலுள்ள‌ பெரும்பாலான‌ இய‌ற்கை வ‌ள‌த்தை சுர‌ண்டுவ‌து (எல்லா ஏகாதிப‌த்திய‌ நாடுக‌ளை போல‌) என்ப‌தே இந்திய‌ அர‌சின் கொள்கையாகும்.

இல‌ங்கையில் வாழும் த‌மிழ‌ர்க‌ளின் நிலை ப‌ற்றிய‌ அக்க‌றை தென்னிந்தியாவில் வாழும் 7.5 கோடி த‌மிழ‌ர்க‌ளை த‌விர்த்து இந்தியாவில் வேறு யாருக்கும் இருந்ததில்லை. ஆனால் இந்தியா த‌மிழ்நாட்டில் இருந்து இய‌ங்குவ‌தில்லை. ச‌ர்வ‌தேசிய‌ முத‌லாளிக‌ளின் சுய இலாப‌ங்களை மட்டுமே க‌ண‌க்கில் கொண்டு தில்லியில் இருந்தே இந்தியா இய‌ங்குகின்ற‌து. இந்தியாவின் பிர‌த‌ம‌ரான‌ ம‌ன்மோக‌ன் சிங் ஒரு பொம்மை ம‌ட்டுமே. இத‌னால் தான் இவ‌ர் சூலை 8,2010ல் த‌ன்னை ச‌ந்திக்க வந்த‌ இல‌ங்கை த‌மிழ்  பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளிட‌ம் பின்வருமாறு கூறியுள்ளார் “நீங்கள் இல‌ங்கை அர‌சுட‌ன் சுமூகமான‌ முறையில் பேச்சுவார்த்தையை தொடர வேண்டும்”. இந்தியா ஈழத்த‌மிழ‌ர்க‌ளுக்கான‌ நீதியை பெற்றுத் தரும் என்று ஈழத்த‌மிழ்ச் ச‌மூக‌ம் எதிர்பார்த்தால் அவ‌ர்க‌ள் நிக‌ழ்கால‌ உல‌க‌ அர‌சிய‌லை புரிந்துகொள்ளவே இல்லை என்று தான் பொருள்.
இந்த‌ ச‌ர்வ‌தேசிய‌ அர‌சியல் தான் இல‌ங்கை யாரைப் பற்றியும் கவலை கொள்ளாமலும், தண்டனை பயமில்லாமலும் த‌மிழ‌ர்களை மிக மோசமாக படுகொலை செய்ய உதவியது, இதுவே இலங்கையில் “தேசிய‌ இண‌க்கப்பாடு” என்ப‌து சாத்தியமில்லாத‌‌ ஒன்றாக‌வும் மாற்றியுள்ள‌‌து. “ச‌ர்வ‌தேசிய அரசியலும், சர்வதேச நிதியத்தின்‌ த‌லையீடுக‌ள் இல்லாம‌ல் இருந்திருந்தால், ஒரு வேளை இல‌ங்கையில் சிங்க‌ள‌ ம‌ற்றும் த‌மிழ் இன‌ங்களுக்குள்ளே ஒரு ச‌மாதான‌ உட‌ன்பாடும், இண‌க்க‌பாடும் ஏற்ப‌ட்டிருக்கக்கூடும் என‌ நான் உறுதியாக‌ ந‌ம்புகின்றேன்” . ஊழ‌ல் மிகுந்த‌, அட‌க்குமுறை அர‌சை பாதுகாக்கும், சர்வதேச‌ நிதியத்தின் செயல்பாடுகளும்,  ச‌ர்வ‌தேசிய‌ அர‌சிய‌லும் இதே நிலையில் தொட‌ர்ந்தால் இல‌ங்கையில் “அமைதி”, “தேசிய‌ இண‌க்க‌ப்பாடு” போன்றவை க‌ற்ப‌னா வாக்கிய‌ங்க‌ளாகி விடும்.

[….]

“ஐக்கிய‌ நாடுக‌ளின் அக‌திக‌ளுக்கான‌ உய‌ர் அமைப்பு”(UNHCR) வெளியிட்ட‌ இல‌ங்கையில் ம‌னித‌ உரிமை நிலை பற்றயஅறிக்கையே ச‌ர்வ‌தேசிய‌ அமைப்புக‌ளினால் இது வ‌ரை வெளியிடப்ப‌ட்ட‌திலேயே மிக‌ மோச‌மான‌ அறிக்கையாகும். தமிழர்கள் வாழும் பகுதிகளில் உள்ள மனித‌ உரிமை நிலை நன்றாக முன்னேற்றம் கண்டிருப்பதாக கூறுகின்றது இந்த அறிக்கை.  ச‌ர்வ‌தேச‌ ம‌ன்னிப்பு ச‌பை, ம‌னித‌ உரிமை காப்ப‌க‌ம் போன்ற‌ உல‌க அள‌வில் அங்கீக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌ அமைப்புக‌ளே இலங்கைக்குள் வ‌ருவ‌தற்கு அரசு தடை விதித்திருக்கும் போது “ஐக்கிய‌ நாடுக‌ளின் அக‌திக‌ளுக்கான‌ உய‌ர் அமைப்பு” சூன் 5,2010 அன்று வெளியிட்ட‌ HRC/EG/SLK/10/03 என்ற‌ அறிக்கை வேடிக்கையான‌‌ ஒன்றாக‌ உள்ள‌து.
இந்த‌ அறிக்கையை வெளியிட்ட‌து “ஐக்கிய‌ நாடுக‌ளின் அக‌திக‌ளுக்கான‌ உய‌ர் அமைப்பு”. இந்த‌ அறிக்கை உலக அர‌சுக‌ள் இல‌ங்கையிலிருந்து வ‌ரும் ம‌க்க‌ளின் அகதி த‌ஞ்ச‌ கோரிக்கைக‌ளை பரிசீளிக்க உதவும் ஒன்றாகும். ஆரம்பம் முதலே க‌டும் ஒடுக்குமுறைக்கு ஆளாகி வரும் த‌மிழ் ம‌க்க‌ளை மிகவும் மோச‌மான‌ நிலைக்கு த‌ள்ளுகின்ற‌து இந்த‌ பொறுப்பில்லாத‌ அறிக்கை. இந்த‌ அறிக்கை “பாதி உண்மைகளையும்”, “பாதி பொய்களையும்”, முழுப்‌ பொய்களையும் கொண்டு த‌மிழ் ம‌க்க‌ளை நேர‌டியாக‌ பார்க்காம‌லே உருவாக்க‌ப்ப‌ட்ட‌ ஒன்றாகும். இந்த‌ அறிக்கையில் உள்ள‌ ஒவ்வொரு விவ‌ர‌மும் கேள்விக்குள்ளாக்க‌ப்ப‌ட‌ வேண்டியவையே.

[…]

அர‌சின் பொருளாதார‌ நெருக்க‌டியும், அதனால் தொடரும்‌ பிர‌ச்ச‌னைக‌ளும் “தேசிய‌ இண‌க்க‌ப்பாட்டை” மேலும் கேள்விக்குள்ளாக்குகின்ற‌ன‌. இந்த‌ இண‌க்க‌ப்பாடு என்ப‌தை சிங்க‌ள, த‌மிழ் ம‌க்க‌ளுக்கு இடையில் என‌க் கருதினும் ச‌ரி, அல்ல‌து சிங்க‌ள‌ ம‌க்க‌ள் த‌ங்க‌ளுக்கு எது “தேவை”, எது “தேவை இல்லை” எனக் கருதினும் சரி, எப்படியிருப்பினும் இந்த “இணக்கப்பாடு” கோரிக்கை கேள்விக்குள்ளாக்க‌ப்ப‌ட‌ வேண்டிய‌ ஒன்றே.
இல‌ங்கை மிக பெரும்‌ க‌டன் சுமையை கொண்டுள்ள‌து. இது ம‌ட்டும‌ல்லாம‌ல் மேலும் ப‌ல‌ பிர‌ச்ச‌னைக‌ள் அரசை தொட‌ர‌ப் போகின்ற‌ன‌. 2005 ந‌வ‌ம்ப‌ரில் தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌ இராச‌ப‌க்சே அர‌சு த‌மிழீழ‌ விடுத‌லை புலிக‌ளுக்கு எதிரான‌ போருக்காக‌ மிக‌ பெரிய‌ அளவு செல‌வு செய்த‌து. இந்த‌ போரில் புலிக‌ளை அழித்த‌து ம‌ட்டுமல்லாம‌ல், 40,000 த‌மிழ் ம‌ற்றும் இசுலாமிய‌ பொது ம‌க்க‌ளை ப‌டுகொலை செய்துள்ளது அரச படை. மே 2009ல்  அதிப‌ர் இராச‌ப‌க்சே “போரில் அர‌சு வெற்றி பெற்றுள்ளது” என்று அறிவித்து போரை முடிவுக்கு கொண்டுவந்தார்.

இவையெல்லாம் முடிந்து ஒரு வ‌ருட‌ம் ஆன‌ பின்ன‌ரும்(சூன் 2010), இல‌ங்கை அரசு இராணுவ‌த்தின‌ரின் எண்ணிக்கையை 1,75,000லிருந்து 3,00,000 ஆக்க‌வேண்டும் என்ற‌ நோக்க‌த்துட‌ன்,  த‌ற்பொழுது மேலும் 55,000 ப‌டையின‌ரை சேர்த்துள்ளது. இதன் மூலம் இப்பொழுது 2,30,000 என்ற எண்ணிக்கையில் துருப்புகள் உள்ளார்கள். எந்த ஒரு போரும் ந‌டக்காத இந்நிலையில் ஏன் இராணுவ‌த்தின‌ரின் எண்ணிக்கையை அரசு அதிக‌ரி‌க்க‌ வேண்டும் என்ப‌தே என் கேள்வி? வாழ்க்கைக்கு தேவையான அத்தியாவசிய‌ செலவு அதிக‌ரித்து வருவதால், இந்த நிலையை எதிர்த்து அரசுக்கு எதிராக சிங்க‌ள‌ ம‌க்க‌ள் போராடினால் தமிழர்களை போல அவ‌ர்க‌ளையும் ந‌சுக்குவ‌த‌ற்கு இவ‌ர்க‌ள் தேவை என்பதே என் கேள்வியின் பதிலாகும். இதை தான் ச‌ர்வாதிகார‌ அர‌சுக‌ளும், ச‌ர்வாதிகாரிக‌ளும் கால‌ம் கால‌மாக‌ செய்து வ‌ந்துள்ள‌னர் என வரலாறு நமக்கு கற்பிக்கின்றது. இத‌ற்கு இராச‌ப‌க்சேவின் அர‌சும் ஒன்றும் விதிவிலக்கானத‌ல்ல‌.

போர் முடிந்த‌ பின்னும், இல்லாத ஒரு எதிரியிட‌ம் இருந்து நாட்டை பாதுகாப்ப‌த‌ற்காக‌ அர‌சு 2010ல் வ‌ர‌வு செல‌வில்(Budget) ஒதுக்கிய‌ தொகை ரூபாய்.202 பில்லியன். இது அரசின் மொத்த‌ வ‌ர‌வு செல‌வான‌ ரூபாய்.974 பில்லியனில் 21 விழுக்காடு ஆகும்.


க‌ட‌ந்த‌ வ‌ருட‌த்தில் ம‌ட்டும் (2009) அர‌சின் க‌ட‌ன் தொகை ரூபாய் 4.1 ட்ரில்லியன் என்ற இமாலய உயரத்தை எட்டியுள்ள‌து. இதில் ரூபாய் 1.8 ட்ரில்லியன் வெளிநாட்டு க‌ட‌ன் தொகையாகும் (இது 22 விழுக்காடு அதிக‌ரித்துள்ள‌து). “அர‌சின் மொத்த வ‌ருமான‌த்திலிருந்து, க‌ட‌ன் செலுத்தும் விகிதம் 90.5% லிருந்து 117.5% என்ற‌ அள‌விற்கு அதிக‌ரித்துள்ளது” என‌ த‌ன‌து வ‌ருடாந்திர‌ அறிக்கையில் கூறியுள்ள‌து இல‌ங்கையின் மைய‌ வ‌ங்கி. 2009ல் மொத்த‌ க‌ட‌ன் செலுத்தும் விகித‌மான‌ 39% (825.7 பில்லியன் ரூபாய்), இதில் க‌ட‌னின் வ‌ட்டி தொகை ம‌ட்டும் ரூபாய் 309.7 பில்லியன் அதாவ‌து அர‌சின் மொத்த‌ செல‌வில் 26%.

அர‌சின் மொத்த க‌ட‌ன் தொகையும், அதை திருப்பிச் செலுத்தும் தொகையும் 2010 ரூபாய் 767 பில்லியன் என்ற அளவில் உள்ள‌‌து. இது அர‌சின் மொத்த‌ செல‌வான‌ ரூபாய். 1,780 பில்லியனில் 44 விழுக்காடு ஆகும்.

சூலை 2009ல் அரசு திவால் நிலைக்கு சென்ற‌தால், அர‌சு ச‌ர்வ‌தேசிய‌ நிதிய‌த்திட‌ம் 2.6 பில்லியன் அமெரிக்க டாலர் தொகையை க‌ட‌னாக‌ கேட்ட‌து. இத‌ன் மூல‌ம் முன்னர் வாங்கிய‌ க‌ட‌ன் தொகையில் ஒரு ப‌குதியை திரும்ப‌ செலுத்த‌வும், அர‌சின் நிதிநிலைமையை மேம்ப‌டுத்த‌வும் அர‌சு திட்ட‌மிட்ட‌து. இதில் முத‌ல் இர‌ண்டு த‌வ‌ணைக‌ளையும் கொடுத்த‌ ச‌ர்வ‌தேசிய‌ நிதிய‌ம் இறுதி த‌வ‌ணையை நிறுத்திய‌து. அர‌சின் வ‌ர‌வு செல‌வு ப‌ற்றாக்குறையை(budget deficit) அரசு எப்படி குறைக்கும் என்று காட்டத் தவறியதே மூன்றாவது தவணை தொகையை சர்வதேச நிதியம் நிறுத்தக் காரணமாகும்., அரசின் வரவு செலவு பற்றாக்குறை 2009ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்ப‌த்தியில்(GDP) 9.7% விழுக்காட்டை எட்டிய‌து. இந்த‌ வ‌ர‌வு செல‌வு ப‌ற்றாக்குறையை 2009ல் 7 விழுக்காடாக‌வும், 2010ல் 6 விழுக்காடாக‌வும், 2011ல்  5 விழுக்காடாக‌வும் குறைக்க‌ வேண்டும் என்ற‌ நிப‌ந்த‌னையை விதித்திருந்தது சர்வதேச நிதியம்.
இல‌ங்கை தெற்காசியாவிலேயே அதிக‌ க‌ட‌ன் தொகையை கொண்ட நாடுகளின் பட்டியலில் இர‌ண்டாவதாக இருக்கின்ரது என சூன்,2010ல் உல‌க‌ வ‌ங்கியின் தெற்காசிய‌ நிர்வாக‌ இய‌க்குன‌ரான‌ “எர்ன‌சுட்டோ மே” த‌ன‌து ச‌மீப‌த்திய‌ பொருளாதார‌ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அதாவ‌து 2008ல் மொத்த‌ உள்நாட்டு உற்ப‌த்தியில் 81 விழுக்காடாக‌ இருந்த‌ இந்த‌ விகித‌ம் 2009ல் 86 விழுக்காடு அள‌விற்கு அதிக‌ரித்துள்ள‌து.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில், க‌ட‌ன் தொகை விகிதம் தொடர்பான பட்டியலிலும் ஆசியாவில் உள்ள‌ நாடுகளிலேயே இர‌ண்டாவ‌து நாடாக 2009ல் இல‌ங்கை ஆனது. க‌ட‌னை திருப்பி செலுத்தும் தொகை மொத்த‌ வ‌ர‌வு செல‌வில்(budget) 44 விழுக்காடாகும். அர‌சின் வ‌ர‌வு செல‌வில் மேற்கொள்ள‌ப்ப‌டும் மிக‌ப் பெரிய‌ செலவீன‌ம் இதுவே. இதில் இந்த‌ வ‌ருட‌ க‌ட‌ன் திருப்பி செலுத்தும் தொகை இதுவ‌ரை இல்லாத‌ அள‌வில் உள்ள‌து. அர‌சின் செல‌வீன‌த்தில் 26 விழுக்காடான‌ ரூபாய் 337 பில்லியன் க‌ட‌ன் தொகைக்கான‌ வ‌ட்டியாக‌ ம‌ட்டுமே 2010ல் இல‌ங்கை செலுத்தவேண்டும். இது ம‌ட்டும‌ல்லாம‌ல் ரூபாய். 565 பில்லியன் க‌ட‌ன் தொகையை திருப்பி செலுத்துவ‌த‌ற்காக‌ அர‌சு செல‌வீன‌ம் செய்ய‌ வேண்டும். இது மொத்த‌ க‌ட‌ன் தொகையை ரூபாய்.980 பில்லியன் என்ற‌ அள‌விற்கு உய‌ர்த்துகின்ற‌து.


ச‌ர்வ‌தேசிய‌ நிதிய‌த்தின் நிப‌ந்த‌னைக‌ளை நிறைவேற்றுவ‌த‌ற்காக (மக்கள் விரோத கொள்கைகளை கொண்ட) தான் மகிந்த‌ இராச‌ப‌க்சே ந‌வ‌ம்ப‌ர் 2009 அன்று வெளியிட‌ப்ப‌ட‌ வேண்டிய‌ அர‌சின் வ‌ர‌வு செலவு க‌ண‌க்கை தான் திரும்ப‌ அதிப‌ராக‌ ப‌த‌வியேற்ற‌பின் (சனவரி 2010), தனது அரசு அமைக்கப்பட்ட(ஏப்ர‌ல் 2010) பின்னர் பொறுமையாக‌ சூன் இறுதியில் வெளியிட்டார்.

சிலோன் மின்சார‌ வாரிய‌ம், பெட்ரோலிய‌ துறை, மைய‌ போக்குவர‌த்து துறை, இருப்பு பாதை போக்குவ்ர‌த்து துறை ம‌ற்றும் அஞ்ச‌ல் துறை போன்ற‌ துறைக‌ளுக்கு அர‌சு அளிக்கும் மானிய‌த்தை பெரும‌ள‌வில் குறைத்து கொள்வ‌தாக‌ அர‌சு மே 2010ல் ச‌ர்வ‌தேசிய‌ நிதி ஆணைய‌த்திட‌ம் வாக்குறுதி அளித்த‌து. த‌ற்பொழுது வேலையில் உள்ள‌ அர‌சு ப‌ணியாள‌ர்க‌ளை குறைப்ப‌து, ச‌ம்ப‌ள‌த்தை குறைப்ப‌து, பொருட்களுக்கான விலையை ஏற்றுவ‌த‌ன் மூல‌ம் ம‌ட்டுமே இதை அர‌சு மேற்கொள்ள‌ முடியும்.

இறுதியாக‌ சூலை 2010ன் ஆர‌ம்ப‌த்தில் அர‌சு பாராளும‌ன்ற‌த்தில் செல‌வீன‌ அறிக்கையை செல‌வீன‌ ச‌ட்ட‌ம் 2010ன் ஒரு ப‌குதியாக‌ கொடுத்த‌து. இதில் இரு பெரும் செலவீன‌ங்க‌ள் “பாதுகாப்பு” ம‌ற்றும் “க‌ட‌னை திருப்பி செலுத்தும் தொகையாகும்”. ம‌ற்ற‌ எல்லா இட‌ங்க‌ளிலும் அர‌சு கத்திரி வைத்து விட்ட‌து. குறிப்பாக‌ ச‌ம்ப‌ள‌ உய‌ர்வு இல்லை, ஊழிய‌ர்க‌ளின் சேம‌ ந‌ல‌ நிதி ம‌ற்றும் அவ‌ர்க‌ளின் ந‌ல்வாழ்வு திட்ட‌ங்க‌ள் குறைக்க‌ப்ப‌ட்ட‌ன‌. பொதும‌க்க‌ளுக்கான‌ உட‌ல் ந‌ல‌ பாதுகாப்பு ம‌ற்றும் க‌ல்விக்கான‌ நிதி பெரும‌ள‌வில் குறைக்க‌ப்ப‌ட்ட‌து.

இறுதியாக‌ அர‌சின் வ‌ர‌வு செல‌வு சூன் 29, 2010 அன்று பாராளும‌ன்ற‌த்தில் வெளியிடபட்டது. இத‌ற்கு ஒரு நாள் முன்ன‌தாகவே அர‌சு பெரும்பான்மையான‌ உழைக்கும் ம‌க்க‌ளை பாதிக்க‌க்கூடிய‌ வ‌கையில் தான் தயாரித்த‌ வ‌ர‌வு செல‌வு க‌ண‌க்கை ச‌ர்வ‌தேச‌ நிதி ஆணைய‌த்திட‌ம் கொடுத்த‌து. இதை க‌ண்டு பெரு ம‌கிழ்ச்சி அடைந்த ச‌ர்வ‌தேச‌ நிதிய‌ம்  இல‌ங்கைக்கான‌ க‌டனில் இறுதி த‌வ‌ணையான 2.6 பில்லிய‌ன் அமெரிக்க‌ டால‌ர் தொகையை இல‌ங்கைக்கு தாராளமாக கொடுத்த‌து.

ம‌க்க‌ள் ம‌றுவாழ்வு துறைக்கான‌ மொத்த‌ ஒதுக்கீடு 4 பில்லியன் ரூபாயிலிருந்து 2 பில்லியன் ரூபாய் என்று பாதியாக‌ குறைக்க‌ப்ப‌ட்ட‌து. இத‌ன் விளைவாக‌ வ‌ட‌க்கு ம‌ற்றும் கிழ‌க்கில் அர‌சால் உள்நாட்டிலேயே அக‌திக‌ளாக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் வீடு ம‌ற்றும் அத்தியாவ‌சிய‌ பொருட்க‌ள் இல்லாம‌ல் த‌விக்கும் நிலைக்கு த‌ள்ள‌ப்ப‌ட்டுள்ளார்கள். வீடு ம‌ற்றும் அத்தியாவ‌சிய‌ பொருட்க‌ள் இல்லாம‌ல் த‌விக்கும் நிலையில் “தேசிய‌ இண‌க்க‌ப்பாடு” என்ப‌து சாத்திய‌மான‌ ஒன்ற‌ல்ல‌ என்ப‌து சாமான்ய ம‌க்களுக்கு கூட எளிதில் புரியும்.

பொதும‌க்க‌ளின் உட‌ல் பாதுகாப்பு ம‌ற்றும் க‌ல்விக்கான‌ ஒதுக்கீடு முறையே ரூபாய் 52 பில்லியன் ம‌ற்றும் 46 பில்லியனாகும். இது 2009ல் ஒதுக்க‌ப்ப‌ட்ட‌ தொகையை விட‌ ரூபாய் 100 பில்லியன் குறைவாகும் (2009 ஆம் ஆண்டு ஒதுக்கீடு செய்ய‌ப்ப‌ட்ட‌ தொகையே 2008ஆம் ஆண்டு ஒதுக்கீடு செய்ய‌ப்ப‌ட்ட‌ தொகையை விட‌ ரூபாய் 12 பில்லியன் குறைவு என்ப‌தை இங்கே நினைவு கூற‌ வேண்டும்).

இது போன்ற மக்கள் விரோத‌ வ‌ர‌வு செலவானது பெரும்பான்மையான‌ ம‌க்க‌ளின் எதிர்ப்புக‌ளையும், உழைக்கும் ம‌க்க‌ளின் வேலை நிறுத்த‌த்தையும் ச‌ந்திக்கும் என‌ இராச‌ப‌க்சே அரசுக்கு தெரியும். இந்த எதிர்ப்புகளை எல்லாம் இராசபக்சே தன்னிடம் உள்ள மிக‌ப்பெரிய இராணுவத்தின் மூல‌ம் ஒன்றும் இல்லாம‌ல் செய்து விடுவார். இதுவரை இலங்கையில் நடைபெற்ற ஒரு இனத்தை அழித்தல் என்ற படியிலிருந்து முன்னேறி  அர‌ச‌ப‌டை எல்லா இன‌ ம‌க்க‌ளையும் அடித்து ஒடுக்கும் நிலைக்கு சென்றுள்ளது.

இந்த‌ பொருளாதார‌ குறைபாடு ம‌ட்டும‌ல்லாம‌ல், அரசில் அதிகார‌த்திலுள்ளவர்கள் அனைவ‌ரும் ஊழ‌ல் க‌றைப‌டிந்த‌வ‌ர்க‌ளாக‌வும், த‌குதியில்லாத‌வ‌ர்க‌ளாக‌வுமே உள்ளார்கள்.

பொருளாதார‌ பிர‌ச்ச‌னை ம‌ற்றும் க‌ட‌னை திருப்பி செலுத்த‌வ‌தில் பிர‌ச்ச‌னை உள்ள‌தால் அர‌சு இல‌ங்கையின் பெரும்பாலான‌ ப‌குதிக‌ளை வெளிநாட்டு முத‌லாளிக‌ளுக்கு குறைந்த‌ விலையில் விற்று வ‌ருகின்ற‌து, இதில் குறிப்பாக‌ சீனா ம‌ற்றும் இந்திய நாடுக‌ளுக்கு விற்று வருகின்றது. இதில் பெரும்பாலான‌ ப‌குதிக‌ள் த‌மிழ‌ர்க‌ளின் பூர்விக‌ ப‌குதியான‌ வ‌ட‌க்கு ம‌ற்றும் கிழக்கு ப‌குதியே. ஆனால் இந்த‌ நில‌ப்ப‌குதியின் உரிமையாள‌ர்களான தமிழர்களோ த‌ங்க‌ள் வீடுக‌ள் ம‌ற்றும் நில‌ப்ப‌குதிக்கு திரும்ப‌ முடியாத‌ வ‌ண்ண‌ம் “வ‌தை முகாம்க‌ளிளோ” அல்லது  “அக‌திக‌ளாக‌வோ” அலைந்து கொண்டுள்ளார்கள்.

[……]

இல‌ங்கை முத‌லாளிக‌ளுக்கு விற்க‌ப்ப‌ட்டு வ‌ருகின்ற‌து என்ப‌து இல‌ங்கையிலுள்ள‌ பெரும்பான்மை ம‌க்க‌ளுக்கே தெரியாது. அதிலும் குறிப்பாக “அபிவிருத்தி தேவையுள்ள‌தாக‌” ச‌ர்வ‌தேச‌ பொருளாதார‌ வ‌ல்லுன‌ர்களால் வ‌ர்ணிக்க‌ப்ப‌டும் த‌மிழ‌ர்க‌ளின் பூர்வீக‌ நில‌மான‌ வ‌ட‌க்கு ம‌ற்றும் கிழ‌க்கு ப‌குதிக‌ளில் உள்ள‌ நில‌ங்க‌ளே பெரும‌ள‌வில் விற்க‌ப்ப‌ட்டு வ‌ருகின்ற‌ன‌. இதே நிலை தான் இந்தியாவில் உள்ள‌து என்று த‌ன‌து ச‌மீப‌த்திய‌ நூலான “சாமான்ய‌ ம‌க்க‌ள் பேர‌ர‌சு ஆவ‌த‌ற்கான‌ வ‌ழிமுறை”என்ற நூலில் அருந்த‌தி ராய் எழுதியுள்ளார்:

”இந்திய‌ அர‌சு த‌ன‌து இர‌ண்டு க‌ர‌ங்க‌ளின் கொடுக்கு பிடிக்குள் இந்தியாவை வைக்க‌ ந‌ன்றாக‌ ப‌ழ‌கிவிட்ட‌து. ஒரு க‌ர‌த்தின் மூல‌மாக‌ இந்தியாவில் உள்ள‌ பெரும்பான்மை ப‌குதிக‌ளை முத‌லாளிக‌ளுக்கு விற்றுவ‌ருகின்ற‌து. இதிலிருந்து ம‌க்க‌ளின் க‌வ‌ன‌த்தை திருப்புவ‌த‌ற்காக “இந்து தேசிய‌வாத‌” கூச்ச‌ல்க‌ளையும், “ம‌த‌ பாசிச‌ கொள்கைக‌ளையும்” ம‌க்க‌ள் ம‌ன‌தில் விதைத்து வ‌ருகின்றது”.
இதே நிலை தான் இல‌ங்கையிலும். அர‌சின் ஒரு க‌ர‌ம் நாட்டின் வள‌ங்க‌ளையும், நில‌ப்ப‌குதியையும் விற்றும், ச‌ர்வ‌தேசிய‌ அமைப்புக‌ளிட‌ம் (ச‌ர்வ‌தேசிய‌ நிதிய‌க‌ம், சீனா) இருந்து பெரும‌ள‌வில் க‌ட‌ன் வாங்கி நாட்டை ஒரு மீளா க‌ட‌னாளியாக‌ ஆக்கிவ‌ருகின்ற‌து. ஆனால் இதை ம‌றைப்ப‌த‌ற்காக‌ ம‌ற்றொரு க‌ர‌ம் “த‌மிழ் இராணுவ‌க்குழுக்க‌ளை வீழ்த்திய‌ வெற்றி கொண்டாட்ட‌ங்க‌ளிலும், த‌மிழ் தீவிர‌வாத‌த்திலுருந்து ம‌க்க‌ளை காப்பாற்றிய‌ முறையையும் கூறி ம‌க்க‌ளை மேலும் இன‌ வெறிய‌ர்க‌ளாக‌ மாற்றி வ‌ருகின்ற‌து.

அருந்த‌தி ராயின் நூலிலிருந்து:

”அர‌சின் பொருளாதார‌ க‌ட்ட‌மைப்பு மாறும் வேக‌த்தை பொறுத்து ம‌க்க‌ளாட்சி அமைப்பு முறை ஒவ்வொன்றாக‌ க‌ழ‌ற்றி வீச‌ப்பட்டு வருகின்ற‌து. நடைமுறைபடுத்தப்படும் உல‌க‌ம‌ய‌மாக்க‌ல் திட்டத்தினால் இந்தியாவிலுள்ள‌ ம‌க்க‌ளின் நிலை மிக‌வும் மோச‌மான நிலையில் உள்ளது. பெரும்பாலான‌ துறைக‌ள் த‌னியார்ம‌ய‌மாக்க‌ப்ப‌டுவ‌தாலும், தொழிலாள‌ர் ச‌ட்ட‌ங்க‌ள் மாற்ற‌ப்ப‌டுவ‌தாலும், பெரும்பான்மையான‌ ம‌க்க‌ள் த‌ங்க‌ள் நில‌ங்க‌ளலிருந்து துர‌த்த‌ப்படுவதால், மக்கள் தங்கள் நிலங்களை இழந்தும், வேலைக‌ளை இழ‌ந்தும் வ‌ருகின்ற‌ன‌ர். ஏழ்மை நிலையிலுள்ள‌ நூற்றுக்க‌ண‌க்கான‌ விவ‌சாயிக‌ள் பூச்சிக்கொல்லி ம‌ருந்துக‌ளை குடித்துத் த‌ற்கொலை செய்து வருகின்றார்கள். ப‌ட்டினிச் சாவு ப‌ற்றிய‌ செய்திக‌ள் நாடு முழுவ‌தும் இருந்து வ‌ந்த‌ வ‌ண்ண‌ம் உள்ளது‌. இதே நேர‌த்தில் மேல்த‌ட்டு வ‌ர்க்க‌மோ உல‌க‌த்தின் உச்சி நிலை என்ற கற்பனையான இடத்திற்கு செல்வதற்கான தங்கள் பயணத்தை துவக்கியுள்ளனர். ஆனால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளோ ஒழுங்கின்மையுட‌ன், ப‌ல‌ குற்ற‌ச்செய‌ல்க‌ளில் ஈடுப‌ட்டு வ‌ருகின்றார்க‌ள். அர‌சின் தெளிவில்லாத திட்டங்கள், அர‌சின் மீதான‌ ம‌க்க‌ளின் வெறுப்பு நிலை,  போன்ற‌ கார‌ணிக‌ளே ஒரு நாட்டில் பாசிச‌ உண‌ர்வு வ‌ள‌ரக் கார‌ண‌மாகும் என‌ ந‌ம‌க்கு வ‌ர‌லாறு தெளிவாக‌ ந‌ம‌க்கு கூறுகின்ற‌து”.

இந்த‌ நிலை தான் இல‌ங்கையில் த‌ற்போது உள்ள‌து. ம‌க்க‌ளாட்சி முறை கூறுக‌ள் மிக‌ வேக‌மாக‌ நீக்க‌ப்ப‌ட்டு வ‌ருகின்ற‌ செய‌ல் ந‌ம்முள்ளே எச்ச‌ரிக்கை உண‌ர்வை உருவாக்குகின்றது. மீத‌முள்ள‌ ம‌க்க‌ளாட்சி கூறுக‌ள் என்னவென்று நாம் எளிதாக‌ க‌ண்டுகொள்ள‌லாம். (த‌மிழ்)ம‌க்க‌ள் த‌ங்க‌ள் நில‌ங்க‌ளிலிருந்து விர‌ட்ட‌ப்ப‌ட்டு “வ‌தை முகாம்க‌ளுக்கோ” அல்ல‌து அருகிலுள்ள‌ காடுக‌ளுக்கோ செல்ல‌ நிர்ப‌ந்திக்க‌ப்ப‌டுகின்றார்க‌ள். இவ‌ர்க‌ளுக்கென்று இருந்த‌ வேலையும் அவர்களிடம் இருந்து பிடுங்க‌ப்ப‌ட்டாயிற்று (மீன்பிடித்த‌ல் ம‌ற்றும் வேளாண்மை போன்ற‌ தொழில்க‌ள்).

நூற்றுக்க‌ண‌க்கான‌ (த‌மிழ்)ம‌க்க‌ள் த‌ற்கொலை செய்து வ‌ருகின்றார்க‌ள் (உல‌கிலேயே இரண்டாவது அதிகமான ப‌ட்டினிச் சாவுகள் நடைபெறும் நாடு இலங்கை(இந்த‌ ப‌ட்டினி சாவுக‌ளில் ஈடுப‌டுவ‌து வ‌ட‌க்கு ம‌ற்றும் கிழ‌க்கு ப‌குதியில் வாழும் த‌மிழ‌ர்களும், தெற்கில் ஏழ்மை நிலையில் உள்ள‌ சிங்க‌ள‌வ‌ர்களும்). இந்த‌ த‌ற்கொலை எண்ணிக்கை தினம், தினம் அதிக‌ரித்துவ‌ருகின்ற‌து.
ஏழ்மை நிலையிலுள்ள‌ ம‌க்க‌ள் வாழும் சேரி ப‌குதிக‌ள் அக‌ற்ற‌ப்ப‌ட்டு அந்த‌ நில‌ங்க‌ள் ப‌ண‌க்கார‌ முத‌லாளிக‌ளிட‌ம் கைய‌ளிக்க‌ப்ப‌டுகின்ற‌து. ஏழ்மை நிலையிலுள்ள‌ சிங்க‌ள‌ர்க‌ள், த‌மிழ‌ர்க‌ள் ம‌ற்றும் இசுலாமிய‌ர்க‌ள் த‌ங்க‌ள் நில‌த்திலிருந்து க‌ட்டாய‌மாக‌ வெளியேற்ற‌ப்ப‌டுகின்ற‌ன‌ர். ஆனால் அவர்க‌ளுக்கு செல்ல‌ ஒரு இட‌ம் இல்லை .
ப‌ண‌க்கார‌ வ‌ர்க்க‌ம் (குறிப்பாக‌ இராச‌ப‌க்சே குடும்ப‌ம்) உல‌க‌த்தின் உச்ச‌ நிலைக்கு சென்றுள்ளது (இது ஒன்றும் கற்பனையான உச்சி நிலை அல்ல). ஆனால் மித‌முள்ள‌ பெரும்பான்மையான‌ ம‌க்க‌ளோ 30 விழுக்காடு விலைவாசி உயர்வுடன் விளிம்பு நிலையில் வாழ்ந்து வ‌ருகின்றார்கள். வ‌ர‌லாறு மீண்டும் திரும்பும் என்ப‌தை இது உறுதிப‌டுத்தும் வித‌மாக‌ இங்கு பாசிச‌ம் ஏற்க‌ன‌வே நிறுவ‌ப்ப‌ட்டு விட்ட‌து.

இந்த‌ திட்ட‌ங்க‌ளினால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளோ ஒழுங்கின்மையுட‌ன், ப‌ல‌ குற்ற‌ச்செய‌ல்க‌ளில் அதிக‌ளிவில் ஈடுப‌ட்டு வ‌ருகின்றார்க‌ள். இவ‌ர்க‌ளுக்காக‌ குர‌ல் கொடுப்ப‌த‌ற்கு வெளியில் ச‌க்தி வாய்ந்த‌ ஒரு ச‌மூக‌ம் இல்லை. இது தான் ஏழைக‌ளின் பிர‌ச்ச‌னை. இத‌னால் தான் நான் இவ‌ர்க‌ளின் துய‌ர‌ங்க‌ளுக்காக‌ வ‌ருத்த‌ப்ப‌டுவ‌தோடு ம‌ட்டும‌ல்லாம‌ல், ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ இவ‌ர்க‌ளுக்காக‌ குர‌ல் கொடுத்தும் வ‌ருகின்றேன்.

[….]

ம‌னித‌ உரிமைக‌ளை மீறிய‌ த‌ண்ட‌னைக்கு உள்ளாக‌ வேண்டிய‌ ச‌ர்வாதிக‌ரிக‌ளுக்கு உறுதுணை புரிவ‌தில் ச‌ர்வ‌தேச‌ நிதிய‌த்திற்கு எப்பொழுதும் எந்த‌ ஒரு பிர‌ச்ச‌னையும் இருந்த‌தே இல்லை. உல‌க‌ நாடுக‌ளிலே மொத்த‌ செல‌வில் பெரும்பான்மை ப‌ண‌த்தை இராணுவ‌த்திற்கு செலவிடுவ‌தில் முத‌லிட‌ம் பெற்ற‌ இல‌ங்கை அர‌சு த‌ன‌து சொந்த‌ ம‌க்க‌ளை ந‌சுக்குவ‌த‌ற்கும், கொலை செய்வ‌த‌ற்கும் 1.8 பில்லிய‌ன் அமெரிக்க‌ டால‌ர் தொகையை க‌ட‌னாக‌ கேட்ட‌ பொழுது. இல‌ங்கை அர‌சு கேட்ட‌ தொகையை விட‌ அதிக‌மான‌ தொகையை (2.6 பில்லிய‌ன் அமெரிக்க‌ டாலரை) க‌ட‌னாக‌ தாராள‌மாக‌ கொடுத்த‌து ச‌ர்வ‌தேச நிதிய‌ம்.

எந்த‌வொரு நிப‌ந்த‌னையும் இல்லாம‌ல் எப்பொழுதும் ச‌ர்வ‌தேச‌ நிதிய‌ம் கட‌ன்க‌ளை கொடுப்ப‌து கிடையாது. இந்த‌ நிப‌ந்த‌னைகள் பெரும்பாலும் பொதும‌க்க‌ளின் வாழ்வாதார‌த்தை பாதிக்கும் ஒன்றாக‌வே இருக்கும் என்பது குறிப்பிடதக்கது. இந்த‌ ச‌ர்வ‌தேச‌ நிதிய‌த்தின் நிப‌ந்த‌னைக‌ளை நிறைவேற்றுவ‌த‌ற்காக‌ ந‌டைபெறும் திட்ட‌ங்க‌ளான‌, அர‌சின் வ‌ர‌வு செல‌வில் ப‌ற்றாக்குறையை குறைத்த‌ல், வ‌ரி திட்ட‌ங்க‌ளை மாற்றிய‌மைத்த‌ல், சமூக‌ ந‌ல‌த்திட்ட‌ங்க‌ளான‌ உண‌வு, எண்ணெய், மின்சார‌ம் போன்ற‌வ‌ற்றிற்கு கொடுக்க‌ப்ப‌டும் மானிய‌ங்க‌ளை குறைத்த‌ல் போன்ற‌வை எப்பொழுதும் ச‌மூக‌ அடுக்கில் கீழ் நிலையில் உள்ள‌வ‌ர்க‌ளை மிக‌வும் க‌டுமையாக‌ பாதிக்கும்.
இன்னும் குறிப்பாக‌ கூறுவ‌தென்றால், அர‌சின் இராணுவ‌த்துறைக்கான‌ செல‌வுக‌ளை வானுய‌ர‌ கொண்டு செல்வ‌‌த‌ற்காக‌, ச‌மூக‌ ந‌ல‌த்திட்ட‌ங்க‌ள், அபிவிருத்தி திட்ட‌ங்க‌ளை குறைக்கும் இராச‌ப‌க்சே அர‌சுக்கு உத‌வுவ‌தில் ச‌ர்வ‌தேச‌ நிதிய‌த்திற்கு எந்த‌வொரு பிர‌ச்ச‌னையும் இல்லை. இராச‌ப‌க்சே அர‌சு உல‌கிலேயே பெரிய‌ அமைச்ச‌ர‌வையை கொண்டிருப்பதை பற்றியும், உல்லாச‌ வ‌ண்டிக‌ளுக்கு வ‌ரி வில‌க்கு அளிப்பதை பற்றியும், “ச‌ர்வ‌தேச‌ இந்திய‌ திரைப்ப‌ட‌ குழுக்க‌ளின்” கொண்டாட்ட‌ங்க‌ளைப் போன்ற‌ வெற்று ஆட‌ம்ப‌ர‌, தேவைய‌ற்ற‌ செல‌வுக‌ளை ப‌ற்றியும் க‌வ‌லைப்ப‌டாத‌ எந்த‌ ஒரு முத‌லாளித்துவ‌ அமைப்பை போன்ற‌தே “ச‌ர்வ‌தேச‌ நிதிய‌மும்”. ஆனால் அதே அர‌சு ஊதிய‌ உய‌ர்வின்மையையும், பொதும‌க்க‌ளுக்கு தேவையான‌ அத்தியாவசிய‌ பொருட்க‌ளின் மீதான‌ மானிய‌ங்க‌ளை குறைப்பதையும், அந்த‌ பொருட்க‌ளின் விலையை உயர்த்துவதையும் செய்கின்றார்க‌ளா என்பதை மட்டும் த‌வ‌றாம‌ல் பார்த்து வருகின்றது ச‌ர்வ‌தேச‌ நிதிய‌ம்.
அர‌சுக‌ள் த‌ங்க‌ள் இறையாண்மையை காப்ப‌த‌ற்காக‌ ந‌ட‌த்தும் ம‌க்க‌ளாட்சி ம‌ற்றும் ம‌னித‌ உரிமை மீற‌ல்க‌ளில் ச‌ர்வ‌தேச‌ நிதிய‌ம் ஒரு போதும் த‌லையிடுவ‌தில்லை. மேலும் த‌ங்க‌ளின் நிப‌ந்த‌னைக‌ளினால் மேற்கூறிய‌ நிலை தான் உருவாகும் என்ப‌தும் ச‌ர்வ‌தேச‌ நிதிய‌த்திற்கு ந‌ன்றாக‌ தெரியும்.

ச‌ர்வ‌தேச‌ நிதிய‌த்தின் எல்லா நிப‌ந்த‌னைக‌ளையும் இல‌ங்கை அர‌சு நிறைவேற்றி விட்ட‌து. இந்த‌ கொள்கைக‌ளின் கார‌ண‌மாக‌ உள்நாட்டில் எழும் எதிர்ப்புக‌ளையும், போராட்ட‌ங்க‌ளையும், த‌மிழ‌ர்க‌ளை எவ்வாறு ஈவு இர‌க்க‌மின்றி ந‌சுக்கிய‌தோ அதே போல‌வே ந‌சுக்க‌ அர‌சு ஏதுவான‌ நிலையில் உள்ள‌து.
ந‌ன்றி. த‌மிழ் நெட்

மூல‌ப்ப‌திவு : http://www.tamilnet.com/art.html?catid=79&artid=32514
……………………………..
பால‌சுதீனிய‌ர்க‌ள், இசுரேல் யூத‌ர்க‌ளுட‌ன் இண‌க்க‌ப்பாட்டுட‌ன் வாழ்வ‌தென்ப‌து எப்ப‌டி இய‌லாத‌ ஒன்றோ, அதே போல‌ தான் ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ள் இல‌ங்கை சிங்க‌ள‌வ‌ர்க‌ளுட‌ன் வாழ்வ‌தென்ப‌து சாத்திய‌மில்லாத‌ ஒன்று. ஒரு பொழுதும் ஒரு ஒடுக்குகின்ற இனத்துடன், ஒடுக்கப்படுகின்ற இனம் சேர்ந்து வாழ‌ வேண்டும் என்று எந்த‌ ஒரு ச‌ர்வ‌தேசிய‌வாதியும் கூற‌மாட்டார். மேலும் எந்தவொரு மக்களாட்சி அமைப்பு முறையிலும் இல்லாத ஒன்றான ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் அதிபர் பதவிக்கு போட்டியிடலாம் என்ற 18ஆவது  சட்ட திருத்தத்தை பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றியதன் மூலம் இலங்கையின் நிரந்தர சர்வாதிகாரியாக (அதிபர் என்று விளிப்பது கேலிக்கிடமான ஒன்றாகும்) மாறுகின்றார் மகிந்த இராசபக்சே (இட்லருக்கு பல படிகள் மேலே). இவ்வ‌ள‌வையும் ப‌டித்து விட்டு நீங்க‌ள் இண‌க்கப்பாடு ச‌ரி என்று சொல்வீர்க‌ளேயானால் நீங்க‌ள் இல‌ங்கை, இசுரேல், இந்தியா, வ‌ட‌ அமெரிக்கா போன்ற‌ ம‌னித‌ உரிமை(?) காக்கும் நாடுக‌ளில் வாழ‌ த‌குதிய‌டைந்து விட்டீர்க‌ளென்று பொருள் கொள்ளவேண்டி வரும்.

த‌மிழாக்க‌ம் : ப‌.ந‌ற்ற‌மிழ‌ன்.

நன்றி: தமிழ் முழக்கம் – திங்களிருமுறை இதழ் (இந்த இதழின் சென்ற பதிப்பில் இந்த மொழியாக்கம் வெளிவந்துள்ளது), கீற்று இணையத்திலும் இக்கட்டுரை வெளிவந்துள்ளது .

உண்ட வீட்டுக்கே இரண்டகமா —-தின‌ம‌ல‌ம்(ர்) ???????


பார்த்துப்பா…. இராச‌பக்சே கோபித்துக் கொள்ளப்போகிறார்…ஈழம் என்ற வரலாற்று உண்மையைச் சொல்லிவிட்டீர்கள் என்று .உண்மையில் சங்கத் தமிழில் இலங்கை முழுவதும் ஈழம் என்றே விளிக்கப்பட்டது உண்மையாக இருந்தாலும் கூட இப்பொழுதும் தமிழர்கள் போராடுவது வடக்கும் கிழக்கும் உள்ளடக்கிய தமிழீழம் பகுதிக்கே அன்றி சிங்கள ஈழத்துக்கு அன்று.
சரி…சரி..நீங்கள் விரைவாக இதை எடுத்து விடுங்கள்…பிறகு இலங்கை தூதரகம் இந்த மாத ஊதியத்தைத் தர மறுத்துவிடப்போகின்றது. ஐய்யையோ ப‌திப்பு வெளியில் வ‌ந்துவிட்ட‌தா ப‌ர‌வாயில்லை. இதை செய்த‌து இவ‌ர் தான் என்று சொல்லி ஒருவ‌ரை வேலையில் இருந்து நீக்கிவிடுங்க‌ள், ந‌ம‌க்கு இது என்ன‌ புதுசா…
சோறு முக்கியம் அமைச்சரே……. (சூடு, சொரணை எல்லாம் இல்லாம இருந்தாக் கூட பிழைச்சுக்க‌லாம், ஆனா சோறு இல்லாம முடியாதுப்பா)

மேலே உள்ள படம் உள்ள தின‌ம‌ல‌(ர்)த்தின் இணைய இணைப்பு…

http://epaper.dinamalar.com/DM/MADHURAI/2011/04/04/INDEX.SHTML

ஊடகத்துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகள்……தோழர்.பிரியா தம்பி


கடந்த பத்தாண்டுகளில் தகவல் தொழில்நுட்பத் துறை பெருமளவு வளர்ந்ததைப் போலவே, ஊடகமும் மிக பிரம்மாண்டமான வளர்ச்சியை எட்டியுள்ளது. காலை 9 மணிக்கு போய், மாலை ஆறு மணிக்கு வீட்டுக்குத் திரும்பி என்கிற வேலைகளில் மாற்றம் வந்தது கடந்த சில ஆண்டுகளில் தான். பெண்கள் என்றால் டீச்சர் வேலைக்கோ, அல்லது ஏதாவது ஒரு நல்ல அரசு வேலைக்கோ போய் விட்டு மாலை வீடு திரும்பி விட வேண்டும் என்கிற ஒரு மனோபாவத்தை உடைத்துக் கொண்டு பெரும்பாலான பெண்கள் இந்த ஊடகத்துறைக்கும் வரத் தொடங்கினர்.

இன்று ஊடகத்தில் பெண்களின் எண்ணிக்கை பிரமிக்கத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. வெறும் எண்ணிக்கை மட்டுமே வளர்ச்சியாகுமா? என்று கேட்டால் இல்லெயென்றே சொல்ல வேண்டியிருக்கிறது. பத்திரிகை, ஊடகம் என்றால் செய்தி ஊடகம், டி.வி, சினிமா, இணையம் எழுத்து என எல்லாம் கலந்தது தானே?

நான் பணியாற்றும் செய்தித்துறை சார்ந்து ஆரம்பிக்கலாம் என நினைக்கிறேன். சமீபத்தைய புள்ளி விவரங்களின் படி இந்திய ஊடகங்களில் 97 விழுக்காட்டை இந்து ஆதிக்க சாதிகளும், 49 விழுக்காட்டை குறிப்பாக பார்ப்பனர்களும் மட்டுமே முதலாளிகளாக இருக்கிறார்கள். இந்தியாவில் மிகச் சிறந்த ஊடகங்கள் என்று சொல்லப்படுகிற 37 ஊடகங்களை வைத்து எடுக்கப்பட்ட கணக்கில், செய்திகளை நிர்ணயிக்கும் இடத்தில்  71 விழுக்காடு பேர் பார்ப்பனர்களாக மட்டுமே இருக்கிறார்கள்.

இந்தப் பின்னணியில் தான் ஊடகங்களில் பணியாற்றும் பெண்களையும் பார்க்க வேண்டியிருக்கிறது. தமிழ் ஊடகங்களை விட ஆங்கில நிறுவனங்களில் நிறைய பெண்கள் வேலை செய்கிறார்கள். பெண்கள் என்றால் சீக்கிரம் வீட்டுக்கு ஓடி விடுவார்கள், எந்த நேரத்திலும் பணிசெய்யத் தயாராக இல்லாதவர்கள், செய்தி சேகரிப்பு போன்ற கடினமான வேலைகளை அவர்களால் செய்ய முடியாது என்கிற எல்லா செய்திகளையும் இந்தப் பெண்கள் பொய்யாக்கி விட்டு கால, நேரம் பார்க்காமல் வேலை செய்து வருகிறார்கள்.

ஆனால் இவர்களில் சமூகம் சார்ந்து வேலை செய்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. நிர்வாகங்களின் சமூக மதிப்பீடுகளைத் தான் அங்கு வேலை செய்பவர்களும் பிரதிபலிக்க முடியும் என்பது இதில் ஓரளவு உண்மையும் கூட. செய்தியாளர்களின் தேர்வு என்பது மொழிப் புலமையும், தொடர்பு கொள்ளும் திறனும், நல்ல தோற்றப் பொலிவும் என்பது தான் செய்தியாளர்களாக வரவேண்டிய பெண்களுக்கு நிர்வாகம் வைக்கும் தகுதித் தேர்வு.

நல்ல படித்த பின்னணியில் இருந்து, காலம் காலமாய் இந்த சமூகத்தை தீர்மானிக்கும் ஒரு உயர்சாதி பின்னணியில் இருந்து தான் அதில் பெரும் பெண்கள் வருகிறார்கள். முதல் தலைமுறையாக படித்த, பின் தங்கிய ஒரு சமூகத்தை, ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் ஆங்கில மீடியாவில் எனக்குத் தெரிந்து இல்லை.

காலம் காலமாய் ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் ஒரு இடத்தை வெறுமனே நிரப்புவதற்காக மட்டுமே நாம் போய் அமர வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.. போராடி செல்லும் ஒரு இடத்தில், நாம் ஒருகாலத்தில் ஒடுக்கப்பட்டோம் என்கிற நிலையில் ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுப்பது அவசியமாகிறது… இது இன்று வரை பெருமளவு சாத்தியப்படவே இல்லை. இதைத் தாண்டியும் தெகல்ஹா போன்ற ஊடகங்களில் சில பெண்களில் நல்ல கட்டுரைகளை பார்க்க முடிகிறது.

நான் பணிபுரிந்த வரையிலும் மலையாள செய்தி ஊடகங்கள் ஓரளவுக்கு சுதந்திரமாகவும், சமூகப் பார்வையோடும் இயங்குவதாகத் தெரிகிறது. பொதுவாக ஊடகங்களுக்கு வரும் பெண்கள் என்றால் பெண்கள் தொடர்பான செய்திகளை மட்டுமே எழுத வேண்டும் என்று ஆண்கள் விரும்புகிறார்கள். பெண்கள் தொடர்பான விஷயங்கள் எது என்பதையும் ஆண்களே முடிவு செய்கிறார்கள்… பேஷன், சமையல் …. இதுபோன்ற செய்திகளை நான் ஒருபோதும் எழுதியதில்லை.

எவ்வளவோ மாறிய பிறகும் பெண்களால் பெண்கள் பத்திரிகைக்கு மட்டும் தானே ஆசிரியராக வர முடிகிறது. பெண்கள், பத்திரிகைக்கு வந்ததில் இன்னொரு நல்ல மாற்றத்தை குறிப்பிட்டாக வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, அல்லது இப்போதும் சில பத்திரிகைகளில் செய்திக்காக செல்லும் இடங்களில் கவர் வாங்கும் செய்தியாளர்களும், புகைப்படக் காரர்களும் இருக்கிறார்கள்.. ஜால்ரா செய்திகள் தொடங்கும் இடம் இதுதான்… போதிய படிப்பறிவற்று, எழுதும் திறமையற்ற, வெறுமனே செய்தி சேகரிக்கும் ஆட்களை மட்டும் தெரிந்து கொள்ளும் ஆட்கள் மட்டுமே இங்கு செய்தியாளர்களாக இருந்தனர்.

பெண்கள் வந்த பிறகு இந்த நிலைமை எவ்வளவோ மாறியிருக்கிறது. பெண்கள் யாரும் கவர் வாங்கும் செய்தியாளராக இல்லை என்பதை பெருமிதத்தோடு சொல்லிக் கொள்கிறேன். முறையான படிப்பு, சம்பளம், மொழித்திறமை எல்லாம் பெண்களால் தான் சாத்தியப்பட்டிருக்கிறது. இங்கும் பெண்களின் ஒழுக்கம் தொடர்பான கேள்விகளை தவிர்த்து விட முடியவில்லை. இன்றும் சில ஊடகங்களில் டிரஸ் கோட் இருக்கிறது என்று சொன்னால் ஆச்சர்யமாக இருக்கும். சுடிதார் அணிந்து இருபுறமும் துப்பட்டாவை பின் செய்ய வேண்டும் என்றெல்லாம் விதிமுறைகள் சொல்கிறார்கள். ஒருமுறை பா.ம.க. நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளராக கலந்து கொண்டேன். ஜீன்ஸ், குர்தா தான் நான் அன்று அணிந்திருந்த உடை. கலாச்சாரம் பற்றி பேசிக் கொண்டிருந்த ராமதாஸ் கீழே இருந்த என்னைப் பார்த்து, ‘’இவங்க போட்டிருக்கிற ஆடையைப் பாருங்க, பெண்கள் ஏதேதோ அணியத் தொடங்கிட்டாங்க’’ என்று சிரித்தார்.

நாம் எந்த வேலைக்குப் போனாலும் நம்மை இந்த சமூகம் கண்காணித்துக் கொண்டே தான் இருக்கும் என்பதற்காக இதைச் சொல்ல வந்தேன். நான் கைரளி தொலைக்காட்சியில் வேலை செய்து கொண்டிருந்த போது, ஆதிவாசிகள் பற்றிய ஆவணப் படம் ஒன்றிற்காக வயநாடு பகுதியில் என்னுடைய கேமராமேனோடு ஒரே வீட்டில் சில காலம் தங்கியிருந்தேன்.. இன்றும் அந்த ஆதிவாசி மக்களை பற்றி நான் பிரமித்து சில செய்திகளை பகிர்ந்து கொள்ளும் போது, அதைக் கேட்பவர்கள் எனக்கும் அந்த கேமராமேனுக்கும் என்ன உறவு இருந்தது என்பதில் தான் அதிக அக்கறை காட்டினார்கள். ஆதிவாசிகள் என்ன இடர்பாடுகளை எதிர்கொள்கின்றார்கள் என்று ஒருவர் கூட கேட்கவில்லை.

பெண் எழுத்து என்று வரும்போது, நாம் பெண்களின் உடலரசியலைத் தாண்டி எது குறித்தும் இன்னமும் பேசவில்ல என்றே நினைக்கிறேன். சராசரி பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்தும் நாம் பேசியாக வேண்டும்.
திரைப்படங்கள் பெண்ணிய நோக்கில் பெரும்பாலும் வரவே இல்லை. தமிழில் பாலசந்தர் எடுத்த திரைப்படங்கள் பெண்ணியத்திற்கான உதாரணப்படங்களாக கூறுகின்றார்கள். ஆனால் அவர் படத்தில் பெண்கள் என்றால் பிள்ளைகளை பெற்றெடுக்கும் இயந்திரமாகத் தான் பார்க்கப்படுகின்றார்கள். பெண்கள் திரைப்படத்துறையின் தொழில்நுட்பத்துறையில் வளர்ந்து வருகின்றார்கள். பெண்களை சரியான முறையில் கதாபாத்திரங்களாக காட்டவே இல்லை. கதாநாயகி என்றால் அவள் எப்போதும் லொட லொடவென்று லூசு போல் பேசிக் கொண்டே இருக்க வேண்டும். பெண்கள் அறிவுடையவர்கள் என்கிற ரீதியில் இங்குள்ள ஆண்களால் இன்னமும் சிந்திக்கவே முடியவில்லை.

துணை நடிகைகள் வெறும் பாலியல் பிண்டங்களாகவே பார்க்கப்படுகின்றார்கள். தொடர் நாடகங்களில் வேலைக்கும் போகும் பெண்கள், மாடர்ன் உடை அணியும், குட்டை முடி வைத்த பெண்கள் எல்லாம் வில்லிகளாகவும், வீட்டில் உள்ள பெண்கள் எல்லாம் நல்லவர்களாகவும் காட்டப்படுகின்றார்கள்.

தனக்கு குழந்தை பிறக்காததால் தன் கணவனுக்கு மறுமணம் செய்து வைப்பது போல மட்டுமே இன்னமும் காட்டுகின்றார்கள். இது போன்ற தொடர்களில் கூட்டுக்குடும்பங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் உளவியல் பிரச்சனைகளை யாரும் காட்டவே இல்லை.

இதுபோன்ற சூழ்நிலையில் தனிநபர்களால் வரும் கேலி, கிண்டல் பிரச்சனைகளை எல்லாம் பெண்கள் தவிர்த்து விட்டு  நமக்கான தளத்தில் இயங்குவது தான் சரியாக இருக்க முடியும்.

……..

தமிழர்களை பாதுகாப்போம் இயக்கம் (Save Tamils Movement)  உழைக்கும் பெண்கள் நாளை கொண்டாடவும், சிந்திக்கவும் என்ற நோக்கில் 27.03.2011 அன்று லயோலா கல்லூரியில் நடத்திய “நியூயார்க்கிலிருந்து திருப்பூர் வரை” கருத்தரங்கில் கலந்து கொண்ட தோழர்.பிரியா தம்பி பேசிய உரையின் வரி வடிவம்……..

உழைக்கும் மகளிர் நாள் 2011……பெண்களின் அடிமை விலங்கை ஒடிக்க…


 “சாதியம், பெண்களின் அடிமை நிலை” —-தோழர்.மீனா மயில் (ஊடகவியலாளர்)

     இந்த பிரச்சனைக்கு தீர்வு என்ற ஒன்று உள்ளது என இருவர் கூறியுள்ளார்கள். பெண்களுக்கு பிறப்பிலிருந்து இறப்பு வரை ஏராளமான பிரச்சனைகள். இந்த பிரச்சனைகளின் பிறப்பிடம் சாதி..சாதியின் பிறப்பிடம் மதம். இந்த நாட்டின் அடிப்படை பிரச்சனையாக நான் கருதுவது சாதி. இன்றைய இந்தியா இரண்டு பிரிவாக உள்ளது.

1. சேரி இந்தியா
2. ஊர் இந்தியா

கிராமங்கள் மட்டுமல்ல, நகரங்களும் இவ்வாறு தான் உள்ளன. வர்ணாசிரமம் மனிதர்களை நான்கு வகையில் தான் பிரித்துள்ளதா என்றால் இல்லை. 6000 சாதிகளாக பிரிந்துள்ளார்கள். சாதியால் பிரிக்கப்பட்ட அந்த பிரச்சனை. சாதி ஒழிப்பின் மூலம் தான் சரிசெய்யப்பட வேண்டும். இங்கு ஒரு குழந்தை சாதியுடன் தான் பிறக்கின்றது. இறக்கும் வரை சாதியை சுமந்து கொண்டு தான் செல்கின்றது. மதம் பிடிக்கவில்லை என்றால், கடவுள் பிடிக்கவில்லை என்றால் நாம் அதை மாற்றிக்கொள்ள சட்டம் நமக்கு உரிமை கொடுக்கின்றது. ஆனால் சாதியை மாற்றிக்கொள்வதற்கான உரிமையை சட்டம் வழங்கவில்லை. அவ்வாறு இருப்பின் இந்நேரம் தாழ்த்தப்பட்ட மக்கள் எல்லாம் பார்ப்பனர் சாதிக்கு மாறி இருப்பார்கள். தலித் மக்கள் இன்றும் சாதிய இழிவை சுமந்து கொண்டு தான் திரிகின்றார்கள். சத்ரபதி சிவாஜி ஒருமுறை நாம் பார்ப்பனராக ஆக முடியாதா என்று பல தரப்பட்ட பார்ப்பனர்களையும் அழைத்து கேட்க, அவர்கள் பார்ப்பனராக பிறப்பவன் மட்டுமே பார்ப்பானாக முடியும். நீங்கள் சத்ரியராக பிறந்த இழிவை சுமந்து கொண்டு தான் இருக்க வேண்டும் என்று கூறிச் சென்றார்கள்.

இங்கே சமூகத்தில் பல‌ புனைவுகள்(Myth) உண்டு.
புனைவு 1: கல்வி சாதியை ஒழித்து விடும். ஆனால் கல்வி சாதி உணர்வை மாற்றவில்லை என்பது தான் உண்மை. நமக்கு சமூக வரலாறாக கற்பிக்கப்படுபவை எவை சாதி இந்துக்களான காந்தி, நேருவைப் பற்றிய நிகழ்வுகளும், வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றி மட்டுமே, ஆனால் இந்தியாவில் விடுதலைப் போராட்டம் நடந்த காலகட்டத்தில் நடந்த சாதி எதிர்ப்பு போராட்டம் நமக்கு கற்பிக்கப்பட வில்லை(அதாவது நமது பாடப் புத்தகங்களில் இல்லை). தீண்டாமை பற்றிய விழிப்புணர்வு சரியாக நமக்கு கற்றுத்தரப்படவில்லை.
படிச்சா சாதி போயிருக்கணும்னா…இந்நேரம் 65 விழுக்காடு சாதியில்லாமல் போயிருக்க வேண்டும்(கல்வி கற்றோர் விழுக்காடு 65 எனக்கொள்க). கல்வியால் சாதி ஒரு பொழுதும் போகாது.
திரு.நாராயணன் அவர்கள் ஒரு தலித் சாதியைச் சேர்ந்தவர். முதலில் IFS படித்து (அந்த காலத்து IAS), முதலில் கவர்னராகவும், பின்னர் துணை குடியரசுத்தலைவராகவும், இறுதியாக இந்தியாவின் குடியரசு தலைவரானார். ஆனால் இந்தியாவின் முதல் குடிமகனான பின்ன‌ரும் கூட அவர் பிறந்த ஊரில் அவர் செருப்பு அணிந்து செல்லமுடியாமல் ஊரார் அவரை தடுத்தார்கள். நாட்டின் முதல்குடிமகனுக்கே இது தான் நிலை.
 

புனைவு 2: நகரமயமாக்கல் சாதியை ஒழித்து விட்டது. இதுவும் கூட முற்றிலும் தவறான ஒரு கருத்தே.
உதாரணத்திற்கு சென்னையை எடுத்துக் கொள்ளுங்கள், அதுவும் கூட

வட சென்னை (வியாசர் பாடி, இராயபுரம்) சிறுபான்மையினரும், தாழ்த்தப்பட்ட மக்களும் அதிகம் வாழும் பகுதி.

தென் சென்னை (மயிலாப்பூர், மந்தைவெளி) பார்ப்பனர்கள், ஆதிக்க சாதி மக்கள் அதிகம் வாழும் பகுதி. என்றே பிரிந்துள்ளது. சேரி இந்தியா, ஊர் இந்தியா கட்டமைப்பில் தான் சென்னையும் உள்ளது.
    சென்னை என்ற நகரத்தை உருவாக்கியவர்களை தனியே பிரித்து வைத்து விட்டு நகரம் வளர்கின்றது. வட சென்னையில் இருப்பவர்கள் குடும்பம், குடும்பமாக (வளர்ச்சி என்ற பெயரால்)நகரத்தை விட்டு வெளியே எறியப்படுகின்றார்கள். ஆனால் இதையே தென் சென்னை மயிலாப்பூரில் உள்ள ஒரு குடும்பத்தை உங்களால் அசைக்க முடியுமா?

 
   மேலும் நகரங்களில் யார் சாதி பார்க்கின்றார் என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதை. நீங்கள் எந்த ஊர், நீங்கள் ஒரு மொழியை எப்படி பேசுகின்றீர்கள் (Dilect), என்ன சாப்பிடுகின்றீர்கள் என்பதை வைத்து அவர்கள் உங்கள் சாதியை உங்களை கேட்காமலேயே கண்டுபிடித்துவிடுவார்கள். இதே சென்னையில் நடந்த நிகழ்வு ஒன்று. இந்திய ஆட்சி அலுவலராக (IAS) பணியாற்றிய ஒருவருக்கு வீடு கொடுத்த ஒரு மார்வாடி குடும்பம் அவர் குடிவந்த சில தினங்களிலேயே வீட்டை காலி செய்யச் சொல்லியது. அவர்கள் அதற்கு கூரிய காரணம் நீங்கள் உங்கள் சாதியை எங்களிடம் கூறாமல் மறைத்து விட்டீர்கள். நீங்கள் பசுவை சாப்பிடுபவர்கள், நாங்கள் ப‌சுவை கும்பிடுபவர்கள் என்று கூறியது.
காதல் சாதியை அழித்து வருகின்றது. காதலுக்கும் சாதிக்குமான மோதலில் சாதி தான் வெற்றி பெற்று வருகிறது. இங்கே இந்தியாவில் திருமணத்தின் மூலம் தான் சாதி அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லப்படுகின்றது. ஒருவர் என்ன வியாக்கியானம் பேசினாலும் இறுதியில் அவரது திருமணம் சாதியின் அடிப்படையிலேயே இங்கே நடக்கின்றது. இதை நம் முகத்தில் அறைந்து சொல்வது இன்றும் நடக்கும் “கௌரவக் கொலைகள்(Honour killings).

உதாரணத்திற்கு இரண்டு…


திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சங்கீதா(கம்பளத்து நாயக்கர் சாதி) என்பவர் பாலச்சந்தர்(தலித்) என்பவரை காதலித்து திருமணமான பின்னர் சங்கீதாவின் குடும்பத்தினர் சங்கீதாவின் வீட்டுக்கு சென்று காவல்துறையின்(சாதியை கட்டிக்காக்கும் நிறுவனம்)  மூலம் கட்டப்பஞ்சாயத்து செய்து அவர்கள் இருவரையும் பிரிக்கின்றார்கள். பின்னர் சங்கீதாவை அந்த பெற்றோர்கள் தங்கள் ஊருக்கு கூட்டிச் செல்கின்றார்கள். இந்த பெண் தலித் சமூகத்தை சேர்ந்தவனுடன் உறவு கொண்டு விட்டதால் ஊருக்கு தீட்டுப்பட்டு விட்டதாக கூறி ஊரையே கழுவி விடுகின்றார்கள். மேலும் சங்கீதாவை சங்கிலியால் கட்டி வைத்து நாய்க்கு உணவு வைக்கும் தட்டில் உணவை வைக்கின்றார்கள்(தலித் சமூகத்தை அம்மக்கள் பார்க்கும் நிலையில் அந்த பெண்ணை வைக்கின்றார்கள்). மூன்றாம் நாள் சங்கீதாவிற்கு விச ஊசி போட்டு சிறுக, சிறுக அந்த பெண் உயிரிழப்பதை அவர்கள் காண்கின்றார்கள். சங்கீதா இறந்த பின்னர் அவர் சாம்பலை எடுத்து வந்து ஊரைச் சுற்றி தூவிவிடுகின்றார்கள்.


இரண்டாவது நிகழ்வு…..நிரூபமா ராவ் என்ற பெண் திடீர் என்று இறந்துவிடுகின்றார். முதலில் அவர் மின்சாரம் தாக்கி இறந்ததாக என்றும், பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் அந்த பெண்ணின் பெற்றோர்கள் காவல்துறையிடம் கூறியுள்ளார்கள். ஆனால் உடல் அறுவை சோதனையில் அவர் மூச்சு முட்டி இறந்ததாகவும், மேலும் அந்த பெண் மூன்று மாதம் கர்ப்பமாக இருந்ததும் அறிக்கையில் வந்தது. இவர் ஒரு பத்திரிகையாளராக இருந்ததால் இந்த விசாரணைக்கு அழுத்தம் அதிகரிக்க, காவல்துறை பெற்றோரை மேலும் விசாரிக்கையில் பார்ப்பனரான எம் மகள் வேறு சாதியைச் சேர்ந்த பையனுடன் திருமணமாகி அவன் கருவைச் சுமந்ததால் அந்த பெண்ணின் அம்மாவே அவளை கொன்ற உண்மை வெளிவந்தது. 
  பெண்கள் எல்லோரையும் நாம் ஒரே தட்டிலேயே வைத்துப்பார்க்க முடியாது. பெண்களுக்கும் சமூகம் சாதிய வேறுபாட்டை பிறப்பிலிருந்து பயிற்றுவிக்கின்றது. ஆணுக்கு சொத்தாகவும், பெண்ணுக்கு கலாச்சாரமாகவும் சாதி இங்கே பயிற்றுவிக்கப்படுகின்றது. பெண்கள் அணியும் தாலியில் கூட‌ இங்கு சாதி இருக்கின்றது(ஒவ்வொரு சாதியிலும் ஒவ்வொருவிதமாக தாலியைச் செய்வர்). ஆதலால் இங்கு பெண்கள் அனைவரையும் ஒரே குழுவாக பார்ப்பது சிரமமாகும்.
 

கயர்லாஞ்சி பகுத்தறிவு கொண்டவர்களை உலுக்கிய ஒரு கொடூர நிகழ்வாகும். ஆனால் இந்த நிகழ்விற்கு ஊடகங்களில் போதிய கவனம் கொடுக்கப்படவில்லை. போட்மாங்கே என்ற ஒருவருடைய குடும்பம் கயர்லாஞ்சிப் பகுதியில் வசித்து வந்தார்கள். அவர் தன் குழந்தை படிக்க வைத்தார். மேலும் தன் நிலத்தில் தானே விவசாயம் செய்து சுயமரியாதை மிக்க வாழ்வு வாழ்ந்து வந்தார். அவரது பெண்ணான சுரேகா மிகவும் உறுதியான பெண்ணாக வாழ்ந்து வந்தார். அதெப்படி ஒரு தலித் குடும்பம் இவ்வாறு இருக்கலாம் என்று ஆத்திரம் அடைந்த சாதி இந்துக்கள்(ஆதிக்க சாதியினர்) ஆத்திரம் அடைந்து போட்மாங்கே(அப்பா) ஊரில் இல்லாத நேரம் பார்த்து அந்த குடும்பத்தை தாக்கி இருக்கின்றார்கள். இதில் மிகவும் கொடூரமான நிகழ்வாக அம்மாவையும், அவரது பெண்களையும் அவர்களது  மகன்களையே வன்புணர்ச்சி செய்யச் சொல்ல, அவர்கள் மறுக்கவே, அவர்களை கொன்று, அந்த பெண்களின் பிறப்புறுப்பில் க‌த்தி போன்ற கூரான ஆயுதங்களை பாய்ச்சியுள்ளார்கள்.  ஏன் அந்த ஊரில் பெண்களே இல்லையா? இருந்தார்கள்…ஆனால் அந்த பெண்கள் மனித உணர்வே அற்று, இந்த கொடூர நிகழ்வைப் பார்த்து சிரித்து மகிழ்ந்து சாதி இந்துக்களாக இருந்தார்கள்.

திண்ணியத்தில் பஞ்சாயத்து தலைவியான இராஜலட்சு என்ற பெண் தலித் சமூகத்தைச் சேர்ந்த இருவரை அடித்து, அவர்களின் சாதியின் பெயரைச் சொல்லி இழிவாக திட்டி, மனித மலத்தை கரைத்து அவர்கள் இருவரின் வாயிலும் ஊற்றிய பிறகு தான் அவரது ஆத்திரம் அடங்கியுள்ளது. இங்கு பெண்களும் சாதிய உணர்வோடு தான் உள்ளார்கள். இங்கே பாலினப்பாகுபாடுகள் இல்லாமல் சாதி பயிற்றுவிக்கப்படுகின்றது.
சாதி ஒழிந்து விட்டது என்பதில் துளியும் உண்மை இல்லை. குழந்தைகள், ஆண், பெண் என எல்லோரிடமும் சாதி இருக்கின்றது. பெண்களுக்காக கொடுக்கப்படும் 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் கண்டிப்பாக உள் ஒதுக்கீடு தேவை என்பதை மேற்கூரிய உதாரணங்கள் நமக்கு உணர்த்துகின்றன. உள் ஒதுக்கீடு எல்லாம் வேண்டாம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மிக நேர்மையாக சரியான பங்கீட்டை அவர்கள் தருவார்களா என்றால் இல்லை. 
   உயர் சாதியினருக்கு மிகவும் பிடிக்காத வார்த்தைகளில் ஒன்று “ஒதுக்கீடு”. 3000 ஆண்டு கால இழப்பை சரிசெய்யும் சிறு மருந்தாக இட ஒதுக்கீடு கொடுக்கப்படுவதைக் கூட அவர்களால் பொறுத்தக்கொள்ள முடிய வில்லை. டாக்டர். அம்பேத்கர் சட்டமியற்றியதால் என்னால் இங்கு பேச முடிகின்றது. 33 விழுக்காடு இட ஒதுக்கீடு பற்றி பேசும் பெண்கள், உள் ஒதுக்கீடு பற்றியும் பேச வேண்டும்.
  நான் ந்னது 10 ஆண்டு கால ஊடகத்துறை நானும் பாலின பாகுபாட்டை பார்த்திருக்கின்றேன். நான் மதத்தை கடந்து வந்து விட்டதால் அவை எனக்கு ஒரு பொருட்டாகவே தெரிவதில்லை. இந்து மதத்தை தூக்கிக் கொண்டிருக்கும் வரையில் நீங்கள் பெண்ணடிமை தனத்தையும் தூக்கிக்கொண்டு தான் திரிகின்றீர்கள். பெண்ணடிமைத் தனத்தை பாதுகாப்பது இந்து மதம். இந்து மத‌த்தை அழிக்கக்கூடிய‌ போராட்டத்தை எல்லோரும் முன்னெடுக்க வேண்டும் என்று நான் இந்த உரையின் தொடக்கத்தில் கூறிய இருவரும் கூறியுள்ளார்கள், அவர்கள் தான் டாக்டர்.அம்பேத்கர், தந்தை.பெரியார்.

……

  தமிழர்களை பாதுகாப்போம் இயக்கம் (Save Tamils Movement)  உழைக்கும் பெண்கள் நாளை கொண்டாடவும், சிந்திக்கவும் என்ற நோக்கில் 27.03.2011 லயோலா கல்லூரியில் நடத்திய “நியூயார்க்கிலிருந்து திருப்பூர் வரை” கருத்தரங்கில் கலந்து கொண்ட தோழர்.மீனா மயில் பேசிய உரையின் வரி வடிவம்……..

“ஒலங்காவும் – சச்சினும்”, ” முகமது அலியும் – முரளீதரனும் ” …….- ப‌.ந‌ற்ற‌மிழ‌ன்


சூடு, சொர‌ணை உள்ள‌ இந்திய‌ ம‌ட்டைப்ப‌ந்து இர‌சிக‌ர்க‌ள் மேற்கொண்டு இக்கட்டுரையை ப‌டிக்க‌ வேண்டாம் (please) ….

“நாங்கள் தொழில்ரீதியான மட்டைப்பந்து(Cricket) ஆட்டக்காரர்களாக இருந்தபோதிலும், எங்களது தேசத்தில் நடக்கும் கண்மூடித்தனமான மனித உரிமைமீறல்களை, படுகொலைகளைப் பார்த்துக்கொண்டு மனசாட்சியை மீறீ அமைதியாக இருக்க இயலாது. எங்களது மவுனம் , எங்களது தேசத்தில் நடப்பவைகளைப் பற்றிய அக்கறையின்மையாக வெளிப்படுமோ என்றெண்னி, இந்த சந்தர்ப்பத்தில் எங்களது அரசாங்கத்திற்கான எதிர்ப்பை, உலகக்கோப்பைப்போட்டிகளில் கருப்புப் பட்டையை அணிந்து பதிவு செய்கின்றோம்.

                                    — ஹென்றி ஒலாங்கா (முன்னாள் சிம்பாவே ம‌ட்டைப்ப‌ந்து வீர‌ர்)

    
“என்னை நீக்ரோ என்றழைக்காத வியட்காங்கையர்களை (வியட்நாமிய கம்யூனிஸ்டுகள்) நான் ஏன்  கொல்லப்போகவேண்டும்” .”என்னுடைய சொந்த மக்களே இங்கு அடிமைகளாகவும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாகவும் கிடக்கும்பொழுது,, பத்தாயிரம் மைல்கள் கடந்து சென்று வெள்ளைக்காரர்களுக்கு அடிமையாக்க நான் ஏன் பழுப்பு நிறமக்களை சீருடை அணிந்து கொல்லவேண்டும்”.வியட்நாம் போருக்கான ராணுவத்தில் கட்டாயமாக சேர்க்கப்பட, ராணுவ உயரதிகாரிகளால் தன் பெயர் அழைக்கப்பட்டபொழுது நான்காவது முறையும் முன்னுக்கு வராமல் நின்றதால் தண்டனைக்குள்ளாக்கப்பட்டார்.

                                   —– முக‌ம‌து அலி (உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர்)

ஈழத்தமிழர்களையும், காசுமீரிகளையும், இந்திய ஒன்றியத்தின் வடமேற்கு மாநில மக்களையும், பழங்குடிகளையும், தமிழக மீனவர்களையும் அன்றாடம் இந்த தேசங்கள் படுகொலை செய்து வருகின்றன‌, அந்த பகுதிகளில் மனித உரிமைகள் என்பது ஒரு சிறிய மாத்திரை அளவுக்கு கூட இல்லை என்பதும் உண்மை. இதை எல்லாம் கண்டனம் செய்யத்தவறியவர்கள் தான் இந்திய, இலங்கை மட்டைப்பந்து வீரர்கள்.

“அடிப்படை மனிதத்தன்மையே இல்லாத இவர்களை சிலர் தங்களது விருப்ப‌ தெய்வங்களாக பூசிப்பது சரியா?

 அவர்கள் விளையாடும் விளையாட்டை பார்ப்பது முறையா? என்ற கேள்வியை உங்களின் ஆறாம் அறிவுக்கு விட்டுவிடுகின்றேன்…..

“ஓல‌ங்காவின், முகமது அலியின் மாந்த‌நேய‌த்தை வெறும் ப‌ண‌த்திற்காகவும், புகழிற்காகவும் விளையாடும் இந்திய‌, இல‌ங்கை வீர‌ர்க‌ளிட‌ம் எதிர்பார்ப்ப‌து கூட ஒரு ம‌ட‌த்த‌ன‌மே”

பின் குறிப்பு:  ம‌ட்டைப்ப‌ந்து வ‌ர‌லாற்றில் ச‌ச்சினும், முரளீதரனும் எவ்வ‌ள‌வு தான் சாத‌னைக‌ளை செய்திருப்பினும் ஹென்றி ஒலாங்காவின் ம‌னித‌த் த‌ன்மைக்கு முன்னால், அவரது கால் தூசுக்கு கூட‌ ஒப்பிட‌ முடியாத‌வர்களே என்ப‌து என் தாழ்மையான‌ க‌ருத்து…

Advertisements
%d bloggers like this: