“ஒலங்காவும் – சச்சினும்”, ” முகமது அலியும் – முரளீதரனும் ” …….- ப‌.ந‌ற்ற‌மிழ‌ன்


சூடு, சொர‌ணை உள்ள‌ இந்திய‌ ம‌ட்டைப்ப‌ந்து இர‌சிக‌ர்க‌ள் மேற்கொண்டு இக்கட்டுரையை ப‌டிக்க‌ வேண்டாம் (please) ….

“நாங்கள் தொழில்ரீதியான மட்டைப்பந்து(Cricket) ஆட்டக்காரர்களாக இருந்தபோதிலும், எங்களது தேசத்தில் நடக்கும் கண்மூடித்தனமான மனித உரிமைமீறல்களை, படுகொலைகளைப் பார்த்துக்கொண்டு மனசாட்சியை மீறீ அமைதியாக இருக்க இயலாது. எங்களது மவுனம் , எங்களது தேசத்தில் நடப்பவைகளைப் பற்றிய அக்கறையின்மையாக வெளிப்படுமோ என்றெண்னி, இந்த சந்தர்ப்பத்தில் எங்களது அரசாங்கத்திற்கான எதிர்ப்பை, உலகக்கோப்பைப்போட்டிகளில் கருப்புப் பட்டையை அணிந்து பதிவு செய்கின்றோம்.

                                    — ஹென்றி ஒலாங்கா (முன்னாள் சிம்பாவே ம‌ட்டைப்ப‌ந்து வீர‌ர்)

    
“என்னை நீக்ரோ என்றழைக்காத வியட்காங்கையர்களை (வியட்நாமிய கம்யூனிஸ்டுகள்) நான் ஏன்  கொல்லப்போகவேண்டும்” .”என்னுடைய சொந்த மக்களே இங்கு அடிமைகளாகவும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாகவும் கிடக்கும்பொழுது,, பத்தாயிரம் மைல்கள் கடந்து சென்று வெள்ளைக்காரர்களுக்கு அடிமையாக்க நான் ஏன் பழுப்பு நிறமக்களை சீருடை அணிந்து கொல்லவேண்டும்”.வியட்நாம் போருக்கான ராணுவத்தில் கட்டாயமாக சேர்க்கப்பட, ராணுவ உயரதிகாரிகளால் தன் பெயர் அழைக்கப்பட்டபொழுது நான்காவது முறையும் முன்னுக்கு வராமல் நின்றதால் தண்டனைக்குள்ளாக்கப்பட்டார்.

                                   —– முக‌ம‌து அலி (உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர்)

ஈழத்தமிழர்களையும், காசுமீரிகளையும், இந்திய ஒன்றியத்தின் வடமேற்கு மாநில மக்களையும், பழங்குடிகளையும், தமிழக மீனவர்களையும் அன்றாடம் இந்த தேசங்கள் படுகொலை செய்து வருகின்றன‌, அந்த பகுதிகளில் மனித உரிமைகள் என்பது ஒரு சிறிய மாத்திரை அளவுக்கு கூட இல்லை என்பதும் உண்மை. இதை எல்லாம் கண்டனம் செய்யத்தவறியவர்கள் தான் இந்திய, இலங்கை மட்டைப்பந்து வீரர்கள்.

“அடிப்படை மனிதத்தன்மையே இல்லாத இவர்களை சிலர் தங்களது விருப்ப‌ தெய்வங்களாக பூசிப்பது சரியா?

 அவர்கள் விளையாடும் விளையாட்டை பார்ப்பது முறையா? என்ற கேள்வியை உங்களின் ஆறாம் அறிவுக்கு விட்டுவிடுகின்றேன்…..

“ஓல‌ங்காவின், முகமது அலியின் மாந்த‌நேய‌த்தை வெறும் ப‌ண‌த்திற்காகவும், புகழிற்காகவும் விளையாடும் இந்திய‌, இல‌ங்கை வீர‌ர்க‌ளிட‌ம் எதிர்பார்ப்ப‌து கூட ஒரு ம‌ட‌த்த‌ன‌மே”

பின் குறிப்பு:  ம‌ட்டைப்ப‌ந்து வ‌ர‌லாற்றில் ச‌ச்சினும், முரளீதரனும் எவ்வ‌ள‌வு தான் சாத‌னைக‌ளை செய்திருப்பினும் ஹென்றி ஒலாங்காவின் ம‌னித‌த் த‌ன்மைக்கு முன்னால், அவரது கால் தூசுக்கு கூட‌ ஒப்பிட‌ முடியாத‌வர்களே என்ப‌து என் தாழ்மையான‌ க‌ருத்து…

Advertisements
  • shah
  • ஏப்ரல் 2nd, 2011

  i agree with u brother

 1. சிறந்த பதிவு!

  • arbhaskhan
  • ஏப்ரல் 2nd, 2011

  Bull shit.

  • தங்களது நாகரீகமான பின்னூட்டத்திற்கு நன்றி…

 2. ////ம‌ட்டைப்ப‌ந்து வ‌ர‌லாற்றில் ச‌ச்சினும், முரளீதரனும் எவ்வ‌ள‌வு தான் சாத‌னைக‌ளை செய்திருப்பினும் ஹென்றி ஒலாங்காவின் ம‌னித‌த் த‌ன்மைக்கு முன்னால், அவரது கால் தூசுக்கு கூட‌ ஒப்பிட‌ முடியாத‌வர்களே என்ப‌து என் தாழ்மையான‌ க‌ருத்து…///
  so true

  • தங்களது மறுமொழிக்கு நன்றி தோழர்.மயூரன்.

 3. அடிப்படை மனிதத்தன்மையே இல்லாத சச்சின் , முரளிதரன் இருவரையும் மனிதர்களாகவே மதிக்க தேவை இல்லை.

  • தெளிவான‌ புரித‌லுக்கு ந‌ன்றி தோழர்.முத்து

 4. மிக அருமையான பதிவு.

  • H. Ravichandran
  • மார்ச் 28th, 2013

  excellent comparison. when innocent people are are being tortured there, is it not necessary to show our protest ?

  • Thanks for our comments Mr.Ravi. Yes, when the people are tortured & Killed, you have to protest.

  • Vengadesh
  • நவம்பர் 17th, 2013

  என்னைப் பொறுத்த வரை இது தவறான கருத்து.. ஒரு சராசரி மனிதன் இந்தியாவில் எப்படி இருப்பானோ அப்படித் தான் சச்சினும் இருக்கிறார். தனக்கு எந்த தொல்லையும் வந்து விடக் கூடாது என்று. அவர் தவறு என்றால் இந்தியாவின் மொத்த சராசரி ஜனமும் தவறு தான். அவர் ஒன்றும் மக்களைக் காக்க வந்த கடவுள் அல்ல. அவர் பணி இந்தியாவுக்காக கிரிக்கெட் ஆடுவது. எனக்கு அதை அவர் சிறப்பாக செய்து முடித்து உள்ளதாகவே தெரிகிறது. அதைத் தவிர அவரிடம் மேலும் வேறு எதாவது எதிர்பார்ப்பது என்பது பிச்சைக்காரத்தனம்.

  • அகிலன்
  • பிப்ரவரி 4th, 2014

  //அவர் பணி இந்தியாவுக்காக கிரிக்கெட் ஆடுவது. எனக்கு அதை அவர் சிறப்பாக செய்து முடித்து உள்ளதாகவே தெரிகிறது. அதைத் தவிர அவரிடம் மேலும் வேறு எதாவது எதிர்பார்ப்பது என்பது பிச்சைக்காரத்தனம்.//
  பி சி சி ஐ ஒன்றும் இந்திய அரசு நிறுவனம் அல்ல , தனியார் கார்பரேட் கம்பனி….. அவுரு நாட்டுக்காக ஆடிட்டாலும்…. வெளங்கி வீடு விட்டுத்தான் போயிரும்……

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Advertisements
%d bloggers like this: