Archive for the ‘ ஈழ‌ம் ’ Category

விளையாட்டு !!!!!!


எனது தாயை கற்பழிக்கின்றான்
சிங்களவன் என் கண்முன்னே
முரளீதரன் பந்துவீச்சில்
இந்தியனொருவன் தனது ஆட்டத்தை
பறிகொடுத்து வெளியேறுகின்றான்
வருந்துகின்றான் நண்பன்(?) இந்தியனுக்காக‌
மன்னியும் நண்பனை சாக்கடையிலிருந்து
தாய்ப்பால் பருகியவனவன்
இந்நிகழ்ச்சியை இணைந்து வழங்கியவர்கள்
அம்பானியும் , அகில உலகமும்
பார்வையாளனாக மட்டும்
இங்கே மாண்டுபோன‌ மாந்த நேயமும் ,,,,,,

 

http://video.yahoo.com/watch/5687575/14904457

Advertisements

காத்திருக்கின்றேன் ரொட்டித்துண்டுக்காக …………


 

IDP_Camp_TamilNational_02

காத்திருக்கின்றேன் ரொட்டித்துண்டுக்காக

நானிங்கு வந்து
நகர்ந்தே விட்டது
ஒரிரு திங்களும்

காத்திருக்கின்றேன் ரொட்டித்துண்டுக்காக

வடக்கின் வசந்தமாம்(?)
இராஜபக்சே பிளிறுகிறது

காத்திருக்கின்றேன் ரொட்டித்துண்டுக்காக

புலிகளால் மட்டும் தான்
இவ்வளவு பிரச்சனையாம்
மடை மாற்றுகிறார்கள் புத்திசாலிகள்(?)

காத்திருக்கின்றேன் ரொட்டித்துண்டுக்காக

இங்கே இருப்பது இன்னல் முகாம்
இடப்பெயர்வு முகாமல்ல
கதைக்கின்றனர் மாந்தநேயர்கள்

காத்திருக்கின்றேன் ரொட்டித்துண்டுக்காக

இங்கே நிலைமையை சீர்(ழ்)படுத்த
இந்தியாவும் கொடுத்தது
அறுநூறு கோடியும்

காத்திருக்கின்றேன் ரொட்டித்துண்டுக்காக

சோமாலியா தேவை இல்லை
இங்கே வந்து எங்களைப் பாருங்கள்

காத்திருக்கின்றேன் ரொட்டித்துண்டுக்காக

மறைந்தே போகின்றனர்
ஆயிரமாயிரம் பேர்களாக மண்ணுக்குள்ளே
இங்கே எங்கள் கண்கள் முன்னே

காத்திருக்கின்றேன் ரொட்டித்துண்டுக்காக

sri-lanka-state-terror-terrorist-genocide-idp-interment-camps1

என் தாய் எங்கே?
தெரியாது
என் தந்தை எங்கே ?
தெரியாது
நான் மட்டும்

காத்திருக்கின்றேன் ரொட்டித்துண்டுக்காக

idp

 

இதோ மழைக்காலம் வந்தே விட்டது
மறைந்தே நாங்களும் போய்விடுவோமோ ?
மறக்காமல் கொணருங்கள்
நீங்கள் கதைக்கும் மனித உரிமையும்
எனக்கான ரொட்டிதுண்டையும்
இங்கே நானும்

காத்திருக்கின்றேன் ரொட்டித்துண்டுக்காக ………………………….

ஊமை


உண்மை அறியும் குழுவொன்று
எங்களூர்(ஈழம்) வந்தபின் சென்றது
ஊமையாக …….

genocide

விந்தை


புதை குழியின் மேல்
பாடசாலை
என் தாய் தந்தையின்
புதை குழியின் மேல்
பாடசாலை
கற்ப்பிக்கின்றான் சிங்களவனும்
அன்பு செய்யென
எனைப் பார்த்தே
அன்பு செய்யென
எனைப் பார்த்தே

0505srilanka-420x0

அமைதி


 

அமைதிக்காக (?) செய்த
யுத்தங்கள்
இதோ கிடைத்தே விட்டது
மயான அமைதி .

A6ICA13Q0M9CACNAXIDCAMZX43ZCAK0O5GPCAS685ODCA1396JJCA5U1SAUCA3I30D5CAAW2AIRCAUMZ8SXCA6TUL90CA23V1EKCA68O013CAQ0B20ACA43DSFACA2JUF4BCAO1UBO6CALTTOGCCA78D0HR

எங்கே ?…..


தேர்வேழுதச் சொன்னான்
எனை ஆமிக்காரனும்
எழுதி வந்தேன் நானும்
அவனுக்கான பதிலை அல்ல
எனக்கான கேள்வியை
அழுகிய பிணங்களிநூடே
ஆண்டு முழுக்க தேடியும்
கிடைக்காத என் அம்மாவின்
பிணம் எங்கே ?.

……. Times of India  நாளிதழின் செய்தி ஒன்று என்னை இந்த கவிதையை எழுத தூண்டியது . அந்த செய்தி ” முன்பு துப்பாக்கி பிடித்த சிறுவர்கள் , இப்பொழுது எழுதுகோல் பிடித்து தேர்வு எழுதுகிறார்கள் . அப்படி அவர்கள் தேர்வு எழுதினால் , அந்த பதில் தாள் இவ்வாறு தான் இருக்கும் .

%d bloggers like this: