இடிந்தகரை மக்களுக்கு ஆதரவாக எழும் இந்தியா ……


கூடங்குளத்தில் அடக்குமுறையை தமிழக அரசு செலுத்த தொடங்கிய அன்றிலிருந்து இந்தியாவின் பல பகுதிகளிலும் இடிந்தகரை மக்களுக்கு ஆதரவாகவும் கூடங்குளம் அணு உலையை மூடக்கோரியும் பல போராட்டங்களை தொடர்ந்து நடத்திவருகின்றன. அப்போராட்டங்களைப் பற்றிய ஒரு சிறு குறிப்பே இக்கட்டுரை….

கேரளாவில் உள்ள திருச்சூர், கோழிக்கோடு, எர்ணாகுளம், கண்ணூர், பையனூர், திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளில் கூடங்குளம் அணு உலையை மூடக்கோரியும், இடிந்தகரை மக்களுக்கு ஆதரவாகவும் பல போராட்டங்களை கேரளாவில் உள்ள மனித உரிமை அமைப்புகளும், மற்ற இயக்கங்களும் நடத்தின. இதில் திருச்சூரில் நடந்த போராட்டத்தில் அங்கு தங்கியிருந்த மனித உரிமைப் போராளியும், மருத்துருவமான திரு.பினாயக் சென் அவர்களும் பங்கு கொண்டார்(1).

மகாராசுட்ராவில் உள்ள பூனே நகரில் உள்ள லோகயாத் என்ற இயக்கம் முதலில் இருந்தே பல போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இவர்கள் நடத்திய கருத்தரங்கும், முல்லைத்தீவு சாகா ஆவணப்படம் திரையிடலும் நினைவு கூறத்தக்கது.   ஜெய்தாப்பூர் அணு உலைக்கு எதிரான தொடர்ச்சியான போராட்டங்களை இவர்கள் முன்னெடுத்து நடத்தி வருகின்றார்கள். கடந்த வெள்ளிக்கிழமை 23 மார்ச் அன்று இவர்கள் புனேவில் கூடங்குளம் அணு உலையை மூடக்கோரியும், இடிந்தகரையில் போராடும் மக்களுக்கு ஆதரவாகவும் ஒரு நாள் அடையாளப் பட்டினி போராட்டத்தை நடத்தினர். இதே நாளில் தில்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தேசிய மக்கள் இயக்க கூட்டமைப்பும் உண்ணாவிரதம் நடத்தியது. (2)

 

அதுபோலவே கர்நாடக மாநிலத்தின் பெங்களூரில் கடந்த செவ்வாய்கிழமை தொடங்கிய போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றது. கடந்த செவ்வாய் கிழமையன்று(மார்ச் 20) கர்நாடகாவில் உள்ள மனித உரிமை அமைப்புகளும், இயக்கங்களும் இடிந்தகரை மக்களுக்கு ஆதரவாகவும், கூடங்குளம் அணு உலையை மூடக்கோரியும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர்(3). இதனையடுத்து மார்ச் 24-அன்று பன்னப்பா பூங்காவில் ஒரு நாள் அடையாளப் பட்டினி போராட்டமும், மக்கள் ஆதரவு கூட்டமைப்பின் பத்திரிகையாளர் சந்திப்பும் நடைபெற்றது. இந்த பத்திரைகையாளர் சந்திப்பில் இக்கூட்டமைப்பில் உள்ள மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL), மக்கள் சனநாயக முன்னணி(PDF), புதிய சோசலிச மாற்று (New Socalist Alternative) போன்ற இயக்கங்களும், மேலும் சில மனித உரிமை அமைப்புகளும் கலந்து கொண்டு கூடங்குளத்தின் இன்றைய நிலையையும், இடிந்தகரை மக்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறைகளையும் கூறினர், இது போன்ற செய்திகளை ஊடகங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும் என்றும் கூறினர்.

      மார்ச் 25- அன்று மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL), கர்நாடக தமிழ்  மக்கள் இயக்கம், சேவ் தமிழ்சு இயக்கம், பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் பங்கேற்ற ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் பெங்களூரில் உள்ள டவுன் ஹால் முன்பு நடைபெற்றது. இதில் மைசூரில் இருந்து மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் கர்நாடக மாநில செயலாளரான திரு.இலட்சுமி நாராயணன் அவர்களும், மேலும் சில நண்பர்களும் வந்து கலந்து கொண்டனர்.  இன்றைய கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகள். (4,5)

1)   கூடங்குளம் அணு உலையை மூடு, கூடங்குளம் அணு உலையை திறக்கக்கோரி தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்தை திரும்பப்பெறு.

2)   இடிந்தகரை, கூடங்குளம் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான காவல்துறை, அதிரடிப் படை, துணை இராணுவத்தினரை வெளியேற்று.

3)   மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான குடிநீர், பால், உணவுப் பொருட்களும், மற்ற பொருட்களும் இடிந்தகரை அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் செல்வதற்கான தடையை நீக்கி அனுமதி வழங்கு.

4)   மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பொய் வழக்குகளை இரத்து செய்து, அவர்களை விடுதலை செய்.

5)   இராதாபுரம் தாலுக்காவில் உள்ள 144 தடையுத்தரவை திருமப்பெறு.

 என்ற கோரிக்கைகளை மையாகக் கொண்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

 

கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவு தெரிவித்ததற்காக இந்தூர் நகரில் உள்ள ஐ.ஐ.எம் கல்லூரி மாணவர்கள் அப்துல் கலாமிற்கு கருப்பு கொடி காட்டியுள்ளார்கள். (6) தில்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில்  மஹசே விருது பெற்ற சந்தீப் பாண்டே தலைமையில் ஏழு நாள் தொடர் உண்ணாவிரத்ததை இன்று(மார்ச் 26) தொடங்குகிறார்கள் . பிரபல ஆவணப்பட இயக்குனர். ஆனந்த் பட்வர்த்தன் தலைமையில் கண்டன போராட்டம் தாதர் தொடர்வண்டி நிலையம் அருகில் இன்று மாலை(மார்ச் 26) 5 மணிக்கு நடைபெற இருக்கின்றது.

ஊடகங்களிலும், இணையதளங்களிலும் பதிவானவை மட்டுமே இங்கு குறிப்பிடப்பட்டுள்ள போராட்டங்கள், இவற்றில் எல்லாம் பதிவாகாமல் நாள்தோறும் பல போராட்டங்கள் பல இடங்களில் நடைபெற்றுவருகின்றன. இடிந்தகரை மக்களுக்கு தோள் கொடுப்போம், மக்கள் போராட்டத்தை வென்றெடுப்போம்.

ஒரு ஊடகத்திற்கு இக்கட்டுரையை அனுப்பியிருந்தால் இதை வெளியிட தாமதமாகிவிட்டது.

தரவுகள்:

1)   http://www.binayaksen.net/2012/03/dr-binayak-sen-flags-off-antinuclear-march/

2)   http://www.newsalai.com/2012/03/blog-post_3705.html

3)   http://www.newzfirst.com/web/guest/full-story/-/asset_publisher/Qd8l/content/citizens-lit-candles-in- solidarity-with-koodankulam-people?redirect=/web/guest/india

4)      http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/article3224379.ece

5)      http://www.deccanherald.com/content/237178/protest-against-kudankulam-plant.html

6)      http://www.newsalai.com/2012/03/blog-post_5530.html

Advertisements
 1. அணுஉலைக்கு எதிரான மக்கள் போராட்டம் வெல்லட்டும். இயற்கைகெதிரான அணுஉலைகளை உலகெங்கும் இழுத்துமூடுவோம். இயற்கையோடு இயைந்து வாழ்வோம். பகிர்விற்கு நன்றி.

  • கண்டிப்பாக மக்கள் போராட்டங்கள் வெல்லும் நண்பா

  • M.Natrayan
  • ஏப்ரல் 5th, 2012

  அணு உலை என்பது நமது நாட்டிற்கு மிகவும் முக்கியத்துவமானது. மின்சாரம் இல்லையேல் எதுவும் இல்லை. இந்திய அறிவுசார் அறிவியலாளர்கள் கூறுவதை கேட்டு நடந்து கொள்ளுங்கள்.மக்கள் போராட்டம் கண்டிப்பாக வெல்லும் அதாவது அணு உலைக்கு ஆதரவாக. ஒன்றுமே தெரியாத தற்குறிக் கூட்டங்கள் எல்லாம் மின்சாரம் வேண்டாம் என்கிறது. இதனை ஒதுக்கிவீடவேண்டும்.

  • இந்தியாவின் மின்சாரப்பொய்கள் என்ற கட்டுரையை முழுமையாக படித்துவிட்டு விவாதத்திற்கு வந்தால் உங்கள‌து கேள்விகளுக்கு பதில் சொல்ல அணியமாகி உள்ளேன். அதைவிடுத்து பொதுத்தன்மையில் பேசுவது தவறு…

    • M.Natrayan
    • ஏப்ரல் 9th, 2012

    அனல் மின்சாரத்தால் கரியமிலவாயு மற்றும் பிற வாயுக்கள் சுற்றுப்புறத்தை கெடுக்கிறது. நீர் மின்சாரம் மிகவும் குறைவாகவே உள்ளது. காற்றாலைகளை நம்பமுடியவில்லை. இதெற்கெல்லாம் ஒரே தீர்வு அணு மின்சாரம்தான். தமிழ் நாட்டிற்கு தற்போது 13000 மெகாவாட் மின்சாரம் தேவை. அதற்கு உங்களால் மாற்றுவழி கூறமுடியுமா? முடியாது. மக்களை தூண்டிவிட்டு குளிர்காய நினைக்கிறீர்கள்.

   • அனல் மின்சாரத்தால் கரியமில வாயு பிரச்சனை என்றால் ஏன் அரசு 40,000 மெகாவாட் அளிவில் புதிய மிந்திட்டங்களை அனல் மின்சாரத்தில் தொடங்கி நடத்தி வருகின்றது ?
    சூரிய ஒளியின் மூலம் நமக்கு தேவையான மின்சாரத்தை எடுத்துக்கொள்ளலாம். ஆண்டு முழுக்க சூரிய ஒளி கிடைக்கும் ஒரு நாடு சூரிய ஒளியைப் பயன்படுத்தாது ஆச்சர்யமளிக்கின்றது….

  • M.Natrayan
  • ஏப்ரல் 5th, 2012

  20 லட்சம் பேர் இருக்கும் திருநெல்வேலியில் வெறும் 20 மற்றும் 30 பேர் கலை வைத்து புகைப்படம் எடுத்து பெரிய வெற்றியைப் போல் சித்தரிப்பது வெறும் வெளி வேஷம். மீதி மக்கள் எல்லாம் அணு சக்தியை ஆதரிக்கின்றனர். வாழ்க மக்கள் வாழ்க்கை!!!!

  • வெறும் இருபது பேரை கைது செய்வதற்கு எதற்கு 6,000த்திற்கும் அதிகமான காவல்துறை, கமாண்டோ படையினர், துணை இராணுவப்படையினர் ?????

    • M.Natrayan
    • ஏப்ரல் 8th, 2012

    மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருப்பவர்கள் ஒருவேலை தீவிர செயல்களில் ஈடுபடுபவர்களாக இருக்கலாம். அதனை ஒடுக்க ஒரு குறிப்பிட்ட அளவு சேனை தேவைப்படலாம். மக்களை துன்புறுத்த தெருவுக்குள் கண்டபடி ஓடி ஒரு அச்சத்தயுருவாக்க நினைத்திருக்கலாம். ஆகையால் அரசாங்கம் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லதுதான். வேடிக்கை பார்க்க வருபபர்களை பாடுகாக்கவேண்டியது அரசின் கடமை. இந்த இரண்டு கோஷ்ட்டி களுக்குள் திடீர் என்று சண்டை வந்துவிட்டால் ஜமாளிப்பதற்கே இந்த ஏற்பாடுகள்

   • என்ன ஒரு சொதப்பலான பதில். என்னால் சத்தியமாக புரிந்துகொள்ள முடியவில்லை.

 2. ஆமாம்..ஆமாம்…இந்தியா முழுக்க திரண்டு எழுந்திடுச்சு…ஆமாம் அமெரிகா,ஜெர்மனி ,ஐரோப்பா கிட்ட எங்களுக்கு கொடுக்கணும்ன்னு சொல்லி வங்கின பணத்த நீங்களாச்சும் உதயகுமார் குரூப்புகிட்டேர்ந்து வாங்கி கொடுங்க சாமி

  • சிரிப்பு சிங்காரமண்ணே, வந்து சேர வேண்டிய தொகை எதுவும் அவங்களுக்கு வரலையாம், ஏற்கனவே நட்டத்துல தான் நடந்துட்டு இருக்காம் போராட்டம், அதனால் அரசுகிட்ட இருந்தும், அணு மின் கழகத்திடம் இருந்தும் உங்களுக்கு வரும் காசில் ஒரு பகுதியை எங்களுக்கும் அனுப்புங்க…

   • எல்லாம் பணத்தில்தான் இருக்கிறது. எனக்கும் கொஞ்சம் அனுப்பிவையுங்கள்.உதயகுமாரை உசிப்பிவிட்டு அவர் அவமானப்பட்டு என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டு இருக்கிறார்.பாவம்!!!

   • M.Natrayan
   • மே 11th, 2012

   ஆம் நான் கைக்கூலிதான்!! இந்திய மக்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு உதவ கைக்கூலியாக செயல்படுகிறேன். மின்சாரம் இல்லாமல் மக்கள் படும் துயரம் கண்டு வேதனைப் படுகிறேன். ஒருபக்கம் கல்பாக்கம் அனுமின்சாரத்தை உபயோகித்துக்கொண்டு மறுபக்கம் மின்சாரத்திகு எதிர்ப்பு! காற்றலை மின் உற்பத்தியால் விவசாய நிலம் பாழ் படுகிறது! அனல் மின்சாரத்தால் சுற்றுப்புறம் மாசு அடைகிறது. மின்சாசரம் இல்லாத வாழ்க்கையை நினித்துக்கூட பார்க்க முடியவில்லை. கற்காலத்தில் போல் “விளகென்னையையும்” வேபென்னையையும்” பயன்படுத்தி விளக்கு எரிக்க முடியாது.

 3. நட்ராயன், உதயகுமார் அவமானப்பட்டாரா? எப்பொழுது? எனக்கு தெரிந்து வெளிநாட்டு பணம் வருகின்றது என்று முதலில் கூறி, பின்னர் வழக்கு தொடுக்கும் பொழுது நான் அப்படி கூறவில்லை என்று நாராயணசாமி அவமானப்பட்டார். பின்னர் அதே மாதிரி எந்த ஆதாரமும் இல்லாமல் மானமிகு. மன்மோகன் சிங் அவமானப்பட்டார்.

  அப்படி உங்களிடம் வெளிநாட்டில் இருந்து பணம் வருகின்ரது எனத்தெரிந்தால் வழக்கு போட வேன்டியது தானே, ஆறு மாதமாக என்ன செய்து கொண்டு இருக்கின்றீர்கள் நண்பா….

   • M.Natrayan
   • ஏப்ரல் 17th, 2012

   நாராயணசாமி அவர்கள் முதலில் கூறியதுதான் உண்மை. ஆனால் கிருத்துவ பாதிரிகள் மற்றும் வெளிநாட்டு கிருத்துவ அமைப்பிறரின் சிபாரிசால் அவர் மறுக்க வேண்டி வந்துவிட்டது. அதுவும் அணுமின்சக்தி உற்பத்தி துடங்க உள்ள இந்த நேரத்தில்தான். எல்லாம் “ஒட்டு வங்கி அரசியளுக்குத்தான்”

   • சரி அரசு ஏன் சும்மா இருக்குது? இதுக்கு ஏதாவது ஓட்டு வங்கி அரசியல் கதை சொல்லுங்களேன்….

    • M.Natrayan
    • ஏப்ரல் 18th, 2012

    அணுமின்சாரம் வேண்டாம் என்று கூறும் அறிவியலாளர்கள் அடுத்து என்ன முறையில் மின்சாரம் தயாரிக்கலாம் என்று சொல்லவேண்டும். காற்று, தண்ணீர்,சோலார் போன்றவற்றால் மின்சானம் தயாரிப்பது என்பது யானைப் பசிக்கு சோளப்பொறி போன்றாகும். இல்லாவிட்டால் பழையபடி கர்காலத்திற்கே செள்ளவேண்டியதுதான். சீமேண்ணை, வேப்பண்ணை விள்ககுதான் பயன்படுத்தவேண்டும். இந்த யுகத்தில் இது சாத்தியமில்லை.மின்சாரம் இல்லாத வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஏதோ வலைத்தளம் ஒன்று நடத்தி மக்களை திசை திருப்ப முயற்சிக்கிறீர்கள்!!!!!!!!!!

 4. கொசுவை கொல்வதற்கு அதன் மீது அணு குண்டு போடுவதைப் போல, நீரை, நீராவியாக்குவதற்கு அணுக்கதிர்வீச்சை பயன்படுத்துகின்றீர்கள் நீங்கள்….
  காற்றாலை மூலம் 60,000 மெகாவாட் தயாரிக்கலாம் என்று இந்திய அரசே தெரிவித்துள்ளது. மேலும் 30 ஆண்டுகளுக்கு முன் தார் பாலைவனத்தில் 30 சதுர கிலோமீட்டர் அளவில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை தொடங்கி அதை கிடப்பிலேயே போட்டு வைத்திருப்பதும் இந்திய அரசு தான், அந்த திட்டத்தின் மூலம் மட்டும் 60,000 மெகாவாட் தயாரிக்கலாம்(600 கூடங்குளத்திற்கு சமம்)…. சும்மா இங்க வந்து கதைவிட்டுட்டு திரியாதிங்கன்னா…

   • M.Natrayan
   • ஏப்ரல் 22nd, 2012

   தெல்லாம் மக்களை திசைதிருப்பும் செயல். இகாற்றாலை மூலம் நீங்கள் சொல்லுவதுபோல் அந்த அளவு மின்சாரம் தயாரிக்க முடியாது. இது மக்களை ஏமாற்றும் வேலைதவிர வேறொன்றும் இல்லை. தமிழ் நாட்டைப் பொறுத்த அளவில் ஆண்டில் சில மாதங்கள் மட்டுமே காற்றடிக்கும். மற்ற மாதங்கள் எல்லாம் வறச்சிதான். இப்போது கூட கோவை போன்ற மாவட்டங்களில் காற்றாலை மின் உற்பத்தி நடந்து கொண்டுதான் உள்ளது. ஆனால் அது நமது தேவையை பூர்த்தி செய்யாது. இன்னும் எத்தனை காற்றாலைகள் வைத்தாலும் மின் உற்பத்தி செய்ய இயலாது. அரசாங்கம் என்பது மக்களுக்கானதுதான். அறிவியலாளர்களும் மின் உற்பத்தி சம்பந்தமாக அனைத்தும் அறிந்தவர்களே. ஆனால் ஏன் இதற்க்கு முக்கியத்துவம் கொடுக்காமல் உள்ளனர்? இதனால் பயன் இல்லை என்று தெரியும். உங்களைப் போன்ற ஏதேனும் எழுதி பயங்கர வாதத்தையும் போராட்டத்தையும் தூண்டிவிட நினைக்கிறீர்கள். இதைத்தான் நீங்கள் இப்போது செய்துகொண்டு உள்ளீர்கள். தற்போது குஜராத் மாநிலத்தில் சூரிய ஒளிமூலம் மின்சாரம் தயாரிக்க உள்ளனர். அவ்வளவு பெரிய அளவிற்கு மின் தட்டுகள் போட்டும் 600 மேகவாட்தான் தாயாரிக்க முடிகிறது. எத்தனைநாடுகளில் அல்லது மாநிலங்களில் நீங்கள் சொல்லும் முறைப்படி மின்சாரம் உற்பத்திசெய்து தன்னிறைவு பெற்றுள்ளார்கள்? அப்படி எதுவும் இல்லை.

  • herick
  • ஏப்ரல் 27th, 2012

  natrayan neengal kaikkooli polavea seyalbadukireer

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Advertisements
%d bloggers like this: