நான் ஏன் இந்திய சுதந்திர தினத்தை புறக்கணிக்கின்றேன் ………


 • காசுமீர் தேசத்தை சீர்குலைத்து, இந்திய இராணுவத்தின் மூலம் அம்மக்களை கொலை செய்து, கற்பழித்து, காணாமல் போகச் செய்த‌தற்காக(தொடர்ந்து செய்து வருவதற்காக‌…
 • உலகிலேயே மிக நீண்ட போர் நிறுத்த ஒப்பந்தமான இந்திய யூனியனுக்கும் நாகாலாந்து விடுதலைப்போராளிகளுக்கும் இடையான ஒப்பந்தத்தை மீறி, அவர்களை பேச்சுவார்த்தை என்று கூறி வரவழைத்து கொலை செய்ததற்காக‌
 • இந்தியாவின் வட-கிழக்கு மாகாணங்களில் இந்திய இராணுவம் செய்யும் கொலைகள், பாலியல் வன்முறைகளுக்காக….உலகிலேயே மிக நீண்ட அகிம்சா போராட்டமான ஐரோம் சர்மிளாவின் பதினொரு ஆண்டு கால உண்ணாவிரதப் போராட்டத்தை கண்டும் காணாமல் நாடகமாடிவருவதற்காக‌
 • இந்தியாவின் மையப் பகுதியில் வாழ்ந்து வரும் பழங்குடிகளை பணக்கார முதலாளிகளை மேலும் வளர்ப்பதற்காக திட்டமிட்டு கொலை செய்தும், அவர்கள் மண்ணை விட்டு அப்புறப்படுத்தியதற்காக‌
இந்திய இராணுவத்தினால் கண்டுபிடிக்கப்பட்டு 3 விரல்களையும் இழந்து நக்சல் தீவிரவாதி
இந்திய இராணுவத்தினால் கண்டுபிடிக்கப்பட்டு 3 விரல்கள் வெட்டப்பட்ட‌ நக்சல் தீவிரவாதி
 •  சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் நவீன கொத்தடிமை முறைகளை உருவாக்கி, தொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறித்ததற்காக‌
 • நீதி என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்பொழுதுமே கிடைக்காது என்று உறுதி செய்யும் உச்ச நீதி மன்றம் அமைப்பிற்காக…உதாரணங்கள்: போபாலில் அமெரிக்க நிறுவனம் செய்த திட்டமிட்ட கொலைக்கு இன்னும் நீதி வழங்காமல் இருப்பது, கயர்லாஞ்சி படுகொலையை ஏதோ கோபத்தில் ஒருவன் செய்ததாக தீர்ப்பு வழங்கியது. பாபர் மசூதி வழக்கு தீர்ப்பு போன்றவைகளுக்காக…
 • ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்பதை சட்ட மூலமாக வைத்துக்கொண்டு தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களையும், நிரபராதிகளையும் தண்டித்து வருவது (உதாரணம்…இதுவரை தூக்குதண்டனை வழங்கப்பட்டவர்களில்  பெரும்பாலோர் ஏதுமற்ற ஒடுக்கப்பட்ட மக்களே)
 • உச்ச நீதிமன்றம் அத்தி பூத்தாற் போல வழங்கிய தீர்ப்பான “வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு உணவுப் பொருளை இலவசமாக வழங்கு” என்று கூற உணவுப் பொருள் அழுகிப் போனாலும் பரவாயில்லை நாங்கள்(அரசு) ஏழைகளுக்கு உணவை இலவசமாக கொடுக்க மாட்டோம் என்று கூறி தன் சொந்த குடிகளை பட்டினிக் கொலை செய்ததற்காக‌
 • தெலங்கானா என்ற தனி மாநிலத்திற்காக தங்கள் இன்னுயிரை பல நூறு மக்கள் ஈந்த பின்னரும் அவர்களது கோரிக்கையை மதியாமல் இருப்பதற்காக‌
 • ஒரு மாநிலத்திற்கு அண்டை மாநிலம் பிரச்சனை செய்யும் பொழுது அதற்கு தீர்வு காணாமல் அந்த எரியும் பிரச்சனைக்கு எண்ணெய் ஊற்றி குளிர்காய்ந்ததற்காக (முல்லைப் பெரியாறு, காவிரி, பாலாறு).
 • தன் சொந்த குடிகளில்(மீனவன்) 500க்கும் அதிகமான மக்களை இன்னொரு நாட்டின் இராணுவம் சுட்டுக் கொன்றும், பல நூறு மக்களை ஊனப்படுத்தியும் வருவதை கண்டும் காணாமல் வாய் பொத்தி மௌனமாக இருப்பதற்காக…
 • வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் சமூகத்தின் ஒரு சாரார் மட்டும் வளரக்கூடிய வீக்கத்திட்டங்களை போட்டு தன் சொந்த குடிகளின் வாழ்வாதாரத்தை அழித்ததற்காக….(விவசாயிகளின் பட்டினிச் சாவில் இந்தியா முதலிடம்….)
 • சாதிய ரீதியிலான வன்முறைகளை இனவாத(Racisim) வன்முறை பட்டியலில் சேர்க்கக்கூடாது என்று உலக அரங்கில் போராடி சாதிய வன்முறையாளர்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக‌
 • சிறுபான்மை மக்களை பெரும்பான்மையினர் படுகொலை செய்த பொழுது அதை தடுக்காமல், அந்த சிறுபான்மை இன மக்களையே கைது செய்து சிறையில் அடைத்து துன்புறுத்திவருவதற்காக……(மும்பை தாக்குதல், கோத்ரா தாக்குதல்…..)
 • இவை மட்டுமின்றி அண்டை நாடுகளில் எழும் சனநாயக போராட்டங்களையும், மக்கள் விடுதலைப்போர்களிலும் தலையிட்டு அங்கு ஒரு இனப்படுகொலையை நடத்த உதவியதற்காக (பர்மா விடுதலைப் போராட்டம், ஈழ விடுதலைப் போராட்டம், நேபாள மக்கள் விடுதலைப் போராட்டம்)
 •  பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை போன்றவற்றையும், குடிநாயக வெளிகளுக்குட்பட்டு போராடும் உரிமை போன்ற உரிமைகளை வெறும் காகிதத்தில் மட்டும் உள்ளதற்காக (பினாயக் சென் போன்ற மனித உரிமையாளர்களை கைது செய்தது, ஆந்திராவில் பத்துக்கும் மேற்பட்ட மனித உரிமையாளர்களை கொலை செய்தது போன்ற…)

 

இந்தியர்கள் அனைவரும் என் உடன்பிறந்த சகோதர, சகோதரிகளாக நான் உண்மையாக கருதுவேயானால் அவர்களை இந்த நாடு தொடர்ந்து கொலை செய்து, கற்பழித்து, காணாமல் போகச் செய்து, வளர்ச்சித்திட்டங்கள் என்ற பெயரில் புறக்கணிக்குமானால், நான் இந்த சுதந்திர தினத்தை புறக்கணிப்பதை தவிர வேறு வழியில்லை, இது தான் ஒரு குடியின் முக்கியமான கடமையாக நான் கருதுகின்றேன்…

இவ்வாறு எனது கருத்தை வெளியிட்டதற்காக நான் கைது செய்யப்படலாம்..இது தான் சுதந்திரம்…..அரசுகளுக்கான சுதந்திரம்…மக்களுக்கானது அல்ல. மக்களுக்கான சுதந்திரம் மக்கள் புரட்சியின் மூலமே கிடைக்கும்…

Advertisements
  • surendra
  • ஓகஸ்ட் 15th, 2011

  very good article it is real i thank to you

  • நன்றி நண்பர்.சுரேந்திரா

  • samy sathi
  • ஓகஸ்ட் 15th, 2011

  unmaithan. Nobody hears,even Mannu mohana singham.

  • புரிதலுக்கு நன்றி நண்பர்.சாமி

  • மூக்கன்
  • ஓகஸ்ட் 15th, 2011

  நல்ல பதிவு! பாரத மாதா பக்தர்கள் பதில் சொல்வார்களா?

  • நன்றி நண்பர்.மூக்கன்…

   அவர்களால் பார்க்க முடியும் ஆனால் அவை குறிப்பிட்டவற்றை மட்டுமே பார்க்க கற்பிக்கப்பட்டுள்ளார்கள்.
   அவர்களால் கேட்க முடியும் ஆனால் அவை குறிப்பிட்டவற்றை மட்டுமே கேட்க‌ கற்பிக்கப்பட்டுள்ளார்கள்.
   அவர்களால் பேச முடியும் ஆனால் அவை குறிப்பிட்டவற்றை மட்டுமே பேச‌ கற்பிக்கப்பட்டுள்ளார்கள்.

   உண்மை இவ்வாறு இருக்கும் பொழுது அவர்கள் பதிலளிப்பார்கள் எண்ணுவதே தவறு என்பது என் கருத்து. வேண்டுமானால் கண்ணை மூடிக்கொண்டு நான் ஒரு தேச துரோகி என்று திட்டலாம்….

  • Robin
  • ஓகஸ்ட் 15th, 2011

  இங்கு குற்றங் குறைகள் உண்டு, மறுப்பதற்கில்லை. ஆனாலும் இந்த நாட்டில் புரட்சியாளர்கள் ஆட்சி செய்யும் நாடுகளைவிட அதிக சுதந்திரம் உண்டு. அதை எப்படி பயன்படுத்துவது என்பது மக்கள் கையில் தான் உள்ளது.

  • நண்பர்.ராபின்

   சுதந்திரத்தை பயன்படுத்தும் மக்களைத் தான் கொலை செய்கின்றீர்களே நண்பா….ஐரோம் சர்மிளாவின் பதினொரு ஆண்டுகால உண்ணாவிரத போராட்டம்….இன்றும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது…மக்கள் போராட்டங்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்து கொண்டு தான் இருக்கின்றது…….மக்கள் புரட்சியின் மூலம் மக்கள் அதிகாரங்களை மீளப்பெறுவர்…

   ஒரு உண்மையான குடிமகனின் பணி தன் நாடு செய்யும் தவறுகளை எல்லா நாளும் விமர்சனம் செய்து நல்வழிப்படுத்துவதே…விடுமுறை கிடையாது…

   புரட்சியாளர்கள் ஆட்சி செய்யும் நாடுகளை விட அதிக சுதந்திரம் உண்டு என்ற கூற்றை நான் மறுக்கின்றேன்…அப்படி என்ன அதிக சுதந்திரம் இந்த நாட்டில் உள்ளது என்று கூறுங்கள்……..வெறும் பகத் சிங், அம்பேத்கார் புத்தகங்களை படித்ததற்காக இந்தியாவில் மக்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் தெரியுமா? எல்லா கடைகளிலும் கிடைக்கும் 9வோல்ட் மின்கலத்தை வாங்கி தந்ததற்காக 21 ஆண்டுகளாக சிறைதண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை தெரியுமா? இசுலாமியர் என்பதற்காக அவர்களை கைது செய்து தீவிரவாத முத்திரை குத்தப்பட்டு கைது செய்யப்படுவது தெரியுமா?…..இது போல கேட்டுக்கொண்டே செல்லாம்…..

   நட்புடன்
   நற்றமிழன்.ப‌

  • தாமஸ் ரூபன்
  • ஓகஸ்ட் 15th, 2011

  வருடத்தில் 365 நாட்களும் திட்டிக்கொண்டே தான் இருக்கிறோம். அவர்களும் திருந்துவது மாதிரி தெரியவில்லை. .குறைந்தப்பட்சம் வருடத்தில் இரண்டு நாட்களாகவது (365-1-1)கொண்டாடுவோம்.

  • முதல் சுதந்திரத்தை புறக்கணித்தவர்கள் – தந்தை. பெரியார், மோகன் லால் கரம்சந்த் காந்தி….காரணம்.
   பெரியார்: சாதி வேறுபாடுக‌ள் நீங்காம‌ல் இந்நாடு விடுத‌லை பெற்றுள்ள‌தால் வ‌ழ‌மை போல‌வே ஆதிக்க‌ சாதிக‌ளே இங்கு அதிகார‌த்தை கைப்ப‌ற்றி தாழ்த்த‌ப்ப‌ட்ட……‌ ம‌க்க‌ளை ஒடுக்கும்.

   காந்தி: இது அல்ல‌ நான் க‌ன‌வு க‌ண்ட‌ இந்தியா, நான் க‌ன‌வு க‌ண்ட‌ இந்தியா ம‌த‌ வேறுபாடுக‌ள‌ற்று ம‌க்க‌ள‌னைவ‌ரும் இணைந்து வாழும் நாடு…..

   இவை இர‌ண்டும் இன்றும் பொருந்தும்…

   இவ‌ர்க‌ள் இருவ‌ரின் நீங்க‌ள் எவ‌ரை பின்ப‌ற்றுவ‌தாக‌ கூறினாலும் நீங்க‌ள் இந்திய‌ சுத‌ந்திர‌ தின‌த்தை புற‌க்க‌ணிக்க‌லாம்….

   காந்தி சுதந்திரத்திற்காக தானே பாடுபட்டார், அவரே அன்றைய நிலையை விமர்சித்து சுதந்திர தினத்தை புறக்கணிக்கும் போது நான் சாதாரணன்….

  • பரிமளா
  • ஓகஸ்ட் 15th, 2011

  தோழர் நற்றமிழன், உங்கள் கட்டுரை , இன்றைய இந்தியாவின் உண்மை நிலையை அப்படியே கண்முன் காட்டுகிறது. மிக்க நன்றி. இன்றைய தலைமுறையை சேர்ந்த, உலகமயமாக்கல் மூலம் கிடைத்த தகவல் தொழில்நுட்பம் போன்ற துறையில் அதிக சம்பளம் பெரும் ஒரே காரணத்தால் , ஏதோ அதிமேதாவி என்று தன்னை நினைத்து கொண்டு பேசுபவர்கள் சற்று நேரம் மனசாட்சியோடு நினைத்து பார்க்க வேண்டும். இன்று நீங்கள் எல்லா நிலையிலும் சந்தோசமாக இருப்பதாக நினைத்துகொண்டு, அரசின் பல்வேறு செயல்பாடுகளால் பாதிக்கப்பட்டு கொண்டு இருக்கும் பெரிய ஆதரவு ஒன்றும் இல்லாத அப்பாவி மக்களின் வேதனை குரலுக்கு செவி மடுக்காமல் போகலாம்.ஆனால் நீங்களும் தெருவுக்கு வந்து போராடும் நிலை ஒருநாள் வந்தே தீரும். இன்று இஸ்ரேலில் , நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் வீதியில் வந்து போராடும் நிலை ஏன் வந்தது? அவர்களும் இஸ்ரேலின் , பாலஸ்தீன ஆக்கிரமிப்பை ஜனநாயக முறையில் எதிர்க்காமல் போனதின் விளைவு.எகிப்தில், இனிமேலும் பொறுக்க முடியாமல், மன்னராட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்ததை போல,நீங்களும் ஒரு நாள் வீதிக்கு வருவீர்கள். சுதந்திரனத்தை கொண்டாடுவது முக்கியமில்லை , உண்மையிலேயே அணைத்து இந்தியர்களும் சுதந்திரமாக எல்லா வித அடிப்படை உரிமைகளோடும் வாழ்கிறார்களா என்பதே முக்கியம்.

  • இந்த புரிதல் அனைவருக்கும்(குறைந்த பட்சம் பகுதியளவு உள்ளவர்களுக்காவது) இருந்திருந்தால் நான் இக்கட்டுரையை எழுதும் அவசியமே இருந்திருக்காது. தெளிவான, ஆழமான பின்னூட்டத்திற்கு நன்றி தோழி.பரிமளா.

   மக்கள் புரட்சி வந்து, மக்களாட்சி நடைபெறும் நாள் வெகு தொலைவில் இல்லை…

   தோழமையுடன்
   நற்றமிழன்.ப‌

  • Robin
  • ஓகஸ்ட் 15th, 2011

  //புரட்சியாளர்கள் ஆட்சி செய்யும் நாடுகளை விட அதிக சுதந்திரம் உண்டு என்ற கூற்றை நான் மறுக்கின்றேன்…// புரட்சியாளர்களின் நாடுகளில் இம்மி அளவுக்குக் கூட சுதந்திரம் கிடையாது. ஆட்சியாளர்களை எதிர்ப்பவர்கள் சிறையிலடைக்கப்படுவார்கள் அல்லது ரகசியமாக தீர்த்துக் கட்டப்படுகிறார்கள்.

  //அப்படி என்ன அதிக சுதந்திரம் இந்த நாட்டில் உள்ளது என்று கூறுங்கள்…// உங்களை ஆட்சியாளர்களுக்கு எதிராக கருத்துகள் எழுத அனுமதித்திருப்பதுகூட சுதந்திரம் கொடுக்கப்பட்டதன் அடையாளம்தானே!

  Read

  Human Rights In China

  • China is not an country ruled by Revolutionists……China also ruled by the wealthy corporate peoples….they accepted the liberalism openly…then how come they will stand us communists or socialists…..

   If you want to compare the freedom of press, pls go to venezuela, where 24×7 the 99% Media will say Chavez is a sattan….this is freedom of press….

  • பரிமளா
  • ஓகஸ்ட் 15th, 2011

  @Robin,
  //இவ்வாறு எனது கருத்தை வெளியிட்டதற்காக நான் கைது செய்யப்படலாம்..இது தான் சுதந்திரம்//

  நீங்கள் சொல்லும் கருத்து சுதந்திரம் இருந்தால், நற்றமிழன் இந்த மாதிரி எழுத வேண்டிய அவசியம் இல்லை.

  • Robin
  • ஓகஸ்ட் 15th, 2011

  //China is not an country ruled by Revolutionists……China also ruled by the wealthy corporate peoples….they accepted the liberalism openly…then how come they will stand us communists or socialists…..// சீனா இப்போதும் புரட்சியாளர்களால்தான் ஆளப்படுகிறது. ஆனால் மார்க்கெட் பொருளாதாரத்திற்கு கொஞ்சம் மாறியிருக்கின்றனர். இதற்கு காரணம் பழைய கொள்கையை அமுல்படுத்தியதிலிருந்து கற்றுக்கொண்ட பாடம். சொல்லப்போனால் இப்போது கொஞ்சமாவது சுதந்திரம் இருக்கிறது, இதற்கு முன்பு கொடுங்கோல் ஆட்சிதான் நடந்தது.

  • புரட்சியாளர்கள் என்பதன் பொருள் என்ன?

  • Hi Robin,

   Pls see this link…. This is what you are going to get….Even we can’t speak openly about our issues in Internet too. they will say it is against security, soverginity, friend’s nation(Sri Lanka)……

   http://gadgets.ndtv.com/shownews.aspx?id=GADEN20110174427&Sec=NEWS

   India puts tight leash on Internet free speech

   Do you still say we are better ……..

   Also you haven’t spoken on Venezuela where Freedom of Press is their under the Revolutionary leaders…

   Natramizhan.p

 1. //இந்தியர்கள் அனைவரும் என் உடன்பிறந்த சகோதர, சகோதரிகளாக நான் உண்மையாக கருதுவேயானால் அவர்களை இந்த நாடு தொடர்ந்து கொலை செய்து, கற்பழித்து, காணாமல் போகச் செய்து, வளர்ச்சித்திட்டங்கள் என்ற பெயரில் புறக்கணிக்குமானால், நான் இந்த சுதந்திர தினத்தை புறக்கணிப்பதை தவிர வேறு வழியில்லை, இது தான் ஒரு குடியின் முக்கியமான கடமையாக நான் கருதுகின்றேன்…//

  சரியாகச் சொன்னீர்கள். இத்தேசத்தின் மக்கள்(அப்படிச் சொல்லிக்கொள்ளும்) அனைவரும் பாகுபாடில்லாமல் பேணப்படும் நாள் எந்நாளோ அன்றுதான் நாம் இந்த சுதந்திரத்தை கொண்டாட முடியும்.

  • உண்மை நண்பர்.விஜய் ஆம்ஸ்ட்ராங்

  • பாரதிவாசன், திருப்பூர்
  • ஓகஸ்ட் 15th, 2011

  உங்களின் கருத்துடன் நூறு விழுக்காடு நான் உடன்படுகிறேன்… மகிழ்ச்சியும் நன்றியும்.

  • நன்றி நண்பர்.பாரதிவாசன்

 2. உண்மையான விடுதலையை… அரசியல்வாதிகளின், கார்பொரேட் நிறுவனங்களின் உடைத்தே பெறவேண்டும்..
  நிதர்சனமான கட்டுரை…

  மேலும் தொடருங்கள்..

  • கண்டிப்பாக தொடருவேன் தோழர்.ஜெகதீசுவரன்

  • நித்யா மகேஷ்
  • ஓகஸ்ட் 15th, 2011

  நிதர்சனமான கட்டுரை…

  இந்தியன் என்ற உணர்வேதும் இல்லாத, ஒரு இத்தாலியப் பெண்மணியின் கட்டுப்பாட்டில் இயங்கும் மத்திய அரசு இயந்திரம், உங்களின் கட்டுரையின் (அல்லது) இந்த நாட்டின் நிலவரத்தைப் போல் அல்லாமால் வேறு எப்படி இருக்கும் என நினைக்கிறீர்கள் ?

  அறிந்ததும் (அல்லது / மற்றும்) புரிந்ததும் மட்டுமே இவை, இன்னமும் அறியாமலும் புரியாமலும் எவ்வளவு அட்டூழிழங்கள் நடக்கின்றனவோ ?

  உங்களைப்போன்றோரின் சமூக புரிதலும், இந்தக்கட்டுரைப் போல் நமது (நாட்டின்) நிலைமையை எடுத்துச் சொல்லும் விழிப்புணர்வு பகிர்தலும் தொடர்ந்தால், என்றேனும் ஒருநாள் விடிவு வருமென்றே நம்புகிறேன் – நிச்சயமாய்.

  நித்யா மகேஷ்

  • கண்டிப்பாக மக்கள் விழுப்புணர்ச்சி பெருவர். ம‌க்க‌ள் புர‌ட்சி எழும்…ந‌ண்ப‌ர். நித்யா ம‌கேஸ்

  • நித்யா மகேஷ்
  • ஓகஸ்ட் 15th, 2011

  நாங்கள் சுயம்பு அல்ல, கருணாநிதிகளும், சினிமாக்காரர்களும் மற்றும் கிரிக்கட் வீரர்(!!!)களும் எங்களை மூளைச் சலவை செய்துவைத்திருக்கிறார்கள், உங்களைப் போன்றோரின் அக்கறை கலந்த விழிப்புணர்வு, உணர்வு மற்றும் ஈடுபாடு எங்களுக்கும் வேண்டும், இன்னும் சரியான முறையில் எங்களை வழிநடத்த எங்களுக்கு தலைவர்கள் இல்லை (பெரியார், காமராஜர், அண்ணா போன்ற உண்மையான தலைவர்களை சொல்கிறேன்)

  மீண்டும் நன்றி

  • இங்கு யாரும் சுய‌ம்பு இல்லை தோழ‌ர். கால‌ம் அத‌ன் க‌ருவிக‌ளை வ‌டிவ‌மைத்துக் கொண்டே ப‌ய‌ணிக்கின்ற‌து. அதில் ஒரு சிறு துரும்பாக‌ நான்..நாளை நீங்க‌ள்…

   த‌லைவ‌னுக்காக‌ காத்திராம‌ல், ந‌ம் ப‌ணியை, ந‌ம்மால் முடிந்த‌ ப‌ணியை தொட‌ங்குவோம். ந‌ம்முள்ளிருந்தே த‌லைவ‌ன் ம‌ல‌ருவார்….

  • நித்யா மகேஷ்
  • ஓகஸ்ட் 15th, 2011

  உங்களின் வார்த்தைகளுக்கு மாற்று கருத்து இல்லை தோழ‌ர், உங்களின் எண்ணமே எனது நம்பிக்கை.

  என்னால் இயன்றவற்றை, என் கடமையை செய்கிறேன் என உறுதியளிக்கிறேன்.

  நன்றி

 3. அருமையான கட்டுரை தோழரே.

  சுதந்திர தினம் முடிந்த கையேடு சுதந்திரமும் காங்கிரஸ் காரனால் கையகபடுதப்பட்டது, மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் அரசு இந்திய அரசு என்பது போலியானது, இந்திய அரசு என்பது காங்கிரஸ் காரனால் ஊழல் வாதிகளுக்காக நடத்தப்படுவது தான் இந்திய அரசு!!!
  சுதந்திர திருநாட்டில் ஊழலுக்கெதிரான உண்ணாவிரதத்தை கூட நடத்த சுதந்திரம் இல்லை. மானங்கெட்ட சுதந்திரம் என்பது தான் இதுவோ!!

  • சுதந்திரம் என்ற சொல்லை கேவலப்படுத்த வேண்டாம் தோழர். வேண்டுமென்றால் போலி என்ற சொல்லை பயன்படுத்துங்கள்…

  • சொ. அருண்.வாசு
  • ஓகஸ்ட் 16th, 2011

  இந்நாட்டில்…

  உரிமை உண்டு(பேச்சு, கருத்து, எதிர்ப்பு)…
  தாழ்த்தப்பட்டோரின் வாழ்வுரிமை காக்க சட்டங்கள்/திட்டங்கள் உண்டு…
  பெண் உரிமையை பேணிக் காக்க பல்வேறு திட்டங்கள்/சட்டங்கள் உண்டு…
  அனைத்து விதமான சட்டப்பிரிவுகளும் உண்டு…
  விவசாயிகளின் நலன் காக்க சட்டங்கள்/திட்டங்கள் உண்டு..
  ஊழலை ஒழிக்க சட்டங்கள் உண்டு..
  உலகின் மிகப்பெரிய சனநாயக நாடு என்ற பெயர் உண்டு..

  ஆனால் இவை அனைத்தும் வேறும் எழுத்து வடிவத்தில் மட்டுமே உள்ளது.. செயல் வடிவத்திற்கு எடுத்துச் செல்ல எந்த ஆட்சியாளருக்கும் இங்கு அக்கறையில்லை – சொ. அருண்.வாசு

  • If They Dare to Do that then they will be sacked or Jailed with a false case

  • prem
  • ஓகஸ்ட் 16th, 2011

  tamil

  • என்ன சொல்ல வருகின்றீர்கள் நண்பர்.பிரேம்?

  • சீனிவாசன்
  • ஓகஸ்ட் 16th, 2011

  நம் உடம்பில் நோய் இருக்கிறது என்று நாம் ஒத்துகொண்டால்தான் நோய்க்குரிய மருத்துவம் செய்ய இயலும். இந்தியாவின் மீது எப்போதும் புனித பிம்பத்தை ஏற்றிவைப்பதன் மூலம் அதன் தவறுகளை ஒரு போதும் களைய முடியாது. சிறப்பான கட்டுரை தோழரே! வாழ்த்துக்கள்.

  • நன்றி தோழர்.சீனிவாசன்

 4. நல்ல பதிவு.
  நன்றி,
  கண்ணன்
  http://www.tamilcomedyworld.com

 5. நானும் சுதந்திர தினத்தை கொண்டாடுறதில்லை.

  காரணத்தை இவ்வளவு விலாவாரியா சொல்லத்தெரியாதுங்க நமக்கு..

  அதனால, சுதந்திரம் கிடைச்சதுக்குப் பிறகு கொண்டாடிக்கலாமுன்னு விட்டுட்டேன்.

  • தோழர்.வில்லவன், உங்களை எல்லாம் பார்த்து தான் நான் எழுதவே தொடங்கினேன். நீங்க இப்படி சொல்றது உங்களோட தன்னடக்கத்தை காட்டுகின்ற‌து.

   கண்டிப்பா சுதந்திரம் கிடைத்த பிறகு நாம் கொண்டாடுவோம்.

 6. இது யார் குற்றம் ?இவற்றினை எல்லம் நிறைவேற்ற / தீர்க்க வேண்டியது யார் கடமை?? அரசியல் வாதிகளா??
  அப்படியானால் அவர்களை நாங்கள் தானே தெரிவு செய்கிறோம்… எங்களின் குற்றமா?

  • ஒரு அரசு எப்படி இயங்க வேண்டும் என்று அந்த அரசை ஆட்டுவிப்பவர்கள் முடிவு செய்கின்றார்கள். அதன் படி அரசு ஆடுகின்றது. மக்களாட்சியில் மக்கள் அரசை ஆட்டுவிப்பார்கள். அரசு மக்கள் நலனுக்காக ஆடும்.

   நம் பணி உண்மையை மக்களிடம் சொல்வதும், மக்களை விழிப்புணர்வு படுத்துவதும் தான். (அரசியல்வாதிகளும், பெரும்பான்மை ஊடகங்களும் மக்களை மயக்க நிலையிலேயே வைத்திருக்கின்றனர். வைத்திருக்க விரும்புகின்றனர். அப்பொழுது தான் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை)

 7. nanbare,

  nam enda alavirkku neermaiaka irukiromo anda alavirku nammai nadubavargal sari aka irupparkal

  nam nattirkana nalladai seiyum poluthu ketta ninaivugalai sirithu thuram thalli vaithu vittu seyalpaduvom.

  nammai parthu 4 per marinal aduvaum nanmaiye..

  • ஒரு குடியின் ப‌ணியை நிறைவு செய்து விட்டே நான் என‌து நாட்டின் அர‌சை, அது செய்யும் த‌வ‌றுக‌ளை விம‌ர்ச‌ன‌ம் செய்கின்றேன் ந‌ண்ப‌ர்.அருண்

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Advertisements
%d bloggers like this: