அணுகழிவும், மன்மோகன் சிங்கும் ஒன்று தான், வேறல்ல….


                                                 

                 சில ஆண்டுகளுக்கு முன் மும்பையில் நான் பங்குகொண்ட ஒரு நிகழ்ச்சியில் அருந்ததி ராய் இக்கேள்வியை பார்வையாளர்களை நோக்கி கேட்டார் அல்லது ஒரு இந்தி செய்யுளிலிருந்து சில குறிப்புகளை கூறினார். மன்மோகன் கடந்த சில ஆண்டுகளாக செய்து வருவது என்ன? நஞ்சு நம் இரத்தத்தில் கலந்து பிறகு என்ன செய்யும்?

 எந்த சூழ்நிலையில் அவர் இக்கருத்தை கூறினார் என்பது ஞாபகமில்லை. ஆனால் கடந்த சில வாரங்களாக மன்மோகன் செய்யும் செயல்களுக்கு இக்கருத்து சரியான விளக்கமாகும். பெரும்பாலானோரின் பார்வைப்படி  “ஒரு பொம்மைப் பிரதமர்”, “மௌனீ”, ”பயந்தவர்”, ”உறுதியில்லாதவர்” என்று கருதப்படும் மன்மோகன் சிங் சில பிரச்சனையிலோ தனது வாழ்வையே பணயமாக வைக்கத்துணிந்துவிடுகின்றார். ஆனால் அந்த சில பிரச்சனைகளால் பாதிக்கப்படுபவர்கள் யார் என்பது தான் மிகக்கடினமான கேள்வி?

 கடந்த முறை இந்திய- வட-அமெரிக்க அணு ஒப்பந்தம் 2008ல் பாராளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்படமால் இருந்தால் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக தன் முதுகெலும்பு பலம் மொத்தத்தையும் திரட்டி ஒருகட்டுரை எழுதினார். பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளாத பொழுதிலும் அவர் அந்த ஒப்பந்தத்தை வலிய பாராளுமன்றத்தில் திணித்து ஒப்புக்கொள்ளவைத்தார் ( இந்திய மக்களின் தலையில் ஊடகங்களால் திணிக்கப்பட்டு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதாக கருதப்படும் ஒர் ஒப்பந்தம்). அணு ஒப்பந்தத்தின் மீது நடந்த நம்பிக்கையில்லா தீர்மானித்தின் மீது ஓட்டளிப்பதற்காக பணம் கொடுக்கப்பட்ட ஊழலைப் பற்றி நாமெல்லோரும் நன்கறிவோம்.

                       இந்த முறை மீண்டும் அதே அணு உலை ஆதரவிற்காக மன்மோகன் தனது நாவையும், முதுகெலும்பையும் மீண்டும் கண்டுபிடித்துள்ளார். ஆம், வடஅமெரிக்க நாளிதழான “Science”ற்கு அளித்த பேட்டியில் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக நடக்கும் போராட்டம் வட அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் உள்ள அரசு சாரா அமைப்புகள் கொடுக்கும் நிதியுதவியினால் நடக்கின்றது என்ற வித்தியாசமான(அமெரிக்காவுக்கு எதிரான)! குற்றச்சாட்டை வைத்துள்ளார்.   

                                           அரசு சாரா அமைப்புகள் தங்களுக்கு வெளிநாட்டிலிருந்து வரும் நிதியை அணு உலைக்கு எதிரான போராட்டத்திற்கு கொடுத்திருந்தால் அது தொடர்பாக வெளிநாட்டு நிதி ஒழுங்காற்று சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும். ஆனால் இது தான் இங்கு முக்கிய பிரச்சனையா?. மன்மோகன் சிங் வெளிநாட்டு நிதி என்ற குற்றச்சாட்டின் மூலம் மிகவும் குள்ளநரித்தனமாக செயல்பட்டு இங்கு முக்கியமாக விவாதிக்கப்பட வேண்டிய பிரச்சனைகளான கூடங்குளம் அணு உலைக்கான செலவு, பாதுகாப்பு, சுதந்திரமான அணு உலை ஒழுங்காற்று ஆணையம் இல்லாதது போன்றவற்றிலிருந்து பிரச்சனையே இல்லாத அரசு சாரா அமைப்புகளிலிருந்து வரும் வெளிநாட்டு நிதியின் பக்கம் திருப்பி விட்டுவிட்டார்.

                     கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் வெளிநாட்டு நிதியுதவியின் மூலம் நடக்கின்றதா? அல்லது அணு உலை ஆதரவு வழக்கறிஞர்களான – மன்மோகன்சிங், அரசா? யார் இங்கே உண்மையான வெளிநாட்டவர்கள்? அணு உலையை கட்டுவது இரசியர்கள். அணு உலைக்கு தேவையான எரிபொருளை(யுரேனியம்) கொடுக்கப்போவது வெளிநாட்டவர்கள், மன்மோகன் சிங் போட்ட ஒப்பந்தத்தின் மூலம் வட அமெரிக்கா கூட யுரேனியம் கொடுக்கக்கூடும். அணு உலை எதிர்ப்பு போராட்டத்தை விமர்சிக்கும் மன்மோகன் சிங் தான் சந்தேகமின்றி இந்திய வரலாற்றிலேயே அந்நிய நிதி- அந்நிய ஆதரவு பிரதமராவார்.

                           பிரதமர் ”வெளிநாட்டிலிருந்து நிதி” வாங்குகின்றார்கள் என்று யாரைக் குற்றம் சாட்டுகின்றார்? கூடங்குளம் அணு உலையை எதிர்க்கும் போராட்டக்காரர்களை. யார் இவர்கள்? மீனவர்கள், விவசாயிகள், சிறிய கடைகளை நடத்துபவர்கள், தலித் தொழிலாளர்கள், பீடி சுற்றும் பெண்கள், கூடங்குளம், இடிந்த கரை பகுதியைச் சேர்ந்த மக்கள். மீனவர்களும், தொழிலாளர்களும் தங்களால் இயன்ற சிறிய பங்களிப்பைக் கொண்டே இந்த எளிமையான அமைதிவழி போராட்டத்தை நடத்த இயலும். இப்போராட்டத்திற்கு அவர்களுக்கு பெரிய அளவிலான பணம் தேவையுமில்லை, ஏனென்றால் இது அவர்களது வாழ்வா, சாவா பற்றிய பிரச்சனை.

                 ஒரு விவாதத்திற்காக இந்த போராட்டத்தை நடத்த வெளிநாட்டு நிதி வந்துள்ளது என்று வைத்துக்கொண்டால் கூட அது இப்போராட்டத்தை சட்டத்திற்கெதிரான ஒன்றாக மாற்றிவிடுமா என்ன? அணு உலைக்கு ஆதரவாகவும், அரசுக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்வதற்காக ஊடகங்களுக்கு பல கோடி ரூபாய்களை அரசு தன்னிடம் உள்ள முழு கையிருப்பையும் கொண்டு ஒதுக்கிவருகின்றது. இதில் எங்கும் சட்டப்பிரச்சனை வருவதேயில்லை. அதே சமயம் பண பலமும், அரசியல் பலமும் கொண்ட நிறுவன அரசை(Corporate State) எதிர்த்து போராடுவதற்கு  இந்தியாவிலிருந்தோ, வெளிநாட்டிலிருந்தோ கிடைக்கும் நிதி ஆதரவை  ஏழை கூடங்குளம் கிராம மக்கள் பெறுவது மட்டும் தவறு என்பது எந்த வகையில் நியாயம்?.

                          மேற்கூறிய வாதங்களை நான் வைக்கின்ற பொழுதிலும், மன்மோகன் சிங் தான் கூறிய ”வெளிநாட்டு நிதி” என்ற குற்றச்சாட்டை உறுதி செய்யும் எந்த வித ஆதாரத்தையும் இதுவரை முன்வைக்கவேயில்லை. இப்பொழுது மன்மோகன் சிங்கின் வழியை பின்தொடர்ந்து ஜெய்தாப்பூரில் அணு உலை கட்டுவதை எதிர்த்து போராடுபவர்களுக்கு வெளிநாட்டு நிதிவருகின்றதென்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டை மகாராஷ்டிராவின் காங்கிரசு அரசும் வைத்துள்ளது.

                              யார் ஒழுக்கமானவர்கள் என்று தான் மட்டுமே கூறவேண்டும் என்ற அரசின் எண்ணம், பலத்தை தான் மட்டுமே உபயோகப்படுத்த முடியும் என்ற எண்ணத்தைப் போன்றதே. “தேசிய நலன்” என்ற வாதத்தின் மூலமாக மேற்கூறிய இரண்டு அதிகாரங்களையும் அரசு மட்டுமே பிரயோகித்துவருகின்றது. அதே போல ”தேசபக்தி” என்பது எந்த ஒரு பகுத்தறிவுமின்றி உணர்ச்சிபூர்வமாக அரசு சொல்வதற்கெல்லாம் தலையாட்டுவதில் சென்று முடிகின்றது. வன்முறையை பிரயோகிக்கும் போராட்டங்கள் எல்லாம் மாவோயிசம், தீவிரவாதம், பிரிவினைவாதம் என்ற காரணத்தினால் இந்திய அரசு செய்யும் குற்றங்கள் எல்லாம் எந்தவித கேள்வியுமின்றி தள்ளுபடி செய்யப்படுகின்றன. அது போலவே பெரிய நிறுவனங்களை பயமுறுத்தும் அமைதிவழி போராட்டங்கள் எல்லாம் வெளிநாட்டு நிதி என்ற குற்றச்சாட்டின் கீழ் இந்தியாவிற்கு எதிரானவை என்பதால் இவையும் எவ்வித கேள்வியும் இன்றி தள்ளுபடி செய்யப்படுகின்றன. தேசபக்தி என்ற வாதத்திற்கு முன்னால் வாதாட யாருக்கு தைரியமிருக்கின்றது?

                                     ஆனால் இங்கு தேசபக்தி என்பது மிகவும் வித்தியாசமான, தெளிவற்ற நிலையிலேயே உள்ளது.. இந்த தேசபக்தி  வெளிநாட்டு பணம் அல்லது அந்நிய நேரடி முதலீடு இல்லாமல் இந்தியாவால் வளரமுடியாது என்று நம்பி, மான்சாண்டோ போன்ற நிறுவனங்கள் மூலமாக அந்நிய முதலீட்டை வரவேற்கின்றது ஆனால் அதே மான்சாண்டோவை எதிர்த்து போராட அரசு அல்லாத அமைப்புகள் அதே வெளிநாடுகளிலிருந்து நிதி ஆதரவு கொடுத்தால் தேடுதல் வேட்டையையும் நடத்துகின்றது.

                   மன்மோகன் சிங்கை “தூய்மையானவராக” காட்டுவதற்கு இங்கே நிறைய செயல்கள் நடக்கின்றன. ஆனால் உண்மையில் மன்மோகன் சிங் ஆ.ராசாவிடமிருந்தோ, மது கோடாவிடமிருந்தோ வேறுபட்டவரே அல்ல. ஒரே வித்தியாசம் என்னவென்றால் இவர் செய்யும் ஊழலுக்கு இவர் பணம் வாங்குவதில்லை. மன்மோகன் செய்யும் ஊழல் என்பது தன்னுடைய அரசியல் முதலாளிக்காக வளைந்துகொடுத்து  அரசு செயல்படும் முறையையே மாற்றுவதாகும். பேராசையினாலோ, அதிகார ஆசையினாலோ ஒருவர் செய்யும் ஊழலைவிட இந்த வகையான ஊழல் மிகக்கொடியதும், மன்னிக்கமுடியாததுமாகும்.

                              மன்மோகன் பொருளாதார அமைச்சராக அவதாரம் எடுத்த பொழுது கொண்டு வந்த தாராளமயமாக்கல் இருபதே ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய மக்களாட்சியை, ஒரு வாழைப்பழ குடியரசாக மாற்றிவிட்டது. இங்கே சில குண்டர்கள் கருத்துரிமையை கொலை செய்துவிட்டு மிக எளிதாக தப்பிக்கமுடியும், ஆனால் அரசு சொல்வதை மறுத்து அமைதியான முறையில் போராட்டம் செய்யவோ, கருத்து வெளியிடவதற்கோ இங்கும் கொஞ்சம் கூட இடமில்லை. இந்திய அரசும், அந்நிய முதலீடும், இந்தியாவினுள்ளே இருக்கும் மன்மோகன் சிங்கின் உதவியும் இந்த வேலையை கட்சிதமாக செய்து முடித்துவிட்டன. உள்ளே கலந்து விட்ட நஞ்சும் அதன் வேலையை பார்க்கத்தொடங்கிவிட்டது.

மூலப்பதிவு: http://www.dnaindia.com/analysis/column_how-is-manmohan-singh-different-from-nuclear-waste_1657714

மூலப்பதிவை எழுதியவர் – sampath@dnaindia.net

மொழியாக்கம் – நற்றமிழன்.ப

Advertisements
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Advertisements
%d bloggers like this: