Archive for the ‘ ச‌மூக‌ம் ’ Category

தோழர்.ஆசாத் படுகொலையும், இந்திய அரசின் அமைதி பேச்சுவார்த்தையின் கோரமுகமும் ! – மொழியாக்கம்‍- ப.நற்றமிழன்.


சுவாமி.அக்னிவேஷ் கடந்த மே,2010லிருந்து இந்திய அரசிற்கும், மாவோயிசுட்டுகளுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடத்தி வருபவர்.இது வரை இரண்டு தரப்புகளும் இரண்டு கடிதங்களை இவர் மூலம் அனுப்பி உள்ளனர். சூன் 26 அன்று இவர் அரசு தரப்பிலிருந்து வந்த மூன்றாவது கடிதத்தை மாவோயிசுட்டுகளின் தலைமைக்குழுவில் உள்ள சேருகுரி இராஜ்குமார் என்ற ஆசாத்திடம் கொடுத்து விட்டு, அமைதி பேச்சுவார்த்தை ஆரம்பிப்பதற்கான பதிலை எதிர்பார்த்து காத்திருந்தார். அக்னிவேஷ் கூறுகையில் “நான் அவர்களிடம் (மாவோயிசுட்டுகளிடம்) இருந்து அமைதி பேச்சு வார்த்தை துவங்குவதற்கான தேதியை எதிர்பார்த்து காத்திருந்தேன்”. ஆனால் அவருக்கு வந்த செய்தியோ வேறு. மாவோயிசுட்டு தரப்பிலிருந்து பேச்சுவார்த்தை நடத்திவரும் ஆசாத் ஆந்திராவின் காட்டுப் பகுதியில் காவல் துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதே அந்த செய்தி.

 “ஆசாத் அரசின் மூன்றாவது கடித்தை பெற்றதனால் தனது மெய்பாதுகாவலர்களை விலக்கிக் கொண்டிருக்கலாம்”, மேலும் “ஆசாதின் படுகொலை நமக்கு எல்லாம் பேரிழப்பு, ஏனென்றால் ஆசாத் மாவோயிசுட்டுகளால் அமைதி பேச்சு வார்த்தைக்கு நியமிக்கப்பட்டவர். இதனால் அமைதி பேச்சுவார்த்தையில் ஒரு பெரிய தடை ஏற்பட்டுள்ளது” என்றார் அக்னிவேஷ்.

ஆனால் உள்துறை அமைச்சகமோ வேறொரு பார்வையை கொண்டுள்ளது. “இந்த படுகொலை அமைதி பேச்சிவார்த்தையில் எந்த ஒரு தடையையும் ஏற்படுத்தாது. மாவோயிசுட்டுகளிடம் இருந்து அமைதி பேச்சுவார்த்தையை நோக்கி எந்த ஒரு சமிஞையும் எங்களுக்கு வரவில்லை” என்கிறார் உள்துறை செயலர். பிள்ளை.

 ஆசாத் கொலை செய்யப்படுவதற்கு இரண்டு நாட்கள் முன்பு மாவோயிசுட்டுகள் மத்திய ஆயுதப் பிரிவைச்(CRPF) சேர்ந்த 27 காவலர்களை கொன்றுள்ளனர். இந்த தாக்குதல் மாவோயிசுட்டுகள் அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை என்றும் எடுத்து கொள்ளலாம். அக்னிவேஷ் மூலம் நடைபெற்ற திரைமறைவு பேச்சு வார்த்தை மூலம் நடைபெற்று வரும் வன்முறையை நிறுத்தி அமைதி பேச்சுவார்த்தை தொடங்க ஒரு நாள் குறிப்பிடப்படவேண்டும். அப்படி ஒரு நாள் குறிப்பிடாத பட்சத்தில் இரண்டு தரப்புகளும் தங்களது போரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். ஆசாத் படுகொலை செய்யப்பட்டு அதே வாரத்தில் லால்கரில் 5 மாவோயிசுட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர். மேலும் மாவோயிசுட்டு ஆத‌ர‌வாள‌ர்க‌ள் என்று க‌ருதப்ப‌ட்ட‌ ப‌ல‌ர் கைது செய்ய‌ப்ப‌ட்ட‌ன‌ர். ஆதிவாசி பெண்க‌ள் பாதுகாப்பு ப‌டையின‌ரால் க‌ற்ப‌ழிக்க‌ப்ப‌டும் நிக‌ழ்வுக‌ளும் தொட‌ர்ந்து கொண்டு தான் உள்ள‌ன‌. மாவோயிசுட்டுக‌ளிம் தாங்க‌ள் கொல்வ‌தை நிறுத்த‌ போவ‌தில்லை.

இங்கே ஆசாதின் ம‌ர‌ண‌த்தை ஏன் நாம் இந்த‌ வ‌ன்முறை பிர‌ச்ச‌னையிலிருந்து வில‌க்கி பார்க்க‌வேண்டி இருக்கின்ற‌து என்றால் ஆசாத் தான் (மாவோயிசுட்டு)க‌ட்சிக்கு அக்னிவினேசு மூல‌மாக‌ ப‌.சித‌ம்ப‌ர‌த்தின் க‌டித‌ங்க‌ளை எடுத்துச் செல்ப‌வ‌ரும், ந‌ம்ப‌த‌குந்த‌வ‌ருமாவார். ஆசாத் க‌ட்சிக்குள்ளே அமைதி பேச்சுவார்த்தையின் மேல் ஒரு ந‌ம்பிக்கையை கொண்டு வ‌ர‌ முய‌ற்சித்த‌வ‌ர். மேலும் க‌ட்சிக்குள்ளே ந‌ல்ல‌ ம‌ரியாதை உள்ள‌வ‌ருமாவார். ஆனால் அவ‌ரை கொன்ற‌த‌ன் மூல‌ம் அர‌சு தான் எப்போதும் பேச்சுவார்த்தைக்கு வ‌ர‌ப்போவ‌தே இல்லை என்று தெளிவாக‌ அறிவித்து விட்ட‌து” என்கிறார் மாவோயிசுட்டுக‌ளின் த‌ண்ட‌கார‌ண்ய‌ ப‌குதியின் செய்தி தொட‌ர்பாள‌ர். உசென்டி.

 முதல் இர‌ண்டு க‌டித‌ங்க‌ளும் ஊட‌க‌ங்க‌ள் மூல‌ம் ம‌க்க‌ளை சென்ற‌டைந்து விட்ட‌ன‌. ஆனால் மூன்றாவ‌து க‌டித‌ம் இன்னும் இர‌க‌சிய‌மாக‌வே உள்ள‌து. ஆனால் இந்த‌ மூன்றாவ‌து க‌டித்தை ப‌டித்த‌ சில‌ர் இர‌ண்டு த‌ர‌ப்புக‌ளும் அமைதி பேச்சுவார்த்தை மிக‌ அருகில் வ‌ந்திருந்த‌தாக‌வும், அதுவே ஆசாத் கொலை செய்ய‌ப்ப‌ட்ட‌த‌ன் கார‌ண‌மாக‌வும் மாறிவிட்ட‌து. இதில் இர‌ண்டு த‌ர‌ப்புக‌ளுக்கும் இடையே உள்ள‌ ஆதிவாசிக‌ளின் நிலை தான் மிக‌வும் மோச‌மான‌து. இந்த‌(ஆசாதின்) கொலைக்கு மாவோயிசுட்டுக‌ள் க‌ண்டிப்பாக‌ ப‌ழிவாங்குவார்க‌ள்.

ஆசாத் ம‌ற்றும் பாண்டேவின் புகைப்ப‌ட‌ங்க‌ள்

2004ல் ஆந்திராவில் அர‌சுக்கும் மாவோயிசுட்டுக‌ளுக்கும் இடையே ந‌டுநிலையாள‌ராக‌ செய‌ல்ப‌ட்ட‌ ஹ‌ர‌கோபால் கூறுகையில் “இந்த பாசிச‌ அர‌சு ம‌க்க‌ளை கொல்வ‌த‌ன் மூல‌ம் அமைதி திரும்பி விடும் என்று எண்ணுகிற‌து”. இது போன்ற‌ நிக‌ழ்வுக‌ள்(ஆசாதின் கொலை) இந்த‌ அரசின் நிலையற்ற தன்மையை வெளிப்படுத்துகின்றன‌‌. ஆந்திராவின் காட்டு ப‌குதியில் துப்பாக்கி ச‌ண்டையில் ஆசாத் கொல்ல‌ப்ப‌ட்ட‌து அர‌சை பொறுத்த‌ வ்ரை ஒரு சாத‌னை. ஆசாத் மாவோயிசுட்டுக‌ளில் மூன்றாம் இட‌த்தில் இருப்ப‌வ‌ர். க‌ட்சியின் மைய‌க் குழு உறுப்பின‌ர். மேலும் மாவோயிசுட்டுக‌ளின் த‌லைவ‌ர். க‌ண‌ப‌திக்கு ப‌க்க‌ ப‌ல‌மாக‌ இருந்த‌வ‌ர்.

 ஆசாத் ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்ட‌தில் பிற‌ந்த‌வ‌ர். அவ‌ர‌து த‌ந்தை ஒரு உண‌வ‌க‌ முத‌லாளி. ஆசாத்திற்கு த‌ற்போது வ‌ய‌து 55. வாராங்க‌லில் உள்ள‌ ம‌ண்ட‌ல‌ பொறியிய‌ல் க‌ல்லூரியில் ப‌டித்த‌வ‌ர். இர‌ண்டு முதுநி‌லை பொறியிய‌ல்(M.tech) ப‌ட்ட‌ம் பெற்ற‌வ‌ர். புர‌ட்சிக‌ர‌ மாண‌வ‌ர் யூனிய‌னை துவ‌க்கிய‌வ‌ர். எம‌ர்ஜென்சி கால‌க‌ட்ட‌த்தில் சிறையில் அடைக்க‌ப்ப‌ட்டார். அத‌ன் பின்ன‌ர் இவ‌ர் த‌லைம‌றைவு வாழ்க்கை வாழ‌ ஆர‌ம்பித்தார்.

 ஆதிலாபாத் காவ‌ல்துறை க‌ண்காணிப்பாள‌ர். பிர‌மோத் குமார் கூறுகையில் “அதிலாபாத் காட்டு ப‌குதியில் 25லிருந்து 30 மாவோயிசுட்டுக‌ள் இருப்ப‌தாக‌ உள‌வுதுறை த‌க‌வ‌ல் வ‌ந்த‌து. நாங்க‌ள் ஒரு காவ‌ல் துறைப் ப‌டையை மாவோயிசுட்டுக‌ளுக்கு எதிராக‌ ச‌ண்டை போட‌ அனுப்பினோம். “எங்க‌ள் ப‌டை அவ‌ர்க‌ளை ச‌ர‌ண‌டைய‌ சொன்னார்க‌ள் ஆனால் அவ‌ர்க‌ள் ச‌ண்டையை ஆர‌ம்பித்தன‌ர்”.  காவ‌ல் துறை க‌ண‌க்குப்ப‌டி இந்த‌ மோத‌ல் சூலை 1 இர‌வு 11.30 ம‌ணிக்கு ஆர‌ம்பித்து சூலை 2 காலை 2 ம‌ணி வ‌ரை நீடித்த‌து. மோத‌ல் முடிந்த‌வுட‌ன் ஆசாதுட‌ன் அடையாள‌ம் தெரியாத‌ ஒரு ந‌பரும் மோத‌லில் கொல்ல‌ப்ப‌ட்ட‌தாக‌ காவ‌ல் துறை கூறிய‌து.

ஆனால் இந்த‌ மோத‌லை ப‌ற்றி கிடைத்த‌ த‌க‌வ‌ல்க‌ளோ வேறு. மோத‌ல் ந‌டை பெற்ற‌தாக‌ கூறும் ச‌ர்கிபாலி கிராம‌ ம‌க்க‌ள் சூலை இர‌வு எங்க‌ளுக்கு எந்த‌ ஒரு துப்பாக்கி ச‌ண்டை ச‌த்த‌மும் கேட்க‌வில்லை என்று கூறுகின்ற‌ன‌ர். மாவோயிசுட்டுக‌ளும் இந்த‌ மோத‌ல் போலியான‌‌ ஒன்று என‌ கூறுகின்ற‌ன‌ர். “ஆசாத் சூலை 1 அன்று நாக்பூரில் இருந்தார். அவ‌ர் அதிலாபாத்தில் இல்லை. எங்க‌ள‌து திட்ட‌ப்ப‌டி அவ‌ர் சூலை 1 அன்று எங்க‌ள் ஆள் ஒருவ‌ரை அவ‌ர் திரைய‌ர‌ங்கில் ச‌ந்திக்க‌ வேண்டும்” என்கிறார் மாவோயிசுட்டுக‌ளின் செய்தி தொட‌ர்பாள‌ர். உசென்டி.

 அடையாள‌ம் தெரியாத‌ அந்த‌ இர‌ண்டாவ‌து உட‌லே இது போலி மோத‌ல் என‌ உறுதிப‌டுத்துவ‌த‌ற்கான‌ கார‌ண‌ங்க‌ளை கொடுக்கின்ற‌து. இவ‌ரின் புகைப்ப‌ட‌ங்க‌ள் ஆந்திர‌ நாளித‌ழ்க‌ளில் வ‌ந்த‌ பின்ன‌ர் இவ‌ர் மாவோயிசுட்டு இல்லை ஒரு ஊட‌க‌விய‌ல‌ர் என்றும் உத்த‌ர்க‌ண்டில் உள்ள‌ இவ‌ர‌து குடும்ப‌ம் கூறிய‌து. இவ‌ர‌து பெய‌ர் ஹேம்ச‌ந்திர‌ பாண்டே. 2007லிருந்து அவ‌ர் டெல்லியில் வ‌சித்து வ‌ந்த‌வ‌ர். “என‌து க‌ண‌வ‌ர் சூன் 30 அன்று டெல்லியிலிருந்து நாக்பூருக்கு அலுவ‌ல் கார‌ண‌மாக‌ சென்று சூலை 2 அன்று டெல்லி திரும்ப‌ வேண்டிய‌வ‌ர்” என்கிறார் பாண்டேவின் ம‌னைவி. அவ‌ர‌து குடும்ப‌த்தார் கூறுகையில் பாண்டே “நை துனியா, இராசிட்ரிய‌ ச‌காரா, டெய்னிக் ஜ‌க்ர‌ன்” போன்ற‌ தின‌ச‌ரிக‌ளில் வேலை செய்தார் . ஆனால் இந்த‌ தின‌ச‌ரிக‌ளின் ஆசிரிய‌ர்க‌ளோ அவ‌ர் இங்கு வேலை பார்க்க‌வில்லை என்று கூறினாலும் அவ‌ர‌து பெய‌ரில் மேற்கூறிய‌ தின‌ச‌ரிக‌ளில் வெளிவ‌ந்துள்ள‌ ப‌திவுக‌ள் தெக‌ல்காவிட‌ம்(வார‌ இத‌ழ்)  உள்ள‌ன‌.

 2010லிருந்து அவ‌ர் சேத்னா என்ற‌ இத‌ழில் வேலை செய்து வ‌ந்துள்ளார். இது டெல்லி அசாம் இருப்பு பாதை அலுவ‌ல‌க‌த்திற்கு(Delhi Assam Railway corporation ltd)  சொந்த‌மான‌து. அவ‌ருட‌ன் சேத்னா அலுவ‌லக‌த்தில் வேலை செய்து வ‌ரும் ம‌ற்ற ந‌ண்ப‌ர்க‌ளோ பாண்டே ஒரு அமைதியான‌, உத‌வும் எண்ண‌ம் கொண்ட‌ ந‌ண்ப‌ர் என‌ கூறுகின்ற‌ன‌ர். இதில் ஒரு விசித்திர‌ம் என்ன‌வென்றால் ஆதிலாபாத்தில் அவ‌ர் கொல்ல‌ப‌ட்ட‌தாக‌ காவ‌ல்துறை கூறும் சூலை 1 அவ‌ர் அலுவ‌ல‌க‌ம் வ‌ந்த‌தாக‌வும் கூறுகின்ர‌ன‌ர். “சேத்னா இத‌ழ் அலுவ‌ல‌க‌ நிர்வாகியான‌ அபிசேக் கூறுகையில் பாண்டே சூலை 1 அன்று ம‌திய‌ம் வ‌ரை அலுவ‌ல‌க‌த்தில் வேலை செய்து விட்டு பின்ன‌ர் அரை நாள் விடுப்புக் கேட்டுள்ளார். பாண்டேவின் மேலாள‌ர் அவ‌ர‌து கைபேசியில் உள்ள‌ பாண்டேவின் குறுஞ்செய்தியையும் ந‌ம‌க்கு காட்டினார் “அதாவ‌து சூலை 1 அன்று தாம் அரை நாள் ம‌ட்டும் அலுவ‌ல‌க‌த்தில் இருப்ப‌தாக‌வும், பின்ன‌ர் விடுப்பு எடுப்ப‌தாக‌வும் கூறியுள்ளார்”.

ஆனால் பாண்டேவின் குடும்ப‌த்தார் பாண்டே சூன் 30 அன்று டெல்லியை விட்டு தொடர்வ‌ண்டியில் சென்ற‌தாக‌வே கூறுகின்ற‌ன‌ர். டெல்லியில் ம‌திய‌ம் 2 ம‌ணி வ‌ரை இருந்து விட்டு அதே நாள் இர‌வு ஆந்திராவின் தொலைதூர காட்டுப் ப‌குதியில் கொரில்லா போரில்  ஈடுப‌டுவ‌து என்ப‌து ந‌ம்ப‌த‌குந்த‌த‌ல்ல‌.

 சூலை 1 அன்று என்ன‌ ந‌ட‌ந்த‌தற்கு தாமும் ஒரு வ‌கையில் கார‌ண‌மாகி விட்டோமோ என்றும் எண்ணுகிறார் அக்னிவேஷ். மே 6 லிருந்து 8 வ‌ரை அக்னிவேசும் ம‌ற்றும் சில‌ரும் இராய்பூர் ம‌ற்றும் தாண்டிவாடா சென்று ந‌டைபெற்று வ‌ரும் வ‌ன்முறையை நிறுத்த‌ கோரினார்க‌ள். மே 11 அன்று சித‌ம்ப‌ர‌ம் அர‌சின் நிலையை விள‌க்கி கூறி அக்னிவேசிற்க்கு ஒரு க‌டித‌ம் அனுப்பினார். அதில் மாவோயிசுட்டுக‌ள் வ‌ன்முறையை நிறுத்திக் கொள்ள ஒரு நாளை குறிப்பிடச் சொல்லியிருந்தார். “நாங்க‌ள் அந்த‌ குறிப்பிட்ட‌ நாளில் மாவோயிசுட்டுக‌ள் வ‌ன்முறையை நிறுத்தி விடுவார்க‌ள் என்று இருந்தோம்” மேலும் சித‌ம்ப‌ர‌ம் “நாங்க‌ள் அந்த‌ குறிப்பிட்ட‌ நாளில் இருந்து 72 ம‌ணி நேர‌ங்க‌ளுக்கு மாவோயிசுட்டுக‌ள் எந்த‌ ஒரு வ‌ன்முறையிலாவ‌து ஈடுப‌டுகின்றார்க‌ளா என்று கூர்ந்து க‌வ‌னிப்போம். மேலும் இந்த‌ 72 ம‌ணி நேர‌த்தில் அர‌ச‌ ப‌டைக‌ளும் எந்த‌ ஒரு ச‌ண்டையிலும் ஈடுப‌டாது. அந்த‌ நேர‌த்தில் நாம் அமைதி பேச்சு வார்த்தையை தொட‌ங்க‌லாம் என்றும் கூறியிருந்தார்”.

இந்த‌ க‌டித‌ம் மிக‌ முக்கிய‌மான‌ ஒன்றாகும் ஏனென்றால் இதில் தான் அர‌சு முத‌ன்முறையாக‌ மாவோயிசுட்டுக‌ளுட‌ன் பேச்சு வார்த்தை ந‌ட‌த்த‌ ச‌ம்ம‌தித்துள்ள‌து. இத‌ற்கு ப‌தில் த‌ரும் வ‌கையில் மே 31 அன்று ஆசாத் ஒரு க‌டித‌ம் அனுப்பினார். அதில் “எங்க‌ள‌து க‌ட்சி அமைதி பேச்சு வார்த்தைக்கு ஒப்புத‌ல் தெரிவித்துள்ள‌து. இத‌னை மிக‌ மோச‌மாக‌ பாதிக்க‌ப்ப‌டும் இல‌ட்ச‌க்க‌ண‌க்கான‌ ஆதிவாசிக‌ளை க‌ருத்தில் கொண்டே நாங்க‌ள் எடுத்துள்ளோம்.அமைதி பேச்சு வார்த்தையில் அர‌சு மிக‌ ஆர்வ‌மாக‌ உள்ள‌தென்றால் அர‌சு நீண்ட‌ கால ச‌ண்டை நிறுத்த‌த்திற்க்கு ஒப்புக் கொள்ள‌ வேண்டும். 72 ம‌ணி நேர‌ ச‌ண்டை நிறுத்த‌ம் என்ப‌து ந‌கைச்சுவையாக‌ உள்ள‌து. மேலும் இந்த‌ கால‌க‌ட்ட‌த்தில் கைது செய்யப்ப‌ட்டு சிறையில் இருக்கும் எங்க‌ள் இய‌க்க‌த்தைச் சேர்ந்த‌வ‌ர்க‌ளை விடுவிக்க‌வும், எங்க‌ள் மீதுள்ள‌ த‌டையையும் அர‌சு நீக்க‌ வேண்டும். மேலும் அர‌சு த‌ற்போது ச‌ண்டையில் ஈடுப‌ட்டுள்ள‌ ப‌டையை திருப்பி பெற‌ வேண்டும்” என்றும் ஆசாத் கூறியுள்ளார்.

 அக்னிவேஷ் இந்த‌ க‌டிதத்தை ப‌.சித‌ம்ப‌ர‌த்திட‌ம் சேர்த்துள்ளார். மேலும் மாவோயிசுட்டுக‌ள் எழுப்பியுள்ள‌ கேள்விக‌ளுக்கு விடை கூறும் வ‌கையில் மூன்றாவ‌து க‌டித‌த்தை ப‌.சித‌ம்ப‌ர‌த்தை ச‌ந்தித்த‌ பின்ன‌ர் ஆசாதிற்க்கு அனுப்பி உள்ளார். அதில் ச‌ண்டை நிறுத்த‌ம் வெறும் 3 நாட்க‌ள் ம‌ட்டும‌ல்ல‌ அது நீண்ட‌ கால‌ நோக்கிலே இருக்கும் என்றும் கூறியுள்ளார். இந்த‌ மூன்றாவ‌து க‌டிதத்திற்கு மாவோயிசுட்டுகளின் த‌ர‌ப்பில் இருந்து ச‌ண்டை நிறுத்த‌த்‌தை அறிவிக்கும் அந்த‌ நாளை குறிப்பிட‌ வேண்டும். இந்த‌ நிலையில் தான் ஆசாத் போலி மோத‌லில் அர‌சினால் கொல்ல‌ப்ப‌ட்டார்.

“இந்தியாவின் அமைதி பேச்சு வார்த்தையின் கோர‌முக‌ம் இவ்வாறு இருக்கின்ற‌து. இதைவிட‌ இன்னொரு கொடுமை என்ன‌வென்றால் இந்திய‌ பிர‌த‌ம‌ரே ஒப்புக்கொண்ட‌ ஆதிவாசிக‌ளின் தற்போதைய நிலை ப‌ற்றியும், அதை மேம்படுத்துவது தொடர்பாகவும் ப‌ஞ்சாய‌த் இராஜ் அமைச்ச‌க‌த்தால் ச‌ம‌ர்ப்பிக்க‌ப்ப‌ட்ட ஆய்வ‌றிக்கை இதே அர‌சால் குப்பை தொட்டியில் போட‌ப்ப‌ட்டுள்ள‌து. இதை ப‌ற்றிய‌ மொழிபெய‌ர்ப்பை விரைவில் நீங்க‌ள் எதிர்பார்க்க‌லாம்”

மூலப்பதிவு….  http://www.tehelka.com/story_main46.asp?filename=Ne170710thirdletter.asp

 ந‌ன்றி— தெக‌ல்கா வார‌ இத‌ழ்.

ப.நற்ற‌மிழ‌ன்

Advertisements

நக்சல்களுக்கு எதிராக இராணுவத்தை களமிறக்குவது பேரழிவை உண்டாக்கும்


 இராம்மோகன், எல்லை பாதுகாப்பு படையின் முன்னாள் தலைமை நிர்வாகி. காசுமீரிலும், இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளிலும் கலகக்காரர்களை எதிர்த்து பணியாற்றியவர். சமீபத்தில் தாண்டிவாடாவில் நடைபெற்ற 76 மைய காவல்துறை அதிகாரிகள் கொலை செய்யப்பட்ட நிகழ்வில் உள்ள காரண காரியங்களை அறிய இவரை உள்துறை மந்திரி ப.சிதம்பரம் நியமித்துள்ளார். இவர் தெகல்கா நிருபர் சோமா சௌத்ரிக்கு அளித்த நேர்காணல் இதோ…

வங்காளத்தில் நடைபெற்ற தொடர்வண்டி தாக்குதலுக்கு பின் நக்சல்களுக்கு எதிராக இராணுவம் மற்றும் வான் படைகளை களமிறக்குவது பற்றிய உங்களது கருத்து?

 அவ்வாறு நடப்பின் அது ஒரு மிகப்பெரிய தவறாகும். நீங்கள் இந்த பிரச்சனைக்கு(நக்சல்)  எவ்வள‌வு தூரம் ஆயுதம் தாங்கிய குழுக்கள் மூலம் அணுகுகின்றீறோ, அந்த அளவிற்க்கு  இப்பிரச்சனை தனது இடத்தை மேலும் விரிவு செய்து பலமான ஒரு அமைப்பாகவே மாறும்.


சமீபத்தில் தாண்டிவாடாவில் நடைபெற்ற 76 மைய காவல்துறை அதிகாரிகள் கொலை செய்யப்பட்ட நிகழ்வில் உள்ள காரண காரியங்களை அறிய உங்களை உள்துறை அமைச்ச‌க‌ம் நிய‌மித்துள்ள‌து. அர‌சாங்க‌ம் உங்க‌ள் அனுப‌வ‌ம் ம‌ற்றும் முடிவு எடுக்கும் திற‌மையை வைத்து தான் இந்த‌ பொறுப்பை உங்க‌ளுக்கு கொடுத்துள்ள‌து. இப்பொழுது இந்நாட்டில் நிலவி வ‌ரும் மாவோயிசுட்டு பிர‌ச்ச‌னையை நீங்க‌ள் எவ்வாறு பார்க்கின்றீர்க‌ள்?

முத‌லில் இதை ஒரு ச‌மூக‌ நீதி பிர‌ச்ச‌னையாக‌வே நான் பார்க்கின்றேன். 1980ல் ஹைத‌ராபாத்தில் மைய‌ விசார‌ணை குழுவின் (CBI) பிராந்திய‌ த‌லைமை அதிகாரியாக‌ ப‌ணியாற்றிய‌ போது முத‌ல் முறையாக‌ ந‌க்ச‌ல் பிர‌ச்ச‌னைக‌ளை ச‌ந்தித்தேன். என்னுட‌ன் ஒன்றாக‌ ப‌யிற்சி பெற்ற‌ அஜ‌ய் தியோரா அப்பொழுது ஹைத‌ராபாத்தில் உள‌வு பிரிவின் த‌லைமை அதிகாரியாக‌ ப‌ணியாற்றினார். அவ‌ரால் இப்பிர‌ச்ச‌னையை க‌ட்டுப‌டுத்த‌ முடிய‌வில்லை.நான் அசாமில் ப‌ணிபுரியும் போது இது போன்ற‌ க‌ல‌க‌ங்க‌ளை க‌ட்டுப‌டுத்தியுள்ளேன். மேலும் இந்திய‌ திபெத்திய‌ எல்லை காவ‌ல் ப‌டையிலும் இருந்துள்ளேன். அத‌ன் முக்கிய‌ நோக்க‌மே எதிரியின் ப‌குதிக்குள் சென்று ச‌ண்டையிடுவ‌தே. அங்கு தான் நான் கொரில்லா போர் முறையை க‌ற்றுக் கொண்டேன். இது போன்ற‌ க‌ல‌க‌ங்க‌ளை அட‌க்குவ‌து என‌க்கு மிக‌வும் பிடித்த‌ ஒன்று.

பெரும்பாலான‌ மாவோயிசுட்டு த‌லைவ‌ர்க‌ள் ஆந்திராவைச் சேர்ந்த‌வ‌ர்க‌ளாக‌ உள்ள‌ன‌ர்.இத‌ற்கு என்ன‌ கார‌ண‌ம் என்று நீங்க‌ள் க‌ருதுகின்றீர்க‌ள்?
   
   நான் பார்த்த‌வ‌ரையில் ஆந்திராவில் மிக‌ முக்கிய‌ பிர‌ச்ச‌னை நில‌ம் தான்.ஆதிக்க‌ சாதியை சேர்ந்த‌வ‌ர்க‌ள் த‌லைமுறை, த‌லைமுறையாக‌ ப‌ழ‌ங்குடியின‌ரையும், தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ வ‌குப்பை சேர்ந்த‌வ‌ர்க‌ளையும் த‌ங்க‌ள‌து சுய‌ந‌ல‌த்திற்க்காக‌ பிழிந்து வ‌ருகின்றார்க‌ள்.சுத‌ந்திர‌த்திற்க்கு முன் நில‌ உச்ச‌ வ‌ர‌ம்பு என்று எதுவுமில்லை, இத‌னால் இந்த‌ ஆதிக்க‌ சாதியின‌ர் பெரும‌ளவு நில‌ங்க‌ளை வ‌ளைத்து போட்டுள்ள‌ன‌ர், சில‌ நேர‌ங்க‌ளில் இது 1000 ஏக்க‌ர் ப‌ர‌ப்ப‌ள‌வையும் தாண்டி சென்ற‌துண்டு. அதே நேர‌த்தில் இந்த‌ ப‌ழ‌ங்குடியினர், தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ வ‌குப்பை சேர்ந்த‌வ‌ர்க‌ளிட‌மோ சிறித‌ளவு நில‌மோ அல்ல‌து நில‌மில்லாத‌ நிலையுமே இருந்து வ‌ந்துள்ள‌து. இந்த‌ சிறித‌ள‌வு நில‌ங்க‌ளையும் ஆதிக்க‌ சாதியின‌ர் பொய் க‌ண‌க்கு காட்டி அவ‌ர்க‌ளிட‌ம் இருந்து பிடுங்கி, அவ‌ர்க‌ளை எப்பொழுதும் க‌ட‌னாளியாக‌வே வைத்துள்ள‌ன‌ர். இந்த‌ ப‌ழ‌ங்குடியின‌ர் குத்தகை விவசாயிகளாக‌ மாற்ற‌ப்ப‌ட்டு , இவ‌ர்க‌ளின் அறுவ‌டையில் மூன்றில் இர‌ண்டு ப‌ங்கு ஆதிக்க‌ சாதியின‌ருக்கு கொடுக்க‌ப்ப‌ட்டு வ‌ந்த‌து. இந்த‌ கார‌ண‌ங்க‌ளினால் முத‌லில் 1946ல் இந்திய‌ க‌ம்யூனிசுட்டு க‌ட்சியின‌ர் தெலுங்கானா ப‌குதிக‌ளில் வேலை செய்து வ‌ந்த‌ன‌ர். அவ‌ர்க‌ள் ப‌ழ‌ங்குடியின‌ரை ஒரு கூட்ட‌மாக‌ சேர்த்து அவ‌ர்க‌ளின் வில், அம்பை மட்டுமே வைத்து ஆதிக்க‌ சாயின‌ரின் வீட்டை சுற்றி வ‌ளைத்து அங்கு உள்ள‌ தானிய‌ங்க‌ளை இம்ம‌க்க‌ளுக்கு பிரித்து வ‌ழ‌ங்கின‌ர். மேலும் அவ‌ர்க‌ளிட‌ம் சென்று இன்றிலிருந்து விவசாய‌ம் செய்ப‌வ‌னுக்கு மூன்றில் இர‌ண்டு ப‌குதியும், மூன்றில் ஒரு ப‌குதி நில‌ உரிமையாள‌ருக்கும் செல்ல‌ வேண்டும் என்றும் கூறினார்க‌ள். இத‌னால் கோப‌ம‌டைந்த‌ நில‌ உரிமையாள‌ர்க‌ள் காவ‌ல் துறையின‌ரிட‌ம் சென்று புகார் கொடுக்க‌, காவ‌ல் துறை அங்கு வாழ்ந்து வ‌ரும் ம‌க்க‌ளை கைது செய்து அடித்து துன்புறுத்தின‌ர்.
 சுத‌ந்திர‌த்திற்க்கு பின்ன‌ர் நில‌ உச்ச‌ வ‌ர‌ம்பு ச‌ட்ட‌ங்க‌ள் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ன‌ ஆனால் அவை ஒரு பொழுதும் ஆந்திராவில் ந‌டைமுறைக்கு வ‌ர‌வே இல்லை. 1989ல் அர‌சாங்க‌ம் மாறிய‌ போது நான் தியோராவை அழைத்துக் கொண்டு புதிய‌ வ‌ருவாய் துறை அமைச்ச‌ரை சென்று ச‌ந்தித்தேன். உங்க‌ளால் ஒரு பொழுதும் இந்த‌ பிர‌ச்ச‌னையை(ந‌க்ச‌ல்) தீர்க்க‌ முடியாது என‌க்கூறினேன். நான் பேசிய‌ வித‌ம் அவ‌ருக்கு பிடிக்க‌ வில்லை என‌த்தெரிந்த‌து, மேலும் அத‌ற்கான‌ கார‌ண‌த்தை கூறினேன். நீங்க‌ள் இந்த‌ போராட்ட‌த்தை நீர்த்து போக‌ச் செய்ய‌ நில‌ உச்ச‌ வ‌ர‌ம்பு ச‌ட்ட‌த்தை அம‌ல்ப‌டுத்த‌ வேண்டும் என‌க் கூறினேன். ஆனால் அத‌ற்கு வாய்ப்பே இல்லை என்று அமைச்ச‌ர் கூறிவிட்டார். அத‌ற்கு கார‌ண‌ம் கூறுகையில் ம‌ற்றொரு அமைச்ச‌ரான‌ சுதாக‌ர் ராவிற்க்கு சொந்த‌மாக‌ 1,100 ஏக்க‌ர் இருப்ப‌தாக‌வும், இது போன்ற‌வ‌ர்க‌ள் நிறைய‌ இருப்ப‌தால் நில‌ உச்ச‌ வ‌ர‌ம்பு ச‌ட்ட‌த்தை அம‌ல் ப‌டுத்த‌ வாய்ப்பே இல்லை என்று அவ‌ர் கூறிவிட்டார்.
 இது போன்ற‌ சாதிய‌ அமைப்பு முறையே ஆந்திராவில் நில‌வுகின்ற‌து. பெரும்பாலான‌ காவ‌ல் நிலைய‌ங்க‌ளில் இன்ன‌மும் தாழ்த்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் முத‌ல் த‌க‌வ‌ல‌றிக்கை ப‌திவு செய்ய‌ ப‌ய‌ப்ப‌டுகின்ற‌ன‌ர். ஏனெனில் அந்த அறிக்கைகள் ப‌திவே செய்ய‌ப்ப‌டாது , அவ்வாறு ப‌திவு செய்ய‌ப்ப‌ட்டாலும் அத‌ன் மேல் விசார‌ணையும் ந‌ட‌க்காது. மேலும் பெண்க‌ள் பாலிய‌ல் கொடுமைக‌ளுக்கு உள்ளாக்க‌ ப‌டுகின்ற‌ன‌ர். வேலை செய்யும் விவசாயிக‌ள் த‌ங்க‌ள‌து ம‌னைவியை முத‌ல் நாள் இர‌வு நில‌ உரிமையாள‌ருக்கு கொடுக்க‌ வேண்டும். இது ப‌ழ‌ங்குடிக‌ளின் நாட்டுப் புற‌ பாட‌ல்க‌ளில் உள்ள‌து. இந்த நாட்டில் பெண் வாழ்வ‌த‌ற்கு எந்த‌ ஒரு ந‌ம்பிக்கையும் இல்லை என்றும் அதே பாட‌லில் வ‌ருகின்ற‌து. இது போன்ற‌ த‌வ‌றுக‌ள் க‌ளைய‌ப்ப‌டாம‌ல் எவ்வாறு நீங்க‌ள் பிர‌ச்ச‌னைக்கு தீர்வு காண்பீர்க‌ள்? இராணுவ‌ம் இத‌ற்கு தீர்வ‌ல்ல.

ஊட‌க‌ங்க‌ள் ந‌க்ச‌ல்க‌ளை தீவிர‌வாதிக‌ள் என்று முத்திரை குத்தியுள்ள‌ன‌. இதை நீங்க‌ள் ஏற்றுக் கொள்கின்றீர்க‌ளா?

 இங்கே எல்லோரும் ந‌க்ச‌ல்க‌ளை ப‌ற்றி ம‌ட்டுமே பேசுகின்றார்க‌ள். மிக‌வும் சில‌ரே இங்கெ இர‌ண்டு வ‌குப்புக‌ள் உள்ள‌தை புரிந்துகொள்கின்ற‌ன‌ர்.ப‌ழ‌ங்குடியின‌ர் ம‌ற்றும் தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ வ‌குப்பினர் அடி மட்டத்திலும். இந்திய‌ க‌ம்யூனிசுட்டு க‌ட்சி, இந்திய‌ க‌ம்யூனிசுட்டு க‌ட்சி மார்க்சிசுட்டு லெனினிசுட்டு, இப்பொழுது இந்திய‌ க‌ம்யூனிசுட்டு க‌ட்சி மாவோயிசுட்டு போன்ற‌ க‌ட்சியின் த‌லைவ‌ர்க‌ள் தலைமையிலும் உள்ள‌ன‌ர். இந்த‌ க‌ம்யூனிசுட்டுக‌ளில் 99 விழுக்காடு ஆதிக்க‌ சாதிய‌ன‌ரே. இவ‌ர்க‌ளின் அர‌சிய‌ல் த‌த்துவ‌த்தின் கார‌ண‌மாக‌ இவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் சாதியை புற‌க்க‌ணித்து ஏழ்மையில் நிலையில் உள்ள‌வ‌ர்க‌ளுக்கு உத‌வுகின்ற‌ன‌ர். இப்பொழுது அவ‌ர்க‌ளுக்கு ஒரு அர‌சிய‌ல் கொள்கை உள்ள‌து  இந்த‌ நாட்டின் ஆட்சி அதிகார‌த்திற்க்கு அவ‌ர்க‌ள் வ‌ர‌வேண்டும் என்ப‌தே அது. நான் ஒரு மாவோயிசுட்டு நாட்டில் வாழ‌ விரும்ப‌வில்லை. ஆனால் நாம் த‌ற்பொழுது மேற்கொண்டுள்ள‌ காட்டுமிராண்டி த‌ன‌மான‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளை தொட‌ர்ந்தால் இந்தியா ஒரு மாவோயிசுட்டு நாடாக‌ மாறியே தீரும்.இங்கு ச‌மூக‌த்தில் மிக‌ப்பெரிய‌ வேறுபாடு நிலவுகின்றது. க‌ம்யூனிசுட்டு நாடுக‌ளான‌ இர‌ஷ்யா, சீனா சென்று பாருங்க‌ள். அங்கு குருசேவ் போன்றோர்க‌ளே அதிகார‌த்தில் உள்ள‌ன‌ர். இன்று அதிகார‌த்தில் உள்ள‌வ‌ர்க‌ள் எல்லாமே க‌டைநிலையில் உள்ள‌வ‌ர்களே. உய‌ர் குடி ம‌க்க‌ள் இப்பொழுது அங்கு இல்ல‌வே இல்லை. இந்தியாவிலும் இது போன்ற‌ கிள‌ர்ச்சிக‌ள் ஏற்ப‌டலாம். ந‌ம் க‌ண்முன்னே உள்ள‌ ச‌மூக‌ நீதி பிர‌ச்ச‌னையை ச‌ரி செய்வ‌த‌ற்கு நாம் ஏன் இன்னும் முய‌ல ம‌றுக்கின்றோம் என‌ப்புரிய‌வில்லை.
நீங்க‌ள் இதுவ‌ரை ஆந்திராவை ப‌ற்றி பேசினீர்க‌ள், நீங்கள் ச‌ட்டீசுக‌ரை எவ்வாறு  பார்க்கின்றீர்க‌ள்?

 ச‌ட்டீசுக‌ரில் காடுக‌ளின் மீதான‌ உரிமையே உள்ள‌து. ப‌ழ‌ங்குடியின‌ர் ஆயிர‌ம் ஆண்டுக‌ளுக்கு முன்ன‌ரே சாதிய ஆதிக்கம் கார‌ண‌மாக‌ காடுக‌ளுக்குள் த‌ள்ள‌ப்ப‌ட்டார்க‌ள். இவ‌ர்க‌ளுக்கு நில‌மே இல்லை. காடுக‌ளில் கிடைக்கின்ற‌ பொருட்க‌ளை ச‌ந்தைக‌ளில் விற்ப‌த‌ன் மூல‌மே த‌ங்க‌ள் வாழ்க்கையை ந‌ட‌த்தி வ‌ருகின்றார்க‌ள்.  இவ்வாறு அவ‌ர்க‌ள் காடுக‌ளை விட்டு வெளியே வ‌ந்து ஒரு வ‌ணிக‌ரை தேடி விற்கின்றார்க‌ள். யார் அந்த‌ வ‌ணிக‌ர்க‌ள்? வைசிய‌  ம‌ர‌பை சார்ந்த‌ வ‌ணிக‌ர்க‌ள்.இத‌ன் மூல‌ப் பிர‌ச்ச‌னையாக‌ நான் மூன்றை சொல்லுவேன். த‌ந்திர‌மான‌ பிராம‌ண‌ன், காட்டுமிராண்டித‌ன‌மான‌ ச‌த்ரிய‌ன், பேராசை கொண்ட‌ வைசிய‌ன். சித‌ம்ப‌ர‌ம் ஏதேச்சையாக‌ வைசிய‌ குல‌த்தை சார்ந்த‌வ‌ர். இந்த‌ மூன்று குல‌ங்களும் ப‌ல‌ நூறு ஆண்டுக‌ளாக‌ இவ‌ர்க‌ளை ந‌சுக்கி வ‌ருகின்ற‌ன‌ர். பாதிக்க‌ப‌டும் ப‌ழ‌ங்குடியின‌ருக்கு ஆத‌ர‌வாக‌ இந்திய‌ க‌ம்யூனிசுட்டு க‌ட்சி கை கொடுத்தால் எதற்காக‌ நாம் அவ‌ர்க‌ளை குறை சொல்ல வேண்டும்? அவ‌ர்க‌ள் வைசிய‌ர்க‌ளின் க‌ண‌க்கு புத்த‌க‌த்தை பார்த்து ப‌ழ‌ங்குடியின‌ர் ச‌ரியான‌ தொகை பெறுவ‌த‌ற்கு உத‌வுகின்ற‌ன‌ர். நீங்க‌ள் இந்த‌ வியாபார‌த்தை ஆராய்ந்து இருக்க‌ வேண்டும். ப‌ண‌ம் தில்லியில் உள்ள ப‌ண‌க்கார‌ அர‌சிய‌ல்வாதிக‌ளுக்கு செல்கின்ற‌து. ஆனால் அங்கே உழைக்கும் இவ‌ர்க‌ளுக்கு க‌டைசியில் ஒன்றும் கிடைப்ப‌தில்லை.

 இங்கே நான் சொல்ல‌ விரும்புவ‌து, எந்த‌ கிள‌ர்ச்சியிலும் ம‌க்க‌ள் ஆயுத‌ங்க‌ளை எடுப்ப‌து இய‌ல்பு ஏனென்றால் அவ‌ர்க‌ளுக்கு வேறு வ‌ழி இல்லை. இங்கே மாவோயிசுடுக‌ளின் மூல‌ம் ப‌ழ‌ங்குடியினர் த‌ங்க‌ள‌து உரிமைக‌ளுக்காக‌ போராட‌ க‌ற்று த‌ர‌ப்ப‌டுகின்ற‌ன‌ர். மார்க்சிய‌ பாட‌ங்க‌ளும், கொரில்லா போர் முறையும் அவ‌ர்க‌ள் பாட‌ங்க‌ளில் ஒன்று. இங்கே அதிக‌ரிக்கும் வ‌ன்முறைக‌ள், போராட்ட‌ங்க‌ள் எல்லாம் ஆயுத‌ம் நோக்கியே உள்ள‌து. இதை எதிர்த்து ந‌ம‌து ப‌டையின‌ர் போராடும் போது அவ‌ர்க‌ள் க‌டும் கோப‌ம் கொண்ட‌வ‌ர்க‌ளாக‌ மாறுகின்ற‌ன‌ர். அவ‌ர்க‌ள் நாங்க‌ள் 76 வீர‌ர்க‌ளை ப‌றிகொடுத்துள்ளோம் என‌க்கூறி, க‌ண்ணில் ப‌டுப‌வைரையெல்லாம் சுட்டு கொல்வார்க‌ள்.
இவ‌ர்க‌ளை க‌ட்டுக்குள் வைக்க‌ ஒரு ச‌ரியான‌ த‌லைமை தேவை. என‌து அச்ச‌ம் என்ன‌வென்றால் அவ்வாறான‌ த‌லைமை என்ற‌ ஒன்று ந‌ம‌து ப‌டையின‌ருக்கு இல்லை என்ப‌தே. இதை போன்ற‌வ‌ற்றை அர‌சு புரிந்து கொள்ள‌ வேண்டும்.

அப்ப‌டியென்றால் நீங்க‌ள் இத‌ற்கு என்ன‌ தீர்வு சொல்கின்றீர்க‌ள்? இந்த‌ தீர்வுக‌ளை நோக்கி ந‌க‌ராம‌ல் ந‌ம்மை த‌டுப்ப‌து எது?

 பாராளும‌ன்ற‌த்தில் இர‌ண்டு ச‌ட்ட‌ங்க‌ள் இன்னும் நிலுவையில் உள்ள‌ன‌. ஒன்று நில‌ அப‌க‌ரிப்பு ப‌ற்றிய‌து, இர‌ண்டாவ‌து காடுக‌ளின் உரிமை ப‌ற்றிய‌து. ஆனால் இங்கே பிர‌ச்ச‌னை என்ன‌வெனில் இந்த காடுக‌ளில் தனிமங்கள்,தாதுக்க‌ள் க‌ண்டுபிடிக்க‌ப் ப‌ட்டுள்ள‌ன‌. இது த‌ற்போது ஆட்சியில் உள்ள‌ க‌ட்சிக்கு ஒரு மிக‌ப் பெரிய‌ ப‌ரிசாகும். இந்த‌ தாதுக்க‌ளை எடுப்ப‌த‌ற்கு நீங்க‌ள் ப‌ல‌ மில்லிய‌ன் ம‌திப்புள்ள‌ ஒரு புரிந்துண‌ர்வு ஒப்ப‌ந்த‌ம் போட்டால் அதில் குறிப்பிட்ட‌ விழுக்காடு உங்க‌ள‌து சுவிசு வ‌ங்கி க‌ண‌க்கிற்க்கு செல்லும். காடுக‌ளில் வாழும் இந்த‌ ஏழை ம‌னித‌ர்க‌ள் எளிதாக‌ ம‌ற‌க்க‌ப்ப‌டுகின்றார்க‌ள். பிகாரில் பூமிகாரில் இவ்வாறி வெளிப்ப‌டையாக‌ சொல்வார்க‌ள் “நாங்க‌ள் எங்க‌ள‌து நில‌ங்க‌ளையும், ப‌ட்ட‌ங்க‌ளையும் எங்க‌ள‌து பூனை ம‌ற்றும் நாய்க‌ளின் பெய‌ரில் ப‌திவு செய்தோம். போராட்ட‌ங்க‌ள் இல்லாம‌ல் இவை எவ்வாறு தொட‌ரும்? மேலும் நீங்க‌ள் கூறுகின்றீர்க‌ள் இராணுவ‌ம் வ‌ர‌ வேண்டுமென்று? நீங்க‌ள் ஏன் பிர‌ச்ச‌னையின் மூல‌ கார‌ண‌த்தை பார்க்க‌ ம‌றுக்கின்றீர்க‌ள்? அர‌சுக்கு மூளை என்று ஒன்று இருப்பின் அது பிர‌ச்ச‌னையை புரிந்து செயல்ப‌டும், இல்லையெனில் அது ஒரு மிக‌ப்பெரிய‌ பேரிட‌ரில் தான் சென்று முடியும்.

காவ‌ல்துறை, துணை இராணுவ‌ம் ந‌ட‌த்திய‌ ப‌ல‌ அட‌க்குமுறைக‌ள், க‌ற்ப‌ழிப்புக‌ள், கொலைக‌ள், ஆடு ம‌ற்றும் கோழிக‌ளை திருடுத‌ல் போன்ற‌வ‌ற்றை ப‌ல‌ முறை தெக‌ல்கா ப‌திவு செய்துள்ள‌து. இதை நாம் அர‌சிட‌ம் கொண்டு சென்றால் நம்மை துரோகியாக‌வும், மாவோயிசுட்டுக‌ளுக்கு உள‌வு த‌க‌வ‌ல்க‌ள் திர‌ட்டுப‌வ‌ர்க‌ளாக‌வுமே பார்க்கின்ற‌ன‌ர். காவ‌ல்துறை, சிற‌ப்பு காவ‌ல் துறை, துணை இராணுவ‌ம் போன்றோரின் ந‌ட‌த்தை ப‌ற்றிய‌ உங்க‌ள் பார்வை என்ன‌?

 ச‌ல்வா ஜூடும் என்ப‌து அர‌சால் உருவாக்க‌ப்ப‌ட்ட‌து. அந்த‌ ப‌டையின் செயல்பாடுக‌ள் நிலைமையை மேலும் மோச‌மாக்கின‌. முன்னர் நில‌ உரிமையாள‌ர்க‌ள் என்னென்ன கொடுமைகள் செய்தார்களோ, அதை இப்போது காவ‌ல்துறை,  சிற‌ப்பு காவ‌ல் துறை, துணை இராணுவ‌ம் போன்றோர் செய்கின்ற‌ன‌ர். கிள‌ர்ச்சியை அட‌க்கும் போராட்ட‌ம் ச‌ட்ட‌ப்ப‌டி ந‌ட‌க்க‌ வேண்டும் என்ப‌து என் ந‌ம்பிக்கை. இதை ப‌ற்றி பெரும்பால‌னோர் பேசுவ‌தில்லை. இராப‌ர்ட் தாம்ச‌னின் ‌ “க‌ம்யூனிசுட்டு க‌ல‌க‌ங்க‌ளை வெற்றி பெறுவ‌து எப்ப‌டி” என்ற‌ புத்த‌க‌ம் இந்த‌ வ‌ரியுட‌ன் துவ‌ங்கிற‌து ” க‌ல‌க‌ங்க‌ளுக்கு எதிரான‌ நிக‌ழ்வுக‌ள் மிக‌ முக்கிய‌மாக‌ ச‌ட்ட‌ப்ப‌டி ந‌ட‌க்க‌ வேண்டும்”. இராப‌ர்ட் தாம்ச‌ன் போன்றோருக்கு கொரில்லா போர் ப‌யிற்சி அளித்த‌ வ‌ல்லுன‌ர்க‌ளே என‌க்கும் ப‌யிற்சி அளித்த‌ன‌ர் என்ப‌து என்னை பொருத்த‌வ‌ரை அதிர்ஷ்ட‌வ‌சமானது. இதை நான் அர‌சுக்கான எனது ப‌ரிந்துரைக‌ளில் ப‌ல‌ இட‌ங்க‌ளில் தெரிய‌ ப‌டுத்தி உள்ளேன்.இது போன்ற‌ இட‌ங்க‌ளுக்கு அனுப்ப‌ப்ப‌டும் படையின‌ருக்கு த‌லைமையாக‌ இருப்ப‌வ‌ர் மிக‌ முக்கிய‌ ப‌ங்கு வ‌கிக்கின்றார்.
  
  கொலை செய்த‌ல் , க‌ற்ப‌ழித்த‌ல் போன்ற‌ பெரிய‌ குற்ற‌ங்க‌ளை ச‌ற்று த‌ள்ளி வைத்து விட்டு , ஆடு ம‌ற்றும் கோழிக‌ளை ப‌டையின‌ர் திருடுத‌ல் போன்ற‌ ஆதிவாசிக‌ளின் சிறிய‌ புகார்க‌ளை பாருங்க‌ள். இது மிக‌வும் மோச‌மான‌ ஒன்று. அந்த‌ ப‌டையின‌ரின் க‌ட்ட‌ளை த‌லைவ‌ர் ச‌ரியாக‌ இருந்தால் இது போன்ற‌ செயல்க‌ளை செய்வ‌த‌ற்கே ப‌டையின‌ர் அஞ்சுவ‌ர். ப‌ணியிலிருக்கும் ப‌டையின‌ர் த‌வறு செய்தால் அவ‌ர்க‌ள் த‌ண்டிக்க‌ப்ப‌ட‌ வேண்டும். இது அங்கு உள்ள‌ கிராம‌ வாசிக‌ளுக்கு தெரிய‌ வேண்டும்.அப்பொழுது தான் அவ‌ர்க‌ள் உங்க‌ளை ந‌ம்பி உங்க‌ள் ப‌க்க‌ம் வ‌ருவார்க‌ள்.

 நான் இங்கே கூறியுள்ள‌ மைய‌ காவ‌ல் ப‌டை, எல்லை பாதுகாப்பு ப‌டை என‌ எல்லாவ‌ற்றிலும் நான் ப‌ணியாற்றி உள்ளேன். மைய‌ காவ‌ல் ப‌டை ச‌ட்ட‌ ஒழுங்கை பாதுகாப்ப‌வ‌ர்க‌ள். த‌டிய‌டிக்கு  பெய‌ர் போன‌வ‌ர்க‌ள். ஆனால் இப்பொழுது காசுமீரில் அவ‌ர்க‌ள் ந‌ட‌த்துவ‌தோ வேறு. இவ‌ர்க‌ளும் கூட்ட‌த்தை நோக்கி க‌ற்க‌ளை எறிகின்ற‌ன‌ர். இது எப்பொழுதும் ந‌ட‌க்க‌கூடாத‌ ஒன்று. இப்பொழுது இங்கு ந‌ட‌ப்ப‌தெல்லாம் சீருடை அணிந்த‌ ஒரு க‌ல‌க‌க் கும்பல், சிருடை அணியாத‌ ஒரு கிள‌ர்ச்சி கும்பலின் மோதலே.
மைய‌ காவ‌ல் ப‌டையின் முக்கிய‌ பிர‌ச்ச‌னை என்ன‌வெனில் அவ‌ர்கள் ஒரு மாநில‌த்திற்க்கு செல்லும் போது அங்கு உள்ள‌ காவ‌ல்துறையிட‌ம் ஒப்ப‌டைக்க‌ ப‌டுகின்றார்க‌ள். இவ‌ர்க‌ளை கூட்ட‌த்தை க‌லைப்ப‌த‌ற்காக‌வும், க‌ல‌வ‌ர‌ங்க‌ளை க‌ட்டுக்குள் கொண்டுவ‌ருவ‌த‌ற்குமே மாநில‌ காவ‌ல் துறை பிர‌யோக‌ப‌டுத்துகின்ற‌து. இத‌னால் இவ‌ர்க‌ளின் ஒழுங்குமுறை மேலும் மோச‌ம‌டைகின்ற‌து. மிசோர‌ம், நாகாலாந்து போன்ற‌ இட‌ங்க‌ளில் இந்த‌ மைய‌ காவ‌ல் ப‌டையின‌ரே ஒழுங்குட‌ன் செய‌ல்ப‌ட்ட‌ன‌ர் கார‌ண‌ம் அங்கு இவ‌ர்க‌ள் இராணுவ‌த்திட‌ம் ஒப்ப‌டைக்க‌ ப‌ட்ட‌ன‌ர். நான் க‌ங்க‌ரில் உள்ள‌ காட்டு போர் ப‌யிற்சி ப‌ள்ளியில் உள்ள‌ பிரிகேடிய‌ர்.ப‌வாரின் ப‌யிற்சி என‌க்கு மிக‌வும் பிடித்த‌மானது.

 இராணுவ‌த்தை ந‌க்ச‌ல்க‌ளுக்கு எதிராக‌ க‌ள‌மிற‌க்குவ‌து ஒரு பேர‌ழிவை த‌ரும் என்று நீங்க‌ள் கூறுகின்றீர்க‌ள், அத‌ற்கான கார‌ண‌த்தை சொல்ல‌ முடியுமா?

  பீகார் ப‌டைக்குழுவில் உள்ள‌வ‌ர்க‌ளில் பெரும்பாலான‌வ‌ர்க‌ள் ஆதிவாசிக‌ளே, இதுவே இராணுவ‌த்தின் முத‌ல் பிர‌ச்ச‌னை. நீங்களே யோசித்து பாருங்க‌ள் இது போன்ற‌ ஒரு ப‌டைக்குழு , இன்னொரு ஆதிவாசி குழுவை எதிர்க்கும் போது என்ன‌ ந‌ட‌க்கும் என‌?
அவ‌ன‌து குடும்ப‌ம் அங்கே இருக்க‌லாம், அவ‌ன‌து உற‌வின‌ர்க‌ள் அங்கே இருக்க‌லாம், அவ‌ன‌து இன‌க்குழுவைச் சேர்ந்த‌வ‌ர்க‌ள் அங்கே இருக்க‌லாம். இதுவே ஒரு பேர‌ழிவை த‌ரும். இது போன்ற‌ பிர‌ச்ச‌னைக‌ளுக்குள் இராணுவ‌ம் வ‌ரவே கூடாது. என‌து க‌ருத்து மிக‌வும் தெளிவான‌து, பிர‌ச்ச‌னையின் மூல‌கார‌ண‌ங்க‌ளை அர‌சு க‌ளைய‌ முய‌ல‌ வேண்டும்.

 இந்த‌ பிர‌ச்ச‌னையில் நீங்க‌ள் யாரை தாக்க‌ போகின்றீர்க‌ள்? யாரை பிடிக்க‌ போகின்றீர்க‌ள்? நீங்க‌ள் அவ்வாறு யாரையும் பிடிக்க‌ முடியாது. அவ்வாறு ஒரு திட்ட‌ம் உள்ள‌தென்று தெரிந்தாலே, அவ‌ர்க‌ள் நூறு வெவ்வேறு திசைக‌ளில் சென்று விடுவார்க‌ள். அவ‌ர்க‌ள் ஆயுத‌மும் ம‌றைந்து விடும். நீங்க‌ள் அங்கே வாழ்கின்ற‌ அப்பாவிக‌ளை ம‌ட்டுமே பார்பீர்க‌ள். ந‌ம‌து ப‌டையின‌ர் அங்கு உள்ள‌ 30 பேரை கொன்று விட்டு நாங்க‌ள் 30 ந‌க்ச‌ல்க‌ளை கொன்றுவிட்டோம் என‌க்கூறுவார்க‌ள். இத‌ற்கு பிற‌கு அங்கு பிற‌க்கும் ஒவ்வொரு குழ‌ந்தையும் போராளியாக‌ மாறிவிடுவான்.
 நீங்க‌ள் ச‌ண்டை நிறுத்த‌ம் ஏதேனும் ஏற்ப‌டும் என்று க‌ருதுகின்றீர்க‌ளா?
   
  நான் உங்க‌ளுக்கு உறுதி கூறுகின்றேன் அவ்வாறு எந்த‌ ஒரு ச‌ண்டை நிறுத்த‌மும் வராது. ஏனேனில் இதை ஒருங்கிணைக்கும் மாவோயிசுட்டுக‌ள் ந‌ல்ல‌ ஒரு இய‌க்க‌த்தில் உள்ள‌ன‌ர். இப்போது அவ‌ர்க‌ள் இதை நிறுத்தினால் மீண்டும் இதை ஆரம்பிப்ப‌து மிக‌வும் க‌டின‌மான‌ ஒன்று. நான் அவ‌ர்க‌ள் ஆயுத‌ங்க‌ளை கீழே வைப்பார்க‌ள் என‌ நினைக்க‌வில்லை. நம‌து அர‌சு நில‌ம் ம‌ற்றும் காடுக‌ள் தொட‌ர்பான‌ கொள்கைக‌ளில் மாற்ற‌ம் கொண்டு வ‌ந்த பின் அதை‌ நாம் தான் அவ‌ர்களிடம் சொல்லி புரிய‌‌ வைத்து நம் மேல் ஒரு நம்பிக்கையை உருவாக்க வேண்டும்.

அவர்க‌ளுக்கான‌ ஆத‌ர‌வு த‌ள‌த்தை குறைத்து, இந்திய‌ ச‌ன‌நாய‌க‌த்தை மாவோயிசுட்டு புர‌ட்சி அமைப்பை விட‌ ந‌ல்ல‌ ஒன்றாக‌ மாற்ற‌லாமே?

ச‌ரியான‌ வார்த்தை. இதை நிக‌ழ்த்துவ‌த‌ற்கு எல்லா ச‌ந்திப்பு ,க‌ருத்த‌ர‌ங்கு  ம‌ற்றும் அம‌ர்வுக‌ளில் நாம் அர‌சை இந்த‌ பிர‌ச்ச‌னை தீர்ப்ப‌த‌ற்கு ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ சொல்லி வ‌லியுறுத்தி, அர‌சை நாம் ப‌ல‌ப‌டுத்த‌ வேண்டும். க‌ள‌ நில‌வ‌ர‌ங்க‌ளை ச‌ரி செய்யாம‌ல் உங்க‌ளால் எதையும் மாற்ற‌ முடியாது. அதிகமான‌ இராணுவ‌ம் அல்ல‌து ப‌டை இப்பிர‌ச்ச‌னையை மேலும் மோச‌மான‌ ஒன்றாக‌வே மாற்றும்.

இதை அர‌சிட‌ம் கூறியுள்ளீர்க‌ளா?
 
எந்த‌ கூட்ட‌ங்க‌ளிலெல்லாம் என்னால் பேச‌முடியுமே அங்கெல்லாம் இதை ப‌ற்றி நான் பேசி உள்ளேன்.
இந்த‌ ப‌குதிக‌ளை முன்னேற்ற‌ வேண்டும் என‌ அர‌சு கூறுகின்ற‌தே?

 முன்னேற்ற‌ம் என்ப‌து த‌வறான வார்த்தை பிரயோகம். அடிப்ப‌டை உரிமை என்ப‌தே ச‌ரியான‌ ஒன்று. இதை அர‌சு புரிந்து கொள்ள‌ வேண்டும். எப்ப‌டி நில‌ உச்ச‌ வ‌ர‌ம்பு ச‌ட்ட‌ம் கேர‌ளாவில் ந‌டைமுறைப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌து? ஏன் அங்கு மாவோயிசுட்டு கிள‌ர்ச்சி இல்லை? அங்கு என்ன‌ ந‌ட‌ந்த‌து என‌ தெரியுமா? ந‌ம்பூதிரிபாடின் ஆட்சியின் கீழ் அங்கே ச‌ட்ட‌ங்க‌ள் க‌டுமையாக‌ அம‌லுக்கு வ‌ந்தது. பனிரெண்டு வ‌ருட‌ங்க‌ளாக‌ விவசாய‌ம் செய்ப‌வ‌னுக்கு அந்த‌ நில‌ம் சொந்த‌ம் என்றும் ,இதில் நில‌ உரிமையாள‌ருக்கு எந்த‌ ஒரு இழ‌ப்பீடும் வ‌ழ‌ங்காமலும் அம‌லுக்கு வ‌ந்த‌து. ஆனால் நாம் இன்று 2010ல் உள்ளோம். பெரும்பாலான‌ ப‌குதிக‌ளில் ந‌ம‌து செய‌ல்பாடுக‌ளோ 1610ல் உள்ள‌தை போல‌வே உள்ள‌து. அமெரிக்காவிலோ, ஆசுதிரேலியாவில் காடுக‌ளில் த‌னிம‌ங்க‌ள், தாதுக்க‌ள் க‌ண்டுபிடிக்க‌ ப‌ட்டால் அங்கு வாழும் ப‌ழ‌ங்குடியின‌ருக்கே அது சொந்த‌ம் என்ப‌து உங்க‌ளுக்கு தெரியுமா? முத‌லில் இந்தியாவில் இது போல‌ த‌னிம‌ங்க‌ள், தாதுக்க‌ள் க‌ண்டுபிடிக்க‌ ப‌ட்டால் அது அங்கு வாழும் ப‌ழ‌ங்குடிக‌ளுக்கே சொந்த‌ம் என்று அறிவிக்க‌வேண்டும். புரிந்துண‌ர்வு ஒப்ப‌ந்த‌ங்க‌ள் அங்கு வாழும் ம‌க்க‌ளுட‌ன் அதை பிரித்து எடுக்கும் நிறுவ‌ன‌ங்க‌ள் செய்ய‌ வேண்டும். அத‌ன் பின்ன‌ர் அந்த‌ ம‌க்க‌ளுக்கு ச‌ட்ட‌ ரீதியான‌ உத‌விக‌ள் செய்து இலாப‌ம் அவ‌ர்க‌ள‌து க‌ண‌க்கிற்க்கு செல்கின்ற‌தா என‌ அர‌சு க‌வ‌னிக்க‌ வேண்டும். தில்லியில் உள்ள‌ அர‌சு இதை செய்வ‌த‌ற்கு த‌யாரா? எத‌ற்காக‌ அவ‌ர்க‌ள் இதைச் செய்ய‌ மாட்டார்க‌ள்? ஏனெனில் இங்கு ஒவ்வொரு புரிந்துண‌ர்வு ஒப்ப‌ந்த‌த்துட‌னும் அவ‌ர்க‌ளின் ஒரு சுவிசு வ‌ங்கி க‌ண‌க்கு இணைக்க‌ப்ப‌ட்டே உள்ள‌து.

நீங்க‌ள் கூறுகின்றீர்க‌ள் மாவோயிசுட்டு நாட்டில் வாழ‌ மாட்டேன் என்று. அதே போல‌ அவ‌ர்க‌ள் ஒரு திற‌மையான‌ ஆயுத‌ குழு (அ) 200 மாவ‌ட்ட‌ங்க‌ள் அவ‌ர்க‌ள் க‌ண்காணிப்பில் உள்ள‌து என்ப‌தையும் ஒருவ‌ராலும் ம‌றுக்க‌ முடியாது. இங்கே ப‌ல‌ பேரிட‌ம் உள்ள‌ ஒரு கேள்வியை நான் கேட்கிறேன். துணை இராணுவ‌த்தை அவர்க‌ளுக்கு எதிராக‌ போராட‌ அழைத்த‌து இங்கு மாவியிசுட்டுக‌ளை க‌ட்டுப‌டுத்தி உள்ள‌தா? அதாவ‌து இங்கு ந‌ட‌க்கும் அநீதிக‌ளை க‌ளைவ‌தன் மூலம் ?

 ஒரு சிறிய‌ ப‌குதியை எடுத்துக்கொள்வோம். அங்கே ப‌த்து ப‌டைய‌ணிக‌ளை நிறுவுங்க‌ள். கோழி , ஆடு திருடாம‌ல் த‌டுக்க‌, பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்காம‌லிருக்க‌, வீடுக‌ளை எரிக்காம‌லிருக்க‌ ஒரு ந‌ல்ல‌ த‌லைமை அங்கு வேண்டும். நான் காசுமீரில் எல்லை பாதுகாப்பு ப‌டையின‌ரின் த‌லைமை பொறுப்பில் இருக்கும் போது என‌து க‌ட்டுபாட்டில் 50 ப‌டைய‌ணிக‌ள் இருந்த‌ன‌. நான் தின‌மும் ந‌க‌ருக்கு சென்று ஒன்று அல்ல‌து இர‌ண்டு ப‌டைய‌ணிக‌ளை சுழ‌ற்சி முறையில் க‌வ‌னித்து வ‌ருவேன். மேலும் அங்கு வாழும் ம‌க்க‌ளிட‌ம் ப‌டைய‌ணிக‌ள் ஏதேனும் குற்ற‌ம் புரிந்துள்ள‌ன‌ரா என‌வும் கேட்பேன். குறிப்பாக‌ அங்கு ஏதாவ‌து க‌ல‌வ‌ர‌த்தை அட‌க்கும் ப‌ணி முடிந்த‌வுட‌ன் அங்குள்ள‌ ம‌க்க‌ள் ” உங்க‌ள் ப‌டைய‌ணிக‌ளில் உள்ள‌வ‌ர்க‌ள் ந‌ல்ல‌வ‌ர்க‌ள், அவ‌ர்க‌ள் எந்த‌ த‌வ‌றும் செய்ய‌வில்லை” என‌க் கூற‌ வேண்டும். இவ்வாறு ம‌க்க‌ள் கூறினால் தான் நிலைமை க‌ட்டுக்குள் இருக்கின்ற‌து. இது தான் ஒரு ச‌ரியான‌ த‌லைமை. என‌து ப‌டைய‌ணிக‌ளில் உள்ள‌வ‌ர்க‌ளுக்கு தெரியும் அவ‌ர்க‌ள் ஏதாவ‌து த‌வ‌று செய்தால் அத‌ற்காக‌ அவ‌ர்க‌ள் க‌டுமையாக‌ த‌ண்டிக்க‌ ப‌டுவார்க‌ள் என‌. அதனால் அவ‌ர்க‌ள் ஒழுங்காக‌ இருப்பார்க‌ள்.இது தான் இங்கே தேவை. ஒரு ச‌ரியான‌ த‌லைமை ம‌ற்றும் க‌ள‌த்தில் ப‌ணிபுரிந்த‌ ஒழுங்கான‌ வீர‌ர்க‌ள். இந்த‌ அர‌சு செய்த‌ ஒரு த‌வ‌று என்ன‌வென்றால் அவ‌ர்க‌ளுக்கு ஆம் என்று சொல்வ‌ர்க‌ள் தான் தேவை என்ற‌ நிலையை இன்று உருவாக்கி உள்ளது.

நீங்க‌ள் கூறுகின்றீர்க‌ள் இராணுவ‌ த‌லைமை, துணை இராணுவ‌த்தை விட‌ சிற‌ந்த‌து என‌. ஆனால் வ‌ட‌ கிழ‌க்கு ம‌ற்றும் காசுமீரில் இராணுவ‌ம் செய்கின்ற‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ள் இத‌ற்கு நேர்மாறாக‌ அல்ல‌வா உள்ள‌து?

   ஆம். இராணுவ‌ம் வ‌ட‌கிழ‌க்கு ப‌குதிக‌ளில் மிக‌ப் பெரிய‌ த‌வ‌றுக‌ளை செய்துள்ள‌து. நான் நாகாலாந்து ம‌ற்றும் மணிப்பூரில் வேலை செய்துள்ளேன். அந்த‌ ப‌குதிக‌ள் மிக‌ தொலைவில் உள்ள‌தால் இங்கு உள்ள‌வ‌ர்க‌ளுக்கு அங்கு என்ன‌ ந‌ட‌க்கிற‌து என்றே தெரியாது. இதில் அங்கு வாழும் ம‌க்க‌ளுக்கு இந்தியாவுட‌ன் இருப்ப‌து பிடிக்க‌வில்லை என்ப‌தில் எந்த‌ ஒரு ஆச்ச‌ரிய‌மும் இல்லை. இருந்தாலும் பொதுவாக‌ கூறுகையில், இராணுவ‌ த‌லைமைக‌ள் ம‌ற்ற‌ ப‌டை த‌லைமைக‌ளை விட‌ மேல். ஏனெனில் இங்கு த‌லைமைக‌ள் அர‌சிய‌ல்வாதிக‌ளால் நிய‌மிக்க‌ ப‌டுப‌தில்லை. முழு த‌குதி, திற‌மை அடிப்ப‌டையிலேயே இராணுவ‌த்தில் த‌லைமைப் ப‌த‌வி கொடுக்க‌ப‌டுகின்ற‌து. எல்லை பாதுகாப்பு ப‌டையில் நீங்க‌ள் த‌லைமை பொறுப்பிற்க்கு வ‌ருவ‌த‌ற்கு நீங்க‌ள் எவ்வ‌ள‌வு கால்களை ந‌க்கியுள்ளீர்க‌ள் என்ப‌தே த‌குதி. இர‌ண்டிலும் அமைப்பு முறை மாறுப‌டுகின்ற‌து.

ந‌ன்றி. தெக‌ல்கா வார‌ இத‌ழ்.

மூல‌ப்ப‌திவிற்கான‌ இணைப்பு :

http://www.tehelka.com/story_main45.asp?filename=Ne120610bringing_on.asp 

 ப‌.ந‌ற்ற‌மிழ‌ன்.

காவ‌ல் துறையால் க‌ட்ட‌மைக்க‌ப‌டும் “இசுலாமிய‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ம்”,ஒத்து ஊதும் ஊட‌க‌ங்க‌ளும் – ப‌.ந‌ற்ற‌மிழ‌ன்


இந்தியாவில் எப்பொழுதெல்லாம் குண்டு வெடிக்கின்றதோ , அதன் அடுத்த நாள் முழுவதும் ஊடகங்கள் ஒரு செய்தியை தாங்கிவரும், அது தான் “இசுலாமிய பயங்கரவாதம்”. அரச அதிகாரம் அந்த குண்டுவெடிப்பிற்க்கு காரணமாகவும், அதன் மூளையாகவும் செயல்பட்டதாக கூறி சில இசுலாமியர்களை கைது செய்யும். அரசு மற்றும் ஊடகங்களினால் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றது இந்த‌ இசுலாமிய பயங்கரவாதம். ஆனால் இதன் பின்னர் நடப்பவை எதுவுமே பெரும்பான்மையான ஊடகங்களில் வெளிவருவதில்லை (அ) வெளிவிடப்படுவதில்லை.இதை பற்றி பின்னர் விரிவாக பார்ப்போம். ஆனால் செய்திகளில் குற்றவாளிகளாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மக்கள் மனதில் தீவிரவாதி என்ற உருவத்தை பெறும் வரை ஊடகங்கள் விடுவதில்லை. இந்த செய்திகளெல்லாம் உண்மை, அவர்கள் எல்லாம் தீவிரவாதிகள், எல்லா இசுலாமியர்களும் இவ்வாறு தான் என்ற எண்ணம் கொண்ட ஒரு வர்க்கம் உருவாகிவருகின்றது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. இந்த கருத்தாக்கம் புனையப்பட்ட ஒன்று என்பதை விளக்கவே இந்த மொழிபெயர்ப்பு. அரசு புனையும் வழக்குகளும் , அதில் தீவிரவாதியாக குற்றம் சாட்டப்பட்டவரைப் பற்றியும், அந்த வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றியும் இங்கு நாம் காணப்போகின்றோம்.இந்த கட்டுரை இசுலாமியர்கள் அனைவரும் தீவிரவாதிகளே என்ற கருத்தாக்கத்தை உடைப்பதற்கான ஒரு மிகச்சிறிய முயற்சி.

 “சிறப்பு சிறைத் துறை” தில்லி காவல்துறையால் 1986ல் தீவிரவாதத்தை தடுப்பதற்காக உருவாக்கப்பட்டது. 1990களில் இது பரவலாக எல்லோராலும் அறியப்பட்டது. இதற்கு காரணம் இவர்கள் பல தீவிரவாதிகளை கொன்றதும், பல வழக்குகளை விசாரித்து முடித்து வைத்ததுமே. இதே நேரத்தில் இந்த துறையில் உள்ள அதிகாரிகளே இந்த‌ சிறையில் ப‌ல‌ தொந்த‌ர‌வுக‌ள் ந‌டைபெறுவ‌தாக‌வும், போலியான‌ கார‌ண‌ங்க‌ளை காட்டி கொலை செய்வ‌தும் நிக‌ழ்ந்துள்ள‌தாக‌ கூறுகின்ற‌ன‌ர். மிக‌வும் முக்கிய‌ வ‌ழ‌க்க‌றிஞ‌ரான‌ பிர‌சாந்த் பூச‌ன் கூறுகையில் “துர‌திஷ்டவச‌மாக‌ எப்பொழுதெல்லாம் நீதிம‌ன்ற‌ம் அவ‌ர்க‌ள்(சிற‌ப்பு சிறைத் துறை) புனைய‌ப்ப‌ட்ட‌ ஆதார‌ங்க‌ளை கொண்டு வழக்கை உருவாக்கியுள்ளார்கள் எனத் தெரிகின்றதோ அந்த வழக்குகளில் அவர்களுக்கு எதிராக “ஒரு கண்டனத்தை கூட” ப‌திவு செய்வ‌தில்லை. இவ்வாறு செய்யும் அதிகாரிக‌ள் மிக‌ க‌டுமையாக‌ ச‌ட்ட‌த்தின் மூல‌ம் த‌ண்டிக்க‌ ப‌டும் வ‌ரை, இந்த‌ காவ‌ல் துறை அதிகாரிக‌ள் அப்பாவி பொதும‌க்க‌ளை தீவிர‌வாதி என்று சித்த‌ரிப்ப‌தை நிறுத்துவார்க‌ள்”. அவ‌ர் மேலும் கூறுகையில் தில்லியில் உள்ள‌ கீழ்நிலை நீதிம‌ன்ற‌ங்க‌ள் ம‌ட்டும் க‌ட‌ந்த‌ நான்கு மாத‌ங்க‌ளில் ம‌ட்டும் தீவிர‌வாதியாக சிறப்பு சிறைத் துறையால் குற்ற‌ம் சாட்ட‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளை குற்ற‌ம‌ற்ற‌வ‌ர்க‌ள் என‌க்கூறி விடுத‌லை செய்துள்ள‌து. இதில் நால்வ‌ர் தெற்கு தில்லியில் ந‌டைபெற்ற‌ காவ‌ல் துறையின் போலி கொலைக‌ளுக்கு பிற‌கு கைது செய்ய‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள். இவ‌ர்க‌ள் நால்வ‌ரும் டேராடூனில் உள்ள‌ இந்திய‌ இராணுவ‌ அகாத‌மியில் மிக‌ப் பெரிய‌ தீவிர‌வாத‌ செய‌ல் திட்ட‌ம் தீட்டி உள்ள‌தாக‌ கூறி கைது செய்ய‌ப்ப‌ட்ட‌ன‌ர். இவ‌ர்க‌ள் அனைவ‌ரும் ஐந்து வ‌ருட‌ங்க‌ளுக்கு பிற‌கு குற்ற‌ம‌ற்ற‌வ‌ர்க‌ள் என‌ விடுத‌லை செய்ய‌ப்ப‌ட்ட‌ன‌ர். இவ‌ர்க‌ளை ப‌ற்றிய புனையப்பட்ட தீவிரவாத வ‌ழ‌க்கு ம‌ற்றும் அத‌ன் தீர்ப்பு பற்றிய விவ‌ர‌ங்களே இக்க‌ட்டுரை என‌க்கூறுகின்றார் தெக‌ல்கா நிருப‌ர் பிர்ஜேஷ் பாண்டே.

———

தில்வார் கான் மற்றும் மசூத் அகமது தன்னை கடந்து செல்லும் காவலாளியின் ஒரு சிறு பார்வை போதும் இவர்கள் இருவரின் முதுகுதண்டு வழியே பயம் படர்ந்து செல்ல , இதற்கு பின்னால் ஒரு காரணமும் உண்டு. தில்வார் இவர் டெல்லியின் வட கிழக்கு பகுதியில் உள்ள இமாம்‍- உல்‍- உலூம் மதராசாவில் ஆசிரியராக பணியாற்றுகின்றார். மசூத் பகவாலி மசூதியில் இமாமாக இருப்பவர்.

மார்ச் 2005 அன்று அருகிலுள்ள காவல் நிலையத்திற்க்கு விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்று, அங்கிருந்தி டெல்லியின் தெற்கு பகுதியான லோதி காலணியில் உள்ள டெல்லி சிறப்பு சிறைத் துறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். இவர்கள் இருவரும் வெளியில் வந்து பொது மக்களை பார்த்து ஐந்து வருடங்கள் ஆகின்றது. இலசுகர் இ தொய்பா தீவிரவாதிகள் என இவர்கள் இருவரும் முத்திரை குத்தப்பட்டது. மேலும் டேரா டூனில் உள்ள இந்திய இராணுவ பள்ளியில் தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டனர்.

 பாட்டியாலா நீதி மன்றம் இவர்களின் மேலான குற்றச்சாட்டிற்க்கு தொடர்பான ஆவணங்கள் இல்லாததால் போன மாதம் (சனவரி 2010) விடுவிக்கும் வரை இவர்கள் இருவரும் கடந்த ஐந்து வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். மேலும் நீதி மன்றம் தனது தீர்ப்பில் சிறப்பு சிறைத் துறையின் விசாரிக்கும் முறையில் உள்ள குழப்பங்களையும், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியமைக்கும் கண்டனம் தெரிவித்தது.

 கமீத் என்ற இலசுகர் இ தொய்பா உறுப்பினரின் வாக்குமூலம் ஒன்றை வைத்து மட்டுமே காவல்துறை தில்வாரி மற்றும் மசூத்தை கைது செய்தது. மேலும் கமீத் தனது வாக்குமூலத்தில் தில்வாரியிடம் பாகிசுதான் தீவரவாதிகளின் வெடி மருந்து பெட்டகம் ஒன்று இருப்பதாகவும் கூறினான். கமீதே தில்வாரி மற்றும் மசூதை அடையாள‌ம் காட்டினான்.இவர்களிடம் இருந்து ஒரு வெடிகுண்டும், சீன வகை துப்பாக்கும் கைப்பற்றப்பட்டதாக காவல் துறை கூறியது.

 தில்வார் தனக்கு நடந்த விசாரணை பற்றி நினைவு கூறுகின்றார் ” என்னைச் சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பதை அறிவதற்கே எனக்கு வெகு நேரமாயிற்று. அவர்கள் கேட்ட கேள்வியெல்லாம் ஒன்று தான். உனக்கு கமீதை தெரியுமா. நான் அவரை எனக்கு தெரியாது எனக் கூறிய போதெல்லாம் அவர்கள் என்னை தொந்தரவு செய்து திரும்ப திரும்ப அதே கேள்வியையே மீண்டும் கேட்டனர். அவர்கள் என்னை ஒரு வெள்ளை காகிதத்தில் கையெழுத்திட கோரினர். நான் கையெழுத்திட தொடர்ந்து மறுத்து வந்தேன்.உன் வாழ்நாளில் மறக்கமுடியாத ஒரு பாடத்தை நீ படிப்பாய் என அவர்கள் என்னிடம் கூறினார்கள்.

மசூத்திற்க்கும் அதே நிலையே, முதலில் அவர்கள் கமீதை அடையாளம் காட்டச் சொன்னார்கள், பின் அந்த தற்கொலை தாக்குதல் திட்டத்தை பற்றி விவரிக்க சொன்னார்கள், எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நேரம் ஆக ஆக நிலைமை மோசமானது.நாங்கள் ஒளிவாங்கியின் முன்னால் நாங்கள் மிருகங்களை போல நடத்தப்பட்டோம். சிறப்பு சிறைத் துறை அதிகாரிகள் தீவிரவாதியாக குற்றம் சாட்டப்பட்ட எங்களுக்கு அருகில் நின்று கொள்வதற்கு மிகவும் ஆசை பட்டனர். ஏனென்றால் அப்பொழுது தானே செய்திகளில் அவர்களும் தோன்றுவர். ஒரு அதிகாரி என்னை நன்றாக நிற்க சொன்னார் (தில்வாரி). கடவுளின் மீதான எனது நம்பிக்கை அந்த ஒரு நிலையில் என்னை சோதித்தது. நான் இந்த நிலைக்கு வர என்ன செய்தேன்? கைதான பின்னர் இவர்கள் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்திக்க முடியவில்லை. பொறுமையாக இந்த வழக்கு விசாரணைக்கு வருவதற்காக காத்திருந்தனர்.

வழக்கில் தீர்ப்பு வருவதற்கு நீண்ட காலமாகியது, சனவரி எட்டு வந்த அந்த தீர்ப்பு இவர்களை எல்லா வழக்குகளிலிருந்தும் விடுவித்தது. நீதிபதி. சர்மா இவ்வாறு தனது தீர்ப்பில் கூறுகின்றார் “அரச தரப்பினால் வைக்கப்பட்ட ஆதாரங்கள் எதுவும் நம்பும் விதம் இல்லை. தில்வார் கைது செய்யப்பட்டதாக கூறும் வீட்டில் அவர் வாழ்ந்ததற்கான ஆதாரமே இல்லை. மேலும் சிறப்பு சிறைத்துறை  ஆய்வாளரான இரமேசு லாம்பா டெல்லியின் வடகிழக்கு பகுதியின் நுழைவு பகுதியில் இருந்த தில்வார் மற்றும் மசூதை அரை மணி நேர இடைவெளியில் கைது செய்துள்ளார்.

ஆனால் அவர்கள் வீட்டில் இருந்து கைப்பற்றபட்டதாக கூறும் வெடி மருந்து பொருட்களை பற்றி ஒரு வார்த்தை கூட இந்த வழக்கு விசாரணையில் அவர் கூறவில்லை. இதில் மிகவும் விசித்திரமானது என்னவென்றால் ஆய்வாளார் இரான் சிங்கின் கூற்றே. அவர் கூறுகிறார் தில்வாரை கைது செய்த பின்னர் நாங்கள் அலுவலகத்துக்கு சென்ற பின்னர் திரும்பச் சென்று மசூதை கைது செய்தோம் (மசூதும் அதே பகுதியை சேர்ந்தவர் என்பதை நினைவில் கொள்க). இந்த கூற்றும் ஆய்வாளர் இரமேசின் கூற்றும் வேறுபடுகின்றன. அவர் கூறுகையில் இருவரையும் ஒருவர் பின் ஒருவராக கைது செய்தோம் என்றார். அதாவது ஒரே பகுதியில் வாழ்ந்த இருவரில் ஒருவரை கைது செய்ய மட்டும் இரான் சிங்கை சேர்த்தும் இரண்டாம் அவரை கைது செய்யப்போகும் போது அவரை சேர்க்காததும் விசித்திரமானது. மேலும் நீதிபதி கூறுகையில் ” இவர்களை கைது செய்ய போகும் போது அடையாளம் காட்ட கமீது சென்றாரா என்பது ஐயத்திற்கிடமானது ஏனென்றால் காவல்துறை தினக்குறிப்புகளில் அப்படி ஒரு பெயரே இல்லை”.

 நான் சிறையிலிருந்து வெளிவந்த பின்னர் நான் ஒரு விசித்திரமான உலகில் வாழ்வது போல எனக்கு தோன்றியது. என் மேலான தீவிரவாதி என்ற முத்திரை என்னை விட்டு போய்விட்டது என‌ நான் நம்பவே எனக்கு சில காலம் ஆயிற்று எனக் கூறுகின்றார் தில்வார். மசூத்தோ ஒரு சிறிய புன்னகையுடன் கடவுளுக்கு நன்றி சொல்கின்றார். ஆனால் இந்த மனநிலை சில நேரமே நீடித்தது. அதற்கு அடுத்த நாளே காவல் துறை அதிகாரிகள் வந்து அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு தில்வாரியை வர சொன்னார்கள். தில்வாரியின் கண்முன்னே கடந்த ஐந்து வருட கால துன்பமும் வந்து சென்றது. ஆனால் தில்வாரின் வழக்கறிஞர் இது போன்ற காவல் துறை தொந்தரவுகளிலிருந்து சற்று தள்ளியே இரு எனக் கூறிச்சென்றார். நீதிமன்றம் நான் குற்றமற்றவன் எனக் கூறிய பின்னும் என்னை விட்டு அந்த பயம் மட்டும் அகலவே இல்லை. என் இறப்பிற்கு பிறகு தான் அது மறையும் என விரக்தியுடன் கூறுகின்றார் தில்வாரி.

 ——————————–

 கரூண் ரசீத் வேலை பார்ப்பதற்க்காக தான் சிங்கப்பூர் செல்வது தன்னை இந்த அளவில் பாதிக்கும் என கரூண் ரசீத் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இவர் பீகாரில் இயந்தரவியல் தொழில்நுட்பம படித்தவர். 2004ல் இந்துசுதான் ஏரோநாட்டிகல் நிறுவன பணியிலிருந்து வெளியேறி சிங்கப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் 22 மாத கால பயிற்சியில் சேர சென்றார். பின்னர் மே 16, 2005ல் தனது குடும்த்தாரை பார்வையிட வந்த இவரை இந்திராகாந்தி விமான நிலைத்திலேயே சிறப்பு சிறைத் துறை இவரை கைது செய்தது. டேரா டூனில் உள்ள இந்திய இராணுவ பள்ளியில் தற்கொலை தாக்குதல் நடத்த பண உதவி புரிந்ததாக இவர் மேல் குற்றம் சாட்டப்பட்டது. டெல்லி சிறப்பு சிறைத் துறை அதிகாரிகளின் கூற்றுப்படி கரூண் இரண்டு முறை சிங்கப்பூரிலிருந்து மொத்தம் ரூபாய் 49,000ஐ தனது தம்பி மொகமதிற்க்கு சனவரி 10 மற்றும் 15 திகதிகளில் இரண்டு தவணைகளில் அனுப்பி உள்ளார். மொகமது அந்த பணத்தை சாமிற்க்கு அனுப்பி உள்ளார். இந்த சாம் என்பவர் உத்தம் நகர்(மார்ச் 2005) துப்பாக்கி சண்டையில் இறந்த மூவரில் ஒருவராவர்.அதே போல கரூண் தான் பாகிசுதானின் அப்துல் அசீசிடமிருந்து பணம் பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.மேலும் 76 பக்க மின்மடல் ஒன்று ஃபரூக் என்ற பெயரில் இவர் சங்கேத மொழியில் மற்றொரு தீவிரவாத இயக்கத்திற்க்கு எதிர்கால திட்டம் பற்றி அனுப்பி உள்ளதாகவும், இவரை கைது செய்தது ஒரு முக்கியமான நிகழ்வு என்றும் காவல் துறை கூறுகின்றது.

ஆனால் கரூணின் வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது முற்றிலும் மாறுபட்ட நிலை நிகழ்ந்தது. தீவிரவாத நிகழ்வுகளை தடுப்பதற்காக கொடுத்த அதிகாரங்களை சிறப்பு சிறைத் துறை தவறாக பிரயோகபடுத்தவதாக குற்றச்சாட்டு எழுந்தது. கரூணின் வழக்கறிஞரான கானின் வாதம் “கரூண் மிக ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். சிங்கப்பூர் செல்வதற்காக தனது மாமாவிடமிருந்து இவர் ஒரு இலட்சம் கடன் வாங்கியுள்ளார். அங்கு சென்றவுடன் தனக்கு இவ்வளவு பணம் தேவையில்லை என்று தெரிந்தவுடன் இவர் ரூபாய் 49,000ஐ தனது தம்பிக்கு அனுப்பி கடனை திருப்பி செலுத்த கோரியுள்ளார். அந்த பணம் தீவிரவாத செயல்களுக்கு பயன்பட்டது இவருக்கு எப்படி தெரியும்?” இந்த வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

கரூணின் தம்பி மொகமது தான் சாமிற்க்கு பணம் கொடுக்கவே இல்லை என நீதிமன்றத்தில் கூறினார். காவல்துறையும் கரூணிற்க்கும் இலசுகர் இ தொய்பா அமைப்பிற்க்கும் தொடர்பு படுத்தி எந்த ஒரு ஆதாரத்தையும் காட்டவில்லை. மேலும் கரூணிடம் இருந்து சென்றதாக கூறப்பட்ட மின்மடலும் போலி என்று குறுக்கு விசாரணையில் நிரூபிக்கப்பட்டது. ”மே 18 ஆம் திகதி கரூணின் மின்மடல் முகவரியின் சங்கேத குறி சொல்லின் மூலம் அந்த மின்மடலை கண்டுபிடித்து ஒரு பிரதி எடுத்ததாக நீதிமன்றத்தில் கூறினார் ஆய்வாளர் கைலாசு”. ஆனால் ஆய்வாளர் பத்ரிநாத்தின் கூற்றுப்படி மே 13, 2005 அன்றே கரூண் தனது மின்மடல் முகவரிக்கான சங்கேத குறிச்சொல்லை தங்களிடம் கொடுத்ததாகவும் அன்று நடந்த விசாரணையின் போது ஆய்வாளர் கைலாசும் இருந்தார் என்றார். அப்படியானால் இந்த ஐந்து நாட்களில் காவல் துறையின் மூலம் புனையப்பட்ட ஒன்றே இந்த மின்மடல் என நிருவப்பட்டது. இந்த மின்மடலின் பிரதி கூட வழக்கின் பிரதியுடன் இணைக்கப்பட வில்லை. இந்த மின்மடலை பற்றிய எந்த ஒரு குறிப்பும் காவல்துறையின் குறிப்பேடுகளில் இல்லை. இதன் மூலம் ஆய்வாளர் கைலாசு பொய் கூறியது நிரூபணமாகியது.

 இறுதியாக கரூண் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால் இன்னமும் அவரிடம் இருந்து அந்த பயம் போகவில்லை எனக்கூறுகின்றார் அவர் வழக்கறிஞர் கான்.மீண்டும் காவல் துறையின் மீது அவருக்கு நம்பிக்கை வர பல காலம் பிடிக்கும் எனவும் கூறுகின்றார் அவர்.

 ——————————-

 எனது இளமை காலத்தை யார் திருப்பித் தருவார் சொல்லுங்கள்? இஃப்திகார் மாலிக் டேரா டூனில் உள்ள இந்திய இராணுவ பள்ளியில் தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும் இலசுகர் இ தொய்பாவுடன் தொடர்பு உள்ளதாகவும் கூறி கைது செய்யப்பட்டு ஐந்து வருடங்கள் சிறையில் இருந்த இஃப்திகாரின் வாழ்க்கையில் இப்பொழுது தான் வெளிச்சம் வர ஆரம்பித்துள்ளது. இஃப்திகார் வயது 26, டேரா டூனில் உள்ள டால்பின் உயிரி மருத்துவம் மற்றும் இயற்கை அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு உயிரி மருத்துவம் பயிலும் ஒரு மாணவர். இவர் மார்ச் 7,2005 அன்று டெல்லி சிறப்பு சிறைத் துறையினால் கைது செய்யப்பட்டார். ஒரு செய்தியாளர் சந்திப்பில் தங்களிடம் ஒரு நாட்குறிப்பேடு கிடைத்துள்ளதாகவும் அதில் குசராத் மதக்கலவரத்தின் மறுவினையாக டேராடூனில் உள்ள இந்திய இராணுவ பயிற்சி பள்ளியின் அணிவகுப்பின் போது தற்கொலை தாக்குதல் நடத்த வேண்டும் என்றும், மேலும் குரானில் இருந்து தீவிரமான சில பத்திகளும் அதில் உள்ளதாகவும் கூறியது சிறப்பு சிறைத் துறை. மேலும் இஃப்திகார் பாகிசுதானிய தீவிரவாதி சாமுடன் எப்பொழுதும் தொடர்பிலேயெ இருப்பதாகவும், சாமின் அறிவுறுத்தளின் பேரிலே இஃப்திகார் இசுலாமிய மாணவர்கள் முண்ணனி நடத்திய கூட்டங்கள் பீகாரில் நடைபெற்ற போது சென்று கலந்து கொண்டதாகவும் கூறியது. மேலும் இஃப்திகார் சாமின் நாட்குறிப்பேட்டில் சாகித் என்று குறிக்கப்பட்டதாகவும், இஃப்திகாருக்கு இலசுக்கர் கல்வியுதவி செய்ததாகவும் கூறியது. ஆனால் இஃப்திகாரோ இதற்கும் எனக்கும் சம்மபந்தமில்லை என கூறிய பின்னும் அவர் விடுவிக்கப்படவில்லை.நீதிபதி சர்மாவே இந்த வழக்கில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டி, இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்தார். தனது தீர்ப்பில் அவர் மேலும் இவ்வாறு கூறுகின்றார் ” ஆய்வாளர் இரமேசின் கூற்றுப்படி ஆய்வாளர் கைலாசு டேரா டூன் சென்று இஃப்திகார் வீட்டில் இருந்து கைப்பற்றியதாக கூறிய இராணுவ பள்ளி நுழைவு சீட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். ஆனால் அது ஐந்து மாதங்களுக்கு முன் நடைபெற்ற ஒரு நிகழ்வு என்றும் அணிவகுப்பு சமீபட்தில் தான் நடைபெற்றது என பின்னர் குறுக்கு விசாரணயில் தெரிய வந்தது. மேலும் ஆய்வாளர் கைலாசு டேரா டூன் சென்றதே இல்லை என்ற அதிர்ச்சியான செய்தியும் தெரிய வந்தது. மேலும் இஃப்திகார் தன்னை வற்புறுத்தி தான் குசராத் மதக்கலவரத்திற்க்கு எதிரான தாக்குதல் தொடர்பான குறிப்பு எழுதிவாங்கப்பட்டது என்றும் நீதிமன்றத்தில் கூறினார். மேலும் குரானில் இருந்து தீவிரமான பத்திகள் எழுதப்பட்டதாக காவல் துறை கூறியதும் பொய் அந்த பத்திகளில் உள்ளது சாதாரண வார்த்தைகளேயாகும். மேலும் இஃப்திகார் கைது செய்யப்படுவது பற்றி வீட்டின் உரிமையாளருக்கு கூறவில்லை. மேலும் கைதின் போது எந்த ஒரு பொது மக்களுமே பார்க்கவில்லை என்பது மிகவும் ஆச்சர்யமானது என தனது தீர்ப்பில் கூறியுள்ளார் சர்மா. மேலும் குறுக்கு விசாரணையின் போது இஃப்திகாரின் நாட்குறிப்பு மற்றும் தீவிரவாத குறிப்பை டேரா டூன் சென்று கைப்பற்றியதாக கூறிய ஆய்வாளர்கள் சஞ்சய் தத் மற்றும் பத்ரிநாத் இதுவரை டேரா டூன் சென்றதே இல்லை என்றும், அது ஒரு புனையப்பட்ட ஆதாரம் என்றும் நிரூபணமானது. மேலும் ஒரு ஆய்வாளர் அந்த குறிப்புகள் இந்தியில் இருந்ததாகவும் மற்றொருவர் ஆங்கிலத்தில் இருந்ததாகவும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை நீதிமன்றத்தில் கூறினர். மேலும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் இஃப்திகார் இலசுகர் அமைப்புடன் தொடர்புடையவர் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்றும், மேலும் உத்தம் நகரில் சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகளை இவருக்கு தெரியாது என்றும் கூறியது. இறுதியாக இஃப்திகார் விடுதலை செய்யப்பட்டார். இவரின் சகோதரியின் திருமணம் 2010ல் நடக்க உள்ளது , இந்த வருடம் இவருக்கு சில நம்பிக்கைகளை தந்தாலும் காவல்துறையின் மீதான பயம் மட்டும் போகுமா என்பது ஐயமே……

——————————————

இன்னும் அவர்கள் என்னை தீவிரவாதி என்றே கருதுகின்றனர். குல்சார் அகமது ஞானி மொகமது அமின் கசாம் ”இனி ஒரு பொழுதும் இந்தியாவில் எங்கும் நான் பயணிக்கமாட்டேன்” எனக்கூறுகின்றார். குல்சார் அகமது . ஏனென்றால் அவர் 2006ல் முதல் முறையாக காசுமீரை விட்டு டெல்லி நோக்கி பயணித்தது அவரது வாழ்க்கையில் பல விபரீத மாற்றங்களை ஏற்படுத்தி விட்டது.

இவர் ஒரு இளங்கலை அறிவியல் மாணவராவார். மொகமது அமின் சம்மு காசுமீர் வருவாய் துறையில் உதவியாளராக பணியாற்றியவர். மொகமது அமீனின் சகோதரி திருமணத்திற்க்கு தங்க ஆபரண‌ங்கள் வாங்குவதற்காக இருவரும் நவம்பர் 23, 2006 அன்று டெல்லி சென்றனர். ஆனால் இவர்கள் டிசம்பர் 10, 2006 அன்று சிறப்பு சிறைத் துறை அதிகாரிகளால் பொதுமக்கள் முன்னிலையில் கைது செய்யப்பட்டனர். மேலும் இவர்கள் இருவரும் இலசுகர் இ தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும் இவர்களிடம் இருந்து 1.5 கிலோ வெடி மருந்தும், ரூபாய் 6 இலட்சம் பணமும் கைப்பற்றப்பட்டதாக கூறியது காவல் துறை. மேலும் காவல் துறை அபு தகிர் என்ற இலசுகர் இ தொய்பாவின் பிராந்திய தலைவர் ஒருவரின் அலை பேசியை ஒட்டுக்கேட்டதாகவும், அதில் அவர் காசுமீரில் இருந்து இரண்டு நபர்களை வெடி மருந்து வாங்கிச் செல்வதற்கும் , பணம் வாங்கி செல்வதற்கும் அனுப்புவதாக கூறியதாகவும் கூறினர். இந்த குறிப்பின் மூலம் முன்னாள் ஆய்வாளர் மோகன் தலைமையிலான குழு சென்று இவர்கள் இருவரையும் டிசம்பர் 10 அன்று தாவுலாகானிலிருந்து மாகிபல்பூர் செல்லும் வழியில் கைது செய்தனர்.

 மேலும் காவல் துறை அவர்களை கைது செய்த இடத்திலிருந்து ஒரு ஒளிப்படத்தையும் வெளியிட்டது. ஆனால் குல்சார் வேறு வித தகவலை தருகின்றார். அதை நீதிபதி சர்மா தனது தீர்ப்பில் வெளிபடுத்தியுள்ளார். “வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆவண‌ங்கள் எல்லாம் கண நேரத்தில் தயாரிக்கப்பட்டவை”, “இது ஒரு தவறான அணுகுமுறையாகும்”, ” நான் இது ஒரு மனிதனின் தவறான செயலா அல்லது வேறு ஏதேனும் ஒன்றா என வியக்கின்றேன்”, இந்த தவறுகள் எல்லாமே இது ஒரு புனையப்பட்ட வழக்கு என்பதை தெளிவுற காட்டுகின்றது” என தனது தீர்ப்பில் நீதிபதி கூறுகின்றார். குல்சாரி கூறுகின்றார் தானும் மொகமதும் டெல்லியில் கடந்த நான்கு நாட்கள் இருந்ததாகவும், தாங்கள் காசுமீரிக்கு திரும்பச் செல்லும் போது 30 ஆயுதமேந்திய பொது மக்கள் உடையிலிருந்த சிலர் நாங்கள் பயணம் செய்த தானியை மறித்து எங்களை வெள்ளை நிற வண்டியில் ஏற்றினார்கள். எங்கள் கண்கள் கட்டப்பட்டன. பின்னர் தான் தெரிந்தது நாங்கள் லோதி காலணியில் உள்ள சிறப்பு சிறைச் சாலையில் இருக்கின்றோம் என்பது. எங்களை அவர்கள் தொடர்ந்து துன்புறுத்தினார்கள் எங்களுக்கு மின்சார அதிர்வுகள் தொடர்ந்து 12 நாட்கள் கொடுக்கப்பட்டன.

 அவர்கள் திரும்ப திரும்ப நீங்கள் இலசுக்கர் அமைப்பைச் சேர்ந்தவர்கள், நீங்கள் இங்கே வெடி மருந்து வாங்கவே வந்தீர்கள் என சொன்னார்கள். டிசம்பர் 10, 2006 அன்று இரவு 10.30 மணி அளவில் எங்களிடம் வந்து உங்களை ஒரு இடத்திற்க்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றார்கள். நாங்கள் நினைத்தோம் அவர்கள் என்னை கொல்ல போகிறார்கள் என. அவர்கள் எங்கள் கண்களை கட்டி ஒரு வெள்ளை நிற கனரக வண்டியில் ஏற்றி சென்றார்கள், அது ஒரு சந்தை பகுதியில் நின்றது. அங்கு நாங்கள் இறக்கிவிடப்பட்டு உட்காரவைக்கப்பட்டோம், எங்களின் அருகே ஒரு பையையும் அவர்கள் வைத்தனர். அதில் அதிக பணமும் மற்றும் சில பொருட்களும் இருந்தன. ஆனால் அவை யாவும் எங்களுடையவை அல்ல. அந்த வண்டியிலிருந்த ஒருவர் கையில் ஏ.கே இரக துப்பாக்கிகளையும், சில கைத்துப்பாக்கிகளையும் வைத்து ஒளிப்படங்களை எடுத்துக்கொண்டார். பின்னர் அவர்கள் அங்கு இருந்தவர்களிடம் தாங்கள் வெடி மருந்து மற்றும் பணத்துடன் இரு தீவிரவாதிகளை கைது செய்துள்ளதாகவும் கூறினர்.

 மீண்டும் அவர்கள் எங்களை சிறப்பு சிறைக்கே அழைத்துச் சென்றனர். அடுத்த நாள் அவர்கள் தீசு கசாரி நீதிமன்றத்திற்க்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள் நீதிபதி எங்களை எதுவும் கேட்கவில்லை மேலும் ஐந்து நாட்கள் சிறையில் வைத்திருக்க அனுமதி அளித்தார். அந்த ஐந்து நாட்களில் அவர்கள் எங்களை வெறும் காகித்ததில் பல முறை கையெழுத்து வாங்கினர். அதன் பின்னர் நாங்கள் மூன்று வருடம் தீகார் சிறைச் சாலைக்கு அனுப்பப்பட்டோம். சிறப்பு சிறைச் சாலை காட்டிய ஆதரங்கள் அனைத்தும் புனையப்பட்டவையே ஆகும். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது அவர்கள் பயணம் செய்ததாக கூறப்பட்ட பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருவரும் சாட்சியம் அளிக்க ஆரம்பித்த அந்த கணத்திலிருந்து வழக்கு குல்சாரி மற்றும் மொகமதிற்க்கு ஆதரவாக மாற ஆரம்பித்தது. அந்த நடத்துநரிடம் விசாரித்த வழக்கறிஞர் கானிடம் அவர்கள் காவல் துறை கூறும் அந்த நாளில் எங்கள் பேருந்து ஓடவே இல்லை என்று ஆதாரத்துடன் கூறினார்கள். எங்களை வியப்பில் ஆழ்த்தியது இந்த நிகழ்வு. காவல்துறை ஒரு வழக்கை புனைய முயலும் போது அந்த நாளில் அந்த பேருந்து இயங்கியதா , இல்லையா எனக் கூட தெரிந்து கொள்ள முயலவில்லை (அந்த வகையில் தமிழக காவல் துறையினர் மிக‌வும் திறமையானவர்கள்). மேலும் அவர்கள் கைது செய்யும் போது எடுத்ததாக கூறிய ஒளிப்படங்களில் சுற்றியுள்ளவர்கள் யாரும் தெரியவே இல்லை. அது ஒரு மயான பூமியில் எடுக்கப்பட்டடு போல் இருந்தது. மேலும் அந்த படத்தை எடுத்த ஒளிம்பு நோக்கியை அவர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவே இல்லை. மேலும் அவர்களிடம் இருந்து கைப்பற்றிய ஆர்.டி.எக்சு என்ற வெடி மருந்து சோதனையின் போது தவறான ஒன்றும் என நிறுவப்பட்டது. இது போல பல புனைவுகளும் விசாரணையின் போது வெளிவந்தன. அவர்கள் விடுதலை செய்யப்பட்டு இருக்கலாம்

ஆனால் அவர்கள் ஆளான இந்த உளவியல் மற்றும் உடல் ரீதியான தொல்லைகளுக்கு யார் பொறுப்பு?  அவ‌ர்கள் இழ‌ந்த‌ இந்த‌ ஐந்து வ‌ருட‌த்தையும், நிம்ம‌தியான‌ வாழ்வையும் யாரால் திரும்ப‌ கொடுக்க‌ முடியும்?  இந்த தொல்லைகளின் காரணமாக குல்சாரி தன்னை ஒளிப்படம் எடுக்க வேண்டாம் எனவும் கூறிவிட்டார். குல்சாரியிடம் அந்த கிராமத்தில் வாழும் ஒருவர் தனது மகனும் கிராமத்திற்க்கு வெளியே வைத்து கைது செய்யப்பட்டு கடந்த ஒரு வருடமாக சிறையில் இருப்பதாகவும், யார் அவரை வெளியே கொணர்வார், யார் உதவுவார் எனவும் கேட்டார்?

 நன்றி தெகல்கா வார இதழ்.

மூலப்பதிவு – http://www.tehelka.com/story_main43.asp?filename=Ne270210terror_that.asp

 அமெரிக்காவின் பாதச் சுவடை பின்பற்றி அதே வல்லரசு கனவில் பயணிக்கும் இந்தியாவில் இனி இது போன்ற நிகழ்வுகள் வழமையான ஒன்றாகவும் ஆகக்கூடும் என்பதையே இந்த நிகழ்வுகள் நமக்கு தெரிவிக்கும் செய்தி. நாளை இது போன்ற நிகழ்வில் நீங்கள் கைது செய்யப்பட்டால், அந்த கிராமவாசி கேட்ட அதே கேள்வியையே உங்களிடம் கேட்கிறேன், யார் வருவார் உங்களை காப்பற்ற?

ப‌.ந‌ற்ற‌மிழ‌ன்

உலகின் மிக இளம் தீவிரவாதி


உலகின் மிக இளம் தீவிரவாதி


உலகிலேயே மிக இளம் தீவிரவாதியை இந்தியா கண்டுபிடித்துள்ளது. ஆம் …அவன் வயது இரண்டு மட்டுமே…நம்புங்கள் உண்மை தான்…நம்புங்கள்…

சட்டீஷ்கர் மாநிலம், தாண்டிவாடா மாவட்டம், கோம்பாடு கிராமத்தைச் சேர்ந்த இந்த இரண்டு வயது குழந்தை. மத்வி முகேஷ் தான் அவர்.

தனது தாயை சல்வாஜூடுமிற்க்கு (பச்சை வேட்டை (operation green hunt) தற்போதைய பெயர்). பறிகொடுத்த கோபத்தில் சல்வா ஜீடும் படையினரை (உள்ளூர் கூலிப்படை, சட்டீஷ்கர் மாநில காவல் துறை, எல்லை பாதுகாப்பு படை) எதிர்த்து களமாடி தனது மூன்று விரல்களை மாவோயிசுட்டு(தீவிரவாதி) ! என்ற காரணத்திற்க்காக இழந்தார் இந்த இளம் தீவிரவாதி..

சீக்கிரம் சென்று இந்த சாதனை செய்த இந்திய எல்லை பாதுகாப்பு படை மற்றும் சட்டீசுகர் மாநில அரசு , அதன் காவல் துறை மற்றும் சல்வாஜூடும் படை பிரிவினர். இந்திய சனநாயகவாதிகள் எல்லோரையும் பாராட்டி கௌரவியுங்கள்.

வ‌ரும் கால‌த்தில் க‌ருவில் இருக்கும் குழ‌ந்தை கூட‌ தீவிர‌வாதி என‌ இந்தியாவால் முத்திரை குத்த‌ப்ப‌ட‌லாம்  !!!!!!!!!1

நீதிமன்றத்தை மிரட்டும் சாதி பஞ்சாயத்துகள்


நீதிமன்றத்தை மிரட்டும் சாதி பஞ்சாயத்துகள்

சாதி தனது கோரமுகத்தையும், இரத்தக்கறை படிந்த பற்களையும் இந்தியாவில் காட்டுவது என்பது வழமையான‌ ஒன்றாகி விட்டது. சாதிக்காகவும், தனது கௌரவத்திற்க்காகவும் தான் பெற்ற மகள் (அ) மகனை கொல்வதும் இந்தியாவில் புதியவை அல்ல. பின் ஏன் இந்த கட்டுரை? சாதிப் பஞ்சாயத்துகள் கொடுக்கும் மரண தண்டனைகளை இந்திய நீதிமன்றம் தடுக்கக் கூடாது, அவ்வாறு தடுத்தால் நீங்கள் எந்த சட்டத்தை வைத்து தடுகின்றீர்களோ, அச்சட்டத்தையே மாற்ற எங்களால் முடியும் என அறைகூவல் விடுக்கின்றது ஒரு சாதி பஞ்சாயத்து அமைப்பு. ஹரியானாவில் உள்ள கப் (KHAP) என்றழைக்கப்படும் இந்த பஞ்சாயத்து.  ஜாட் என்ற ஆதிக்க சாதியினரின் நிர்வாகத்தின் கீழ் உள்ள ஒரு அமைப்பு.

மனோஜ் பன்வாலாவும், பாப்லி பன்வாலாவும் தங்களது குடும்பங்களின் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்தவர்கள். திருமணமான பின்னர் இவர்கள் தங்கள் கிராமத்தை விட்டு வெளியேறி ஒரு நகரத்தில் சென்று வாழ்ந்து வந்தனர். காதல் திரைப்படத்தில் வருவது போலவே இவர்களை தங்களது கிராமத்திற்க்கு அழைத்து வந்த பெண்ணின் குடும்ப‌த்தார் கப் பஞ்சாயத்து தலைவர் கங்கா இராமின் தீர்ப்புபடி கௌரவத்திற்க்காக ! இவர்கள் இருவரையும் படுகொலை செய்துள்ளனர். படுகொலை செய்யப்பட வேண்டிய அளவிற்க்கு அவர்கள் செய்த தவறு ஒரே கோத்திரத்தில் பிறந்தது தான். ஜாட் சாதியில் மட்டும் 4830 கோத்திரம் உள்ளதாகவும் மேலும் 100 கோத்திரம் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என கூறுகின்றது கப் பஞசாயத்து. இந்த கோத்திரம் என்பது வேதங்களிலிருந்து தொடர்பவை எனவும் கூறுகின்றனர்.

இந்த படுகொலை வழக்கில் ஹரியானாவின் கர்னால் நீதிமன்றம் இந்த ஆண்டு(2010) மார்ச் 30 ஆம் திகதி ஒரு வ‌ர‌லாற்று சிற‌ப்பு மிக்க‌ தீர்ப்பு வெளியிட்ட‌து. இந்த‌ படுகொலைக்கு உத்த‌ர‌விட்ட‌ க‌ப் சாதி ப‌ஞ்சாய‌த்து த‌லைவ‌ர் க‌ங்கா இராமிற்க்கு வாழ்நாள் சிறை தண்டனையும், இந்த‌ ப‌டுகொலையை செய்த‌ பாப்லி ப‌ன்வாலா குடும்ப‌த்தின‌ர் உள்ளிட்ட‌ ஐந்து பேருக்கு ம‌ர‌ண‌ த‌ண்ட‌னையும் விதிக்க‌ப்ப‌ட்ட‌து. இத‌னால் ஆத்திர‌ம‌டைந்த‌ க‌ப் சாதி ப‌ஞ்சாய‌த்து த‌லைவ‌ர்க‌ள் அனைவ‌ரும் 2010 ஏப்ர‌ல் 13ஆம் திக‌தி குருசேத்ரா என்ற‌ ஊரில் கூடின‌ர். வாழ்நாள் சிறை த‌ண்ட‌னை வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌ க‌ங்கா இராமிற்க்கு த‌ங்க‌ள‌து முழு ஆத‌ர‌வையும் ந‌ல்கினர். மேலும் இது போன்ற‌ நீதிம‌ன்ற‌த் தீர்ப்புக‌ள் வருங்கால‌த்தில் வ‌ராம‌ல் இருப்ப‌த‌ற்காக‌ ஒரே கோத்திர‌த்திர‌த்திலும், த‌ன‌து குடும்ப‌ ம‌ற்றும் உற‌வுக‌ளின் கோத்திர‌ங்க‌ளையும் சேர்த்து மொத்த‌ம் ஏழு கோத்திர‌ங்க‌ளிலும் யாரும் திரும‌ண‌ம் செய்ய‌க்கூடாது அவ்வாறு செய்வ‌தை ச‌ட்ட‌பூர்வ‌மாக இந்து திருமண சட்டம் த‌டை செய்ய‌ வேண்டும் என‌ தீர்மான‌ம் இய‌ற்றின‌ர்.

இந்த‌ கூட்ட‌த்திற்க்கு அப்ப‌குதியின் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ரான‌ ந‌வீன் ஜிந்தால் (உயர்குடி(பணக்காரர்களுக்கான) காங்கிரசு கட்சி) சென்று அவ‌ர்க‌ளின் தீர்மான‌த்தை ப‌ற்றி த‌ன‌து க‌ட்சி மேலிட‌த்தில் கூறுவ‌தாக‌வும், உங்க‌ளின் ஏழு கோத்திர‌ திரும‌ண‌ த‌டை தீர்மான‌த்துட‌ன் நான் ஒத்து போகிறேன் என்றும் கூறியுள்ளார். மேலும் இவ‌ர் க‌ப் போன்ற‌ சாதிய‌ ப‌ஞ்சாய‌த்துக‌ள் ம‌ன்ன‌ர்க‌ளான‌.அசோக‌ர் ம‌ற்றும் ஹர்ச‌வ‌ர்த்த‌ன் காலத்திலிருந்து செய‌ல் ப‌ட்டு வ‌ருகின்ற‌ன‌ர், இவ‌ர்க‌ள் மேலும் ந‌ல்ல ப‌ணிக‌ளை தொட‌ர‌ வேண்டும் என்றும் கூறியுள்ளார். ச‌ற்று இவ‌ர்கள்(கப்) செய்த‌ திருப்ப‌ணிக‌ளை பார்ப்போம். க‌ட‌ந்த‌ மாதம் கிசார் மாவ‌ட்ட‌த்தில் உள்ள‌ மீர்சாப்புர் என்ற‌ கிராம‌த்தில் இருந்த‌ பெரும்பான்ம‌யான‌ த‌லித் ச‌மூக‌ ம‌க்க‌ளின் குடிசைகளை கொளுத்திய‌து. இதில் மாற்று திற‌னாளியான‌ பெண் ஒருவ‌ரும் அவ‌ர‌து த‌ந்தையும் உயிருட‌ன் எரிக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர். மௌகா ம‌ற்றும் சிந்தினி என்ற‌ இள‌ம் காதல‌ர்க‌ளுக்கு ம‌ர‌ண‌ த‌ண்ட‌னை அளித்த‌து (இவ‌ர்க‌ள் இருவ‌ரும் அந்த‌ ஏழு கோத்திர‌ங்க‌ளுள் வ‌ருகின்ற‌ன‌ர் என்ப‌தால்).இவையெல்லாம் ஊட‌க‌ங்க‌ளில் கடந்த ஒரு மாதமாக வெளி வ‌ந்த‌வை ம‌ட்டுமே !.

இந்த‌ கூட்ட‌ங்க‌ளுக்கு ஹ‌ரியானாவின் முன்னாள் முத‌ல்வ‌ரான‌ ஒம் பிர‌காசும் சென்று அவ‌ர்க‌ளுக்கு த‌ன‌து முழு ஆத‌ர‌வை ந‌ல்கியுள்ளார். ஏனெனில் ஓம் பிரகாஷ் முத‌ல்வ‌ராக‌ இருந்த‌த‌ற்க்கு ஜாட் சாதியின‌ரின் பெரும் ப‌ங்க‌ளிப்பு இருந்த‌து என்ப‌தாலும், மீண்டும் வெல்வ‌த‌ற்கு க‌ணிச‌மான‌ அள‌வு
உள்ள‌ ஜாட் சாதியின் ஆத‌ர‌வு தேவை என்ப‌த‌ற்காகவே இந்த கண்மூடித்தனமான ஆதரவு. இன்னொரு முக்கிய‌ க‌ட்சியான‌ பா.ஜ.க‌ வைப் ப‌ற்றி சொல்ல‌வே தேவை இல்லை இந்து ம‌தமும்ம் வேத‌ங்க‌ளும் அவ‌ர்களின் இரு கண்கள் ஆகையால் அவ‌ர்க‌ளின் ப‌ரிபூர‌ண‌ ஆத‌ர‌வை க‌ட்சியின் செய்தி தொட‌ர்பாள‌ர்க‌ள் அறிவித்து விட்ட‌ன‌ர்.

ஆதிக்க சாதியின் மிரட்டலுக்கு(வாக்குகளுக்கு) பயந்து வ‌ரும் நாட்க‌ளில் இந்த‌ ஏழு கோத்திர‌ திரும‌ண‌ங்க‌ள் இந்து திருமண சட்டத்தில் த‌டை செய்ய‌ப்ப‌டலாம், மேலும் அது போல‌ திரும‌ணம் செய்த‌வ‌ர்க‌ளை ப‌டுகொலை செய்வ‌தும் ச‌ட்ட‌ப்ப‌டி நியாய‌ம் என்றும் ஆக‌லாம்.

குறிப்பு: இது ஏதோ வ‌ட‌மாநில‌த்தில் ந‌ட‌ந்த‌ ஒன்று என்றும் இத‌னால் ந‌ம‌க்கு என்ன‌ என்றும்  இருந்து விட‌ வேண்டாம். விஜய் தொலைக்காட்சியின் நீயா நானாவில் திண்டுக்க‌ல்லை சார்ந்த‌ சாதி ப‌ஞ்சாய‌த்து த‌லைவ‌ர் சொன்ன‌ வார்த்தையான‌ இல்லாமல்(படு கொலை) செய்து விடுவோம் என்ப‌து என்றாவ‌து ந‌ம‌து நீதிம‌ன்ற‌ங்க‌ளால் த‌வ‌று என்று கூறி அவ‌ரை சிறையில் அடைத்தால் பின்ன‌ர் அந்த‌ ஆதிக்க‌ சாதிக‌ள் எல்லாம் ஒன்று சேர்ந்து மாற்று சாதி திரும‌ண‌ங்க‌ளை த‌டை செய்ய‌ வேண்டும் என்று விண்ண‌ப்பித்தால் ந‌ம‌து மாநில‌ முத‌ல்வர். கொள்கை(!) பிடிப்பு  உள்ள கருணாநிதி க‌ண்டிப்பாக‌ அவ‌ர்க‌ளுக்காக‌ இதை ச‌ட்ட‌மாக்குவார். ஏனெனில் முதல் முறையாக குளித்தலையில் இருந்து வெற்றி பெறுவதற்கே அவர் ஆதிக்க சாதியான கவுண்டர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய‌வர்.இத‌ற்கு த‌மிழ‌க‌த்தில் முத‌ல் முறையாக‌ எதிர் க‌ட்சியின் த‌லைவி பார்ப்ப‌ன‌ மாமியின் ஆத‌ர‌வும் உறுதியாக‌ கிடைக்கும்.

ந‌ன்றி : Times of India (Bangalore edition), Tehalka

ப‌.ந‌ற்ற‌மிழ‌ன்

பற்றி எரிந்த தலித் குடும்பங்கள்


பற்றி எரிந்த தலித் குடும்பங்கள்

 ஹ‌ரியானா மாநிலத்தில் உள்ள கிசார் மாவட்டத்தில் உள்ளது மிர்சாபூர் கிராமம். இங்கு வாழும் ஜாட் என்ற சமூகத்தை சேர்ந்த இராசேந்தர் என்பவர் வால்மீகி (தாழ்த்தப்பட்ட) சமூகத்தை சேர்ந்த யோகேசு என்பவரை கடந்த புதன் அன்று திட்டினார். இந்த பிரச்சனை பஞ்சாயத்திடம் செல்ல வால்மீகி சமூகத்தை சேர்ந்த வீர் பன் மற்றும் கர்ன்பால் என்ற இருவரும் சாட்சியம் சொல்ல சென்றனர் ஆனால் இவர்கள் இருவரையும் பெரும்பான்மை ஜாட் சமூகத்தை சேர்ந்தவர்கள் பஞ்சாயத்தில் வைத்து அடித்து விரட்டினர். இதனால் கோபமடைந்த வால்மீகி சமூகத்தை சேர்ந்தவர்கள் ஜாட் சமூகத்தை சேர்ந்த பிரச்சனைக்கு காரணமான இளைஞர்களை அடித்துள்ளனர்.இந்த செய்தி கேட்ட ஜாட் சமூகத்தினர் உடனே அந்த கிராமத்தில் இருந்த இருபத்தைந்திற்க்கும் மேலான வால்மீகி சமூகத்தை சேர்ந்தவர்களின் வீடுகளை கொளுத்தினார்கள். இதில் பதினெட்டு வயதான சிறப்பு உடல்நலம் கொண்ட ஒரு பெண்ணும், அவரது சகோதரரும் (சுமன்), அவரது தந்தையும்(தாரா சந்த்) உயிருடன் கொளுத்தப்பட்டார்கள். இதில் மூவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.இதனை தொடர்ந்து வால்மீகி சமூகத்தை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் இறங்கியதால் இருபத்தைந்து பேர் இதுவரை காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.அந்த பகுதி தாசில்தார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் வாழ்கிறது என்றார் காந்தி , இந்தியாவின் ஆன்மா மட்டுமல்ல தீண்டாமையும், சாதி வன்முறைகளும் கிராமங்களில் வாழ்கின்றது. ஒரு வேளை இதை தான் அந்த இராம இராச்சிய பிரியர் இந்தியாவின் ஆன்மா என்றாரோ?. நக்சல் பிரச்சனைகளுக்கு தீர்வாக பஞ்சாயத்து இராச்சியத்தை முன் வைக்க வேண்டுமென்று தெகல்கா வார இதழுக்கான நேர்காணலில் கூறினார் மணி சங்கர். ஆனால் பெரும்பான்மையான சமூகம் சிறுபான்மை சமூகத்தை கொடுமை படுத்தும் கிராமங்களில் அதிகாரத்தை அவர்கள் கைகளில் கொடுப்பது கொலைகாரன் கையில் கத்தியை கொடுப்பதைவிட மிக மோசமானது.இதனால் தான் அன்றைய சட்ட வரைவு குழு தலைவர் டாக்டர்.அம்பேத்கர் பஞ்சாயத்துகளுக்கு மிகவும் குறைந்த பட்ச அதிகாரங்களையே வழங்கினார்.

 நன்றி :டைம்சு ஆஃப் இந்தியா

உப்புக்கரிக்கும்……


rain

இரவு பகல் பாராமல்
இயங்கிக் கொண்டே இருக்கும்
உன் புறம் தழுவிய‌
ஓர் மழைத் துளி
உதடு வழி உள் செல்ல‌
ஆம் , மழையும் உப்புக்கரிக்கும் …..

Advertisements
%d bloggers like this: